1
00:00:06,840 --> 00:00:09,051
இன்று மதியம் நடக்கும்
ரிச்மண்ட்-ஆர்சினல் போட்டியை,

2
00:00:09,134 --> 00:00:12,137
உங்களுக்கு இங்கே வழங்குவது
லிசா கிராம்லின் மற்றும் க்ரஹாம் பால்.

3
00:00:12,221 --> 00:00:14,389
-வரவேற்கிறேன், க்ரஹாம்.
-உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, லிசா.

4
00:00:14,473 --> 00:00:19,895
பல நாட்களின் தொடர்ச்சியாக இன்றும்
ராய் கென்டிற்கு ஒரு மோசமான நாளாக இருந்தது.

5
00:00:19,978 --> 00:00:22,481
அவரது கடந்த ஒன்பது போட்டிகளில்,
கென்ட்டின்...

6
00:00:23,440 --> 00:00:25,776
...முயற்சிகள் கிட்டத்தட்ட
இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது.

7
00:00:25,859 --> 00:00:29,696
இன்று, அந்த அவமானம் தரும் கோல்...

8
00:00:29,780 --> 00:00:30,781
இங்கே இருக்கிறாயா நீ.

9
00:00:30,864 --> 00:00:32,031
எல்லோரும் போய் விட்டார்களா?

10
00:00:32,115 --> 00:00:34,243
ஆமாம், சார். ஆனால், ரோஹாஸை தவிர.

11
00:00:34,326 --> 00:00:36,870
அவன் மைதானத்தில் இன்னும் கூட
பயிற்சி செய்து கொண்டிருக்கிறான்.

12
00:00:37,246 --> 00:00:38,497
என்ன ஒரு மோசமான மனிதன்.

13
00:00:38,580 --> 00:00:39,915
-இல்லையா?
-ஆமாம்.

14
00:00:43,168 --> 00:00:45,045
யாராவது ராயை ஐஸ் கட்டியோடு
கேட்டார்களா, என்ன?

15
00:00:45,128 --> 00:00:46,421
இது எப்படி இருக்கும்?

16
00:00:47,047 --> 00:00:48,632
அது ரொம்ப குளிர்ச்சியாக இருக்கு, நண்பா.

17
00:00:48,715 --> 00:00:51,510
உன்னை அங்கே பார்க்கும் போதே
என் உடல் பூரிப்படைகிறது.

18
00:00:53,345 --> 00:00:55,597
நான் மோசமாக விளையாடினேன் என்று
சொல்லிவிட்டு போகிறீர்களா?

19
00:00:56,223 --> 00:00:57,766
நான் அப்படி செய்யப் போவதில்லை, நண்பா.

20
00:00:57,850 --> 00:01:00,060
என்னால் தான் தோல்வி அடைந்தோம்.
நான் கேவலமானவன்.

21
00:01:00,143 --> 00:01:03,021
கொஞ்சம் பொறு. உனக்கு இன்று
நேரம் சரியில்லை. பெரிய கஷ்டம்.

22
00:01:03,105 --> 00:01:04,355
"பெரிய கஷ்டமா?"

23
00:01:04,438 --> 00:01:05,774
ஆமாம், பெரிய கஷ்டம்.

24
00:01:07,150 --> 00:01:09,778
நீ உன்னையே பழி சொல்வது வுட்டி ஆலன்,
கிளாரினெட் வாசிப்பது போல இருக்கு.

25
00:01:09,862 --> 00:01:11,822
எனக்கு அதை கேட்க விருப்பமில்லை. சரியா?

26
00:01:12,489 --> 00:01:17,035
சரி, நீ அதை மறந்து விடு.
உன்னையே வருத்திக்கொள்ளாதே. சரியா?

27
00:01:18,328 --> 00:01:21,707
ஹே. நான் உனக்கு ஆதரவாக இருப்பேன்.
எதற்காகவும் அது மாறாது.

28
00:01:22,749 --> 00:01:25,419
நீ பரட்டை தலைமுடி கொண்ட,
ஆஸ்கர் தி கிரௌச் போல தோற்றமளிக்கிறாய்.

29
00:01:26,503 --> 00:01:28,130
-எரியட்டுமா, அணைக்கவா?
-அணைத்துவிடுங்க.

30
00:01:30,424 --> 00:01:33,302
உங்களுக்காகவும், எங்களுக்காகவும் ராய்
பற்றி வருந்துவதை, நிறுத்த வேண்டும்.

31
00:01:33,385 --> 00:01:34,595
அதை மறந்து விடு.

32
00:01:34,678 --> 00:01:36,096
-இதோ.
-ஹலோ, ராய்.

33
00:01:36,180 --> 00:01:38,015
இது இடைவெளி நேரம். நாம் திரும்பும் போது,

34
00:01:38,098 --> 00:01:41,810
மான்செஸ்டர் சிட்டிக்காக விளையாடும்
ஜேமி டார்டின் விளையாட்டை பற்றி பார்ப்போம்.

35
00:01:41,894 --> 00:01:43,979
ஒரு காலத்தில் கென்ட் என்று பெயரில்
ஒரு கிழவன் இருந்தான்...

36
00:02:12,382 --> 00:02:15,636
அவ்வளவு தான். அப்படித்தான். ஆமாம்.
அழகு.

37
00:02:18,430 --> 00:02:21,099
ஓ, கடவுளே. கவனமாக இருங்க, கேட் மாஸ்.

38
00:02:21,183 --> 00:02:23,852
ஆங்கிலேய மாடலிங் துறையில்
ஒரு புதிய வசீகரமான பெண் இருக்கிறாள்.

39
00:02:23,936 --> 00:02:26,647
-என்ன? அப்படியா?
-சரி, இதோ எடுத்து விட்டோம்.

40
00:02:26,730 --> 00:02:29,358
உங்களுக்கு பிஸ்கட்கள் தேவைப்படுமோ
என நினைத்து கொண்டு வந்தேன். சரியா?

41
00:02:33,278 --> 00:02:35,948
ஓ, ஆஹா. இந்த மாதிரி செய்யும் போது
உங்களுக்கு பதற்றமாக இருக்குமா?

42
00:02:36,031 --> 00:02:38,450
இது கால்பந்தில் இருக்கும் பெண்களை பற்றிய
ஒரு கட்டுரை. இது பெரிய விஷயம் இல்லை.

43
00:02:38,534 --> 00:02:41,787
இதில், நாங்கள், நால்வர் இருக்கிறோம்:
நான், கேரன், டீலியா மற்றும் போஷ் ஸ்பைஸ்.

44
00:02:41,870 --> 00:02:44,206
இங்கே, பாருங்க. முன் உதாரணமாக இருப்பது
என்பது பெரிய விஷயம்.

45
00:02:44,790 --> 00:02:47,668
சமுதாயத்தில் ஒரு சிறு பெண் கத்தரிப்பூ நிற
விளையாட்டு ஆடை அணிந்து கொண்டு

46
00:02:47,751 --> 00:02:51,004
தான் ஒரு விளையாட்டு துறை
நிர்வாகி ஆவது குறித்து,

47
00:02:51,088 --> 00:02:54,049
கனவு கண்டு கொண்டிருக்கலாம் என
உங்களுக்குப் புரியவில்லையா?

48
00:02:54,132 --> 00:02:55,926
இந்த கட்டுரையை அவள் படித்துவிட்டு,

49
00:02:56,009 --> 00:03:00,180
"அடடா. என் கனவுகளும் ஒரு நாள் பலிக்கும்"
என்று நினைக்க போகிறாள்.

50
00:03:00,264 --> 00:03:03,976
உங்க கற்பனையில், சிறு பெண்கள் 'த ஃபுட்பால்
பைனான்சியல் க்வார்டர்லி'யை படிக்கிறார்களா?

51
00:03:04,059 --> 00:03:05,769
வந்து, யாருக்கு தெரியும்?
சிறு பெண்கள் மர்மமானவர்கள்.

52
00:03:06,395 --> 00:03:09,565
முட்டாள் ஆனால் வலிமையானவர்கள். அவர்களை
புரிந்து கொள்வதைமுன்னரே நிறுத்தவிட்டேன்.

53
00:03:10,232 --> 00:03:12,025
வந்து, இதை ஹிக்கின்ஸ் பார்த்திருந்தால்,

54
00:03:12,109 --> 00:03:13,944
உங்களுக்காக நிச்சயமாக
சந்தோஷப்பட்டிருப்பார்.

55
00:03:15,070 --> 00:03:16,405
அதை பற்றி எனக்கு தெரியாது, டெட்.

56
00:03:16,488 --> 00:03:18,448
ஹிக்கின்ஸ் ராஜினாமா செய்த போது,
என்னை பற்றிய அவரது கருத்தை

57
00:03:18,532 --> 00:03:20,367
தெளிவாக விளக்கினார்,
அது எனக்கு ஆதரவாக இல்லை.

