1
00:00:18,977 --> 00:00:19,978
ஹலோ, என் செல்லமே.

2
00:00:21,021 --> 00:00:22,439
கோச்! இங்கே வாங்க.

3
00:00:27,152 --> 00:00:28,570
அப்பாடா.

4
00:00:28,654 --> 00:00:30,239
ஸீ-மேன், டானி.

5
00:00:33,951 --> 00:00:35,869
அவன் ஒரு அழகான ஆண்-தேவதை போல இருக்கிறான்.

6
00:00:40,040 --> 00:00:41,250
காலை வணக்கம், அன்பே.

7
00:00:41,333 --> 00:00:42,668
நீ நலமாக இருக்கிறாயா?

8
00:00:42,751 --> 00:00:45,128
பேருந்தை தவற விடக் கூடாது என்பதற்காக,
நான் இங்கேயே தூங்கிவிட்டேன்.

9
00:00:45,212 --> 00:00:46,630
எனக்கு வாந்தி வருகிறது. மன்னிக்கவும்.

10
00:00:47,339 --> 00:00:48,340
அட, கடவுளே.

11
00:00:56,640 --> 00:00:58,684
பொறு. நான் என்ன செய்கிறேன்?
இது என்னுடைய அறை.

12
00:00:58,767 --> 00:01:00,352
ஓய்! வெளியே போ.

13
00:01:01,395 --> 00:01:03,480
நேட்டை கண்டு பிடித்துவிட்டோம்.
ரொம்ப குடித்திருக்கிறான்.

14
00:01:04,772 --> 00:01:05,858
ஹே, பாருங்க.

15
00:01:06,775 --> 00:01:08,694
ஹே. காலை வணக்கம்.

16
00:01:08,777 --> 00:01:10,529
உங்களுக்கு காபி கொண்டு வந்திருக்கிறேன்.

17
00:01:10,612 --> 00:01:12,155
-நன்றி.
-சரி.

18
00:01:12,239 --> 00:01:13,323
நீங்க முன்னரே எழுந்துட்டீங்களா?

19
00:01:14,324 --> 00:01:15,325
ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாகிறது.

20
00:01:15,826 --> 00:01:18,161
தெரியுமா? மொத்தம் மூன்று மணி நேரம்
என நினைக்கிறேன்.

21
00:01:19,246 --> 00:01:20,539
நேற்றிரவு மகிழ்ச்சியாக கழிந்தது.

22
00:01:20,622 --> 00:01:23,876
ஓ, ஆமாம். மிகச் சிறப்பாக இருந்தது.
புதுசாக இருந்தது.

23
00:01:25,252 --> 00:01:27,337
-நீங்க கிளம்ப வேண்டுமா?
-ஆமாம்.

24
00:01:27,421 --> 00:01:29,923
ஆனால், பாருங்க, நீங்க அவசரமாக
எங்கும் போக வேண்டியதில்லை.

25
00:01:30,007 --> 00:01:31,758
நீங்க தாமதமாக வெளியேற
ஏற்பாடு செய்துவிட்டேன்.

26
00:01:32,843 --> 00:01:34,595
நீங்க செய்தது பெரிய உதவி.

27
00:01:35,095 --> 00:01:36,555
சரி. நீங்க கிளம்புங்க.

28
00:01:36,638 --> 00:01:37,931
நான் இப்போது தூங்கப் போகிறேன்,

29
00:01:38,015 --> 00:01:41,894
அதன் பிறகு உங்க கணக்கில பிரமாண்ட
காலை உணவு வரவழைத்து சாப்பிடப் போகிறேன்.

30
00:01:41,977 --> 00:01:43,979
அது ஒரு அற்புதமான முடிவு. சரி.

31
00:01:44,062 --> 00:01:46,440
ஹே, எப்போதுமே என் கணக்கில
நீங்க சாப்பிடலாம்.

32
00:01:46,815 --> 00:01:49,943
சரி. வந்து... உங்களை மீண்டும் சந்திப்பேன்,
என்று நினைக்கிறேன்.

33
00:02:29,650 --> 00:02:30,651
கோச்.

34
00:02:33,362 --> 00:02:34,363
ஹே. கோச்.

35
00:02:35,489 --> 00:02:36,740
-கோச்.
-என்ன?

36
00:02:36,823 --> 00:02:38,825
-எதாவது யோசனையா, கோச்?
-இல்லை, ஏன் கேட்கிறாய்?

37
00:02:38,909 --> 00:02:41,370
நாம் ஐந்து மணி நேரமாக பேருந்தில் பயணம்
செய்தோம் ஆனால் நீங்க ஒன்றும் பேசவில்லை,

38
00:02:41,453 --> 00:02:43,455
மற்றும் அதுவே ஐந்து மணி நேர சாதனை தான்.

39
00:02:48,418 --> 00:02:50,170
சரி, பார். உன்னிடம் ஒன்று சொல்லப் போகிறேன்

40
00:02:50,254 --> 00:02:52,297
ஆனால் இதற்கு பிறகு அதைப் பற்றி பேச எனக்கு
விருப்பமில்லை, சரியா?

41
00:02:52,381 --> 00:02:53,966
-சரி.
-நான் உறுதியாக சொல்கிறேன்.

42
00:02:54,049 --> 00:02:55,467
நீ அதைப்பற்றி வேடிக்கையாக பேசக்கூடாது.

43
00:02:55,551 --> 00:02:57,970
அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்கக்கூடாது.

44
00:02:58,053 --> 00:02:59,346
-நான் சொல்வது புரிகிறதா? சரி.
-சரி.

45
00:03:01,932 --> 00:03:03,642
நேற்று இரவு, நான்...

46
00:03:04,935 --> 00:03:07,187
ரெபேக்காவின் தோழி சாஸேயோடு
நான் உறவு கொண்டேன்.

47
00:03:09,273 --> 00:03:11,942
-அதைப் பற்றி பேசணுமா?
-ஆம். பேசணும். உடனடியாக பேசணும்.

48
00:03:14,903 --> 00:03:16,405
இங்கே இருக்கிறாய்.

49
00:03:16,488 --> 00:03:18,156
இந்த அறையில் பேய் இருப்பதாக நினைத்தேன்.

50
00:03:18,740 --> 00:03:20,409
இல்லை. நாங்கள் அதை சரி செய்துவிட்டோம்.

51
00:03:21,201 --> 00:03:22,786
பேசுவதற்கு இது சரியான நேரம் தானா?

52
00:03:22,870 --> 00:03:25,080
ஆம். நீ உள்ளே வா. அவற்றை காதுகளில்
வைத்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கேட்காது.

53
00:03:25,163 --> 00:03:26,164
நிச்சயமாகவா?

54
00:03:27,249 --> 00:03:29,626
கெயில், அரச குடும்பத்தினர்கள் எல்லாம்
பல்லிகள் என்று நினைக்கிறாய், சரியா?

55
00:03:32,087 --> 00:03:34,256
இருபத்திமூன்று வயது. மிகவும் இளமை.

56
00:03:34,339 --> 00:03:35,674
அவள் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறாள்?

57
00:03:35,757 --> 00:03:37,467
கொலைகள் பற்றிய போட்காஸ்ட்கள்.

58
00:03:40,220 --> 00:03:41,805
நேற்று இரவு மகிழ்ச்சியாக இருந்தது.

59
00:03:41,889 --> 00:03:44,975
ஆமாம், சரி. அது முறையற்றதாக இருந்தது.

60
00:03:46,143 --> 00:03:50,022
இந்த போதையை மாற்ற நான் ஒரு வாளி நிறைய
காபி குடிக்க வேண்டும்.

61
00:03:52,816 --> 00:03:54,943
உன் வேலை முடிந்த பிறகு
என்னுடன் காபி குடிக்க வருகிறாயா?

62
00:03:55,027 --> 00:03:57,696
என்னால் இன்று வர முடியாது.
நான் வேலையாக இருக்கிறேன்.

63
00:03:57,779 --> 00:03:58,989
அவன் பொய் சொல்கிறான்.

64
00:04:00,574 --> 00:04:02,534
சரி. இப்போது அவள் என் கால் தசைகளை,

65
00:04:02,618 --> 00:04:05,579
நன்கு மசாஜ் செய்யும்போது நான் ரொம்ப
சத்தம் போடுவேன், அதை மற்றவர்கள்

66
00:04:05,662 --> 00:04:07,414
கேட்பது எனக்கு பிடிக்காது எனவே நீ கிளம்பு.

67
00:04:07,497 --> 00:04:09,708
சரி. சரி.
நான் உன்னை பிறகு சந்திக்கிறேன், சரியா?

68
00:04:10,375 --> 00:04:11,376
சரி.

69
00:04:13,587 --> 00:04:16,757
வந்து, நான் இது போல இதுவரை
செய்ததில்லை, சரியா?

70
00:04:16,839 --> 00:04:20,260
மேலும், ஒரு இரவு உறவு கொள்பவர்களைப் பற்றி
நான் எந்த கருத்தும் சொல்வதில்லை, சரியா?

71
00:04:20,344 --> 00:04:24,473
வந்து, உனக்கு, உறவு கொள்ள பிடிக்குமென்றால்
தாராளமாக செய். நான் அதைத்தான் சொல்வேன்.

72
00:04:24,556 --> 00:04:25,682
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்களா, கோச்?

73
00:04:25,766 --> 00:04:28,393
விடுங்க, கோச். எனக்கு இந்த மாதிரி
விஷயங்களைப்பற்றி பேசப் பிடிக்காது.

74
00:04:28,477 --> 00:04:31,021
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்களா, கோச்?

75
00:04:34,191 --> 00:04:35,359
அவங்களும் மகிழ்ச்சியாக இருந்தாங்களா?

76
00:04:37,945 --> 00:04:41,156
சரி, அந்த மாதிரி தலையசைப்பது
எனக்கு வினோதமாக இருக்கு.

77
00:04:41,240 --> 00:04:42,950
சரி. அப்படி என்றால், என்ன தான் பிரச்சனை?

