1
00:00:19,144 --> 00:00:20,562
இதற்காக நான் வருந்துகிறேன்.

2
00:00:20,646 --> 00:00:24,900
மன்னிப்பு கேட்க வேண்டாம். உங்களுக்கு நன்றி
மற்றொரு காரை சரி செய்ய நம்மால் முடியும்.

3
00:00:24,983 --> 00:00:26,235
அவரிடம் சொல்லுங்கள், பசங்களே.

4
00:00:26,318 --> 00:00:27,277
-பை, அப்பா.
-பரவாயில்லை, அப்பா.

5
00:00:27,361 --> 00:00:28,237
என்னவாக இருந்தாலும்.

6
00:00:29,655 --> 00:00:31,657
-உங்களை நேசிக்கிறேன்.
-உன்னை நேசிக்கிறேன், அன்பே.

7
00:00:32,448 --> 00:00:35,536
உங்க முதலாளிக்கு இதய நோய் வருமென
எனக்குத் தோன்றுவதாக அவளிடம் சொல்லுங்க.

8
00:00:38,080 --> 00:00:39,706
-காலை வணக்கம், டெட்.
-ஹேய், ஹிக்கின்ஸ்...

9
00:00:41,834 --> 00:00:42,835
அவர் இறந்து விட்டாரா?

10
00:00:44,962 --> 00:00:48,048
அதாவது, நான் ஃபோனையே பார்த்துக் கொண்டு
இருந்தது என் தவறு தான்.

11
00:00:48,131 --> 00:00:50,133
என் குடும்பத்தினரின் விமானப் பயணத்தை
சரிபார்க்காமல் இருக்க முடியலை.

12
00:00:50,217 --> 00:00:51,969
வந்து, இதை எல்லோரிடமும் சொல்ல மாட்டேன்,

13
00:00:52,052 --> 00:00:55,681
ஆனால், மிஷலுக்கும் எனக்கும் சில
மன வேறுபாடு பிரச்சினைகள் இருக்கின்றன.

14
00:00:55,764 --> 00:00:58,725
டெட், உங்களுக்குப் பிடிக்கவில்லைலை என்றால்
இதைப்பற்றிப் பேச வேண்டாம்.

15
00:00:58,809 --> 00:00:59,726
எனக்கு ஆட்சேபனை இல்லை.

16
00:01:00,435 --> 00:01:01,937
தம்பதியருக்கான சிகிச்சையைக் கூட
முயன்று விட்டோம்.

17
00:01:02,020 --> 00:01:03,647
இருந்தாலும் மற்றொரு தம்பதியைப் பிடிக்கலை.

18
00:01:06,066 --> 00:01:08,026
சிரிப்பதால் நன்றாக இருக்கிறது.

19
00:01:08,110 --> 00:01:10,988
எங்களுக்கு சிகிச்சை செய்பவர் இந்த அடையாள
வார்த்தையை எங்களுக்கு சொன்னார்.

20
00:01:11,071 --> 00:01:13,115
ஆகவே, எங்கள் இருவரில் யாராவது ஒருவர்,
"ஓக்லாஹோமா" என்று சொன்னால்

21
00:01:13,198 --> 00:01:15,409
மற்றவர் கடவுள் சத்தியமாக
உண்மையை சொல்லணும்.

22
00:01:15,492 --> 00:01:17,369
ஆமாம், வந்து, அது உதவியாகத்தான் இருந்தது.

23
00:01:17,452 --> 00:01:19,329
இருந்தாலும், அந்த இசைத் திரைப்படம்
என்னால் கெட்டது.

24
00:01:20,163 --> 00:01:22,124
"ஓ, என்ன அழகான காலை" என்ற பாடலை
ஒவ்வொரு முறை நான் கேட்கும்போதும்,

25
00:01:22,207 --> 00:01:26,295
இல்லை... அந்த... "நாற்கர வண்டியில், உச்சி
விளிம்பில்" என்ற பாடலையோ, அல்லது...

26
00:01:26,795 --> 00:01:28,964
-"நாம் நடனமாடலாமா?" என்ற பாடல்?
-இல்லை, அது 'கிங் அண்ட் ஐ' படத்தில் வரும்.

27
00:01:29,673 --> 00:01:31,717
என்னவோ, இந்த மெட்டுக்களை
நான் கேட்கும் போது,

28
00:01:31,800 --> 00:01:33,635
உடனே, எனக்கு நிலையான
நம்பிக்கை ரொம்பவே அதிகம் என்று

29
00:01:33,719 --> 00:01:37,014
என் மனைவி சொல்வதைத் தான்
நான் நினைத்துக் கொள்வேன்.

30
00:01:38,182 --> 00:01:41,185
அப்புறம்... இந்த உணர்வுகளை
பகிர்வதற்குக் காரணம் கண்காட்சியில்,

31
00:01:41,810 --> 00:01:44,646
என் முன்னாள் கணவர் பற்றி மனம் திறந்து
உங்களிடம் சொன்னால்தானா?

32
00:01:44,730 --> 00:01:46,064
ஆமாம், மேடம்.

33
00:01:46,148 --> 00:01:47,524
வந்து, நான் கற்றுக் கொண்ட பாடம்.

34
00:01:47,608 --> 00:01:48,775
விடுங்கள்.

35
00:01:48,859 --> 00:01:51,653
உங்க ஆழ்மனதில், நாம் மிகவும் நெருங்கி
வருவது உங்களுக்கு பிடித்திருக்கிறது தானே?

36
00:01:51,737 --> 00:01:52,863
அப்படித்தான் நினைக்கிறேன்.

37
00:01:52,946 --> 00:01:54,948
-ஓக்லாஹோமா?
-அப்படி நினைக்கலை.

38
00:02:18,263 --> 00:02:19,348
ஜேமி?

39
00:02:20,807 --> 00:02:21,808
விழித்துக் கொண்டாயா?

40
00:02:28,357 --> 00:02:29,358
ஹலோ?

41
00:02:30,108 --> 00:02:31,777
ஜேமி இங்கே இருக்கிறானா?

42
00:02:31,860 --> 00:02:33,820
ஓ, கடவுளே, நீங்க கீலி ஜோன்ஸ் தானே.

43
00:02:33,904 --> 00:02:35,572
ஆமாம், நான்தான்.

44
00:02:37,449 --> 00:02:38,450
ஹாய், ஜேமி.

45
00:02:40,327 --> 00:02:42,996
இல்லை, இல்லை. நீ என் மேல் கோபப்படக்கூடாது.
நீ என்னுடன் உள்ள உறவை முறித்துக் கொண்டாய்.

46
00:02:43,080 --> 00:02:44,623
வந்து, 24 மணி நேரம் முன்பு.

47
00:02:44,706 --> 00:02:46,166
எவ்வளவு நேரம் தான்
ஒரு ஆண் தனியாக இருப்பது?

48
00:02:46,250 --> 00:02:48,085
நான் என்ன செய்யணும்?
நான் தானாகவே குளிக்கணுமா?

49
00:02:49,127 --> 00:02:51,004
மன்னிக்கணும். ஒன்று மட்டும் சொல்லட்டுமா,
நான் உங்க மிகப்பெரிய ரசிகை.

50
00:02:51,088 --> 00:02:53,006
உங்க இன்ஸ்டா, ஸ்நாப், எல்லாவற்றிலும்,
நான் உங்களைத் தொடர்கிறேன்.

51
00:02:53,090 --> 00:02:55,008
அற்புதம், நன்றி.

52
00:02:55,509 --> 00:02:56,844
அப்புறம், உனக்கும் நன்றி, ஜேமி.

53
00:02:57,261 --> 00:03:00,806
நான் யாருடனாவது
உறவை முறித்தக் கொள்ளும் பொழுதெல்லாம்,

54
00:03:00,889 --> 00:03:03,350
ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோமா
என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

55
00:03:03,433 --> 00:03:07,312
ஆனால் நான் இந்த முடிவை எண்ணி ஆறுதலடைய,
நீ உண்மையிலேயே உதவியிருக்கிறாய், நீ...

56
00:03:10,107 --> 00:03:11,275
நீயாகவே இருந்துக் கொண்டு.

57
00:03:11,775 --> 00:03:12,776
உன் பாராட்டுகளுக்கு நன்றி.

58
00:03:13,402 --> 00:03:14,444
என்ன?

59
00:03:14,528 --> 00:03:16,363
உன் முடிவை எண்ணி நீ சந்தோஷப்படும் படி
நான் செய்தேன் என்றாய்.

60
00:03:16,780 --> 00:03:18,532
-ஆமாம்.
-நீ அதை உணர்ந்து தான் சொல்கிறாயா?

61
00:03:19,867 --> 00:03:21,702
-ஆமாம்.
-அப்படி என்றால், பரவாயில்லை.

62
00:03:22,703 --> 00:03:24,121
மற்றவர்களை மகிழ்விப்பது
எனக்குப் பிடிக்கும்.

63
00:03:26,248 --> 00:03:28,208
நீ இன்னமும்
விளம்பரப் படப்பிடிப்பில் இருப்பாயா?

64
00:03:28,292 --> 00:03:30,794
பல வாரங்களாக உனக்காக நான் அமைத்த
அந்த விளம்பரப் படப்பிடிப்பிற்கா?

65
00:03:31,545 --> 00:03:32,504
ஆமாம்.

66
00:03:34,923 --> 00:03:36,592
உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.

67
00:03:42,014 --> 00:03:43,223
ஆமாம், ஆமாம், ஆமாம்! இங்கே!

68
00:03:44,641 --> 00:03:46,185
ஆமாம், ஜேமி! ஜேமி, ஜேமி!

69
00:03:46,810 --> 00:03:49,146
ஜேமி! நான் உதைக்கத் தயார். ஜேமி!

