1
00:00:09,426 --> 00:00:11,345
வாங்க! வாங்க! இதைச் செய்வோம்!

2
00:00:11,428 --> 00:00:12,387
போகலாம்! போகலாம்! போகலாம்!

3
00:00:12,471 --> 00:00:13,639
போங்க! போங்க! போங்க!

4
00:00:47,130 --> 00:00:49,383
எங்கள் ஐந்தாவது திருமண நாளில்
ரூபெர்ட்டும் நானும் இதை வாங்கினோம்.

5
00:00:50,175 --> 00:00:52,344
ஆஹா, உங்களுக்கு சிறந்த கலைநயமிக்க
ரசனை இருக்கிறது.

6
00:00:53,595 --> 00:00:54,596
உங்களுக்கு இது வேண்டுமா?

7
00:00:55,556 --> 00:00:59,142
ஆனால் இது ஹாக்னியின் ஓவியம். அதன் மதிப்பு
ஒரு மில்லியன் பவுண்ட்கள் இருக்கலாம்.

8
00:00:59,977 --> 00:01:01,979
நல்ல விஷயம். நீங்க சரி என்று
சொல்லி இருக்க வேண்டும்.

9
00:01:02,062 --> 00:01:03,856
-தயவுசெய்து, ஏலப்பொருட்களோடு அதை வைங்க.
-உடனே, மேடம்.

10
00:01:08,318 --> 00:01:09,486
பிரிவிற்கு பிறகு ஏ.எஃப்.சி. ரிச்மண்டின்
புது சொந்தக்காரர் ரெபேக்கா வெல்டன்

11
00:01:09,570 --> 00:01:10,445
அவருக்கு பெண்கள் கிடைத்தனர்
அவளுக்கு ஆண்கள் கிடைத்தனர்

12
00:01:10,529 --> 00:01:11,864
ஆக, திருமதி. மான்னியன்...

13
00:01:11,947 --> 00:01:14,199
மன்னிக்கவும். மிஸ். வெல்டன்.

14
00:01:15,534 --> 00:01:16,577
ஜார்ஜ் இங்கே இருக்கிறார்.

15
00:01:16,660 --> 00:01:18,245
அவர் இங்கே இருந்தால்,
ஏன் இங்கு வரவில்லை?

16
00:01:18,328 --> 00:01:20,956
ஆமாம். நல்ல கேள்வி.

17
00:01:21,540 --> 00:01:22,541
ஜார்ஜ்.

18
00:01:23,125 --> 00:01:25,294
-ஹிக்கி நண்பா.
-நல்லது.

19
00:01:25,919 --> 00:01:28,046
ஹே. நீ இந்த இடத்தை அலங்கரித்திருப்பது
எனக்கு பிடிச்சிருக்கு.

20
00:01:28,922 --> 00:01:30,924
இதை நீயே செய்தாயா அல்லது
யாரையாவது வைத்து செய்தாயா?

21
00:01:31,008 --> 00:01:33,135
உங்க தலைமுடியைப்பற்றி
நானும் அவ்வாறே கேட்க முடியும். தயவுசெய்து.

22
00:01:34,720 --> 00:01:36,221
அவள் மோசமானவள், இல்லையா?

23
00:01:36,847 --> 00:01:39,099
சரி, அன்பே. பார், நான் இன்னும்
ஒரு நிமிடத்தில் பயிற்சிக்குப் போகணும்.

24
00:01:39,183 --> 00:01:42,728
எனவே உன் அழகான மனதில் என்ன நினைக்கிறாயோ,

25
00:01:42,811 --> 00:01:44,479
-அதை என்னிடம் சொல்.
-கண்டிப்பாக.

26
00:01:44,563 --> 00:01:45,564
நீங்கள் வேலையில் இருந்து
நீக்கப்படுகிறீர்கள்.

27
00:01:45,647 --> 00:01:47,024
ஆமாம், சரி.

28
00:01:47,107 --> 00:01:49,651
மீதம் இருக்கும் உங்க ஒப்பந்தத்திற்கு நான்
பணம் தருகிறேன். எனவே...

29
00:01:51,195 --> 00:01:52,821
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

30
00:01:54,573 --> 00:01:56,116
வேலையை விட்டு அனுப்புகிறாயா? எதற்காக?

31
00:01:58,243 --> 00:02:00,954
உண்மையில், என்னால் பல காரணங்கள்
சொல்ல முடியும்.

32
00:02:01,747 --> 00:02:03,332
ஒரு காரணம், உங்களுடைய
பெண்களை வெறுக்கும் குணம்.

33
00:02:03,415 --> 00:02:05,250
-என்ன?
-அது பெரிய வார்த்தை என தெரியும்.

34
00:02:05,334 --> 00:02:06,960
அதன் அர்த்தத்தை
உங்க மகள்களில் ஒருவரைக் கேளுங்க.

35
00:02:07,044 --> 00:02:08,628
அல்லது ஒரு சுமாரான வகையில்,

36
00:02:08,711 --> 00:02:12,633
இந்த நாட்களில் உங்க குழுவை தலைமை
தாங்கியதற்காக இருக்கலாம்.

37
00:02:12,716 --> 00:02:15,302
அல்லது மிகச் சிறிய கால் சட்டை
அணிந்து உங்க அந்தரங்க உறுப்புக்கள்

38
00:02:15,385 --> 00:02:17,137
தெரியும் படி இருப்பேன் என்று
அடம் பிடிப்பதால் இருக்கலாம்.

39
00:02:18,430 --> 00:02:19,681
இன்னொன்றும் இருக்கிறது.

40
00:02:20,349 --> 00:02:21,433
அந்த விதைகள் இரண்டும்.

41
00:02:22,059 --> 00:02:23,519
இனிமையானது இல்லாவிட்டாலும்.

42
00:02:23,602 --> 00:02:26,188
இருந்தாலும், நான் முழுமையாக உண்மை
பேச வேண்டும் என்றால், ஜார்ஜ்,

43
00:02:26,271 --> 00:02:29,525
நான்தான் இப்போது உரிமையாளர், எனக்கு உங்களை
பிடிக்காததால் வெளியேற்றப்படுகிறீர்கள்.

44
00:02:31,109 --> 00:02:32,945
இப்போது வெளியேறிவிடு, குண்டான முட்டாளே.

45
00:02:36,532 --> 00:02:37,991
ஹேய், ஹிக்கி நண்பா.

46
00:02:38,075 --> 00:02:39,493
எது மோசம் என்று நினைக்கிறாய்?

47
00:02:39,576 --> 00:02:43,747
உன் கணவன் உன்னை ஏமாற்றுவதா அல்லது
அதைப்பற்றி கடைசியாக தெரிந்துக் கொள்வதா?

48
00:02:46,708 --> 00:02:48,961
யாராவது எனக்கு கொஞ்சம்
சாலட் கொண்டு வருவார்களா?

49
00:02:50,629 --> 00:02:53,006
தயவு செய்து, திராட்சைகள் போடாமல்
கொண்டு வர வேண்டும்.

50
00:02:53,090 --> 00:02:54,216
நாசமாய் போ.

51
00:02:54,883 --> 00:02:58,262
ஆக, புதிய மேலாளர்களுக்கு என்ன செய்வது?

52
00:02:58,345 --> 00:03:00,889
விண்ணப்பதாரர்களின் பட்டியலை
நான் தயார் செய்யவா?

53
00:03:00,973 --> 00:03:03,642
வேண்டாம். அது தேவைப்படாது.

54
00:03:07,855 --> 00:03:08,689
விளையாட்டு வளாகம்

55
00:03:08,772 --> 00:03:11,733
அட்லாண்டிக்கின் மறுபுறத்தில் இருந்து
ஒரு ஆச்சரியமான விஷயம் கிடைத்துள்ளது.

56
00:03:11,817 --> 00:03:14,611
ஏஎப்சி ரிச்மண்ட், தாங்கள் புது மேலாளர்

57
00:03:14,695 --> 00:03:16,947
தியடோர் "டெட்" லாஸ்ஸோ
என்று அறிவித்திருக்கிறார்கள்.

58
00:03:17,030 --> 00:03:21,410
சமீபத்தில், பயிற்சியாளர் லாஸ்ஸோ விச்சிட்டா
ஸ்டேட் ஷாக்கர்ஸ் இரண்டாவது டிவிஷனை

59
00:03:21,493 --> 00:03:24,329
அமெரிக்கன் கால்பந்து போட்டிகளில் முதல்
தேசிய வெற்றி பெறுவதற்கு உதவி செய்தார்.

60
00:03:24,413 --> 00:03:26,915
தலைமை பயிற்சியாளராக தனது முதல் சீசனிலேயே
ஷாக்கர்ஸை ஒரு மோசமான திட்டத்தில் இருந்து

61
00:03:26,999 --> 00:03:29,918
வெளியே எடுத்து அவர்களுக்கு வெற்றி
பாதையைக் காட்டினார்.

62
00:03:30,002 --> 00:03:34,006
ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களின் மனதில்
அவர் அப்படி இடம் பெறவில்லை,

63
00:03:34,089 --> 00:03:35,591
நமது வீட்டிற்குள்ளும் அவர் வரவில்லை.

64
00:03:35,674 --> 00:03:37,217
எனக்கு, எப்போதுமே டெட்...

65
00:03:38,552 --> 00:03:40,470
தன் குழுவோடு சந்தோஷமாக இருப்பது தான்
நினைவில் வரும்

66
00:03:40,554 --> 00:03:42,764
மற்றும் நேரில் பார்த்தால் தான்
அது புரியும்.

67
00:03:42,848 --> 00:03:44,349
ஆனால், அதைப் பார்த்தாலும் கூட...

68
00:03:45,601 --> 00:03:48,353
நாம் அதை சரியாகப் புரிந்து கொள்கிறோமா
என்று எனக்குத் தெரியலை.