78
00:04:43,033 --> 00:04:45,744
வந்து, லிவெர்பூலில் ஒரு பாடும் விடுதியில்
மன உளைச்சலுக்கு ஆளான நான்

79
00:04:45,827 --> 00:04:50,082
அப்போது தான் சந்தித்த
ஒரு பெண்ணுடன் உறவு கொண்டேன் என்பதை

80
00:04:50,165 --> 00:04:52,543
என்னால், இன்னும் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.

81
00:04:52,626 --> 00:04:55,087
இவற்றிற்கு இடையில்,
ஒரு விவாகரத்தும் பெறப் போகிறேன்.

82
00:04:55,170 --> 00:04:57,798
-இது அர்த்தமுள்ளதாக படுகிறது.
-இது அற்புதமானது என்று நான் சொல்லியாகணும்.

83
00:04:58,632 --> 00:04:59,633
என் சிறு வயதிலிருந்தே,

84
00:04:59,716 --> 00:05:01,844
என் நண்பர்களோடு உட்கார்ந்து
ஆண் பெண் உறவின் சிக்கலான

85
00:05:01,927 --> 00:05:04,012
விஷயங்களைப் பற்றி விவாதிக்கணும் என
கனவு கண்டுள்ளேன்.

86
00:05:06,557 --> 00:05:09,017
சரி, எல்லோருக்கும் மற்றுமொரு கேள்வி.
நான் ரெபேக்காவிடம் சொல்லணுமா?

87
00:05:09,101 --> 00:05:11,186
-வேண்டாம்.
-அப்படியா. ஏன் வேண்டாம்?

88
00:05:11,270 --> 00:05:14,189
அதாவது, அவங்க என்னிடம் ஏதாவது மறைத்தால்
என் உள்ளம் சிதறிவிடும்.

89
00:05:18,652 --> 00:05:21,363
-என்ன நடக்கிறது? கூட்டம் நடத்துகிறீர்களா?
-ஆமாம். எனக்கு பெண் உறவில் பிரச்சனை.

90
00:05:21,446 --> 00:05:23,282
-உன் அபிப்பிராயத்தை தெரிஞ்சிக்கணும்.
-இல்லை.

91
00:05:24,825 --> 00:05:25,951
உங்களிடம் உண்மையை சொல்லலாமா, டெட்?

92
00:05:26,034 --> 00:05:27,244
சரி, சொல்லுங்க.

93
00:05:27,327 --> 00:05:31,290
நீ உன் மீது எதற்காக
இப்படி பழி சுமத்திக் கொள்கிறாய். ஏன்?

94
00:05:32,040 --> 00:05:33,250
நீ என்ன தவறு செய்தாய்?

95
00:05:34,084 --> 00:05:35,085
அவர் சொல்வது சரிதான்.

96
00:05:35,919 --> 00:05:37,254
இதற்கான நேரம் வந்துவிட்டது.

97
00:05:37,671 --> 00:05:38,672
என்ன, கத்திரிக்கோலா?

98
00:05:38,755 --> 00:05:40,507
ஆமாம். உங்களுக்கு நீங்களே
கொஞ்சம் கரிசனம் காட்ட.

99
00:05:42,509 --> 00:05:43,760
அற்புதம்.

100
00:05:44,553 --> 00:05:47,014
ரொம்ப நல்லா பேசினீங்க.
நன்றாக இருந்தது,

101
00:05:47,097 --> 00:05:49,808
"டெட் லாஸ்ஸோவின் அந்தரங்க மனக்
குழப்பக் குழு" என்று நூலில் பொறிக்கப்பட்ட

102
00:05:49,892 --> 00:05:53,478
சாட்டின் மேல்ச்சட்டைகளை உங்களுக்காக
நான் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.

103
00:05:53,562 --> 00:05:55,564
அந்த பெயர் நன்றாக இல்லை.
வேறு ஏதாவது சிறந்த பெயர் இருக்கும்.

104
00:05:55,647 --> 00:05:59,151
இரு யோசிக்கிறேன். இப்போது தெரிந்தது.
"மனவலிமை வீரர்கள்" என்பது எப்படி இருக்கு?

105
00:05:59,651 --> 00:06:01,278
"ஆதரவின் வீரர்கள்?"

106
00:06:01,862 --> 00:06:04,239
வேண்டாம். நன்றாகவே இல்லை.

107
00:06:05,324 --> 00:06:07,868
"பெருமையான வீரர்கள்?"

108
00:06:10,370 --> 00:06:11,830
"டைமண்ட் டாக்ஸ்" நல்லா இருக்கா?

109
00:06:12,789 --> 00:06:15,501
அதேதான், நேட்.
அந்த பெயர் டைமண்ட் டாக்ஸ் தான்.

110
00:06:22,758 --> 00:06:24,259
உன் 'வேலையை' சீக்கிரமாக
முடித்துவிட்டால் எனக்கு சொல்.

111
00:06:24,343 --> 00:06:25,761
பதில் சொல்லு, ராய்.

112
00:06:25,844 --> 00:06:27,721
நாம் மதுபானம் குடிக்க அல்லது
வேறு எதற்காவது சந்திக்கலாம்

113
00:06:36,021 --> 00:06:37,898
நீ மான்செஸ்டரில் இருப்பாய் என நினைத்தேன்.

114
00:06:37,981 --> 00:06:39,983
நாங்கள் வெஸ்ட் ஹாம்மோடு விளையாடினோம்,
அதனால் இங்கே இருக்கிறேன்.

115
00:06:41,443 --> 00:06:43,654
சரி. உள்ளே வா. நீ எப்படி இருக்க?

116
00:06:43,737 --> 00:06:44,863
ஆம், நல்லா இருக்கேன்.

117
00:06:45,447 --> 00:06:48,075
பத்து முறை பந்தை அடித்தேன்,
இரண்டு முழு ட்ரிபில்கள் செய்தேன்,

118
00:06:48,158 --> 00:06:49,993
மற்றும் 89 ஆம் நிமிடத்தில்
ஒரு ஃபிரீ கிக் கிடைத்தது.

119
00:06:50,077 --> 00:06:51,870
நான் கோல் போட்டேன்.
பாதி கிளர்ச்சியுற்றேன்.

120
00:06:51,954 --> 00:06:55,123
எனவே பாதி கிளர்ச்சியை இங்கே கொண்டு
வரலாம் என்று நினைத்தாய், அப்படித்தானே?

121
00:06:55,207 --> 00:06:57,793
இல்லை. இல்லை, எனக்கு... பேச வேண்டும்.

122
00:06:59,294 --> 00:07:01,797
என்னை லாஸ்ஸோ வெளியேற்றிய பின்
எல்லாமே விரைவாக நடந்துவிட்டது.

123
00:07:01,880 --> 00:07:05,676
ஓய். இங்கே பார். லாஸ்ஸோ உன்னை வெளியேற்றலை.
மேன்சிட்டி தான் உன்னை திரும்ப கேட்டார்கள்.

124
00:07:05,759 --> 00:07:08,470
இல்லை. லாஸ்ஸோ நினைத்திருந்தால்
தடுத்திருக்கலாம், ஆனால் அவர் செய்யலை. சரி.

125
00:07:08,554 --> 00:07:11,181
கொஞ்சம் என்னை சொல்லவிடு, சரியா?

126
00:07:13,433 --> 00:07:14,852
நான் நிறைய பெண்களோடு பழகினேன், சரியா?

127
00:07:14,935 --> 00:07:19,731
ஆனால் ஏற்கனவே சிறப்பாக இருந்த ஜேமிக்குள்
இன்னொரு சிறப்பான ஜேமியை நீ பார்த்தாய்.

128
00:07:21,358 --> 00:07:23,527
நீயே என்னை பண்பட்டவனாய் ஆக்கினாய். என்னை
நாடகம் போன்றவற்றிற்கு அழைத்துச் சென்றாய்.

129
00:07:23,610 --> 00:07:24,945
உனக்கு அது எதுவுமே பிடிக்கவில்லையே.

130
00:07:25,028 --> 00:07:26,113
ஆம், அவை குழப்பமாக இருந்ததால்.

131
00:07:26,196 --> 00:07:29,324
அவர்கள் உணர்ச்சிகரமாக நடித்து,
நம்மையும் உணர்ச்சிகரமாக ஆக்கிவிடுகிறார்கள்

132
00:07:29,408 --> 00:07:31,660
அவர்கள் நடித்துக்கொண்டு இருக்கும்போது
நாம் இடையே சத்தமாக பேசினால்

133
00:07:31,743 --> 00:07:33,370
அவர்களுக்குக் கோபம் வரும்.

134
00:07:34,329 --> 00:07:35,539
அது குழப்பமானது.

135
00:07:38,000 --> 00:07:40,669
என் விருப்பமே எப்போதும் நடக்க வேண்டும் என
சொன்ன என்னை நீ திருத்தினாய்.

136
00:07:40,752 --> 00:07:44,256
எனவே... அதற்கு நன்றி.

137
00:07:46,133 --> 00:07:47,509
பரவாயில்லை, ஜேமி.

138
00:07:52,097 --> 00:07:54,349
பார், இந்த நகருக்கு நீ வந்து
பாலியல் ரீதியான படத்தை

139
00:07:54,433 --> 00:07:56,435
எனக்கு அனுப்பாமல் இருப்பது,
இதுதான், முதல் முறை.

140
00:07:56,518 --> 00:08:01,064
-கத்திரிக்காய்,பீய்ச்சியடிக்கும் நீர் போல.
-அல்லது சிறு அணில்.

141
00:08:01,148 --> 00:08:03,192
அந்த சின்ன அணில்.
எனக்கு அது புரியவே இல்லை.

142
00:08:03,275 --> 00:08:05,235
வந்து, கையில் ஒரு சிறு விதையை
வைத்திருக்கின்றது, இல்லையா?

143
00:08:05,319 --> 00:08:06,528
-ஆமாம்.
-ஆமாம்.

144
00:08:06,612 --> 00:08:07,779
ஆமாம். அப்படித்தான்.

145
00:08:10,240 --> 00:08:11,241
சரி.