70
00:03:51,190 --> 00:03:53,525
-என்ன செய்றீங்க? அது உள்ளே போயிருக்கும்.
-வந்து, நமக்கு எப்பவுமே தெரிய வராது.

71
00:03:53,609 --> 00:03:55,903
ஜேமி, பந்தை அடுத்தவரை நோக்கித் தள்ளு என
எத்தனை முறை சொல்வது?

72
00:03:55,986 --> 00:03:59,698
சமயலறையிலுள்ள பீனட் பட்டர் ஜாரை விட,
அதிகமாகவே சாம் தயாராக இருந்தான்.

73
00:03:59,781 --> 00:04:01,825
என்ன? அவர் எதைப் பற்றி பேசுகிறார்?

74
00:04:01,909 --> 00:04:04,369
சரி. பீனட் பட்டர் பாட்டிலை திறந்தேதான்
வைத்திருப்பேன் என உங்களுக்குத் தெரியாது.

75
00:04:04,453 --> 00:04:06,872
அந்தப் பக்கம், போகும் போதெல்லாம்,
என் விரலால் அதை எடுக்க முடியும்.

76
00:04:07,998 --> 00:04:10,167
-நியாயமாக இருப்பதற்கு, இது ஒரு நல்ல யோசனை.
-ஆமாம்.

77
00:04:10,250 --> 00:04:12,961
கவனி, சாம் அருகில் யாருமில்லை என்றால்
நீ பந்தை அவனுக்கு பாஸ் பண்ணணும், சரியா?

78
00:04:13,045 --> 00:04:16,255
ஆனால், ஏன்? சாம் கிட்டே யாருமே
இல்லையென்றாலும் அவன் சுத்த மோசம்.

79
00:04:16,339 --> 00:04:17,925
என் பெயர் காதில் விழுந்தது.
அவன் என்ன சொன்னான்?

80
00:04:18,007 --> 00:04:19,760
-அதைப்பற்றிக் கவலைப்படாதே.
-சரி.

81
00:04:19,843 --> 00:04:21,470
நண்பர்களே, நாளை நாம்
ஒரு குழுவாக விளையாடணும்.

82
00:04:21,553 --> 00:04:24,973
இல்லையென்றால் நாம் மண்ணைக் கவ்விவிடுவோம்.
மற்றவர்களுக்கும் பாஸ் பண்ணணும்.

83
00:04:25,057 --> 00:04:27,684
நாம் சரியாக செய்யும் வரை, இதைத்தான்
செய்யப் போகிறோம். துவங்கலாம்.

84
00:04:27,768 --> 00:04:29,019
அப்பா!

85
00:04:34,233 --> 00:04:35,484
பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

86
00:04:39,446 --> 00:04:41,990
அவர் நினைத்ததை விட இது அதிக தூரம் தான்.

87
00:04:42,074 --> 00:04:43,075
உருவகம்.

88
00:04:45,410 --> 00:04:47,120
-ஹே!
-அப்பா!

89
00:04:47,204 --> 00:04:49,665
நீங்கள் பாதி வழியிலேயே என்னை
சந்திப்பீர்கள் என நினைத்தேன், பரவாயில்லை.

90
00:04:49,748 --> 00:04:51,708
-ஹே, நண்பா!
-ஹெலிகாப்ட்டர் போல சுற்றுங்க.

91
00:04:51,792 --> 00:04:55,879
சரி. இரண்டு தடவை சுற்றுகிறேன். சரியா?

92
00:04:55,963 --> 00:04:57,506
உனக்குத் தலைசுற்றும், மகனே.

93
00:04:57,589 --> 00:04:59,967
-மெதுவான ஹெலிகாப்டர்.
-முடியவே முடியாது. வா.

94
00:05:03,637 --> 00:05:04,847
உனக்காக ரொம்பவே ஏங்கினேன்.

95
00:05:04,930 --> 00:05:06,306
எல்லோரும் ஒன்றாக அணைத்துக் கொள்ளுதல்.

96
00:05:06,390 --> 00:05:07,641
ஹே! இதோ இருக்கிறான்.

97
00:05:07,724 --> 00:05:11,228
ஹே, பெரிய பையா. நீ எவ்வளவு
உயரமாக வளர்ந்துவிட்டாய். என்ன கொடுமை?

98
00:05:11,311 --> 00:05:13,730
இதைப் பார். வந்து, நீ, என்ன...
உனக்கு பற்கள் வளர்ந்துவிட்டதா?

99
00:05:13,814 --> 00:05:16,149
-எனக்கு ஏற்கனவே பற்கள் இருந்தன!
-அப்புறம் உன்னால் பேச முடிகிறது!

100
00:05:16,233 --> 00:05:18,068
இதை, சொல்வதற்கு மன்னிக்கவும்,
மிஸ். வெல்டன்,

101
00:05:18,151 --> 00:05:22,197
இந்த வார போட்டியின் அனுமதி சீட்டுகள்
முழுவதும் விற்பனை ஆகாது.

102
00:05:22,281 --> 00:05:25,742
ஆச்சரியமில்லை.தொடர்ந்து நான்கு போட்டிகளில்
தோற்றதால், நாம் புறக்கணிக்கப்படுகிறோம்.

103
00:05:26,368 --> 00:05:27,828
ஆனால் எதற்கு வருத்தப்பட வேண்டும்?

104
00:05:27,911 --> 00:05:29,746
அது எல்லாம் நன்றாக தான்
போய்க்கொண்டு இருக்கிறது.

105
00:05:33,542 --> 00:05:34,376
டார்ஸ்டெய்னர்
பில்ஸ்னர்

106
00:05:34,459 --> 00:05:38,672
டார்ஸ்டெய்னரின் புது விளம்பர தூதுவனாக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

107
00:05:38,755 --> 00:05:41,300
ஜேமி டார்ட்டின் விருப்பமான மதுபானம்.

108
00:05:41,925 --> 00:05:44,261
இருங்க, இருங்க.
என் டாட்டூக்களை புகைப்படம் எடுங்க.

109
00:05:44,887 --> 00:05:48,098
அதை எடுங்க. அது எனக்கு முக்கியமானது.
"கை" என்பதின் சீன எழுத்து.

110
00:05:49,474 --> 00:05:50,893
-ஜேமி.
-என்ன?

111
00:05:50,976 --> 00:05:52,394
-அந்த மதுபானத்தை குடி.
-சரி.

112
00:05:53,520 --> 00:05:55,939
சும்மா கேட்கிறேன், நீ அந்த மோசமானவனுடன்
திரும்ப சேர்ந்துவிட்டாயா?

113
00:05:56,023 --> 00:05:57,149
நன்றாக சாப்பிடு.

114
00:05:57,733 --> 00:06:00,903
இல்லை. எங்கள் உறவு முடிந்துவிட்டது.
கடவுளே, உங்கள் அக்கறை எனக்கு பிடிக்கிறது.

115
00:06:01,528 --> 00:06:03,739
அந்த உதடுகள் எனக்கு எட்டினால்
உங்க வாயிலேயே முத்தமிடுவேன்.

116
00:06:04,448 --> 00:06:06,992
வந்து, இதை நான் தான் முழுவதும் செய்தேன்.
எனக்கு 10% கிடைக்கும்.

117
00:06:07,075 --> 00:06:08,619
ஹே, உங்களுக்கு புராணங்கள் பிடிக்குமா?

118
00:06:08,702 --> 00:06:10,954
நாம் யூனிகார்ன் பார்த்திருப்போம்.
ஆனால் ப்ரூனிகார்ன் பார்த்திருக்கிறோமா?

119
00:06:13,415 --> 00:06:15,542
-அது வேடிக்கையாக இருக்கிறது.
-ஓ, கடவுளே.

120
00:06:15,626 --> 00:06:17,628
அது என்ன? இது தான் என் பானகுழந்தை.

121
00:06:17,711 --> 00:06:19,046
-வா போகலாம்.
-சரி.

122
00:06:19,129 --> 00:06:22,007
இவை உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
அதற்காக கூடுதல் கட்டணம் கூட கிடையாது.

123
00:06:22,090 --> 00:06:23,091
கீலி.

124
00:06:23,175 --> 00:06:26,178
வேறு யாராவது ஆட்டக்காரர்களுக்கு
விளம்பரம் தேவை என்றால்,

125
00:06:26,261 --> 00:06:28,305
அதை செய்வதில் உனக்கு ஆர்வம் இருக்குமா?

126
00:06:28,388 --> 00:06:29,515
அன்றிரவு கழிப்பறையில் உங்களிடம்

127
00:06:29,598 --> 00:06:31,475
நன்றாக நடந்துகொண்டேன் என்பதற்காக
எனக்கு வேலை தர வேண்டாம்.

128
00:06:31,558 --> 00:06:35,103
ஏன் கூடாது? எப்போதும் ஆண்கள் கழிப்பறையில்
ஒருவருக்கொருவர் வேலை கொடுப்பது சகஜம் தான்.

129
00:06:35,979 --> 00:06:36,980
ஆமாம், அவர்கள் அப்படித்தான்.

130
00:06:37,814 --> 00:06:40,567
நான் வேலையை சொன்னேன். வேலை- வேலை போல.

131
00:06:40,651 --> 00:06:43,320
-வந்து, கை, ஊதுவது, அல்லது கால் கிடையாதா?
-காலா?

132
00:06:43,403 --> 00:06:47,491
நீங்க சொல்வது சரிதான்.
சரியாக பார்த்தல் அது... கால்கள், சரியா?

133
00:06:48,659 --> 00:06:52,120
அதைப் பற்றி கொஞ்சம் யோசனை செய்.
நீ செய்து கொண்டு இருப்பதையே செய்வதானால்...

