1
00:00:28,445 --> 00:00:31,406
மேற்கு லண்டனின் மிகச் சிறந்தது

2
00:00:31,490 --> 00:00:32,658
ஓ, கடவுளே.

3
00:00:34,243 --> 00:00:36,411
காலை வணக்கம், நண்பர்களே.
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

4
00:00:37,162 --> 00:00:40,541
சிறிது யோசிக்க வேண்டி இருந்ததால்
வேலைக்கு, நடந்தே வரலாமென முடிவு செய்தேன்.

5
00:00:40,624 --> 00:00:43,669
நமக்கு ரொம்பவும் பரிச்சயமாகாத நகரத்தில்
நடந்து கொண்டே யோசிப்பது

6
00:00:43,752 --> 00:00:45,629
சிறிது கடினமாக இருக்கும் என்று புரிந்தது.

7
00:00:45,712 --> 00:00:48,048
வழி மாறி போய்விட்டேன், ஆனாலும்,
சரியான வழிக்கு வந்தேன்,

8
00:00:48,131 --> 00:00:49,550
பிறகு மறுபடியும் வழிமாறி
போய்விட்டேன் ஆனால்...

9
00:00:49,633 --> 00:00:53,262
ஆனால், எப்படியோ, இங்கே வந்துவிட்டேன்.
இங்கே பியர்ட் மற்றும் நேட் இருப்பது நல்லது

10
00:00:53,345 --> 00:00:55,305
ஏன்னா இந்த உலகம் சோகமான,
தனிமையான இடமாக இருக்கலாம், ஆனா...

11
00:00:55,389 --> 00:00:57,599
ஹேய், வாங்க, நாம இப்போது,
வேலை செய்யத் தொடங்கலாமா?

12
00:00:57,683 --> 00:00:58,767
மிஷல்.

13
00:00:59,434 --> 00:01:00,269
இது பரவாயில்லை.

14
00:01:00,352 --> 00:01:03,063
பார், பரவாயில்லை,
ஏனென்றால் நான் இப்போது என் மனதை,

15
00:01:03,146 --> 00:01:05,858
வேலையில், மூழ்கடிக்க வேண்டிய நேரம்.

16
00:01:05,941 --> 00:01:07,317
எனவே... எனக்கு விருப்பமில்லை...

17
00:01:07,401 --> 00:01:09,570
"மூழ்கடிக்க" என்ற வார்த்தை பிடிக்காது,
நான் சொல்வது என்ன என உங்களுக்கு புரிகிறதா?

18
00:01:09,653 --> 00:01:11,780
அது கேட்பதற்கே மோசமான வார்த்தையாக
இருக்கிறது, இல்லையா?

19
00:01:11,864 --> 00:01:13,407
நான் வேறு என்ன வார்த்தை சொல்லலாம்?

20
00:01:13,490 --> 00:01:17,703
அனைவருக்கும் நல்ல குளியல் பிடிக்குமல்லவா?
இதமான குளியல் பிடிக்கும், அப்படித்தானே?

21
00:01:17,786 --> 00:01:20,706
எனவே, "நான் பணியிடத்தில் குளிக்கப்
போகிறேன்" என்று சொல்வேன்.

22
00:01:20,789 --> 00:01:22,332
அது எப்படி இருக்கு? அது நல்லா இருக்கு.

23
00:01:22,416 --> 00:01:24,168
நேட், உனக்கு பிடித்த
வாசனையான குளியல் சோப்பு எது, நண்பா?

24
00:01:24,251 --> 00:01:27,296
இல்லை, எனக்கு குளிக்கவே பிடிக்காது,
ஏனென்றால் என் தோல் ரொம்ப சுருங்கிவிடும்,

25
00:01:27,379 --> 00:01:29,089
அப்புறம் வயதாவதைப் பற்றி
எனக்கு ரொம்ப கவலை.

26
00:01:29,173 --> 00:01:32,092
சரி, புரிகிறது. நீங்க எப்படி, கோச்?
எதாவது குளியல் சோப்பு பிடிக்குமா?

27
00:01:32,176 --> 00:01:33,260
க்ரெம் ப்ருலெ தேன்

28
00:01:33,343 --> 00:01:35,554
தேனா? அது ஒரு மூலப்பொருளா அல்லது
நீ என்னை அப்படி கூப்பிட்டாயா?

29
00:01:35,637 --> 00:01:36,805
-மூலப்பொருள்.
-அப்படியா.

30
00:01:36,889 --> 00:01:39,600
அது அன்பாவாக இருக்கும் என நம்பினேன்.
ஆனால் அது ஒரு வேடிக்கையான யோசனை.

31
00:01:39,683 --> 00:01:41,935
நாம் ஒருவரை ஒருவர் செல்ல பெயர்கள்
வைத்து கூப்பிடலாம்.

32
00:01:42,019 --> 00:01:44,104
சரியா?
"அன்பே" அல்லது "செல்லம்", இப்படி ஏதாவது?

33
00:01:44,188 --> 00:01:46,064
அது நன்றாக இருக்கும், இல்லையா?
நீ என்ன நினைக்கிறாய், கோச்?

34
00:01:47,024 --> 00:01:48,317
நேட், எனக்கு ஒரு உதவி செய்வாயா?

35
00:01:48,400 --> 00:01:50,569
பயிற்சியாளர் இன்று பயிற்சிக்கு
திட்டமிடுவதில் உதவுவாயா?

36
00:01:50,652 --> 00:01:52,696
-கண்டிப்பாக. சரி.
-சரி. நன்றி, அன்பே.

37
00:01:52,779 --> 00:01:54,781
சரி, உங்களை
சிறிது நேரத்தில் சந்திக்கிறேன்.

38
00:01:56,700 --> 00:01:58,952
-அவர் நன்றாக இருக்கிறாரா?
-இல்லை.

39
00:02:21,517 --> 00:02:22,518
♪ நாங்கள் தான் ரிச்மண்ட்

40
00:02:22,601 --> 00:02:24,603
சரி. துவங்கலாமா?
சாரா, நீங்க ஏன் முதலில் கேட்கக்கூடாது?

41
00:02:24,686 --> 00:02:28,190
ஆக, பயிற்சியாளர் லாஸ்ஸோ, நீங்கள் இறுதியில்
உங்கள் முதல் போட்டியை ஜெயித்துவிட்டீர்கள்.

42
00:02:28,273 --> 00:02:29,358
அதை எப்படி உணர்கிறீர்கள்?

43
00:02:29,441 --> 00:02:32,152
வந்து, சாரா, நமது எதிரணியை விட அதிகமாக
கோல் எடுத்தும் நாம் தோல்வி அடையலாம்.

44
00:02:32,236 --> 00:02:34,238
அதே மாதிரி அவர்களை விட குறைவான
கோல் எடுத்தும் நாம் வெற்றி பெறலாம்.

45
00:02:34,321 --> 00:02:37,032
ஆனால் போன வாரம் நாங்கள் கண்டிப்பாக வெற்றி
பெற்றோம், அது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

46
00:02:37,699 --> 00:02:39,535
சரி, அடுத்த கேள்வி.

47
00:02:42,287 --> 00:02:44,164
ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட்.

48
00:02:45,040 --> 00:02:48,210
அடுத்த போட்டியில் ஜேமி டார்ட் அணியில்
விளையாடுவான் என கருதலாமா?

49
00:02:48,293 --> 00:02:50,879
வந்து, கருதலாமா என்ற வார்த்தைக்கு உள்ள
மற்றொரு அர்த்தம் தெரியுமா, ட்ரென்ட்?

50
00:02:50,963 --> 00:02:53,841
உன்னையும் என்னையும்
அது முட்டாளாக்கிவிடும். சரியா?

51
00:02:55,217 --> 00:02:56,885
இந்த வார்த்தைகளே உங்கள் ஆங்கிலமும்

52
00:02:56,969 --> 00:03:00,430
எங்கள் ஆங்கிலமும் மாறுபட்டு இருப்பதை
சொல்லும் உதாரணம், இல்லையா?

53
00:03:02,349 --> 00:03:05,185
ஆனால் உண்மையிலேயே உங்கள் சிறந்த
ஆட்டக்காரரை விளையாட விடப்போவதில்லையா?

54
00:03:05,269 --> 00:03:08,814
வந்து, அது ஜேமியை பொறுத்தது. அவனிடமிருந்து
எங்களுக்கு என்ன தேவை என அவனுக்கு தெரியும்

55
00:03:08,897 --> 00:03:11,024
தொடர்ந்து கேளுங்கள், சரியா?
கிப், உங்கள் கேள்வியை கேளுங்கள்.

56
00:03:11,108 --> 00:03:14,361
-டெட். உங்களைத் தான் பார்க்க நினைத்தேன்.
-ஹேய், தலைவரே.

57
00:03:14,444 --> 00:03:17,364
ஜேமி டார்டை விளையாடாமல் வைக்கும்
உங்கள் முடிவு ரொம்பவும் துணிச்சலானது.

58
00:03:17,447 --> 00:03:19,491
-நன்றி.
-அதாவது, ஒரு சிறந்த முடிவு.

59
00:03:19,575 --> 00:03:21,577
நாம் பணி இடங்களில் இப்படி பேசக்கூடாது
என நினைக்கிறேன்.

60
00:03:21,660 --> 00:03:22,953
இப்போ ஒரே ஒரு சிக்கல் தான் இருக்கு.

61
00:03:23,036 --> 00:03:24,413
மான்செஸ்டர் சிட்டி அணி அழைத்து,

62
00:03:24,496 --> 00:03:27,082
ஜேமியை அணியிலிருந்து
எடுப்பது பற்றிப் பேசினார்கள்.

63
00:03:27,457 --> 00:03:29,585
-அவன் வீட்டை எடுத்துக்கொள்ள போகிறார்களா?
-இல்லை.

64
00:03:29,668 --> 00:03:32,963
டெட், ஜேமியின் ஒப்பந்தம்
மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தம்,

65
00:03:33,046 --> 00:03:35,299
இந்த சீசனுக்காக அவனை ரிச்மண்டிற்காக
விளையாடுவதற்கு அனுப்பி வைத்தார்கள்.