69
00:03:50,606 --> 00:03:52,107
சரி, டெட்.
உங்க வேலையை செய்யுங்க, நண்பா.

70
00:03:52,191 --> 00:03:54,526
அருமையான கேமிற்கு என் வாழ்த்துக்கள்.

71
00:03:55,027 --> 00:03:56,236
எங்களுக்கு பெருமை சேருங்கள்.

72
00:03:56,320 --> 00:03:57,321
வாழ்த்துக்கள், அமெரிக்கா.

73
00:03:58,280 --> 00:03:59,823
கழிப்பறை

74
00:04:04,536 --> 00:04:05,746
ஜாக் கெரோயக்
தி தர்மா பம்ஸ்

75
00:04:11,502 --> 00:04:12,503
ஓ, நண்பா. இது நீங்களா?

76
00:04:12,586 --> 00:04:15,214
-ஆமாம், நான்தான்.
-ஓ, கடவுளே! மகிழ்ச்சி.

77
00:04:15,297 --> 00:04:16,548
உங்களோடு ஒரு நம்படம் எடுத்துக்கொள்ளவா?

78
00:04:17,966 --> 00:04:19,218
கண்டிப்பாக.

79
00:04:19,301 --> 00:04:21,303
தெரியுமா, எங்கள் ஊரில், இதற்கு
சுயபடம் என்று பெயர்.

80
00:04:21,386 --> 00:04:22,638
வந்து, இதில் "நான்" மட்டும் இல்லை,சரியா?

81
00:04:22,721 --> 00:04:24,389
இது "நாம்", அல்லவா? "நம்படம்".

82
00:04:24,473 --> 00:04:25,891
ஆமாம். எனக்கு பிடிச்சிருக்கு.

83
00:04:25,974 --> 00:04:26,892
மிக்க மகிழ்ச்சி.

84
00:04:27,434 --> 00:04:28,810
நீங்கள் கால்பந்து பயிற்சியாளர்.

85
00:04:28,894 --> 00:04:31,355
நண்பா, நீங்கள் பிரபலமானவர் இப்படி
முட்டாள்தனமாக செய்வது ஆச்சரியமாக உள்ளது.

86
00:04:31,438 --> 00:04:34,107
அதாவது, இது வேடிக்கையானது.
அவர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள்.

87
00:04:34,650 --> 00:04:36,985
வந்து, நான் இதை
முன்னரே கேள்விப்பட்டு இருக்கிறேன்.

88
00:04:37,069 --> 00:04:38,695
ஆனாலும், இன்னும் இங்கே இருக்கிறேன்.

89
00:04:38,779 --> 00:04:41,114
-பெருமைக்குரியவர்.
-ஆமாம். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.

90
00:04:45,536 --> 00:04:47,204
என்ன படிக்கிறீர்கள்? மற்றுமொரு
கால்பந்தைப் பற்றிய புத்தகம்.

91
00:04:47,287 --> 00:04:48,580
நீங்க புத்திசாலி, பயிற்சியாளரே.

92
00:04:49,206 --> 00:04:51,208
சொல்லுங்க. எனக்கு
ஏதாவது சிறப்பு கருத்து சொல்லுங்க.

93
00:04:51,291 --> 00:04:53,919
"அவுட் ஆப் பௌண்ட்ஸ்" என சொல்ல மாட்டார்கள்.
"இன்டு டச்" என்று சொல்வார்கள்.

94
00:04:54,002 --> 00:04:56,755
சரி, இந்த வார்த்தைகளை என் பேச்சில்
பயன்படுத்தினால் ஐந்து ரூபாய் கொடுக்கணும்.

95
00:04:56,839 --> 00:04:58,340
-சரி தான்.
-சரி.

96
00:04:59,883 --> 00:05:02,052
மாலை வணக்கம். விமானத்தின் விளக்குகளை
சற்று நேரத்தில் மங்கலாக்குவோம்.

97
00:05:02,135 --> 00:05:04,346
நாம் சிறிது நேரம் தூங்கணும்.
நேர மாற்றம் நம்மை வருத்திவிடும்.

98
00:05:04,429 --> 00:05:06,682
ஆமாம், ஆமாம், ஆமாம்.

99
00:05:09,101 --> 00:05:10,727
இதை செய்ய நாம் என்ன பைத்தியங்களா?

100
00:05:11,353 --> 00:05:12,521
ஆம், இது பைத்தியக்காரத்தனம் தான்.

101
00:05:12,604 --> 00:05:15,315
ஹே, ஒரு சவாலை ஏற்றுக்கொள்வது என்பது
ஒரு குதிரை மீது சவாரி செய்வது போல அல்லவா?

102
00:05:15,399 --> 00:05:16,984
நாம் அதை செய்யும் போது
சுகமாக இருந்தால்,

103
00:05:17,067 --> 00:05:18,068
அதை தவறாக செய்வதாக அர்த்தம்.

104
00:05:19,653 --> 00:05:21,697
-சரி, இரவு வணக்கம், பயிற்சியாளரே.
-இரவு வணக்கம், பயிற்சியாளரே.

105
00:05:25,033 --> 00:05:26,660
ஹே, ஹே, ஹே!

106
00:05:26,743 --> 00:05:30,122
ஒருவரை ஒருவர் கனவில் சந்தித்துக் கொண்டால்,
அந்நியர்கள் போல நடந்துக் கொண்டு,

107
00:05:30,205 --> 00:05:32,541
-சிறிது நேரம் சந்தோஷமாக கழிப்போம்.
-புரிந்தது, அந்நியனே.

108
00:05:32,624 --> 00:05:34,042
நல்லது.

109
00:06:08,410 --> 00:06:10,495
-நீ தூங்கவே இல்லையா?
-கொஞ்சம் கூட தூங்கவில்லை.

110
00:06:10,579 --> 00:06:12,748
என் மூளை வேலை செய்து கொண்டே இருந்தது.

111
00:06:12,831 --> 00:06:14,708
முதலில்,
தூங்காமல் இருப்பதை பற்றி யோசித்தேன்.

112
00:06:14,791 --> 00:06:17,419
பிறகு தூங்காமல் இருப்பதைப்பற்றி யோசிப்பதை
பற்றி யோசித்தேன். பிறகு...

113
00:06:17,503 --> 00:06:18,837
அது எப்போதும் நல்லதல்ல.

114
00:06:18,921 --> 00:06:19,922
அதற்குப் பிறகு பார்த்தால்,

115
00:06:20,005 --> 00:06:21,798
அவர்கள் சுவையான
சாக்லேட் சிப் குக்கீஸ் கொடுத்தார்கள்

116
00:06:21,882 --> 00:06:23,175
மற்றும் விமானம் தரை இறங்கியது.

117
00:06:23,258 --> 00:06:25,344
எனக்கு குக்கி கிடைக்கவில்லை.
நீ என் குக்கியை சாப்பிட்டாயா?

118
00:06:25,427 --> 00:06:27,221
அது முக்கியமில்லை.
அங்கே நமக்காக காத்திருக்கிறார்கள்.

119
00:06:27,304 --> 00:06:28,472
ஹே, எப்படி இருக்கிறீர்கள்?

120
00:06:28,555 --> 00:06:29,973
-என் பெயர் டெட். உங்க பெயர் என்ன?
-ஆலி.

121
00:06:30,057 --> 00:06:31,517
-ஆலி. சரி.
-உங்கள் பைகளை கொடுங்கள்.

122
00:06:31,600 --> 00:06:33,977
வேண்டாம், ஆலி. நாங்கள் அதை பேக் செய்தோம்.
நாங்களே கொண்டு வருகிறோம்.

123
00:06:34,061 --> 00:06:35,979
வழியில் எங்காவது நிறுத்தினால்
எங்களுக்கு சௌகரியமாக இருக்கும்.

124
00:06:36,063 --> 00:06:37,064
சரி. என்னைப் பின்தொடருங்கள்.

125
00:06:42,110 --> 00:06:43,779
சரி. வருகிறோம்.

126
00:06:45,489 --> 00:06:48,158
பயிற்சியாளரே, நாம் இப்போது
கேன்சஸில் இல்லை சரிதானே?

127
00:06:49,660 --> 00:06:51,703
இதற்கு முன் கேன்சஸில் இல்லாத போது
நான் இப்படி சொன்னது கிடையாது.

128
00:06:51,787 --> 00:06:53,539
-இது நன்றாக இருக்கிறது.
-ஆமாம்.

129
00:06:54,665 --> 00:06:56,458
வந்து, எங்களை பொறுத்துக் கொண்டதற்கு
நன்றி, ஆலி.

130
00:06:56,542 --> 00:06:57,918
நீங்கள் சொல்லும் போது கிளம்ப தயார்.

131
00:06:58,001 --> 00:06:59,503
சரி. அது தான் டவர் பிரிட்ஜ்.

132
00:06:59,586 --> 00:07:02,422
சரி. இது லண்டன் பிரிட்ஜ் கிடையாது, ஏன்னா
இது இன்னும் நின்று கொண்டு இருக்கிறது.

133
00:07:02,506 --> 00:07:05,300
ஏ.எஃப்.சி. ரிச்மண்ட்

134
00:07:07,094 --> 00:07:08,929
கால்பந்தை எப்படி கண்டுப்பிடித்தார்கள்
என தெரியுமா?

135
00:07:09,012 --> 00:07:10,597
ஆக, சிறுவர்கள் தங்கள்
அந்தரங்கங்களை தொடாமல்,

136
00:07:10,681 --> 00:07:13,433
இருப்பதற்காக விக்டோரியன் தலைமை ஆசிரியர்கள்
எதாவது செய்ய விரும்பினர்.