134
00:06:52,788 --> 00:06:53,997
நீ என்ன செய்கிறாய் என்று சொன்னாய்?

135
00:06:54,957 --> 00:06:57,835
கிட்டத்தட்ட புகழ்மிக்கவளாக இருப்பதில்
நான் புகழ்மிக்கவள்.

136
00:06:58,544 --> 00:06:59,545
மிகச் சிறப்பு.

137
00:07:00,796 --> 00:07:03,173
-இதை ஒரு மாற்று யோசனையாக நினைத்துக்கொள்.
-சரி.

138
00:07:05,634 --> 00:07:07,386
சரி, இப்போது, உங்களுக்கு
கொஞ்சம் குறிப்பு சொல்கிறேன், சரியா?

139
00:07:07,469 --> 00:07:10,931
வருவலுக்கு "சிப்ஸ்" என்று பெயர்.
சிப்ஸ்களுக்கு "கிரிஸ்ப்ஸ்" என்று பெயர்.

140
00:07:11,014 --> 00:07:13,433
"பேங்கர்ஸ்" என்றால் சிறந்த பாடல் இல்லை,

141
00:07:13,517 --> 00:07:16,645
ஆனால் அவை சுவை மிகுந்து இருப்பதால் நம்மை
நடனமாட செய்கின்றன.

142
00:07:16,728 --> 00:07:19,189
நீ எப்போது ஆட்டத்தில் வெற்றி
பெறப் போகிறாய், மோசமானவனே?

143
00:07:19,273 --> 00:07:22,401
ஹே, பேஸ், நண்பர்களே.
இது... என் மனைவி, மிஷேல்.

144
00:07:22,484 --> 00:07:24,611
உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,
திருமதி. லாஸ்ஸோ.

145
00:07:24,695 --> 00:07:26,738
நல்ல திறமை. நன்றாக செய்தாய்.

146
00:07:26,822 --> 00:07:28,532
-சரி,கோச்சின் மனைவி இவற்றை கேட்டிருப்பாள்.
-ஆமாம்.

147
00:07:28,615 --> 00:07:30,701
ஹாய், டெட். ஹலோ, சிறுவனே.

148
00:07:31,493 --> 00:07:36,248
இந்தா அம்புகள். வட்டப்பலகை அங்கிருக்கு.
வாடிக்கையாளர்கள் மீது எறியாதே.

149
00:07:37,082 --> 00:07:38,250
ஆமாம், போய் சந்தோஷமாக இரு.

150
00:07:38,333 --> 00:07:40,752
-உங்க இடம் இங்கே இருக்கிறது.
-நீ முன்னே போ. நான் வருகிறேன்.

151
00:07:40,836 --> 00:07:43,297
-மூன்று மீன் மற்றும் வருவலா?
-ஆம், தயவுசெய்து. இரண்டு பானங்கள்.

152
00:07:43,380 --> 00:07:45,007
-உங்க வழக்கம் எனக்கு பிடிச்சிருக்கு.
-சரி.

153
00:07:47,926 --> 00:07:49,178
இதைப் பார்.

154
00:07:50,470 --> 00:07:55,726
மீன் வறுவலை செய்திதாளில் சுற்றுவார்களா?
அப்படி செய்வார்கள் என படித்திருக்கிறேன்.

155
00:07:55,809 --> 00:07:59,438
இல்லை. அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.
என் உணவு எனக்கு தகவல்கள் சொல்லி கொடுப்பது?

156
00:07:59,521 --> 00:08:01,440
ஆமாம், அது தான் உங்க கனவு காட்சி, இல்லையா?

157
00:08:01,523 --> 00:08:03,567
ரோசா பார்க்ஸ் பற்றி தெரிந்துக் கொண்ட
ஒரு டோனட் போல.

158
00:08:03,650 --> 00:08:05,360
-ஆமாம். சரியாக சொன்னாய், ஆமாம்.
-ஆமாம்.

159
00:08:05,444 --> 00:08:07,654
அந்த சிறு இடத்தில் நிறைய ஞானத்தை பெறலாம்.

160
00:08:09,281 --> 00:08:10,324
ஆமாம்.

161
00:08:10,782 --> 00:08:12,492
நீ முடித்துவிட்டாயா, குட்டி?

162
00:08:12,576 --> 00:08:14,286
ஆமாம், அவன் முடித்திருக்கணும்.

163
00:08:14,369 --> 00:08:16,496
வந்து, அதற்காக நான் வருந்துகிறேன்.

164
00:08:16,580 --> 00:08:17,748
எப்போதும் நடக்கும்.

165
00:08:20,250 --> 00:08:22,085
-நீ என்ன செய்கிறாய்?
-கொஞ்சம் ஆர்வமாக இருக்கிறது, சரியா?

166
00:08:22,169 --> 00:08:24,087
புகைப்படக்காரர் உன் படங்களை
எனக்கு அனுப்புவார்,

167
00:08:24,171 --> 00:08:26,048
அதில் கேவலமாக இருக்கும் உன் படங்களை
நான் அழித்து விடுகிறேன்.

168
00:08:26,131 --> 00:08:27,299
பிறகு அவற்றை உனக்கு அனுப்புகிறேன்.

169
00:08:27,382 --> 00:08:30,594
அன்பே, முதலில், எந்த புகைப்படத்திலும்
நான் கேவலமாக இருக்க மாட்டேன் ஏனென்றால்...

170
00:08:31,595 --> 00:08:34,640
இன்னொன்று, நீ அவற்றை
வீட்டிற்கு கொண்டு வந்து,

171
00:08:34,722 --> 00:08:36,433
நாம் இருவரும் அவற்றை
சேர்ந்து பார்த்தால் என்ன?

172
00:08:36,933 --> 00:08:38,059
நாம் நிர்வாணமாக இருக்கலாம்.

173
00:08:40,145 --> 00:08:42,481
நிச்சயமாக முடியாது.
மறுபடியும் நன்றி, ஜேமி.

174
00:08:45,150 --> 00:08:46,318
புத்திசாலித்தனமான முடிவு.

175
00:08:47,486 --> 00:08:48,487
என்ன சொல்கிறாய்?

176
00:08:50,322 --> 00:08:52,199
அந்த முட்டாளோடு நான் நேரம் செலவிடணும்.

177
00:08:52,282 --> 00:08:55,494
அவனோடு நீ இருக்க முடிவு செய்தது
உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.

178
00:08:55,577 --> 00:08:57,371
நான் அவனோடு இல்லை.
நாங்கள் பிரிந்துவிட்டோம்.

179
00:08:57,454 --> 00:09:00,374
நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்.
இதை உன்னிடம் யாராவது கேட்டார்களா, என்ன?

180
00:09:00,457 --> 00:09:01,458
சரி.

181
00:09:02,668 --> 00:09:05,379
எனக்கு அது தெரியாது, எனவே... மன்னிச்சிடு.

182
00:09:05,462 --> 00:09:08,131
இல்லை, பரவாயில்லை. நீ என் வாழ்க்கையில்
கண்டிப்பாக ஒரு பங்கேற்கணும்.

183
00:09:08,215 --> 00:09:11,969
நான் எப்போது முடிவெடுக்க வேண்டிய நேரத்தில்
உனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறேன், சரியா?

184
00:09:14,429 --> 00:09:16,890
அது பயிற்சி செய்யும் போது,
சாம் தயாராக இருந்தான்,

185
00:09:16,974 --> 00:09:18,600
ஆனால் ஜேமி அவனிடம் பந்தை அடிக்கவில்லை.

186
00:09:18,684 --> 00:09:20,227
ஆனால் சாம் ரொம்ப தயாராக இருந்தான்.

187
00:09:20,727 --> 00:09:22,479
நான் இப்போது அதை பற்றி தான்
விவரித்து கொண்டு இருந்தேன்.

188
00:09:25,482 --> 00:09:27,401
கீலி ஜோன்ஸ்
என் சிறுநீர்ப்பை நிரம்பியது, கழிவறை போகவா?

189
00:09:28,819 --> 00:09:29,820
சரி.

190
00:09:31,572 --> 00:09:32,614
இதோ.

191
00:09:33,198 --> 00:09:36,159
சரி. சரி. இரு, ஒரு நொடி இரு.

192
00:09:37,536 --> 00:09:40,330
நாம் ஒரு பக்கத்தை விட்டுவிட்டோம் என்று
நினைக்கிறேன். ஓ, கடவுளே.

193
00:09:40,414 --> 00:09:42,958
உனக்கு நிஜ இரட்டை மாடி பேருந்தில்
போகணும் என ஆசை இல்லையா?

194
00:09:43,041 --> 00:09:44,626
நாங்கள் முடித்தவுடன்.

195
00:09:45,335 --> 00:09:46,670
பார்த்தாயா? எனக்கு பிடிச்சிருக்கு.

196
00:09:46,753 --> 00:09:48,881
முதலில் நாம் அதை கட்டணும்,
பிறகு அதில் பயணம் செய்யலாம்.

197
00:09:48,964 --> 00:09:51,633
அது 'ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸ்'
உதாரணம் போல இருக்கு.

198
00:09:52,092 --> 00:09:53,093
சரி.

199
00:09:53,886 --> 00:09:57,139
சரி, நான்கு கைகளை விட ஆறு கைகள் சிறந்தவை.

200
00:10:24,625 --> 00:10:25,876
காஃப்கா
த வைல்ட் வோட்கா

201
00:10:25,959 --> 00:10:27,669
காலை வணக்கம்.

202
00:10:27,753 --> 00:10:29,046
ஹே, நீ எப்படி இருக்கிறாய்?

203
00:10:32,382 --> 00:10:35,302
-ஹே, அந்த ஸ்கார்ப் ரொம்ப நல்லா இருக்கு.
-ஓய்! மோசமானவனே.

