1
00:00:06,507 --> 00:00:10,177
ஏஎஃப்சி ரிச்மண்டை தன் சொந்த ஊர் ரசிகர்களே
கூச்சல் போட்டுக் கலாய்ப்பதை கேட்கிறீர்கள்,

2
00:00:10,260 --> 00:00:13,472
ஆனால் அதற்கு எந்த காரணமும் இல்லாமலில்லை
என்று தான் சொல்ல வேண்டும்.

3
00:00:13,972 --> 00:00:15,807
2-0. நம்மால் அதைவிட நன்றாக செய்ய முடியும்.

4
00:00:16,683 --> 00:00:20,187
ஜேமி, ஜேமி. மன்னிச்சிடு, நீ எதிர்ப்பார்த்த
இடத்தில் நான் பந்தை வீசவில்லை.

5
00:00:21,104 --> 00:00:22,105
அதை விடு, நண்பா.

6
00:00:22,189 --> 00:00:24,691
ஹேய், உன் விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள

7
00:00:24,775 --> 00:00:26,735
நான் ஏதாவது அறிவுரை கூறினால்
தவறாக எடுத்துப்பாயா?

8
00:00:26,818 --> 00:00:27,819
தயவுசெய்து, எதுவானாலும் சொல்.

9
00:00:27,903 --> 00:00:31,281
நீ கால எந்திரத்துக்குள் போய், உன் அம்மா
எந்த விளையாட்டுத் திறனும் இல்லாத

10
00:00:31,365 --> 00:00:34,493
ஒரு பாவப்பட்ட மனிதனோடு உறவு கொள்ளும்
தருணத்திற்குத் திரும்பி விடு.

11
00:00:34,576 --> 00:00:39,248
அவளை அவரிடமிருந்து பிரித்து,
அர்ஜன்டினா போய் மரடோனாவிடம் சேர்த்து விடு.

12
00:00:41,124 --> 00:00:42,334
அதுதான் சரியாக இருக்கும், தோழா.

13
00:00:43,252 --> 00:00:44,503
சரி, அவ்வளவு தான்.

14
00:00:45,212 --> 00:00:47,005
எல்லோரையும் அவமானப்படுத்துவதை இனியும்
பொறுத்துக்கொள்ள முடியாது.

15
00:00:48,423 --> 00:00:53,512
ஒன்று, நான் இந்தக் கிழவனைத் அடிக்கணும்
அல்லது இந்தக் கிழவன் என்னை அடிக்கணும்.

16
00:00:56,557 --> 00:00:57,558
நாசமாப் போச்சு. நாம் தொடங்கலாம்.

17
00:00:58,016 --> 00:00:59,268
கருமம்...

18
00:01:00,185 --> 00:01:01,770
ஹேய், ஹேய், ஹேய்!

19
00:01:03,647 --> 00:01:05,274
பொறுமை, பொறுமை, பொறுமையாக இருங்க!

20
00:01:05,357 --> 00:01:07,359
கோச், இவர்களிடம் என் சண்டைக் குழுவின்
முதல் விதியை சொல்லுங்க.

21
00:01:07,442 --> 00:01:10,320
-சண்டைக் குழு கிடையாது.
-சண்டைக் குழு கிடையாது, சரியா? புரிந்ததா?

22
00:01:11,029 --> 00:01:14,199
தயவு செய்து சொல்வதை கேளுங்க.
நமக்கு இன்னும் பாதி ஆட்டம் இருக்கு.

23
00:01:14,283 --> 00:01:16,118
இப்போ, தயவுசெய்து, எல்லோரும் உட்காருங்கள்.

24
00:01:18,579 --> 00:01:20,080
தலைவர் உன்னைக் காப்பாற்றிவிட்டார், கிழவா.

25
00:01:24,209 --> 00:01:25,586
இன்னொரு முறை...

26
00:01:26,879 --> 00:01:27,880
என்னைக் கிழவா என்று கூப்பிடு.

27
00:01:32,050 --> 00:01:33,051
மன்னிச்சிடு...

28
00:01:34,678 --> 00:01:35,888
தாத்தா.

29
00:01:35,971 --> 00:01:37,681
உன்னைக் கொல்லப் போகிறேன்!

30
00:02:00,871 --> 00:02:06,335
நான்காம் மேஜையை ஒதுக்கியாச்சு, இனி
அது அலுப்பான மேஜை என்று தான் கருதப்படும்.

31
00:02:06,960 --> 00:02:08,419
ஆனால், அதில் தான் நான் உட்காருகிறேன்.

32
00:02:10,672 --> 00:02:13,759
நான் இன்னும் எல்லைன் கென்னருக்கான இடத்தை
ஒதுக்கவில்லை. மோசமான பெண்.

33
00:02:13,842 --> 00:02:17,262
அவள் இன்றிரவு வர மாட்டாள். அவளுடைய
குதிரை அவளை முகத்தில் உதைத்து விட்டது.

34
00:02:17,346 --> 00:02:19,431
ஐயோ பாவம். குதிரை நன்றாக இருக்கிறதா?

35
00:02:23,352 --> 00:02:25,854
நம் குழு இன்னும்
பிரிந்திருப்பது போல தான் தெரிகிறது.

36
00:02:26,522 --> 00:02:28,273
கோச், நான் இப்போ
என்ன நினைக்கிறேன், தெரியுமா?

37
00:02:28,357 --> 00:02:30,734
-வெஸ்ட் சைட் ஸ்டோரி?
-உங்களுக்கு தெரியும். ஷார்க்ஸும் ஜெட்ஸும்.

38
00:02:30,817 --> 00:02:31,818
இவர்கள் தங்களின் பிரச்சினைகளை

39
00:02:31,902 --> 00:02:34,696
ஜிம்னாசியத்தில் நடனமாடித் தீர்த்துக்
கொள்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

40
00:02:34,780 --> 00:02:36,406
எனக்கு என்ன ஞாபகம் என்றால்,

41
00:02:36,490 --> 00:02:40,035
ரிஃப்பும் பெர்னாடும், அந்த நிகழ்ச்சியில்
தான் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்கள்.

42
00:02:40,118 --> 00:02:42,329
இல்லை, அதன் பின்னர் நடந்த
தெருச் சண்டையில் தான் இறந்தார்கள்.

43
00:02:42,412 --> 00:02:43,497
ஆம், சரி, சரி.

44
00:02:43,580 --> 00:02:45,582
என் 15 வயதில், நான் அனிதாவுக்கு
மாற்று நடிகராக இருந்தேன்.

45
00:02:46,667 --> 00:02:47,876
பசங்க மட்டும் படிச்ச பள்ளியில படிச்சேன்.

46
00:02:49,002 --> 00:02:51,713
நேத்தன் பற்றிய இன்னொரு விஷயத்தை
நாம் தெரிந்துக் கொண்டோம்.

47
00:02:52,130 --> 00:02:53,674
பயிற்சியாளர் பியர்ட்!

48
00:02:54,466 --> 00:02:58,804
இன்றிரவு உணவிற்கு, கோழி வேண்டுமா அல்லது
மாட்டிறைச்சியா?

49
00:02:58,887 --> 00:03:00,347
இரண்டையும் தேர்வு செய்யக் கூடாது!

50
00:03:00,848 --> 00:03:01,974
சரி!

51
00:03:02,057 --> 00:03:03,475
மாட்டிக் கொண்டாய்.

52
00:03:03,559 --> 00:03:04,685
அப்புறம், டெட்!

53
00:03:06,019 --> 00:03:09,314
-சொல்லுங்க!
-உங்களுடன் யார் வருகிறார்கள் என சொல்லுங்க!

54
00:03:09,398 --> 00:03:12,192
வந்து, அது திரு. கோச் பியர்ட் தான்.

55
00:03:12,276 --> 00:03:14,945
முடியாது, அவர் தன் தோழியை
அழைத்து வருகிறார்.

56
00:03:18,073 --> 00:03:19,324
ஹே, இன்றிரவு உனக்கு வேலை இருக்கா?

57
00:03:19,700 --> 00:03:21,910
-எல்லா இரவுகளிலும் எனக்கு வேலை இல்லை.
-சரி.

58
00:03:21,994 --> 00:03:24,121
-நான் நேத்தனைக் கூட்டிட்டு வருகிறேன்.
-யாரை?

59
00:03:24,496 --> 00:03:26,623
நேட் த கிரேட்! அவன் தான்
இன்றைக்கு என்னுடைய டேட்.

60
00:03:26,707 --> 00:03:29,585
சில காரணங்களுக்காக,
எட்டாம் எண் மேஜை தான் எங்களுக்கு வேண்டும்!

61
00:03:30,294 --> 00:03:31,295
கிடையாது!

62
00:03:31,879 --> 00:03:33,463
பியர்ட், உங்களுக்கு கோழிக்கறி.

63
00:03:37,509 --> 00:03:38,510
ஹே, தலைவரே.

64
00:03:38,594 --> 00:03:40,637
பைஜாமா வெள்ளிக் கிழமையா?
எனக்குத் தெரியாமல் போச்சே.

65
00:03:40,721 --> 00:03:42,639
இதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.

66
00:03:42,723 --> 00:03:44,933
-என் 17 வயதில்...
-டெட், உங்களையும், பைஜாமாஸ் பற்றிய

67
00:03:45,017 --> 00:03:47,394
உங்க புராணத்தை
ஆரம்பிக்காமல் நிறுத்தி விடுங்கள்.

68
00:03:47,477 --> 00:03:49,313
சரி, நீங்கள் மனம் மாறினால் சொல்லுங்கள்,

69
00:03:49,396 --> 00:03:51,190
ஏனென்றால், இது விசேஷமான ஒன்று.

70
00:03:51,773 --> 00:03:53,859
மன்னிச்சிடுங்க, உங்களுக்கு ஏதாவது தேவையா?
ஏன்னா நான்...

71
00:03:53,942 --> 00:03:56,987
ராய், ஜேமி மற்றும் எனக்கு இன்றிரவு
ஒரே மேஜை கிடைக்குமா என யோசித்தேன்.