137
00:07:13,517 --> 00:07:17,187
எனவே சிறுவர்கள் கைகளையே உபயோகப்படுத்தத்
தேவையில்லாத ஒரு விளையாட்டை கண்டுபிடித்தனர்

138
00:07:17,271 --> 00:07:19,064
மற்றும் அது வேலை செய்யும்
என நினைத்தார்கள்.

139
00:07:19,147 --> 00:07:20,816
அது வேலை செய்ததா என தெரியலை, ஆனால்...

140
00:07:36,707 --> 00:07:38,584
மாறுபாடாக உணர்கிறேன், பயிற்சியாளரே.

141
00:07:38,667 --> 00:07:40,335
அதாவது, அதே தான், ஆனால் மாறுபட்டு.

142
00:07:40,419 --> 00:07:42,421
-உருவகம்.
-உனக்கு அது தெரியும், அன்பே.

143
00:07:42,504 --> 00:07:43,589
ஏய்!

144
00:07:43,672 --> 00:07:45,716
ஏய்! மன்னிக்கவும்!

145
00:07:45,799 --> 00:07:47,009
ஏய்! ஹலோ!

146
00:07:47,092 --> 00:07:48,427
விலகு! விலகு!

147
00:07:48,510 --> 00:07:50,095
புல்லைத் தொடாதே!

148
00:07:50,179 --> 00:07:52,890
போ! விளையாடும் இடத்தில் இருந்து வெளியே போ!
புல்லை தொடாதே! தயவு செய்து!

149
00:07:52,973 --> 00:07:54,308
-சரி, சரி, சரி. சரி.
-யார் நீ?

150
00:07:54,391 --> 00:07:56,310
நான் டெட் லாஸ்ஸோ.
இவர் பயிற்சியாளர் பியர்ட்.

151
00:07:56,393 --> 00:07:58,645
-ஓ, கடவுளே. நீங்கள் தான் புது மேலாளர்.
-ஆமாம், சார்.

152
00:07:58,729 --> 00:08:00,397
-வேண்டிய புல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
-ஓ, இல்லை...

153
00:08:00,480 --> 00:08:01,732
இப்போது தான் வெட்டினோம்.
நான் குப்பையில் பார்க்கிறேன்.

154
00:08:01,815 --> 00:08:03,942
-இன்னும் கூட கொண்டு வருகிறேன்.
-பரவாயில்லை. வேண்டாம்.

155
00:08:04,401 --> 00:08:06,528
-நன்றி.
-ஆமாம்.

156
00:08:07,738 --> 00:08:08,989
ஆமாம்.

157
00:08:10,282 --> 00:08:12,492
-நாம் புல் தரையை விட்டு வெளியேறணும்.
-ஆமாம். கண்டிப்பாக.

158
00:08:12,576 --> 00:08:13,410
நாங்கள் மன்னிப்புக் கேட்கணுமா?

159
00:08:13,493 --> 00:08:15,120
-புல்லிற்காக, மன்னிக்கவும்.
-மன்னிச்சிடு, புல்லே.

160
00:08:16,163 --> 00:08:18,081
ஆக, நாங்க ரெபேக்கா வெல்டனை
சந்திக்க வந்துள்ளோம்.

161
00:08:18,165 --> 00:08:19,416
ஆம், அங்கு தான் அழைத்து செல்கிறேன்.

162
00:08:19,499 --> 00:08:20,918
இவரைப் பார்.
முற்போக்காக இருக்கிறார்.

163
00:08:21,001 --> 00:08:22,920
ஹே, உங்க பெயர் என்ன?

164
00:08:23,003 --> 00:08:24,087
-நானா?
-ஆமாம்.

165
00:08:24,171 --> 00:08:25,547
யாரும் என் பெயரைக் கேட்டதில்லை.

166
00:08:31,970 --> 00:08:33,138
அதாவது, எப்போது தயாராக இருந்தாலும்.

167
00:08:33,222 --> 00:08:34,681
ஓ, என் பெயர் நேத்தன்.

168
00:08:34,765 --> 00:08:36,225
நேத்தன்! ரொம்ப அழகான பெயர்.

169
00:08:36,308 --> 00:08:37,392
ஹே, உங்கள் ஹாட் டாக்ஸ் எனக்கு பிடிக்கும்.

170
00:08:38,101 --> 00:08:39,102
ஆமாம். இல்லை, தெரியும்.

171
00:08:39,186 --> 00:08:41,605
நல்லது, நல்லது.
இங்கே நேத்தனின் ஹாட் டாக்ஸ் இருக்கிறதா?

172
00:08:41,688 --> 00:08:42,688
இல்லை.

173
00:08:42,773 --> 00:08:43,774
சரி.

174
00:08:44,983 --> 00:08:46,985
எனக்கு இவனை பிடிச்சிருக்கு.
ரொம்ப பிடிச்சிருக்கு.

175
00:08:47,736 --> 00:08:49,863
நான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
பெரிய முதலாளி.

176
00:08:49,947 --> 00:08:50,948
இதோ இங்கே.

177
00:08:52,491 --> 00:08:53,492
ஹலோ.

178
00:09:03,836 --> 00:09:06,255
ஹே, எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?
நான் டெட் லாஸ்ஸோ, உங்க புது பயிற்சியாளர்.

179
00:09:06,338 --> 00:09:09,716
-நீங்கள் மிஸ். வெல்டன் தானே.
-தயவுசெய்து, என்னை ரெபேக்கா என அழையுங்கள்.

180
00:09:09,800 --> 00:09:11,009
மிஸ். வெல்டன் என் தந்தை.

181
00:09:12,052 --> 00:09:13,637
இது நகைச்சுவை என்றால்,
எனக்கு பிடிச்சிருக்கு.

182
00:09:13,720 --> 00:09:15,514
இல்லை என்றால், அதைப்பற்றி உங்களோடு
பேச ஆவலாக உள்ளேன்.

183
00:09:16,056 --> 00:09:17,057
இவர் தான் பயிற்சியாளர் பியர்ட்.

184
00:09:17,140 --> 00:09:20,269
உங்கள் இருவரையும் நேருக்கு நேர்
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

185
00:09:20,352 --> 00:09:21,186
ஹிக்கின்ஸ்?

186
00:09:21,270 --> 00:09:24,898
மன்னிக்கவும். இவர் தான் ஹிக்கின்ஸ்,
நமது தற்போதைய தகவல் தொடர்பு இயக்குனர்.

187
00:09:24,982 --> 00:09:25,983
தற்போதையவா?

188
00:09:26,066 --> 00:09:29,653
நீ பயிற்சியாளர் பியர்டை அழைத்து சென்று
அவரது அடையாளங்கள், தங்கும் இடம் எல்லாம்...

189
00:09:29,736 --> 00:09:31,238
அவர்களுக்கு தேவையான அனைத்தையும்.

190
00:09:31,321 --> 00:09:34,116
-வை-ஃபை கடவுச்சொல், ஈர நாப்கின்கள்.
-ஈரப்பதமூட்டி. எல்லாம் உண்டு,பயிற்சியாளரே.

191
00:09:34,199 --> 00:09:35,284
நன்றி.

192
00:09:37,703 --> 00:09:39,705
-தயவு செய்து, உட்காருங்கள்.
-சரி.

193
00:09:40,414 --> 00:09:42,291
-குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வரவா?
-ஆம், தயவுசெய்து.

194
00:09:42,374 --> 00:09:44,334
விமானத்தில் தூங்க முடியவில்லை,
எனவே உங்களிடம் எது இருந்தாலும்,

195
00:09:44,418 --> 00:09:46,253
சிறிது காபி சேர்த்தால், நன்றாக இருக்கும்.

196
00:09:46,336 --> 00:09:48,172
அதாவது, மொக்கச்சினோ, பிரபுச்சினோ...

197
00:09:48,255 --> 00:09:51,008
ஏதோ ஒரு காபி, அதில் எனக்கு காபி
சுவை தெரியாமல் இருந்தால், நல்லது.

198
00:09:51,091 --> 00:09:52,176
டீ எப்படி குடிப்பீர்கள்?

199
00:09:52,801 --> 00:09:54,761
வந்து, அதை நான் உடனே
திருப்பி கொடுத்து விடுவேன்

200
00:09:54,845 --> 00:09:56,805
ஏனென்றால் அதை கொடுத்து யாரோ பெரிய
தவறு செய்து விட்டார்கள். ஆனால்...

201
00:09:56,889 --> 00:09:57,764
ஊரோடு ஒத்து வாழணும், இல்லையா?

202
00:09:58,849 --> 00:10:01,435
ஆமாம். அதைப் பாருங்க. சரி.

203
00:10:05,230 --> 00:10:06,231
என்ன?

204
00:10:06,315 --> 00:10:09,276
எப்பவுமே, டீ சூடான பழுப்புநிற வெந்நீர்
போல சுவை இருக்கும் என்று நினைத்தேன்.

205
00:10:09,359 --> 00:10:10,527
இப்போது என்ன தெரியுமா?

206
00:10:10,611 --> 00:10:13,322
நான் சரியாக நினைத்தேன். ஆம், இது கேவலமாக
இருக்கிறது. வேண்டாம், நன்றி.

207
00:10:13,405 --> 00:10:14,656
இங்கிலாந்திற்கு வரவேற்கிறோம்.

208
00:10:14,740 --> 00:10:16,241
சரி. "இதை பழக்கப்படுத்திக் கொள்,
முட்டாளே." சரியா?

209
00:10:16,325 --> 00:10:18,160
இப்போது, நீங்கள் சுற்றிப் பார்க்கணுமா?

210
00:10:18,243 --> 00:10:20,621
-அபே தெரு பார்க்க எனக்கு ஆசை.
-இந்த கிளப்பைப் பார்க்க.

211
00:10:20,704 --> 00:10:21,788
சரி, அதிலிருந்து தொடங்குவோம்.