204
00:10:35,385 --> 00:10:37,221
போட்டியை கெடுத்து விடாதே.

205
00:10:37,304 --> 00:10:39,723
உன்னை பாராட்டுகிறேன்.
என்ன நடக்கிறது என்று பார்ப்போம், சரியா?

206
00:10:43,560 --> 00:10:45,187
ஹே, இதைப் பாரு.

207
00:10:45,270 --> 00:10:47,231
நீ இதுவரை... இது போன்ற ஒன்றை
பார்த்தது கிடையாது.

208
00:10:47,314 --> 00:10:49,942
இதோ இருக்கிறதே, இது ஸ்கோன், சரியா?

209
00:10:50,025 --> 00:10:52,277
அது மஃபின் போன்றது,
ஆனால் மிகவும் உலர்வாக இருக்கும்

210
00:10:52,361 --> 00:10:54,571
இந்தா உன் காலை சிற்றுண்டி. சரியா?
ஹே! நீ என்ன சொல்கிறாய்?

211
00:10:54,655 --> 00:10:55,948
நன்றி, அப்பா!

212
00:10:56,031 --> 00:10:58,742
சரி. போய் வா.
சில குழந்தைகள், மோசமானவர்கள்.

213
00:11:05,666 --> 00:11:09,169
-வெளியே நன்றாக இருக்கிறது, இல்லையா?
-ஆமாம்.

214
00:11:09,253 --> 00:11:10,879
-ஹே.
-நமக்கு காலை சிற்றுண்டி சமைக்கிறேன்.

215
00:11:10,963 --> 00:11:12,130
என்ன பிரச்சினை?

216
00:11:12,214 --> 00:11:14,383
ஒன்றுமில்லை. எனக்கு கொஞ்சம்
பயண களைப்பாக இருக்கிறது.

217
00:11:14,466 --> 00:11:15,634
நான் நலமாக இருக்கிறேன், டெட்.

218
00:11:15,717 --> 00:11:17,553
இல்லை, இல்லை.
நீ என்னிடம் பேசணும், மிஷேல்.

219
00:11:17,636 --> 00:11:20,138
சரியா? ஹே, ஹே. ஓக்லாஹோமா.

220
00:11:26,395 --> 00:11:27,646
ஒவ்வொரு நாளும்...

221
00:11:29,106 --> 00:11:33,110
முதலில் இருந்த அதே உணர்வுகள் இருக்கணும்
என்று நினைத்து தான் நான் விழிக்கிறேன்.

222
00:11:33,986 --> 00:11:37,239
ஆனால் திருமணம் என்பது
இப்படித்தான் இருக்கும் போல, சரியா?

223
00:11:38,699 --> 00:11:41,577
நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.
உங்களுக்கும் அது தெரியும்.

224
00:11:43,537 --> 00:11:45,163
கிளம்புவதற்கு தயார்!

225
00:11:49,042 --> 00:11:51,044
-வந்து, நீ கால் சட்டை போடணும், செல்லமே.
-ஆமாம்.

226
00:11:51,128 --> 00:11:53,046
-வந்து...
-போய் கால் சட்டை போடலாம். வா.

227
00:12:03,223 --> 00:12:05,225
அதாவது, என்ன செய்வது என்று
எனக்கு தெரியலை.

228
00:12:05,851 --> 00:12:08,312
திருமணம். உங்களுக்கு தெரிந்தது போல,
ரொம்பவும் சிக்கலானது.

229
00:12:08,395 --> 00:12:10,314
பலவிதமான சவால்கள்...

230
00:12:10,898 --> 00:12:13,567
நான் நினைக்கிறேன்... தெரியலை.
மன்னிச்சிடுங்க.

231
00:12:13,650 --> 00:12:14,860
உங்களுக்கு எப்போதாவது திருமணம் நடந்தா?

232
00:12:16,570 --> 00:12:19,448
ஆமாம், நேட்.
மாமிசம் சமைக்கும் கருத்துகளும்

233
00:12:19,531 --> 00:12:21,909
காதல் உறவுகளின் மேல் பயிற்சியாளருக்கு
இருக்கும் கருத்துகளும் ஒரே மாதிரியானவை.

234
00:12:21,992 --> 00:12:25,370
வந்து, ஐந்து நிமிடங்களுக்கு மேல் கவனம்
செலுத்தினால், இரண்டுமே கெட்டுப்போய்விடும்.

235
00:12:25,454 --> 00:12:27,706
-அது சரிதானே, பயிற்சியாளரே?
-ஆமாம்.

236
00:12:27,789 --> 00:12:29,791
உங்க தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி
ஒரு கேள்வி கேட்கவா?

237
00:12:29,875 --> 00:12:30,792
கேள்.

238
00:12:30,876 --> 00:12:32,211
உங்கள் உறவை பற்றி
நீங்கள் கவலைப்பட்டால்,

239
00:12:32,294 --> 00:12:36,089
எதற்காக 4,438 மைல்கள் கடந்து வந்தீர்கள்?

240
00:12:36,173 --> 00:12:38,759
சாதாரணமாக சொல்வதற்கு
அது ஒரு குறிப்பிட்ட எண்.

241
00:12:38,842 --> 00:12:40,719
வந்து, என் தந்தை
வரைபடம் வரைபவராக இருந்தார்.

242
00:12:41,178 --> 00:12:44,473
நான் 0.001மைல்கள் உயரமாக இருக்கிறேன்
என்று சொல்வார்.

243
00:12:46,391 --> 00:12:49,520
ஆமாம், வந்து, அது ஒரு நல்ல கேள்வி.
ஏன் அப்படி செய்தேன்?

244
00:12:51,104 --> 00:12:52,689
ஒரு சமயத்தில் நான் அருகில் இருப்பது

245
00:12:52,773 --> 00:12:57,486
நன்மையை விட நிறைய தீமையே செய்தது என்று
நான் உணர்ந்துக் கொண்டேன்.

246
00:12:59,363 --> 00:13:02,199
அவள் பிரச்சனைகளை நான்
தீர்க்க முயன்ற போது, அல்லது...

247
00:13:03,909 --> 00:13:07,162
அவளுக்கு பிடித்த எதாவது செய்யும் போது,
அது சரியாக நடக்காது.

248
00:13:08,121 --> 00:13:11,250
அதனால் அவளும் நாங்கள் ஆலோசனை பெறும்
அந்த உளவியல் மருத்துவரும்

249
00:13:11,333 --> 00:13:15,796
கொஞ்ச காலம் அவளை விட்டு பிரிந்து இருப்பது
சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தனர்.

250
00:13:15,879 --> 00:13:20,759
அதனால்... வந்து, நான் 4,400 மற்றும்...

251
00:13:20,843 --> 00:13:21,677
முப்பத்தி எட்டு.

252
00:13:22,594 --> 00:13:24,179
முப்பத்தி எட்டு மைல்கள்
இடைவெளி கொடுத்தேன்.

253
00:13:26,557 --> 00:13:29,685
குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். உங்களில்
ஒருவரிடம் என் கைப்பேசி இருக்கிறது.

254
00:13:31,186 --> 00:13:32,312
நன்றி.

255
00:13:32,396 --> 00:13:34,731
கைப்பேசி சிறப்பாக வேலை செய்வதற்காக
சில செயலிகளை நீக்கிவிட்டேன்.

256
00:13:34,815 --> 00:13:36,358
பாட்டில்ஷிப்ஸை நீக்கவில்லை என நம்புகிறேன்.

257
00:13:36,441 --> 00:13:38,569
ஓ, சரி. நான் அதை அதிகமாக
விளையாடிக்கொண்டு இருப்பேன்.

258
00:13:38,652 --> 00:13:41,321
உங்கள் போட்டி நாளை பற்றி திட்டமிடுவதற்கு
உங்களை தனியே விடுகிறேன்.

259
00:13:41,405 --> 00:13:43,282
வந்து, கொஞ்சம் பொறுமையாக இரு, நண்பா.

260
00:13:43,365 --> 00:13:45,158
உங்களிடம் ஒரு யோசனை கேட்கலாமா?

261
00:13:45,242 --> 00:13:47,286
அட, நிச்சயமாக.

262
00:13:47,369 --> 00:13:52,040
நெருங்கிய தோழனாக கருதப்படுவது பற்றி
மிக்க மகிழ்ச்சி.

263
00:13:52,791 --> 00:13:55,210
லாஸ்ஸோ அணி, என்பது போல.

264
00:13:55,294 --> 00:13:57,588
நீங்களும் உங்க மனைவியும்.
ரொம்ப காலமாக ஒன்றாக இருக்கிறீர்கள், சரியா?

265
00:13:58,005 --> 00:14:01,175
ஆமாம். 28 வருடங்களாக.

266
00:14:01,258 --> 00:14:03,468
ஐந்து மகன்கள், மூன்று நாய்கள்,

267
00:14:03,552 --> 00:14:07,389
எப்போது வேண்டுமானாலும் இறந்து, என்னை ரொம்ப
வேதனைப்படுத்தப் போகும் ஒரு 20வயது பூனை,

268
00:14:07,472 --> 00:14:10,601
எங்கள் எல்லோரையும் ஒன்றாக
தங்க வைக்கும் ஒரு சிறு வீடு.

269
00:14:11,059 --> 00:14:12,686
ஒரு பூரணமான வாழ்க்கை போல தோன்றுகிறது.

270
00:14:13,770 --> 00:14:16,523
ஆனால் உங்கள் எல்லோருக்கும் பல கடினமான
நேரங்கள் ஏற்பட்டிருக்கும், சரிதானே?

271
00:14:16,607 --> 00:14:20,861
ஐந்து மகன்கள், சிறு வீடு, இறக்கப்போகின்ற
பூனை, இவையெல்லாம் உங்க காதில் விழவில்லையா?