72
00:03:57,070 --> 00:03:58,071
-இது சாத்தியமா?
-ஆம்!

73
00:03:58,155 --> 00:04:00,949
பிரமாதம்! சில விஷயங்களை சரி செய்யணும்,
அப்போ தான் எதிர்பார்த்தது நடக்கும்.

74
00:04:01,033 --> 00:04:02,951
-டெட், நான் சரி என்று சொல்லிவிட்டேன்.
-சரி.

75
00:04:03,785 --> 00:04:06,121
ஓ, கடவுளே,
அது ரொம்ப அழகாக இருக்கு, ஆனால்...

76
00:04:07,456 --> 00:04:09,374
இது ஏற்றதாக இருக்குமா என தெரியவில்லை.

77
00:04:09,458 --> 00:04:11,376
நிச்சயமாக இருக்கும்.
ஃபேஷன் என்பதே தன்னம்பிக்கை தான்.

78
00:04:11,460 --> 00:04:14,421
எனக்குத் தன்னம்பிக்கை இல்லாதிருந்தால்,
கல்லூரி நடனத்திற்கு பைஜாமா அணிந்திருந்து,

79
00:04:14,505 --> 00:04:15,881
அன்றையை இரவை
ஜெயிலில் கழித்திருக்க மாட்டேன்.

80
00:04:15,964 --> 00:04:17,841
நீங்க அதை கேட்க விரும்பாததால்,
நான் சொல்ல மாட்டேன்.

81
00:04:17,925 --> 00:04:19,176
தெரியுமா? நான் போகிறேன்.

82
00:04:19,259 --> 00:04:21,803
இன்று சந்தோஷமாகப் பொழுதைக்
கழிக்க ஆவலாக இருப்பீர்கள், சரியா?

83
00:04:21,887 --> 00:04:23,305
இல்லை. நான் நிதானமாக தான் இருக்கிறேன்.

84
00:04:23,388 --> 00:04:26,141
வந்து, இந்த நிகழ்ச்சியை
நானும் ரூபெர்டும் ஒன்றாக நடத்தும் போதும்,

85
00:04:26,225 --> 00:04:28,060
பெரும்பாலான வேலைகளை நானே தான் செய்வேன்.

86
00:04:28,143 --> 00:04:29,603
எனவே, எனக்கு ரொம்ப ஆவலோ,
எதிர்பார்ப்போ இல்லை.

87
00:04:29,686 --> 00:04:32,564
உண்மையில்,
நான் நிதானமாகத் தான் இருக்கிறேன்.

88
00:04:32,648 --> 00:04:34,858
மதிய வணக்கம். ஒரு பெரிய பிரச்சனை.

89
00:04:34,942 --> 00:04:37,819
நம்முடைய இசை விருந்தாளி ராபி வில்லியம்ஸ்
நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.

90
00:04:37,903 --> 00:04:38,904
கடவுளே!

91
00:04:38,987 --> 00:04:40,113
ஓ, ஐயோ! யார் அது?

92
00:04:40,197 --> 00:04:44,952
இல்லையில்லை. அது பிரச்சனையே
இல்லை. நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

93
00:04:45,035 --> 00:04:47,204
சரி, நாம் இப்படி தான் செய்யப்போகிறோம்,
ஹிக்கின்ஸ்.

94
00:04:47,287 --> 00:04:50,374
இன்றிரவு, எல்லோரிடமும், ராபி நிகழ்ச்சியை
ரத்து செய்ததை சொல்லுவதற்கு முன்,

95
00:04:50,457 --> 00:04:54,086
நீ வேறொரு சிறந்த நபரை ஏற்பாடு செய்து
விடுவாய், அதனால் பிரச்சினை வராது.

96
00:04:54,461 --> 00:04:56,171
-சரியாக சொன்னீர்கள்.
-ஆம்.

97
00:04:56,255 --> 00:05:00,092
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உலகத்திலேயே
தலை சிறந்தவன் நான் தான்.

98
00:05:00,175 --> 00:05:03,554
இதோ. உங்களால் முடியும்.
பிடிங்க! ஆம்! அதைப்பாருங்க!

99
00:05:04,555 --> 00:05:06,139
உங்களால் முடியும், ஹிக்கின்ஸ்!

100
00:05:06,223 --> 00:05:08,183
உங்களுடைய கடின உழைப்பிற்காக
ரெபேக்கா பெருமைப்படுவாங்க.

101
00:05:08,267 --> 00:05:09,268
நன்றி, டெட்!

102
00:05:16,984 --> 00:05:18,485
இல்லை. இது எனக்குப் பிடிக்கலை, அன்பே.

103
00:05:18,569 --> 00:05:21,780
இது எனக்கேற்ற மாதிரி இல்லை.
இதில் ஹூட் இல்லை, ஜிப் இல்லை.

104
00:05:21,864 --> 00:05:23,031
இதில் வண்ண வடிவம் இல்லை.

105
00:05:25,409 --> 00:05:26,493
இதில் வண்ண வடிவம் கூட இல்லை.

106
00:05:27,077 --> 00:05:29,037
மோசம். வங்கி ஊழியர் மாதிரி இருக்கிறேன்.

107
00:05:29,121 --> 00:05:31,582
உன் தொடையிடுக்கில் இறுக்கிப் பிடிக்கும்
கால்சட்டை அப்படி தோன்றவில்லை.

108
00:05:31,665 --> 00:05:34,293
சரி. ஆனால் ஆண்மைவாய்ந்த வங்கி ஊழியர்
மாதிரி இருக்கிறேன்.

109
00:05:34,376 --> 00:05:36,461
அன்பே, அப்படி இருந்தால்
நாம் ஒன்றாகவே இருந்திருக்க மாட்டோம்.

110
00:05:38,422 --> 00:05:39,423
என்னவோ.

111
00:05:39,840 --> 00:05:40,841
சரி.

112
00:05:40,924 --> 00:05:44,720
பார், சிறப்பான ஃபேஷனை ஏற்றுக்கொள்ளும்
போது, அதிக விளம்பர வாய்ப்பு கிடைக்கும்.

113
00:05:44,803 --> 00:05:46,555
உனக்கான அடையாளத்தை
ஏற்படுத்தத்தான் முயலுகிறேன்.

114
00:05:47,681 --> 00:05:49,391
ஜேமி, வேண்டாம். நீ என்ன செய்கிறாய்?

115
00:05:49,474 --> 00:05:50,684
நான்...

116
00:05:51,852 --> 00:05:52,895
அலங்காரம் செய்கிறேன்.

117
00:05:53,770 --> 00:05:57,149
ஆம், மக்களுக்கு இதைப்பற்றி தெரியாது, ஆனால்
எனக்கு இந்த அலங்காரம் நன்றாக தெரியும்.

118
00:05:57,232 --> 00:05:59,610
-அப்படியா?
-ஆமாம், நான் ஒரு தயாரிப்பு போல.

119
00:05:59,985 --> 00:06:01,028
ஓ, அப்படியா?

120
00:06:01,820 --> 00:06:03,322
ஓய், கீழே, அன்பே.

121
00:06:05,490 --> 00:06:07,242
நல்ல பையன். சரி, விருந்தைக் கண்டு பிடி.

122
00:06:09,828 --> 00:06:11,163
ஹேய், அன்பே.

123
00:06:11,246 --> 00:06:14,374
நான் உன்னுடன் போனில் பேசிட நினைத்தேன்.
உன்னுடைய செய்தி கிடைத்தது.

124
00:06:14,458 --> 00:06:17,461
ஒருவர் மாற்றி ஒருவர் அழைக்கிறோம்.
இப்போது உன்னால் எடுக்க முடியவில்லை.

125
00:06:18,337 --> 00:06:19,713
ஹே, என்னவென்று தெரியுமா.

126
00:06:19,796 --> 00:06:21,965
என்னைக் கொண்டு வரச் சொன்னாயே அந்த
ஆடையை தான் அணிந்திருக்கிறேன்.

127
00:06:22,049 --> 00:06:23,926
எப்பொழுதும் போல, நீ சரியாகவே சொன்னாய்.

128
00:06:25,177 --> 00:06:29,515
ஆமாம், சரி, அவ்வளவு தான். உன்னை
நேசிக்கிறேன்... உன் பிரிவால் வாடுகிறேன்.

129
00:06:29,598 --> 00:06:32,142
சரி, அப்புறம்,
என் குட்டிப் பையனுக்கு என் அன்பைச் சொல்.

130
00:06:32,226 --> 00:06:33,644
சீக்கிரமே மீண்டும்
உன்னிடம் பேசுகிறேன், பை.

131
00:06:35,771 --> 00:06:37,397
ஹேய், இப்போ, எல்லாம் சரியாக இருக்கிறதா?

132
00:06:37,481 --> 00:06:39,149
கலைஞர்களை எனக்குப் பிடிக்கும்.

133
00:06:39,233 --> 00:06:40,317
இதோ.

134
00:06:41,985 --> 00:06:43,946
அடடா, இதோ பார்.

135
00:06:44,029 --> 00:06:45,489
-நான் ரொம்ப சீக்கிரமாக வரவில்லை.
-இல்லை.

136
00:06:45,572 --> 00:06:47,366
அல்லது தாமதமாக.
சரியான நேரத்திற்கு வர முயற்சித்தேன்.

137
00:06:47,449 --> 00:06:49,284
ஆம். நீ சரியான நேரத்துக்குத் தான்
வந்திருக்கிறாய், நேட்.

138
00:06:49,368 --> 00:06:50,536
-நல்லது.
-ஆம், சரியாக செய்தாய்.

139
00:06:51,119 --> 00:06:52,788
ஹே, உன்னை ஒன்று கேட்கிறேன்.

140
00:06:52,871 --> 00:06:55,207
உன் பல்லிடுக்கில் உணவு மாட்டிக்கொண்டது
என்று உன் நண்பர்கள்

141
00:06:55,290 --> 00:06:58,210
-சொல்வதை நீ விரும்புவாயா?
-ஆம், நிச்சயமாக.