146
00:08:11,325 --> 00:08:12,868
என்னோடு மதுபானம் குடிக்கிறாயா?

147
00:08:13,911 --> 00:08:14,912
வேண்டாம்.

148
00:08:18,207 --> 00:08:20,959
"மதுபானம்" என்று சொல்வதற்கு
அர்த்தம் வேறு ஏதாவது...

149
00:08:23,837 --> 00:08:25,714
ஆக நீ இப்படித்தான் உறவுக்கு அழைப்பாயா?

150
00:08:26,465 --> 00:08:28,300
அதற்கு முயற்சி செய்யாமல்?

151
00:08:28,842 --> 00:08:33,679
சில நேரங்களில் அது தான் நடக்கும்.

152
00:08:34,389 --> 00:08:35,557
எனக்கு இது தெரியாது.

153
00:08:40,520 --> 00:08:41,730
காலை வணக்கம், தலைவரே.

154
00:08:42,397 --> 00:08:45,734
இன்று, உங்களுக்கு
பிஸ்கட்கள் மட்டும் கிடையாது.

155
00:08:45,817 --> 00:08:48,570
நான் உங்களுக்கு ஒரு பெட்டி சாக்லெட்
ட்ரபிலும் கொண்டு வந்து இருக்கிறேன்.

156
00:08:48,654 --> 00:08:51,156
ஓ, மோசமானவனே. இப்படி செய்யாதே.

157
00:08:51,990 --> 00:08:53,534
அந்த இரண்டு பிஸ்கட்களுக்கு இடையே

158
00:08:53,617 --> 00:08:56,245
ஒரு ட்ரபில் வைத்து காலை சிற்றுண்டி
சாண்ட்விச் போல சாப்பிடுங்க...

159
00:08:56,328 --> 00:08:57,704
ஆமாம், இதோ. அப்படித்தான்.

160
00:08:58,288 --> 00:08:59,289
சரி.

161
00:09:00,082 --> 00:09:04,670
சரி. நீங்க லிவெர்பூலில் எனக்கு உதவியதற்கு
உங்களுக்கு மீண்டும் நன்றி சொல்லணும்.

162
00:09:05,796 --> 00:09:07,923
-அது பெரிய விஷயமில்லை, டெட்.
-இல்லை. அது பெரிய விஷயம் தான்.

163
00:09:08,006 --> 00:09:10,843
நான் உங்களுக்கு கடமைபட்டிருக்கிறேன்,
இளம் பெண்ணே. நான் உங்களை காப்பாற்றுவேன்.

164
00:09:10,926 --> 00:09:14,221
உங்க சொந்த செயின்ட் பெர்னார்ட் காவல் நாயாக
என்னை நினைத்துக் கொள்ளுங்க.

165
00:09:14,304 --> 00:09:16,890
என் கழுத்தில் தொங்கும் போர்பனை எடுக்க

166
00:09:16,974 --> 00:09:20,227
நீங்க பனிச்சரிவுக்கு வந்து
கஷ்டப்படத் தேவையில்ல.

167
00:09:20,310 --> 00:09:21,937
ஒரு உவமையாக சொல்கிறேன். சரியா?

168
00:09:22,020 --> 00:09:23,021
சரி, கிளம்புகிறேன்.

169
00:09:23,105 --> 00:09:24,314
உண்மையில், டெட்.

170
00:09:24,940 --> 00:09:26,775
நீங்க எனக்கு நிஜமாகவே
ஆதரவாக இருப்பீர்கள் என்றால்,

171
00:09:26,859 --> 00:09:30,112
எனக்கு, இந்த க்ளப்பின் இரண்டு சிறுபான்மை
முதலாளிகளோடு ஒரு சந்திப்பு இருக்கு.

172
00:09:30,195 --> 00:09:31,196
த மில்க் சகோதரிகள்.

173
00:09:31,280 --> 00:09:33,407
ரொம்பவும் மந்தமான,
ஆனால் அதே சமயம் வாயாடிகள் என

174
00:09:33,490 --> 00:09:36,994
ஒரு கொடூரமான மனித கலவை.

175
00:09:37,077 --> 00:09:38,078
என்னோடு வாருங்கள்.

176
00:09:38,161 --> 00:09:39,329
கண்டிப்பாக வருகிறேன்.

177
00:09:40,122 --> 00:09:43,041
அற்புதம். உங்கள் எல்லோரையும்
நான் அறிமுகப்படுத்திவிட்டு,

178
00:09:43,125 --> 00:09:45,836
நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மெதுவாக
வெளியேறி, எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

179
00:09:45,919 --> 00:09:47,045
இந்த க்ளப்பில் எவ்வளவு பகுதி
அவர்களுக்கு சொந்தம்?

180
00:09:47,129 --> 00:09:48,297
2.9%.

181
00:09:48,380 --> 00:09:52,301
அதை இரண்டு என்ற அளவிற்கு குறைக்க போகிறேன்.
பிறகு அவர்களை "2% மில்க்ஸ்" என அழைப்பேன்.

182
00:09:52,384 --> 00:09:53,969
ஓ, கடவுளே. அவர்கள் உங்களை விரும்புவார்கள்.

183
00:09:54,052 --> 00:09:56,805
அது வேடிக்கையாக இருக்கும். சரி.
நான் கிளம்புகிறேன். பிறகு சந்திக்கலாம்.

184
00:09:59,099 --> 00:10:01,518
நாம் தயாரிப்புகளை நம்பினால், அதற்கான
விளம்பரங்கள் நிஜமாகவே நன்றாக அமையும்

185
00:10:01,602 --> 00:10:03,020
என்பதை நான் அனுபவ ரீதியாக கண்டிருக்கிறேன்.

186
00:10:03,103 --> 00:10:05,731
எனவே, உங்களுக்கு எது பிடிக்குமென சொன்னால்

187
00:10:05,814 --> 00:10:07,524
உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப்
பெற்று தருகிறேன்.

188
00:10:07,608 --> 00:10:08,817
எனக்கு ஏர் ஜோர்டன்ஸ் பிடிக்கும்.

189
00:10:09,610 --> 00:10:11,069
அவற்றோடு உறவு கொள்ள விரும்புகிறேன்.

190
00:10:11,737 --> 00:10:13,447
சரி. அப்போ, விளையாட்டுக்கான
உடை பிடிக்கும், சரிதானே?

191
00:10:13,530 --> 00:10:15,532
எனக்கு பிரச்சனைகள் சார்ந்த
தயாரிப்புகள் பிடிக்கும்.

192
00:10:15,616 --> 00:10:17,409
அதாவது, சுற்றுச்சூழலுக்கு சாதகமான அல்லது
மாசு கட்டுப்பாடு தொடர்பானது.

193
00:10:17,492 --> 00:10:18,535
அப்படிப்பட்ட விஷயங்கள்.

194
00:10:18,619 --> 00:10:20,412
ஓ, கூடவே ஏர் ஜோர்டன்ஸும் பிடிக்கும்.

195
00:10:20,495 --> 00:10:22,206
ஆனால் அவற்றோடு உறவு கொள்ள விருப்பமில்லை.

196
00:10:22,289 --> 00:10:23,749
உன் விருப்பம் என்ன, ஐசக்?

197
00:10:24,291 --> 00:10:25,501
ரொலோஸ்.

198
00:10:26,210 --> 00:10:29,546
அப்படியென்றால்,
இனிப்புகளும் சாக்லேட்டுகளுமா?

199
00:10:29,630 --> 00:10:32,299
இல்லை. ரொலோஸ் மட்டும் தான், சரியா?

200
00:10:32,883 --> 00:10:34,885
அந்த புளிப்பு மிட்டாய்
கன்றாவியும் கிடையாது, சரியா?

201
00:10:35,469 --> 00:10:36,512
சரி.

202
00:10:36,595 --> 00:10:39,139
சரி, இது ஒரு நல்ல தொடக்கம். நன்றி.

203
00:10:41,350 --> 00:10:42,351
ஹே, கேப்டன்.

204
00:10:45,229 --> 00:10:46,230
இதெல்லாம் என்ன?

205
00:10:46,313 --> 00:10:48,148
ஒரு பொருத்தமான இடம் கிடைக்கும் வரை
இந்த அறையை என் அலுவலகமாக

206
00:10:48,232 --> 00:10:50,943
உபயோகிக்க ரெபேக்கா அனுமதித்திருக்காங்க.
அதனால் தான் இப்படி செய்கிறேன்.

207
00:10:51,026 --> 00:10:53,695
அவர்களுக்கு இந்த அறை தேவைப்பட்டால்,
எல்லாவற்றையும் உள்ளே வைத்து விடுகிறேன்.

208
00:10:53,779 --> 00:10:55,822
பிரமாதம்.
நாம் பிறகு திரைப்படம் பார்க்கலாமா?

209
00:10:56,448 --> 00:10:58,492
-உனக்கு என்ன தான் ஆயிற்று?
-என்ன?

210
00:10:58,575 --> 00:11:00,702
நேற்று என்னோடு வந்து
ஒரு காபி குடிக்கிறாயா என கேட்டேன்

211
00:11:00,786 --> 00:11:02,538
-நீ வேலையாக இருப்பதாக சொன்னாய்.
-வேலையாகத்தான் இருந்தேன்.

212
00:11:02,621 --> 00:11:05,040
-நேற்றிரவு எனக்கு பதில் அனுப்பவே இல்லை.
-ஆம். வேலையாக இருந்தேன்.

213
00:11:05,123 --> 00:11:07,042
அந்த முத்தம்? ஏதோ மோசமான முத்தம் போல
திடீரென நிறுத்திவிட்டாய்,

214
00:11:07,125 --> 00:11:09,002
ஆனால் அது மோசமாக இல்லை,
நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

215
00:11:09,086 --> 00:11:11,880
-நான் ஒத்துக்கொள்கிறேன்.
-எனவே உன் பிரச்சனைதான் என்ன, ராய்?

216
00:11:11,964 --> 00:11:14,299
கேள், நான் ஒரு சிறந்த கால்பந்து வீரன்.