66
00:03:35,382 --> 00:03:37,134
சரி. எனக்குப் புரிந்தது.

67
00:03:37,217 --> 00:03:39,469
நீங்க அவனை விளையாட அனுமதிக்காவிட்டால்
அவர்கள் அவனை திருப்பி கேட்கிறார்கள்.

68
00:03:39,553 --> 00:03:42,139
என் திட்டம் அதுவல்ல. இல்லை,
வேலை செய்ய வேண்டும் என்பதே என் திட்டம்.

69
00:03:42,222 --> 00:03:45,475
ஆனால் நன்றாக யோசிக்கப்பட்ட திட்டங்களைப்
பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கு, தெரியுமா?

70
00:03:45,559 --> 00:03:48,395
"திட்டம்" என்று பல முறைகள் சொல்லிவிட்டேன்.
அதன் அர்த்தமே போய்விட்டது.

71
00:03:48,478 --> 00:03:51,607
திட்டம். திட்டம். திட்டம். பரவாயில்லை.

72
00:03:51,690 --> 00:03:54,443
ஹேய், நீங்க மேன் சிட்டியிடம் எனக்கு
ஒரு திட்டம் இருக்கு என சொல்லுங்க.

73
00:03:54,526 --> 00:03:57,487
-திட்டம். திட்டம். திட்டம்?
-திட்டம்.

74
00:03:57,571 --> 00:03:58,989
-திட்டம்?
-திட்டம் இல்லை.

75
00:04:00,032 --> 00:04:02,034
-திட்டம்.
-"ஃப்ளாண்" போல தான். திட்டம்.

76
00:04:02,117 --> 00:04:03,702
ஃப்ளாண்? அந்த இனிப்பா?

77
00:04:03,785 --> 00:04:04,995
ஆமாம், "ஃப்ளாண்" போல சொல்லணும்.

78
00:04:05,078 --> 00:04:07,039
இல்லை, எனக்கு ஃப்ளாண் பிடிக்காது.

79
00:04:07,122 --> 00:04:09,791
திட்டம். திட்டம்.

80
00:04:10,209 --> 00:04:12,127
திட்டம். திட்டம்?

81
00:04:12,544 --> 00:04:14,463
-வார்த்தை சத்தமாகிவிட்டதா?
-அது என்ன சொல்?

82
00:04:14,546 --> 00:04:16,130
-வார்த்தை ஜாலம்.
-ஆமாம்.

83
00:04:16,214 --> 00:04:18,216
சரி. சரி.

84
00:04:18,841 --> 00:04:20,719
அந்த மெக்சிகோவில் இருந்து வந்த
புது வீரன் இங்கே வந்துவிட்டானா?

85
00:04:20,802 --> 00:04:22,846
-முட்டி காயத்திற்கு சிகிச்சை பெறுகிறான்.
-சரி, நல்லது.

86
00:04:23,180 --> 00:04:25,140
-அவன் பெயர் என்ன என்று சொன்னாய்?
-டானி ரோஹாஸ்.

87
00:04:25,224 --> 00:04:27,434
ஆமாம். நல்ல பெயர். சரி.

88
00:04:27,518 --> 00:04:28,644
ஜேமி எப்படி இருக்கிறான்?

89
00:04:30,395 --> 00:04:31,396
என்ன?

90
00:04:31,480 --> 00:04:34,775
தனக்கு அடிபட்டுவிட்டது அதனால்
இன்று பயிற்சி செய்ய முடியாது என்கிறான்.

91
00:04:38,445 --> 00:04:39,446
ஓ, கடவுளே.

92
00:04:41,990 --> 00:04:43,200
ஹேய், ஜேமி.

93
00:04:43,617 --> 00:04:46,078
இன்று உன்னால் எங்களோடு பயிற்சி செய்ய
முடியாது என கேள்விப்பட்டேன். அது உண்மையா?

94
00:04:46,161 --> 00:04:47,538
ஆமாம்.

95
00:04:47,621 --> 00:04:48,622
ஏன் அப்படி?

96
00:04:49,164 --> 00:04:50,457
ஏனென்றால் எனக்கு அடிப்பட்டிருக்கு.

97
00:04:52,167 --> 00:04:53,669
அதை கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

98
00:04:55,170 --> 00:04:57,756
இது வெறும் பயிற்சி தான்.
வருத்தப்படாதீர்கள், டெட்.

99
00:05:07,307 --> 00:05:08,559
ஹேய்.

100
00:05:08,642 --> 00:05:10,310
உன்னால் பயிற்சி செய்ய முடியாது என்றால்,
பயில முடியாது.

101
00:05:10,394 --> 00:05:13,188
உனக்கு அடிப்பட்டிருந்தால்,
அடிப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான்.

102
00:05:15,065 --> 00:05:17,776
ஆனால் இது அதைப் பற்றியது
கிடையவே... கிடையாது.

103
00:05:20,737 --> 00:05:23,574
நீ இங்கே உட்கார்ந்திருக்கிறாய். நீ மற்றொரு
அணியில் இருந்து கடன் வாங்கப்பட்ட வீரன்.

104
00:05:23,657 --> 00:05:26,535
ஆனால் நாமோ இங்கே, நீ பயிற்சி
எடுக்க முடியாததைப் பற்றி பேசுகிறோம்.

105
00:05:28,787 --> 00:05:30,706
நாம் பயிற்சியைப் பற்றி பேசுகிறோம்.

106
00:05:30,789 --> 00:05:32,833
உனக்கு புரிகிறதா? பயிற்சி.

107
00:05:33,500 --> 00:05:35,377
விளையாட்டு பற்றி அல்ல.

108
00:05:35,460 --> 00:05:39,047
விளையாட்டு பற்றி அல்ல. நீ உயிரைக் கொடுத்து
விளையாடும் விளையாட்டு பற்றி அல்ல, சரியா?

109
00:05:39,131 --> 00:05:40,674
ஒவ்வொரு வாரக்கடைசியும் உன் கடைசி
முறை என்று நினை, சரியா?

110
00:05:40,757 --> 00:05:43,051
இல்லை, நாம் பயிற்சியைப்பற்றி
பேசுகிறோம், நண்பா.

111
00:05:43,135 --> 00:05:45,804
பயிற்சி! நீ அங்கே வெளியே இருக்கணும்.

112
00:05:45,888 --> 00:05:47,347
நீ ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.

113
00:05:47,431 --> 00:05:49,391
நீ இவற்றை எல்லாம் புறம் தள்ளுகிறாய்.

114
00:05:49,474 --> 00:05:52,895
எனவே நாம் இப்போது பேசுகிறோம், ஜேமி.
பயிற்சியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

115
00:05:54,646 --> 00:05:55,606
விளையாட்டைப் பற்றி அல்ல.

116
00:05:55,689 --> 00:05:58,901
உன் பயிற்சியை பற்றி, உன் அணியினரோடு
செய்ய வேண்டிய பயிற்சி பற்றி பேசுகிறோம்.

117
00:06:00,152 --> 00:06:02,613
அதுதான் நம் கட்டுப்பாட்டில், நாம்
ஒன்றாக விளையாடுவதற்கு இருக்கும் ஒரே இடம்.

118
00:06:02,696 --> 00:06:04,907
மற்ற நேரங்களில் நாம் பதினோரு பேர்கள்
அந்த பதினோரு பேர்களை எதிர்த்து விளையாடுவது

119
00:06:04,990 --> 00:06:07,618
நான் பயிற்சியைப் பற்றி பேசுகிறேன், நண்பா!

120
00:06:07,993 --> 00:06:12,247
நான் பயிற்சியைப்பற்றி பேசுகிறேன்! உன்னால்
வர முடியாது ஏன்னா உனக்கு அடிப்பட்டிருக்கு.

121
00:06:13,332 --> 00:06:14,708
அப்படித்தானே?

122
00:06:15,918 --> 00:06:17,169
எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

123
00:06:18,378 --> 00:06:19,838
என்ன தெரியுமா. எனக்கு ஒரு உதவி செய்.

124
00:06:19,922 --> 00:06:21,215
நீ அங்கே வெளியே போகும் போது,

125
00:06:21,298 --> 00:06:24,760
அந்த கோன்களை வைத்தால் மற்ற வீரர்கள்
அதன் ஊடே ஓடி பயிற்சி செய்வார்கள்.

126
00:06:25,260 --> 00:06:28,180
-நான் கோன்களை வைக்க வேண்டுமா?
-நான் அதைப் பாராட்டுகிறேன்.

127
00:06:30,015 --> 00:06:32,392
-காலின், போய் அந்த கோன்களை வை.
-அவர் உன்னை வைக்க சொன்னார், நண்பா.

128
00:06:32,476 --> 00:06:33,852
நான் உன்னிடமா பேசினேன், பெரியவனே?

129
00:06:33,936 --> 00:06:35,896
காலின், அந்த கோன்களை வைத்து விடு.

130
00:06:35,979 --> 00:06:38,732
ஐசக் சரியாக சொல்கிறான். அவர் உன்னை வைக்க
சொன்னார். நீ தான் இரண்டாவது அணியினர்.

131
00:06:46,448 --> 00:06:47,991
அது வலிக்கப் போகிறது.

132
00:06:50,827 --> 00:06:52,120
வாழ்த்துக்கள்.

133
00:06:56,375 --> 00:06:59,336
ஒரு முறையாவது, ஜேமியை அப்படி அடக்குவதைப்
பார்ப்பதற்கு நல்லா இருக்கு.

134
00:06:59,419 --> 00:07:01,255
-பரபரப்பாக இருக்கு, இல்லையா?
-இல்லை, இல்லை.

135
00:07:01,338 --> 00:07:02,840
இது ஒன்றும் மோதிக் கொள்ளும்
இடம் இல்லை, சரியா?

136
00:07:02,923 --> 00:07:04,967
-மோதிக்கொள்ள வேண்டிய இடம் இல்லை.
-சரி.