58
00:03:20,450 --> 00:03:23,954
இல்லை. அதை நான் மோசமான நினைவுகள்
என்று எடுத்துக்கொள்கிறேன். சரியா?

59
00:03:24,037 --> 00:03:25,664
அவர் நிச்சயம் திரும்பி வருவார்.

60
00:03:25,747 --> 00:03:27,583
-சரி. நான் பேச்சை மாற்றப் போகிறேன்.
-சரி.

61
00:03:27,666 --> 00:03:30,043
இறுதி வாரக்கடைசிக்கு செல்வதால்
குழுவின் மனநிலை எப்படி இருக்கு?

62
00:03:30,127 --> 00:03:32,921
அதாவது, சென்ற முறை தோற்றதைப் பற்றி நான்
இன்னும் வருத்தமாய் இருக்கிறேன்.

63
00:03:33,505 --> 00:03:34,506
அப்படியா?

64
00:03:35,340 --> 00:03:36,341
நிச்சயமாக.

65
00:03:37,217 --> 00:03:38,802
-ஹேய், கீலி.
-ஹாய், டெட்.

66
00:03:38,886 --> 00:03:41,722
ஹேய், டாம் ஃபோர்டின் அந்த விளம்பரதாரர்கள்
மறுபடியும் பேசினார்களா?

67
00:03:41,805 --> 00:03:43,056
ஆமாம், பேசினார்கள்.

68
00:03:43,140 --> 00:03:45,475
இப்போதிருக்கும் மாடல்களோடு
வேலை செய்ய போவதாய் சொன்னார்கள்.

69
00:03:45,559 --> 00:03:46,476
முட்டாள்கள்.

70
00:03:46,560 --> 00:03:47,936
தெரியும். ஆனால் அவர்கள் எப்போதாவது

71
00:03:48,020 --> 00:03:50,689
ஒரு சாதாரண பிரச்சாரம் அல்லது
நையாண்டி பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தால்,

72
00:03:50,772 --> 00:03:51,773
உங்களை பயன்படுத்துவதாக சொன்னார்கள்.

73
00:03:51,857 --> 00:03:54,234
சரி. பரவாயில்லை. அது ஒன்றும் மோசமில்லை.

74
00:03:54,318 --> 00:03:55,861
உங்களிடம் ஒரு நொடி பேசலாமா, ரெபேக்கா?

75
00:04:00,032 --> 00:04:01,033
உள்ளே போங்க.

76
00:04:05,996 --> 00:04:07,956
கடவுளே, இங்கே துர்நாற்றம் வீசுகிறது.

77
00:04:08,040 --> 00:04:10,292
அது உடனேயே நம்மை தாக்குகிறது, இல்லையா?

78
00:04:10,375 --> 00:04:13,879
மோசமாக இருக்கு. பாத நாற்றம், நம் மூக்கில்
வீசுகிறது. உனக்கு வாசம் வருகிறதா?

79
00:04:13,962 --> 00:04:16,173
நீங்க ரொம்ப மோசமானவள், ரெபேக்கா.

80
00:04:16,255 --> 00:04:17,632
ஏன் இன்னும் டெட்டிடம் சொல்லவில்லை?

81
00:04:18,132 --> 00:04:19,134
நான் சொல்வேன்.

82
00:04:19,218 --> 00:04:20,135
எப்போது?

83
00:04:21,637 --> 00:04:24,139
செய்யக் கூடாத ஒருவருக்கு மன்னிக்க
முடியாத ஒரு விஷயத்தை செய்து விட்டு

84
00:04:24,223 --> 00:04:26,517
அவர்களின் கண்களை பார்த்து
செய்ததை சொல்வதை கொஞ்சம் யோசித்துப் பார்.

85
00:04:26,600 --> 00:04:28,310
கற்பனை செய்ய வேண்டியதில்லை.
நான் செய்திருக்கிறேன்.

86
00:04:28,977 --> 00:04:31,188
எட்டாம் வகுப்பில், நான்
ஜொவானா வெல்லிங்டன் லாக்கரை நாசம் செய்தேன்.

87
00:04:31,271 --> 00:04:32,648
நான் மன்னிப்பு கேட்டேன்,

88
00:04:32,731 --> 00:04:35,817
அவள் பிறந்தநாள் விருந்திற்கு அழைக்கப்படலை,
ஒரு வாரத்திற்கு பிறகு சமரசமாகிவிட்டோம்.

89
00:04:35,901 --> 00:04:37,569
தயவு செய்து அவரிடம் சொல்லுங்க.

90
00:04:38,111 --> 00:04:39,738
மன்னிச்சிடு,
நீ ஏன் அவள் லாக்கரை நாசம் செய்தாய்?

91
00:04:40,155 --> 00:04:41,448
தெரியலை. எனக்கு அப்போது 13 வயது.

92
00:04:42,241 --> 00:04:47,037
என்ன? பதின்பருவ பெண்கள், மர்மமானவர்கள்,
மோசமானவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள்.

93
00:04:47,120 --> 00:04:48,539
-சரி.
-அது விஷயம் கிடையாது!

94
00:04:48,622 --> 00:04:50,457
-சரி.
-ஓ, கடவுளே.

95
00:04:50,541 --> 00:04:52,042
மன்னிச்சிடுங்க. ஆஹா.

96
00:04:53,794 --> 00:04:56,964
பெண்களுக்கு காலணிகள் பிடிக்கும் என
தெரியும், ஆனால், இது முட்டாள்தனம்.

97
00:04:57,047 --> 00:04:58,757
மன்னிச்சிடுங்க, அது ஒரு மோசமான கருத்து.

98
00:04:58,841 --> 00:05:01,176
இங்கே யாராவது இருப்பார்கள் என்று
நான் நினைக்கவில்லை.

99
00:05:01,260 --> 00:05:02,761
ஆனால் நீங்க இருக்கீங்க, இது சிறப்பானது.

100
00:05:02,845 --> 00:05:05,514
வேண்டிய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்க.
சரி. நான் போகிறேன். மன்னிக்கவும்.

101
00:05:07,099 --> 00:05:09,184
அதாவது, இப்போது டெட்டிடம்
சொல்வதில் என்ன பயன்?

102
00:05:09,268 --> 00:05:10,394
அது எதையும் மாற்றாது.

103
00:05:10,769 --> 00:05:12,354
உங்களைப் பற்றிய என் கருத்தை அது மாற்றும்.

104
00:05:18,485 --> 00:05:21,822
டேவிட், இந்த சீசனில் மேன் சிட்டியை
எதிர்த்து ஒரு இறுதி ஆட்டம் தான் இருக்கு,

105
00:05:21,905 --> 00:05:24,867
வில்லி நெல்சன் போல, தலையை உயர்த்திக்கொண்டு
வெளியேறுவது தான் எங்களது இலக்கு.

106
00:05:24,950 --> 00:05:26,159
சரியா?

107
00:05:26,243 --> 00:05:28,120
ட்ரென்ட் க்ரிம் நீங்க என்ன சொல்றீங்க?

108
00:05:28,203 --> 00:05:30,998
என் நினைவு சரி என்றால், 'டெய்லி பிளானெட்'
இல் இருந்து வருகிறீர்கள், சரியா?

109
00:05:31,456 --> 00:05:32,791
ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட்.

110
00:05:32,875 --> 00:05:35,335
ஆமாம். அது தான். சரி.
உங்க கேள்வி என்ன, ட்ரென்ட்?

111
00:05:35,419 --> 00:05:38,088
உங்க மேற்பார்வையில் பல இளம் ஆட்டக்காரர்கள்
நன்றாக விளையாட தொடங்கி இருக்கிறார்கள்.

112
00:05:38,922 --> 00:05:40,299
அப்புறம் ராய் கென்ட்.

113
00:05:40,382 --> 00:05:43,385
போன ஆட்டத்தில் அவர் கேவலமாக விளையாடினார்.
இதைப்பற்றி உங்க கருத்துக்கள்?

114
00:05:43,468 --> 00:05:47,347
சரி, அதை ராயிடமே கேட்கலாம். அந்த நாள்
அவனுக்கு சரியாக அமையவில்லை என்று சொல்வான்.

115
00:05:47,973 --> 00:05:49,183
ஆனால் இப்போது ராய் கென்ட் தான்

116
00:05:49,266 --> 00:05:51,602
அணியின் முதுகெலும்பு
என்று உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்.

117
00:05:52,019 --> 00:05:53,520
சரி, நாம் கொஞ்சம் வழக்கத்தை மாற்றுவோம்.

118
00:05:53,604 --> 00:05:56,440
உங்களில் கூச்சமுள்ளவர்கள் இருந்தால்,
உங்கள் கைகளை தூக்குங்கள்.

119
00:05:56,523 --> 00:05:58,358
அடுத்த சில கேள்விகளை நீங்கள்
கேட்கப் போகிறீர்கள்.