217
00:11:14,383 --> 00:11:16,510
எனக்கு லட்ச கணக்கான,
ஒரு இரவு உறவுகள் இருந்திருக்கின்றன.

218
00:11:16,593 --> 00:11:17,594
-எனக்கும் தான்.
-நல்லது.

219
00:11:17,678 --> 00:11:19,513
-அதை ஏன் பெருமையாக பேசுகிறோம் என தெரியலை.
-எனக்கும் தான்.

220
00:11:19,596 --> 00:11:22,599
அவை எப்போதுமே வெறுமையாக தோன்றுகின்றன.
வந்து, முதல் பகுதி மட்டும் கிடையாது.

221
00:11:22,683 --> 00:11:24,643
-இல்லை, ஆரம்பத்தில் நன்றாக இருக்கும்.
-அவை பிரமாதமானவை.

222
00:11:24,726 --> 00:11:27,020
-அது எல்லாம் முடிந்த பிறகு, எனக்கு...
-மோசமாக தோன்றும்.

223
00:11:27,104 --> 00:11:30,148
சரியாக சொன்னாய். அது முடிந்த பிறகு
எப்பவுமே என் கடிகாரம் காணாமல் போகும்

224
00:11:30,232 --> 00:11:32,609
அல்லது என் அந்தரங்க பகுதியில் உள்ள வளைவைப்
பற்றி செய்தித்தாளில் கதைகள் வரும்.

225
00:11:32,693 --> 00:11:33,986
அது அப்படி இருக்கிறதா?

226
00:11:34,069 --> 00:11:35,904
இல்ல, என் இடுப்பால் அப்படி இருப்பது போல
உணரச் செய்வேன்.

227
00:11:35,988 --> 00:11:38,782
இருந்தாலும், இதை வேறு விதமாக செய்ய
நான் முயற்சி செய்கிறேன்.

228
00:11:39,533 --> 00:11:42,452
நான் அதை உன்னிடம் சொல்லி இருக்கணும்.
என்னை மன்னித்துவிடு.

229
00:11:42,536 --> 00:11:48,584
மேலும் நான் நேர்மையாக இருக்க முயல்கிறேன்.

230
00:11:49,293 --> 00:11:50,294
நன்றி.

231
00:11:51,044 --> 00:11:52,087
அப்போ, சரி.

232
00:11:54,923 --> 00:11:56,884
நான் ஜேமியோடு உறவு கொண்டது
உனக்குத் தெரியணும்.

233
00:11:56,967 --> 00:11:58,051
ஆமாம், எனக்கு அது தெரியும்.

234
00:11:58,135 --> 00:11:59,511
அதாவது நேற்று இரவு.

235
00:12:01,263 --> 00:12:02,890
நீ என்னை விரும்பியது எனக்குத் தெரியாது.

236
00:12:02,973 --> 00:12:05,392
உன் தேவை என்ன என்று எனக்குத் தெரியலை,
ஆனால் அவன் தேவை என்ன என எனக்குத் தெரியும்.

237
00:12:05,475 --> 00:12:08,145
எனவே நான் தெரியாமல் செய்த ஒன்றிற்காக என்னை
பழி வாங்க நீ அவனோடு உறவு கொண்டாய்.

238
00:12:08,645 --> 00:12:10,898
இல்லை. நான்... இல்லை.

239
00:12:11,565 --> 00:12:12,649
இல்லை.

240
00:12:12,733 --> 00:12:13,734
ஆமாம்.

241
00:12:14,318 --> 00:12:16,236
ஆமாம். நான் அப்படித்தான் செய்தேன்.

242
00:12:18,572 --> 00:12:20,991
நான் தவறு செய்துவிட்டேன், ராய்.
என்னை மன்னிச்சிடு.

243
00:12:22,492 --> 00:12:24,077
ஆனால் நீ இதை சரியாக எடுத்துக் கொள்ளணும்.

244
00:12:26,455 --> 00:12:28,916
வந்து, மீண்டும் எப்படி பேசுவது என்று
நீ புரிந்து கொண்ட பிறகு

245
00:12:28,999 --> 00:12:30,542
என்னிடம் வந்து ஏன் அதை பற்றி பேசக்கூடாது?

246
00:12:38,842 --> 00:12:40,594
வெற்றியின் கோபுரம்

247
00:12:45,349 --> 00:12:46,350
ஹாய், ராய்.

248
00:12:52,105 --> 00:12:53,106
ஏதாவது யோசிக்கிறாயா?

249
00:12:54,608 --> 00:12:57,277
அந்த உறுமலை வைத்து நான்
கண்டுப்பிடிக்க வேண்டுமா?

250
00:12:57,361 --> 00:12:59,947
பரவாயில்லை. நான் முயற்சி செய்கிறேன்.
பார்க்கலாம்.

251
00:13:00,030 --> 00:13:02,950
உன் முதல் வீடு வாங்குவதைப்பற்றி
நீ யோசித்துக் கொண்டு இருக்கிறாய்.

252
00:13:03,867 --> 00:13:05,202
இல்லை, அது இல்லை. சரி.

253
00:13:05,285 --> 00:13:08,497
உன் அப்பா ஒரு இனவாதி என்று
நீ புரிந்துக் கொண்டாய்.

254
00:13:08,580 --> 00:13:11,124
நிறுத்துங்க. அவருக்கு 60 வயது,
அவர் தெற்கு லண்டனைச் சார்ந்தவர்.

255
00:13:11,208 --> 00:13:12,543
ஆமாம் என் அப்பா கொஞ்சம் இனவாதி தான்.

256
00:13:12,626 --> 00:13:15,379
பாருங்க, எனக்கும் கீலிக்கும் இடையே
ஒரு உறவு மலர ஆரம்பித்திருக்கு,

257
00:13:15,462 --> 00:13:18,882
ஆனால் நான் அவளைப்பற்றி நினைக்கும்
ஒவ்வொரு முறையும்,

258
00:13:18,966 --> 00:13:21,260
அந்த மோசமான ஜேமி டார்ட் பற்றித்தான்
ஞாபகம் வருது.

259
00:13:23,720 --> 00:13:27,599
வாழ்க்கையின் சிக்கலான வடிவத்தில் யாரோ
மாட்டிக்கொண்டது போல எனக்குத் தோன்றுகிறது.

260
00:13:27,683 --> 00:13:28,684
ஒரு முக்கோண காதல்.

261
00:13:28,767 --> 00:13:31,937
இரண்டாவது இடம் "என் மாமியார் நீச்சல் உடை
மாற்றும் போது நான் உள்ளே நுழைந்தேன்"

262
00:13:32,020 --> 00:13:34,106
என்ற விஷயம் தான்.

263
00:13:34,189 --> 00:13:36,900
என்னைப் பார்த்தால் வடிவங்கள் பற்றிய
நகைச்சுவை கேட்க விரும்புவதாக தெரிகிறதா?

264
00:13:36,984 --> 00:13:38,318
இல்லை, ராய், அப்படி இல்லை.

265
00:13:38,986 --> 00:13:40,946
ஆனால், எப்போதுமே உன் முகம்
எதையும் காட்டியதில்லை.

266
00:13:41,029 --> 00:13:43,073
இப்போது என்ன செய்ய வேண்டும் என்று
எனக்குத் தெரியும்.

267
00:13:44,032 --> 00:13:45,576
என்ன செய்றீங்க?

268
00:13:45,659 --> 00:13:47,661
நீ கவலைப்படாதே, என் தோழா.

269
00:13:47,744 --> 00:13:51,707
இன்னும் சில நிமிடங்களில், உன் உறவு
சிக்கல்கள் எல்லாம் கடந்து போய்விடும்.

270
00:13:51,790 --> 00:13:54,168
நான் டைமண்ட் டாக்ஸை ஒன்று சேர்க்கிறேன்.

271
00:13:54,668 --> 00:13:56,295
யார் அந்த டைமண்ட் டாக்ஸ்?

272
00:13:56,378 --> 00:13:58,672
பிறரைப் பற்றி கவலைப்படும் ஒரு குழு, ராய்.

273
00:13:58,755 --> 00:14:01,884
உண்மையிலேயே அக்கறை உள்ள மக்கள்.

274
00:14:01,967 --> 00:14:04,136
சரி, இது கீலி மற்றும் உன்னை
பற்றியது, அல்லவா?

275
00:14:04,678 --> 00:14:07,806
-இதை எதிர்ப்பார்த்தேன்.
-காதலின் ஆரம்ப காலம் போல எதுவும் கிடையாது.

276
00:14:07,890 --> 00:14:09,600
சரி, இது எனது மோசமான கெட்ட கனவு.

277
00:14:09,683 --> 00:14:12,519
நீயும் கீலியும் காதலிப்பது
பாலும் பழமும் போல பொருத்தமாக இருக்கும்.

278
00:14:12,603 --> 00:14:15,898
இரண்டு சிறந்த சுவைகள், ஒன்றாக இருந்தால்
ருசியாக இருக்கும், அல்லவா?

279
00:14:15,981 --> 00:14:17,191
-ஆமாம்.
-சரியான உவமை.

280
00:14:17,274 --> 00:14:20,027
ஆமாம், அவளை எனக்கு பிடிக்கும். ஆனால் அவள்
முன்னாள் காதலனை பற்றி நமக்கு தெரியும்.

281
00:14:20,110 --> 00:14:22,154
எல்லா மோசமானவர்களுள் மோசமானவன்.

282
00:14:22,237 --> 00:14:24,364
அவன் என் மூளைக்குள் இருக்கிறான்.

283
00:14:24,448 --> 00:14:25,824
எனக்கு பிரச்சனை என்னவென்று புரியலை.

284
00:14:25,908 --> 00:14:27,576
அதாவது, கீலி மிகவும் இரக்கமானவள்.

285
00:14:27,659 --> 00:14:31,330
அவள் போன்ற ஒருத்தியால், காதலிக்கப்படுவது
என்பது சிறப்பானதாக... இருக்கும்.

286
00:14:31,413 --> 00:14:33,290
அருமையாக சொன்னாய்.