142
00:06:58,293 --> 00:07:01,046
சரி, நல்லது. ஏன்னா
இந்த சூட் உனக்கு சுத்தமாகப் பொருந்தலை.

143
00:07:01,129 --> 00:07:02,965
-உண்மையாகவா?
-ஆமாம்.

144
00:07:03,048 --> 00:07:05,759
ஒரு சூட் வாங்கலாம் என்றுதான் பார்த்தேன்,
ஆனால் அது அதிக விலை.

145
00:07:05,843 --> 00:07:07,678
-எனவே அப்பாவின் சூட்டை எடுத்துக் கொண்டேன்.
-எனக்குப் புரிகிறது.

146
00:07:08,262 --> 00:07:10,430
ஹே. போற வழியில் கொஞ்சம் ஷாப்பிங்
செய்யலாம். என் பின் தொடர்.

147
00:07:10,514 --> 00:07:11,348
சரி.

148
00:07:15,769 --> 00:07:16,728
ரிச்மண்ட் திரையரங்கம்

149
00:07:16,812 --> 00:07:18,063
என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறாய்?

150
00:07:18,939 --> 00:07:22,442
எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா?
என்னோட சூட் எப்படி இருக்கு? நல்லா இருக்கா?

151
00:07:22,526 --> 00:07:23,735
இது பிரமாதமாக இருக்கு.

152
00:07:23,819 --> 00:07:26,488
ஹே, என்னைப் படம் பிடித்ததற்காக
ரொம்ப நன்றி, நண்பர்களே.

153
00:07:26,572 --> 00:07:27,573
உங்களுடைய பெயர் என்ன?

154
00:07:28,907 --> 00:07:31,243
ஆக, நீங்க ஜெர்ரி, நீங்க டேவ்.

155
00:07:31,326 --> 00:07:33,203
எல்லோரும் இதற்காக தான் வந்திருக்கிறீர்கள்.

156
00:07:33,287 --> 00:07:35,706
இடது புருவம். வடது புருவம்.

157
00:07:36,331 --> 00:07:37,541
குழப்பமான பாவனை.

158
00:07:39,126 --> 00:07:41,128
சரி, நீ வழக்கமாகப்
பயன்படுத்தும் ஒன்றிற்காக.

159
00:07:41,211 --> 00:07:42,588
அவ்வளவு தான், அன்பே. ஒரு முத்தம்?

160
00:07:44,047 --> 00:07:45,591
வசதியற்ற குழந்தைகளுக்கான
10 வது வருடாந்திர நலத் திட்டம்

161
00:07:47,843 --> 00:07:50,053
-காதல் அப்படியே இருக்கு.
-நண்பர்களே, மன்னிச்சிடுங்க, நான்...

162
00:07:50,137 --> 00:07:51,763
-அவர்கள் போட்டோ எடுக்கட்டும்.
-சரி, சரி.

163
00:07:51,847 --> 00:07:53,265
நான் உள்ளே போக வேண்டும், சரி.

164
00:07:53,891 --> 00:07:55,726
இந்தப் பக்கம், ரெபேக்கா!

165
00:07:55,809 --> 00:07:57,853
-அருமை, பெண்மணிகளே!
-ரெபேக்கா, இங்கே!

166
00:07:57,936 --> 00:07:59,771
-கச்சிதமாக இருக்கீங்க.
-இப்போ, இடது பக்கம் பாருங்க.

167
00:07:59,855 --> 00:08:00,939
இது எனக்கு பிடிக்கவில்லை.

168
00:08:01,023 --> 00:08:02,816
-மிஸ் வெல்டன்.
-அழகாக இருக்கு. அருமை.

169
00:08:03,317 --> 00:08:04,318
ஹேய்.

170
00:08:04,776 --> 00:08:06,737
காலை முன்னும் பின்னும் வைத்து
நில்லுங்க, சரியா?

171
00:08:06,820 --> 00:08:09,781
பிறகு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு,
நக வடிவில் நில்லுங்க.

172
00:08:10,324 --> 00:08:11,533
இது ரொம்ப அழகா இருக்கு.

173
00:08:12,701 --> 00:08:14,453
-கொஞ்சம் சிரியுங்க, ரெபேக்கா.
-ரெபேக்கா!

174
00:08:17,664 --> 00:08:20,292
அவங்களைப் பாருங்க. அவங்களுக்கு
இந்த உடை கச்சிதமாக இருக்கு.

175
00:08:34,222 --> 00:08:36,183
ரொம்ப பீற்றிக்கொள்ளாதே.
சூட் அதன் வேலையைச் செய்யட்டும்.

176
00:08:41,813 --> 00:08:44,024
டெட் லாஸ்ஸோ. கடவுளே.

177
00:08:44,107 --> 00:08:45,234
உங்க பின்னாலேயே இருக்கிறேன், தலைவரே.

178
00:08:45,317 --> 00:08:47,319
இந்த உடையை நீங்க தேர்ந்தெடுப்பீர்கள்
என எனக்கு தோன்றியது.

179
00:08:47,402 --> 00:08:49,321
இந்த உடையில் நீங்க
அற்புதமாக தோற்றமளிக்கிறீர்கள்.

180
00:08:49,821 --> 00:08:50,822
நன்றி.

181
00:08:50,906 --> 00:08:53,283
நேட்டைப் பாருங்க. அழகாக,
எடுப்பான தோற்றத்தோடு இருக்கிறான் இல்லையா?

182
00:08:53,367 --> 00:08:54,493
மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

183
00:08:54,576 --> 00:08:56,370
-உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.
-எனக்கும் தான்.

184
00:08:57,579 --> 00:08:59,998
-இருவரும் மன்னிச்சிடுங்க.
-நிச்சயமாக, சரி. உங்க வேலையைப் பாருங்க.

185
00:09:02,167 --> 00:09:03,502
பார், பியர்ட் அங்கு இருக்கிறார்.

186
00:09:03,919 --> 00:09:05,420
அவள் தான் அவருடைய புது காதலி, ஜேன்.

187
00:09:05,921 --> 00:09:08,340
வந்து, வெள்ளிக்கிழமை
நைட் செஸ் க்ளப்பில் அவர்கள் சந்தித்தனர்.

188
00:09:08,423 --> 00:09:10,425
தெரிந்தவரை, ஒருவருடைய
நகர்வுகளை மற்றவர் விரும்பினர்.

189
00:09:12,970 --> 00:09:13,971
அது வேடிக்கை அல்ல.

190
00:09:14,054 --> 00:09:15,055
அப்படி இல்லையா?

191
00:09:15,556 --> 00:09:16,557
அப்படிதான் நினைத்தேன்.

192
00:09:17,432 --> 00:09:21,562
இல்லை, வேண்டாம். நிறுத்துங்க.
போய்த் தொலைங்க. வேண்டாம், வேண்டாம்.

193
00:09:22,521 --> 00:09:23,522
ஆமாம், எனக்குத் தெரியும்.

194
00:09:27,109 --> 00:09:29,444
இது ரொம்ப தர்மசங்கடமாக இருக்கப் போகுது.

195
00:09:29,528 --> 00:09:32,656
-நான் வேறு மேஜைக்குப் போகிறேன்.
-வேண்டாம். ஹே, இங்கே வா.

196
00:09:32,739 --> 00:09:33,782
இது என் வேலை.

197
00:09:33,866 --> 00:09:36,076
இருவரையும் ஒரே இடத்தில்
நான் தான் சிக்க வைத்தேன். உட்காருங்க.

198
00:09:38,662 --> 00:09:41,832
கவனிங்க. நீங்க இருவரும் நம் லாக்கர் அறையை
இரண்டாகப் பிரித்துவிட்டீர்கள்.

199
00:09:41,915 --> 00:09:43,458
லாக்கர் அறை என்று வந்துவிட்டால்,

200
00:09:43,542 --> 00:09:45,544
அது என் அம்மாவின்
குளியல் உடை மாதிரி இருக்கணும்.

201
00:09:45,627 --> 00:09:47,421
அவை ஒரே உடையாக தான் இருக்கணும்.

202
00:09:47,504 --> 00:09:48,714
எனவே, நாம் இதை சரி செய்யணும்.

203
00:09:48,797 --> 00:09:50,799
உங்களுக்குள் பெரிதாக என்ன பிரச்சனை
என சொல்லுங்கள்.

204
00:09:50,883 --> 00:09:52,050
அவன் கேவலமானவன்.

205
00:09:52,134 --> 00:09:54,803
அவனது மூளை வேலை செய்திருந்தால்
நான் அவனை கடுப்பாக்கி இருக்க மாட்டேன்.

206
00:09:54,887 --> 00:09:57,222
சரி, ஹே. நெருங்கிய நண்பர்களாக இல்லாமல்,
சிறந்த அணியினராக இருக்கலாம்.

207
00:09:57,306 --> 00:10:00,392
ஷாக்கையும் கோபையும் நினைத்துப் பாருங்க.
லென்னனையும் மெக்கார்ட்னியையும் கூட.

208
00:10:00,475 --> 00:10:02,686
ஐயோ, வுட்டியும் பஸ்ஸும் கூட
அடித்துக் கொள்வார்கள்.

209
00:10:02,769 --> 00:10:03,937
அப்படியா?

210
00:10:04,021 --> 00:10:06,106
பாராட்டுக்கள், நேட்,
ஆனால் இது சரியான நேரமில்லை.

211
00:10:06,773 --> 00:10:08,984
இந்த சக்திவாய்ந்த ஜோடிகளுக்குள்ள
ஒற்றுமை என்ன தெரியுமா?

212
00:10:09,067 --> 00:10:10,152
பரஸ்பர மரியாதை.

213
00:10:10,777 --> 00:10:13,864
நீங்க இருவரும் ஒரு பொதுவான விஷயத்தை
கண்டுபிடிக்கணும். ஆக யார் ஆரம்பிப்பது?

214
00:10:13,947 --> 00:10:15,199
நான் தொடங்குகிறேன்.

215
00:10:16,074 --> 00:10:20,204
நேட், அது மிக அழகான சூட்.
நீ கச்சிதமாக இருக்கிறாய்.