120
00:05:58,442 --> 00:05:59,860
அது ஒரு தந்திரம்!

121
00:05:59,943 --> 00:06:02,654
நீங்கள் கூச்சமுள்ளவர்கள் என்றால், தேவாலய
எலி போல அமைதியாக இருந்திருப்பீர்கள்.

122
00:06:02,738 --> 00:06:06,241
வெஸ்ட்போரோ பாப்டிஸ்ட் தேவாலயமாக இல்லாதவரை.
அங்குள்ள வான்கோழிகள் அமைதியாக இருக்காது.

123
00:06:09,244 --> 00:06:11,663
ஹாய், நண்பர்களே. என்ன விஷயம்?

124
00:06:11,747 --> 00:06:13,040
தயவு செய்து உட்கார்.

125
00:06:13,582 --> 00:06:14,583
சரி.

126
00:06:18,170 --> 00:06:20,672
இருவரும் இப்போது ஏதோ
நகைச்சுவை செய்யப் போகிறீர்கள் அல்லது

127
00:06:20,756 --> 00:06:22,257
இருவரும் டேட்டிங் செய்வதாக
சொல்லப் போகிறீர்கள்.

128
00:06:22,341 --> 00:06:25,928
எதுவானாலும் எனக்கு சம்மதம். ஏனென்றால்
உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.

129
00:06:26,345 --> 00:06:28,138
முதலில் களமிறங்கும் வீரர் வரிசையிலிருந்து
ராயை நீக்கணும்.

130
00:06:28,805 --> 00:06:30,432
அப்படியா. சரி.

131
00:06:30,516 --> 00:06:31,767
அது ஒரே ஒரு மோசமான விளையாட்டு இல்லை, கோச்.

132
00:06:31,850 --> 00:06:32,976
அவன் வயது விளையாட்டில் தெரிகிறது,

133
00:06:33,060 --> 00:06:35,479
கடந்த ஐந்து போட்டிகளிலும்
குறிப்பிடத்தக்க தவறுகள் செய்துள்ளான்.

134
00:06:35,562 --> 00:06:37,314
நாம் அவர்களால் இன்னும் தாக்கப்படவில்லை.

135
00:06:37,898 --> 00:06:39,858
ஆனால் நேற்று கொஞ்சம் தாக்கப்பட்டோம்.

136
00:06:39,942 --> 00:06:42,903
கடுமையான இழப்புகள். எப்போதும் போல
மிகுந்த கடினமான இழப்புகள்.

137
00:06:48,158 --> 00:06:50,035
ரெபெக்கா என்ற 'தலைவர்'
நான் உங்களோடு பேசணும்.

138
00:06:54,414 --> 00:06:57,543
நண்பர்களே... நான் ராயை விலக்க மாட்டேன்.

139
00:06:58,293 --> 00:06:59,503
அவன் நம் அணித்தலைவன்.

140
00:06:59,586 --> 00:07:03,715
உங்களின் அபிப்பிராயத்தையும் மதிக்கிறேன்
என்று புரிந்துகொள்ளுங்கள்.

141
00:07:04,967 --> 00:07:06,260
அவை தவறாக இருந்தால் கூட.

142
00:07:08,053 --> 00:07:09,763
அது உண்மையிலேயே நல்ல விதமாக
இருக்கும் என நினைத்தேன்.

143
00:07:11,557 --> 00:07:12,891
நான் சீக்கிரம் போகணும்.

144
00:07:19,898 --> 00:07:22,442
-உங்களை யாரும் தாக்கினார்களா?
-கண்டிப்பாக இல்லை.

145
00:07:22,526 --> 00:07:23,652
மன்னிச்சிடுங்க. நான்...

146
00:07:23,735 --> 00:07:24,736
தாக்கப்பட்டேன்.

147
00:07:30,325 --> 00:07:31,368
எங்கே?

148
00:07:33,954 --> 00:07:35,163
ஹேய். என்ன விஷயம்?

149
00:07:35,956 --> 00:07:38,041
உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

150
00:07:38,417 --> 00:07:39,543
நான் கவனமாக கேட்கிறேன்.

151
00:07:42,963 --> 00:07:44,882
சரி, நான் சுற்றி வளைத்து பேசப் போவதில்லை.

152
00:07:44,965 --> 00:07:48,177
நான் நேரிடையாக...
விஷயத்தை சொல்லப் போகிறேன்.

153
00:07:48,260 --> 00:07:49,845
தேவை இல்லாமல், எரிச்சலூட்டாமல்,

154
00:07:49,928 --> 00:07:51,638
கண்டிப்பாக தள்ளிப்போடாமல் பேசப்போகிறேன்.

155
00:07:51,722 --> 00:07:53,807
தள்ளிப்போடு... தள்ளிப்போடு...
அது ஒரு நல்ல வார்த்தை, இல்லையா?

156
00:07:53,891 --> 00:07:56,226
தள்ளிப்போடுவது. தள்ளிப்போடுவது.

157
00:07:56,727 --> 00:07:58,478
அந்த வார்த்தையின் ஆணிவேர்
எது என தெரியவில்லை.

158
00:07:58,562 --> 00:08:02,441
அதாவது, "தள்ளி" என்பது நல்லா இருக்கு,
ஆனால் "போடுவது'? போடுவது...

159
00:08:03,150 --> 00:08:05,152
எனக்குத் தெரியலை.
ஹே! நாம் இதைப்பற்றி தேடிப் பார்க்கலாமே?

160
00:08:05,235 --> 00:08:07,654
-உங்களிடம் அகராதி இருக்கா?
-இல்லை. நீங்க நலம் தானே?

161
00:08:08,155 --> 00:08:09,406
-நானா?
-ஆமாம்.

162
00:08:09,489 --> 00:08:11,408
நான் பிரமாதமாக இருக்கிறேன்!

163
00:08:11,491 --> 00:08:13,827
ஆமாம், நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.

164
00:08:16,038 --> 00:08:17,748
இதை நாம் பிறகு பேசலாமா, டெட்?

165
00:08:18,123 --> 00:08:20,375
சரி. பரவாயில்லை.
நான் திரும்பிச் செல்கிறேன்.

166
00:08:30,886 --> 00:08:34,806
அட, கடவுளே. அட, கடவுளே, அட, கடவுளே.
அட, கடவுளே. அட, கடவுளே.

167
00:08:34,890 --> 00:08:36,600
அதை செய்து விடு.
நான் ஒரு வளர்ந்த பெண்.

168
00:08:36,683 --> 00:08:38,727
நான் வந்து...
உன் குப்பையை நீயே அகற்றி விடு.

169
00:08:38,809 --> 00:08:41,522
உன் குப்பையை அகற்றி விடு. சரி. ஓ, கடவுளே.

170
00:08:42,898 --> 00:08:44,525
ஆச்சரியம்.

171
00:08:45,609 --> 00:08:47,444
-ரூபெர்ட்.
-நீ பதற்றமாக தெரிகிறாய்.

172
00:08:47,528 --> 00:08:48,737
ஹிக்கின்ஸ் எங்கே?

173
00:08:48,820 --> 00:08:50,155
அவனை வேலையை விட்டு அனுப்பிவிட்டேன்.

174
00:08:50,239 --> 00:08:52,074
ஏன்? ஹிக்கின்ஸ் திறமையானவன்.

175
00:08:52,699 --> 00:08:54,743
அவனிடம் இருந்த
ஒரே ஒரு கெட்ட குணம் என்னவென்றால்

176
00:08:54,826 --> 00:08:57,162
அவன் எப்போது
என்னிடம் இருந்து பேனாவை கடன் வாங்கினாலும்,

177
00:08:57,246 --> 00:09:00,582
கவலையோடு இருக்கும் ஒரு நாய்க்குட்டி போல
அந்த பேனாவின் முனையை கடித்து விடுவான்.

178
00:09:01,792 --> 00:09:02,793
நல்ல பையன்.

179
00:09:02,876 --> 00:09:04,044
சரி, அவன் போய்விட்டான்.

180
00:09:04,127 --> 00:09:07,130
அவமானம். ஓ, சரி. அவன் இப்போது என்னிடம்
வேலைக்கு சேருவான் என்று நினைக்கிறேன்.

181
00:09:07,840 --> 00:09:10,425
பாருங்க, ரூபெர்ட், இந்த கிளப்பை
திரும்ப வாங்க வந்திருக்கிறீர்களா...

182
00:09:10,509 --> 00:09:14,346
இல்லை, நீ கேள்விப்படுவதற்கு முன்னால்
நானே இதை உன்னிடம் சொல்லணும் என்று வந்தேன்.

183
00:09:15,013 --> 00:09:17,015
பெக்ஸுக்கும் எனக்கும்
குழந்தை பிறக்கப் போகிறது.

184
00:09:18,725 --> 00:09:20,519
மறுபடியும், ஆச்சரியம்.

