1
00:00:05,506 --> 00:00:09,426
இல்லை. இல்லை, இல்லை, இல்லை.

2
00:00:09,801 --> 00:00:12,971
இல்லை, ட்ரெவர், இல்லை. பையை நன்கு
உள்ளே தள்ளி வைக்கணும், சரியா?

3
00:00:13,055 --> 00:00:15,140
எல்லா இடத்தையும் உபயோகப்படுத்தலாம்.
தள்ளிப் போ. நன்றி.

4
00:00:17,142 --> 00:00:19,061
பின்புறம் என்ன வைக்கணும்? சரி.

5
00:00:19,686 --> 00:00:24,483
இவற்றை இப்படி தள்ளி சரியாக வைக்கவில்லை
என்றால், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்.

6
00:00:24,566 --> 00:00:26,485
இப்போது, நாம் இதை நகர்த்தி... ஹலோ?

7
00:00:26,568 --> 00:00:29,446
இங்கே ஒருவன் இருக்கிறேன். ஓ, கடவுளே!

8
00:00:29,530 --> 00:00:31,907
ஹே, நான் மறந்துவிட்டேன். நாளை எப்படி
எவெர்டன்னோடு விளையாடப்போகிறோம் தெரியுமா?

9
00:00:31,990 --> 00:00:33,242
-சொல்லுங்க.
-அது, ஒரு நகரம் கிடையாது.

10
00:00:33,325 --> 00:00:37,412
-அது லிவெர்பூலில் உள்ள ஒரு அணி!
-பீடில்ஸ் போல!

11
00:00:37,496 --> 00:00:41,708
ஜான், பால், ஜார்ஜ், ரிங்கோவை பார்த்தால்,
தயவு செய்து ஒரு புகைப்படம் எடுப்பீர்களா?

12
00:00:41,792 --> 00:00:42,835
ஹே, செய்கிறேன், செல்லமே.

13
00:00:43,627 --> 00:00:45,587
சரி, ஹே,
நான் என் வேலையை பார்க்கணும், சரியா?

14
00:00:45,671 --> 00:00:48,131
சரி. அம்மா உங்களோடு பேச வேண்டுமாம்.
கொஞ்சம் பொறுங்கள்.

15
00:00:48,215 --> 00:00:49,716
-உன்னை நேசிக்கிறேன், செல்லமே.
-நானும் தான்.

16
00:00:49,800 --> 00:00:51,426
ஜான் மற்றும் ஜார்ஜ் இறந்ததை
இன்னும் அவனிடம் சொல்லலையா?

17
00:00:51,510 --> 00:00:52,594
அவர்களுக்கு என்ன?

18
00:00:52,678 --> 00:00:54,221
அது கீத் ரிச்சர்ட்ஸால் தான்.

19
00:00:54,930 --> 00:00:55,931
ஹே, டெட்.

20
00:00:56,014 --> 00:00:57,140
-ஹே. எப்படி இருக்க?
-நலம்.

21
00:00:57,224 --> 00:00:58,809
வேலை எப்படி போகிறது?
எல்லாம் சரியாக இருக்கா?

22
00:00:58,892 --> 00:01:02,938
ஆம், மன்னிக்கவும். இது சுலபமில்லை என
தெரியும்,வக்கீல் அனுப்பிய பேப்பர் இருக்கா?

23
00:01:03,021 --> 00:01:04,647
எனக்குத் தெரியும். ஓ, ஹே.

24
00:01:05,524 --> 00:01:06,525
இதோ இங்கே இருக்கிறது.

25
00:01:06,608 --> 00:01:10,112
அதை முழுவதும் பார்த்து, கையெழுத்து இட்டு,
திருப்பி அனுப்புகிறேன். சத்தியமாக.

26
00:01:10,195 --> 00:01:12,948
சரி, நன்றி. ஹே, நாளைக்காக வாழ்த்துகள்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம்.

27
00:01:13,031 --> 00:01:14,032
சரி.

28
00:01:19,705 --> 00:01:21,456
பூத்து குலுங்கும் அழகான மலர்கள்
திருமண நாள் வாழ்த்துக்கள் ரெபேக்கா

29
00:01:21,540 --> 00:01:22,708
கீழே க்ளிக் செய்து பூக்கள் விலையில்
20% தள்ளுபடி பெறுங்கள்

30
00:01:26,044 --> 00:01:29,381
-பெண்கள் பயணம்!
-லிவெர்பூல், இதோ நாங்கள் வருகிறோம்.

31
00:01:29,464 --> 00:01:30,507
இந்த வாரக்கடைசியில்
நீங்கள் என்னை வர சொன்னது

32
00:01:30,591 --> 00:01:32,718
எனக்கு பெருமையாக இருக்கு
என்று நான் உண்மையாக சொல்லணும்.

33
00:01:32,801 --> 00:01:34,553
பரவாயில்லை.

34
00:01:34,636 --> 00:01:38,015
ஆனா, ஹே, நாம் இருவருமே தனிமையில்
இருக்கிறோம். நீங்க ரொம்ப கவர்ச்சியானவர்.

35
00:01:38,098 --> 00:01:39,892
நான் மறுபடியும் பெண்களோடு
நட்பாக இருக்க தொடங்கினால்,

36
00:01:39,975 --> 00:01:42,728
அது உங்களைப் போன்ற ஒருவரோடு செய்வது தான்
சிறந்ததாக இருக்குமென நம்புகிறேன்.

37
00:01:42,811 --> 00:01:44,646
இல்லை. நீ குழப்பமாக
இருப்பதாக நினைக்கிறேன், கீலி.

38
00:01:44,730 --> 00:01:47,149
முதலில் அப்படி இருந்தேன்.
பிறகு, "இங்கே பார், கீலி.

39
00:01:47,232 --> 00:01:50,444
கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி உன் புது தோழியோடு
சிறந்த உறவு வைத்துக்கொள்" என நினைத்தேன்.

40
00:01:52,446 --> 00:01:53,655
நான் உங்களை கேலி செய்தேன்.

41
00:01:54,281 --> 00:01:55,282
ஓ, கடவுளே.

42
00:01:55,908 --> 00:01:58,535
நீ உண்மையாக பேசுகிறாய் என நினைத்தேன்.
அதாவது, உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா?

43
00:01:58,619 --> 00:01:59,745
ஓ, கற்பனை செய்தேன்.

44
00:02:02,873 --> 00:02:05,667
இன்றைய பயணத்தில்
ஒரு புது பயணி வந்திருக்கிறார் போல.

45
00:02:05,751 --> 00:02:07,961
வந்து, விமானத்தில் உன் இடத்தில்
கீலி அமர்ந்து கொள்வாள், ஹிக்கின்ஸ்.

46
00:02:09,545 --> 00:02:10,797
மன்னிச்சிடுங்க.

47
00:02:10,881 --> 00:02:12,841
நாம் புறப்படுவதற்கு முன்
நான் கழிவறைக்குப் போகப் போகிறேன்.

48
00:02:12,925 --> 00:02:14,176
உங்களை கீழே சந்திக்கிறேன், ரெபேக்கா.

49
00:02:14,259 --> 00:02:17,179
பரவாயில்லை. அணியினர் பேருந்தில் செய்யும்
சேட்டைகளை நான் ரொம்ப ரசிப்பேன்.

50
00:02:17,262 --> 00:02:19,348
இல்லை. நீ இந்த வாரக்கடைசியில்
இங்க இருக்கணும்.

51
00:02:19,973 --> 00:02:21,558
தேவையில்லாத வேலையை செய்துகொண்டு.

52
00:02:27,523 --> 00:02:30,984
சரி, நண்பர்களே. நம் திறமைகளை எவெர்டனிடம்
வெளிப்படுத்த யார் தயாராக இருக்கிறீர்கள்?

53
00:02:33,946 --> 00:02:35,072
நன்றி, டானி.

54
00:02:35,531 --> 00:02:39,743
ஐயோ, லூயிஸ். ஏன் எல்லோரும் இவ்வளவு
மனச்சோர்வாக இருக்கிறார்கள்?

55
00:02:39,826 --> 00:02:42,162
என்ன நடந்தது? பேயான்சே ஜே-ஸீயை
விவாகரத்து செய்துவிட்டாளா என்ன?

56
00:02:42,246 --> 00:02:43,288
இல்லை, அப்படி ஒன்றும் இல்லை.

57
00:02:43,372 --> 00:02:47,334
அப்பாடா. அதை சொல்லும் போதே
எனக்கு வருத்தமாக இருந்தது.

58
00:02:47,417 --> 00:02:48,710
இங்கே என்ன நடக்கிறது என பார்க்கிறேன்.

59
00:02:48,794 --> 00:02:52,256
ஹே, நண்பர்களே. என்ன, நடக்கிறது.
என்னிடம் சொல்லுங்க. என்ன விஷயம்?

60
00:02:52,923 --> 00:02:54,341
வந்து, நாங்கள் நலமாக இருக்கிறோம்.

61
00:02:55,509 --> 00:02:57,886
-ஆமாம். நான் நன்றாக இருக்கிறேன்.
-சரி.