216
00:10:20,287 --> 00:10:24,458
நன்றி. இது தான் என்னோட
இரண்டாவது சூட்.

217
00:10:24,541 --> 00:10:27,586
முதலாவது சூட் நான் ஆடையில்லா
குழந்தையாக இருக்கும்போது இருந்தது.

218
00:10:31,215 --> 00:10:33,133
மன்னிக்கவும், டெட் சொன்னால் அது
நகைச்சுவையாக இருக்கும். நான்...

219
00:10:33,217 --> 00:10:34,551
வந்து, "பிறந்தநாள் ஆடை" என்னும் சொல்.

220
00:10:34,635 --> 00:10:36,678
-உனக்கு பல மடங்கு உதவியிருக்கும்.
-ஓ, கடவுளே, ஆம்.

221
00:10:36,762 --> 00:10:39,348
சரி, மீண்டும் முயற்சிப்போம், சரியா?
ஹே, ஜேமி. நீ தொடங்குகிறாயா?

222
00:10:39,431 --> 00:10:40,682
முடியாது.

223
00:10:41,850 --> 00:10:43,393
-ராய்.
-அவன் கேவலமானவன்.

224
00:10:43,477 --> 00:10:45,521
நீ அதையே தான் சொல்லப் போகிறாயா, என்ன? சரி.

225
00:10:45,604 --> 00:10:47,981
ஒரு யோசனை இருக்கு, அது கொஞ்சம் உதவலாம்
அல்லது அதிகம் காயப்படுத்தலாம்.

226
00:10:48,065 --> 00:10:49,191
யாருக்கு மது வேண்டும்?

227
00:10:54,655 --> 00:10:56,156
இசை விருந்தாளி யாராவது கிடைத்தனரா?

228
00:10:56,240 --> 00:10:57,783
நான் நிறைய தரகர்களோடு பேசிய பின்

229
00:10:57,866 --> 00:11:01,828
யாரால் வரவியலாது என்ற ஒரு நீளமான பட்டியலை
தயாரித்துள்ளேன்.

230
00:11:01,912 --> 00:11:03,747
நீக்கும் செயல்முறை. நாம் முன்னேறுகிறோம்.

231
00:11:07,000 --> 00:11:08,168
ஹே, இதோ இருக்காங்க.

232
00:11:09,586 --> 00:11:11,046
உங்க சொற்பொழிவுக்காக தயாராகிறீர்களா?

233
00:11:11,755 --> 00:11:15,384
ரூபெர்ட் எப்போதுமே பொது சொற்பொழிவுகளில்
மிக திறமையானவர்.

234
00:11:15,467 --> 00:11:16,885
ஹே, இதோ ஒரு சின்ன சூட்சமம்.

235
00:11:16,969 --> 00:11:20,430
தொடக்கத்தில் உங்களைப்பற்றி நீங்களே
நகைச்சுவையாய் பேசுங்க, ஒரு சின்ன விகடம்.

236
00:11:20,514 --> 00:11:21,515
மக்களுக்கு அது பிடிக்கும்.

237
00:11:21,598 --> 00:11:24,393
சரி, அப்போது, என்னைப்பற்றி
நானே நகைச்சுவையாய் என்ன சொல்வது?

238
00:11:26,061 --> 00:11:27,521
சரி, சரி, சரி.

239
00:11:30,732 --> 00:11:35,153
தெரியுமா... தெரியுமா எது வந்து...
இல்லையா. சரி.

240
00:11:35,237 --> 00:11:37,239
நீங்க அதை சொல்லப் போவதில்லை, சரியா, டெட்?

241
00:11:37,322 --> 00:11:39,491
இல்லை, மேடம். இல்லை, இல்லை, இல்லை. சரி.

242
00:11:40,951 --> 00:11:42,160
இருந்தாலும் வாழ்த்துக்கள்.

243
00:11:44,037 --> 00:11:46,665
தெரியுமா? நான் ஒன்றை யோசித்தேன்.
வேண்டாம், வேண்டாம்.

244
00:11:47,457 --> 00:11:49,209
ராணி நான்காவது வரிசைக்கு ரூக்கிற்கு நேரே.

245
00:11:50,085 --> 00:11:52,337
பொறுங்கள், நீங்கள் பலகையே
இல்லாமல் செஸ் விளையாடுகிறீர்களா?

246
00:11:53,547 --> 00:11:56,008
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். என் தவறு.
தொடருங்கள்.

247
00:11:57,634 --> 00:11:59,052
குதிரை ஐந்தாவது வரிசைக்கு ராஜவிற்கு நேரே.

248
00:12:04,600 --> 00:12:05,767
மாலை வணக்கம்,

249
00:12:05,851 --> 00:12:10,647
வசதியற்ற குழந்தைகளுக்கான பத்தாவது வருட
உதவிக்கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

250
00:12:11,064 --> 00:12:15,611
நீங்கள் அளித்த கொடைக்காக உங்கள் அனைவரையும்
அணைக்க வேண்டுமென்றால், அதாவது...

251
00:12:16,528 --> 00:12:19,573
நான் அதை செய்திருக்க மாட்டேன் ஏனென்றால்
நான் ஒரு பெரிய அரவணைப்பாளரல்ல.

252
00:12:21,658 --> 00:12:25,829
அனைவரும் பின்னர் வரவிருக்கும் ஏலத்திற்காக
உங்களது காசோலையை எடுத்து வந்திருப்பீர்கள்

253
00:12:25,913 --> 00:12:31,835
ஏனென்றால் அனைவரும் எங்களுக்கு சொந்தமான
ரிச்மண்ட் வீரர்கள் மீது பந்தயம் கட்டலாம்.

254
00:12:34,296 --> 00:12:39,801
அதே விதிகள் தான், வீரர் தள்ளுபடிக்கு
கையெழுத்திடும் வரை சிலுமிஷம் கூடாது.

255
00:12:41,470 --> 00:12:42,471
ரூபெர்ட்?

256
00:12:43,847 --> 00:12:44,890
ஹலோ, செல்லமே.

257
00:12:44,973 --> 00:12:47,809
என்ன ஒரு... அழகான இன்ப அதிர்ச்சி.

258
00:12:48,727 --> 00:12:49,895
நீ என்னை எதிர்பார்க்கலையா?

259
00:12:51,396 --> 00:12:53,148
நீங்க அழைப்பை மறுத்ததால் தான்.

260
00:12:53,232 --> 00:12:56,485
ஆம், ஒன்றுக்கும் உதவாத பணக்காரனாக
இருப்பதற்கு கிடைத்த சலுகைகளுள் ஒன்று.

261
00:12:56,568 --> 00:12:59,780
சில நேரங்களில் எனது இரவுகள்
மாயமாக காலியாக இருக்கும்.

262
00:13:01,240 --> 00:13:02,824
நான் எடுத்துக்கலாமா? நன்றி.

263
00:13:03,575 --> 00:13:09,373
மக்களே, உங்களது உதவியால், நாங்கள்
கடந்த ஆண்டு 800,000 பௌண்டுகள் சேர்த்தோம்.

264
00:13:11,542 --> 00:13:14,294
அப்புறம் இந்த வருடம்,
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

265
00:13:14,378 --> 00:13:18,507
வந்து, நான் இந்த விருந்திற்கு அழையா
விருந்தாளி தான் ஆனால் எனக்கு உதவ ஆசை.

266
00:13:18,590 --> 00:13:21,301
நீ என்னை ஏற்பாய் என்று
நம்பிக்கொண்டிருக்கிறேன்.

267
00:13:21,385 --> 00:13:22,386
கண்டிப்பாக.

268
00:13:23,136 --> 00:13:24,888
சலிப்பூட்டும் மேஜையில்
அவருக்கு இடம் கொடுங்க.

269
00:13:25,556 --> 00:13:26,807
சும்மா நகைச்சுவை செய்தேன்.

270
00:13:27,349 --> 00:13:29,601
மேஜை நான்கு. ரூபெர்ட் மான்னியன், மக்களே.

271
00:13:37,067 --> 00:13:38,151
நன்றி, அழகு பொம்மையே.

272
00:13:44,199 --> 00:13:45,534
அடக் கடவுளே.

273
00:13:46,535 --> 00:13:47,870
-நன்றி.
-அது...

274
00:13:49,538 --> 00:13:51,415
நேத், நேத், நேத். வா.

275
00:13:51,498 --> 00:13:53,458
பாருங்கள், நண்பர்களே,
இது ஒரு புத்தம் புதிய சூட்.

276
00:13:53,542 --> 00:13:56,211
இன்றிரவு என்னை வெறுப்பேற்றுவதற்கு பதிலாக,
நாளை இருமுறை அடிக்கிறீர்களா?

277
00:13:56,295 --> 00:13:57,838
நாங்கள் இனிமேல் அடிக்கக்கூடாது என
ராய் சொன்னான்.

278
00:13:57,921 --> 00:14:00,757
அவன் என்னை தலையில் அடித்தான்.
இப்போது கூட பாதி நேரம் மயக்கமாக உள்ளேன்.

279
00:14:00,841 --> 00:14:02,467
மருத்துவர்கள் என்னை குடிக்க கூடாது
என சொன்னார்கள்.

280
00:14:07,014 --> 00:14:08,682
நாசம்.

281
00:14:08,765 --> 00:14:10,475
சட்டை போடுவதற்கு மற்றுமொரு காரணம்.

282
00:14:10,559 --> 00:14:13,478
வாயை மூடு, இது ஒன்றும் வேடிக்கையல்ல.
என் முலைக் காம்பு எரியுது.

283
00:14:14,146 --> 00:14:16,273
நான் அந்த ஐஸ் கட்டியாக இருந்திருக்கலாம்.

284
00:14:17,816 --> 00:14:20,152
நான் உன்னுடன் ஒரு இரவுக்காக
பந்தயம் கட்டுவேன்.

285
00:14:21,361 --> 00:14:22,362
நன்றி, அன்பே.

286
00:14:22,446 --> 00:14:25,991
ஆம், அது வெறும் டேட் தான்.
முழு இரவல்ல. அதனால்...