185
00:09:21,854 --> 00:09:25,732
-ஆனால் நீங்க எப்போதுமே...
-நாம் முதிர்ச்சியாக நடப்போமென நினைத்தேன்.

186
00:09:27,317 --> 00:09:28,694
நீங்க முதிர்ச்சியடைந்தவர் தான்.

187
00:09:28,777 --> 00:09:32,281
உங்களுக்கு கிட்டத்தட்ட 70 வயதாகப் போகிறது,
இப்போது குழந்தையா?

188
00:09:32,364 --> 00:09:35,242
வந்து, நீங்க, அந்த பைபிளில் இருந்து
வந்திருக்கும் ஒரு கதாபாத்திரமா?

189
00:09:35,325 --> 00:09:36,952
உங்க குழந்தை வயதுக்கு வரும் போது,

190
00:09:37,035 --> 00:09:39,705
நீங்க மண்ணோடு மண்ணாக வெறும்
நினைவாக மட்டுமே இருப்பீர்கள்.

191
00:09:39,788 --> 00:09:40,873
இங்கே, பார், செல்லமே.

192
00:09:40,956 --> 00:09:42,082
என்னை அப்படி கூப்பிடாதீங்க.

193
00:09:42,165 --> 00:09:44,751
மனிதர்கள் மாறுவார்கள்.
எனக்கு நிச்சயம் ஒரு குழந்தை வேண்டும்.

194
00:09:45,419 --> 00:09:48,881
ஆனால் அது உன்னோடு...

195
00:09:50,340 --> 00:09:51,425
முன்னால் வேண்டாமென நினைத்தேன்.

196
00:09:53,177 --> 00:09:57,139
அதாவது, கடைசியில், எல்லாமே நமக்கு
பொருத்தமான நபரோடு இருப்பது தான், இல்லையா?

197
00:10:00,559 --> 00:10:01,560
நிச்சயமாக.

198
00:10:01,643 --> 00:10:04,146
இதை உன்னிடம் நானே வந்து
சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

199
00:10:05,272 --> 00:10:08,108
இதை நீ பத்திரிகையில் படித்து
தெரிந்திருந்தால், நான் வருந்தியிருப்பேன்.

200
00:10:08,775 --> 00:10:10,611
மேன் சிட்டியை எதிர்த்து விளையாட
என் வாழ்த்துக்கள்.

201
00:10:57,282 --> 00:10:58,575
உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

202
00:11:00,285 --> 00:11:01,453
இரண்டாவது முறை.

203
00:11:02,162 --> 00:11:04,081
நான் ஒரு மோசமான பெண்.

204
00:11:04,957 --> 00:11:06,291
இல்லை, இது முதல் முறை.

205
00:11:10,212 --> 00:11:11,463
டெட், நான் உங்களிடம் பொய் சொன்னேன்.

206
00:11:13,298 --> 00:11:15,884
இந்த அணி தோற்பதற்காக தான்
நான் உங்களை வேலைக்கு சேர்த்தேன்.

207
00:11:16,718 --> 00:11:18,345
நீங்க தோற்க வேண்டும் என தான் நினைத்தேன்,

208
00:11:18,428 --> 00:11:21,014
எனக்கு வாய்ப்பு கிடைத்த போது எல்லாம்
உங்களுக்கு தீமை செய்தேன்.

209
00:11:22,391 --> 00:11:26,562
உங்களையும் கீலியையும் புகைப்படம் எடுத்த
புகைப்படக்காரனை நான் தான் நியமித்தினேன்.

210
00:11:27,354 --> 00:11:32,568
உங்களை அவமானப்படுத்துவதற்காகவே, ட்ரென்ட்
க்ரிம்மோடு பேட்டியை ஏற்பாடு செய்தேன்.

211
00:11:33,151 --> 00:11:37,030
நீங்க வேண்டாம் என்று சொல்லியும்
நான் தான் ஜேமி டார்டின்,

212
00:11:37,114 --> 00:11:38,740
மாற்றத்தை ஏற்பாடு செய்தேன்.

213
00:11:40,659 --> 00:11:44,705
ரூபெர்ட் இந்த கிளப்பைப்பற்றி மட்டும் தான்
கவலைப்பட்டார், எனவே இதை அழிக்க நினைத்தேன்.

214
00:11:45,497 --> 00:11:50,627
எனக்கு உண்டாக்கிய வலி மற்றும் துன்பத்தை
அவருக்கு உண்டாக்க தான் இப்படி செய்தேன்.

215
00:11:51,420 --> 00:11:55,591
இதற்காக யாரை உபயோகித்தேன், யாரை
காயப்படுத்தினேன் என்றெல்லாம் கவலைப்படலை.

216
00:11:57,009 --> 00:12:01,221
உங்களை போன்ற நல்லவர்களை,
மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்தவர்களை.

217
00:12:03,098 --> 00:12:04,641
என்னை மன்னிச்சிடுங்க, டெட்.

218
00:12:16,528 --> 00:12:19,531
வெளியேறவோ, பத்திரிகைக்காரர்களை அழைக்கவோ
விருப்பப்பட்டால் தவறாக எடுக்க மாட்டேன்.

219
00:12:22,743 --> 00:12:23,911
நான் உங்களை மன்னிக்கிறேன்.

220
00:12:25,162 --> 00:12:27,122
நீங்க... என்ன? ஏன்?

221
00:12:27,706 --> 00:12:28,957
விவாகரத்து கொடுமையானது.

222
00:12:30,792 --> 00:12:32,544
நாம் பிரிகிறோமோ அல்லது

223
00:12:32,628 --> 00:12:35,923
நம்மை பிரிகிறார்களா என்பது...
முக்கியமில்லை.

224
00:12:36,924 --> 00:12:38,675
அது நம்மை முட்டாள்தனமான
விஷயங்களை செய்ய தூண்டும்.

225
00:12:40,302 --> 00:12:43,805
பாருங்க, நான் கால்பந்து பயிற்சி
அளிக்கிறேன். அதுவும் லண்டனில்.

226
00:12:43,889 --> 00:12:45,307
அது, முட்டாள் தனம்.

227
00:12:48,644 --> 00:12:49,645
ஆமாம்.

228
00:12:50,521 --> 00:12:52,773
ஆனால் நீங்க கொடுத்த இந்த வேலை
என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

229
00:12:55,025 --> 00:12:57,861
என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள தேவையான
இடைவெளியை இது கொடுத்தது.

230
00:13:00,030 --> 00:13:01,323
ஆமாம், ஆனால் நீங்களும் நானும்...

231
00:13:03,283 --> 00:13:04,284
நாம் நண்பர்கள் தான்.

232
00:13:10,749 --> 00:13:11,750
டெட்.

233
00:13:11,834 --> 00:13:13,961
சரி, என் கையை குலுக்குங்க.
என் கை கொஞ்சம்...

234
00:13:19,842 --> 00:13:23,345
அதாவது, நாம் யார் மீதாவது
அக்கறைக் கொண்டு,

235
00:13:23,428 --> 00:13:26,598
நம் இதயத்தில் கொஞ்சம் அன்பு இருந்தால்,

236
00:13:26,682 --> 00:13:29,059
இருவரும் சேர்ந்து
எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்.

237
00:13:29,142 --> 00:13:30,310
நான் சொல்வது புரிகிறதா?

238
00:13:34,815 --> 00:13:36,984
நீங்கள் நம்மை பற்றி இப்போது பேசவில்லை,
சரிதானே?

239
00:13:38,068 --> 00:13:40,696
பேசியிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

240
00:13:42,614 --> 00:13:43,907
சரி.

241
00:13:43,991 --> 00:13:45,701
நான் உடை மாற்றிக் கொள்ள
போகிறேன்... பயிற்சிக்காக.

242
00:13:45,784 --> 00:13:47,619
என்னவோ. யார் கவலைப்படப் போகிறார்கள்?

243
00:13:47,703 --> 00:13:49,621
இங்கே உங்களை சந்தித்ததில்
மகிழ்ச்சி, தலைவரே.

244
00:13:50,581 --> 00:13:51,999
இந்த இடத்திற்கு உயிரூட்டியுள்ளீர்கள்.

245
00:13:56,378 --> 00:13:57,754
சரி, ஆரம்பிக்கலாமா என்ன?

246
00:13:58,297 --> 00:14:00,674
துவங்கலாம். வாங்க. இப்போதே, வாங்க.

247
00:14:00,757 --> 00:14:03,302
சரி, உங்க உடம்பு, ஒரு நாள் முன்னர் சமைத்த
அரிசி என்பதை நினைவில் கொள்ளுங்க.

248
00:14:03,385 --> 00:14:05,679
அதை சரியாக சூடு செய்யவில்லை என்றால்,
எதாவது மோசமான விளைவுகள் ஏற்படும்.

249
00:14:05,762 --> 00:14:07,431
உணவே விஷமாவது நகைச்சுவை கிடையாது.