62
00:02:57,970 --> 00:03:00,931
நாங்கள் வருத்தமாக இருக்க காரணம்
நாங்கள் எப்போதுமே எவெர்டனோடு

63
00:03:01,014 --> 00:03:02,850
விளையாடி வெற்றி பெற்றதில்லை!

64
00:03:02,933 --> 00:03:04,768
விடுங்க, நண்பர்களே.

65
00:03:04,852 --> 00:03:06,895
எவெர்டனில் நீங்கள் வெற்றி பெற்று
எவ்வளவு காலமாகிறது?

66
00:03:07,354 --> 00:03:09,356
-அறுபது வருடங்களுக்கு முன்.
-அடக் கடவுளே.

67
00:03:10,023 --> 00:03:12,693
ஐயோ. அது ரொம்ப நீண்ட காலம் தான். சரி.

68
00:03:12,776 --> 00:03:14,361
ஆக அந்த விஷயம் ஒன்று இருக்கிறது.

69
00:03:14,444 --> 00:03:17,322
ஓ'பிரையன் பின்புறத்தில் அடிபட்டு கொண்டதும்
நமக்கு பாதகமாக இருக்கிறது.

70
00:03:17,406 --> 00:03:18,949
என் காலில் அடிப்பட்டிருக்கு, பயிற்சியாளரே.

71
00:03:19,032 --> 00:03:22,494
பின்புறம் அடிப்பட்டிருக்கு, மகனே. அதற்கு
வெட்கப்பட வேண்டாம், சரியா? அது இயல்பு.

72
00:03:22,578 --> 00:03:25,455
தடகளத்தில் எப்போதும் பின்புறத்தில்
அடிப்படும். உனக்கு மட்டும் கிடையாது,நண்பா.

73
00:03:26,498 --> 00:03:28,375
ஹே, பயிற்சியாளரே, உங்களுக்கும் சில முறை
பின்புறத்தில் அடிபட்டிருக்கு தானே?

74
00:03:28,458 --> 00:03:29,793
-மூன்று முறைகள்.
-மூன்று முறைகள்.

75
00:03:30,252 --> 00:03:33,630
பின்புறம் ஒரு அதிசயமான தசை. கடவுள்
சாட்சியாக, உன் பின்புறம் சரியாகிவிடும்.

76
00:03:34,131 --> 00:03:36,049
ஓ'பிரையன் பின்புறத்தில் அடிபட்டதால்,
கோல் பாதுகாப்பாளனாக

77
00:03:36,133 --> 00:03:39,219
மாண்ட்ரீயலில் இருந்து என் வீரன்
விளையாட போகிறான் என்பது சந்தோஷமான விஷயம்.

78
00:03:39,303 --> 00:03:42,097
-சோரோவை வரவேற்போம்.
-அதை "சொஹோவ்" என்று சொல்ல வேண்டும்.

79
00:03:42,181 --> 00:03:44,892
-மன்னிக்கவும், சோரோவ்.
-"சொஹோவ்."

80
00:03:45,893 --> 00:03:47,394
நான் என்ன தவறாக சொன்னேன் என புரியலை.

81
00:03:47,477 --> 00:03:49,605
நண்பர்களே, அதாவது, உங்களில் ஒருவருக்கு
ஜோசியம் பார்க்கம் தெரிந்தால் ஒழிய,

82
00:03:49,688 --> 00:03:51,273
நாளை என்ன நடக்கும் என
நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

83
00:03:51,356 --> 00:03:52,733
அதனால் தான் நாம் விளைாட்டை விளையாடுகிறோம்.

84
00:03:53,233 --> 00:03:55,903
எனவே, மூன்று எண்ணும் போது ரிச்மண்ட் என
சத்தமாக சொல்லுங்க! ஒன்று, இரண்டு, மூன்று!

85
00:03:55,986 --> 00:03:57,905
-ரிச்மண்ட்!
-சரி, வாருங்கள். போகலாம்.

86
00:04:00,991 --> 00:04:02,993
-ஹே, பயிற்சியாளரே.
-ஹலோ, நண்பர்களே. நான் என்ன செய்யணும்?

87
00:04:03,076 --> 00:04:05,954
ஆக, ஜேமி டார்ட் மேன் சிட்டிக்கு திரும்பி
போன பிறகு, ஒரு கேமில் தோற்றுவிட்டீர்கள்,

88
00:04:06,038 --> 00:04:08,832
ஒன்றை சமன் படுத்தினீர்கள்,
நீங்கள் எந்த கோலும் போடவில்லை.

89
00:04:08,916 --> 00:04:09,917
-ஆமாம்.
-எனவே பின் தள்ளப்படும்

90
00:04:10,000 --> 00:04:12,252
அபாயத்தை பற்றி,
நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?

91
00:04:13,045 --> 00:04:16,548
லாய்ட், நான் இப்போது பின் தள்ளப்படுவது
என்பதின் அர்த்தம் பற்றி தான் யோசிக்கிறேன்.

92
00:04:17,925 --> 00:04:19,259
உங்க கேள்வி என்ன, மார்கஸ்?

93
00:04:19,343 --> 00:04:22,053
ஜேமி டார்ட் விலகிப் போனதை பற்றி நீங்க
என்ன நினைக்கிறாய் என தெரிந்து கொள்ளணும்.

94
00:04:22,137 --> 00:04:23,722
ஆமாம்.

95
00:04:23,805 --> 00:04:26,517
வந்து, உண்மையை சொல்லணும் என்றால்,
அது எனக்கு வருத்தமாக இருக்கு.

96
00:04:26,600 --> 00:04:28,769
ஒரு பயிற்சியாளராக இருப்பதன் நல்ல விஷயமே
நம் அணி வீரர்களோடு

97
00:04:28,852 --> 00:04:30,854
ஒரு நல்ல உறவு ஏற்படுத்தி கொள்வது
என கருதுகிறேன்.

98
00:04:30,938 --> 00:04:34,066
மைதானத்தில் விளையாடும் கேமில் நடப்பதை விட
அந்த இழப்பு தான் என்னை மிகவும் பாதிக்கும்

99
00:04:34,149 --> 00:04:36,652
மற்றும் என் வாழ்நாளில் என் நினைவில்
நீங்காமல் இருந்து கொண்டே இருக்கும்.

100
00:04:37,486 --> 00:04:39,029
சரி. உங்களை
லிவெர்பூலில் சந்திக்கிறேன், சரியா?

101
00:04:39,112 --> 00:04:40,239
சரி.

102
00:04:42,282 --> 00:04:44,826
ஹே! அங்கே கடைசியாக போகிறவன்
ஒரு அழுகிய முட்டை!

103
00:04:46,495 --> 00:04:47,496
என்ன?

104
00:05:00,968 --> 00:05:02,344
ஹே, அவன் இங்கிருக்கிறான்.

105
00:05:09,268 --> 00:05:11,270
-உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி, நண்பா.
-சரி, போகலாம்.

106
00:05:38,505 --> 00:05:41,592
இதோ. இது தான் உயர்தரமான அறை. உங்களுக்கு
திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன்.

107
00:05:41,675 --> 00:05:44,136
இந்த அறையில் உள்ள சௌகரியங்களை உங்களுக்கு
சுற்றி காண்பிக்கவா?

108
00:05:44,219 --> 00:05:45,762
வேண்டாம், நன்றி.

109
00:05:45,846 --> 00:05:47,848
நகரத்திற்குள் செல்வதற்கு முன்
என் தோழியும் நானும்

110
00:05:47,931 --> 00:05:49,266
உல்லாசமாக இருந்து,
குளித்து விட்டு போக நினைக்கிறோம்.

111
00:05:50,017 --> 00:05:51,101
லிவெர்பூலிற்கு வரவேற்கிறேன்.

112
00:05:54,062 --> 00:05:56,315
என்ன? அவன் அந்த பணத்தை,
ஒரு நிமிடத்தில் செலவழித்திருக்கலாம்.

113
00:05:56,398 --> 00:05:59,109
இங்கே பாருங்க. நான் சொன்னதை அவன்
வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டான்.

114
00:05:59,193 --> 00:06:02,237
இல்லை, இது உன்னைப் பற்றி இல்லை.
அது... அடச்ச.

115
00:06:02,321 --> 00:06:05,741
இது ரூபெர்ட் மற்றும் என்னுடைய
திருமண நாள் வாரக்கடைசி. மற்றும்...

116
00:06:07,075 --> 00:06:09,286
-இதுதான் தனிமையில் கொண்டாடும் முதலாண்டு...
-ஹே, பரவாயில்லை.

117
00:06:14,082 --> 00:06:15,083
நன்றி.

118
00:06:17,836 --> 00:06:19,171
இது ஒரு நீண்ட அரவணைப்பு.

119
00:06:20,881 --> 00:06:24,593
ஆக, உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன், விடுதி
மரச்சாமான்கள் அறையிலே தான் இருக்கணும்,

120
00:06:24,676 --> 00:06:27,137
வெளியில் வழியிலோ நீச்சல் குளத்திலோ அல்ல.

121
00:06:27,221 --> 00:06:32,601
மேலும் அவற்றை உன் வீட்டிற்கோ அல்லது மற்ற
விடுதிகளுக்கோ கொண்டு சொல்ல கூடாது, சரியா?