287
00:14:26,074 --> 00:14:27,326
பார்க்கலாம்.

288
00:14:28,577 --> 00:14:29,745
நண்பா, நான் இதை முன்பே செய்திருக்கிறேன்.

289
00:14:29,828 --> 00:14:32,623
அவங்க 3000க்கு மேல் பந்தயம் கட்டினால்
நீ அவங்களுடன் உறவு கொள்ளணும்.

290
00:14:34,249 --> 00:14:36,543
-இது உண்மையா?
-நீ அந்தளவு செய்ய வேண்டியதில்லை.

291
00:14:37,336 --> 00:14:38,879
அதாவது, கொஞ்சம் வேலை தான்.

292
00:14:39,630 --> 00:14:40,797
விரல்களால்.

293
00:14:45,052 --> 00:14:46,720
நாசமாய் போ.
இந்த மேஜையும் நாசமாக போகட்டும்.

294
00:14:47,346 --> 00:14:49,056
ஜேமி, இது வெறும் நகைச்சுவை தான்.

295
00:14:49,431 --> 00:14:51,767
அது ஒரு நகைச்சுவைதான், ஜேமி.

296
00:14:53,477 --> 00:14:54,603
இப்போது என்ன ஆயிற்று?

297
00:14:55,771 --> 00:14:59,107
எப்போதும் போலத்தான். ஜேமி ஒரு தலைகனம்
பிடித்த அடங்காப்பிடாரியாக இருப்பது தான்.

298
00:15:00,901 --> 00:15:02,444
ராய், உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.

299
00:15:02,528 --> 00:15:04,154
நீ 23 வயதில் எப்படி இருந்தாய்?

300
00:15:04,696 --> 00:15:06,657
இந்த லீகில் விளையாடி,
நிறைய காசு சம்பாதித்துக்கொண்டு.

301
00:15:08,033 --> 00:15:10,285
-கொஞ்சம் அடங்காப்பிடாரனாக.
-ஆம்.

302
00:15:10,911 --> 00:15:13,830
எப்படி "இளமை இளையோர் மீது விரயமாகிறது"
என்று சொல்வார்கள் என்று தெரியுமா?

303
00:15:15,582 --> 00:15:18,669
ஆனால், நான் சொல்கிறேன் வயதால் வரும்
அறிவை உன்மீது விரயமாக அனுமதிக்காதே.

304
00:15:20,087 --> 00:15:21,129
டெட்?

305
00:15:23,465 --> 00:15:26,218
இதை நானே உருவாக்கினேன்.
அதைப்பற்றி நான் பெருமையாக உணர்கிறேன்.

306
00:15:32,599 --> 00:15:35,060
நீ காலின் மற்றும் ஐசக்கிடம் பேசியதற்காக
நன்றி சொல்லணும்.

307
00:15:35,143 --> 00:15:36,770
ஏன் இவ்வளவு நெருக்கமாக உள்ளாய்?

308
00:15:36,854 --> 00:15:39,940
உன்னை கட்டிபிடிப்பது தான் எனது திட்டம்,
ஆனால் அதிலிருந்து பின்வாங்கிவிட்டேன்.

309
00:15:40,774 --> 00:15:41,775
சரி.

310
00:15:46,280 --> 00:15:47,531
-சரி, போதும்.
-ஆம்.

311
00:15:50,367 --> 00:15:52,911
டெட், ரூபெர்ட் மான்னியனுக்கு
உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

312
00:15:52,995 --> 00:15:55,539
-எப்படி இருக்கீங்க, திரு. மான்னியன்?
-அது ரூபெர்ட், டெட்.

313
00:15:55,622 --> 00:15:58,250
குறிப்பாக எனது கிளப்பை
நிர்வகிக்கும் மனிதருக்கு.

314
00:15:59,293 --> 00:16:00,502
உங்க கிளப்பாக இருந்தது.

315
00:16:00,586 --> 00:16:04,089
கண்டிப்பாக, ஆனால்... இது இன்றும்
என் இதயத்தில் என் கிளப்தான், அன்பே.

316
00:16:04,882 --> 00:16:06,800
விளையாட்டு அணி மீதுள்ள காதல்
என்பது வாழ்நாள் வெறி.

317
00:16:06,884 --> 00:16:07,718
-ஆம்.
-ஆம்.

318
00:16:07,801 --> 00:16:09,553
நமது நெருங்கிய நண்பரின்
அக்காவைப் போல, சரியா?

319
00:16:09,928 --> 00:16:10,929
ஹே, ஒரு உதவி செய்யுங்க.

320
00:16:11,013 --> 00:16:13,724
எப்போதாவது கேன்சஸ் நகரத்திற்கு சென்று,
டாம் டினீன் என்பவரை பார்க்க நேர்ந்தால்,

321
00:16:13,807 --> 00:16:15,017
நான் இதைச் சொன்னேன் என
அவரிடம் சொல்லாதீங்க.

322
00:16:17,019 --> 00:16:18,770
எனக்கு இது பிடிச்சிருக்கு.

323
00:16:19,646 --> 00:16:22,065
ஆனால், நாம் கடந்த இரண்டு முறை தோற்றது
எனக்கு பிடிக்கலை.

324
00:16:22,149 --> 00:16:23,400
-மிக மோசமான ஆட்டம்.
-ஆம்.

325
00:16:23,483 --> 00:16:24,776
சொல்லித்தான் ஆக வேண்டும்.

326
00:16:24,860 --> 00:16:27,696
பரவாயில்லை. யாருக்குத் தெரியும்?
நாங்கள் அதை மாற்றி கூட அமைக்கலாம்.

327
00:16:28,405 --> 00:16:31,116
ஓ, கடவுளே. நான் உங்களை நம்புகிறேன்.

328
00:16:31,200 --> 00:16:32,284
நீ அவரை நம்புகிறாயா?

329
00:16:35,662 --> 00:16:37,998
நீங்க இல்லை என்று சொன்னால் இன்றிரவு
ஒரு மோசமான திருப்பம் ஏற்படும்.

330
00:16:38,999 --> 00:16:40,250
கண்டிப்பாக டெட்டை நம்புகிறேன்.

331
00:16:41,210 --> 00:16:42,961
நமக்கு ஏற்ற நபர் இவர் தான்.

332
00:16:44,671 --> 00:16:46,381
நிறைய ஷேம்பெய்ன் குடிக்காதே, அன்பே.

333
00:16:46,465 --> 00:16:48,509
ஏலத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

334
00:16:49,635 --> 00:16:50,802
நீங்க ஏன் ஏலத்தை நடத்தக்கூடாது?

335
00:16:51,512 --> 00:16:53,305
இல்லை, என்னால் முடியாது.
இது உனக்கான இரவு.

336
00:16:53,388 --> 00:16:55,557
உங்களைப் பார்க்கத்தான் விரும்புவார்கள்
என்று நம் இருவருக்கும் தெரியும்.

337
00:16:56,350 --> 00:16:59,144
அதோடு, அது... குழந்தைகளுக்காக.

338
00:16:59,853 --> 00:17:01,063
குழந்தைகளுக்காக.

339
00:17:04,107 --> 00:17:06,609
சரி. மன்னிச்சிடுங்க,
நான் பிற விருந்தினர்களுடன் பேச வேண்டும்.

340
00:17:07,027 --> 00:17:08,694
இந்த உடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

341
00:17:10,196 --> 00:17:11,323
ரொம்ப இளமையாக காட்டுகிறது.

342
00:17:12,156 --> 00:17:14,660
இது போன்று இங்கு தோன்றுவது
உனக்கு ரொம்ப நல்லதுதான்.

343
00:17:15,743 --> 00:17:16,744
நன்றி.

344
00:17:19,122 --> 00:17:20,123
மன்னிக்கவும்.

345
00:17:20,874 --> 00:17:21,916
டெட்.

346
00:17:22,334 --> 00:17:24,545
அவளுக்கு இது ஒரு கடினமான வருடமாக இருந்தது.
அவள் நலமா?

347
00:17:24,627 --> 00:17:25,587
ஆம், நல்லா இருக்காங்க.

348
00:17:26,255 --> 00:17:29,591
இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த நிறைய
சின்ன சின்ன விஷயங்கள் செய்யணும்.

349
00:17:30,342 --> 00:17:34,012
பின் இந்த ஆள்... ராபி வில்லியம்ஸ்,
இசை நிகழ்ச்சிக்கு வரவில்லை...

350
00:17:34,096 --> 00:17:35,097
-ராபி?
-ஆம்.

351
00:17:35,180 --> 00:17:36,932
வந்து, அவன் என்னுடைய பழைய நண்பன்.

352
00:17:37,015 --> 00:17:39,852
அவனுக்கு செய்தி அனுப்பி, அவனை
இங்கு கொண்டுவர என்னால் நிச்சயம் முடியும்.

353
00:17:40,227 --> 00:17:41,854
அவங்க இதை நிச்சயம் விரும்புவாங்க.

354
00:17:42,437 --> 00:17:45,232
நான் அவங்களை தேடிப்பிடித்து
அவங்க எண்ணம் தெரிந்துக்கொண்டு வரட்டுமா?

355
00:17:45,983 --> 00:17:47,818
மன்னிச்சிடுங்க.
அது எங்க நாட்டு சொல் வழக்கம்.

356
00:17:47,901 --> 00:17:50,863
-அவங்களிடம் கேட்க போகிறேன் என்று அர்த்தம்.
-அற்புதம். காட்சி நேரம்.

357
00:17:50,946 --> 00:17:52,155
சரி, அவங்களை கண்டுபிடிக்கணும்.

358
00:17:52,781 --> 00:17:55,534
எனக்கு அதிக போதையான மது
ஏதேனும் கிடைக்குமா?

359
00:17:55,617 --> 00:17:58,370
ஒரு இரட்டை மற்றும் ஒன்று கலந்து.
ஒரு மூன்று மடங்கு.

360
00:17:59,872 --> 00:18:03,000
மக்களே, திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.

361
00:18:03,083 --> 00:18:07,171
நான் இந்த மாலை உங்களது ஏலம் விடுபவராக
இருப்பதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டேன்.