250
00:14:07,514 --> 00:14:09,308
ஒரு முறை,
நான் உடல் நலமில்லாமல் இருந்தேன்,

251
00:14:09,391 --> 00:14:11,310
அதே நேரத்தில்,
எனக்கு வயிற்றுப்போக்கும் இருந்தது.

252
00:14:11,810 --> 00:14:13,937
ஆமாம். அப்படி நடக்கும்.
வேறு யாராவது ஏதாவது சொல்லணுமா?

253
00:14:14,021 --> 00:14:16,815
இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதா?

254
00:14:16,899 --> 00:14:18,483
உடல் என்பதே ஒரு அற்புத படைப்பு.

255
00:14:18,984 --> 00:14:20,944
ஆமாம். நல்ல சிந்தனை. அதை பாராட்டுகிறேன்.

256
00:14:21,028 --> 00:14:23,572
சரி, நண்பர்களே, வேகம் மிக
முக்கியம் என நம் எல்லோருக்கும் தெரியும்.

257
00:14:23,655 --> 00:14:26,200
ஆனால் திடீரென்று நின்று
திசைகளை மாற்றுவது என்பது?

258
00:14:26,283 --> 00:14:29,077
அது, கான்யேவின் 808கள்
மற்றும் ஹார்ட்ப்ரேக் போன்றது.

259
00:14:29,161 --> 00:14:30,370
அதற்கேற்ற மதிப்பு கிடைத்ததே இல்லை.

260
00:14:30,787 --> 00:14:33,123
சரி, நேட் வைத்த அந்த கோன்களில்
நாம் வரிசையாக நிற்போம். போகலாம்.

261
00:14:34,499 --> 00:14:35,501
சரி, இதை தான் செய்யணும்.

262
00:14:35,584 --> 00:14:39,213
கடைசியாக ஆரம்பித்து, நிறுத்தி, பின்னர்
ஆரம்பிப்பவன் அழுகிய முட்டை. துவங்கலாம்.

263
00:14:42,549 --> 00:14:44,843
ஹே, இன்று காலை குளிக்கும் போது
ஒரு நகைச்சுவை யோசித்தேன், கோச்.

264
00:14:46,303 --> 00:14:48,096
ஒரு ஆங்கிலேய ஆந்தை என்ன சொல்லும்?

265
00:14:51,642 --> 00:14:52,851
கோச், ஒரு ஆங்கிலேய ஆந்தை...

266
00:14:55,229 --> 00:14:56,313
நான் இதற்கு முன்னால் சொன்னேன்...

267
00:14:57,981 --> 00:15:00,359
அழுக்கை வைத்துக்கொண்டு
துரத்துவது போல நடக்கிறீர்கள்.

268
00:15:01,109 --> 00:15:03,195
சரி. சரி.
இங்கே என்ன நடக்கிறது என புரிகிறது.

269
00:15:03,278 --> 00:15:04,404
இது ராயைப் பற்றியது தானே?

270
00:15:04,488 --> 00:15:07,908
ஆக நீங்க என்னை கவனிக்காமல் என்னோடு பேசாமல்
இருக்கப்போகிறீர்கள். ஒரு கலவை.

271
00:15:07,991 --> 00:15:09,368
கொஞ்சம் பானத்தோடு கிடைக்குமா?

272
00:15:11,328 --> 00:15:12,454
சரி.

273
00:15:12,913 --> 00:15:15,290
ஹே, ஒரு ஆங்கிலேய ஆந்தை
என்ன சொல்லும், நேட்?

274
00:15:16,041 --> 00:15:18,377
நான் சொல்வது காதில் விழாதது போல
நடந்து கொண்டு

275
00:15:18,460 --> 00:15:19,837
அப்படியே போகிறாய், சரிதானே?

276
00:15:19,920 --> 00:15:20,921
சரி.

277
00:15:21,964 --> 00:15:23,507
இப்போது இவ்வளவு தூரம் போதுமா, என்ன?

278
00:15:24,049 --> 00:15:27,636
எக்கேடோ கெட்டு போங்கள். பயிற்சியின்
மீது மட்டும்தான் கவனம் செலுத்தப் போகிறேன்.

279
00:15:27,719 --> 00:15:30,055
அப்படித்தான், டானி.
அப்படித்தான், அன்பே. அப்படித்தான்.

280
00:15:31,348 --> 00:15:32,850
-ஐயோ.
-பரவாயில்லை, ராய்.

281
00:15:33,892 --> 00:15:35,727
-கொடுமை!
-ஓடு, ராய்!

282
00:15:35,811 --> 00:15:37,479
-உன்னால் முடியும், ராய்.
-ஐயோ!

283
00:15:37,563 --> 00:15:40,524
அப்படித்தான். நிச்சயம் முடியும், ராய்.
நிச்சயம் முடியும்.

284
00:15:45,571 --> 00:15:46,572
கொடுமை.

285
00:15:52,995 --> 00:15:53,996
சரி.

286
00:16:26,236 --> 00:16:27,237
ஆமாம்.

287
00:16:37,456 --> 00:16:38,874
இதோ இருக்கிறாய்.

288
00:16:38,957 --> 00:16:41,084
ரிச்மண்ட்.

289
00:16:45,506 --> 00:16:46,507
ஹேய்.

290
00:16:48,592 --> 00:16:50,969
இங்கே நிறைய இருக்கைகள் இருக்கின்றன.

291
00:16:51,053 --> 00:16:52,846
சரி, ஆமாம்,
இது தான் என் டிக்கட்டில் இருக்கு.

292
00:16:56,642 --> 00:16:57,768
நீ எப்படி இருக்கிறாய், ராய்?

293
00:16:57,851 --> 00:16:58,977
நலமாக இருக்கிறேன். நீங்க?

294
00:16:59,520 --> 00:17:00,729
நன்றாக இருக்கிறேன், ஆமாம்.

295
00:17:01,146 --> 00:17:03,023
ஒரு பூனைக் குட்டியும் கோழிக் குஞ்சும்

296
00:17:03,106 --> 00:17:07,236
நண்பர்களாக ஆகி ஒருவரோடு ஒருவர்
நேரம் செலவிடும்

297
00:17:07,319 --> 00:17:08,987
ஒரு காணொலியை இணையதளத்தில் பார்த்தேன்.

298
00:17:09,070 --> 00:17:11,073
வந்து... இதோ, இருக்கு.
உனக்கு காண்பிக்கிறேன்.

299
00:17:11,156 --> 00:17:12,156
இது எதைப் பற்றியது?

300
00:17:15,702 --> 00:17:19,498
இது வேடிக்கையானது,என் அம்மா ஏதாவது கடினமான
விஷயத்தை என்னிடம் சொல்ல வேண்டும் என்றால்

301
00:17:19,580 --> 00:17:23,417
அப்போது அவர்... எனக்குத் தெரியாத,
விசித்திரமான, மிக அருமையான ஒன்றைப் பற்றி

302
00:17:23,502 --> 00:17:27,506
ஏதாவது சொல்லத் தொடங்குவார்.

303
00:17:27,589 --> 00:17:29,716
மற்றும், பூனை மற்றும் பறவை இரண்டும்

304
00:17:29,800 --> 00:17:33,762
இணக்கமாக இருக்கும் யோசனை
நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன்.

305
00:17:39,059 --> 00:17:42,855
பார், ராய், மேன் சிட்டிக்கு எதிராக முதலில்
களமிறங்கும் வீரர்களைப் பற்றி பேசினோம்...

306
00:17:42,938 --> 00:17:44,606
என்ன தைரியம் உங்களுக்கு.
என்னை களமிறக்காமல் இருக்க முடியாது.

307
00:17:44,690 --> 00:17:47,442
-இல்லை. ராய், நான் சொல்வது...
-ஆமாம். நீங்க பேச மட்டும்தான் செய்வீர்கள்.

308
00:17:47,526 --> 00:17:49,570
என்னை எப்படி பாதுகாக்கிறீர்கள்
என பேசுகிறீர்கள்.

309
00:17:49,653 --> 00:17:51,822
-இல்லை. ஹே, உனக்கு ஆதரவாகதான் பேசுகிறேன்.
-கதை!

310
00:17:51,905 --> 00:17:54,366
சொன்ன சொல்லை காப்பற்றுவராக நடித்தீர்கள்.
நீங்கள் முற்றிலும் பொய்யானவர்.

311
00:17:54,449 --> 00:17:57,077
என்னை தனியாக விடுங்கள். நாசமாய் போங்க!

312
00:18:12,384 --> 00:18:14,678
இங்கு நிறைய ஆச்சரியங்கள் நடக்கின்றன.

313
00:18:16,638 --> 00:18:18,348
அந்த குறுந்தாடியைப் போல.