272
00:14:23,739 --> 00:14:24,907
அது தான் விஷயம், இல்லையா?

273
00:14:24,990 --> 00:14:28,952
சரியான நபரோடு இருந்தால்,
கஷ்டமான நேரங்கள் கூட சுலபமாகி விடும்.

274
00:14:31,955 --> 00:14:36,084
யாராவது 911ஐ அழையுங்கள். நான் உண்மையினால்
அதிர்ச்சியடைந்ததைப் பற்றி சொல்லணும்.

275
00:14:37,127 --> 00:14:40,005
-இங்கே அது 999 என்று நினைக்கிறேன்.
-அது 999 தான்.

276
00:14:40,088 --> 00:14:41,340
-ஆமாம். அது சரி தான்.
-அவசர உதவி தானே?

277
00:14:41,423 --> 00:14:43,008
ஐயோ, அது பிரச்சினையானதாக
எனக்கு தோன்றுகிறது.

278
00:14:43,091 --> 00:14:45,427
அதாவது, குழந்தைகள், மற்றும்,
தவறாக அழைப்பவர்கள்...

279
00:14:45,511 --> 00:14:46,637
-ஏன்னா அது ஒரே ஒரு பொத்தான் தான்.
-ஆமாம்.

280
00:14:46,720 --> 00:14:48,639
காவல் வண்டிகளும் அவசர சிகிச்சை ஊர்திகளும்
எல்லா இடத்திலும்

281
00:14:48,722 --> 00:14:50,599
-சுற்றி வந்து கொண்டே இருக்கலாம்.
-ஆமாம்.

282
00:14:50,682 --> 00:14:52,559
-வந்து, நிறைய நடக்கிறது, அப்படித்தானே?
-ஆமாம். சரிதான்.

283
00:14:52,643 --> 00:14:54,686
-உண்மையாக, நடக்கும் விஷயம் தான்.
-இது தான் விஷயம்.

284
00:14:54,770 --> 00:14:56,980
இதோ ஆர்லோ வைட் உடன் கிரிஸ் பாவெல்.

285
00:14:57,064 --> 00:15:00,567
ஏஎஃப்சி ரிச்மண்ட் அணியின் இருப்பிடமான,
நெல்சன் ரோட் அரங்கத்தில் இருந்து நேரலை.

286
00:15:00,651 --> 00:15:02,277
எல்லோரும், வாருங்கள்!
ஒரு வட்டமாக நில்லுங்கள்.

287
00:15:02,361 --> 00:15:04,029
-நாம் இதை ஜெயிப்போம்!
-வாருங்கள், நண்பர்களே!

288
00:15:04,112 --> 00:15:05,572
சரி, வாருங்கள்.

289
00:15:05,656 --> 00:15:07,908
மூன்று வரை எண்ணுவோம்.
ஒன்று, இரண்டு, மூன்று...

290
00:15:07,991 --> 00:15:09,993
-ரிச்மண்ட்!
-போகலாம்!

291
00:15:13,455 --> 00:15:15,249
போகலாம்! போகலாம்!

292
00:15:21,630 --> 00:15:23,382
ஜேமி, உனக்கு கிருமிகள் என்றால் பயமா?

293
00:15:23,465 --> 00:15:25,467
ஏனென்றால் மற்ற ஆட்டக்காரர்களோடு
நீ ஏன் கை குலுக்கவில்லை

294
00:15:25,551 --> 00:15:26,468
என நான் யோசிக்கிறேன்.

295
00:15:26,552 --> 00:15:27,594
எனக்கு விருப்பமில்லை.

296
00:15:29,638 --> 00:15:32,641
சில நேரங்களில், தொடர்ந்து சேனல் மாற்றும்
என் பாட்டியை ஞாபகப்படுத்துகிறாய்.

297
00:15:32,724 --> 00:15:34,226
எல்லா தவறான விஷயங்களையும் செய்கிறாய்.

298
00:15:34,726 --> 00:15:39,147
வந்து, அப்போது நீங்களும் நானும்
ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோமா?

299
00:15:39,231 --> 00:15:40,607
சரி, நான் கேட்டு கொண்டிருக்கிறேன்.

300
00:15:40,691 --> 00:15:44,570
உங்க மோசமான கருத்துக்களை எல்லாம்
சொல்லிக்கொண்டே இருந்தால்,

301
00:15:44,653 --> 00:15:49,825
அதற்கு பதிலாக, நான் உங்களை புறக்கணிப்பேன்,
ஏன்னா இது கேவலமான ஒரு அணி.

302
00:15:51,243 --> 00:15:54,246
எல்லா கோல்களையும் நான் தான் போடுகிறேன்,
என்னை பார்ப்பதற்கு தான் கூட்டம் வருகிறது.

303
00:15:54,997 --> 00:15:56,832
அது நியாயமாக தோன்றுகிறதா? கை குலுக்குவோம்.

304
00:15:57,708 --> 00:15:59,585
வந்து, நீ சொன்னவற்றை
நான் மறுத்து பேச முடியும்,

305
00:15:59,668 --> 00:16:01,044
ஆனால் இப்போது எனக்கு நேரம் சரியில்லை...

306
00:16:01,128 --> 00:16:02,546
உண்மையில், நீங்க
என்ன சொன்னாலும் கவலையில்லை.

307
00:16:02,629 --> 00:16:05,340
ஏனென்றால், இன்றிரவு நான் ஒரு கோல்
போட்ட பின், இந்த பார்வையாளர்கள்

308
00:16:05,424 --> 00:16:06,842
என் பெயரை சொல்வது தான்
என் காதில் ஒலிக்கிறது.

309
00:16:07,301 --> 00:16:12,264
ஜேமி டார்ட்...
ஜேமி டார்ட்...

310
00:16:12,347 --> 00:16:15,309
இந்த ராகம் ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும்,
உன் முட்டாள்தனத்தை இப்போதே நிறுத்து...

311
00:16:15,392 --> 00:16:16,768
அப்பா!

312
00:16:16,852 --> 00:16:20,022
ஹேய், செல்லமே. இங்கே வா. ஹேய்.

313
00:16:20,105 --> 00:16:22,733
-ஜேமி டார்ட்?
-ஹலோ, சின்ன பையா.

314
00:16:22,816 --> 00:16:24,359
என் சட்டையில் கையெழுத்து போடுவீர்களா?

315
00:16:25,235 --> 00:16:26,486
சரி, திரும்பு.

316
00:16:27,905 --> 00:16:28,989
அது அற்புதமானது, இல்லையா?

317
00:16:29,698 --> 00:16:33,368
இப்போ, நான் அடுத்த முறை ஒரு கோல் போட்டால்,
அது எனக்காக மட்டும் இருக்காது.

318
00:16:36,079 --> 00:16:37,331
அது உனக்காகவும் தான்.

319
00:16:38,916 --> 00:16:42,252
எனக்காகவும் தான்.
ஆனால்... நமக்காக மட்டும் தான்.

320
00:16:42,836 --> 00:16:44,588
-மகிழ்ச்சி.
-நல்ல பையன்.

321
00:16:46,590 --> 00:16:47,716
நல்ல பையன்.

322
00:16:50,135 --> 00:16:51,720
வா, நாம் அங்கே போவோம்.

323
00:16:51,803 --> 00:16:57,267
ஜேமி டார்ட்...
ஜேமி டார்ட்...

324
00:16:57,351 --> 00:16:58,810
-வா, கோல்கீப்பர் பார்த்து!
-லிங்க் இடைவெளி கண்டுபிடிக்கிறான்.

325
00:16:58,894 --> 00:17:00,229
பின்னால் வந்து வேகமாக அடிக்கிறான்.

326
00:17:00,312 --> 00:17:02,731
கனடா நாட்டு மிட்ஃபீல்டர் ஒரு அற்புதமான
கோல் போட்டுவிட்டார்.

327
00:17:02,814 --> 00:17:06,777
-அடக் கடவுளே!
-கேவலமானவனை வெறுக்கிறேன்! மட்டமான லாஸ்ஸோ!

328
00:17:06,859 --> 00:17:10,030
-இருந்தாலும் நல்ல குடும்பம்.
-வேண்டாம், பால்! அவனை மனிதன் என சொல்லாதே!

329
00:17:10,113 --> 00:17:13,575
வந்து, ஆட்டம் தொடங்கி 6 நிமிடத்திற்கு பின்
ரிச்மண்ட் 2-0 என்ற கணக்கில் இருக்கின்றனர்.

330
00:17:13,659 --> 00:17:14,492
முட்டாள்! முட்டாள்!

331
00:17:14,576 --> 00:17:16,994
ரிச்மண்டின் ஆதரவாளர்கள் தங்கள்
உணர்ச்சிகளை தெரியப்படுத்துகிறார்கள்.

332
00:17:17,079 --> 00:17:18,079
முட்டாள்! முட்டாள்!

333
00:17:18,163 --> 00:17:20,082
கிரிஸ், நீ நினைக்கணும்,
இப்படியே போனால்,

334
00:17:20,165 --> 00:17:23,669
லாஸ்ஸோ ரிச்மண்டோடு இருப்பது கொஞ்ச காலமாக
இருந்தாலும், அது நல்லதாக இருக்காது.

335
00:17:24,127 --> 00:17:26,088
டார்ட் பந்தை பெறுகிறார். நல்ல ஆட்டம்.

336
00:17:26,171 --> 00:17:27,798
-முன்னேறி போ, ஜேமி.
-இடைவெளி கண்டுபிடிக்கிறார்.

337
00:17:27,881 --> 00:17:29,174
அவர் வலதுபுறத்தில் ஒபிசான்யா இருக்கிறார்.