212
00:10:21,872 --> 00:10:26,877
ஆக, இந்த பெரிய அறை தான் கிளப்பின் நீண்ட
ஆனால் மதிப்பான வரலாற்றின் பிரதிபலிப்பு.

213
00:10:26,960 --> 00:10:28,795
1897ல் முதல் போட்டி நடந்தது.

214
00:10:28,879 --> 00:10:33,050
போரின் போது, நமது அரங்கம் ஒரு தற்காலிக
மருத்துவமனையாக உபயோகப்படுத்தப்பட்டது.

215
00:10:33,133 --> 00:10:34,593
ஆமாம், சில உள்ளூர்காரர்கள் இன்னும் கூட

216
00:10:34,676 --> 00:10:37,679
நமது போர் வீரர்கள் ஆன்மா இங்கே சுற்றுவதை
பார்த்ததாக சொல்கிறார்கள்.

217
00:10:37,763 --> 00:10:39,139
அது பயமாயிருக்கிறது.

218
00:10:39,223 --> 00:10:42,059
-நீங்க பேய்கள் பற்றி நம்புறீங்களா, டெட்?
-நம்புகிறேன்.

219
00:10:42,142 --> 00:10:45,354
ஆனால் முக்கியமாக, அவர்கள் தங்களையே
நம்பவேண்டும் என்று நினைக்கிறேன். சரிதானே?

220
00:10:46,438 --> 00:10:47,272
சரி.

221
00:10:47,356 --> 00:10:49,900
இது தான் நமது பழைய உரிமையாளர்களின்
புகைப்படங்கள் உள்ள சுவர்.

222
00:10:50,442 --> 00:10:52,778
சரி. இங்கே இவரைப் பாருங்க.

223
00:10:52,861 --> 00:10:53,695
ரூபெர்ட் மான்னியன்
1987ல் இருந்து

224
00:10:53,779 --> 00:10:55,405
மது, மாது மற்றும் பிற விஷயங்கள் எப்படி?

225
00:10:55,489 --> 00:10:56,949
அவர் நன்றாக இருந்தார் என தோன்றுகிறது.

226
00:10:57,032 --> 00:10:58,242
அது என் முன்னாள் கணவர்.

227
00:10:58,325 --> 00:11:01,745
வந்து, நல்ல நேரங்கள் எப்போதும் அப்படியே
இருந்ததில்லை, நான் பார்த்திருக்கிறேன்.

228
00:11:02,287 --> 00:11:03,664
ஆமாம், நான் அது எல்லாம் பற்றி
கேள்விப்பட்டிருக்கிறேன்.

229
00:11:03,747 --> 00:11:05,040
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

230
00:11:07,209 --> 00:11:08,585
ஆமாம், சுலபமான வருடமாக இல்லை.

231
00:11:08,669 --> 00:11:09,711
ஆமாம்.

232
00:11:10,838 --> 00:11:13,090
-ஆக, நீங்க பத்திரிக்கையாளர்களிடம் பேசணும்.
-சரி.

233
00:11:13,173 --> 00:11:15,843
இல்லை, இரண்டு இரவுகள் நன்றாக தூங்கிய பின்,
மகிழ்ச்சியாக அதை செய்கிறேன்.

234
00:11:15,926 --> 00:11:18,428
மன்னிக்கவும். தெரியுமென நினைத்தேன்.
அவர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

235
00:11:18,512 --> 00:11:19,346
அவர்கள் என்ன?

236
00:11:21,807 --> 00:11:23,016
எனவே, மேலும் தாமதிக்காமல்,

237
00:11:23,100 --> 00:11:26,979
இதோ ஏஎஃப்சி ரிச்மண்ட்-இன் புது மேலாளர்,
டெட் லாஸ்ஸோ!

238
00:11:33,527 --> 00:11:34,778
சரி.

239
00:11:34,862 --> 00:11:36,697
சரி. நீங்கள் எல்லோரும்
எப்படி இருக்கிறீர்கள்?

240
00:11:40,284 --> 00:11:41,159
அதோ பயிற்சியாளர்.

241
00:11:41,243 --> 00:11:43,787
ஹலோ டெட், ஹலோ.

242
00:11:43,871 --> 00:11:45,163
பாருங்கள், நம் பயிற்சியாளர்.

243
00:11:47,207 --> 00:11:48,208
ஓய்!

244
00:11:48,292 --> 00:11:51,003
எல்லோரும் அமைதியாக இல்லை என்றால்,
எனக்கு கோபம் வரும்.

245
00:11:52,004 --> 00:11:54,423
ஒரு நொடி. வந்து...
என் தொண்டை வறண்டு விட்டது.

246
00:11:59,887 --> 00:12:01,805
இங்கே சோடா இருக்கும் என
எதிர்ப்பார்க்கலை. மன்னிக்கவும்.

247
00:12:01,889 --> 00:12:03,807
இந்த முட்டாளைப் பார்!

248
00:12:03,891 --> 00:12:05,392
முட்டாள் அமெரிக்கன்!

249
00:12:05,475 --> 00:12:07,394
சரி. வந்து, ஹே.

250
00:12:07,477 --> 00:12:09,855
உடனடியாக துவங்கலாமா?
யாருக்காவது ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

251
00:12:11,607 --> 00:12:13,734
ஓ, சரி, வேண்டாம்.
இதை எதிர்ப்பார்த்திருக்கணும்.

252
00:12:13,817 --> 00:12:15,777
என்ன தெரியுமா?
உங்கள் கைகளை கீழே போடுங்கள்.

253
00:12:15,861 --> 00:12:16,987
மிக விரைவாக...

254
00:12:17,070 --> 00:12:18,155
ஆமாம்.

255
00:12:18,238 --> 00:12:19,531
நானாகவே இந்த அறையில் உள்ள

256
00:12:19,615 --> 00:12:21,909
முக்கிய பிரச்சினைப் பற்றி பேசப் போகிறேன்.

257
00:12:21,992 --> 00:12:27,122
இல்லை, நீங்கள் கால்பந்து என்று அழைக்கும்
விளையாட்டிற்கு நான் பயிற்சி அளித்ததில்லை.

258
00:12:27,206 --> 00:12:28,207
கடவுளே.

259
00:12:28,832 --> 00:12:29,917
என்ன?

260
00:12:30,000 --> 00:12:32,878
ஆம், கால்பந்தைப்பற்றி எனக்கு தெரியாததை
நீங்கள் இரண்டு வலைத்தளங்களில் நிரப்பலாம்.

261
00:12:34,296 --> 00:12:35,547
ஆனால் எனக்கு என்ன தெரியும்
என சொல்கிறேன்.

262
00:12:35,631 --> 00:12:38,675
நான் பயிற்சி அளித்த, எல்லா குழுக்களையும்
போல, ஏஎஃப்சி ரிச்மண்ட்

263
00:12:38,759 --> 00:12:41,094
களத்தில் சென்று விளையாடி தங்கள்
எல்லா திறமையும்

264
00:12:41,178 --> 00:12:42,554
-நான்கு கால்பகுதிகளிலும் காட்டுவார்கள்.
-அரைப் பகுதி.

265
00:12:43,347 --> 00:12:45,265
-என்ன சொன்னீர்கள்?
-இரண்டு அரைப் பகுதிகள்.

266
00:12:45,349 --> 00:12:46,600
ஆமாம். மன்னிக்கவும்.
அரைப் பகுதிகள், ஆமாம்.

267
00:12:46,683 --> 00:12:49,561
வெற்றியோ, தோல்வியோ, தங்களின் திறமையை
அந்த இரண்டு அரைப்பகுதியில் காட்டுவார்கள்,

268
00:12:49,645 --> 00:12:50,729
அல்லது சம முடிவானாலும்.

269
00:12:50,812 --> 00:12:52,564
சரி. நீங்கள் இங்கே
சம முடிவு ஆட்டம் ஆடுவதுண்டு.

270
00:12:52,648 --> 00:12:54,775
மன்னிக்கவும். அதை புரிந்து கொள்வதற்கு
இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை.

271
00:12:54,858 --> 00:12:57,694
ஏனென்றால் நான் வாழும் நாட்டில்
ஒரு கேமை சம முடிவு செய்து முடிப்பதென்பது,

272
00:12:57,778 --> 00:13:00,864
பூமியின் அழிவின் முதல்
அறிகுறியாகக் கருதப்படும்.

273
00:13:03,700 --> 00:13:06,078
இங்கே, பாருங்கள்.
நான் உங்களை போன்ற ஊடகங்களை மதிக்கிறேன்.

274
00:13:06,161 --> 00:13:07,996
என் கதவுகள் எப்போதும்
உங்களுக்கு திறந்தே இருக்கும்.

275
00:13:08,080 --> 00:13:11,500
சரியா? நீங்கள் என்னை என்ன வேண்டமானாலும்
கேட்கலாம். வரையறைகள் கிடையாது.

276
00:13:11,583 --> 00:13:13,919
சரி, இறுதியாக ஒரு கேள்வி.

277
00:13:14,545 --> 00:13:16,505
அந்த இரண்டாவது வரிசையில் இருக்கும் நபர்.

278
00:13:16,588 --> 00:13:17,589
ஆமாம்.

279
00:13:18,215 --> 00:13:19,716
உங்கள் மூக்குக்கண்ணாடி பிடிச்சிருக்கு.

280
00:13:20,634 --> 00:13:21,635
நன்றி.

281
00:13:22,344 --> 00:13:23,679
ட்ரென்ட் க்ரிம். தி இன்டிபென்டென்ட்.

282
00:13:24,221 --> 00:13:26,014
இது சரியா என்று மட்டும் சொல்லுங்கள்.

283
00:13:26,098 --> 00:13:28,392
நீங்கள் ஒரு அமெரிக்கன்
இதுவரை இங்கிலாந்திற்கு வந்ததில்லை,

284
00:13:28,475 --> 00:13:31,436
புதியவர்களை தான் நீங்கள்
வெற்றி பெற செய்திருக்கிறீர்கள்...