314
00:18:18,932 --> 00:18:23,395
17ஆம் நூற்றாண்டின் ஃபிலமிஷ் ஓவியர்
நினைவாக இது வேன் டைக் என அழைக்கப்படுகிறது.

315
00:18:23,478 --> 00:18:26,273
-சரி.
-என் மனநிலையை பிரதிபலிப்பதாக தோன்றுகிறது.

316
00:18:27,024 --> 00:18:28,275
பயமுறுத்தும் வகையில்.

317
00:18:28,358 --> 00:18:30,527
திருமதி. ஹிக்கின்ஸ்
இதைப் பற்றி என்ன நினைக்கிறார்?

318
00:18:30,611 --> 00:18:32,571
அவள் இதை மிகவும் வெறுக்கிறாள்.

319
00:18:35,407 --> 00:18:36,909
சரி. பார்...

320
00:18:38,202 --> 00:18:40,704
நான் டெட்டிடம்
எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.

321
00:18:42,789 --> 00:18:43,790
அப்புறம் எப்படி போனது?

322
00:18:43,874 --> 00:18:47,085
அவர் என்ன செய்தார் தெரியுமா?
என்னை மன்னித்துவிட்டார்.

323
00:18:47,169 --> 00:18:49,421
-இழிவானவன்.
-எனக்குத் தெரியும்.

324
00:18:50,547 --> 00:18:53,717
ஆனால் நான் அதற்காக வரவில்லை.

325
00:18:53,800 --> 00:18:55,511
நான் மன்னிப்பு கேட்க வந்தேன்...

326
00:18:57,304 --> 00:18:58,472
உன்னை மோசமாக நடத்தியதற்கும்,

327
00:18:58,555 --> 00:19:02,518
குழந்தைத்தனமான திட்டத்தில் உன்னை துணையாக
இருக்கும்படி கட்டாயப்படுத்தியதற்காகவும்.

328
00:19:02,601 --> 00:19:05,145
நான் உண்மையாகவே
மனம் வருந்துகிறேன், ஹிக்கின்ஸ்.

329
00:19:08,524 --> 00:19:09,650
அடடா.

330
00:19:10,943 --> 00:19:13,070
நன்றி, ரெபேக்கா.

331
00:19:15,239 --> 00:19:16,990
கண்மூடித்தனமாக கொஞ்ச காலம்
இருந்துவிட்டேன்.

332
00:19:17,407 --> 00:19:18,325
ஆமாம்.

333
00:19:19,034 --> 00:19:20,035
ஆனால் நான் திருந்திவிட்டேன்.

334
00:19:20,786 --> 00:19:22,788
நிச்சயமாக சொல்கிறேன்.
இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கு.

335
00:19:22,871 --> 00:19:24,331
அந்த தாடியைப் போல் இல்லாமல்.

336
00:19:25,582 --> 00:19:26,834
மன்னிச்சிடு. சொல்லித்தான் ஆகணும்.

337
00:19:31,255 --> 00:19:34,091
இதற்கு முன் என் வீட்டில் குழந்தை
இருந்ததாக ஞாபகமே இல்லை.

338
00:19:34,174 --> 00:19:35,300
அப்போ ஜேமி?

339
00:19:37,094 --> 00:19:39,096
வீட்டில் உள்ளவற்றை அவள்
ஆராய நாம் அனுமதிக்கக்கூடாது.

340
00:19:39,179 --> 00:19:41,223
அவள் என் வைப்ரேட்டரைப் பார்த்திடக் கூடாது.

341
00:19:41,306 --> 00:19:44,393
பிரச்சினை தான். மின்னணு பொருளை உபயோகிக்க
கூடாது என அவளது அம்மா கூறியிருக்காங்க.

342
00:19:48,188 --> 00:19:50,482
சரி, நீ எப்படி இருக்கிறாய்?

343
00:19:51,358 --> 00:19:52,359
நன்றாக இருக்கிறேன்.

344
00:19:55,529 --> 00:19:57,990
குழந்தைகள் மிகவும் அபாரமானவர்கள்
என்று நினைக்கிறேன்.

345
00:19:58,073 --> 00:20:00,200
வந்து, அவளுக்கு பால் பல்
கீழே விழுந்து புதிய பல் முளைத்துவிட்டது.

346
00:20:00,284 --> 00:20:01,994
உடல் ஒரு அதிசயம்.

347
00:20:02,077 --> 00:20:03,704
சென்ற முறை நான் களம் இறங்காத போது...

348
00:20:03,787 --> 00:20:05,289
நீ நிஜ விஷயங்களைப் பற்றி
பேச தயாராகிவிட்டாய்.

349
00:20:05,372 --> 00:20:06,582
அது மிகவும் நல்லது.

350
00:20:07,416 --> 00:20:09,668
ஒரு கணம் இரு.

351
00:20:11,795 --> 00:20:12,796
இங்கே வந்து உட்கார்.

352
00:20:17,843 --> 00:20:18,927
இதை எடுத்துக்கொள்.

353
00:20:19,720 --> 00:20:22,389
சரி, நாம் இருவரும் தயாராகிவிட்டோம்.
உன் பிரச்சினையை சொல்.

354
00:20:25,309 --> 00:20:27,477
சிறுவயதில் இருந்தே ஒவ்வொரு
அணியிலும் ராய் கென்ட்

355
00:20:27,561 --> 00:20:28,896
சிறந்த வீரராக இருந்தான்.

356
00:20:28,979 --> 00:20:31,315
எனக்கு ராய் கென்ட் போல தான்
இருக்க பிடிக்கும்.

357
00:20:31,398 --> 00:20:35,319
ராய் என்று அழைக்கப்பட்ட தோல்வியுற்றவனை
கையாள முடியுமா என்று எனக்குத் தெரியலை.

358
00:20:35,903 --> 00:20:39,489
"நலம் தானே, ராய்?" ஆம்.
"நீ என்ன செய்கிறாய்?" இது போன்ற கேள்விகள்.

359
00:20:39,573 --> 00:20:44,453
கடவுளே. தன்னை தானே பரிதாபமாக பார்க்கும்
ஆண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள் போல.

360
00:20:44,536 --> 00:20:47,080
-நிறுத்து.
-இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறேன்.

361
00:20:47,164 --> 00:20:50,250
பிழைப்பிற்காக விளையாட்டை விளையாடுவது
எவ்வளவு கடினம் என நீ சொல்ல ஆரம்பித்தால்,

362
00:20:50,334 --> 00:20:51,293
எனக்கு போதை ஏறக் கூடும்.

363
00:20:51,376 --> 00:20:53,045
எனக்கு அது ஒரு விளையாட்டு மட்டுமல்ல.

364
00:20:54,046 --> 00:20:55,547
எனக்கு தெரிந்தது இது மட்டும்தான்.

365
00:20:56,256 --> 00:20:57,841
அதுதான் நான் யார் என்பது.

366
00:20:57,925 --> 00:20:59,426
நான் அவ்வளவுதான்.

367
00:20:59,510 --> 00:21:02,012
ஃபீபீ? ஃபீபீ?

368
00:21:02,095 --> 00:21:03,639
கொஞ்சம் இங்கே வருகிறாயா?

369
00:21:06,975 --> 00:21:09,228
நீங்கள் சொன்னது சரி.
செப்பெலின் அற்புதமானவர்.

370
00:21:09,728 --> 00:21:11,063
கிரீம் இசை கேட்கும் வரை காத்திரு.

371
00:21:11,146 --> 00:21:14,149
ஆனால் முதலில், எனக்காக நீ
கண்களை மூடிக்கொள்ள வேண்டும், செய்வாயா?

372
00:21:15,150 --> 00:21:17,653
சரி. உன் ராய் மாமாவைப் பற்றி
விவரிக்கிறாயா?

373
00:21:17,736 --> 00:21:20,614
நீ நினைக்கக்கூடிய அனைத்தையும். சொல்.

374
00:21:21,198 --> 00:21:24,993
சரி, அவர் என்னுடைய மாமா.
அவருடைய தாடி கீறும்.

375
00:21:25,077 --> 00:21:27,371
எனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவார்.

376
00:21:27,454 --> 00:21:28,872
நிறைய கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார்.

377
00:21:29,831 --> 00:21:31,708
ரொம்ப வேடிக்கையானவர்.

378
00:21:32,209 --> 00:21:34,586
அப்புறம் எனக்கு அவரைப் பிடிக்கும்.

379
00:21:36,755 --> 00:21:38,465
நன்றாக சொன்னாய், ஃபீபீ.

380
00:21:39,424 --> 00:21:42,302
பார்த்தாயா? ஒரு கால்பந்து வீரராக இருப்பதை
பற்றி எதுவும் என் காதில் விழவில்லை.

381
00:21:43,136 --> 00:21:45,639
ஆறு வயதான அவள் சொல்வதை
யார் கவனிக்கப் போகிறார்கள்?