338
00:17:29,258 --> 00:17:32,970
இல்லை, அவரே கோல் போடுகிறார்.
பிரமாதமான ஆட்டம்!

339
00:17:33,053 --> 00:17:35,681
ஜேமி டார்ட் நம்ப முடியாத அளவு,
தனியாக கோல் போட்டுவிட்டார்!

340
00:17:35,764 --> 00:17:37,891
ஜேமி டார்ட், நீ ஒரு சிறந்த வீரன்!

341
00:17:37,975 --> 00:17:42,229
ஜேமி டார்ட்...
ஜேமி டார்ட்...

342
00:17:42,312 --> 00:17:45,232
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில்,
முன்னணி ஆட்டக்காரனான,

343
00:17:45,315 --> 00:17:48,819
ஜேமி டார்டின் உதவியினால் ரிச்மண்ட்
2-1 என்ற கோல் கணக்கில் இருக்கிறார்கள்!

344
00:17:48,902 --> 00:17:51,113
-நான்!
-அவன் என்ன கத்துகிறான்?

345
00:17:51,196 --> 00:17:55,242
"நான்". தன் சட்டையிலிருக்கும் பெயரை காட்டி
திரும்ப திரும்ப "நான்" என்று கத்துகிறான்.

346
00:17:55,325 --> 00:17:56,827
நான்!

347
00:17:56,910 --> 00:17:59,079
நான், "மாமிசம்" என்று சொல்வதாக நினைத்தேன்.

348
00:17:59,162 --> 00:18:01,206
ஆனால், ஆமாம், நீ சொல்வது இன்னும்
அர்த்தமுள்ளது. சரி.

349
00:18:01,832 --> 00:18:04,168
-வா!
-ஒபிசான்யா தாக்குதலில் இடம் பெறுகிறான்.

350
00:18:04,251 --> 00:18:06,920
-அந்த நைஜீரியனை தாக்கிவிட்டார்கள்!
-ரொம்ப மோசம்!

351
00:18:07,546 --> 00:18:10,465
ஐயோ, நடுவரே! அவர்களை நிறுத்த சொல்லுங்கள்!

352
00:18:11,008 --> 00:18:13,343
பென்ஸனுக்கு மஞ்சள் அட்டை தான்
கொடுக்கப்படும்.

353
00:18:13,427 --> 00:18:17,181
அவர் சுலபமாக தப்பித்து விட்டாரென்று தான்
கூறணும். ஒபிசான்யா இன்னும் எழுந்திருக்கலை.

354
00:18:17,264 --> 00:18:18,765
-அவனுக்கு காயம் பட்டிருக்கலாம்.
-ஆமாம்.

355
00:18:18,849 --> 00:18:20,726
மன்னிக்கவும், நண்பா.

356
00:18:21,185 --> 00:18:24,438
ஒய்! உன் அணி வீரனை கவனி.

357
00:18:25,522 --> 00:18:28,358
அந்த இளம் ஆட்டக்காரனுக்கு குழுத்தலைவர்
சிறிது விவேகம் கற்று தருகிறார்.

358
00:18:28,442 --> 00:18:29,776
அதிலொன்றும் தவறு இல்லை.

359
00:18:31,153 --> 00:18:32,905
-சாம்?
-என்ன?

360
00:18:32,988 --> 00:18:35,240
நான் உன்னை அங்கு தள்ளப் போகிறேன்.
இதோ.

361
00:18:35,324 --> 00:18:37,826
-உன் பிரச்சனை தான் என்ன?
-இது என்ன?

362
00:18:37,910 --> 00:18:39,745
கென்டும் டார்டும் மோதிக்கொள்கிறார்கள்!

363
00:18:39,828 --> 00:18:42,915
-சரி.ஹே, வீரர்களே! போதும்! நிறுத்துங்கள்!
-அமைதி வருமென்று எதிர்ப்பார்க்கிறேன்.

364
00:18:42,998 --> 00:18:44,041
உன்னை கொல்லாமல் விடமாட்டேன்!

365
00:18:44,124 --> 00:18:45,083
ஒரே அணி!

366
00:18:45,167 --> 00:18:48,170
-ஒத்துக்கொள்ள முடியாதது, ஆர்லோ.
-கிரிஸ், உன் அணியினரை நீங்க அடித்ததுண்டா?

367
00:18:48,253 --> 00:18:50,255
-நீங்க பைத்தியமா? அதனால் என்ன?
-இல்லை, ஆனால் அப்படி செய்ய நினைத்ததுண்டு.

368
00:18:50,339 --> 00:18:51,465
-அவன் என் அணியைச் சேர்ந்தவன்.
-ஆமாம்.

369
00:18:51,548 --> 00:18:53,509
-எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கு.
-நீ என்ன...

370
00:18:53,592 --> 00:18:56,929
2001க்கு பிறகு நியூகாஸிலில்
இப்படி ஒன்றை நாம் பார்க்கவில்லை.

371
00:18:57,012 --> 00:19:01,099
ரிச்மண்ட் ஜெயிப்பதற்கான வாய்ப்பு
இன்னும் மோசமாக குறைகிறது.

372
00:19:02,392 --> 00:19:03,602
நீ நன்றாக இருக்கிறாயா, சாம்?

373
00:19:03,685 --> 00:19:05,646
உண்மையில், இது ஒன்றும் வலிக்கவில்லை.

374
00:19:05,729 --> 00:19:08,440
ஆனால் எல்லோரும் கவலைப்பட்டதால்,
நான் அப்படியே இருந்தேன்.

375
00:19:09,566 --> 00:19:11,026
இல்லை. கேள்.

376
00:19:11,109 --> 00:19:14,112
நான் உன்னை எழுப்பி விடுகிறேன்,
நீ அடிபட்டது போல நடிக்கணும்,

377
00:19:14,196 --> 00:19:17,157
ஆனாலும் உன்னால் விளையாட முடியும்
என்பது போல நீ சைகை காண்பிக்கணும்.

378
00:19:17,741 --> 00:19:19,785
-அவர்கள் அதை விரும்புவார்கள்.
-சரி.

379
00:19:21,620 --> 00:19:24,706
ஒபிசான்யா எழுந்து விட்டார்,
ஆனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா?

380
00:19:24,790 --> 00:19:26,041
அவன் நன்றாக இருக்கிறானா?

381
00:19:26,583 --> 00:19:28,377
வலியோடு அவர் தொடர்ந்து விளையாடுவார்
போல தெரிகிறது.

382
00:19:28,460 --> 00:19:31,463
அவ்வளவு உறுதி.
பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

383
00:19:31,547 --> 00:19:32,756
அருமை, சாம்!

384
00:19:33,131 --> 00:19:37,344
போட்டியை சமமாக்கும் ஒரு வாய்ப்போடு,
டார்ட் ஃபிரீ கிக் செய்ய முன் வருகிறார்.

385
00:19:37,427 --> 00:19:40,389
அணியினரோடு சேர்ந்து செய்வாரா
அல்லது தனியாகவா?

386
00:19:41,014 --> 00:19:43,475
டார்டை பொறுத்த வரையில்,
அது ஒரு தேவையில்லாத கேள்வி.

387
00:19:50,732 --> 00:19:52,484
அவர் கோல் போட்டுவிட்டார்!

388
00:19:52,568 --> 00:19:55,737
அது ஜேமி டார்டின் இரண்டாவது கோல்,
மற்றும் 38வது நிமிடத்தில்

389
00:19:55,821 --> 00:19:57,531
ரிச்மண்ட் சமம் ஆகிவிட்டார்கள்!

390
00:19:57,614 --> 00:19:59,324
அவர் ஒரு சிறப்பான வீரர், ஆர்லோ.

391
00:19:59,408 --> 00:20:00,409
இதைப் பார்.

392
00:20:01,243 --> 00:20:04,746
அவர் இல்லாமல், ரிச்மண்ட் என்ன செய்வார்கள்
என்று யோசிக்க வேண்டும்.

393
00:20:08,834 --> 00:20:09,835
நான் இதோ வருகிறேன்.

394
00:20:10,794 --> 00:20:12,212
நான்! நான்!

395
00:20:13,547 --> 00:20:17,801
இதை நாம் இது வரை பார்த்ததில்லை. டெட்
லாஸ்ஸோ அரங்கத்திற்கு வெளியே ஓடுகிறார்.

396
00:20:17,885 --> 00:20:19,803
சரி, அவர் எங்கே ஓடுகிறார்?

397
00:20:21,013 --> 00:20:22,764
அந்த படிகளில் கூட வேகமாக ஓடுகிறார்.

398
00:20:22,848 --> 00:20:25,601
டெட் லாஸ்ஸோவிற்கு அது ஒரு நல்ல
ஓட்ட பயிற்சியாக இருக்கும்.

399
00:20:25,684 --> 00:20:26,685
அவருக்கு ஏதும் பிரச்சினை இல்லையே?

400
00:20:28,562 --> 00:20:30,480
-ஹேய், ரெபேக்கா.
-ஹலோ, டெட்.

401
00:20:30,564 --> 00:20:32,524
-நீங்கள் சிறப்பாக செய்கிறீர்கள், அப்பா.
-ஆம், நீங்கள் செய்துவிட்டீர்கள்.

402
00:20:32,608 --> 00:20:33,609
நன்றி, செல்லங்களே.

403
00:20:33,692 --> 00:20:35,152
நான் ஜேமியை ஓய்வெடுக்க வைக்க
விரும்புகிறேன்.

404
00:20:35,944 --> 00:20:38,071
ஆனால் உங்களைக் கேட்காமல்
நான் அதை செய்ய விரும்பலை.

405
00:20:39,031 --> 00:20:40,866
ஆனால், நீங்கதான் மேலாளர், டெட்.