362
00:18:09,464 --> 00:18:13,427
அப்புறம் முதலில் ஏலம் விடப்படுபவர்
ஜேமி டார்ட் தான்.

363
00:18:17,055 --> 00:18:18,390
நீ தான் என்னை வாங்கணும், அன்பே.

364
00:18:18,473 --> 00:18:20,517
நான் என் காதலன் மீதே ஏலம் கேட்க முடியாது.
அது பரிதாபமாக தோன்றும்.

365
00:18:20,601 --> 00:18:22,519
அன்பே, இது 2020.
பெண்களால் எதுவும் செய்ய முடியும்.

366
00:18:22,603 --> 00:18:25,105
இல்லை, அது நடக்காது. சரி, நீ
கவர்ச்சியாக இருக்க. மேலே போ!

367
00:18:25,189 --> 00:18:29,693
அவனைப் பாருங்கள், மக்களே. இளைமையாக, அழகாக,
கவர்ச்சியாக இருக்கிறான். மோசமானவன்.

368
00:18:29,776 --> 00:18:32,654
சரி, நாம் 5,000 பௌண்டுகளிலிருந்து
தொடங்குவோம்.

369
00:18:32,738 --> 00:18:34,323
எனக்கு அவன் வேண்டும், ரூபெர்ட்.

370
00:18:35,115 --> 00:18:37,618
ஐயாயிரம், செரில் பார்னாபியிடமிருந்து.

371
00:18:37,701 --> 00:18:40,329
ரிச்மண்ட் ஷெட்லேன்ட் குதிரைகளின்
தலையாய இனப்பெருக்கி.

372
00:18:40,412 --> 00:18:42,164
நமக்கு ஆறு என்று கேட்கிறதா?

373
00:18:44,082 --> 00:18:45,209
ஆறாயிரம்.

374
00:18:45,292 --> 00:18:46,752
ஆறு. நன்றி.

375
00:18:46,835 --> 00:18:49,838
-ஏழாயிரம்.
-ஏழாயிரம்.

376
00:18:49,922 --> 00:18:51,256
பத்தாயிரம்.

377
00:18:53,133 --> 00:18:54,551
அழகு.

378
00:18:54,635 --> 00:18:57,679
அது ஏலப்பணத்திற்கும்
ஏலம் எடுப்பவர்க்கும் பொருந்தும்.

379
00:18:57,763 --> 00:19:00,015
நான் அப்படி நினைக்கவில்லை.

380
00:19:01,099 --> 00:19:03,018
-பன்னிரெண்டாயிரம்.
-பதினாலாயிரம்.

381
00:19:03,101 --> 00:19:04,603
பதினாலாயிரம்!

382
00:19:04,686 --> 00:19:05,812
பதினாறாயிரம்.

383
00:19:05,896 --> 00:19:07,022
பதினெட்டு.

384
00:19:07,481 --> 00:19:10,317
பதினெட்டாயிரம். வேறேதும் ஏற்றம் உள்ளதா?

385
00:19:10,400 --> 00:19:12,277
ஆம். இருபத்தைந்தாயிரம்.

386
00:19:12,361 --> 00:19:17,366
இருபத்தைந்தாயிரம்! ஒரு தரம். இரண்டு தரம்.

387
00:19:17,449 --> 00:19:19,201
கீலீ ஜோன்ஸுக்கு விற்றாகிவிட்டது.

388
00:19:19,284 --> 00:19:24,206
இருபத்தைந்தாயிரத்திற்கு காதலனை வாங்க
முடியும்போது ஏன் இலவசமாக சுற்றணும்?

389
00:19:24,706 --> 00:19:25,707
நீ எனக்கு கடன்பட்டாய்.

390
00:19:29,711 --> 00:19:33,173
ஹே. இதோ இருக்கீங்க. கொஞ்சம்
காற்று வாங்குகிறீர்காளா, என்ன?

391
00:19:33,257 --> 00:19:37,511
ஆம். அந்த ரிக்ஷா மிக முட்டாள்தனமாக இருக்கு
ஆனால் மிகவும் வேடிக்கையாக தெரிகிறது.

392
00:19:37,594 --> 00:19:38,428
ஆம்.

393
00:19:38,512 --> 00:19:40,222
-நீங்க எப்போதாவது அதில் சென்றதுண்டா?
-இல்லை, மேடம்.

394
00:19:40,305 --> 00:19:44,810
என் மனைவியும் நானும் ஒரு முறை இருவரும்
ஓட்டும் சைக்கிள் ஒன்றை வாடகைக்கு எடுத்தோம்

395
00:19:44,893 --> 00:19:48,188
அது சிறந்த அனுபவமில்லை.
அவள் தன் கையை உடைத்துக்கொண்டாள், நான்...

396
00:19:48,272 --> 00:19:51,775
நான் ஒரு பல்லை இழந்தேன் அதோடு
எனது அந்தரங்க பகுதியை உரசிக் கொண்டேன்.

397
00:19:54,194 --> 00:19:56,446
-ஹே, நீங்க நலமா?
-அது ஒன்றுமில்லை...

398
00:19:57,906 --> 00:19:59,116
அவருக்கு என்னைப் பற்றி தெரியும்.

399
00:20:00,367 --> 00:20:04,204
அவரது நேரடி நேர்மை நிஜத்தை விட மிக
நேர்த்தியானது என நான் நினைத்திருக்கிறேன்.

400
00:20:04,288 --> 00:20:05,289
அது...

401
00:20:07,583 --> 00:20:10,294
அவரது பயங்களை மறைத்து வைப்பதற்கான
ஒரு கொடுமையான வழி.

402
00:20:11,461 --> 00:20:13,922
அவர் இதை அணி, அதை சாப்பிடு என்று சொல்வார்.

403
00:20:16,758 --> 00:20:18,302
நானும் அப்படியே செய்வேன்.

404
00:20:19,511 --> 00:20:20,888
ஆனால் நான் இப்பொழுது தனியாக இருக்கிறேன்.

405
00:20:22,556 --> 00:20:25,934
தனியாக இருக்கிறேன், டெட். அவர் பிரிந்தால்
எப்படி இருப்பேன் என சொன்னாரோ அப்படியே.

406
00:20:30,272 --> 00:20:31,690
எனக்கு தனியாக இருக்க வேண்டாம்.

407
00:20:36,528 --> 00:20:39,323
ஹே. பரவாயில்லை. பரவாயில்லை.

408
00:20:52,836 --> 00:20:56,715
நீங்க இதில் ஏறி இங்கிருந்து போக
விரும்புகிறீர்களா? சொல்லுங்க.

409
00:20:56,798 --> 00:20:57,925
எனக்கும் ஆசைதான்.

410
00:20:59,218 --> 00:21:00,844
இப்பொழுது வேண்டாம். ஆனாலும் நன்றி.

411
00:21:04,973 --> 00:21:07,184
அவர் ஏலத்தை தொடங்கிவிட்டாரா?

412
00:21:07,643 --> 00:21:08,644
ஆம், ஆம்.

413
00:21:08,727 --> 00:21:11,647
நல்லது. அவர் அதை செய்ததில் மகிழ்ச்சி.
நமக்கு நிறைய பணம் கிடைக்கும்.

414
00:21:12,940 --> 00:21:15,067
அவர் என்ன செய்தாலும்,
அவர்களுக்கு அவரைப் பிடிக்கும்.

415
00:21:18,278 --> 00:21:21,031
-உள்ளே போகலாமா?
-இல்லை, நீங்க போங்க.

416
00:21:21,698 --> 00:21:22,699
நான் தயாராக வேண்டும்.

417
00:21:22,783 --> 00:21:26,745
நான் பார்க்க ரோபர்ட் ஸ்மித் தூக்கத்தில்
இருந்தது எழுந்தது போல இருப்பேன்.

418
00:21:27,412 --> 00:21:30,123
மிகவும் உணர்ச்சிவசப்படுபவர். ஆம்.

419
00:21:30,207 --> 00:21:31,375
சரி, உள்ளே சந்திக்கலாம்.

420
00:21:43,303 --> 00:21:44,304
நான் மேலே வரும் போது,

421
00:21:44,388 --> 00:21:46,807
கிலபில் ஒரு வயதான,
டக் ஸ்டாஷ்விக் இருந்தார்.

422
00:21:46,890 --> 00:21:48,976
எப்பொழுதும் என்னை தொல்லை செய்வார்.
ஒருவரை ஒருவர் வெறுத்தோம்.

423
00:21:49,601 --> 00:21:51,728
-போட்டியை எப்படி வென்றோம் என தெரியணுமா?
-இல்லை.

424
00:21:52,396 --> 00:21:54,731
டெட் செய்துக் கொண்டிருந்த அதே விஷயம் தான்.

425
00:21:54,815 --> 00:21:57,109
அவர் என்னை உட்கார வைத்து,
"எல்லாவற்றையும் பேசி தீர்க்கலாம்.

426
00:21:57,192 --> 00:22:00,070
நான் ஏன் தொல்லை என நீ சொல், நீ ஏன்
தொல்லை என்பதை நான் சொல்கிறேன்" என்றார்.

427
00:22:02,406 --> 00:22:04,324
-நீ ஒரு துரோகி...
-இல்லை, நான் முதலில் சொல்கிறேன்.

428
00:22:05,742 --> 00:22:08,871
நான் உன்னிடம் தான்
பந்தை கொடுக்க வேண்டும் என தெரிந்தும்...

429
00:22:10,038 --> 00:22:11,874
நீ ஒரு சுயநலவாதி திமிர் பிடித்தவன்.

430
00:22:11,957 --> 00:22:14,084
ஒவ்வொரு முறை அப்படி செய்யும் போதும்,
எனக்கு வாந்தி வரும்.

431
00:22:16,587 --> 00:22:20,257
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது
உனது படத்தை சுவற்றில் ஒட்டி இருந்தேன்.

432
00:22:21,758 --> 00:22:23,594
நீ விளையாடுவதை பார்க்க அவ்வளவு பிடிக்கும்.