285
00:13:31,520 --> 00:13:33,564
அதுவும் இரண்டாம் நிலையில் உள்ள அணி...

286
00:13:33,647 --> 00:13:35,607
மற்றும் இப்போது ஒரு பிரிமியர் லீக்
கால்பந்து குழுவின்

287
00:13:35,691 --> 00:13:37,234
தலைமை பொறுப்பேற்றிருக்கிறீர்கள்,

288
00:13:37,317 --> 00:13:40,612
இந்த விளையாட்டைப் பற்றி மிகவும்
கொஞ்ச அறிவே இருந்தாலும்.

289
00:13:41,530 --> 00:13:43,073
நீங்கள் எதாவது கேள்வி
கேட்டீர்களா, ட்ரென்ட்?

290
00:13:43,866 --> 00:13:44,950
ஆமாம்.

291
00:13:45,534 --> 00:13:47,202
இது என்ன ஒரு மோசமான நகைச்சுவையா?

292
00:13:48,537 --> 00:13:50,873
-நன்றி, ட்ரென்ட்!
-எனக்கு பத்திரிகையாளர்களைப் பிடிக்கும்.

293
00:13:52,040 --> 00:13:54,042
வந்து, உங்களுக்கு கால்பந்து வீரர்களின்
பெயர்களாவது தெரியுமா?

294
00:13:54,126 --> 00:13:57,296
ஆமாம், அது, ரொனால்டோ இருக்கிறார் மற்றும்
தன்னைப் போலவே வளைபவர்.

295
00:13:57,379 --> 00:13:59,506
-பெக்காம்! திரைப்படம் கூட எடுத்தார்கள்.
-நீ ஒரு முட்டாள், நண்பா.

296
00:13:59,590 --> 00:14:00,757
யார்தான் நீ?

297
00:14:00,841 --> 00:14:02,968
ஒரு பிரத்யேக சீசனில் எவ்வளவு
கேம்கள் இருக்குமென தெரியுமா?

298
00:14:03,051 --> 00:14:04,219
இல்லை, மனப்பாடமாக தெரியாது.

299
00:14:06,763 --> 00:14:08,015
யாராலும் உங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

300
00:14:08,098 --> 00:14:09,516
போன வருடம் லீகில் யார் வென்றது?

301
00:14:09,600 --> 00:14:11,560
அதற்கான பதில் எனக்கு தெரியாது.
மன்னிக்கவும்.

302
00:14:12,269 --> 00:14:13,478
கோலி என்றால் என்ன?

303
00:14:13,562 --> 00:14:16,023
மிக்கி மௌஸ் போன்ற பெரிய கைகள் கொண்ட...
வலையின் பக்கத்தில் நிற்கும் நபர்.

304
00:14:16,106 --> 00:14:17,566
இது மோசம்.

305
00:14:17,649 --> 00:14:19,151
நீங்க அமெரிக்காவிற்கு திரும்ப போகணும்.

306
00:14:28,869 --> 00:14:30,662
ஆமாம், ஆமாம். இல்லை, ஆமாம்.
இல்லை, நான்...

307
00:14:33,707 --> 00:14:35,083
நுரைகள்!

308
00:14:35,167 --> 00:14:37,085
அடக் கடவுளே!

309
00:14:37,961 --> 00:14:39,505
பயிற்சியாளர் லாஸ்ஸோ.

310
00:14:39,588 --> 00:14:42,216
அடக் கடவுளே.
என் சக நாட்டினரை மன்னியுங்கள்.

311
00:14:42,299 --> 00:14:44,092
சில வருட காலமாக,

312
00:14:44,176 --> 00:14:47,387
நாம் நல்ல பண்பு மற்றும் விருந்தோம்பலை
மறந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

313
00:14:47,471 --> 00:14:49,973
நீங்கள், எல்லோரும்,
ரொம்பவும் கோபப்படுகிறீர்களே?

314
00:14:50,057 --> 00:14:53,018
ஆனால் இந்த அறை பத்திரிகையாளர்களால்
நிரம்பியதை இப்போது தான் பார்க்கிறேன்.

315
00:14:53,560 --> 00:14:55,521
நீங்கள் எல்லோரும் இங்கே இருக்கிறீர்கள்.

316
00:14:55,604 --> 00:14:57,314
நீங்கள் எல்லோரும் சிறந்தவர்கள் என்று
நினைக்கிறேன்.

317
00:14:57,397 --> 00:15:00,192
நீங்கள் இவ்வளவு நபர்கள் இங்கே இருந்தாலும்,

318
00:15:00,275 --> 00:15:02,194
ரிச்மண்ட் விளையாடுவதை
நான் பார்த்ததை விட அதிகமாக

319
00:15:02,277 --> 00:15:04,446
இங்கே இருப்பவர்கள் பார்த்திருக்க முடியாது.

320
00:15:04,530 --> 00:15:08,367
முந்தைய உரிமையாளரின் தலைமையில்
அந்த எல்லா வருடங்களிலும்,

321
00:15:08,450 --> 00:15:10,702
குழுவினர்கள் மிக சுமாராக விளையாடியதைத்தான்
நான் பார்த்திருக்கிறேன்.

322
00:15:13,121 --> 00:15:14,289
நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா?

323
00:15:14,373 --> 00:15:15,582
அது, கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது.

324
00:15:18,460 --> 00:15:19,503
நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா?

325
00:15:20,754 --> 00:15:21,755
இல்லை.

326
00:15:22,840 --> 00:15:26,635
இப்போ, நீங்கள் எதிர்ப்பார்க்கும் திறமைகள்
பயிற்சியாளர் லாஸ்ஸோவிடம் இல்லாவிட்டாலும்,

327
00:15:26,718 --> 00:15:28,929
இந்த கிளப்பில் இல்லாத ஒன்று
அவரிடம் இருக்கிறது:

328
00:15:29,012 --> 00:15:30,430
இந்த மில்லேனியம் ஆண்டின் கோப்பை.

329
00:15:31,265 --> 00:15:34,893
எனவே, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நம்
செயலாற்றும் முறைகளை ரிச்மண்ட் மாற்றுகிறது.

330
00:15:34,977 --> 00:15:38,063
இப்போது முதல்,
அந்த வழி "லாஸ்ஸோவின் வழி."

331
00:15:40,399 --> 00:15:43,777
கிரிஸ்டல் பேலஸோடு நடக்கும் எங்கள் அடுத்த
மேட்சில் உங்களை சந்திக்க விரும்புகிறோம்.

332
00:15:43,861 --> 00:15:45,237
மிக்க நன்றி.

333
00:15:47,114 --> 00:15:48,365
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

334
00:15:48,448 --> 00:15:50,742
உங்க பொருட்களை அசுத்தப்படுத்தியதற்கு
மன்னிக்கவும்.

335
00:15:51,493 --> 00:15:52,494
நன்றி.

336
00:15:54,621 --> 00:15:55,789
அவருக்கு மூன்று வாரம்
அவகாசம் தருகிறேன்.

337
00:15:56,415 --> 00:15:59,251
ஓ, நண்பா. அதற்காக வருந்துகிறேன்.
என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

338
00:15:59,334 --> 00:16:01,587
டெட், ஒரு நொடி கூட
அவர்களைப் பற்றி நினைக்காதீர்கள்.

339
00:16:01,670 --> 00:16:02,671
நீங்கள் செய்வதற்கு வேலை இருக்கிறது.

340
00:16:02,754 --> 00:16:04,840
அவர்கள் சொன்னது தவறு என உறுதிசெய்யும் வேலை
இப்போது தான் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

341
00:16:04,923 --> 00:16:06,675
நன்றி... நன்றி, பயிற்சியாளரே.

342
00:16:06,758 --> 00:16:07,759
ஆமாம்.

343
00:16:09,094 --> 00:16:12,097
நுரைகள் இல்லை என்றால் பிரச்சினை இல்லை.
நாள் முழுதும் இதை செய்ய முடியும்.

344
00:16:13,891 --> 00:16:16,560
சரி. முடிந்தால், நான் நம் குழுவிடம்
அறிமுகம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

345
00:16:16,643 --> 00:16:18,645
ஒரு வீரனை அவரது
குழுவிலிருந்து பிரிக்க முடியாது.

346
00:16:20,063 --> 00:16:22,441
நீங்கள் அதை மறுபடியும் சொல்லலாம். சரிதான்.

347
00:16:22,524 --> 00:16:24,067
அந்த வாக்கியத்தில் நான் 2க்கு 0.

348
00:16:25,194 --> 00:16:27,279
மிஸ். வெல்டன், நான் கொஞ்சம்
கவலையாக இருந்தேன்,

349
00:16:27,362 --> 00:16:31,575
ஆனால் அங்கே நீங்கள் பேசியதை கேட்ட போது
உங்கள் தேர்வின் மீது மகிழ்ச்சி ஏற்பட்டது.

350
00:16:31,658 --> 00:16:33,994
பயிற்சியாளர் லாஸ்ஸோ தான் நமக்கு தேவை.

351
00:16:34,077 --> 00:16:35,370
அவர் மிகவும் திறமையற்றவர்.

352
00:16:35,454 --> 00:16:36,288
தெரியும்.

353
00:16:36,371 --> 00:16:37,664
மன்னிக்கணும், என்ன?

354
00:16:37,748 --> 00:16:39,208
அவர் மோசமாக தோற்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

355
00:16:40,542 --> 00:16:45,297
பாருங்க, என் முன்னாள் கணவர் தன் வாழ்நாளில்
உண்மையாக நேசித்த ஒன்று: இந்த கிளப்.

356
00:16:45,964 --> 00:16:49,134
டெட் லாஸ்ஸோ அதை அழிக்க எனக்கு
உதவப் போகிறார்.