137
00:07:05,050 --> 00:07:07,094
அந்த புது பையன், அவன் பெயர்... டானி என்ன?

138
00:07:07,177 --> 00:07:09,346
-ரோஹாஸ்.
-ரோஹாஸ், ஆமாம். அவன் நன்றாக விளையாடுவானா?

139
00:07:09,429 --> 00:07:11,849
கோடைக்கால மாற்றாக இங்கே வந்தான்,
உடனேயே அடிப்பட்டுவிட்டது,

140
00:07:11,932 --> 00:07:14,017
-எனவே அவன் விளையாடி யாருமே பார்த்ததில்லை.
-பரவாயில்லை.

141
00:07:14,101 --> 00:07:16,645
அதாவது, வேறு ஒருவர் தன் இடத்தில்
விளையாடுவதை ஜேமி பார்த்தால்,

142
00:07:16,728 --> 00:07:18,939
அது... வந்து,
அவன் ஆன்மாவையே காயப்படுத்திவிடும்.

143
00:07:21,275 --> 00:07:23,694
மன்னிக்கவும்.
நான் அதை நினைத்து சந்தோஷப்படக் கூடாது.

144
00:07:24,570 --> 00:07:27,155
சரி, நாம் டானி நன்றாக பழகுவதற்கு
உதவி செய்வோம், சரியா?

145
00:07:27,239 --> 00:07:29,491
முதல் முறையாக இந்த தொடரில் விளையாடுவது
பெரும் பதட்டமாக இருக்கும்.

146
00:07:31,618 --> 00:07:34,705
டானி ரோஹாஸ், ரோஹாஸ்! டானி ரோஹாஸ்!

147
00:07:34,788 --> 00:07:40,085
ரோஹாஸ், டானி ரோஹாஸ்!
ரோஹாஸ், ரோஹாஸ், ரோஹாஸ்!

148
00:07:40,169 --> 00:07:42,504
ஹே! ஹலோ, பயிற்சியாளர்களே.

149
00:07:42,588 --> 00:07:45,549
-இந்த வாய்ப்புக்கு நன்றி.
-ஆமாம். நீ ஒரு உற்சாகமான வீரன், டானி.

150
00:07:45,632 --> 00:07:47,801
அங்கே போய்,
ஸ்ட்ரைக்கர் இடத்தை பிடி, சரியா?

151
00:07:47,885 --> 00:07:51,763
ஆமாம் எப்படி குவடாலாஹாராவில் செய்தது போல,
நீங்கள் சொல்லுங்க, நான் செய்கிறேன், கோச்.

152
00:07:52,222 --> 00:07:53,557
கால்பந்து தான் வாழ்க்கை!

153
00:07:57,728 --> 00:07:58,937
எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு.

154
00:08:01,982 --> 00:08:03,233
ஜேமிக்கு பிடிக்கலை.

155
00:08:03,317 --> 00:08:06,153
அந்த மாதிரி முட்டாள்களுக்கு மைதானத்தில்
எப்படி விளையாடணும் என தெரியாது.

156
00:08:25,088 --> 00:08:26,340
அருமையான கோல், சாம்!

157
00:08:28,217 --> 00:08:29,635
கால்பந்து தான் வாழ்க்கை!

158
00:08:30,969 --> 00:08:31,970
ஓ, கடவுளே.

159
00:08:37,267 --> 00:08:39,019
நீ அதைப் பார்த்தாயா?

160
00:08:39,102 --> 00:08:42,438
என்னால் சொல்ல முடியவில்லை,
ஆனால் அவன் ஒரு நல்ல வீரனாக தோன்றுகிறது.

161
00:08:43,899 --> 00:08:45,150
மறுபடியும், வாழ்த்துக்கள்.

162
00:08:45,234 --> 00:08:48,612
சில வேலையில்லாத தலைவர்கள் என்னிடம் வந்து
வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள்.

163
00:08:48,695 --> 00:08:51,865
டோனி புலிஸ், ஆலன் கர்பிஷ்லி,
ஹாரி ரெட்னாப் மூன்று முறை அழைத்தார்கள்.

164
00:08:52,783 --> 00:08:56,745
ஹாய். நான் இரவு முழுதும் எல்லா வீரர்களை
பற்றியும் ஆழமாக ஆராய்ச்சி செய்தேன்.

165
00:08:56,828 --> 00:08:59,289
ரிச்சர்ட் ஆட்டுப் பண்ணையில்
வளர்க்கப்பட்டான் என உங்களுக்குத் தெரியுமா?

166
00:08:59,373 --> 00:09:02,209
ஐசக்கின் தாய்க்கு இரண்டு
இடது கைகள் இருக்கின்றன என்று?

167
00:09:02,292 --> 00:09:05,546
நமக்கு நிதி ஆதரவு கொடுப்பதற்காக ஒரு சில
நபர்களிடமும் நான் பேசிப் பார்த்தேன்.

168
00:09:05,629 --> 00:09:07,214
என் வேலையைக்கூட
ஒரு பட்டியல் இட்டு விட்டேன்.

169
00:09:07,297 --> 00:09:10,217
"யுனிகார்ன்" என்ற வார்த்தை எழுதப்படாத
ஒன்று உனக்குக் கிடைக்கவில்லையா?

170
00:09:10,300 --> 00:09:12,469
ஐயோ. இது அற்புதமாக இருக்கு.

171
00:09:14,012 --> 00:09:17,474
மன்னிக்கவும், அந்த வார்த்தையை நான் சொல்லி
இருந்தால் எப்படி நடப்பீங்க என யோசிக்கிறேன்

172
00:09:22,813 --> 00:09:24,815
-அவ்வளவு தான், ஹிக்கின்ஸ்.
-சரி.

173
00:09:25,482 --> 00:09:27,276
நீங்க சிரிப்பதைப் பார்ப்பது எனக்கு
மகிழ்ச்சியாக இருக்கு.

174
00:09:27,359 --> 00:09:29,069
வந்து, நல்லா இருக்கீங்களான்னு
பார்க்கத்தான் வந்தேன்.

175
00:09:29,152 --> 00:09:30,487
நான் ஏன் நல்லா இருக்க மாட்டேன்?

176
00:09:30,571 --> 00:09:32,948
ஓ, கடவுளே.
நீங்க இன்னும் செய்தியை பார்க்கலையா?

177
00:09:34,074 --> 00:09:37,703
உங்களுக்கு ஆறுதல் சொல்ல தான் வந்தேன்,
செய்தியை சொல்வதற்கு அல்ல.

178
00:09:38,537 --> 00:09:40,372
அப்போ, உங்களுக்கு அந்த அழகான பெண்,
பெக்ஸை நினைவிருக்கா?

179
00:09:40,455 --> 00:09:42,749
அந்த விருந்து நடந்த இரவு ரூபெர்டோடு
வெளியே போனாளே அந்தப் பெண்?

180
00:09:45,085 --> 00:09:47,337
அவள் அழகில்லை என நான் சொல்லணும்
என்று நினைக்கிறீர்களா?

181
00:09:47,421 --> 00:09:48,630
அப்படித்தான் சொல்லேன்.

182
00:09:48,714 --> 00:09:52,050
சரி, நல்லது. அந்த கேவலமான பெண்,
அவள் பெயர் பெக்ஸ்,

183
00:09:52,634 --> 00:09:55,137
-அது உண்மையில் எதன் சுருக்கம் என்றால்...
-ரெபேக்கா.

184
00:09:55,220 --> 00:09:57,806
ஆமாம், உங்களுக்கே தெரிந்தது போல,
அது உங்க பெயர் தான்.

185
00:09:57,890 --> 00:10:00,225
எனவே பத்திரிகையாளர்கள் அவளை...

186
00:10:00,309 --> 00:10:02,436
"புது ரெபேக்கா" என்று அழைக்கிறார்கள்.
கொடுமை.

187
00:10:03,103 --> 00:10:04,104
இல்லை.

188
00:10:04,771 --> 00:10:09,193
பத்திரிகையாளர்கள் அவளை "ரெபேக்கா" என்றும்
உங்களை...

189
00:10:10,360 --> 00:10:11,361
"பழைய ரெபேக்கா" என்றும் அழைக்கிறார்கள்.

190
00:10:11,778 --> 00:10:13,989
-என்ன?
-பழைய ரெபேக்கா.

191
00:10:14,573 --> 00:10:15,991
பழைய ரெபேக்காவா?

192
00:10:19,453 --> 00:10:22,122
அதைப் பற்றி கவலைப்படாதீங்க.
உங்களால் முடியும்.

193
00:10:22,206 --> 00:10:23,624
அப்புறம் நீங்க மனம் உடைந்துப் போனாலோ,

194
00:10:23,707 --> 00:10:26,126
அல்லது ஏதாவது பேச வேண்டும் என்றாலோ,
என்னை அழையுங்க, சரியா?

195
00:10:44,561 --> 00:10:47,314
ஆஹா! அது வேண்டுமென்றே
செய்யப்பட்டது, சரியா?

196
00:10:47,397 --> 00:10:49,024
ஆமாம். இங்கே பார், நண்பா.

197
00:10:49,107 --> 00:10:50,776
நீ நன்றாக விளையாடுகிறாய், சரி,
ஆனால் இங்கே,

198
00:10:50,859 --> 00:10:53,278
நன்றுக்கும் சிறப்பிற்கும்
வித்தியாசம் உண்டு.

199
00:10:58,075 --> 00:10:59,910
1-1. உன் வாய்ப்பு, நண்பா.

200
00:11:13,757 --> 00:11:14,758
அடக் கடவுளே.

201
00:11:14,842 --> 00:11:16,844
சரி, இதைப் பார். இடது கம்பம்.

202
00:11:19,805 --> 00:11:21,265
ஆஹா. அது நன்றாக இருந்தது.

203
00:11:22,224 --> 00:11:23,308
எனக்குத் தெரியும்.

204
00:11:25,811 --> 00:11:26,937
ஆமாம்!

205
00:11:35,737 --> 00:11:36,738
எனக்கு அதிருஷ்டம் கைகொடுத்தது.