287
00:14:33,373 --> 00:14:34,708
ஆமாம்.

288
00:14:34,791 --> 00:14:36,418
அட, நண்பர்களே,
உங்களுக்கு இன்னும் புரியலை!

289
00:14:36,502 --> 00:14:37,461
நன்றி.

290
00:14:37,544 --> 00:14:41,423
நிச்சயம், ராய் கடந்த காலத்தில்
பலருடன் உறவு வைத்திருந்தான்.

291
00:14:41,507 --> 00:14:45,552
ஆனால் ராய்க்கு முன்பே கீலியும் பலரோடு
காதல் மற்றும் உறவு வைத்திருந்தாள்.

292
00:14:45,636 --> 00:14:46,970
ஆனால் அது சரி கிடையாது!

293
00:14:47,888 --> 00:14:49,223
அவர் எதிர்மாறாக சொல்கிறார்.

294
00:14:49,306 --> 00:14:51,183
கோச் கேலி பேசுவது எனக்குப் பிடிக்கும்.

295
00:14:51,767 --> 00:14:53,227
என்னால் என் உணர்ச்சிகளை
கட்டுப்படுத்த முடியலை.

296
00:14:53,310 --> 00:14:56,188
சரி, அப்படி என்றால் அவை உன்னை
கட்டுப்படுத்த நீ அனுமதிக்கணும்.

297
00:14:57,231 --> 00:14:58,315
அவர் மறுபடியும் கேலி செய்கிறார்.

298
00:14:58,899 --> 00:15:00,067
நன்றாக கவனித்தீர்கள்.

299
00:15:00,150 --> 00:15:02,986
ராய், பார், கேலி செய்வதை விடு,
எனக்கு ஒரு உதவி செய்.

300
00:15:03,070 --> 00:15:05,364
அவளுடைய கடந்த காலம் உங்களுடைய
எதிர்காலத்தை அழிக்க விடாதே, சரியா?

301
00:15:05,447 --> 00:15:07,574
நேற்றிரவு அவள் அவனுடன் இருந்தாள்.

302
00:15:10,244 --> 00:15:13,038
-வந்து, இருவரும் காதலை சொன்னீர்களா?
-இல்லை.

303
00:15:13,121 --> 00:15:15,082
-இருவரும் இதற்கு முன் ஒன்றாக இருந்தீர்களா?
-இல்லை.

304
00:15:15,165 --> 00:15:16,792
கோச், நீங்கள் அவனுக்கு புரிகிற மாதிரி
சொல்லி முடித்து வைக்கிறீர்களா?

305
00:15:18,168 --> 00:15:20,629
வளர்ந்தவனாக நடந்துக் கொள்,
அதை மறந்து வெளியே வா.

306
00:15:23,507 --> 00:15:25,467
த டைமண்ட் டாக்ஸ் மீண்டும் வெற்றி பெற்றது.

307
00:15:29,721 --> 00:15:30,722
நீங்கள் எல்லோரும் முட்டாள்கள்.

308
00:15:33,016 --> 00:15:34,560
ஃபுல்லர் ஸ்மித் & டர்னரின்
சிஸ்விக் ஏல்ஸ் & ஸ்டவுஸ்

309
00:15:35,394 --> 00:15:37,855
சரி. மில்க் சகோதரிகளை
எங்காவது பார்த்தீர்களா?

310
00:15:37,938 --> 00:15:39,565
பின்னால் உள்ள அறையில் நான் போய் தேடவா?

311
00:15:40,232 --> 00:15:42,234
-இதற்கு வருத்தப்பட வைக்காதீங்க, டெட்.
-கவலைப்படாதீங்க.

312
00:15:42,317 --> 00:15:43,986
நான் ஒரு நல்ல மனிதனாக இருப்பேன், சரியா?

313
00:15:44,069 --> 00:15:47,865
ஹேய், 'பிரிட்ஜெட் ஜோன்ஸஸ் டெய்ரி' படத்தை
அவர்கள் பார்த்திருக்கிறார்களா என தெரியலை.

314
00:15:48,532 --> 00:15:50,450
மன்னிச்சிடுங்க, அது சிறப்பாக இல்லை.
நான் இன்னும் சிறப்பாக செய்வேன்.

315
00:15:50,534 --> 00:15:53,036
ஓ, கடவுளே, இது கொடுமையான யோசனை.
தயவுசெய்து, வீட்டிற்குப் போங்க.

316
00:15:53,120 --> 00:15:55,414
-விடுங்க.இது வேடிக்கையாக இருக்கப் போகிறது.
-நிறுத்துங்க.

317
00:15:57,416 --> 00:15:58,750
அவள் அங்கே இருக்கிறாள்.

318
00:16:02,421 --> 00:16:03,547
நீ இங்கே என்ன செய்கிறாய், ரூபெர்ட்?

319
00:16:03,630 --> 00:16:05,382
நாங்கள் கொண்டாடுவதற்காக வந்தோம்.

320
00:16:05,966 --> 00:16:07,676
ரெபேக்கா, இது ரெபேக்கா.
ரெபேக்கா, இது ரெபேக்கா.

321
00:16:07,759 --> 00:16:09,094
உங்களை திரும்ப பார்ப்பது சந்தோஷம்.

322
00:16:09,636 --> 00:16:11,847
-அப்புறம் இவர் தான் டெட்.
-ஹாய்.

323
00:16:11,930 --> 00:16:13,765
சரி. எங்களோடு வந்து சாப்பிடுங்க.

324
00:16:13,849 --> 00:16:16,226
இந்தாங்க, ரூபெர்ட். வேறு ஏதாவது வேணுமா?

325
00:16:16,310 --> 00:16:19,354
எங்களுடைய நண்பர்களுக்காக
இன்னும் சில கோப்பைகள். நன்றி, மே.

326
00:16:19,438 --> 00:16:23,400
நீ எப்போதும் போல நன்றாக இருக்கிறாய்.
உன் வலப்பக்கமிருந்து இடப்பக்கம் வரை.

327
00:16:23,483 --> 00:16:24,985
உங்க அந்தரங்க உறுப்பை
கால்சட்டைக்குள் வையுங்க.

328
00:16:29,156 --> 00:16:30,240
அழைப்புக்கு நன்றி, ஆனால்

329
00:16:30,324 --> 00:16:32,117
த மில்க் சகோதரிகளை
சந்திக்க தான் இங்கே வந்துள்ளோம்.

330
00:16:32,201 --> 00:16:33,577
அவர்கள் இப்போது வரமாட்டார்கள்.

331
00:16:33,660 --> 00:16:35,329
ஓ, கடவுளே. அவர்கள் காலாவதியாகிவிட்டார்களா?

332
00:16:35,412 --> 00:16:36,413
என்ன?

333
00:16:37,331 --> 00:16:38,832
எனவே, ஆம், நான்...

334
00:16:40,167 --> 00:16:44,588
கிளப்பில் உரிமையாளர் பங்குகளுக்கு
எனக்கு அனுமதியில்லை என்பது தெரியும்,

335
00:16:44,671 --> 00:16:48,509
ஆனால் அவர்கள் தங்கள் சிறுபான்மை பங்கை
அன்போடு பெக்ஸிற்கு விற்றுவிட்டார்கள்.

336
00:16:49,134 --> 00:16:51,720
நான் ஒரு கால்பந்து கிளப்பை
வாங்குவதற்கு முன்பு எனது மாணவர் கடன்களை

337
00:16:51,803 --> 00:16:54,097
அடைத்து விடுவேன் என எப்போதும் நினைத்தேன்.

338
00:16:55,140 --> 00:16:58,894
நிச்சயமாக, அவளுக்கு என்னிடமிருந்து
ஒரு சிறிய நிதி உதவி தேவைப்பட்டது.

339
00:16:58,977 --> 00:17:02,356
ஆனால், எங்களுக்கு திருமணமான பிறகு,
அவளுடையது எல்லாம் எனக்கு சொந்தம்

340
00:17:02,439 --> 00:17:07,027
என்னுடையது... என்னுடையதாகவே இருக்கும்
ஏன்னா நான் உன்னிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

341
00:17:07,653 --> 00:17:08,779
உங்களுக்கு நிச்சயமாகிவிட்டதா?

342
00:17:13,116 --> 00:17:14,826
ஹேய். வாழ்த்துகள்.

343
00:17:14,910 --> 00:17:16,203
அப்போ நீ எங்களோடு சேர்ந்து கொள்.

344
00:17:16,286 --> 00:17:19,830
எல்லோரும்! எங்களுடன் அருந்துங்கள்.
இது என்னுடைய செலவு.

345
00:17:21,791 --> 00:17:25,503
தயவுசெய்து, மூன்று லாகர்ஸ், மே.
அவை இலவசம். எங்களுக்கு பூட்ஸ் வேண்டும்.

346
00:17:26,505 --> 00:17:27,464
ரிச்மண்ட்டிற்கு!

347
00:17:27,548 --> 00:17:30,342
ரிச்மண்ட்! ரிச்மண்ட்!
ரிச்மண்ட்! ரிச்மண்ட்!

348
00:17:30,425 --> 00:17:32,386
ரிச்மண்ட்! ரிச்மண்ட்! ரிச்மண்ட்!

349
00:17:33,387 --> 00:17:37,182
சரி. நீ விளம்பரம் செய்ய மிகவும்
விரும்பும் தயாரிப்பு, மகிழ்ச்சியா?

350
00:17:37,266 --> 00:17:39,101
ஆம், ரொம்ப அதிக மகிழ்ச்சி.

351
00:17:39,560 --> 00:17:42,104
உனக்கு அதற்கு பணம் வாங்கி தர முடியுமா
என எனக்குத் தெரியலை, டானி.

352
00:17:42,187 --> 00:17:44,356
நான் மகிழ்ச்சியை இலவசமாக
தர விரும்புகிறேன்.

353
00:17:45,148 --> 00:17:47,025
-சரி, நன்றி, டானி.
-பரவாயில்லை.

354
00:17:48,277 --> 00:17:50,988
ஹேய். கால்பந்து தான் வாழ்க்கை, கேப்டன்.