357
00:16:50,844 --> 00:16:52,304
ஏனென்றால் நான் ரூபெர்ட்டை
சித்திரவதை செய்யணும்.

358
00:16:53,722 --> 00:16:57,351
அவர் பின்புறத்தில் ஒரு உடைந்த கிரிக்கெட்
மட்டையால் தாக்கப்படுவதாக அவர் உணரவேண்டும்.

359
00:16:57,434 --> 00:17:01,563
உள்ளே வெளியே, மீண்டும் மீண்டும்,
தொடர்ந்து அப்படி செய்ய வேண்டும்.

360
00:17:01,647 --> 00:17:03,065
ஒரு கிஃப் அனிமேஷன் போல.

361
00:17:03,941 --> 00:17:05,943
ஜிஃப்கள் அப்படித்தான் செய்யும், அல்லவா?
அவை...

362
00:17:07,194 --> 00:17:08,403
முடிவே இல்லாதவை.

363
00:17:09,488 --> 00:17:11,448
அது சரிதான்.

364
00:17:11,949 --> 00:17:16,078
சிலர் அதை "ஜிஃப்" என்று சொல்கிறார்கள்.

365
00:17:18,288 --> 00:17:19,665
-நன்றி, ஹிக்கின்ஸ்.
-நன்றி.

366
00:17:23,961 --> 00:17:26,046
சரி, நான் அதை ஒரு வாக்கியத்தில்
உபயோகிக்கிறேன், அப்போது தான் நிற்கும்.

367
00:17:26,128 --> 00:17:27,297
அந்த "வீரன்"... நான்...

368
00:17:27,381 --> 00:17:28,966
-என் "குழுவிடம்" போகிறேன்...
-சரி.

369
00:17:29,049 --> 00:17:30,509
...புல்தரையில்... பழகுவதை பார்ப்பதற்கு.

370
00:17:30,592 --> 00:17:32,427
"பயிற்சி." அவர்கள்
"பயிற்சி" என சொல்வார்கள்.

371
00:17:32,511 --> 00:17:34,513
இந்த சொற்கள் எல்லாம்.
ரொம்பவும் கடினமாக இருக்கப் போகிறது.

372
00:17:34,596 --> 00:17:37,140
தெரியுமா? அதை கற்றுக் கொள்வேன்.
ஏனெனில் பயிற்சி சிறப்பாக மாற்றும்.

373
00:17:37,224 --> 00:17:38,141
அப்படித்தான்.

374
00:17:38,809 --> 00:17:39,810
அதோ நம் நண்பன்.

375
00:17:44,857 --> 00:17:47,025
ஐயோ, அடக் கடவுளே!

376
00:17:47,109 --> 00:17:49,653
விளையாடுபவன் மீது
கவனம் இருக்க வேண்டும்! வா!

377
00:17:50,404 --> 00:17:52,030
-யார் அது?
-ராய் கென்ட்.

378
00:17:52,114 --> 00:17:55,033
குழுத் தலைவன்.
பழைய முறைப்படி விளையாடும் மிட்ஃபீல்டர்.

379
00:17:55,117 --> 00:17:58,412
-கண்டிப்பாக வேகம் குறைந்துவிட்டது.
-ஆனால், அவன் ஒரு லெஜென்ட்.

380
00:17:58,495 --> 00:18:00,122
செல்ஸியோடு விளையாடி சாம்பியன் லீகில்
வெற்றி பெற்றான், எனவே...

381
00:18:00,706 --> 00:18:02,666
-எட்டு வருடங்களுக்கு முன்னால்.
-ஆமாம்.

382
00:18:04,376 --> 00:18:05,460
ஓ, கடவுளே, என்ன?

383
00:18:06,253 --> 00:18:08,630
அது ஒரு நல்ல சிறந்த விளையாட்டிற்கான பானம்,
இளைஞனே.

384
00:18:08,714 --> 00:18:09,840
பயிற்சியாளரே, இதை குடிக்கிறீர்களா?

385
00:18:17,306 --> 00:18:19,474
அவனிடம் இருந்து அது லேசில் வராது,
நான் சொல்லுகிறேன்.

386
00:18:19,558 --> 00:18:21,059
நேத்தன், நீ தொடர்ந்து
ஆச்சரியப்படுத்துகிறாய்.

387
00:18:22,311 --> 00:18:23,687
நீங்கள் என் பெயரை
ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.

388
00:18:25,606 --> 00:18:27,191
அடடே! அதை பார்த்தீர்களா?

389
00:18:27,274 --> 00:18:30,277
ஒரு வெள்ளரிக்காயை பார்த்து பயந்து போன
பூனை போல இருக்கிறான்.

390
00:18:30,360 --> 00:18:32,404
-யார் அவன்?
-ஜேமி டார்ட்.

391
00:18:32,487 --> 00:18:34,072
குழுவின் முதன்மை கோல் போடுபவன்.

392
00:18:34,156 --> 00:18:35,157
தள்ளிப் போ.

393
00:18:35,866 --> 00:18:37,993
-நேட், அவன் எப்படிப்பட்டவன்?
-யார், ஜேமியா?

394
00:18:38,827 --> 00:18:39,870
அவன் சிறப்பானவன்.

395
00:18:41,205 --> 00:18:42,039
வந்து, கால்பந்து விளையாட்டில்.

396
00:18:44,124 --> 00:18:45,459
ஆம், இவனை போன்றவர்களை எனக்குத் தெரியும்.

397
00:18:46,502 --> 00:18:49,213
சாம் ஒபிசான்யா. அவன் நைஜீரியன் லீகில்
ஒரு வலது பக்க தடுப்பாட்டக்காரர்.

398
00:18:49,296 --> 00:18:51,048
நைஜிரியாவா? ஆப்பிரிக்க நாடா?

399
00:18:52,132 --> 00:18:53,926
ஆக இந்த வீர்கள் எல்லாம் எல்லா இடங்களில்
இருந்தும் வந்திருக்கிறார்களா?

400
00:18:54,009 --> 00:18:55,093
அதை அனுமதிக்கிறேன், நண்பா.

401
00:18:55,177 --> 00:18:56,595
வந்து, அவன் இங்கிலாந்தை
சார்ந்தவனாக இருப்பான், சரியா?

402
00:18:56,678 --> 00:18:58,180
-வேல்ஸ்.
-அது இன்னொரு நாடா?

403
00:18:58,263 --> 00:19:01,099
-ஆமாம் மற்றும் இல்லை.
-இந்த நாட்டிற்குள் எத்தனை நாடுகள் இருக்கு?

404
00:19:01,183 --> 00:19:02,351
-நான்கு.
-நான்கு.

405
00:19:03,268 --> 00:19:05,229
இது இப்போது அமெரிக்கா போல ஆகிவிட்டது.

406
00:19:05,854 --> 00:19:06,855
சரி.

407
00:19:21,203 --> 00:19:22,829
எனக்கு லாக்கர் அறை பிடிக்கும்.

408
00:19:23,705 --> 00:19:25,332
திறமையின் இருப்பிடம் போல வாசனையாக உள்ளது.

409
00:19:26,583 --> 00:19:28,710
ஆக்ஸ் உடல் ஸ்ப்ரே வாங்குவது பற்றி
எழுதிக் கொள்கிறாயா?

410
00:19:28,794 --> 00:19:30,337
நிச்சயமாக, பயிற்சியாளரே.

411
00:19:30,420 --> 00:19:32,256
ஆனால் இங்கு அதற்கு வேறு பெயர்
என நினைக்கிறேன்.

412
00:19:41,473 --> 00:19:42,474
டிங், டிங், டிங்.

413
00:19:43,809 --> 00:19:44,852
லின்க்ஸ்.

414
00:19:45,644 --> 00:19:47,145
எனக்கு பிடித்த காட்டு பூனை.

415
00:19:52,150 --> 00:19:54,319
இங்கே வா. உன் முகத்தைப் பார்.
உன் முகத்தைப் பார்.

416
00:19:54,403 --> 00:19:55,487
நன்றி, நன்றி, நன்றி.

417
00:20:05,372 --> 00:20:06,748
ஆமாம்.

418
00:20:06,832 --> 00:20:08,208
கடைசியாக இப்படிப்பட்ட கோபக் கண்களை,

419
00:20:08,292 --> 00:20:10,294
ராய் ஷைடரோடு மோதும் வீரனின்
முகத்தில் பார்த்தேன்.

420
00:20:10,377 --> 00:20:12,337
-ஜாஸ்?
-இல்லை, 'ஆல் தட் ஜாஸ்'.

421
00:20:12,421 --> 00:20:14,298
நான் ஒன்று சொல்ல போகிறேன்.
எல்லோரும், எப்படி இருக்கிறீர்கள்?

422
00:20:14,381 --> 00:20:16,175
நீங்கள் செய்வதை நிறுத்தாதீர்கள்.

423
00:20:16,258 --> 00:20:18,635
என் பெயர் டெட் லாஸ்ஸோ.
இவர் தான் பயிற்சியாளர் பியர்ட்.

424
00:20:18,719 --> 00:20:20,679
அதிகாரப்பூர்வமாக நாங்க இன்னும்
நியமிக்கப்படலை,

425
00:20:20,762 --> 00:20:23,098
ஆனாலும், இங்கு வந்து,
உங்களை சந்தித்து, ஹலோ சொல்ல நினைத்தோம்,

426
00:20:23,182 --> 00:20:25,058
இங்கு வந்திருப்பது எங்களுக்கு எவ்வளவு
மகிழ்ச்சி அளிக்கிறது...

427
00:20:25,142 --> 00:20:26,268
டக், டக்.

428
00:20:26,351 --> 00:20:28,312
இங்கே எல்லோரும் ஒழுங்காக இருக்கிறீர்களா?

429
00:20:30,314 --> 00:20:32,649
அது மோசம், நண்பர்களே.