206
00:11:36,822 --> 00:11:39,908
-நாளை மறுபடியும் செய்யலாமா, ஜேமி டார்ட்?
-பார்க்கலாம்.

207
00:11:39,992 --> 00:11:41,159
கால்பந்து தான் வாழ்க்கை!

208
00:11:43,453 --> 00:11:46,999
டானி ரோஹாஸ், ரோஹாஸ்! டானி ரோஹாஸ்!

209
00:11:47,082 --> 00:11:49,918
ஓ, கடவுளே. நிச்சயமாக, நண்பா.

210
00:11:50,002 --> 00:11:54,339
ஒரு அதிருஷ்ட மரத்தில் இருந்து கீழே,
எல்லா கிளைகளிலும் பட்டுக்கொண்டே,

211
00:11:54,423 --> 00:11:57,634
பணம் மற்றும் மிட்டாய் நிறைந்த குளத்தில்
விழுந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

212
00:11:57,718 --> 00:12:00,345
அதாவது, ஜேமி சிறந்த வீரன், இல்லையா?

213
00:12:00,429 --> 00:12:03,307
வந்து, அவனது நடத்தை தான் அவனை
யாருக்கும் பிடிக்காமல் செய்துவிடுகிறது.

214
00:12:03,390 --> 00:12:06,059
ஆகையால் ஜேமியை சிறந்தவனாக்க
நாம் மற்றொரு நபரை கொண்டு வந்தோம்

215
00:12:06,143 --> 00:12:08,103
ஆனால் அந்த மற்றொரு நபர் தானே
ஒரு சிறந்த வீரனாகிவிட்டான்.

216
00:12:08,187 --> 00:12:09,605
எனவே நம்மிடம் இப்போது
இரண்டு சிறந்த வீரர்கள் உள்ளனர்.

217
00:12:09,688 --> 00:12:13,609
சிறந்த வீரர்கள். ஓ, கடவுளே.
வார்த்தை ஜாலம். நான் மாட்டிக் கொண்டேன்.

218
00:12:13,692 --> 00:12:15,068
-சிறந்த வீரர்கள்.
-அது தான் வார்த்தை, சரியா?

219
00:12:15,152 --> 00:12:16,695
-சிறந்த வீரர்கள்.
-சிறந்த வீரர்கள்.

220
00:12:16,778 --> 00:12:18,155
-சிறந்த வீரன்.
-சிறந்த வீரர்கள்? ஓ, மாட்டிக்கொண்டேன்.

221
00:12:18,238 --> 00:12:20,532
-பார்த்தாயா? சரி, நன்று.
-சிறந்த வீரர்கள்? சிறந்த வீரர்கள்.

222
00:12:20,616 --> 00:12:22,159
-அது தொற்றுவியாதியாக இருக்காது.
-சிறந்த வீரர்கள்.

223
00:12:22,242 --> 00:12:24,620
-சிறந்த வீரர்கள். சிறந்த வீரர்கள்.
-சிறந்த வீரர்கள்? சிறந்த வீரர்கள்.

224
00:12:24,703 --> 00:12:25,537
-சிறந்த வீரர்கள்.
-சிறந்த வீரர்கள்.

225
00:12:25,621 --> 00:12:27,164
-ஐசிஸ்.
-இல்லை, அது "ஐசிஸ்" என்று கேட்கிறது.

226
00:12:27,247 --> 00:12:28,665
"ஐசிஸ்" என்று தான் சொன்னேன்.
வேண்டுமென்றே சொல்லலை.

227
00:12:28,749 --> 00:12:31,585
சரி, கிஸ் குழுவிலிருந்து முதன்மை கிட்டார்
வாசிப்பவரை ஏன் க்ளோன் செய்யக் கூடாது?

228
00:12:31,668 --> 00:12:33,212
-அப்போது நமக்கு இரண்டு...
-ஃபிரெலேஸ் கிடைப்பார்கள்.

229
00:12:44,306 --> 00:12:46,683
மிக அருமையான வானிலையாக இருக்கிறது,
நீ ஒப்புக்கொள்கிறாயா?

230
00:12:46,767 --> 00:12:48,310
எனக்கு வருடத்தின்
இந்தப் பருவம் பிடிக்கும்.

231
00:12:48,393 --> 00:12:51,104
-புது இலைகளின் வாசனை.
-என்ன நடக்கிறது?

232
00:12:51,188 --> 00:12:53,774
நாம் இருவரும் நடைப்பயிற்சி செய்வது போல
கற்பனை செய்தேன்.

233
00:12:53,857 --> 00:12:54,858
நான் படிக்க முயற்சி செய்கிறேன்.

234
00:12:56,401 --> 00:12:58,779
அண்மைக்காலமாக, நானே, நிறைய
படித்துக் கொண்டு இருக்கிறேன்.

235
00:13:00,072 --> 00:13:01,865
தெற்கு லண்டனின்

236
00:13:01,949 --> 00:13:04,785
ஒரு மோசமான பகுதியில் வளர்ந்த ஒரு சிறுவனின்
அற்புதமான கதையைப் படித்தேன்.

237
00:13:04,868 --> 00:13:09,081
எல்லா இடங்களையும் விட்டுவிட்டு, அவன்
சண்டர்லாண்டில் விளையாட அனுப்பப்பட்டான்.

238
00:13:09,540 --> 00:13:12,835
பின் "வெற்றியாளர், வெற்றியாளர், கால்பந்து
விருந்து"' என்ற தொண்டு நிறுவன பாடலை

239
00:13:12,918 --> 00:13:15,379
தானே வார்த்தைகள் போட்டு
பாடும்படி அவனுக்கு நேர்ந்தது.

240
00:13:15,462 --> 00:13:16,922
அது உலக பசிக்காக செய்யப்பட்டது.

241
00:13:17,422 --> 00:13:19,633
அது தான் மருந்து என்று நான் நினைக்கிறேன்.

242
00:13:21,635 --> 00:13:24,096
இதெல்லாம் எப்படி தெரியும்? இப்போ
என்ன செய்கிறாய்? என்னை பின்தொடருகிறாயா?

243
00:13:24,179 --> 00:13:27,140
இல்லை. நான் எல்லா ஆட்டக்காரர்களின்
விவரங்களையும் ஆராய்கிறேன்.

244
00:13:27,724 --> 00:13:29,852
அணியின் விளம்பர குழுவில்
ரெபேக்கா என்னை சேர்த்தார்கள்.

245
00:13:29,935 --> 00:13:32,980
சரி, என்னை விட்டுவிடு. நான் உங்க விளம்பர
குதிரைகளில் ஒருவன் கிடையாது.

246
00:13:33,772 --> 00:13:36,400
நீ எண் அணிந்து கொண்டு, சுற்றி
நடக்கும் போது மக்கள் கைத்தட்டுகிறார்கள்,

247
00:13:37,150 --> 00:13:39,528
அதனால் நான் அதை பற்றி ஒன்றும்
பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டேன்.

248
00:13:41,071 --> 00:13:42,114
பிறகு பார்க்கலாம், ராய்.

249
00:13:45,492 --> 00:13:48,203
டானி ரோஹாஸ்! டானி, டானி!

250
00:13:55,752 --> 00:13:56,753
சரி.

251
00:13:56,837 --> 00:13:59,590
சரி, சரி, எனக்குப் புரியலை.
என்ன ஆயிற்று, சொல்வாயா?

252
00:13:59,673 --> 00:14:02,384
-எதன் மீதாவது தடுக்கிவிட்டாயா?
-அது தான் விஷயம், பயிற்சியாளரே.

253
00:14:02,467 --> 00:14:05,804
நான் எது மேலும் தடுக்கவில்லை.
ஏதோ ஒன்று தான் என்னை தடுக்கிவிட்டது.

254
00:14:06,388 --> 00:14:07,931
அங்கே இல்லாத ஒன்று.

255
00:14:12,769 --> 00:14:15,480
சரி. சரி, டாக்டர்.
இவனை அழைத்துப் போய் சிகிச்சை செய்யுங்க.

256
00:14:16,607 --> 00:14:18,358
சரி. நீ நன்றாக இருக்கிறாய்.

257
00:14:19,651 --> 00:14:21,612
கடவுளே, இது எல்லாம் என்னுடைய தவறு தான்.

258
00:14:21,695 --> 00:14:23,530
பயிற்சிக்கு முன் டானி சிகிச்சை அறைக்குள்
போவதை பார்த்தேன்,

259
00:14:23,614 --> 00:14:24,865
ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை.

260
00:14:25,782 --> 00:14:27,284
அது ஒரு தவறு.

261
00:14:27,367 --> 00:14:29,036
நீ ஏன் எதுவும் சொல்லலை?

262
00:14:29,119 --> 00:14:30,621
வந்து, நீங்கள் அவனுக்கு
விடை கொடுத்து விட்டீர்கள்

263
00:14:30,704 --> 00:14:32,706
-நாம் இனி அவனை பார்க்க முடியாது.
-ஹேய், போதும்!

264
00:14:32,789 --> 00:14:35,459
எனக்கும் பியர்டுக்கும் புரியாத ஒன்றை
யாராவது ஒருவர் பேசினாலும்,

265
00:14:35,542 --> 00:14:37,669
என் மகன் போல நானும்
கோபப்படப் போகிறேன்.

266
00:14:37,753 --> 00:14:39,963
அவன் என்னை சில கெட்ட
வார்த்தைகள் சொல்லி அழைப்பான்,

267
00:14:40,047 --> 00:14:43,634
வந்து, அது,
"முட்டாள் தலையா" அல்லது "அழுக்கு மூஞ்சி"

268
00:14:43,717 --> 00:14:46,136
அல்லது "அழுக்கு முட்டாள்" அல்லது...
தெரியலை. நான் எதை மறந்தேன்?

269
00:14:46,220 --> 00:14:47,930
-"அழுக்கு விரல்கள்."
-"அழுக்கு விரல்கள்."

270
00:14:48,013 --> 00:14:49,681
வா, இங்கே. சொல்லு.