406
00:20:40,949 --> 00:20:43,952
அதனால் நீங்க என்ன முடிவு செய்தாலும்,
நான் அதற்கு ஆதரவாக இருப்பேன்.

407
00:20:44,411 --> 00:20:46,163
நன்றி, தலைவரே. சரி.
சென்று வருகிறேன்.

408
00:20:46,246 --> 00:20:47,289
பை, அப்பா.

409
00:20:50,292 --> 00:20:54,379
ஏற்கனவே நிகழும் போட்டியில் கோச் லாஸ்ஸோ
திரும்ப சேர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

410
00:20:54,463 --> 00:20:57,049
ராபர்ட்ஸ், தயாராகு. நீ விளையாடப் போகிறாய்.
போகலாம். வா.

411
00:20:57,132 --> 00:20:59,301
ஹேய், அதிகாரியே.
நாங்கள் ஒரு மாற்றம் செய்துள்ளோம்.

412
00:20:59,384 --> 00:21:00,886
-ஒன்பதிற்கு பதிலாக பதினாறு போகிறான்.சரியா?
-சரி.

413
00:21:00,969 --> 00:21:02,471
பாராட்டுகிறேன், சார். நன்றி.

414
00:21:09,436 --> 00:21:10,812
சரி.

415
00:21:10,896 --> 00:21:13,732
வந்து, லாஸ்ஸோ ஆரம்பத்திலேயே மாற்று
ஆட்டக்காரரை பயன்படுத்துவது போல் தெரிகிறது.

416
00:21:13,815 --> 00:21:15,984
அவர் ராபர்ட்ஸை உள்ளே கொண்டு வந்து...

417
00:21:16,944 --> 00:21:18,362
ஜேமி டார்ட்டை வெளியேற்றுகிறாரா?

418
00:21:20,030 --> 00:21:21,365
அவர் நம்முடைய சிறந்த விளையாட்டாளர்!

419
00:21:22,407 --> 00:21:23,408
நானா?

420
00:21:25,035 --> 00:21:28,247
நீங்கள் செய்வதறியாது செய்கிறீர்கள்!
நீங்கள் செய்வதறியாது செய்கிறீர்கள்!

421
00:21:28,330 --> 00:21:29,873
என்ன நடக்கிறது?

422
00:21:29,957 --> 00:21:32,292
அவர் தனது சிறந்த ஆட்டக்காரரை
வெளியேற்றுகிறார்.

423
00:21:32,376 --> 00:21:34,837
முதல் பாதி ஆட்டம் முடிய
இன்னும் ஒரு நிமிடம் கூட இல்லாத போது.

424
00:21:34,920 --> 00:21:36,880
-முட்டாள்! முட்டாள்! முட்டாள்!
-எண் 16, ராபி ராபர்ட்ஸ்,

425
00:21:36,964 --> 00:21:38,507
எண் 9, ஜேமி டார்டிற்குப் பதிலாக.

426
00:21:38,590 --> 00:21:40,467
ஹேய், நன்றாக விளையாடினாய்.
நன்றாக நம் அணியை திரும்ப கொண்டு வந்தாய்.

427
00:21:40,551 --> 00:21:43,971
வாயை மூடு. முட்டாளே.

428
00:21:45,556 --> 00:21:48,684
நடுவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்,
பாதி ஆட்ட நேரம் முடிந்துவிட்டது.

429
00:21:48,767 --> 00:21:51,603
லாக்கர் அறையில் லாஸ்ஸோவிற்கு எந்த
விதமான வரவேற்பு காத்திருக்கிறதோ?

430
00:21:51,687 --> 00:21:52,938
டார்ட்

431
00:22:03,866 --> 00:22:05,617
ஓய், உட்கார்ந்து கவனி.

432
00:22:12,666 --> 00:22:13,959
நாமே ஆட்டத்தை சமன் செய்துவிட்டோம்.

433
00:22:15,335 --> 00:22:16,336
சிறப்பான வேலை.

434
00:22:18,755 --> 00:22:23,093
நண்பர்களே, நாம் அடங்கி இருக்கிறோம்.
நமக்கு மாற்றம் வேண்டும்.

435
00:22:23,177 --> 00:22:25,762
கவனியுங்கள், மாற்றம் பயமாக இருக்குமென
எனக்குத் தெரியும்.

436
00:22:25,846 --> 00:22:29,766
ஒரு நிமிடம், இடைவேளையில் நீங்கள்
நண்பர்களுடன் ஃப்ரீஸ் டேக் விளையாடுவீர்கள்.

437
00:22:29,850 --> 00:22:33,228
அடுத்ததாக,
நீங்கள் பூப்படைந்ததை போல் உணர்கிவீர்கள்.

438
00:22:33,312 --> 00:22:36,607
உங்க கலை ஆசிரியர் மிஸ். ஸ்கேன்லென்,ஒவ்வொரு
முறையும் உங்க திட்டம் எப்படி நடக்கிறது

439
00:22:36,690 --> 00:22:40,194
என்பதைப் பார்க்க, மேஜை மீது சாயும்போது,
உள்ளுக்குள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

440
00:22:44,281 --> 00:22:48,535
அவர் அழகான பெண்,
வசீகரமானவர் இல்லை, ஆனால் அழகானவர்.

441
00:22:50,329 --> 00:22:52,080
முதன்முறையாக வெயில் படாத
பாகத்தைப் பார்த்தேன்.

442
00:22:52,998 --> 00:22:54,583
பெரும்பாலான நேரங்களில்,
மாற்றம் நல்ல விஷயம் தான்.

443
00:22:55,459 --> 00:22:57,294
இப்போது, இதுதான் எல்லாமே
என்று நினைக்கிறேன்.

444
00:22:58,837 --> 00:23:00,339
அதாவது மாற்றத்தை ஏற்றுக்கொள்வது.

445
00:23:00,756 --> 00:23:02,257
தைரியமாக இருப்பது.

446
00:23:02,341 --> 00:23:06,845
நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வது,
இதனால் உங்கள் வாழ்க்கையிலுள்ள எல்லோரும்...

447
00:23:08,555 --> 00:23:09,973
தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

448
00:23:11,767 --> 00:23:13,018
ஏனெனில் ஒருவேளை...

449
00:23:14,186 --> 00:23:16,813
அவள் மகிழ்ச்சியாக இருக்க நீங்க உண்மையிலேயே
உதவக்கூடிய ஒரே வழி இதுதான்.

450
00:23:24,321 --> 00:23:26,406
நிச்சயமாக, "அவள்", என்று
கால்பந்தைக் குறிப்பிடுகிறேன்.

451
00:23:28,492 --> 00:23:29,868
நன்றாக தப்பித்துவிட்டார்.

452
00:23:30,744 --> 00:23:33,830
சாம், இரண்டாம் பாதியில் நாங்கள் உன்னை
மிட்ஃபீல்டுக்கு மாற்றப் போகிறோம்.

453
00:23:34,623 --> 00:23:37,167
மீதமுள்ள மாற்றங்களைப் பற்றி
பியர்ட் உங்களுக்கு விளக்குவார்.

454
00:23:37,251 --> 00:23:38,961
ஹேய், ஹேய், ஹேய். கடைசியாக ஒரு விஷயம்.

455
00:23:39,044 --> 00:23:41,421
என்னைப் பாருங்கள். நான் இதைச் சொல்லும்போது
அனைவரின் கவனமும் என் மீது இருக்க வேண்டும்.

456
00:23:45,592 --> 00:23:46,426
நம்புங்கள்

457
00:23:51,765 --> 00:23:53,976
-உண்மையில் எப்பவுமே டார்ட்டைப் பிடிக்காது.
-எங்களுக்கு தெரியும், ராய்.

458
00:23:54,059 --> 00:23:55,477
எல்லோரும், வாருங்கள்.

459
00:23:56,979 --> 00:23:58,814
கூடுதல் நேரத்தில் இன்னும்
இரண்டு நிமிடங்கள் தான் இருக்கு.

460
00:23:58,897 --> 00:24:01,024
இரு தரப்பிலும் இரண்டு கோல்களால்
இன்னும் சமநிலையில் உள்ளது.

461
00:24:01,108 --> 00:24:03,610
ஜேமி டார்ட் இல்லாமல் கூட
ரிச்மண்ட் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்.

462
00:24:03,694 --> 00:24:04,695
இதோ.

463
00:24:05,237 --> 00:24:07,781
அவன் தயாராக இருக்கிறான்.
அவன் தயாராக இருக்கிறான். அப்படித்தான்.

464
00:24:07,865 --> 00:24:10,742
காக்பர்னிடமிருந்து பந்து நேரடியாக
வருகிறது. கென்ட் வேகமாக ஓடுகிறார்!

465
00:24:10,826 --> 00:24:11,702
அப்படித்தான்!

466
00:24:11,785 --> 00:24:13,370
கெண்ட் ஒரேயொருவரை மட்டும் வீழ்த்தணும்.

467
00:24:13,453 --> 00:24:15,914
அவரால் தானாகவே அதை செய்ய முடியும்,

468
00:24:15,998 --> 00:24:20,544
ஆனால் அவர் கூடுதலாக ஒபிசான்யாவிடம்
பந்தை பாஸ் பண்ணிவிட்டார்!

469
00:24:23,839 --> 00:24:26,341
அதை அவர் கோலாக்கி விட்டார்!

470
00:24:27,634 --> 00:24:28,886
ஓ, கடவுளே!

471
00:24:30,220 --> 00:24:34,933
கூடுதல் நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே
இருக்கும்போது ரிச்மண்ட் முன்னிலை பெற்றனர்.

472
00:24:41,773 --> 00:24:45,944
ரிச்மண்ட்டின் மூன்றாவது கோலுக்கு உதவியவர்,
எண் 24, சாம் ஒபிசான்யா.