382
00:21:46,473 --> 00:21:50,227
முதலில், ராய் கென்ட்டைப் பற்றி மக்கள் என்ன
நினைக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது.

383
00:21:50,310 --> 00:21:54,398
இரண்டாவது, ராயை பற்றி நீ என்ன நினைக்கிறாய்
என்பது தான் முக்கியம், ராய் கென்ட்.

384
00:22:06,618 --> 00:22:08,829
உங்களுடைய பழைய காதலி வேறு ஒருவருடன்
செஸ் விளையாடுகிறாளா?

385
00:22:09,329 --> 00:22:11,290
-ஆமாம்.
-அது மிகவும் கொடுமை.

386
00:22:11,373 --> 00:22:13,041
தன் விளையாட்டை விளையாடுகிறாள்.

387
00:22:13,542 --> 00:22:14,626
நீங்கள் திடமாக இருங்கள், சரியா?

388
00:22:15,127 --> 00:22:16,503
நீங்கள் அழகான ஆடவன்.

389
00:22:20,007 --> 00:22:21,091
ஹேய், நண்பர்களே.

390
00:22:25,429 --> 00:22:27,848
சரி, இது நமக்கு தேவைக்கு அதிகமன பீர்.

391
00:22:27,931 --> 00:22:30,058
ராயுடன் கடினமான நேரத்தை
அனுபவித்திருப்பீர்கள் என நினைத்தேன்.

392
00:22:30,142 --> 00:22:34,188
கோச்,நீங்க இயல்பாகவே சிறந்த பராமரிப்பாளர்.
கொக்குஸ் நெஸ்டிலிருந்து தலைவரைப் போல.

393
00:22:35,022 --> 00:22:36,899
நான் எப்போதும் ஒரு டேபர் பையன் போல.

394
00:22:40,903 --> 00:22:44,656
ஆனால் உண்மையில்,
ராயிடம் எதுவும் சொல்ல முடியவில்லை.

395
00:22:45,574 --> 00:22:48,452
இப்போது, அப்படி பார்க்காதீர்கள்.
அவனே இவற்றை கண்டுபிடித்துவிட்டான்.

396
00:22:49,745 --> 00:22:51,914
நீங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள்,
ஆனால் வேண்டாம்.

397
00:22:51,997 --> 00:22:53,665
ஏனென்றால் நான் அதை பற்றி யோசித்தேன்...

398
00:22:54,291 --> 00:22:56,460
வந்து, மேன் சிட்டிக்கு எதிராக ராயை தொடக்க
வீரராக களமிறக்குகிறேன், அவ்வளவுதான்.

399
00:22:57,044 --> 00:22:59,922
பாருங்க, அவனை களமிறக்காமல் இருப்பது
அவனுக்கு அவமானமாக மட்டும் இருக்காது,

400
00:23:00,005 --> 00:23:02,341
அது உண்மையில்
அவனது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

401
00:23:03,091 --> 00:23:05,636
இது நான் வெற்றி பெறுவது பற்றி அல்ல என்பது
மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

402
00:23:05,719 --> 00:23:07,387
ஏனெனில் நாம் வெற்றியை
அப்படி அளவிட மாட்டோம், அல்லவா?

403
00:23:07,471 --> 00:23:08,847
ஆமாம், அப்படிதான்!

404
00:23:13,352 --> 00:23:16,855
ஹேய். உங்களுக்கு
இந்தளவு கோபம் வர யார் காரணம்?

405
00:23:16,939 --> 00:23:19,775
நீங்க தான்! நான் சோர்வடைந்துவிட்டேன்.

406
00:23:19,858 --> 00:23:22,027
பாருங்க, நாம் கேன்சஸில் இருந்தபோது
இந்த வேலை எனக்குப் புரிந்தது.

407
00:23:22,110 --> 00:23:23,862
ஆனால் அவர்கள் குழந்தைகள்,
இவர்கள் தொழில் சார் வீரர்கள்

408
00:23:23,946 --> 00:23:25,447
வெற்றி பெறுவது இவர்களுக்கு முக்கியம்.

409
00:23:25,531 --> 00:23:28,242
எனக்கும் அது முக்கியம்.
ஆனாலும் பரவாயில்லை.

410
00:23:29,409 --> 00:23:32,120
-அது சரிதானே, மே?
-ஆமாம் நிச்சயமாக.

411
00:23:35,082 --> 00:23:36,959
உங்களுக்கு ஏன் புரியவில்லை?
தோல்வி விளைவுகளை ஏற்படுத்தும்.

412
00:23:37,042 --> 00:23:38,502
நாம் தோற்றுவிட்டால், வெளியேறப்படுவோம்.

413
00:23:38,585 --> 00:23:41,213
வெளியேறிவிட்டால், இது முடிந்துவிடும், நாம்
உருவாக்கியது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.

414
00:23:41,797 --> 00:23:45,425
பயிற்சியாளரின் கடமையைவிட ஒரு வீரரின்
உணர்வுகளை மதிக்க நீங்கள் விரும்பினால்...

415
00:23:47,010 --> 00:23:48,846
இப்படிப்பட்ட சுயநலவாதியுடன்
நான் குடிக்க விரும்பலை.

416
00:23:54,226 --> 00:23:56,728
என் வாழ்க்கையில் நான் பார்த்த
மிக கவர்ச்சியான விஷயம் இதுதான்.

417
00:23:56,812 --> 00:23:57,938
உன் பொருட்களை எடுத்துக்கொள்.

418
00:23:58,522 --> 00:24:00,023
அவள் உன்னுடன் போலியாக விளையாடினாள்.

419
00:24:00,941 --> 00:24:03,110
செக்மேட், நண்பா.

420
00:24:44,067 --> 00:24:45,652
-எனக்கு வேண்டாம்.
-உனக்கு பருப்பு என்றால் அலர்ஜியா?

421
00:24:45,736 --> 00:24:47,279
எனக்கு விரல் என்றால் தான் அலர்ஜி.

422
00:24:47,863 --> 00:24:49,907
உனக்கு தர வேறு என்ன இருக்கு?
ரெட் ஒயின் இருக்கு.

423
00:24:50,741 --> 00:24:51,742
டீ இருக்கு.

424
00:24:53,410 --> 00:24:54,536
இரண்டு நாளுக்கு முந்திய பாஸ்தா தண்ணீர்.

425
00:24:54,953 --> 00:24:56,246
நான் டீ குடிக்கிறேன்.

426
00:24:57,331 --> 00:24:59,249
பார், நான் உங்களை மிகவும்
மோசமாக திட்டிவிட்டேன்.

427
00:25:00,292 --> 00:25:02,461
பொதுவாக கோபத்தை மறைப்பதில் நான் சிறந்தவன்.

428
00:25:03,837 --> 00:25:04,838
நீ அப்படியா நினைக்கிறாய்?

429
00:25:06,381 --> 00:25:07,883
உன்னை முதலில் தெரிந்துக்கொள்.

430
00:25:07,966 --> 00:25:09,343
சாக்ரடீஸ் வார்த்தைகள்.

431
00:25:12,221 --> 00:25:14,056
அநேகமாக நான் விளையாட மாட்டேன் என
என் மருமகளிடம் சொன்னேன்.

432
00:25:14,598 --> 00:25:16,934
நாம் ஐஸ்கிரீம் வாங்கலாமா என்று
அவள் கேட்டாள்.

433
00:25:17,017 --> 00:25:19,645
நல்லது, உனக்கு பேசுவதற்காவது
ஒரு ஆள் இருக்கிறது, அப்படிதானே?

434
00:25:20,270 --> 00:25:21,271
ஐஸ்கிரீம் எப்படி இருந்தது?

435
00:25:21,355 --> 00:25:23,065
நல்லா இருந்தது. அது ஐஸ்கிரீம்.

436
00:25:23,148 --> 00:25:24,858
ஆம், இல்லையா? ஐஸ்கிரீம் தான் சிறந்தது.

437
00:25:25,275 --> 00:25:27,528
அது, பில்லி ஜோயல் நேரலை நிகழ்ச்சியைப்
பார்ப்பது போன்றது தெரியுமா?

438
00:25:27,611 --> 00:25:28,612
ஒருபோதும் ஏமாற்றமளிக்காது.

439
00:25:29,988 --> 00:25:31,532
ஆனால் எனக்கு வாய்வை ஏற்படுத்தும்.

440
00:25:32,115 --> 00:25:33,450
பில்லி ஜோயல் அல்ல, ஐஸ்கிரீம் தான்.

441
00:25:33,867 --> 00:25:37,329
நான் விளையாடவில்லை என்றாலும் அவள்
போட்டியைப் பார்க்கப் போகிறாளா என கேட்டேன்.

442
00:25:37,788 --> 00:25:38,789
சரியா?

443
00:25:38,872 --> 00:25:43,126
அவள் ஆம் என்று சொன்னாள். கொஞ்சம் கூட
தயங்காமல், என் முகத்திற்கு நேராக சொன்னாள்.