271
00:14:52,184 --> 00:14:55,020
அந்த சிகிச்சை அறை சபிக்கப்பட்டது.

272
00:14:55,103 --> 00:14:56,855
-என்ன?
-அது உண்மை.

273
00:14:56,939 --> 00:14:59,107
ஏன் இப்போதுதான் முதன் முதலாக
என்னிடம் இதை சொல்கிறீர்கள்?

274
00:14:59,191 --> 00:15:02,110
வந்து, இந்த பில்லி, சூனியம்,
மந்தரம் தந்திரம் போன்றவற்றில்

275
00:15:02,194 --> 00:15:05,280
வளர்ந்தவர்களுக்கு நம்பிக்கை உள்ளது என
ஒத்துக் கொள்வதற்கு தயங்குகிறார்கள்.

276
00:15:05,364 --> 00:15:07,032
-ஹேய், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.
-சரி, நல்லது.

277
00:15:07,115 --> 00:15:08,784
அப்போ, நீயும் நானும்
அந்த அறைக்குள் போய் பார்க்கலாம்.

278
00:15:08,867 --> 00:15:10,410
-வேண்டாம்.
-ஏன் வேண்டாம்?

279
00:15:10,494 --> 00:15:12,162
ஏனென்றால்... வேண்டாம்.

280
00:15:13,038 --> 00:15:15,290
அடச்ச! ஓ, நண்பா.

281
00:15:15,374 --> 00:15:18,168
அதாவது, டானி, ஒரு மணி நேரம்
முன்பு இங்கு இருந்தானா?

282
00:15:18,252 --> 00:15:19,795
மைதானத்தில் ஒரு அழகான,

283
00:15:19,878 --> 00:15:23,298
மகிழ்ச்சியான, உயர் ரக நாயை போல
சுற்றி ஓடிக்கொண்டு இருந்தான்.

284
00:15:23,382 --> 00:15:26,468
பயிற்சியாளரே, அமெரிக்காவில் பௌண்டுகளில்
பல அழகான நாய்கள் இருப்பதால் காரணமின்றி

285
00:15:26,552 --> 00:15:28,220
சில நாய்களை
கொன்று விடுவீர்கள் என்பது உண்மையா?

286
00:15:28,303 --> 00:15:29,847
அது உண்மைதான், சாம்.

287
00:15:29,930 --> 00:15:32,766
ஆனால் அதை நிறைய பாடகிகள்-பாடலாசிரியர்கள்
மாற்ற முயற்சி செய்கின்றனர்.

288
00:15:33,308 --> 00:15:36,937
கேளுங்க, இப்போதே சொல்லி விடுகிறேன்,
நாம் டானி ரோஹாஸை கைவிடப் போவதில்லை.

289
00:15:37,020 --> 00:15:40,065
நண்பர்களே, மற்ற ஆட்டக்காரர்களையும்
அழைத்து வாருங்கள்.

290
00:15:40,691 --> 00:15:43,861
ஏனென்றால் நாம் ஒரு சாபத்தை
முறியடிக்க வேண்டும்.

291
00:15:51,743 --> 00:15:53,120
உங்கள் இருவருக்கும் என்னவாயிற்று?

292
00:15:53,203 --> 00:15:55,038
முழு ரிச்மண்ட் அணியும்
இங்கே இருக்கிறார்கள்.

293
00:15:56,456 --> 00:15:58,041
அடக் கடவுளே.

294
00:16:06,091 --> 00:16:07,801
ஹேய், பயிற்சியாளரே. ஜேமி?

295
00:16:10,262 --> 00:16:11,263
சரி. பரவாயில்லை.

296
00:16:11,346 --> 00:16:12,764
ஹேய், நண்பர்களே.

297
00:16:12,848 --> 00:16:14,516
ஹேய், நண்பர்களே. நண்பர்களே, கேளுங்கள்.

298
00:16:15,434 --> 00:16:16,643
வருகைக்கு நன்றி, தோழர்களே.

299
00:16:16,727 --> 00:16:19,146
பாருங்கள், எனக்கு இதைப் பற்றி
அதிகம் தெரியாது.

300
00:16:19,229 --> 00:16:20,731
எனக்கு சாபங்களைப் பற்றித் தெரியாது.

301
00:16:20,814 --> 00:16:22,858
ஆனால், அவை நிலைத்திருக்காது
என்பது தெரியும்.

302
00:16:22,941 --> 00:16:25,235
சரி, பாஸ்டன் ரெட் சாக்ஸ் குழுவின்
சாபத்தைப் பாருங்க. அது முடிந்துவிட்டது.

303
00:16:25,777 --> 00:16:27,487
சிகாகோ கப்ஸ், முடிந்துவிட்டது.

304
00:16:27,863 --> 00:16:31,241
ஐயோ, திரு. மார்ட்டின் ஸ்கோர்செஸி கூட
இறுதியாக தனது ஆஸ்கார் விருதை வென்றார்.

305
00:16:31,325 --> 00:16:33,535
ஆனால் 'த டிபார்டட்' தான் அவரது சிறந்த
படைப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை

306
00:16:33,619 --> 00:16:34,995
என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வோம்.

307
00:16:35,078 --> 00:16:36,079
-இல்லை.
-ஆம்.

308
00:16:36,163 --> 00:16:39,291
-அது 'கலர் ஆஃப் மணி' படத்திற்காக.
-இல்லை, அது 'குட்ஃபெல்லாஸ்'காக.

309
00:16:39,374 --> 00:16:43,003
-ஒத்துக்கொள்ள முடியாது
-இல்லை. அது 'ஏஜ் ஆஃப் இன்னசென்ஸ்', நண்பா.

310
00:16:43,086 --> 00:16:45,631
-'கேப் ஃபியர்'.
-சைலன்ஸ்!

311
00:16:46,465 --> 00:16:49,009
ஓய், நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்
என்ற செய்தி வெளியே போனால்

312
00:16:49,092 --> 00:16:51,386
இந்த இடத்தில் கூட்டம் நிரம்பி வழியும்.

313
00:16:52,346 --> 00:16:53,639
மற்றும் அதற்கான பதில் 'மீண் ஸ்ட்ரீட்ஸ்'.

314
00:16:53,722 --> 00:16:55,641
-ஆம். அது ஒரு நல்ல படம்.
-ஆம்.

315
00:16:55,724 --> 00:16:58,310
எனக்கு பின்னாலிருக்கும் இந்த சுவரொட்டிதான்
நீங்கள் அனைவரும் இங்கே இருப்பதற்கு காரணம்.

316
00:16:58,393 --> 00:16:59,436
திரு. ஹிக்கின்ஸ்.

317
00:16:59,520 --> 00:17:02,856
"நீங்கள் காற்பந்தின் மிகச் சிறந்த ரசிகனா?"

318
00:17:02,940 --> 00:17:04,733
அது சிறந்த சொற்றொடர்.

319
00:17:04,816 --> 00:17:06,234
அவற்றில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள்

320
00:17:06,318 --> 00:17:11,448
1914ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று
ரிச்மண்டைச் சுற்றி ஒட்டப்பட்டன.

321
00:17:11,531 --> 00:17:13,909
இது தொழில்முறை காற்பந்து வீரராகும்

322
00:17:13,992 --> 00:17:16,662
தேர்வில் கலந்துக்கொள்ள
இளைஞர்களுக்கான ஒரு அழைப்பு.

323
00:17:16,744 --> 00:17:19,455
அந்த நாளில் எங்கள் அரங்கத்திற்கு
வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

324
00:17:20,290 --> 00:17:21,375
ஆனால் அது பொய்.

325
00:17:21,458 --> 00:17:26,797
1914இல், போர் சீற்றம் இருந்தது.
எந்த தேர்வும் இல்லை.

326
00:17:26,880 --> 00:17:32,469
ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்களை
ஊக்குவிக்க தேர்வாளர்கள் காத்திருந்தனர்.

327
00:17:32,553 --> 00:17:35,764
அன்று அவர்கள் 400 பேரை பட்டியலிட்டனர்.

328
00:17:37,099 --> 00:17:38,475
அவர்களில் வெகு சிலரே தப்பி பிழைத்தனர்.

329
00:17:39,685 --> 00:17:41,061
அவர்கள் சேர்ந்த பிறகு...

330
00:17:41,854 --> 00:17:43,772
அவர்கள் உடற் பரிசோதனைக்கு எங்கு
சென்றார்கள் என தெரியுமா?

331
00:17:43,856 --> 00:17:46,191
ஓ, கடவுளே,
இது நமது சிகிச்சை அறை, இல்லையா?

332
00:17:46,275 --> 00:17:47,609
நீ எதைப் பற்றி பேசுகிறாய்?

333
00:17:47,693 --> 00:17:51,989
ஹேய், இல்லை, இல்லை. ஹேய், இல்லை, நண்பா.
இல்லை, அது இல்லை, சரியா?

334
00:17:54,283 --> 00:17:56,702
அதுதான். மன்னிக்கவும். பொய் சொல்லிட்டேன்.
ஏன் சொன்னேன் என்றே தெரியலை.

335
00:17:56,785 --> 00:17:58,912
மன்னிக்கவும். நீங்க அனைவரும்
சற்று அமைதியாக இருக்கணும்.

336
00:17:58,996 --> 00:18:01,707
பொறுங்க. நீங்க, நம்மிடம் 400 பேய்கள்
இருக்கு என்றா சொல்கிறீர்கள்?

337
00:18:01,790 --> 00:18:03,041
அது நிறைய பேய்கள்.

338
00:18:03,125 --> 00:18:04,209
அவற்றை எதிர்த்து
நம்மால் சண்டையிட முடியாது.

339
00:18:04,293 --> 00:18:06,044
நாம் அவற்றிடம் சண்டையிட
வேண்டியதில்லை, ரிச்சர்ட்.

340
00:18:06,128 --> 00:18:08,213
பொறுங்க, அப்போ,
இதை எப்படி சரி செய்வது, பயிற்சியாளரே?