122
00:06:32,684 --> 00:06:34,645
சரி, நண்பர்களே, இன்னும் ஒரு மணி நேரத்தில்
அணி விருந்து இருக்கு.

123
00:06:34,728 --> 00:06:37,272
அதற்கு பிறகு, திரைப்படம் பார்க்கலாம்
அல்லது தலையணை சண்டை போடலாம்.

124
00:06:37,356 --> 00:06:38,607
இந்த முறை எது நடக்கப் போகிறது?

125
00:06:38,690 --> 00:06:40,150
திரைப்படம் பார்க்கலாம்.

126
00:06:40,234 --> 00:06:43,403
சரி. ஆனால் நீங்க ஒரு முறை, "தலையணை சண்டை"
என்று சொன்ன பிறகு, நாம் எப்போதும்

127
00:06:43,487 --> 00:06:45,030
சேர்ந்தே திரைப்படம்
பார்க்க மாட்டோம்.

128
00:06:45,113 --> 00:06:46,323
-இது உங்களுக்காக, பயிற்சியாளரே.
-நன்றி, சார்.

129
00:06:46,406 --> 00:06:48,033
-இது உங்களுக்காக.
-நன்றி.

130
00:06:48,116 --> 00:06:50,953
அறை 5150. இறுதியாக.

131
00:06:51,036 --> 00:06:54,414
சாம்மி ஹாகர், வான் ஹாலென் வரலாற்றில்
சிறந்த முதன்மை பாடகன்.

132
00:06:54,498 --> 00:06:57,125
-டேவிட் லீ ராத் காலத்திற்கு பிறகு.
-நன்றி.

133
00:06:57,209 --> 00:06:58,961
-பயிற்சியாளரே, உங்கள் அறை எண் என்ன?
-5148.

134
00:06:59,044 --> 00:07:01,421
-ஹே.
-ஹலோ, பக்கத்து அறைக்காரரே.

135
00:07:01,505 --> 00:07:05,342
ஆம், ஹலோ. நான் கேட்டிருந்த அந்த
ஷாம்பெய்ன் இன்னும் வரவில்லை. நன்றி.

136
00:07:06,552 --> 00:07:08,262
நல்ல கேள்வி. ஒரு நொடி பொறுங்க.

137
00:07:08,345 --> 00:07:12,349
உதவியாளரை விட்டு இன்று இரவு ஏதாவது
உணவகத்தில் நமக்காக மேசை ஒதுக்கச் சொல்லவா?

138
00:07:12,432 --> 00:07:15,185
ஷிப்லி மாமிச விடுதியில்
உணவும் சூழ்நிலையும் பிரமாதமாக இருக்கும்.

139
00:07:15,727 --> 00:07:17,354
அப்படியா?
சரி, நான் மாமிசம் சாப்பிடுகிறேன்.

140
00:07:17,437 --> 00:07:20,065
சரி. தயவு செய்து, அந்த மாமிச விடுதியில்
இருவருக்கான மேசை ஒதுக்கீடு செய்யுங்கள்.

141
00:07:21,024 --> 00:07:22,943
இரவு 8 மணி உனக்கு சரியாக இருக்குமா?

142
00:07:23,026 --> 00:07:26,238
அந்த வணிக வளாகம் 24 மணி நேரமும்
திறந்து தான் இருக்கும்.

143
00:07:26,321 --> 00:07:27,322
சரி.

144
00:07:28,657 --> 00:07:30,117
வணிக வளாகம் பற்றி என்ன?

145
00:07:30,200 --> 00:07:32,703
உடற்பயிற்சி செய்வதற்காக இருக்கும்
புத்தம் புது தொழில் நுட்பங்கள் கொண்ட

146
00:07:32,786 --> 00:07:35,455
உடற்பயிற்சி கூடத்திற்கு விருந்தினர்கள்
எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

147
00:07:35,539 --> 00:07:36,540
கெட்டில்பெல்ஸ் போல!

148
00:07:36,623 --> 00:07:37,916
அடக் கடவுளே.

149
00:07:38,000 --> 00:07:40,252
இரவு வாழ்க்கை என்று வரும் போது
லிவெர்பூலில் நிறைய இருக்கிறது.

150
00:07:40,335 --> 00:07:45,424
மதுபான கடைகள் மற்றும் கிளப்புகள், ஆசிய
ஓய்வு நேர விருப்பமான கரயோகி எல்லாம் உண்டு.

151
00:07:46,008 --> 00:07:47,885
இதை செய்தது எனக்கு ஞாபகத்தில் கூட இல்லை.

152
00:07:48,385 --> 00:07:50,345
-நீங்கள் கலை ஆர்வமுள்ளவர் என்றால்...
-சரி, போதும்.

153
00:07:50,888 --> 00:07:52,514
இந்த வாரக்கடைசி சிறப்பாக கழியப்போகிறது.

154
00:07:52,598 --> 00:07:55,976
அந்த ஷாம்பெய்ன் வந்தவுடன், நாம் நன்கு
குடித்துவிட்டு, நன்றாக சாப்பிட்டுவிட்டு,

155
00:07:56,059 --> 00:07:57,477
கடந்த காலத்தை கடந்ததாகவே விட்டு விடுவோம்.

156
00:07:57,561 --> 00:07:59,730
-சரிதானே?
-அற்புதமாக இருக்கு.

157
00:07:59,813 --> 00:08:01,023
அவனே வந்துவிட்டான் போல.

158
00:08:04,401 --> 00:08:06,236
ஹலோ, ஸ்டிங்க்கி.

159
00:08:08,405 --> 00:08:12,743
ஒன்றுக்கும் உதவாத உன் கணவன் பணம் தரவில்லை
என்றாலும் பெரிய அறை தான் கிடைத்துள்ளது.

160
00:08:12,826 --> 00:08:14,870
நல்லது. ரூபெர்ட்டை மறந்துவிடுவோம்!

161
00:08:16,538 --> 00:08:19,166
ஆக இவள் யார்?
உன் காதலியா? இவள் ரஷ்ய நாட்டுக்காரியா?

162
00:08:19,249 --> 00:08:22,085
-நீ ரஷ்ய நாட்டுக்காரியா?
-அ. உங்களை பிடிச்சிருக்கு. ஆ, நீங்க யார்?

163
00:08:22,628 --> 00:08:26,965
என் குழந்தை பருவ தோழியான, ஃப்ளோ காலின்ஸை
உனக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

164
00:08:27,049 --> 00:08:30,010
புத்திசாலியான குழந்தை மனநல மருத்துவர்
மற்றும் என் செல்ல, 12 வயது நிரம்பிய

165
00:08:30,093 --> 00:08:34,472
அருமையான மகள், நோராவின் பெருமைப்பட
வேண்டிய அண்மையில் தனிமையான ஒற்றை தாய்.

166
00:08:34,556 --> 00:08:35,474
அற்புதம்.

167
00:08:35,557 --> 00:08:38,477
கடந்த ஆறு வருடங்களாக இவர்களிடம்
பேசுவதை கூட நான் புறக்கணித்துவிட்டேன்.

168
00:08:38,936 --> 00:08:40,562
ஐயோ, ஸ்டிங்க்கி.

169
00:08:40,645 --> 00:08:43,565
என் இறுதி சடங்கில் பேசக்கூடியவர்களின்
பட்டியலில் உன் பெயர் இருக்காது.

170
00:08:44,149 --> 00:08:47,069
ஹாய், நான் ஃப்ளோ. நீ "சாஸே" என்றும்
அழைக்கலாம். எனக்கு எந்த பிரச்சினையுமில்லை.

171
00:08:47,861 --> 00:08:49,112
ஆக, நீ விவாகரத்தைப்பற்றி கேள்விப்பட்டாயா?

172
00:08:49,196 --> 00:08:53,325
ஆம். ஒரு விருந்தில் டெரன்னை பார்த்தேன்.
என்னிடம் வழிந்துவிட்டு இதை சொன்னான்.

173
00:08:53,408 --> 00:08:56,995
ஹே, புதிய செய்தி என்ன? இருந்தாலும், இந்த
தகவலை அவன் சொன்னது அதிர்ச்சியாக இருக்கு.

174
00:08:57,538 --> 00:08:59,206
சரி, அப்போது, இன்றிரவின் திட்டம் என்ன?

175
00:08:59,289 --> 00:09:00,999
ரிசப்ஷனை அழைத்து எனக்கு
ஒரு ரோப் வாங்கிக் கொள்ளவா?

176
00:09:02,793 --> 00:09:04,127
என்னிடம் என்ன இருக்கு என்று பார்.

177
00:09:05,963 --> 00:09:07,506
வெளியில் இருந்த அறை சேவை
வண்டியிலிருந்து ஒன்றை திருடிவிட்டேன்.

178
00:09:07,589 --> 00:09:08,799
நீங்க அற்புதமானவர்!

179
00:09:09,883 --> 00:09:11,927
என் பெயர், கீலி. ஹாய்!

180
00:09:12,010 --> 00:09:13,095
ஆம், எனக்கு உன்னை தெரியும், அன்பே.

181
00:09:13,178 --> 00:09:15,430
என் முன்னாள் கணவர் உன் மீது
பைத்தியமாக இருந்தார், எனவே...