433
00:22:25,721 --> 00:22:28,348
ஆனால் நீ முன்பு போல இப்பொழுது இல்லை,

434
00:22:28,432 --> 00:22:30,684
அப்புறம் நீ ஏதோ சில கோப்பைகளை
வென்று விட்டதால்,

435
00:22:30,767 --> 00:22:33,854
அனைவரும் உனக்கு அடி பணிய வேண்டும் என
நினைத்துக் கொண்டு திரிகிறாய்.

436
00:22:36,815 --> 00:22:39,193
ஆம், நான் அப்படி இருந்திருக்கலாம்.

437
00:22:45,699 --> 00:22:47,618
இப்பொழுது நான் சொன்னதை
நீ ஒப்புக் கொள்ளணும்.

438
00:22:48,368 --> 00:22:49,369
எனக்கு இஷ்டமில்லை.

439
00:22:51,997 --> 00:22:53,207
அது எதுவாக...

440
00:22:54,666 --> 00:22:55,751
சற்று உண்மையாக இருந்தாலும் கூட.

441
00:23:01,215 --> 00:23:03,300
நீயும் அந்த டக்கும், நண்பர்கள் ஆனீர்களா?

442
00:23:03,383 --> 00:23:05,427
இல்லவேயில்லை. அவன் செத்தே போயிருக்கலாம்.

443
00:23:07,638 --> 00:23:08,764
நீ இறப்பதற்கு.

444
00:23:11,225 --> 00:23:12,434
சரியான இம்சை.

445
00:23:15,646 --> 00:23:16,897
ஹாய், நண்பரே.

446
00:23:18,607 --> 00:23:21,777
ராபிக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை பற்றி
ரெபேக்கா என்ன நினைக்கிறாள் என கேட்டீர்களா?

447
00:23:22,361 --> 00:23:25,781
தெரியுமா? என்னால் அவங்களை கண்டுப்பிடிக்க
முடியவில்லை. அதை பற்றி கவலைப்படாதீர்.

448
00:23:25,864 --> 00:23:28,450
நீங்க மனம் மாறினால், ஒரு வார்த்தை
சொன்னால் போதும்... அனுப்பிவிடலாம்.

449
00:23:28,534 --> 00:23:30,869
அவன் உடனே வந்துவிடுவான். நிரப்ப வேண்டும்.

450
00:23:31,578 --> 00:23:33,705
ஹே, எனக்கு இப்பொழுது தான்
இது தோன்றியது, ரூபெர்ட்.

451
00:23:33,789 --> 00:23:37,251
ராபி வில்லியம்ஸிற்கு இன்று இரவு வருமாறு
குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என்றால்...

452
00:23:38,794 --> 00:23:42,172
அது போலவே நீ எளிதாக அவரை வர வேண்டாம்
எனவும் சொல்லி இருக்கலாம்.

453
00:23:44,508 --> 00:23:47,427
வந்து, நீங்க என்னை மிகவும் மோசமானவனாக
காட்டுகிறீர்கள், இல்லையா?

454
00:23:53,767 --> 00:23:57,688
ஹே, டெட். ரெபேக்காவிற்கு நிஜமான அடெல்
எப்படி இருப்பாள் என தெரியுமா?

455
00:23:58,897 --> 00:24:01,149
நான் ஒரு சிறு சகாசம் செய்ய வேண்டும்,
அதற்கு ஒரு துணை விமானி தேவை.

456
00:24:01,233 --> 00:24:03,861
-அதற்கு நான் வேண்டுமா?
-ஆம், மற்றதை விடுங்க. சிறப்பானதுதான் தேவை.

457
00:24:03,944 --> 00:24:05,153
சரி, என்னைப் பின் தொடருங்க.

458
00:24:10,826 --> 00:24:13,120
-நன்றி.
-என்ன?

459
00:24:13,537 --> 00:24:17,624
சிவப்பு கம்பள படங்கள் இணையத்தில் உள்ளன,

460
00:24:17,708 --> 00:24:21,336
இந்த தடவையாவது பார்ப்பது போல இருக்கிறேன்.

461
00:24:21,420 --> 00:24:22,921
உதவுவதில் மகிழ்ச்சி.

462
00:24:26,592 --> 00:24:27,634
கீலி?

463
00:24:27,718 --> 00:24:28,719
நீ தெரிஞ்சிக்கணும்

464
00:24:28,802 --> 00:24:32,639
ஜேமி மீது ஏலம் கேட்ட இளம் பெண்ணும்
அவன் கூட வந்தவள் தான்.

465
00:24:34,850 --> 00:24:36,435
அழகிய இம்சை.

466
00:24:39,897 --> 00:24:42,399
-உங்க பானத்தில் நான் கொஞ்சம் குடிக்கலாமா?
-சரி.

467
00:24:42,482 --> 00:24:43,609
நன்றி.

468
00:24:44,693 --> 00:24:46,528
வேறு எதிலாவது என்றால்,
எனக்கு ஓலிவ் பிடிக்காது.

469
00:24:46,612 --> 00:24:50,824
நான் நினைக்கிறேன் அந்த ஆரஞ்சு பெண் உறுப்பு
போல இருப்பது ஒரு மாதிரியாக உள்ளது.

470
00:24:53,911 --> 00:24:55,287
இதுவரை கால்பந்து வீரருடன்
பழகியுள்ளீர்களா?

471
00:24:56,371 --> 00:24:58,373
-என்ன?
-மன்னிக்கவும்.

472
00:24:58,957 --> 00:25:02,252
நான் சிரித்திருக்க கூடாது. அது...
நான் தீர்மானிப்பது போல இருக்கு.

473
00:25:02,336 --> 00:25:04,463
இல்லை, பரவாயில்லை.
நீங்க சற்று தீர்மானிப்பவர் தான்.

474
00:25:04,546 --> 00:25:07,549
எனக்கு 18 வயதிருக்கும் போது,
23 வயது கால்பந்து வீரருடன் சுற்றினேன்.

475
00:25:09,301 --> 00:25:13,013
இப்போது எனக்கு கிட்டதட்ட 30 வயது, இன்னும்
23 வயது கால்பந்து வீரருடன் சுற்றுகிறேன்.

476
00:25:14,306 --> 00:25:15,974
நான் லியானார்டோ டிகாப்ரியோ.

477
00:25:17,851 --> 00:25:19,019
அவர்களோடு இருப்பது மகிழ்ச்சி தான்.

478
00:25:20,103 --> 00:25:22,523
எளிமை, பணக்காரர்கள், சரியான உடல்வாகு.

479
00:25:22,606 --> 00:25:24,316
பொறுப்பு எப்படி?

480
00:25:25,025 --> 00:25:26,026
என்ன சொல்றீங்க?

481
00:25:26,610 --> 00:25:29,780
சரி, வந்து,
எல்லோவரும் தவறு செய்வார்கள், ஆனால்...

482
00:25:31,657 --> 00:25:34,284
12 வருடங்களாக என்னோடு வாழ்ந்த கணவர்

483
00:25:34,993 --> 00:25:38,539
ஒரு விஷயத்திற்கு கூட பொறுப்பேற்கவில்லை.

484
00:25:48,006 --> 00:25:49,174
ஹாய்.

485
00:25:49,258 --> 00:25:50,259
-ஹாய்.
-என் பெயர் கீலி.

486
00:25:50,342 --> 00:25:51,343
ஹாய், என் பெயர் பெக்ஸ்.

487
00:25:51,426 --> 00:25:53,220
-உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி, பெக்ஸ்.
-எனக்கும்.

488
00:25:53,303 --> 00:25:55,389
இவனுடன் நான் கொஞ்சம் தனியாக இருப்பது
உனக்கு பிரச்சினை இல்லையே?

489
00:25:55,472 --> 00:25:58,225
ஆம், சரி. உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி.

490
00:25:59,768 --> 00:26:01,061
அவள் உன் புது காதலியா?

491
00:26:01,144 --> 00:26:04,773
அமைதியாக இரு, செல்லமே, இது அடையாளம்
ஏற்படுத்தும் திட்டத்தின் பகுதி, இல்லையா?

492
00:26:04,857 --> 00:26:07,776
இரு பெண்கள் எனக்காக ஏலம் கேட்டால்,
அது என் மதிப்பை கூட்டி காட்டும்.

493
00:26:07,860 --> 00:26:08,944
நான் சொல்வது புரிகிறதா?

494
00:26:09,778 --> 00:26:10,988
அறிவாளித்தனம், இல்லையா?

495
00:26:11,697 --> 00:26:17,452
இப்போது, முன்னாள் சாம்பியன் லீக் சாம்பியன்
ராய் கென்டிற்கு வரவேற்பு கொடுங்கள்.

496
00:26:17,536 --> 00:26:18,579
தாத்தா.

497
00:26:21,081 --> 00:26:26,336
அதிகபட்சமாக ஏலம் கேட்பவர்
ஒரு ஹோட்டலில் நீச்சல் குளம் பக்கத்தில்

498
00:26:26,420 --> 00:26:29,965
நல்ல சூரிய கதிர்களில்
பானம் குடித்துக் கொண்டு...

499
00:26:30,048 --> 00:26:32,259
இல்லை, பானமோ சூரியனோ கிடையாது என
சொல்லி இருக்கிறோம்.

500
00:26:34,094 --> 00:26:37,306
அங்கு நீச்சல் குளமும் இருக்க போவதில்லை.
நாம் இந்த பகுதியை விட்டு போகப் போவதில்லை.

501
00:26:37,389 --> 00:26:40,058
நீ மிகவும் பொறாமைப்பட்டாய்.
ரொம்ப அற்புதமாக இருந்தது.

502
00:26:40,142 --> 00:26:42,019
நீ பொறாமை அற்புதமானது என நினைக்கிறாய்,
அல்லவா?

503
00:26:42,102 --> 00:26:43,604
தெரியாது, செல்லமே.
நான் பொறாமைப்படுவதில்லை.

504
00:26:43,687 --> 00:26:47,065
சரி, நமக்கு 100 கிவுட் கிடைக்குமா
இந்த பொழுது போகாதா சந்திப்பிற்கு?