430
00:20:33,984 --> 00:20:36,945
ஓ, கடவுளே. நான் உங்களை
தொந்தரவு செய்கிறேனா?

431
00:20:37,029 --> 00:20:39,573
இல்லை, பரவாயில்லை. உங்களுக்கு
நான் என்ன உதவி செய்ய வேண்டும்?

432
00:20:39,656 --> 00:20:41,366
இல்லை, நான் அவனை
அழைத்துச் செல்ல வந்தேன்.

433
00:20:41,450 --> 00:20:42,868
ஆமாம். மன்னிக்கவும், பயிற்சியாளரே.

434
00:20:42,951 --> 00:20:45,120
எனக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளாள்.
நெஞ்சு முடியை நீக்கப் போகிறேன்.

435
00:20:46,371 --> 00:20:48,123
எனக்காக என்பதை விட
என் ரசிகர்களுக்காக தான்.

436
00:20:48,207 --> 00:20:50,834
நான் ஒரு கோல் போட்டால்,
என் மேல் சட்டையை கழற்ற வேண்டும்.

437
00:20:50,918 --> 00:20:52,503
அன்பே.

438
00:20:53,879 --> 00:20:55,088
வந்து, வேண்டும் என்றால்
நான் இங்கேயே இருக்கிறேன்.

439
00:20:56,381 --> 00:20:57,382
இல்லை, பரவாயில்லை.

440
00:20:57,466 --> 00:20:58,884
சரி, வணக்கம்.

441
00:20:58,967 --> 00:21:00,302
-ஆமாம்.
-வா போகலாம்.

442
00:21:00,385 --> 00:21:01,345
சரி, நண்பா, உன் பின்னே வருகிறேன்.

443
00:21:01,428 --> 00:21:03,222
நீ இப்போது நல்லவனாக
இருக்கப் போகிறாய், அப்படித்தானே?

444
00:21:03,305 --> 00:21:05,057
இல்லை, அன்பே.
உன் பின்னழகை பார்க்கப் போகிறேன்.

445
00:21:06,391 --> 00:21:07,684
வெளியே போ.

446
00:21:07,768 --> 00:21:10,354
அதைப் பார்த்து அழு.

447
00:21:16,652 --> 00:21:19,446
சரி, உங்க நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.

448
00:21:42,719 --> 00:21:44,179
வாழ்த்துக்கள்
அப்பா

449
00:21:53,397 --> 00:21:56,191
வெற்றியின் கோபுரம்

450
00:22:03,448 --> 00:22:05,617
பயிற்சியாளரே. நீங்கள் தூங்காமல் இருங்கள்.

451
00:22:06,994 --> 00:22:09,204
வா, நண்பா. இப்படி தூங்கி வழியாதே.

452
00:22:12,291 --> 00:22:14,168
ராய்! ஹேய், ராய்!

453
00:22:15,878 --> 00:22:17,629
என்ன? உங்களுக்கு என்ன வேண்டும்?

454
00:22:17,713 --> 00:22:19,923
இன்று நீ விளையாடியதை பார்த்தது
ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

455
00:22:20,007 --> 00:22:22,259
உன் வார்த்தைகளை வீரர்கள் கேட்கிறார்கள்.

456
00:22:22,342 --> 00:22:24,678
அது எனக்கு ஆச்சரியமாக இல்லை.
உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கு.

457
00:22:25,304 --> 00:22:26,346
நன்றி.

458
00:22:28,056 --> 00:22:31,435
எங்களுக்கு மோசமான ரொனால்ட் மெக்டொனால்ட்
பயிற்சி அளிப்பார் என்று நினைக்கவில்லை.

459
00:22:38,358 --> 00:22:40,444
அவன் உன்னை அப்படி அழைப்பதை
அனுமதிக்கப் போகிறாயா?

460
00:22:40,527 --> 00:22:41,945
அவன் என்னை சொன்னதாக தோணலை.

461
00:22:42,905 --> 00:22:45,490
அவன் இப்போது கோபமாக இருக்கிறான்,
அவனை நண்பனாக்கும் வரை காத்திரு.

462
00:22:46,241 --> 00:22:48,744
அவன் ரொம்ப கோபப்படுவான்.

463
00:22:48,827 --> 00:22:50,078
உன்னிடம் ஏதாவது டேப் இருக்கா?

464
00:23:05,219 --> 00:23:06,803
நம்பு

465
00:23:10,682 --> 00:23:11,683
டார்ட்

466
00:23:25,155 --> 00:23:26,114
நீங்க அங்க என்ன செய்றீங்க?

467
00:23:27,407 --> 00:23:29,409
ஓ, கடவுளே. மன்னிக்கவும். நீங்கள் நலமா?

468
00:23:29,493 --> 00:23:30,994
ஆம், பரவாயில்லை, நன்றாக இருக்கிறேன்.

469
00:23:31,078 --> 00:23:32,246
நான் சிரிக்கக் கூடாது.

470
00:23:32,329 --> 00:23:33,872
பரவாயில்லை.

471
00:23:33,956 --> 00:23:37,918
நான் லாக்கர் அறையில்
சில மாறுதல்கள் செய்ய வந்தேன்.

472
00:23:38,001 --> 00:23:39,503
ஆமாம், நன்றாக இருக்கிறது.

473
00:23:39,586 --> 00:23:43,048
ஆனால், கொஞ்சம் கோணலாக இருக்கிறது.

474
00:23:44,424 --> 00:23:46,677
இப்போது இந்த அறை தான்
சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.

475
00:23:46,760 --> 00:23:48,095
ஆனால் என்ன தெரியுமா? நீ சொல்வது சரி.

476
00:23:49,888 --> 00:23:51,682
நீ இங்கே என்ன செய்கிறாய்? ஜேமி எங்கே?

477
00:23:51,765 --> 00:23:53,267
அவன் லாக்கரிலேயே கைபேசியை வைத்துவிட்டான்.

478
00:23:53,350 --> 00:23:54,935
அவன் ஏன் வந்து அதை எடுக்கவில்லை?

479
00:23:55,018 --> 00:23:57,437
இன்னும் அழகு நிலையத்தில் இருக்கிறான்.
அவனுக்கு நிறைய முடி இருக்கிறது.

480
00:23:57,521 --> 00:23:59,481
அவள் வெட்டும் போதே,
மறுபடியும் வளருகிறது போல.

481
00:24:00,107 --> 00:24:01,942
-அதை விடு, இப்போ.
-நான் எடுத்துக் கொள்ளலாமா?

482
00:24:02,025 --> 00:24:03,777
-சரி, நீயே எடுத்துக்கொள்.
-நன்றி.

483
00:24:11,702 --> 00:24:13,412
அந்த பக்கம் கீழே இறக்குங்க.

484
00:24:13,495 --> 00:24:14,496
சிறப்பு.

485
00:24:14,580 --> 00:24:15,747
இன்னும் கொஞ்சம், நகர்த்துங்க.

486
00:24:16,665 --> 00:24:17,666
இன்னும் கொஞ்சம்.

487
00:24:17,749 --> 00:24:19,334
போதும்! கச்சிதமாக இருக்கு.

488
00:24:19,418 --> 00:24:21,920
சரி. இது எப்படி இருக்கு?
சிறந்த ஒன்று சேர்ந்த உழைப்பு.

489
00:24:22,963 --> 00:24:24,548
-ஆமாம். ஆமாம்.
-பழைய முறை.

490
00:24:24,631 --> 00:24:27,092
-சரி, என் பெயர், கீலி.
-சரி. ஹே, நான் தான் டெட் லாஸ்ஸோ.

491
00:24:27,176 --> 00:24:29,303
இல்லை, தெரியும். ட்விட்டரில் நீங்கதான்
இப்போது சிறப்பாக பேசப்படுகிறீர்கள்.

492
00:24:29,386 --> 00:24:30,554
அது எப்படி இருக்கு.

493
00:24:31,221 --> 00:24:32,931
-நீங்க ட்வீட் செய்வீர்களா?
-மாட்டேன்.

494
00:24:33,015 --> 00:24:34,433
ஆனால் பீட்பாக்ஸ் செய்வேன்.

495
00:24:43,817 --> 00:24:46,820
என் முன் வளர்ந்தவர் பீட்பாக்ஸ் செய்தால்
அதற்கு எப்படி நடப்பது என எனக்கு தெரியாது.

496
00:24:46,904 --> 00:24:48,864
நீ பிஸ் மார்க்கீயை
சந்திக்க மாட்டாய் என நம்புகிறேன்.

497
00:24:50,449 --> 00:24:51,742
சரி.

498
00:24:51,825 --> 00:24:54,703
சரி, நீங்க கொஞ்சம் ஆர்வத்தோடு ட்விட்டரை
தேட நினைத்தால்,

499
00:24:54,786 --> 00:24:56,330
♪ரிச்மண்ட் என்ற பக்கத்தை பார்க்காதீர்.

500
00:24:56,413 --> 00:24:59,458
-சரி.
-அல்லது முட்டாள். அல்லது மோசம்.

501
00:25:00,083 --> 00:25:01,752
சரி, நீ சொல்வதை நம்புகிறேன்.

502
00:25:02,753 --> 00:25:04,838
இங்கிலாந்திற்கு வரவேற்கிறோம்.

503
00:25:12,846 --> 00:25:14,806
நன்றி.
ஹே, என்னை அழைக்க வந்ததிற்கு நன்றி.

504
00:25:14,890 --> 00:25:15,849
பரவாயில்லை.

505
00:25:15,933 --> 00:25:17,559
ஹே, இது உன்னுடையதா, நேட்?

506
00:25:17,643 --> 00:25:19,520
அதுவா? கடவுளே, இல்லை.
என்னால் அதை சமாளிக்க முடியாது.