182
00:09:29,862 --> 00:09:32,614
நாளை அந்த அணியை வென்றுவிடலாம் என்று
நான் நினைப்பது முட்டாள்தனமா?

183
00:09:32,698 --> 00:09:34,992
-இல்லை, நாம் அவர்களின் சரியான எதிரி தான்.
-சரியாக சொன்னாய்.

184
00:09:35,075 --> 00:09:36,952
நீ என்ன நினைக்கிறாய், நேட்?
அவர்கள் வென்று விடுவார்கள் என்றா?

185
00:09:37,327 --> 00:09:38,745
இந்த அணியால் எதையும்
செய்ய முடியும் என நம்புகிறேன்.

186
00:09:38,829 --> 00:09:40,539
பார்த்தாயா? இது தான் சரி.
நான் இதைத்தான் சொல்கிறேன்.

187
00:09:40,622 --> 00:09:43,166
சரி, நேட். நீ நானாக இருந்தால்,
இவர்களிடம் என்ன சொல்வாய்?

188
00:09:43,250 --> 00:09:44,543
ஓ, இல்லை. நான்... இல்லை,
நான் ஒன்றும்...

189
00:09:44,626 --> 00:09:47,754
ஹே. நான் உன் கருத்தைத்தான் கேட்கிறேன்.
அது உனக்குப் புரிகிறது, இல்லையா?

190
00:09:48,088 --> 00:09:49,548
-ஆமாம்.
-உனக்கு ஏதோ சொல்லணும், இல்லையா?

191
00:09:49,631 --> 00:09:51,592
-ஆமாம்.
-யோசித்து, முடிவாக, சொல்ல தயாரா?

192
00:09:53,093 --> 00:09:54,136
-சொல் கேட்போம்.
-மாட்டேன்.

193
00:09:54,219 --> 00:09:56,638
ஏன் மாட்டாய்? என்னிடம் சொன்னால்
என்ன நடந்துவிடும் என பயப்படுகிறாய்?

194
00:09:56,722 --> 00:09:58,557
உங்களுக்கு என் யோசனை பிடிக்காது
அதனால் என்னை வெறுத்து விடுவீர்கள்.

195
00:09:58,640 --> 00:09:59,516
வேலையை விட்டு அனுப்புவீர்கள்.

196
00:09:59,600 --> 00:10:01,852
பிறகு என் பெற்றோரோடு போய் வாழணும்,
அவர்கள் என்னால் அவமானப்படுவார்கள்.

197
00:10:01,935 --> 00:10:04,563
வீட்டில் எல்லோரும் அதை பற்றி கேள்விப்பட்டு
என்னை மிகவும் கேலி செய்வார்கள்.

198
00:10:04,646 --> 00:10:05,522
மன்னிக்கவும்.

199
00:10:09,443 --> 00:10:11,153
வந்து, அவன் இதற்கு திக்கவில்லை.

200
00:10:15,616 --> 00:10:16,450
மிஷல் லாஸ்ஸோ

201
00:10:16,533 --> 00:10:18,410
தொந்தரவிற்கு மன்னிக்கவும். அந்த விஷயங்களை
எல்லாம் பார்ப்பதற்கு நேரம் கிடைத்தாதா?

202
00:10:18,493 --> 00:10:21,288
நான் சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கு.
உன்னை காலையில் சந்திக்கிறேன், சரியா?

203
00:10:21,371 --> 00:10:23,373
ஹே, எனக்கு ஒரு உதவி செய்.
அந்த காணொலியின் 74வது நிமிடத்தில்,

204
00:10:23,457 --> 00:10:27,503
அந்த அறையில் உள்ள
வளர்ந்த ஆண்கள் எல்லாம் அழுவார்கள்.

205
00:10:28,462 --> 00:10:29,463
நானும் ஒருவனாக இருப்பேன்.

206
00:10:32,132 --> 00:10:34,259
சரி, நான் எதுவும் தயார் செய்யவில்லை.

207
00:10:34,343 --> 00:10:37,471
நிறைய மதுபானம் கிடைக்கும் இடத்தில்,
மணப்பெண்ணின் தோழி செய்யும் சிறந்த வேலையல்ல

208
00:10:37,554 --> 00:10:39,097
ஆமாம், அவள் தான் அந்த வாரக்கடைசியின்
நட்சத்திரமாக இருந்தாள்.

209
00:10:39,181 --> 00:10:42,059
-ஆமாம், எல்டன் ஜானை நான் மயக்கினேன்.
-நீ என்ன செய்தாய்?

210
00:10:42,142 --> 00:10:44,394
-இல்லை, நீ அப்படி செய்யவில்லை.
-ஆமாம், நான் செய்தேன்!

211
00:10:44,478 --> 00:10:46,355
அவன் தொடர்ந்து அதை மறுத்தான்.

212
00:10:46,438 --> 00:10:48,273
வழக்கமான "அவள் சொன்னாள்,
அவள் சொன்னாள்", இல்லையா?

213
00:10:51,109 --> 00:10:54,238
உங்களுக்கு இன்னும் கொஞ்சம் மதுபானம்
வேண்டுமா? ஏதாவது இனிப்பு வேண்டுமா?

214
00:10:54,905 --> 00:10:58,075
இங்கிருக்கும் என் அழகான தனிமையான தோழிக்கு

215
00:10:58,158 --> 00:11:01,245
இனிப்புகள் எப்போதுமே
பெரிசாக தான் பிடிக்கும்.

216
00:11:01,328 --> 00:11:04,081
உங்களால் அப்படி செய்ய முடிந்தால்
நன்றாக இருக்கும்.

217
00:11:05,874 --> 00:11:07,042
நான் பிறகு வருகிறேன்.

218
00:11:07,125 --> 00:11:08,210
நன்றி. மன்னிக்கவும்.

219
00:11:11,004 --> 00:11:12,548
நீ இப்போது செய்ததை
என்னால் நம்ப முடியலை.

220
00:11:12,965 --> 00:11:14,132
சும்மா இரு. உனக்கு பிடிச்சிருக்கு.

221
00:11:14,216 --> 00:11:16,260
சரி. நான் புகைப்பிடிக்கப் போகிறேன்.
ஸ்டிங்க்கி நீ?

222
00:11:16,343 --> 00:11:17,636
இல்லை. நான் இப்போ புகைப்பிடிப்பதில்லை.

223
00:11:18,887 --> 00:11:21,306
இருந்தாலும்,
நீ இப்பவும் கவர்ச்சியாக இருக்கிறாய்.

224
00:11:27,312 --> 00:11:28,564
ஆமாம், தெரியவில்லை. அது...

225
00:11:29,565 --> 00:11:33,527
நீங்கள் அதை திரும்ப ஃப்ளஷ்
செய்கிறீர்களா, கடினமாக? சரி, பை.

226
00:11:34,862 --> 00:11:35,946
ஹாய், உங்களுக்கு நான் என்ன செய்யணும்?

227
00:11:36,029 --> 00:11:38,198
ஹாய், எப்படி இருக்கீங்க? உங்களிடம் ஃபாக்ஸ்
இயந்திரம் இருக்கிறதா என பார்க்க வந்தேன்.

228
00:11:38,866 --> 00:11:39,867
ஃபாக்ஸ் இயந்திரமா?

229
00:11:41,535 --> 00:11:45,289
ஓ, சரி. அது ஒரு நல்ல கேள்வி.
ஒரு நொடி பொறுத்தால்,

230
00:11:45,372 --> 00:11:47,875
என் சக பணியாளரிடம் கேட்டு
என்ன செய்யலாம் என்று சொல்கிறேன்.

231
00:11:47,958 --> 00:11:51,753
ஒரு ஃபாக்ஸ் இயந்திரமா, ஹே? நீங்க 1997 ஆம்
ஆண்டிற்கு ஏதாவது அனுப்புகிறீர்களா?

232
00:11:51,837 --> 00:11:54,256
ஆமாம், ஆப்பிள் பங்கு வாங்கணும் என்று
எனக்கு ஒரு செய்தி அனுப்பிக் கொள்கிறேன்.

233
00:11:54,339 --> 00:11:55,799
நல்ல யோசனை.

234
00:11:55,883 --> 00:11:59,011
ஜே.கே ரௌலிங்கை கொன்று, முதல் ஹாரி பாட்டர்
புத்தகம் எழுதும்படி எனக்கு சொல்வீர்களா?

235
00:11:59,469 --> 00:12:02,014
சொல்கிறேன். சரி. "கொலை" என்பதற்கு பதில்
“சமாளி” என்று எழுதுகிறேன்,

236
00:12:02,097 --> 00:12:03,098
அப்போது தான் எந்த சாட்சியும் இருக்காது.

237
00:12:04,266 --> 00:12:06,226
-சரி, என் பெயர், டெட்.
-சாஸே.

238
00:12:06,727 --> 00:12:08,395
சாஸே, என்ன? அந்த ஸ்மர்ஃப் போல, சரியா?

239
00:12:09,479 --> 00:12:11,148
சாஸே ஸ்மர்ஃப் என்று ஒன்று இருந்ததா, என்ன?

240
00:12:11,231 --> 00:12:12,232
அது ரொம்ப மோசம்.