341
00:18:08,297 --> 00:18:11,049
-கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது.
-இல்லை, சாம். நம்மால் முடியாது.

342
00:18:11,800 --> 00:18:13,177
ஆனால் அதை கௌரவப்படுத்தலாம்.

343
00:18:13,844 --> 00:18:16,346
இப்போது, அந்த இளைஞர்கள்,
தங்களது கடைசி தியாகத்தை செய்தார்கள்.

344
00:18:16,430 --> 00:18:19,516
எனவே, நம்முடையது ஏதாவது ஒன்றை நாம்
தியாகம் செய்வது நியாயமானதாக இருக்கும்.

345
00:18:19,600 --> 00:18:22,352
ஒவ்வொருவரும் இன்று இரவு
வீட்டிற்குச் சென்று ஏதாவது

346
00:18:22,436 --> 00:18:24,605
ஒன்றைக் கண்டுபிடியுங்கள்,
அதாவது ஒரு பொருளை.

347
00:18:24,688 --> 00:18:26,857
தனிப்பட்ட ஏதாவது.
நீங்கள் உண்மையில் மதிக்கு ஏதாவது.

348
00:18:27,482 --> 00:18:30,110
இன்று நள்ளிரவில், அதை நீங்கள்
கிளப்ஹவுசிற்கு கொண்டு வாருங்கள்.

349
00:18:30,194 --> 00:18:31,737
இல்லை. அது அபத்தமானது.

350
00:18:33,739 --> 00:18:35,616
நாம் எல்லோரும் இதை செய்யத் தான் வேண்டும்!

351
00:18:36,158 --> 00:18:37,075
சரி.

352
00:18:38,619 --> 00:18:40,120
அதோ உங்கள் கேப்டன் பேசுகிறார்.

353
00:18:40,204 --> 00:18:45,167
ரிச்மண்ட்! ரிச்மண்ட்! ரிச்மண்ட்!

354
00:18:45,709 --> 00:18:46,710
சொன்னேனல்லவா.

355
00:18:46,793 --> 00:18:51,298
ரிச்மண்ட்! ரிச்மண்ட்! ரிச்மண்ட்!

356
00:18:51,381 --> 00:18:54,259
ஹாய், ஜேமி, உனக்கு என்ன வேண்டும்?

357
00:18:55,427 --> 00:18:58,555
அன்பே, இது முக்கியமானது என சொன்னேனல்லவா.
நாம் உன் வீட்டிற்குள் போக முடியாதா?

358
00:18:58,639 --> 00:19:00,432
வாய்ப்பே இல்லை! நம்மால் முடியாது!

359
00:19:00,516 --> 00:19:02,643
நீயும் நானும் நன்றாக செய்த
ஒரே விஷயம் உறவு கொள்வது தான்.

360
00:19:02,726 --> 00:19:05,187
நான் மூன்று கோப்பை மது அருந்தினேன்.
அது பாவ்லோவியன்.

361
00:19:05,896 --> 00:19:08,273
பாவ்லோவியனா? என்ன அது? மதுவா?

362
00:19:09,608 --> 00:19:12,027
அன்பே, நாம் காரினுள்ளாவது போகக்கூடாதா?
குளிராக இருக்கிறது.

363
00:19:12,110 --> 00:19:14,863
முடியாது. இதில் நாம் எத்தனை முறை உறவு
கொண்டுள்ளோம் என உனக்கு நினைவில்லையா?

364
00:19:14,947 --> 00:19:17,032
எனவே காரும் பாவ்லோவியனா?

365
00:19:17,115 --> 00:19:18,116
எனக்கு இப்போது புரிகிறது.

366
00:19:20,035 --> 00:19:21,453
அப்போ, எதற்காக என்னை அழைத்தாய், ஜேமி?

367
00:19:21,828 --> 00:19:24,164
கேவலமான டெட் லாஸ்ஸோ.

368
00:19:24,248 --> 00:19:26,208
அவர் உன்னை தொந்தரவு
செய்யத் தொடங்கிவிட்டார், இல்லையா?

369
00:19:26,291 --> 00:19:28,168
அன்பே, அவர் உண்மையான
பயிற்சியாளர்கூட கிடையாது.

370
00:19:28,252 --> 00:19:29,920
இன்றிரவு நாங்கள் என்ன செய்யணும் தெரியுமா?

371
00:19:30,003 --> 00:19:33,799
வெளிப்படையாக, சில அபத்தமான தியாகம்,
செயல்முறை-கற்பித்தல் அபத்தம்.

372
00:19:34,341 --> 00:19:37,052
-சரி. நீ போகிறாயா?
-இல்லை, நிச்சயமாக போக மாட்டேன்.

373
00:19:38,762 --> 00:19:41,849
-மற்ற அனைவரும் போகிறார்களா?
-ஆம், ஆனால் நான் ஜேமி டார்ட்.

374
00:19:41,932 --> 00:19:43,433
நான் மற்றவர்களைப் போல் கிடையாது.

375
00:19:43,517 --> 00:19:48,146
எல்லோரும் செய்ததை நான் செய்திருந்தால்,
வடக்கு மான்செஸ்டரில் உள்ள ஒரு கவுன்சில்

376
00:19:48,230 --> 00:19:49,898
எஸ்டேட்டிலிருந்து பிரீமியர் லீக்கிற்கு

377
00:19:50,649 --> 00:19:52,109
நான் வந்திருக்க முடியும்
என நினைக்கிறாயா?

378
00:19:52,192 --> 00:19:54,194
இல்லை. நான் அப்படி நினைக்கலை.

379
00:19:55,863 --> 00:19:57,197
நீ ஒரு போராளி, ஜேமி.

380
00:19:58,073 --> 00:19:59,449
மிகவும் கவர்ச்சியானவன்.

381
00:20:00,909 --> 00:20:03,287
ஆனால் ஒருநாள் உனக்கு
உதவ விரும்பும் மக்களுடன்

382
00:20:03,370 --> 00:20:04,830
சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்.

383
00:20:08,625 --> 00:20:10,794
நான் உள்ளே வர வேண்டுமென
நீ விரும்புவது போல் தெரிகிறது.

384
00:20:10,878 --> 00:20:12,254
இது பாவ்லோவியன்.

385
00:20:12,337 --> 00:20:14,423
இனிய இரவாகட்டும், ஜேமி டார்ட்.

386
00:20:15,924 --> 00:20:19,595
ரெபேக்கா! - பழைய ரெபேக்கா

387
00:20:21,722 --> 00:20:22,764
உள்ளே வா.

388
00:20:23,473 --> 00:20:27,769
மன்னிக்கவும், மிஸ். வெல்டன். ஹாய், என்
பெயர் சாம் ஒபிசான்யா. குழுவில் ஒருவன்.

389
00:20:27,853 --> 00:20:30,355
சரி, சாம். நீ யாரென்று எனக்குத் தெரியும்.

390
00:20:31,148 --> 00:20:33,525
உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?

391
00:20:33,609 --> 00:20:36,904
இது நிஜமாகவே வித்தியாசமாக இருக்கு, ஆனால்
இன்றிரவு உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா?

392
00:20:38,030 --> 00:20:40,490
சாம், இது எனக்குப் பெருமையாக இருக்கு,
ஆனால்...

393
00:20:40,574 --> 00:20:43,327
இல்லை, இல்லை, இல்லை.
காதலிப்பதற்கு கிடையாது.

394
00:20:43,410 --> 00:20:47,206
சாபத்திலிருந்து விடுபட. ஏன் தவறாக புரிந்து
கொண்டீர்கள் என புரிந்துக்கொள்ள முடிகிறது.

395
00:20:47,289 --> 00:20:48,498
அதாவது, நீங்க ரொம்ப அன்பானவர்

396
00:20:48,582 --> 00:20:50,834
அதனால் உங்களுக்கு எப்போதும்
காதல் அழைப்புகள் வரும்.

397
00:20:50,918 --> 00:20:51,919
அது நல்லது.

398
00:20:52,002 --> 00:20:56,423
கடவுளே, நான் என் சொந்த சாபத்தை
கையாள்கிறேன். எப்படியிருந்தாலும், நன்றி.

399
00:20:57,257 --> 00:21:00,761
நான் நைஜீரியாவைச் சேர்ந்தவன், எனவே,
சாபங்கள் என்ற பேச்சு வரும்போதெல்லாம்,

400
00:21:00,844 --> 00:21:04,348
"ஆப்பிரிக்கருக்கு இதில் நிச்சயம் சம்பந்தம்
இருக்கிறது" என்று மக்கள் நினைக்கிறார்கள்.

401
00:21:04,431 --> 00:21:06,683
-நிச்சயமாக நீங்கள் அப்படி கிடையாதா?
-இல்லை, இல்லை. நான் அப்படிதான்.

402
00:21:06,767 --> 00:21:09,019
ஆனால் அது ஹாரி பாட்டர் புத்தகத்தை
நேசிப்பதில் இருந்து.

403
00:21:09,561 --> 00:21:11,730
ராணியைவிட ஜே.கே. ரவுலிங்கிடம்
நிறைய பணம் இருக்கு என உங்களுக்கு தெரியுமா?

404
00:21:11,813 --> 00:21:12,981
தெரியும்.

405
00:21:13,065 --> 00:21:16,235
இந்த உலகிற்கு எதையோ கொடுத்து அதன்மூலம்
பணக்காரர்களாவது எனக்கு பிடிச்சிருக்கு.

406
00:21:16,318 --> 00:21:17,903
அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதால் மட்டுமல்லாமல்.

407
00:21:19,154 --> 00:21:21,990
சரி, திருமதி வெல்டன், இன்று இரவு
நடைபெறவுள்ள இந்த சடங்கில் நீங்கள்

408
00:21:22,074 --> 00:21:23,492
கலந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

409
00:21:23,575 --> 00:21:24,868
நான் அப்படி நினைக்கலை.