355
00:17:51,446 --> 00:17:52,447
ஆம்.

356
00:17:57,244 --> 00:17:59,329
ஜேமி மீதிருந்த கோபம் போய்விட்டது.

357
00:17:59,413 --> 00:18:01,832
நான் வளர்ந்தவன்.
நான் ஒன்றும் குழந்தையில்லை.

358
00:18:03,333 --> 00:18:04,668
அதை மறந்து வெளியே வந்துவிட்டேன்.

359
00:18:04,751 --> 00:18:07,379
சரி. அறையில் உள்ள மற்றவர்களிடம்
அதை சொல்ல முடியுமா?

360
00:18:08,380 --> 00:18:10,007
அதாவது, அதை பற்றி
ஊடகங்களுக்கு தெரிய வேண்டும்.

361
00:18:17,848 --> 00:18:18,891
திரு. கென்ட்!

362
00:18:18,974 --> 00:18:21,727
-ஆம்.
-கீலி ஜோன்ஸ், தி இன்டிபென்டென்ட் வுமன்.

363
00:18:22,561 --> 00:18:24,354
நீங்கள் இப்போது சொன்னதை
மீண்டும் சொல்கிறீர்களா?

364
00:18:25,189 --> 00:18:26,899
அதை மறந்து வெளியே வந்துவிட்டேன்.

365
00:18:26,982 --> 00:18:29,276
இன்றிரவு என்னுடன் வெளியே வருகிறாயா?
தயவுசெய்து?

366
00:18:34,907 --> 00:18:35,908
ஆம். நீங்கள்.

367
00:18:36,867 --> 00:18:39,328
கீலி ஜோன்ஸ்,
தி இன்டிபென்டென்ட் வுமன் இணைய பதிப்பு.

368
00:18:39,411 --> 00:18:41,955
எனவே, இந்த திடீர் மாற்றத்தை
நான் ஏன் நம்ப வேண்டும்?

369
00:18:43,332 --> 00:18:45,292
ஏனெனில் அவன் மீதுள்ள வெறுப்பைவிட
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

370
00:18:47,628 --> 00:18:49,880
அதாவது, அது மிகவும் நெருக்கமானது.

371
00:18:51,965 --> 00:18:53,425
ஆம். நீண்ட கூந்தல் கொண்ட பெண்.

372
00:18:53,509 --> 00:18:55,469
கீலி ஜோன்ஸ்,
தி இன்டிபென்டென்ட் வுமன் பத்திரிகை.

373
00:18:55,552 --> 00:18:58,263
நான் சம்மதித்தால்,
என்னை எங்கே அழைத்துச் செல்வாய்?

374
00:18:58,347 --> 00:19:01,517
-தெரியலை. காபி குடிக்க?
-இன்னும் நன்றாக ஏதாவது முடியாதா?

375
00:19:01,600 --> 00:19:03,727
-இரவு உணவிற்கு.
-சரி, அது நல்ல யோசனை.

376
00:19:08,065 --> 00:19:11,151
ஆம், கவர்ச்சியான கண்களை உடைய அந்த பெண்.

377
00:19:11,235 --> 00:19:14,029
கீலி ஜோன்ஸ்,
தி இன்டிபென்டென்ட் வுமனின் ஞாயிறு இணைப்பு.

378
00:19:14,112 --> 00:19:15,948
உன் அந்தரங்க உறுப்பில் வளைவு
இருப்பதைப் போல உணரச் செய்யும்

379
00:19:16,031 --> 00:19:18,408
அந்த இடுப்பு அசைவை பற்றி
விரிவாகக் கூற முடியுமா?

380
00:19:18,492 --> 00:19:20,869
சரி, மேலும் கேள்விகள் வேண்டாம்.
ஆடுகளத்தில் சந்திக்கலாம்.

381
00:19:24,289 --> 00:19:25,832
ரூப்பெர்ட்டிற்கு!

382
00:19:27,668 --> 00:19:30,629
நண்பர்களே, ரிச்மண்ட் மக்களே,
நாட்டு மக்களே.

383
00:19:30,712 --> 00:19:33,841
நம் கிளப்பின் பெருங்கவலை இப்போது முடிந்து
விட்டது. நான் மீண்டும் வந்துவிட்டேன்.

384
00:19:33,924 --> 00:19:36,885
கடவுளுக்கு நன்றி.
ஏனெனில் டெட் லாஸ்ஸோ ஒரு சொதப்பல்.

385
00:19:36,969 --> 00:19:38,929
-தவறாக எடுத்துக்க வேண்டாம், டெட்.
-பரவாயில்லை, பேஸ்.

386
00:19:39,012 --> 00:19:40,973
நீ, ஜெர்மி மற்றும் பால்
உங்கள் உணர்வுகளைப் பற்றி

387
00:19:41,056 --> 00:19:42,307
புத்துணர்ச்சியுடன்
நேர்மையாக இருந்திருக்கிறீர்கள்.

388
00:19:42,391 --> 00:19:44,351
பிரிமியர் லீக் பொறுப்பாளருக்கு
நம் பெயர்கள் தெரிந்திருப்பது நல்ல விஷயம்.

389
00:19:44,434 --> 00:19:46,103
-எனக்கு தெரியும், சரியா?
-பேசாதீங்க, முட்டாள்களே.

390
00:19:46,186 --> 00:19:48,438
நான் மீண்டும் முயற்சிக்கிறேன்.
உதவி தேவையில்லை.

391
00:19:48,522 --> 00:19:50,357
சரி. அவள் பலகையை குறி பார்த்து அடித்தால்,

392
00:19:50,440 --> 00:19:52,484
நாம் எஃப்ஏ கோப்பையை வென்றதைப்
போன்று சத்தமிடணும்.

393
00:19:58,907 --> 00:19:59,908
நீங்கள் கிளம்ப வேண்டுமா?

394
00:20:00,993 --> 00:20:02,452
அவருக்கு அந்த திருப்தியை நான் தர மாட்டேன்.

395
00:20:03,287 --> 00:20:06,832
எனவே, இது நாம் மீண்டும் நண்பர்களாக
இருக்க வேண்டிய நேரம், ரெபேக்கா.

396
00:20:06,915 --> 00:20:11,170
குறிப்பாக ஒவ்வொரு வாரமும் பெக்ஸும் நானும்
அந்த உரிமையாளரின் பெட்டியில்

397
00:20:11,253 --> 00:20:13,630
உன்னுடன் உட்காரப் போகிறோம் என்பதால்.

398
00:20:13,714 --> 00:20:14,882
நான் எல்லா வாரமும் போக மாட்டேன்.

399
00:20:14,965 --> 00:20:16,425
சரி, நான் போகிறேன்.

400
00:20:16,508 --> 00:20:21,346
ஒவ்வொரு வாரமும், அவர்கள்
என் முகத்திற்கு நேராக கேமராவை காண்பித்து,

401
00:20:21,430 --> 00:20:25,309
நீ எப்படி செய்கிறாய் என என் கருத்தைக்
கேட்கும் போது, நான் அவர்களிடம் கூறுவேன்.

402
00:20:26,143 --> 00:20:28,896
இது இடைவிடாமல் இருக்கும்.

403
00:20:32,107 --> 00:20:35,986
எனவே, ரூபெர்ட், நீங்கள் இந்த டார்ட்டை
தீவிரமாக எடுத்துக் கொள்கிறீர்கள், இல்லையா?

404
00:20:36,069 --> 00:20:38,906
இது மற்றும்...
குக்கீஸ் பிராண்டைப் போல் தோன்றும்

405
00:20:38,989 --> 00:20:40,866
பில்லியர்ட் விளையாட்டின் பெயர் என்ன?

406
00:20:41,491 --> 00:20:43,285
-ஸ்னூக்கர்?
-அதுதான். அதேதான், ஆமாம்.

407
00:20:43,368 --> 00:20:46,788
கடவுளே, கனமாக போர்வையை போர்த்திக்கொண்டு
படுக்கையில் சுருண்டு படுத்தபடி,

408
00:20:46,872 --> 00:20:49,708
'யூ ஹவ் காட் மெயில்' படத்தை பார்த்துகொண்டு
ஒரு பெட்டி ஸ்னூக்கர்ஸை சாப்பிட ஆசை.

409
00:20:51,835 --> 00:20:52,836
என் திறமையைப் பார்ப்போம்.

410
00:20:53,837 --> 00:20:55,005
ஹேய்! அதோ.

411
00:20:55,631 --> 00:20:58,842
-உங்களுக்கு டார்ட்ஸ் பிடிக்குமா, டெட்?
-அவை பரவாயில்லை.

412
00:20:58,926 --> 00:21:02,179
எனக்கு எப்போதும் கார்ன்ஹோல்
விளையாட பிடிக்கும். சரி.

413
00:21:04,264 --> 00:21:05,265
ஒரு விளையாட்டு விளையாடலாமா?

414
00:21:05,349 --> 00:21:09,561
நாம், £10,000 பந்தயம் கட்டலாமா?

415
00:21:11,313 --> 00:21:14,650
பெட்டூசின் அல்ஃபிரடோ பாஸ்தாவிற்கு நான்
அடிமையான போது, மருத்துவர் சொன்னது போல,

416
00:21:14,733 --> 00:21:16,527
அது என் இரத்தத்திற்கு அதிக விலையுள்ளது.

417
00:21:17,236 --> 00:21:19,196
இது எப்படி? நீங்க வெற்றி பெற்றால்,
இந்த பருவத்தின்

418
00:21:19,279 --> 00:21:21,823
கடைசி இரண்டு ஆட்டங்களுக்கு முதல்நிலை
ஆட்டக்காரர்களை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.

419
00:21:22,366 --> 00:21:25,410
ஆனால் நான் வென்றால், உரிமையாளர் பெட்டிக்கு
பக்கத்தில் நீங்க போக கூடாது,

420
00:21:25,494 --> 00:21:27,037
குறைந்தபட்சம் ரெபேக்கா
பொறுப்பில் இருக்கும் வரையாவது.