241
00:12:12,316 --> 00:12:14,860
திமிர் பிடித்த ஒரு ஸ்மார்ஃப் இருந்தால்
பார்க்க வேடிக்கையாக இருந்திருக்கும்.

242
00:12:15,402 --> 00:12:18,363
சரி, சரி, நான் அவரிடம் சொல்கிறேன்.
விசாரணை எப்படி நடந்தது என சொல். சரி, பை.

243
00:12:19,239 --> 00:12:21,658
சரி, இங்கே ஃபாக்ஸ் இயந்திரம் இல்லை.

244
00:12:21,742 --> 00:12:23,911
ஆனால் எட்டு மைல்கள் தள்ளி
க்ராக்ஸ்டெத் என்ற இடத்திலுள்ள

245
00:12:23,994 --> 00:12:27,414
அழகு நிலையத்தில் ஒன்று இருப்பதாக
உதவியாளர் சொல்கிறார்.

246
00:12:27,497 --> 00:12:28,707
சரி, பரவாயில்லை.

247
00:12:28,790 --> 00:12:31,793
அருகில் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும்
நக ஒப்பனையாளரை சந்திக்கப் போகிறேன்.

248
00:12:33,629 --> 00:12:35,255
-இருந்தாலும் நன்றி. சரி.
-சரி.

249
00:12:35,839 --> 00:12:36,924
உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

250
00:12:37,674 --> 00:12:38,759
சரி, நான் உங்களுக்கு என்ன செய்யணும்?

251
00:12:38,842 --> 00:12:40,844
வந்து, நான் புகைப்பிடிக்க வெளியே போகிறேன்

252
00:12:40,928 --> 00:12:43,096
என் தோழி நாங்கள் சாப்பிட்ட தொகையை
கொடுப்பாள் என நம்புகிறேன்.

253
00:12:43,805 --> 00:12:46,892
பிறகு மாக்னம் பி.ஐ-யை பார்த்து,
அவரோடு வழிந்துக் கொண்டு இருந்தேன்.

254
00:12:46,975 --> 00:12:49,603
-என்ன நடக்கிறது என்று பார்க்கலாம், சரியா?
-சரி, வாழ்த்துக்கள்.

255
00:12:49,686 --> 00:12:52,022
ஆமாம், நான் அதை
சொதப்பிவிட்டதாக நினைக்கிறேன்.

256
00:12:53,982 --> 00:12:56,944
இன்னும் 30 நிமிடங்களில் என் வேலை முடிகிறது
நீங்க விருப்பப்பட்டால்...

257
00:12:57,027 --> 00:12:58,195
கண்டிப்பாக மாட்டீர்கள்,
நீங்க ஏன் அப்படி செய்யணும்?

258
00:13:00,322 --> 00:13:02,032
நாம் யாராக இருக்க விரும்புகிறோமோ
அதுவாகவே ஆகிறோம்.

259
00:13:05,118 --> 00:13:07,454
சூப்பர்மேன்.

260
00:13:10,666 --> 00:13:13,794
சரி, நான் இப்போது தான் அந்த அழகான
மார்ல்பரோ மனிதனை சந்தித்தேன்...

261
00:13:13,877 --> 00:13:16,713
-ஸ்டிங்க்கி எங்க? உன்னை விட்டுவிட்டாளா?
-இல்லை, கழிப்பறைக்கு போயிருக்காங்க.

262
00:13:17,130 --> 00:13:18,298
ஏன் "ஸ்டிங்க்கி" என சொல்கிறீர்கள்?

263
00:13:19,091 --> 00:13:21,218
அவள் எங்கள் நகரத்திற்கு முதன்முதலாக
வந்த நாள் நினைவிருக்கு.

264
00:13:21,301 --> 00:13:23,262
அவள் என்னை விட உயரமாக இருந்தாள்,
பெரிய மார்பகம் இருந்தது.

265
00:13:23,762 --> 00:13:26,390
பணக்கார குடும்பம்.
எனவே, ஏழாம் வகுப்பின் முதல் நாளில்,

266
00:13:26,473 --> 00:13:29,142
நான் எல்லோரிடமும் அவள்
செல்ல பெயர் "ஸ்டிங்க்கி" என சொன்னேன்.

267
00:13:29,643 --> 00:13:30,644
அது மகத்தானது.

268
00:13:31,895 --> 00:13:33,230
எங்களது நட்பிற்காக.

269
00:13:33,313 --> 00:13:34,523
ரெபேக்காவிற்காக.

270
00:13:35,899 --> 00:13:37,818
ஆமாம், அது ரெபேக்கா இல்லை.

271
00:13:38,944 --> 00:13:39,945
நீ என்ன சொல்றீங்க?

272
00:13:40,654 --> 00:13:42,281
இல்லை, உண்மையான ரெபேக்கா
முட்டாள்தனமானவள்.

273
00:13:42,990 --> 00:13:44,533
உறுதியானவள், ஆமாம்,
ஆனால் மோசமானவள் கிடையாது.

274
00:13:45,284 --> 00:13:47,494
-அவள் பாடி நீ கேட்டிருக்கிறாயா?
-இல்லை.

275
00:13:47,578 --> 00:13:49,121
அழகான குரல்.

276
00:13:50,122 --> 00:13:52,207
நோராவும் அவளும் பல மணி நேரங்கள்
பாடிக்கொண்டே இருப்பார்கள்.

277
00:13:54,376 --> 00:13:56,211
-யார் நோரா?
-என் மகள்.

278
00:13:56,295 --> 00:13:57,504
ஓ, ஆமாம்.

279
00:13:57,588 --> 00:14:00,132
ஆமாம், அவளை உனக்குப் பிடித்தால்,
ரெபேக்காவை ரொம்ப பிடிக்கும்.

280
00:14:01,592 --> 00:14:03,302
-தயாரா?
-அப்போ பில்?

281
00:14:03,385 --> 00:14:05,888
-நன்றி, மிஸ். வெல்டன்.
-சரி.

282
00:14:08,765 --> 00:14:10,976
வழக்கம் போல, நீ பணம் கொடுப்பது போல
நடிக்க விரும்புகிறாயா?

283
00:14:11,059 --> 00:14:12,936
ஆமாம். அது ரொம்ப வேடிக்கையானது.
நீயும் நடி.

284
00:14:13,604 --> 00:14:16,148
மோசமானவளே!
நான் அதைத்தான் செய்யவிருந்தேன்!

285
00:14:16,231 --> 00:14:19,067
-என் அட்டையை வெளியே எடுக்க வந்தேன்.
-நீ இப்படி செய்ததை நம்ப முடியலை.

286
00:14:19,151 --> 00:14:22,112
-நாங்க பங்கிடவிருந்தோம். அது நல்லது.
-ஆறு வருடங்கள் இதற்காக காத்திருந்தேன்...

287
00:14:32,497 --> 00:14:35,792
விவாகரத்திற்கான புகார்

288
00:14:35,876 --> 00:14:37,961
மிஷல் லாஸ்ஸோ
தியடோர் லாஸ்ஸோ

289
00:14:50,807 --> 00:14:52,309
நான் ப்ரையன் ஸ்வான்ஸன். மிஷலின் வழக்கறிஞர்
அவள் உங்களோடு என்னை பேச சொன்னாள்.

290
00:14:52,392 --> 00:14:53,977
நல்ல செய்தி! கையெழுத்திட்ட பத்திரங்களின்
புகைப்படத்தை மின்னஞ்சல் செய்தால் போதும்.

291
00:15:10,619 --> 00:15:13,038
-நீ என்ன செய்கிறாய்?
-மன்னிச்சிடுங்க. நான் வந்து...

292
00:15:13,121 --> 00:15:14,122
நீ வந்து என்ன?

293
00:15:14,831 --> 00:15:17,084
-இது என்ன?
-இது இந்த அணியைப்பற்றிய எனது எண்ணங்கள்.

294
00:15:17,167 --> 00:15:19,253
போ, நேத்தன். போ, ரொம்ப நேரமாகிவிட்டது.

295
00:15:19,336 --> 00:15:20,796
-போ! இங்கிருந்து போய் விடு!
-மன்னிச்சிடுங்க.

296
00:15:36,728 --> 00:15:39,773
இரவு வாழ்க்கை என்று வரும் போது
லிவெர்பூலில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

297
00:15:39,857 --> 00:15:45,571
மதுபான கடைகள் மற்றும் கிளப்புகள், ஆசிய
ஓய்வு நேர விருப்பமான கரயோகி எல்லாம் உண்டு.

298
00:15:45,654 --> 00:15:50,033
நீங்கள் கலை ஆர்வம் மிக்கவரானால்,
அல்லது காதலியை கவர நினைத்தால்,

299
00:15:50,117 --> 00:15:51,952
லிவெர்பூலில் நிறைய அருங்காட்சியகங்களும்
கலை காட்சி கூடங்களும் இருக்கின்றன...

300
00:15:52,703 --> 00:15:56,164
குட்டீஸன் பார்க்கிற்கு வரவேற்கிறோம்.
கிரிஸ் பாவெலுடன் நான் ஆர்லோ வைட்.

301
00:15:56,248 --> 00:15:58,959
சரி, நண்பர்களே!
இங்கு திண்பண்டங்கள் இருக்கின்றன!