410
00:21:24,952 --> 00:21:27,412
மன்னிக்கவும், ஆனால் முடியாது என
சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

411
00:21:27,996 --> 00:21:30,624
முழு அணியும் இருந்தால் மட்டுமே அது
வெற்றியடையும் என பயிற்சியாளர் கருதுகிறார்,

412
00:21:30,707 --> 00:21:33,710
மற்றும் இது உங்கள் அணி, மிஸ். வெல்டன்.

413
00:21:35,420 --> 00:21:38,173
எனவே நீங்களும் இருக்கணும். தயவுசெய்து.

414
00:21:40,467 --> 00:21:41,468
குறைந்த பட்சம் யோசித்தாவது பாருங்கள்.

415
00:21:42,803 --> 00:21:43,971
உனக்காக வருகிறேன், சாம்.

416
00:21:44,555 --> 00:21:45,597
நன்றி.

417
00:21:49,643 --> 00:21:50,811
இன்றிரவு பார்க்கலாம்.

418
00:21:50,894 --> 00:21:51,895
போய் வா.

419
00:21:56,608 --> 00:21:58,735
நண்பர்களே, இயற்கையாகவே
நான் ஒரு நம்பிக்கைவாதி.

420
00:21:58,819 --> 00:22:01,321
பேய்கள், ஆவி வழிகாட்டிகள்,
வேற்றுகிரகவாசிகள் ஆகியவற்றிற்கு.

421
00:22:01,405 --> 00:22:02,781
இன்னும், நம் உலகத்திற்கு அப்பாற்பட்டு

422
00:22:02,865 --> 00:22:05,284
எது இருக்கிறது, எது இல்லை என்பதை
என்னால் உண்மையில் சொல்ல முடியாது.

423
00:22:06,702 --> 00:22:08,078
நான் சொல்லக்கூடியது என்னவென்றால்,

424
00:22:08,161 --> 00:22:09,913
கால்வின் மற்றும் ஹோப்ஸின்

425
00:22:09,997 --> 00:22:12,082
புத்திசாலித்தனம் மற்றும்
ஞானத்தைத் தவிர்த்து,

426
00:22:13,333 --> 00:22:14,751
அது என்றென்றும் நீடிக்காது.

427
00:22:20,382 --> 00:22:22,885
-ஹாய், தலைவரே. நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி.
-ஹலோ. ஆமாம்.

428
00:22:27,097 --> 00:22:28,932
ராய், நீ ஏன் எங்களுக்காக
தொடங்கி வைக்கக்கூடாது?

429
00:22:35,063 --> 00:22:38,025
சண்டர்லேண்ட் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும்
போது எனக்கு ஒன்பது வயது,

430
00:22:38,734 --> 00:22:41,361
அதற்கு முன்பு நான் லண்டனை விட்டு
வெளியே வந்ததில்லை.

431
00:22:42,154 --> 00:22:47,951
என் தாத்தா என்னை அழைத்துச் சென்றார்,
ரொம்ப உறைந்து போயிருந்தது, நான் பயந்தேன்.

432
00:22:49,703 --> 00:22:51,705
எனக்கு வெறும் ஒன்பது வயது.
உங்க கருத்தை சொல்லுங்க.

433
00:22:53,707 --> 00:22:57,044
நான் அங்கு சென்றதும், அவர் இந்த பழைய
போர்வையை எனக்குக் கொடுத்தார்.

434
00:22:57,628 --> 00:23:01,632
அது என்னை சூடாக வைத்திருக்கும் என்றும்
வீட்டை நினைவூட்டும் என்றும் அவர் கூறினார்.

435
00:23:02,090 --> 00:23:03,717
அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது.

436
00:23:03,800 --> 00:23:07,804
நான் கிறிஸ்துமஸுக்கு திரும்பி செல்வதற்கு
முன் அவர் இறந்துவிட்டார், எனவே...

437
00:23:09,348 --> 00:23:13,310
அதனால்தான் இந்த போர்வை
எனக்கு மிகவும் பிடித்தமான பொருளாகும்.

438
00:23:13,393 --> 00:23:14,686
நீ "பிளாங்கி" என்று சொன்னாயா?

439
00:23:14,770 --> 00:23:17,523
இல்லை, நான் "போர்வை" என்றேன்.
உரையாடல் முடிந்தது. உன் முறை, சாம்.

440
00:23:19,066 --> 00:23:22,110
இது 1994 நைஜீரிய
உலகக் கோப்பை அணியின் படம்.

441
00:23:23,237 --> 00:23:26,240
அணியில் நான் சேரும் வரை இதை
நான் அகற்ற மாட்டேன் என உறுதியளித்தேன்...

442
00:23:27,282 --> 00:23:28,700
ஆனாலும் அதை செய்ய விரும்புகிறேன்.

443
00:23:31,745 --> 00:23:34,998
இந்த மணல் செயின்ட் பார்ட்ஸில் உள்ள
ஒரு கடற்கரையில் இருந்து எடுத்து வந்தது.

444
00:23:37,292 --> 00:23:39,711
நான் இருந்த முதல் கடற்கரை அதுதான்...

445
00:23:41,255 --> 00:23:43,924
நான் ஒரு சூப்பர் மாடலுடன்
உறவு கொண்ட முதல் கடற்கரை இது.

446
00:23:49,388 --> 00:23:51,640
-அது நடந்தது என்பதால் சந்தோஷப்படு.
-நன்றி.

447
00:23:51,723 --> 00:23:54,309
சாம் மற்றும் ரிச்சர்ட் இருவரும்
முற்றிலும் எதிரெதிர் விஷயங்கள் கொடுத்தனர்.

448
00:23:54,393 --> 00:23:55,394
அதைப் பாராட்டுகிறேன்.

449
00:23:55,769 --> 00:24:00,941
இந்த கூலிங் கிளாசில் நான் கிளைவ் ஓவன்
போல இருப்பதாக பெண் ஒருவர் சொன்னார்.

450
00:24:02,901 --> 00:24:04,236
என்னால் இதை செய்ய முடியும் என நினைக்கலை.

451
00:24:04,319 --> 00:24:06,697
-போடு, நேட். அதை உள்ளே போடு.
-உன்னால் முடியும், நேட். முயற்சி செய்.

452
00:24:06,780 --> 00:24:08,282
-நல்லது.
-நல்ல பையன், நேட்.

453
00:24:08,949 --> 00:24:09,992
நன்றி. நன்றி.

454
00:24:15,038 --> 00:24:16,915
இது இன்றைய நாளிதழா?

455
00:24:16,999 --> 00:24:20,669
வழக்கம் போல அதில் என்னைப்பற்றி ஏதோ இருக்கு
அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முயல்கிறேன்

456
00:24:22,671 --> 00:24:23,881
பிடிக்காதவர்கள் நாசமாய் போகட்டும்.

457
00:24:26,466 --> 00:24:27,467
பார்த்துப் பேசுங்க.

458
00:24:27,551 --> 00:24:31,972
அது என் பூனையின் கழுத்து பட்டை. அவள்
20 ஆண்டுகளாக உண்மையான தோழியாக இருந்தாள்.

459
00:24:33,932 --> 00:24:35,767
உன் பிரிவால் வாடுவேன், சிண்டி கிளாஃபோர்ட்.

460
00:24:37,311 --> 00:24:39,229
எனது பெயரை நான்
எழுதக்கூடிய ஒரே பேனா இது.

461
00:24:59,458 --> 00:25:01,043
எனது லாம்போகினியின் சாவி.

462
00:25:03,045 --> 00:25:04,129
நீ வீட்டிற்கு எப்படி போவாய்?

463
00:25:05,339 --> 00:25:07,591
-சரி. எல்லோரும் போட்டுவிட்டீர்களா?

464
00:25:07,674 --> 00:25:10,344
-ஆம்.
-இல்லை. நான் போடணும்.

465
00:25:19,895 --> 00:25:23,148
இவை எனது முதல் பூட்ஸ் கிடையாது.
என் அம்மா எனக்கு கொடுத்தது.

466
00:25:24,900 --> 00:25:27,402
அவங்க தான் முதன்முதலில் எனக்கு
கால்பந்தில் ஆர்வத்தை தூண்டினாங்க.

467
00:25:28,529 --> 00:25:32,324
நான் அழகான சிறிய பையனாக இருக்கும் போது
அம்மாவும் என் அப்பாவும் பிரிந்துவிட்டனர்.

468
00:25:33,033 --> 00:25:36,328
நான் கடினமாக உழைப்பதற்கு அவங்கதான் காரணம்.
அவங்களை பெருமைப்படுத்தணும்.

469
00:25:37,496 --> 00:25:39,414
நான் நல்லவனா என்று கூட
அவங்க கவலைப்படுவதில்லை.

470
00:25:39,498 --> 00:25:42,084
நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நல்ல பையனாக இருக்க வேண்டும்.

471
00:25:43,544 --> 00:25:47,506
நான் நல்ல நிலைக்கு வந்ததும்,
என் அப்பா வர ஆரம்பித்தார், சரியா?

472
00:25:47,589 --> 00:25:50,259
ஒவ்வொரு முறையும் ஒரு கோல் அடிக்கும் போது
அவருடைய தோழர்களிடம் தற்பெருமை பேசுவார்.

473
00:25:50,342 --> 00:25:56,139
நான் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றால்...
என்னை "பலவீனமானவன்" என அழைப்பார்.

474
00:25:56,223 --> 00:25:57,766
நான் அதை வெறுத்தேன்.

475
00:25:59,268 --> 00:26:01,270
உண்மையில் நான் அதை வெறுத்தேன்.

476
00:26:03,522 --> 00:26:09,361
ஆக,மீண்டும் "பலவீனமானவன்" என அழைக்க கூடாது
என்பதால் கடுமையாக இருக்க உறுதி பூண்டேன்.

477
00:26:12,531 --> 00:26:14,575
சில நேரங்களில் நான் யோசிப்பேன்...

478
00:26:15,450 --> 00:26:17,202
நான் அவங்களை பெருமைப்படுத்துவதை
மறந்துவிட்டேன் என.

479
00:26:20,163 --> 00:26:21,957
அவங்க இறந்துவிடுவாங்க என
நான் நினைக்கலை.