473
00:24:55,037 --> 00:24:56,955
ஆமாம்!

474
00:24:57,039 --> 00:24:59,917
-மன்னிச்சிடுங்க! ரொம்ப சந்தோஷமாக இருக்கு!
-இல்லை, இந்த எழுச்சி பிடிச்சிருக்கு!

475
00:25:00,000 --> 00:25:02,711
-இதோ, கோச். இவனை என்னிடமிருந்து தூக்குங்க.
-ஆம்!

476
00:25:06,006 --> 00:25:07,007
நீங்கள் இப்படிதான் செய்யணும்!

477
00:25:07,090 --> 00:25:11,261
நன்றாக செய்தீர்கள், நண்பர்களே!
செய்ய நிறைய இருக்கிறது! ஆம்! ஆம்! ஆம்!

478
00:25:11,970 --> 00:25:13,263
நீங்கள் செய்ததற்கு உங்களுக்கு
தைரியம் வேண்டும்.

479
00:25:14,806 --> 00:25:17,476
நம்மிடம் இருப்பதெல்லாம்
பந்துகள் தான், ராய்.

480
00:25:17,559 --> 00:25:20,562
சரி! ஆம்!
அப்படித்தான். விளையாட நிறைய இருக்கு.

481
00:25:21,522 --> 00:25:22,731
எப்படி இருந்தது, பயிற்சியாளரே?

482
00:25:23,690 --> 00:25:24,775
அதை கேட்டீர்களா, பயிற்சியாளரே?

483
00:25:25,442 --> 00:25:27,444
முட்டாள்! முட்டாள்!

484
00:25:27,528 --> 00:25:29,238
வந்து, அதே சொல், இல்லையா?

485
00:25:30,239 --> 00:25:31,740
ஆம், ஆனால், வித்தியாசமாக.

486
00:25:33,075 --> 00:25:37,287
ஆமாம், 80களில் மோசமானது என்றால்
ரொம்ப நல்லது என்பது போல இருக்கு, இல்லையா?

487
00:25:38,038 --> 00:25:39,414
அப்போது ஜனாதிபதி யார்?

488
00:25:40,082 --> 00:25:43,293
-ரொனால்ட் ரீகன்.
-"ரொனால்ட் ரீகனா? நடிகரா?"

489
00:25:43,377 --> 00:25:48,173
ஓ, கடவுளே. நீங்கள் டாக் பிரவுன் போல பேசும்
போது பிடிச்சிருக்கு. அதே போல செய்தீர்கள்.

490
00:25:55,472 --> 00:25:58,809
அப்பா! அப்பா!

491
00:25:58,892 --> 00:26:00,644
ஹேய்! அதோ அவன் வந்துவிட்டான்!

492
00:26:02,521 --> 00:26:04,314
அது எப்படி இருந்தது?
நாம் ஒரு கேம் வென்றிவிட்டோம்.

493
00:26:04,398 --> 00:26:05,399
-அப்பா?
-என்ன?

494
00:26:05,482 --> 00:26:06,817
முட்டாள் என்றால் என்ன?

495
00:26:07,776 --> 00:26:09,653
வந்து, செல்லமே. அது...

496
00:26:10,404 --> 00:26:13,824
தன்னுடைய நினைவுகளில் தனியாக
இருக்க விரும்பும் ஒருவர், புரிந்ததா?

497
00:26:13,907 --> 00:26:15,492
இவை அனைத்தையும்
உனக்கு நன்றாக காட்டுகிறேன். தயாரா?

498
00:26:16,368 --> 00:26:18,120
மேலே ஏறு, செல்லமே. அதைப் பார்.

499
00:26:18,203 --> 00:26:21,874
மக்களிடம் கையசை. அவ்வளவுதான். அவர்களுக்கு
காட்டு. அவர்கள் பார்க்கட்டும், சரியா?

500
00:26:24,501 --> 00:26:26,253
அய்யோ.

501
00:26:29,381 --> 00:26:30,382
ஆமாம்.

502
00:26:31,800 --> 00:26:32,801
ஒரு தொடுதல்.

503
00:26:36,638 --> 00:26:40,184
நாம் பள்ளியில் முதன்முதலாக சந்தித்ததைப்
பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.

504
00:26:42,644 --> 00:26:46,440
அந்த பெரிய பழைய வாகன நிறுத்துமிடத்தில்,
ஒரே நேரத்தில் நாமிருவர் மட்டுமே இருந்ததை.

505
00:26:48,942 --> 00:26:50,652
தற்செயலாக நடந்தது.

506
00:26:50,736 --> 00:26:53,614
ஏதோ ஒன்றின் தொடக்கமாக அது இருக்கப் போகிறது
என்பது அப்போது நமக்கு சுத்தமாக தெரியாது.

507
00:26:55,616 --> 00:26:57,034
-ஹேய்.
-நான் உன்னை பயமுறுத்திவிட்டேனா?

508
00:26:57,117 --> 00:27:00,245
இரவில், வாகன நிறுத்துமிடத்தில் ஒளிந்து
கொண்டு ஒரு பெண்ணை பயமுறுத்தியுள்ளாய்.

509
00:27:01,622 --> 00:27:03,665
ஆம், ராய், நன்றாக செய்தீர்கள்.

510
00:27:03,749 --> 00:27:06,793
மன்னிக்கவும். நான் ஒரு முட்டாள்.
நேற்றும் நான் முட்டாளாக இருந்தேன், எனவே...

511
00:27:07,920 --> 00:27:08,921
பரவாயில்லை.

512
00:27:14,426 --> 00:27:15,427
இரவு வணக்கம், கீலி.

513
00:27:17,638 --> 00:27:18,639
இரவு வணக்கம், ராய்.

514
00:27:20,057 --> 00:27:22,518
நாம் கடந்து வந்த அனைத்தையும்
நான் திரும்பிப் பார்க்கிறேன்,

515
00:27:23,310 --> 00:27:25,229
நான் எந்த ஒரு விஷயத்திலும் மாறவில்லை.

516
00:27:27,272 --> 00:27:28,273
இப்போதும்.

517
00:27:30,317 --> 00:27:31,527
நீங்க என்ன சொல்றீங்க?

518
00:27:32,611 --> 00:27:35,781
மிஷல், என்னால் ஏதாவது
செய்ய முடியும்... என்று இருந்தால்

519
00:27:35,864 --> 00:27:39,493
அல்லது நான் சொல்லக்கூடிய ஏதாவது என்னுடன்
இருப்பதில் உன்னை மகிழ்ச்சியடைய...

520
00:27:40,577 --> 00:27:42,079
செய்யும் என்றால், நான் அதை செய்வேன்.

521
00:27:42,663 --> 00:27:44,373
நான் அதை கண்ணிமைக்கும் நொடியில் செய்வேன்.

522
00:27:44,456 --> 00:27:46,625
ஆனால் அது எதுவுமே
என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை.

523
00:27:48,919 --> 00:27:50,671
இனி நீ முயற்சிக்க வேண்டியதில்லை.

524
00:27:52,172 --> 00:27:53,173
பரவாயில்லை.

525
00:27:54,800 --> 00:27:57,803
நான் நன்றாக இருப்பேன். சரியா?

526
00:28:05,561 --> 00:28:07,354
சரி, வேகமாக நட. இதோ.

527
00:28:07,437 --> 00:28:08,438
ஐயோ.

528
00:28:10,274 --> 00:28:13,360
என் வாழ்வில் ஒருபோதும் எதையும் கைவிட
மாட்டேனென எனக்கு நானே உறுதியளித்துள்ளேன்.

529
00:28:14,069 --> 00:28:15,487
நீங்கள் எதையும் கைவிடவில்லை, டெட்.

530
00:28:17,698 --> 00:28:19,366
ஆனால் நான் பிரிவதை அனுமதிக்கிறீர்கள்.

531
00:28:23,912 --> 00:28:24,913
ஆம்.

532
00:28:25,497 --> 00:28:26,498
வா.

533
00:28:31,044 --> 00:28:32,045
நீங்க தயாரா?

534
00:28:32,129 --> 00:28:33,505
-ஆம்
-ஆம். நன்றி.

535
00:28:33,589 --> 00:28:35,799
-பரவாயில்லை.
-உன்னைப் பாராட்டுகிறேன், ஷானன். நன்றி.

536
00:28:35,883 --> 00:28:39,553
ஹேய், செல்லமே. சீசன் முடிந்த கணமே
நான் உன்னைப் பார்க்க வருகிறேன், சரியா?

537
00:28:39,636 --> 00:28:41,346
நாம் ஒவ்வொரு நாளும் பேசுவோமா?

538
00:28:41,430 --> 00:28:43,932
நிச்சயமாக. எப்போதும் போலவே, பெரியவனே.
அது உனக்குத் தெரியும். சரியா?

539
00:28:44,016 --> 00:28:46,310
சரி, வந்து கட்டி பிடி. ஆம்.

540
00:28:49,563 --> 00:28:51,607
இப்போது சரி, சரி.

541
00:28:52,274 --> 00:28:55,402
ஹேய், நான் உன்னை நேசிக்கிறேன்.
போய் ஏறு.

542
00:29:59,883 --> 00:30:02,886
ஓய், முட்டாளே.
இன்றிரவு ஆட்டம் சிறப்பாக இருந்தது.

543
00:30:04,388 --> 00:30:05,722
நன்றி, சார்.

544
00:30:05,806 --> 00:30:08,433
எங்களை நன்றாக கவனியுங்கள்.
ஒருவேளை நாங்கள் இந்த விஷயத்தை மாற்றுவோம்.

545
00:30:56,523 --> 00:30:58,525
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