302
00:15:59,042 --> 00:16:02,379
முதல்பாதியிலேயே எல்லாவற்றையும் சாப்பிடாமல்
இருக்கணும். வாழ்த்துகள், ரிச்மண்ட்!

303
00:16:02,462 --> 00:16:05,048
எட்டாவது இடத்தில் இருக்கும் எவெர்டன்
18வது மற்றும்

304
00:16:05,132 --> 00:16:08,010
வெளியேறும் நிலையில் இருக்கும்
ஏஎஃப்சி ரிச்மண்ட்டுடன் விளையாடுகிறது.

305
00:16:08,093 --> 00:16:10,220
சென்ற முறை ரிச்மண்ட் அணி இங்கிருந்து
வெற்றியோடு திரும்பியபோது,

306
00:16:10,304 --> 00:16:14,975
எல்விஸ் பிரெஸ்லியின் "இப்போதில்லையென்றால்
என்றுமில்லை" என்ற பாடல் முதலிடம் பெற்றது.

307
00:16:15,058 --> 00:16:18,478
நிச்சயமாக டெட் லாஸ்ஸோவின்
ஆட்களுக்கும் இன்றிரவு அதே நிலைதான்.

308
00:16:19,354 --> 00:16:21,481
-நேட், உன்னிடம் கொஞ்சம் பேசணும், முடியுமா?
-சரி.

309
00:16:25,944 --> 00:16:27,279
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?

310
00:16:27,362 --> 00:16:31,575
நேற்றிரவு நடந்ததற்கு மன்னிப்பு கேட்கணும்.
எந்த காரணமுமின்றி கோபப்பட்டுவிட்டேன்,

311
00:16:31,658 --> 00:16:33,785
அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், மேலும்
நீ என்னை மன்னிப்பாய் என நம்புகிறேன்.

312
00:16:34,536 --> 00:16:36,330
ஆம், நிச்சய... நிச்சயமாக.

313
00:16:36,413 --> 00:16:40,959
நன்றி. அப்புறம்,
உன் கருத்துகளை நான் படித்தேன்.

314
00:16:41,043 --> 00:16:42,961
-சரி.
-அவை அருமையாக இருந்தன.

315
00:16:44,463 --> 00:16:46,548
அதிலுள்ள ஒவ்வொரு வரியையும்
நான் ஒப்புக்கொள்கிறேன்.

316
00:16:46,632 --> 00:16:48,509
ஆனால் என்னால் இதை
அவர்களிடம் சொல்ல முடியாது.

317
00:16:48,592 --> 00:16:50,594
-ஆனால் அவர்கள் அதை தெரிஞ்சிக்கணும்.
-சரிதான்.

318
00:16:51,386 --> 00:16:52,513
அதனால்தான் நீ அதை செய்யப் போகிறாய்.

319
00:16:53,555 --> 00:16:54,556
நீங்கள் குடித்திருக்கிறீர்களா?

320
00:16:54,640 --> 00:16:57,267
அவர்களுக்கு இதை படித்துக் காட்டி, ஆட்டம்
தொடங்கும் முன் நீ ஊக்க உரை நடத்துவாய்.

321
00:16:58,852 --> 00:17:01,522
-எனக்குத் தெரியாது.
-அது வேடிக்கையாக இருக்கும்.

322
00:17:03,524 --> 00:17:05,025
வேண்டாம். வேண்டாம், வேண்டாம்.

323
00:17:06,276 --> 00:17:07,319
அடக் கடவுளே.

324
00:17:07,986 --> 00:17:09,154
சரி, கவனியுங்கள், நண்பர்களே.

325
00:17:09,238 --> 00:17:12,031
அண்மையில், என்னுடைய உளறல்களை
போதுமான அளவிற்கு கேட்டுவிட்டீர்கள்.

326
00:17:12,115 --> 00:17:15,368
எனவே உங்களையும் இன்றைய ஆட்டத்தையும்
பற்றி நேட் தன் எண்ணங்களையும் யோசனைகளையும்

327
00:17:15,452 --> 00:17:17,162
பகிர்ந்துகொள்ளுமாறு
நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

328
00:17:17,246 --> 00:17:18,372
எனவே கவனமாக கேளுங்கள்.

329
00:17:18,454 --> 00:17:20,082
-நீ துவங்கு, நேட்.
-சரி.

330
00:17:27,005 --> 00:17:29,967
-தொடங்கலாம், நேட்.
-ஆரம்பிக்கலாம். உன்னால் முடியும்.

331
00:17:30,050 --> 00:17:33,053
-உன்னால் முடியும், நேட். பரவாயில்லை.
-சரி. நன்றி. நாம் செய்யலாம்.

332
00:17:35,722 --> 00:17:36,723
ஐசக்.

333
00:17:39,226 --> 00:17:41,520
ஆம், ஆம்.
ஆம், உன்னால் முடியும், நண்பா, சரியா?

334
00:17:41,603 --> 00:17:42,646
ஆமாம்.

335
00:17:42,729 --> 00:17:44,064
நான் சமீபத்தில் கவனித்தேன்...

336
00:17:49,236 --> 00:17:51,363
நீ பெரும் கோழையை
போல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

337
00:17:54,992 --> 00:17:55,993
ஐயோ.

338
00:17:56,827 --> 00:17:58,328
என்னை பற்றி நீ என்ன சொன்னாய், நண்பா?

339
00:17:59,454 --> 00:18:02,457
உண்மையாகவே கடுமையாக இருப்பதைவிட அப்படி
காட்டிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறாய்

340
00:18:02,541 --> 00:18:04,668
உடல் ரீதியாக இல்லாமல்
கடுமையாக இருப்பதற்கு வேறு வழி இருக்கு.

341
00:18:04,751 --> 00:18:06,336
நீ தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய்
என நம்புகிறேன்.

342
00:18:08,005 --> 00:18:09,840
-சாம்.
-ஓ, வேண்டாம்.

343
00:18:09,923 --> 00:18:11,800
விங்ஸ் பகுதியில்
நீ தொடர்ந்து தோல்வியடைகிறாய்.

344
00:18:11,884 --> 00:18:13,010
உன்னால் விரைந்து முடிவெடுக்க
முடியாததே அதற்கு காரணம்.

345
00:18:13,093 --> 00:18:14,845
நீ மிக மோசமாக கணிக்கிறாய்.

346
00:18:15,679 --> 00:18:17,931
தன்னுடைய எண்ணங்களால்
சிறையடைக்கப்பட்டுள்ள எனக்குத் தெரிந்த

347
00:18:18,015 --> 00:18:19,349
ஒரே ஆப்பிரிக்கர் நெல்சன் மண்டேலா மட்டுமே.

348
00:18:22,102 --> 00:18:23,103
நீ அதைக் கேட்டாயா?

349
00:18:23,187 --> 00:18:26,064
இதை வேடிக்கையாக கருதுகிறாயா, காலின்?
நீயும் உன் மோசமான ஏமாற்று வேலையும்.

350
00:18:26,148 --> 00:18:27,608
உன்னிடம் இதை கேட்கிறேன். அந்தரங்க
பகுதியில் இருக்கும் முடியை எடுப்பாயா?

351
00:18:28,650 --> 00:18:29,568
என்ன?

352
00:18:29,651 --> 00:18:31,862
நான் தவறாக சொன்னேனா, முட்டாளே?
நீ அப்படி செய்வாயா? ஆம் அல்லது இல்லை.

353
00:18:31,945 --> 00:18:32,988
இல்லை.

354
00:18:33,071 --> 00:18:35,157
அப்படியென்றால் எப்போதும் ஏன் பிரேசில்காரனை
போல் விளையாட முயற்சிக்கிறாய்?

355
00:18:35,741 --> 00:18:36,742
ஆம்.

356
00:18:38,243 --> 00:18:39,203
இப்போது என்ன நடந்தது?

357
00:18:39,286 --> 00:18:41,538
-ரோஹாஸ்.
-என்னை அவமானப்படுத்து, நண்பா.

358
00:18:41,622 --> 00:18:43,665
சரி. கால்பந்து தான் வாழ்க்கை என
கூறுகிறாய், இல்லையா?

359
00:18:43,749 --> 00:18:45,250
கால்பந்துதான் வாழ்க்கை.

360
00:18:45,334 --> 00:18:46,919
அப்போ, உன் தற்காப்பு ஆட்டம்
மோசமாக இருக்கு.

361
00:18:47,836 --> 00:18:50,839
நான் பார்த்ததிலேயே கேரி பிராட்ஷா தான்
அடிக்கடி தவறவிடும் நபர்.

362
00:18:52,841 --> 00:18:54,635
செக்ஸ் அண்ட் தி சிட்டி

363
00:18:56,595 --> 00:18:58,263
-ஆம்.
-கடினம் ஆனால் நியாயமானது.

364
00:18:58,347 --> 00:18:59,640
சரி. ராய்.

365
00:19:09,608 --> 00:19:12,236
சொல். நீ சொல்ல வேண்டியதை சொல்.

366
00:19:13,695 --> 00:19:14,780
சரி.

367
00:19:17,783 --> 00:19:19,284
அதைப் படிக்காதே.

368
00:19:20,577 --> 00:19:21,870
என்னை நேராக பார்த்துச் சொல்.