421
00:21:27,120 --> 00:21:28,330
டெட்.

422
00:21:29,289 --> 00:21:30,415
நீங்க என்ன செய்றீங்க?

423
00:21:30,499 --> 00:21:32,167
சிலர் இதை பெண்களை பாதுகாப்பது
என சொல்வார்கள்,

424
00:21:32,251 --> 00:21:33,460
ஆனால் என் உள்ளுணர்வை
நான் பின்பற்றுகிறேன்.

425
00:21:33,544 --> 00:21:34,545
-பரவாயில்லை.
-வேண்டாம். டெட்.

426
00:21:35,587 --> 00:21:37,464
-நீங்க என்ன சொல்றீங்க?
-சவாலை ஏற்றுக்கொள்கிறேன்.

427
00:21:37,548 --> 00:21:39,800
-சரி.
-தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு.

428
00:21:39,883 --> 00:21:41,718
நீங்க என்ன சொன்னாலும் சரி, ரூபெர்ட். ஆம்.

429
00:21:41,802 --> 00:21:44,555
நான் வெல்கிறேனா அல்லது தோற்கிறேனா
என எனக்கு தெரியப்படுத்துங்க, சரியா?

430
00:21:44,638 --> 00:21:46,557
நான் இது என்னிடம் இருப்பதையே
மறந்துவிட்டேன்.

431
00:21:48,851 --> 00:21:50,394
சரி. கொஞ்சம் பொறுங்க.

432
00:21:51,395 --> 00:21:52,938
நான் இடது கை பழக்கமுடையவன்
என்பதை மறந்துவிட்டேன்.

433
00:21:55,440 --> 00:21:56,984
இது மிகவும் வேடிக்கையாக இருக்கப் போகிறது.

434
00:21:59,361 --> 00:22:01,363
-இரவு உணவுக்கு எங்கே போகிறோம்?
-அதை சொல்ல மாட்டேன்.

435
00:22:02,030 --> 00:22:03,031
சரி.

436
00:22:06,201 --> 00:22:07,536
உன்னிடம் ஒன்று கேட்கணும்.

437
00:22:07,619 --> 00:22:11,290
அன்றொரு நாள் எனக்கு பதில் அனுப்பமுடியாத
அளவுக்கு வேலையாக இருந்ததாக சொன்னாய்...

438
00:22:11,373 --> 00:22:12,833
ஆம், ஏனெனில் நான் வேலையாக இருந்தேன்.

439
00:22:12,916 --> 00:22:14,877
ஆனால் என்ன வேலையாக
என்று சொல்லவே இல்லையே.

440
00:22:14,960 --> 00:22:16,420
ஆம், ஏனெனில் அது தனிப்பட்ட விஷயம்.

441
00:22:17,754 --> 00:22:19,506
நீ வேறு யாருடனாவது டேட்டிங் செய்கிறாயா?

442
00:22:20,340 --> 00:22:23,260
செய்தாலும் பரவாயில்லை. நான் முட்டாளாக
இருக்க விரும்பவில்லை.

443
00:22:23,343 --> 00:22:25,053
யோகா செய்து கொண்டிருந்தேன், சரியா?

444
00:22:25,137 --> 00:22:27,264
60 வயது பெண்கள் குழுவுடன்
நான் யோகா செய்வேன்.

445
00:22:27,347 --> 00:22:28,640
அவர்களுக்கு நான் யார் என்று தெரியாது,

446
00:22:28,724 --> 00:22:30,726
வாரத்திற்கு இரண்டு முறை அப்புறம்
என் தசைகளுக்கு அது நல்லது.

447
00:22:30,809 --> 00:22:33,312
வழக்கமாக ஒரு மணி நேரம் தான் ஆகும்,
ஆனால் மோரினுக்கு விவாகரத்து ஆகப் போவதால்

448
00:22:33,395 --> 00:22:35,314
அதைப் பற்றி பேசி தன் மனச்சுமை
இறக்கி வைக்க விரும்பினார்.

449
00:22:35,397 --> 00:22:37,274
அதிகாலை 2 மணி வரை பாரில் இருந்தோம்.

450
00:22:37,357 --> 00:22:39,818
பின்னர் நாங்கள் பால்ஹாமில் பெண் உடை
அணிந்த சிலருடன் பான்கேக் சாப்பிட்டோம்.

451
00:22:41,403 --> 00:22:44,114
நான் சொன்னது போல், அது தனிப்பட்ட விஷயம்.

452
00:22:44,198 --> 00:22:45,532
இப்போது உன்னை முத்தமிடப் போகிறேன்.

453
00:22:45,616 --> 00:22:47,951
அது உன்னை மீண்டும் ஓட வைக்காமல் இருந்தால்.

454
00:22:48,035 --> 00:22:51,914
இதை பொறுமையாக எடுத்து செல்ல நீ விரும்புவது
தெரியும், நான் அதை மதிக்கிறேன், ஆனால்...

455
00:22:52,581 --> 00:22:56,376
ஒருவேளை உன்னுடைய அந்தரங்க பாகத்தை நான்
கொஞ்சம் தொடலாம் அல்லது என்னுடையதை நீ...

456
00:23:05,677 --> 00:23:07,721
உனக்கு நாகரீகம் கிடையாதா?

457
00:23:08,680 --> 00:23:10,599
எதையும் எடுப்பதற்கு முன்
நீ கேட்க வேண்டும்.

458
00:23:11,517 --> 00:23:13,685
உதாரணத்திற்கு,
நான் இதை எடுத்துக் கொள்ளலாமா?

459
00:23:13,769 --> 00:23:15,521
-முடியாது.
-சரி, நான் எடுத்துக் கொள்கிறேன்.

460
00:23:16,271 --> 00:23:18,565
இதோ. இது நம்முடைய
முதல் டேட்டிங்கின் புகைப்படங்கள்.

461
00:23:19,358 --> 00:23:21,318
வா. உனக்காக நான் சமைக்கிறேன்.

462
00:23:25,239 --> 00:23:27,407
நூற்றி எண்பது!

463
00:23:27,491 --> 00:23:28,867
வாழ்த்துகள், ரூபெர்ட். வாருங்கள்!

464
00:23:28,951 --> 00:23:31,453
உன்னுடைய கேவலமான வாயை மூடு
அல்லது நான் மூட வைப்பேன்.

465
00:23:32,829 --> 00:23:35,332
நான் இப்போது உங்களுக்கு
வரிசை பட்டியலை வழங்கலாமா, டெட்?

466
00:23:35,415 --> 00:23:39,378
ஒபிசான்யாவை ஏற்கெனவே இருந்த தற்காப்பு
ஆட்டத்திற்கு மீண்டும் நியமிப்பேன்.

467
00:23:39,461 --> 00:23:41,421
அதைத்தான் நான் சொன்னேன், இல்லையா?

468
00:23:41,505 --> 00:23:43,507
இப்போது, அது எல்லாம்
டெட்டின் தவறு மட்டும் கிடையாது.

469
00:23:43,590 --> 00:23:47,469
இந்த நாட்டுப்புறத்தானை நம் நாட்டிற்கு
கொண்டு வந்தது என் முன்னாள் மனைவி தான்.

470
00:23:47,553 --> 00:23:49,179
அவள் எப்போதுமே கொஞ்சம்
கரடுமுரடானவள் என்று தெரியும்,

471
00:23:49,263 --> 00:23:52,474
ஆனால் முழு அணியையும் முறையற்று நடத்துவாள்
என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

472
00:23:53,225 --> 00:23:54,309
ஹேய்!

473
00:23:55,644 --> 00:23:57,688
டார்ட் என் கையில் இருக்கும்போது
கொஞ்சம் பார்த்து பேசுங்க.

474
00:23:57,771 --> 00:23:58,856
தயவுசெய்து.

475
00:24:00,858 --> 00:24:02,693
ரூபெர்ட் - முட்டாள்

476
00:24:03,277 --> 00:24:05,279
மே. நான் வெல்ல என்ன தேவை?

477
00:24:05,362 --> 00:24:07,447
இரண்டு முறை டிரிப்பில் 20 மற்றும்
ஒரு மையப்புள்ளி.

478
00:24:09,616 --> 00:24:10,617
வாழ்த்துகள்.

479
00:24:13,787 --> 00:24:17,082
என் வாழ்நாள் முழுவதும் மக்கள் என்னை
குறைவாக மதிப்பிட்டுள்ளார்கள், ரூபெர்ட்.

480
00:24:18,000 --> 00:24:20,752
பல வருடங்களுக்கு, ஏன் என எனக்குப் புரியலை.
அது என்னை ரொம்ப தொந்தரவு செய்தது.

481
00:24:20,836 --> 00:24:23,505
ஆனால் ஒருநாள், என் மகனை நான் பள்ளிக்கு
அழைத்துச் சென்று போது,

482
00:24:23,589 --> 00:24:27,092
அங்கிருந்த சுவரில் வால்ட் விட்மேனின்
இந்த மேற்கோளைக் கண்டேன்.

483
00:24:27,176 --> 00:24:30,220
அது, "ஆர்வமாக இருங்கள்,
முடிவு செய்யாதீர்கள்" என்று கூறியது.

484
00:24:31,180 --> 00:24:32,306
எனக்கு அது பிடித்திருந்தது.

485
00:24:36,268 --> 00:24:38,604
எனவே எனது காரில் மீண்டும் ஏறி
வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தேன்,

486
00:24:38,687 --> 00:24:40,731
அப்போது நான் திடீரென்று உணர்ந்தேன்.

487
00:24:40,814 --> 00:24:45,652
என்னைக் குறைத்துப் பேசியவர்களில்,
ஒருவர் கூட ஆர்வமாக இருக்கவில்லை.

488
00:24:46,737 --> 00:24:48,614
எல்லாவற்றையும் கண்டுபிடித்ததாக
அவர்கள் நினைத்தார்கள்.

489
00:24:48,697 --> 00:24:52,201
எனவே அவர்கள் எல்லாவற்றை பற்றியும்
ஒவ்வொருவரைப் பற்றிம் முடிவு செய்தார்கள்.