505
00:26:47,524 --> 00:26:48,859
சரி. ஆயிரம் பவுண்டுகள்.

506
00:26:50,319 --> 00:26:53,739
-அதற்கு மேல் ஏதாவது?
-இரண்டாயிரம் பவுண்டுகள்!

507
00:26:54,865 --> 00:26:57,075
செரில் மிகவும் உற்சாகமாக உள்ளார்.

508
00:26:57,159 --> 00:27:00,078
-மூன்றாயிரம் பவுண்டுகள்.
-உன்னையே அசிங்கப்படுத்தி கொள்கிறாய், அன்பே

509
00:27:00,704 --> 00:27:02,623
நாலாயிரம் பவுண்டுகள்!

510
00:27:02,706 --> 00:27:03,790
ஐய்யாயிரம் பவுண்டுகள்!

511
00:27:04,541 --> 00:27:06,835
ஆறாயிரம் பவுண்டுகள்!

512
00:27:06,919 --> 00:27:08,879
-ஆறாயிரத்திற்கு மேல் ஏதாவது?
-என்னை மன்னிச்சிடு.

513
00:27:10,088 --> 00:27:12,049
சரி, செரிலுக்கு விற்கப்பட்டது.

514
00:27:19,723 --> 00:27:24,728
இத்துடன் ஏலம் முடிவடைந்தது, ஆனால்
ஒரு சிரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.

515
00:27:25,604 --> 00:27:31,527
இதற்காக தனிப்பட்ட முறையில் நான்
1 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை தருகிறேன்.

516
00:27:34,154 --> 00:27:35,155
நன்றி.

517
00:27:35,656 --> 00:27:37,449
மிக்க நன்றி. நன்றி.

518
00:27:37,533 --> 00:27:43,705
இப்போது 800, 000 என்ற தன் இலக்கை ரெபேக்கா
தாண்டிவிட்டதாக நம்புகிறேன். நன்றி.

519
00:27:47,459 --> 00:27:48,794
குழந்தைகளுக்காக, சரியா?

520
00:28:00,556 --> 00:28:01,640
ரெபேக்கா.

521
00:28:01,723 --> 00:28:05,644
இவர் தான் கேம் கோல். அவர் இன்னும்
கண்டறியப்படாத ஒரு பெரிய திறமைசாலி.

522
00:28:05,727 --> 00:28:07,187
போ, கேம்.
அவர்களுக்கு உன் திறமையை காட்டு.

523
00:28:11,441 --> 00:28:12,442
உங்களுக்கு பைத்தியமா?

524
00:28:12,526 --> 00:28:16,488
ஹே, ரெபேக்கா, இதை பார்த்த உடனேயே
எடைபோடாதீங்க, சரியா?

525
00:28:17,865 --> 00:28:18,866
என்னவோ.

526
00:28:20,617 --> 00:28:21,618
ஆம்.

527
00:28:22,911 --> 00:28:27,916
மீண்டும் வணக்கம். மக்களே, நான்
உங்களுக்கு சொல்வதில் வருத்தப்படுகிறேன்...

528
00:28:29,209 --> 00:28:33,297
ஒரு சிறிய அவசரத்தால் ராபி வில்லியம்ஸ்
இன்று இரவு இங்கு வர முடியவில்லை.

529
00:28:33,380 --> 00:28:38,218
ஆனால் அவருக்கு பதிலாக உங்களுக்கு மிகவும்
அற்புதமான ஒருவரை கொண்டு வந்துள்ளோம்.

530
00:28:38,302 --> 00:28:41,180
அல்லது, வீட்டிற்கு போகும் வழியில்
உங்களுக்கு பேசவாவது ஏதோ இருக்கும்.

531
00:28:41,972 --> 00:28:47,603
வெளியில் இருந்து...
கேம் என்ற யாரோ ஒருவரை வரவேற்கிறேன்.

532
00:28:54,818 --> 00:28:56,111
கொடுமை.

533
00:28:57,696 --> 00:28:58,697
அதற்கு என்ன அர்த்தம்?

534
00:29:12,961 --> 00:29:18,592
என் இனிய இயற்கை அன்னையே, எங்களையும்
நாங்கள் செய்தவற்றையும் மன்னியுங்க

535
00:29:21,553 --> 00:29:23,889
இந்த விளையாட்டை மறந்துவிட்டு
நாம் சென்று நடனம் ஆடலாமா?

536
00:29:24,598 --> 00:29:26,683
ராணி ஐந்தாவது வரிசைக்கு
ராஜாவுக்கு நேராக. செக்மேட்.

537
00:29:33,815 --> 00:29:36,777
நாம் நமது அன்னையை நோகடித்துவிட்டோம்

538
00:29:36,860 --> 00:29:40,072
அவளது கோபம் தொடங்கிவிட்டது

539
00:30:02,970 --> 00:30:06,014
ஏனென்றால் என் அன்னைக்கு நான் ஒரு நல்ல மகன்

540
00:30:09,101 --> 00:30:13,814
ஆனால்

541
00:30:13,897 --> 00:30:19,027
என் உடன் பிறந்தவர்கள் கெட்டவர்கள்

542
00:30:19,903 --> 00:30:20,904
கேம்
கோல்

543
00:30:27,536 --> 00:30:29,121
-மிக்க நன்றி.
-பரவாயில்லை.

544
00:30:29,204 --> 00:30:31,248
-நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
-மிக்க நன்றி.

545
00:30:32,291 --> 00:30:33,417
இரவு வணக்கம்.

546
00:30:33,959 --> 00:30:36,670
நம்பமுடியாத இந்த நன்கொடைக்காக
மீண்டும் நன்றி சொல்கிறேன்.

547
00:30:36,753 --> 00:30:38,505
-அடுத்த வருடம் மீண்டும் சந்திக்கலாம்.
-ஆவலாக உள்ளேன்.

548
00:30:45,470 --> 00:30:46,680
மிகவும் இனிமையானவர், இல்லையா?

549
00:30:47,347 --> 00:30:48,390
ஆமாம்.

550
00:30:51,268 --> 00:30:55,189
உங்களுக்கு மட்டும் தான் அவரைப் பற்றி
தெரியும் என நீங்கள் நினைக்கலாம்...

551
00:30:56,690 --> 00:30:57,691
ஆனால் அப்படி இல்லை.

552
00:31:04,823 --> 00:31:06,325
ஓ, கடவுளே. நீ நலம் தானே, நண்பா?

553
00:31:08,410 --> 00:31:10,245
-விரைவாக.
-சரி.

554
00:31:10,329 --> 00:31:11,330
மகிழ்ச்சியான இரவு.

555
00:31:12,915 --> 00:31:15,125
ஹே, நில். கொஞ்சம் மெதுவாக, கோச்.

556
00:31:19,171 --> 00:31:20,964
இப்பொழுது என் மீது
கோபப்படாமல் இருப்பாயா?

557
00:31:24,009 --> 00:31:25,219
மன்னிச்சிடு, செல்லமே.

558
00:31:27,638 --> 00:31:29,598
நீ எதற்கு மன்னிப்பு கேட்கிறாய்
என்றாவது தெரியுமா, ஜேமி?

559
00:31:30,474 --> 00:31:31,600
நீ எப்பொழுதுமே இதை கேட்கிறாய்.

560
00:31:32,392 --> 00:31:34,520
ஹே, எனக்கு ஒரு உதவி செய்.

561
00:31:34,603 --> 00:31:36,605
உங்களது சிறு சண்டைகளில்
என்னை உபயோகிக்காதே.

562
00:31:37,564 --> 00:31:38,732
என்னை முட்டாள் போல உணரச் செய்கிறது.

563
00:31:41,068 --> 00:31:42,903
என்னை மன்னிச்சிடு. நான்...

564
00:31:43,445 --> 00:31:44,655
நான் அப்படி செய்திருக்க கூடாது.

565
00:31:45,906 --> 00:31:46,907
நன்றி.

566
00:31:47,533 --> 00:31:49,868
எப்படியும் யாரும் உன்னை ஏலம் கேட்கவில்லை,
நண்பா. போய் விடு.

567
00:31:51,411 --> 00:31:52,412
போ.

568
00:31:56,667 --> 00:31:58,210
அவனிடம் நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?

569
00:31:58,710 --> 00:32:00,712
பொறுப்புடன் இருப்பது முக்கியம், ஜேமி.

570
00:32:03,674 --> 00:32:04,675
நம் உறவு முடிந்துவிட்டது.

571
00:32:06,093 --> 00:32:07,094
உன்னை பிறகு பார்க்கிறேன்.

572
00:32:10,931 --> 00:32:11,932
என்னவோ.

573
00:32:18,438 --> 00:32:20,566
நான் இதை எடுத்துக் கொள்ளலாமா?

574
00:32:20,649 --> 00:32:21,650
இரண்டு?

575
00:32:31,451 --> 00:32:33,120
உங்களுக்கு குடித்து மட்டையாக வேண்டுமா?

576
00:32:33,537 --> 00:32:36,248
-ஆம்.
-பிறகு நாம் ஒரு வங்கியை கொள்ளையடிக்கலாம்.

577
00:32:43,005 --> 00:32:45,048
அடுத்த வார இறுதியில்
மிஷலும் ஹென்ரியும் வருகிறார்கள்.

578
00:32:45,132 --> 00:32:46,508
-ஹே, அருமை, கோச்.
-ஆமாம்.

579
00:32:47,217 --> 00:32:49,511
சரி, ஜேன் மற்றும் உங்களைப்பற்றி சொல்லுங்க.
என்ன நடந்தது?

580
00:32:50,095 --> 00:32:51,221
மீண்டும் அதையே செய்துவிட்டேன்.

581
00:32:51,305 --> 00:32:54,016
-பெண்ணை விட விளையாட்டு முக்கியம் என்றா?
-ஆமாம்.

582
00:32:54,099 --> 00:32:55,809
நீங்கள் எப்போது கற்றுக் கொள்வீர்கள், கோச்?

583
00:33:29,134 --> 00:33:31,136
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