369
00:19:23,580 --> 00:19:25,499
மிகச்சிறந்த ராய் கென்ட்.

370
00:19:26,875 --> 00:19:28,335
இப்போது உனக்கு வயதாகிவிட்டது.

371
00:19:29,795 --> 00:19:33,173
மற்றும் மெதுவாகிவிட்டாய்.
மேலும் உன் கவனம் சிதறுகிறது.

372
00:19:33,257 --> 00:19:35,884
உன் வேகமும் விவேகமும் உன்னை உயர்த்தலை.

373
00:19:36,844 --> 00:19:39,763
உன்னுடைய கோபம்தான் அதுக்கு காரணம்.
அதுதான் உன்னுடைய மிகப்பெரிய சக்தி.

374
00:19:39,847 --> 00:19:42,683
அதுதான் இந்த லீக் வரலாற்றில்,
உன்னை மிகச்சிறந்த மிட்ஃபீல்டராக்கியது.

375
00:19:43,100 --> 00:19:45,561
ஆனால் இந்த சீசனில்
நான் அதை ஆடுகளத்தில் பார்க்கவில்லை, ராய்.

376
00:19:45,644 --> 00:19:48,272
அதாவது, புல்லின் மீது கோபமாக
இருப்பது போல் ஆடுகளத்தில் ஓடுவாய்.

377
00:19:48,355 --> 00:19:51,692
உன் மனைவியோடு உறவு கொள்ளும் போது
பிடித்ததை போல் பந்தை உதைப்பாய்.

378
00:19:52,943 --> 00:19:55,654
ஆனால் இப்போதெல்லாம் நீ விளையாடும்போது
அந்த கோபம் வெளியே வருவதில்லை.

379
00:19:55,737 --> 00:19:57,197
ஆனால் அது உள்ளுக்குள் இருக்கிறது.

380
00:19:59,074 --> 00:20:02,160
அதையெல்லாம் நீயே வைத்திருந்தால்,
உனக்கு என்னவாகும் என நான் பயப்படுகிறேன்.

381
00:20:28,896 --> 00:20:30,314
அந்த இழிவானவர்களை
ஒரு வழி பண்ணுவோம்.

382
00:20:36,904 --> 00:20:38,572
பார்த்தாயா? வேடிக்கையாக இருக்கும் என
சொன்னேனல்லவா.

383
00:20:48,290 --> 00:20:53,629
நடக்காத ஒன்று நடந்துவிட்டது. ரிச்மண்ட்
அணி எவர்ட்டனை 1-0 என வீழ்த்திவிட்டது.

384
00:20:53,712 --> 00:20:57,007
-ஆம், டெட்! ஆம்!
-ராய் கென்டின் அரிதான கோலின் உதவியுடன்.

385
00:20:57,090 --> 00:20:59,885
கென்ட் இன்று அற்புதமாக விளையாடினார்.
அவர் பேய் பிடித்தது போல் விளையாடினார்.

386
00:20:59,968 --> 00:21:03,222
ஆம்!

387
00:21:03,305 --> 00:21:06,808
நம்மால் நிச்சயம் முடியுமென நமக்கு உறுதியாக
தெரியும். சாகும் வரை நாம் ரிச்மண்ட்தான்.

388
00:21:06,892 --> 00:21:08,393
சாகும் வரை நாம் ரிச்மண்ட்தான்.
நாம் ரிச்மண்ட்...

389
00:21:08,477 --> 00:21:10,103
அட, கடவுளே!

390
00:21:10,187 --> 00:21:11,939
வா, வந்து கட்டிபிடி, நேட். ஆம்.

391
00:21:12,022 --> 00:21:13,565
-டெட்!
-ஹேய்!

392
00:21:14,107 --> 00:21:16,443
-வாழ்த்துக்கள்.
-நன்றி, தலைவரே.

393
00:21:16,527 --> 00:21:18,779
நான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்...

394
00:21:18,862 --> 00:21:21,990
-சாஸே ஸ்மர்ஃப்!
-மார்ல்பரோ மனிதன்! அட கடவுளே.

395
00:21:22,658 --> 00:21:24,493
நம்மால் நிச்சயம் முடியுமென
நமக்கு உறுதியாக தெரியும்...

396
00:21:25,911 --> 00:21:28,288
-நீ இங்கே இருப்பது எனக்குத் தெரியாது.
-ஆச்சரியம்!

397
00:21:28,372 --> 00:21:30,290
இந்த வார இறுதியில் நான் உனைப் பற்றி
நிறைய யோசித்தேன்.

398
00:21:30,374 --> 00:21:31,834
ஓ, அப்படியா? ஏன்?

399
00:21:31,917 --> 00:21:35,504
ஏனெனில் ஒவ்வொரு முறை நான் டிவியை இயக்கும்
போதும் நீயும் உன் முடியும் தோன்றுகிறது.

400
00:21:39,633 --> 00:21:41,468
ஓய்! கவனமாக கேளுங்கள்!

401
00:21:42,219 --> 00:21:44,429
இன்றிரவு நீங்கள் யாரும்
ஹோட்டலுக்கு திரும்பப் போவதில்லை.

402
00:21:44,513 --> 00:21:48,058
ஏனெனில் நம்மால் முடியும் என நாம் உட்பட,
யாரும் நினைக்காத ஒன்றை இன்று செய்துள்ளோம்!

403
00:21:48,141 --> 00:21:50,060
எனவே நாம் வெளியே சென்று கொண்டாடுகிறோம்,

404
00:21:50,143 --> 00:21:52,479
அதோடு நம் வெற்றியை
மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்துவோம்!

405
00:21:55,732 --> 00:21:58,110
ராய்! ராய்! நாம் எங்கே போகிறோம்?

406
00:21:59,069 --> 00:22:00,153
கீலி?

407
00:22:03,240 --> 00:22:05,450
வந்து, லிவர்பூலில்
நிறைய சலுகைகள் இருக்கின்றன.

408
00:22:05,534 --> 00:22:09,580
மதுபான கடைகள் மற்றும் கிளப்புகள், ஆசிய
ஓய்வு நேர விருப்பமான...

409
00:22:09,663 --> 00:22:14,042
-நான் இருக்கலாம் என்றேன்.
-இருக்கலாம் என்றேன்.

410
00:22:14,126 --> 00:22:16,545
நீங்கள் என்னைக் காப்பாற்றுபவராக
இருக்கப் போகிறீர்கள்

411
00:22:16,628 --> 00:22:19,339
என்னை காப்பாற்றுபவர்

412
00:22:19,423 --> 00:22:23,385
மேலும்

413
00:22:24,553 --> 00:22:29,725
நீங்கள் என்னுடைய அதிசய சுவர்

414
00:22:30,976 --> 00:22:32,227
நான் புகைப்பிடிக்கப் போகிறேன்.

415
00:22:32,311 --> 00:22:33,937
-நானும் வரவா?
-வா.

416
00:22:34,771 --> 00:22:37,149
நன்றி, ரிச்மண்ட் எஃப்சி!

417
00:22:40,027 --> 00:22:42,237
ஆக, அந்த மார்ல்பரோ மனிதனின் கதை என்ன?

418
00:22:42,321 --> 00:22:43,947
ஏனெனில் நான் அவருடன்

419
00:22:44,031 --> 00:22:46,700
உறவு கொள்ள விரும்புகிறேன்.

420
00:22:46,783 --> 00:22:50,120
-உன்னை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி, சாஸ்.
-உன்னையும், ஸ்டிங்க்கி.

421
00:22:52,289 --> 00:22:54,416
கடவுளே. இன்று என்னுடைய திருமண நாள்...

422
00:22:54,499 --> 00:22:57,377
நிச்சயம் எனக்குத் தெரியும்.
நான் ஏன் இங்கு வந்தேன் என நினைக்கிறாய்?

423
00:22:59,505 --> 00:23:00,881
என்னை மன்னிச்சிடு, தோழியே.

424
00:23:01,757 --> 00:23:04,968
உன்னிடம் இருந்தும், நோராவிடமிருந்தும்
விலகிப் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்,

425
00:23:06,803 --> 00:23:07,804
உண்மையாகவே.

426
00:23:07,888 --> 00:23:10,057
அதை சொன்னதற்கு நன்றி.

427
00:23:11,517 --> 00:23:13,602
கடவுளே, அவர் என்னை
மிகவும் காயப்படுத்திவிட்டார்.

428
00:23:14,102 --> 00:23:15,395
இல்லை.

429
00:23:15,479 --> 00:23:20,609
ரூபர்ட் மோசமானவர், ஒரு தந்த கோபுரத்தை
உருவாக்கி அதில் உன்னை சிறைபிடித்திருந்தார்

430
00:23:20,692 --> 00:23:25,113
ஆனால் அவர் இன்றி அந்த கோபுரத்தின் ஒவ்வொரு
படியையும் நீயாகவே ஏறி வந்துவிட்டாய்.

431
00:23:25,989 --> 00:23:28,534
வீட்டிற்கு வருவது, தொலைபேசியில் அழைப்பது
ஆகியவற்றை நீதான் நிறுத்திவிட்டாய்.

432
00:23:28,617 --> 00:23:31,870
தான் என்ன தவறு செய்தோம் என்று
ஆறு வயது பெண்ணை நினைக்க வைத்தாய்.