507
00:25:19,603 --> 00:25:21,104
இந்த பச்சை நிற வண்டி தான் என்னுடையது.

508
00:25:21,188 --> 00:25:23,565
சரி, ஆக, அதை உள்ளே வை.

509
00:25:23,649 --> 00:25:24,650
வாருங்கள்.

510
00:25:24,733 --> 00:25:27,361
நீங்கள் நல்லிரவிலும் ரொம்பவே
உழைக்கிறீர்கள், டெட்.

511
00:25:27,444 --> 00:25:28,654
வந்து, யாரோ சொன்னது போல,

512
00:25:28,737 --> 00:25:31,323
"எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ,
அவ்வளவு அதிருஷ்டம் கிடைக்கும்" சரியா?

513
00:25:32,199 --> 00:25:33,200
அதற்கு நடுவே.

514
00:25:33,283 --> 00:25:35,244
மன்னிக்கவும், டெட்.
உங்களுக்கு ஒரு காரை கொடுத்திருக்கணும்.

515
00:25:35,327 --> 00:25:36,662
ஓ, இல்லை. பரவாயில்லை.

516
00:25:36,745 --> 00:25:37,829
எல்லோருக்கும், இரவு வணக்கம்.

517
00:25:41,375 --> 00:25:42,376
உனக்கு என்ன ஆயிற்று?

518
00:25:42,459 --> 00:25:44,586
இன்றைக்கு நான் சாப்பிட்டது எல்லாம்...

519
00:25:45,546 --> 00:25:47,464
இங்கேயே இருக்கிறது போல தோன்றுகிறது.

520
00:25:49,508 --> 00:25:50,759
நான் பார்த்துக்கொள்கிறேன்.

521
00:25:52,803 --> 00:25:53,804
இதோ.

522
00:25:53,887 --> 00:25:57,182
அவன் நல்லவன் போல தோன்றுகிறது. என்னால்
இதை செய்ய முடியாது என நினைக்கிறேன்.

523
00:25:59,142 --> 00:26:00,394
அதாவது, இது வேலை செய்வதற்கு,

524
00:26:00,477 --> 00:26:04,857
கால்பந்து விவகாரங்களின் புது இயக்குனரின்
முழு ஒத்துழைப்பும் எனக்கு தேவைப்படுகிறது.

525
00:26:05,858 --> 00:26:08,277
இது உனக்கும் உன் குடும்பத்திற்கும்
உதவியாக இருக்க

526
00:26:08,360 --> 00:26:10,863
ஒரு சிறந்த பதவி உயர்வும் அதற்கான
சம்பள உயர்வும் தான் என நினைக்கிறேன்.

527
00:26:13,407 --> 00:26:15,534
ஹே, இந்த காரின் ஸ்டியரிங் வீல்
கண்ணுக்கே தெரியவில்லை!

528
00:26:17,703 --> 00:26:18,662
நான் சும்மா சொல்கிறேன்.

529
00:26:18,745 --> 00:26:20,455
என் நண்பன் நேட் தான் ஹார்னை அடிக்கிறான்.

530
00:26:20,539 --> 00:26:23,166
நீங்கள் கடவுள் தந்த வரம், டெட் லாஸ்ஸோ.

531
00:26:23,250 --> 00:26:25,085
பாம்பின் கால் பாம்பறியும்.

532
00:26:29,756 --> 00:26:30,757
என்ன?

533
00:26:32,092 --> 00:26:33,302
நான் ஒத்துக் கொள்கிறேன்.

534
00:26:33,385 --> 00:26:34,511
அற்புதம்.

535
00:26:40,475 --> 00:26:42,144
ஓ, பார் ஹிக்கின்ஸ்,

536
00:26:42,227 --> 00:26:45,022
இந்த சாகசத்தின் சில விஷயங்கள்

537
00:26:45,105 --> 00:26:46,398
உனக்கு கஷ்டத்தைக் கொடுக்கலாம்.

538
00:26:46,481 --> 00:26:48,734
ஆனால் இவ்வளவு வருட காலம்
என் பார்வைப்படாமல்

539
00:26:48,817 --> 00:26:51,820
ரூபெர்ட் உறவு கொண்ட பெண்களை
நீ மறைத்தது போல கடினமாக இருக்காது.

540
00:27:07,169 --> 00:27:08,295
இது தான் உங்க இடம், பயிற்சியாளரே.

541
00:27:09,338 --> 00:27:11,548
சரி. சரி. நீ நன்றாக இருக்கிறாயா?

542
00:27:11,632 --> 00:27:13,217
-நலம்தான். நீ நலமா?
-ஆமாம்.

543
00:27:13,300 --> 00:27:14,468
-இரவு வணக்கம், பயிற்சியாளரே.
-இரவு வணக்கம், பயிற்சியாளரே.

544
00:27:14,551 --> 00:27:16,011
நான் மறந்தேவிட்டேன்.

545
00:27:17,304 --> 00:27:18,805
இது ஏதற்காக?

546
00:27:18,889 --> 00:27:20,557
-"தோற்றதற்காக."
-தூங்குங்கள், பயிற்சியாளரே.

547
00:27:20,641 --> 00:27:21,850
ஆம், நிச்சயமாக.

548
00:27:32,861 --> 00:27:35,822
வரவேற்கிறோம்
பயிற்சியாளர் டிம் லாஸ்ஸோ

549
00:28:09,106 --> 00:28:11,567
ஹே, பெரியவனே? எப்படி இருக்க?
இன்றைக்கு பள்ளி எப்படி இருந்தது?

550
00:28:12,943 --> 00:28:13,861
சரி.

551
00:28:13,944 --> 00:28:15,529
இல்லை, நான் மறந்து விட்டேன்.

552
00:28:15,612 --> 00:28:17,865
ஆமாம். ஆமாம், நான் இன்று கொஞ்சம்
மயக்கமாக உணர்கிறேன்.

553
00:28:18,866 --> 00:28:20,784
ஆமாம். ஆமாம், நீ அதை சொல்லலாம்.

554
00:28:22,369 --> 00:28:24,788
இல்லை, இல்லை, பரவாயில்லை.இல்லை.
உன் குரல் கேட்க ஆசைப்பட்டேன்.

555
00:28:24,872 --> 00:28:26,415
ஆமாம், நீ போய் உன் வேலையைப் பார். சரி.

556
00:28:26,498 --> 00:28:28,083
ஹேய், அங்கே உன் அம்மா இருக்காங்களா?

557
00:28:28,166 --> 00:28:30,252
சரி. நன்றி, பெரியவனே.

558
00:28:30,335 --> 00:28:31,420
ஹே, நான் உன் நினைவாக இருக்கிறேன்.

559
00:28:34,047 --> 00:28:35,549
ஆமாம், நானும் உன்னை நேசிக்கிறேன்.

560
00:28:36,258 --> 00:28:37,259
சரி.

561
00:28:46,768 --> 00:28:48,103
ஹேய், நீ எப்படி இருக்க?

562
00:28:48,770 --> 00:28:51,440
ஆமாம். வந்து, இது வரைக்கும் நன்றாக
இருக்கிறேன். உனக்கு தெரியுமா?

563
00:28:52,858 --> 00:28:55,194
இதைப் பழகிக் கொள்வதற்கு சிறிது
காலம் ஆகும், ஆமாம்.

564
00:28:55,277 --> 00:28:57,946
ஆனால் கொஞ்சம் காலம் ஆனவுடன்,
எல்லாம் சரியாகி விடும்.

565
00:28:58,864 --> 00:29:01,408
ஆமாம். இல்லை, அது உண்மைதான்,
உண்மைதான், ஆமாம்.

566
00:29:02,326 --> 00:29:04,995
சரி, உனக்குத் தெரியுமா?
இது உண்மையில் நன்றாக இருக்கிறது. ஆம்.

567
00:29:06,163 --> 00:29:08,832
ஆமாம், மற்றும், இங்கே
ஒரு அழகிய சுற்றுப்புறம் இருக்கிறது.

568
00:29:08,916 --> 00:29:09,917
ஆமாம்.

569
00:29:10,000 --> 00:29:12,377
ஆமாம், நீயும் பிள்ளையும் ஒரு நாள்
இங்கே வர வேண்டும்.

570
00:29:12,461 --> 00:29:13,629
வந்து இங்கே சுற்றி பார்க்க வேண்டும்.

571
00:29:18,634 --> 00:29:19,927
என்ன? வேண்டாம், நான் என்ன சொன்னேன்?

572
00:29:23,472 --> 00:29:26,141
ஆனால் அதை தான் நான் செய்கிறேன்.
உனக்கு தேவையான இடைவெளி கொடுக்கிறேன்.

573
00:29:27,768 --> 00:29:28,769
ஆமாம், ஆமாம், ஆமாம்.

574
00:29:28,852 --> 00:29:30,354
ஆமாம், நானும் தான்.சரி.

575
00:29:32,648 --> 00:29:33,690
சரி.

576
00:29:34,441 --> 00:29:36,443
இல்லை, இல்லை. பரவாயில்லை. சரி, சரி.

577
00:29:36,527 --> 00:29:37,778
ஹே, மிஷல்.

578
00:29:39,404 --> 00:29:40,405
உன்னை நேசிக்கிறேன்.

579
00:29:44,409 --> 00:29:46,370
இல்லை, பரவாயில்லை.
நீ அப்படி சொல்லத் தேவையில்லை.

580
00:29:47,621 --> 00:29:49,623
உண்மையாகவே. ஆமாம்.

581
00:29:52,501 --> 00:29:53,585
சரி.

582
00:29:55,963 --> 00:29:57,756
சரி, இப்போது போய் தூங்கு. இரவு வணக்கம்.

583
00:30:15,274 --> 00:30:17,943
அய்யோ. இப்போது என்னால் தூங்க முடியலை.

584
00:30:46,847 --> 00:30:48,849
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