480
00:26:34,928 --> 00:26:36,180
சரி, நண்பர்களே...

481
00:26:39,099 --> 00:26:40,934
இந்த குப்பையை நாம் எரிக்கலாமா?

482
00:26:41,018 --> 00:26:42,936
நாம் இதை வெளியே செய்ய வேண்டும்.

483
00:26:43,020 --> 00:26:44,188
-ஆமாம்.
-அது நல்ல யோசனை.

484
00:26:44,271 --> 00:26:45,272
ஆம். அது புத்திசாலிதனமானது. சரி.

485
00:26:45,355 --> 00:26:47,232
ஹேய், எனக்காக நீங்கள்
இதை எடுத்து வருவீர்களா?

486
00:26:54,698 --> 00:26:57,326
மன்னிக்கவும், டெட். ஈகிள் வந்துவிட்டது.

487
00:26:59,369 --> 00:27:00,537
ஹேய், நண்பர்களே.

488
00:27:00,621 --> 00:27:04,082
சாபம் நீங்கிவிட்டதா இல்லையா
என்பதை அறிய ஒரே வழி,

489
00:27:04,166 --> 00:27:06,710
நாம் ஆவிகளிடம் அதற்கான
அறிகுறியைப் பற்றி கேட்பது தான்.

490
00:27:08,504 --> 00:27:09,713
ஆவிகளே...

491
00:27:11,256 --> 00:27:12,925
எங்களுடன் பேசுங்கள்.

492
00:27:16,261 --> 00:27:20,182
டானி ரோஹாஸ்! ரோஹாஸ்! டானி ரோஹாஸ்.

493
00:27:23,894 --> 00:27:26,563
சாப நெருப்பில் எரிவதற்காக
நான் ஒரு பாட்டில் மெஸ்கல் எடுத்து வந்தேன்.

494
00:27:26,647 --> 00:27:28,565
ஹேய், ஹேய், ஹேய். ரோஹாஸ், பார்.

495
00:27:28,649 --> 00:27:30,984
எந்தப் பேய்களாக இருந்தாலும் சரி,
சத்தியமாக சொல்கிறேன்,

496
00:27:31,068 --> 00:27:32,903
அவை உன் மீதிருந்து இப்போது
போய்விட்டன, ஆம்.

497
00:27:32,986 --> 00:27:34,321
அந்த பாட்டிலைத் திற.

498
00:27:34,404 --> 00:27:36,448
-ஆம், நண்பனே!
-ஆம்.

499
00:27:36,532 --> 00:27:40,369
ஜேமி தவறாக சொல்லவில்லை. நாம் குடித்துவிட்ட
வெற்று பாட்டில்களை பேய்கள் விரும்பும்.

500
00:27:40,452 --> 00:27:41,787
உண்மை.

501
00:27:41,870 --> 00:27:44,039
கொண்டாடுவோம், நண்பர்களே.

502
00:27:46,667 --> 00:27:48,502
அதுதான் ஒன்றுபட்ட அணி.

503
00:27:49,878 --> 00:27:52,506
டானியின் காயங்கள் சரியானது
உங்கள் அதிர்ஷ்டம் தான்.

504
00:27:52,589 --> 00:27:55,050
நான் ஒருபோதும் உங்களை சூதாட்டக்காரர்
என முத்திரை குத்தவில்லை, டெட்.

505
00:27:55,133 --> 00:27:58,679
அப்படி இல்லை. டானி சரியாகிவிட்டது சில
மணிநேரத்திற்கு முன்பே எங்களுக்கு தெரியும்.

506
00:27:59,304 --> 00:28:01,306
உண்மையில், சடங்கு முடியும் வரை அந்த தகவலை

507
00:28:01,390 --> 00:28:04,434
குழுவினரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது
என்பது என் ஆள் ஹிக்கின்ஸின் யோசனை.

508
00:28:05,686 --> 00:28:07,563
-நீ சொல்லவே இல்லை!
-ஆமாம்.

509
00:28:08,063 --> 00:28:09,648
அணிக்குத்தான் முதல் இடம்,
சரியா, ஹிக்கின்ஸ்?

510
00:28:10,524 --> 00:28:11,567
ஆம், அப்படிதான் என நினைக்கிறேன்.

511
00:28:11,650 --> 00:28:13,694
ஹே, பயிற்சியாளரே, நீங்கள் விருந்தில்'
கலந்துக் கொள்கிறீர்களா என்ன?

512
00:28:14,987 --> 00:28:17,698
நீங்கள் என்ன சொல்கிறீர்கள், தலைவரே?
நெருப்பினால் அங்கு மிகவும் சூடாக இருக்கு.

513
00:28:19,533 --> 00:28:20,868
நான் வரவில்லை, தவறாக
எடுத்துக்கொள்ள வேண்டாம்.

514
00:28:22,452 --> 00:28:24,454
ஹிக்கின்ஸ், என்னுடன் வருகிறீர்களா?

515
00:28:26,415 --> 00:28:27,666
நீ போகலாம்.

516
00:28:31,128 --> 00:28:33,046
இப்போது சரி, என்ன நடக்கிறது?

517
00:28:33,130 --> 00:28:35,007
இங்கு என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது?

518
00:28:35,090 --> 00:28:36,884
எப்போதும் ரிச்மண்ட் தான்.

519
00:28:36,967 --> 00:28:38,760
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

520
00:28:38,844 --> 00:28:42,306
நாங்கள் அப்படித்தான் என்பதில் உறுதியாக
உள்ளோம். நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

521
00:28:42,389 --> 00:28:45,559
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

522
00:28:45,642 --> 00:28:48,812
நாங்கள் அப்படித்தான் என்பதில் உறுதியாக
உள்ளோம். நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

523
00:28:48,896 --> 00:28:52,065
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

524
00:28:52,149 --> 00:28:55,527
நாங்கள் அப்படித்தான் என்பதில் உறுதியாக
உள்ளோம். நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

525
00:28:55,611 --> 00:28:58,655
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

526
00:28:58,739 --> 00:29:01,992
நாங்கள் அப்படித்தான் என்பதில் உறுதியாக
உள்ளோம். நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

527
00:29:02,075 --> 00:29:05,662
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.
நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

528
00:29:05,746 --> 00:29:08,665
நாங்கள் அப்படித்தான் என்பதில் உறுதியாக
உள்ளோம். நாங்கள் எப்போதும் ரிச்மண்ட் தான்.

529
00:29:09,708 --> 00:29:10,834
காலை வணக்கம்.
அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?

530
00:29:16,089 --> 00:29:17,341
ஹேய். அற்புதமாக இருக்கு.

531
00:29:19,927 --> 00:29:21,261
ஓ, கடவுளே. இதோ.

532
00:29:24,139 --> 00:29:25,599
நான் பிடித்துவிட்டேன்.

533
00:29:26,767 --> 00:29:29,269
இடைமறிப்பு. கவனமாக இருங்கள், நண்பர்களே,
கவனமாக இருங்கள்.

534
00:29:30,687 --> 00:29:32,272
காலை வணக்கம், செல்லக் குட்டி.

535
00:29:32,356 --> 00:29:34,942
உனக்கு அந்த சலசலப்பு கேட்கிறதா?
எனக்கு அது பிடிச்சிருக்கு.

536
00:29:35,025 --> 00:29:36,109
நீ எப்படி இருக்க?

537
00:29:38,654 --> 00:29:39,988
நீங்கள் ஜேமியை நீக்கிவிட்டீர்களா?

538
00:29:40,614 --> 00:29:42,449
மேன் சிட்டி அவனை திரும்ப அழைத்துள்ளது.

539
00:29:42,533 --> 00:29:44,493
உங்களிடம் சொன்னேனே, டெட். அவன் விளையாடாதது
குறித்து அவர்கள் கவலைப்பட்டனர்.

540
00:29:44,576 --> 00:29:46,161
கடைசியில் நான் அவனுக்கு
புரிய வைத்துவிட்டேன்!

541
00:29:46,245 --> 00:29:48,247
அதாவது, நீங்க அதைப் பார்த்தீங்க.

542
00:29:48,330 --> 00:29:51,875
அவனையும் டானியையும் சேர்த்து நம்மிடம்
இரண்டு சிறந்த வீரர்கள் இருந்தனர் ரெபேக்கா.

543
00:29:51,959 --> 00:29:54,795
-உங்களுக்கு அதுதான் வேண்டுமென நினைத்தேன்.
-வந்து, நீங்கள் நினைத்தது தவறு!

544
00:29:55,587 --> 00:29:57,881
என்னை மன்னிக்கவும். நான் பேசிய விதத்திற்கு
மன்னிக்கவும், நான் கடுமையாக பேசிவிட்டேன்.

545
00:29:57,965 --> 00:30:02,636
பாருங்க, இதைப் பற்றி அமைதியாக இருக்க
முயல்கிறேன், ஆனா கடுமையாக கோபம் வருது.

546
00:30:02,719 --> 00:30:05,597
வந்து, நீங்க வருத்தப்படும்படி ஏதாவது
சொல்வதற்கு முன் நீங்க கிளம்பலாம்.

547
00:30:07,349 --> 00:30:09,601
இல்லை, உண்மையில்,
என்னவென்று தெரியுமா? இதோ.

548
00:30:10,185 --> 00:30:11,186
உங்க பிஸ்கட்டுகள்.

549
00:30:11,270 --> 00:30:13,146
அவை வழக்கமாக இருப்பதைப் போல
நன்றாக இருக்காது என நினைக்கிறேன்.

550
00:30:13,230 --> 00:30:16,900
ஆனால், அவர்கள் தான் சிறந்த குழுவினர்.
இறுதியாக நான் அனைவரையும் ஒன்று சேர்த்தேன்!

551
00:30:24,950 --> 00:30:26,034
பயிற்சியாளரே?

552
00:30:30,289 --> 00:30:31,790
கால்பந்து தான் வாழ்க்கை.

553
00:30:45,512 --> 00:30:50,601
டார்ட்

554
00:31:33,894 --> 00:31:35,896
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