433
00:23:32,829 --> 00:23:34,706
நான் எப்போதும் உனக்காக பேசுவேன்,

434
00:23:34,790 --> 00:23:37,793
ஆனால் தொடர்பில் இல்லாமல்
போனதற்கு நீ தான் பொறுப்பாவாய்.

435
00:23:38,335 --> 00:23:39,461
நீ சொல்வது சரி.

436
00:23:39,545 --> 00:23:41,046
நிச்சயம் சரிதான்.
நான் எப்போதும் சரிதான்.

437
00:23:41,129 --> 00:23:43,090
நீ எப்போதுமே சரி கிடையாது. பெரும்பாலான
நேரங்களில் மோசமாக நடப்பாய்.

438
00:23:43,173 --> 00:23:45,884
இதோ இருக்கிறீர்கள். அப்பாடா.
என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என நினைத்தேன்.

439
00:23:45,968 --> 00:23:47,427
-இல்லை!
-அப்படியே!

440
00:23:47,511 --> 00:23:51,390
கடவுளே, இப்போது வரை கைவிடப்பட்ட
பிரச்சினைகள் இருந்ததாக எனக்கு தெரியலை.

441
00:23:51,473 --> 00:23:53,100
வாங்க, ரெபேக்கா.
அடுத்தது உங்க பாட்டு தான்.

442
00:23:53,183 --> 00:23:54,101
-என்ன?
-ஆமாம்.

443
00:23:54,184 --> 00:23:55,644
இல்லை, நான் பாடலை பாடுவதாக சொல்லலை.

444
00:23:55,727 --> 00:23:58,355
சரி, அப்படியென்றால் உங்களுக்காக வேறு
யாராவது போட்டிருப்பார்கள்.

445
00:23:59,439 --> 00:24:00,774
யார் அதை செய்திருப்பார்கள்?

446
00:24:00,858 --> 00:24:03,110
பார்த்தாயா? நீ மோசமானவள்.

447
00:24:03,193 --> 00:24:05,737
மோசமான காதலில் சிக்கியாயிற்று

448
00:24:11,910 --> 00:24:14,288
உங்களுடைய மோசமான காதல் வேண்டும்

449
00:24:18,667 --> 00:24:19,668
சரி, அடுத்த யார்?

450
00:24:19,751 --> 00:24:21,211
நான், நான், நான்.

451
00:24:22,087 --> 00:24:24,298
உன்னுடைய முறை, ரெபேக்கா.
இங்கே வந்து நில்.

452
00:24:24,381 --> 00:24:27,134
நன்றி. கடவுளே.

453
00:24:27,217 --> 00:24:30,470
சரி. என்ன பாடல் பாடுவேன்
என்றுகூட எனக்கு தெரியலை.

454
00:24:30,554 --> 00:24:34,224
ஆனால் ஒரு பெண்ணுக்கு எப்போதும் கிடைக்காத
சிறந்த நோழிக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

455
00:24:34,308 --> 00:24:35,976
அது நான் தான்!
அவள் என்னை பற்றி தான் பேசுகிறாள்!

456
00:24:43,025 --> 00:24:46,028
என்னுடைய ஞான மகள் நோராவிற்கும்
இதை சமர்ப்பிக்கிறேன்.

457
00:24:46,653 --> 00:24:47,654
உன்னை விரும்புகிறேன்.

458
00:26:20,122 --> 00:26:22,165
-டெட்.
-அப்பா?

459
00:26:22,666 --> 00:26:23,750
டெட்?

460
00:26:25,085 --> 00:26:26,086
டெட்.

461
00:26:29,631 --> 00:26:30,924
பரவாயில்லை.

462
00:26:31,550 --> 00:26:32,593
மூச்சு விட முயற்சி செய்யுங்க.

463
00:26:32,676 --> 00:26:37,097
என்னால் முடியலை. என்ன நடக்கிறது என்று
எனக்கு புரியலை. மன்னிச்சிடுங்க.

464
00:26:37,181 --> 00:26:40,559
சரி. உங்களுக்கு பதற்றத்தில் அடைப்பு
ஏற்பட்டுள்ளது. மூச்சு விடுங்க.

465
00:26:42,644 --> 00:26:43,979
எனக்கு பைத்தியம் பிடிக்கிறதா?

466
00:26:44,897 --> 00:26:46,398
மற்றவர்களை விட மோசம் இல்லை.

467
00:26:49,276 --> 00:26:50,777
சரி. நீங்க நன்றாக இருக்கீங்க.

468
00:26:52,613 --> 00:26:57,868
அவ்வளவுதான். அவ்வளவுதான்.
அவ்வளவுதான். மூச்சுவிடுங்க.

469
00:26:58,744 --> 00:26:59,745
மூச்சுவிடுங்க.

470
00:27:05,876 --> 00:27:06,960
அவ்வளவுதான்.

471
00:27:07,711 --> 00:27:09,463
இங்கிருந்து நான் கிளம்ப வேண்டும்.

472
00:27:09,546 --> 00:27:13,008
ஹோட்டலுக்கு சென்று இரவில் நன்றாக
ஓய்வெடுக்க வேண்டும், தெரியுமா?

473
00:27:13,091 --> 00:27:15,010
நான் உங்களுடன் வர வேண்டுமா?

474
00:27:15,886 --> 00:27:16,887
என் காரை எடுத்துச் செல்கிறீர்களா?

475
00:27:16,970 --> 00:27:19,848
இல்லை, வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன்.
இருந்தாலும் நன்றி. நன்றி.

476
00:27:19,932 --> 00:27:21,683
-சரி.
-சரி.

477
00:27:26,313 --> 00:27:29,608
ஹேய், ஒரு உதவி செய்யுங்க. பியர்டிடம்
நான் ஹோட்டலுக்கு சென்றதை சொல்லுங்க.

478
00:27:29,691 --> 00:27:32,236
கண்டிப்பாக.
நீங்க பத்திரமாக வீட்டிற்கு போங்க.

479
00:27:32,319 --> 00:27:33,654
-சரி, நன்றி.
-சரி.

480
00:27:34,446 --> 00:27:35,697
சரி.

481
00:28:52,524 --> 00:28:55,110
-வழிவிடுங்க, ரொம்ப குடித்தவன் வருகிறான்.
-ஆம்.

482
00:28:55,194 --> 00:28:58,447
நண்பர்களே. நாம் வீரர்களை பப்பிற்கு அழைத்து
செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

483
00:28:58,822 --> 00:29:01,742
எனக்கு சோர்வாக உள்ளது, சாஸ். மன்னிச்சிடு.

484
00:29:01,825 --> 00:29:03,911
உண்மையில், நானும் கிளம்பலாம்
என நினைக்கிறேன்.

485
00:29:03,994 --> 00:29:08,081
அப்படியென்றால் இளமையான, அழகான 18 ஆண்களை
நான் மட்டும் அழைத்துச் செல்ல வேண்டுமா?

486
00:29:08,165 --> 00:29:09,958
ஓ, கஷ்டம்.

487
00:29:10,042 --> 00:29:12,419
-அப்போ, சரி. பிறகு சந்திக்கலாம்.
-போய் வா. உன்னை நேசிக்கிறேன்.

488
00:29:12,503 --> 00:29:15,422
நண்பர்களே, என்னுடைய சட்டையை
கண்டுபிடிக்க முடியவில்லை.

489
00:29:15,506 --> 00:29:17,841
-அவன் நிறைய குடித்திருக்கிறான்.
-உங்களுக்கு இது தேவையில்லை.

490
00:29:18,759 --> 00:29:20,427
சரி, மீண்டும் ஹோட்டலில் விடவேண்டுமா?

491
00:29:20,511 --> 00:29:24,765
வேண்டாம்.
நடந்து செல்லலாம் என்று இருக்கிறேன்.

492
00:29:29,061 --> 00:29:31,021
உங்களுடன் வர வேண்டும் என்று
நீங்க விரும்பினால், வருகிறேன்.

493
00:29:31,104 --> 00:29:33,357
-எனக்குப் பரவாயில்லை. உண்மையாக.
-அப்படியா?

494
00:29:33,440 --> 00:29:35,526
மேலும், அது நேற்று.

495
00:29:37,778 --> 00:29:40,280
-பொன்னான நேரத்தை நீ வீணாக்குகிறாய்.
-சரி. நான் போகிறேன்.

496
00:30:00,467 --> 00:30:01,635
இதுதான் என் அறை.

497
00:30:02,678 --> 00:30:06,348
ரெபேக்காவுடன் சிறப்பு அறையில் இருக்கிறேன்.
இருந்தாலும் தனித்தனி படுக்கையறைகள் தான்.

498
00:30:22,990 --> 00:30:24,074
இரவு வணக்கம்.

499
00:30:47,848 --> 00:30:49,641
டெட் லாஸ்ஸோ - நல்ல முறையில் நடந்து
கொண்டதற்கு நன்றி. இன்றிரவு மட்டுமல்ல.

500
00:30:49,725 --> 00:30:51,727
ஆனால் இந்த முழு சாகசத்திலும்.
இது உண்மையில் குறிப்பிடத்தக்கது.

501
00:31:58,919 --> 00:32:00,921
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