490
00:24:53,368 --> 00:24:55,913
அவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கும்,
எனக்கும்...

491
00:24:57,873 --> 00:24:59,750
எந்த சம்பந்தமும் இல்லை என்பதை
நான் உணர்ந்தேன்.

492
00:25:01,585 --> 00:25:04,588
ஏனெனில் அவர்கள் ஆர்வமாக இருந்திருந்தால்,
கேள்விகள் கேட்டிருப்பார்கள்.

493
00:25:05,172 --> 00:25:06,381
தெரியுமா?

494
00:25:06,465 --> 00:25:09,885
"நிறைய டார்ட்ஸ் விளையாடியிருக்கிறீர்களா,
டெட்?" என்பது போன்ற கேள்விகள்.

495
00:25:14,306 --> 00:25:17,434
அதற்கு நான், "ஆம், ஐயா. வாரந்தோறும் ஞாயிறு
பிற்பகலில் எனது தந்தையுடன்

496
00:25:18,227 --> 00:25:20,646
ஒரு விளையாட்டு மையத்தில்,
பத்து வயது முதல் 16 வயது வரை,

497
00:25:20,729 --> 00:25:23,649
அதாவது என் தந்தை காலமாகும் வரை
விளையாடினேன்" என்று பதிலளித்திருப்பேன்.

498
00:25:29,488 --> 00:25:30,906
பார்பிக்யூ சாஸ்.

499
00:25:37,788 --> 00:25:39,998
-நன்கு விளையாடினீர்கள், ரூபெர்ட்.
-வாங்க, போகலாம்.

500
00:25:41,041 --> 00:25:44,253
நீ மிகவும் அருமையான ஆறுதல் பரிசு.

501
00:25:44,753 --> 00:25:47,589
ரெபேக்கா, டெட், மாலை பொழுதை
இன்பமாக கழியுங்கள்.

502
00:25:47,673 --> 00:25:48,966
மே, எப்போதும் போல்.

503
00:25:49,591 --> 00:25:52,261
கடவுளே, அது ரொம்ப நன்றாக இருந்தது.

504
00:25:52,344 --> 00:25:54,137
வேடிக்கையாக இருந்தது. ஆம்.

505
00:25:54,221 --> 00:25:56,515
-இப்போது செய்வதற்கு ஒன்று தான் இருக்கிறது.
-என்ன அது?

506
00:25:59,017 --> 00:26:00,185
நான் செய்ய வேண்டுமா?

507
00:26:03,230 --> 00:26:05,023
பானங்கள் என்னுடைய செலவு!

508
00:26:14,366 --> 00:26:17,327
ஏ.எஃப்.சி. ரிச்மண்ட்

509
00:26:19,121 --> 00:26:21,832
நண்பர்களே, நீங்கள் செய்யும் இந்த
தன்னம்பிக்கையான வட கொரிய ராணுவ காரியத்தை

510
00:26:21,915 --> 00:26:23,750
நாள் முழுதும் பார்ப்பேன்,
ஆனால் எனக்கு ஒரு உதவி தேவை.

511
00:26:23,834 --> 00:26:25,127
உங்களுக்காக எதுவும் செய்வோம், கோச்!

512
00:26:25,210 --> 00:26:27,462
அது கொஞ்சம் நடிப்பாக தெரிகிறது, சாம்,
நான் ராணுவம் என்று சொன்னதால்

513
00:26:27,546 --> 00:26:28,922
நீ அப்படி சொன்னாய் என்று புரிகிறது.

514
00:26:29,006 --> 00:26:30,174
நாம் இப்போது செய்ய வேண்டியது இதுதான்.

515
00:26:30,257 --> 00:26:32,176
உங்களில் எத்தனை பேர்
'சீசேம் ஸ்ட்ரீட்' பார்த்துள்ளீர்கள்?

516
00:26:37,514 --> 00:26:40,309
-காலை வணக்கம், ஹிக்கின்ஸ்.
-காலை வணக்கம். கொஞ்சம் பொறுங்க.

517
00:26:40,392 --> 00:26:42,352
ஆம், அது நல்லது. நேராக. சரி.

518
00:26:43,270 --> 00:26:45,564
சரி, சரி. கொஞ்சம் பொறுங்க.
நான் என் இடத்திற்குப் போய்விடுகிறேன்.

519
00:26:45,647 --> 00:26:47,524
சரி. இதோ, இதோ. செய்யலாம்.

520
00:26:47,608 --> 00:26:51,987
ஹாய் பாஸ்!

521
00:26:53,030 --> 00:26:54,031
ஹாய், டெட்.

522
00:26:54,615 --> 00:26:55,657
கேட்கவில்லை!

523
00:26:57,492 --> 00:26:59,203
ஹாய்!

524
00:26:59,286 --> 00:27:01,038
ஆம்! ஆம்!

525
00:27:01,121 --> 00:27:02,706
நாம் அதை உணர்ந்தோம்,
அவங்க அதை உணர்ந்தாங்க!

526
00:27:02,789 --> 00:27:05,292
அதைப் பற்றிதான் பேசினேன். ஆம்! ஆம்!

527
00:27:06,502 --> 00:27:08,170
மிகவும் சீக்கிரமாக எழுந்துவிட்டீர்கள்.

528
00:27:09,213 --> 00:27:12,132
டெட் நேற்று ரூபெர்ட்டை
மிகவும் சங்கடப்படுத்திவிட்டார்.

529
00:27:12,925 --> 00:27:13,926
அது நல்லது.

530
00:27:14,927 --> 00:27:15,928
கொஞ்சம் கெட்ட செய்தி.

531
00:27:16,011 --> 00:27:21,016
பருவத்தின் இறுதி ஆட்டத்திற்கு பத்தாயிரம்
சீட்டுகள் விற்கப்படாமல் இருக்கு.

532
00:27:21,099 --> 00:27:22,476
அவற்றை பார்வையாளர்களுக்கு கொடுத்துவிடு.

533
00:27:23,644 --> 00:27:26,855
ஆனால் ரெபேக்கா,
மேன் சிட்டி அந்த இடங்களை வாங்கிவிடும்.

534
00:27:26,939 --> 00:27:30,108
நம்முடைய சொந்த மைதானம்
நீலவான வண்ணமாக இருக்கும்.

535
00:27:30,943 --> 00:27:32,361
அது ரூபெர்ட்டை கொன்றுவிடும்.

536
00:27:32,444 --> 00:27:36,281
அது நம்முடைய வாய்ப்புகளை குறைத்துவிடும்.
நாம் வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளோம்.

537
00:27:36,365 --> 00:27:37,783
சொல்வதை செய், ஹிக்கின்ஸ்.

538
00:27:39,743 --> 00:27:41,954
ஓ, வந்து, எதையாவது செய்து ஒழியுங்கள்!

539
00:27:42,037 --> 00:27:43,205
என்ன?

540
00:27:43,288 --> 00:27:44,540
அது ரொம்ப எரிச்சலாக இருக்கு.

541
00:27:45,791 --> 00:27:49,920
ரூபர்ட்டை தொடர்ந்து தண்டிப்பதன் மூலம்
உங்கள் வலியை போக்க முடியாது.

542
00:27:50,003 --> 00:27:52,214
நீ என்னுடன் மதிய உணவு சாப்பிடுகையில்
எங்கள் வீட்டில் ரூபெர்ட் உடலுறவு கொண்டபோது

543
00:27:52,297 --> 00:27:53,841
இந்த நெறிமுறை எல்லாம் எங்கே சென்றன?

544
00:27:55,217 --> 00:27:56,677
நாம் நண்பர்கள் என்று நினைத்தேன்.

545
00:27:57,636 --> 00:28:01,473
சரியான விஷயத்தை செய்ய உனக்கு எல்லா
வாய்ப்பும் இருந்தாலும் நீ செய்ததே இல்லை.

546
00:28:01,557 --> 00:28:02,933
கோழை.

547
00:28:03,725 --> 00:28:07,938
நீங்க சொல்வது சரி. அதை செய்த
குற்றஉணர்ச்சி எனக்கு தேவைதான். நிச்சயமாக.

548
00:28:08,021 --> 00:28:13,443
நான் தைரியமாக இருந்திருக்க வேண்டும்,
அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

549
00:28:13,527 --> 00:28:17,239
ஆனால் இப்போது இதை சொல்கிறேன்.
நிறுத்துங்கள்.

550
00:28:17,322 --> 00:28:18,615
இல்லாவிட்டால்?

551
00:28:19,741 --> 00:28:20,742
நான் வெளியேறுகிறேன்.

552
00:28:22,119 --> 00:28:23,662
என்ன நடக்கும் என எனக்குத் தெரியும்.

553
00:28:24,204 --> 00:28:27,082
நீ திரும்ப வந்து, உன் வேலைக்காக
கெஞ்சுவாய், நான் மீண்டும் வேலை தருவேன்,

554
00:28:27,165 --> 00:28:30,085
ஆனால் நான் உன் வேலையை
இன்னும் கொஞ்சம் மோசமாக்குவேன்.

555
00:28:40,179 --> 00:28:41,430
ஹாய்.

556
00:28:44,099 --> 00:28:45,893
இதை படம்பிடிக்க நீங்க தான்
புகைப்படக்காரரை ஏற்பாடு செய்தீர்கள்.

557
00:28:45,976 --> 00:28:48,520
ராயும் நானும் அதை ஒரு புகைப்படக்காரரின்
கேமரா கார்டில் கண்டுபிடித்தோம்.

558
00:28:48,604 --> 00:28:50,439
நீங்கள் தான் நியமித்ததாக சொன்னார்.

559
00:28:50,522 --> 00:28:53,192
அதை மறுக்கவோ
அல்லது தெரியாதது போல் நடிக்கவோ வேண்டாம்.

560
00:28:55,027 --> 00:28:57,404
டெட்டிடம் நீங்களே ஒப்புக்கொள்ளுங்கள்
அல்லது உங்களுக்காக நான் செய்வேன்.

561
00:29:34,399 --> 00:29:36,401
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