444
00:25:43,210 --> 00:25:45,337
சரி. ஹேய்.
அதுவொரு பொழுதுபோக்கு, அப்படிதானே?

445
00:25:45,963 --> 00:25:48,298
'ஆண்ட் விவ்ஸ்' கதாபாத்திரத்தை
மாற்றியபோது இனி ஒருபோதும்

446
00:25:48,382 --> 00:25:49,800
'ஃபிரஷ் பிரின்ஸ்'ஐ பார்க்கக்கூடாதென
முடிவு செய்தேன்.

447
00:25:49,883 --> 00:25:52,761
ஆனால் உண்மையில், கார்ல்டன், அவன்
செய்வதை செய்ய அனுமதிக்கும் வரை,

448
00:25:52,845 --> 00:25:54,847
நான் உட்கார்ந்து, அதைப்
பார்க்க தான் போகிறேன்.

449
00:25:55,222 --> 00:25:57,349
சைட்பார்: அல்போன்சோ ரிபேரோ,

450
00:25:57,432 --> 00:26:01,103
19, 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டின்
மிகப்பெரிய உடலசைவு நகைச்சுவையாளர்.

451
00:26:01,562 --> 00:26:02,771
இது சரியான உதாரணம்.

452
00:26:04,064 --> 00:26:05,607
மிகச்சிறப்பு, அப்படிதானே?

453
00:26:05,691 --> 00:26:08,652
வளர்ந்த ஆடவர் என் முன் கார்லடன் ஆடும்போது
எப்படி நடக்கணும் என எனக்கு தெரியாது.

454
00:26:08,735 --> 00:26:11,154
ஒரு நிழல் இதை செய்வதை நீ காணலாம்,
அது என்னவென்றும்,

455
00:26:11,238 --> 00:26:15,367
யார் செய்வது என்றும் உனக்குத் தெரியும்.
அது ஒரேயொருவர், அல்போன்சோ...

456
00:26:15,450 --> 00:26:17,995
-நிறுத்துங்க!
-மன்னிச்சிடுங்க, மிஸ். ஷிப்லி!

457
00:26:18,078 --> 00:26:20,080
கடந்த வாரம் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

458
00:26:20,873 --> 00:26:22,958
எப்படியோ. நாம் என்ன செய்யலாம் தெரியுமா?

459
00:26:23,041 --> 00:26:24,376
சீசன் முழுவதும் அடிக்கடி நீ காயப்பட்டாய்.

460
00:26:24,459 --> 00:26:26,879
நீ காயமடைந்ததால், உன்னால் விளையாட முடியாது
என்று சொல்வதில் எந்த அவமானமுமில்லையே.

461
00:26:27,421 --> 00:26:29,923
நான் அடுத்த சீசனுக்கு போக,
அது என் மதிப்பைப் பாதுகாக்க உதவும்.

462
00:26:30,716 --> 00:26:32,718
உண்மையில் என்னை வைத்து
தொடங்க விரும்பும் ஒரு அணிக்கு.

463
00:26:32,801 --> 00:26:33,802
சொல்.

464
00:26:33,886 --> 00:26:38,473
இது நடக்கக் கூடாது, ஆனால் ஒரு பேச்சுக்கு,
அமெரிக்காவிற்கு விளையாட போய்,

465
00:26:38,891 --> 00:26:40,642
அதில் நான் ஆதிக்கம் செலுத்தினால்
எப்படி இருக்கும்?

466
00:26:40,726 --> 00:26:43,353
"ஓ, அப்படியென்றால் இதுதான் கால்பந்தா?"
என்று அவர்கள் நினைப்பார்கள்.

467
00:26:43,437 --> 00:26:45,939
வந்து, உண்மையில், நீங்கள் அங்கு
இருப்பது என் விருப்பமாக இருக்கும்.

468
00:26:46,023 --> 00:26:48,066
நாளைய பயிற்சிக்கும் ஆட்டத்திற்கும்.

469
00:26:48,150 --> 00:26:51,528
ஆனால் ஹேய், உனக்கு எது நல்லதோ
அதை தான் நீ செய்ய வேண்டும்.

470
00:26:58,493 --> 00:26:59,494
நான் அதைப் பற்றி யோசிக்கலாமா?

471
00:27:00,454 --> 00:27:02,789
நீ செய்யாவிட்டால், உன்னை
ஒன்றுக்கும் உதவாதவன் என அழைப்பேன்.

472
00:27:11,173 --> 00:27:14,259
என்னிடம் உண்மையை சொல். இது விளையாட்டுதானே?
இந்த டீ.

473
00:27:14,343 --> 00:27:17,346
சுற்றுலாப் பயணிகள் இல்லாதபோது, இந்த டீ
மோசமானது என உங்களுக்குத் தெரியும் தானே.

474
00:27:17,804 --> 00:27:20,015
இல்லை. எனக்குப் பிடிக்கும்.

475
00:27:20,098 --> 00:27:21,808
உனக்கு பிடிக்காது. இது புறாவின் வியர்வை.

476
00:27:26,396 --> 00:27:28,148
கொடுமை. கொடுமை.

477
00:27:28,232 --> 00:27:29,233
சரி.

478
00:27:29,650 --> 00:27:32,486
இல்லை, சிறியவனை அகற்றிவிட்டு, உயரமானவனை
கொண்டு வா. அவனுக்கு பெரிய கை இருக்கு.

479
00:27:33,779 --> 00:27:35,614
இது பிஸ்கட்கள் சாப்பிடும் நேரம்.

480
00:27:36,448 --> 00:27:38,492
-ஹிக்கின்ஸ்! மீண்டும் வந்துவிட்டீர்களா!
-ஆம்!

481
00:27:38,575 --> 00:27:42,496
சரி. ஹேய், சிலருக்கு நான் கொஞ்சம் பழைய
காலத்து ஆளாக இருப்பேன் என தெரியும்,

482
00:27:42,579 --> 00:27:44,873
ஆனால் எப்படியும் நான்
அதைச் சொல்லத்தான் போகிறேன். ஆம்.

483
00:27:44,957 --> 00:27:46,959
-உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
-உங்களையும் தான்.

484
00:27:47,042 --> 00:27:49,628
-இந்தாருங்கள், தலைவரே. இவை உங்களுடையது.
-நன்றி, டெட்.

485
00:27:49,711 --> 00:27:51,255
இவற்றில் ஒன்றை நீ சாப்பிடணும்.

486
00:27:51,338 --> 00:27:54,842
இல்லை. வேண்டாம். பகிர்வது நல்லது,
ஆனால் ஹிக்கின்ஸுக்கு நான் எடுத்து வந்தேன்.

487
00:27:54,925 --> 00:27:55,926
என்ன?

488
00:27:56,343 --> 00:27:57,302
உங்களுக்கு எப்படி தெரியும்?

489
00:27:57,386 --> 00:27:59,096
சரி, நீங்கள் இங்கே இருப்பீர்கள் என
என் உள்ளுணர்வு சொன்னது.

490
00:27:59,179 --> 00:28:00,848
-ஆமாம்.
-ஆஹா.

491
00:28:00,931 --> 00:28:03,600
உண்மையில்,அவை ட்ரென்ட் க்ரிமின் மகளுக்காக.
அவளுக்கு இன்று மூன்று வயதாகிறது.

492
00:28:03,684 --> 00:28:07,187
-ஆனா, நீங்க சாப்பிடுவது எனக்கு முக்கியம்.
-என்ன? வேண்டாம், வேண்டாம். விடுங்க

493
00:28:07,271 --> 00:28:08,647
பரவாயில்லை. அவளுக்கு நினைவிருக்காது.

494
00:28:08,730 --> 00:28:10,399
நீங்கள் அவளிடம் சொல்லிவிட்டீர்களா, டெட்?

495
00:28:10,482 --> 00:28:12,109
ஆம், சில வாரங்களுக்கு முன்.
இதற்காக காத்திருக்கிறாள்.

496
00:28:12,192 --> 00:28:14,236
ஆனால் அவளுக்கு மூன்று வயது. அவளுக்கு
பிரச்சினை இருக்காது. பரவாயில்லை.

497
00:28:14,319 --> 00:28:15,988
-முடியாது
-இல்லை. நான் வலியுறுத்துகிறேன்.

498
00:28:16,071 --> 00:28:17,948
உங்களை கேலி செய்து, சும்மா விளையாடுகிறேன்.

499
00:28:18,031 --> 00:28:20,784
இவை அனைத்தையும் முன்கூட்டியே கணித்து,
உங்களுக்காக கொண்டு வந்தேன்.

500
00:28:21,243 --> 00:28:22,327
நன்றி.

501
00:28:24,329 --> 00:28:26,790
இருவரையும், பிறகு பார்க்கிறேன்,
சரியா? போகலாம் க்ரேஹவுண்ட்ஸ்.

502
00:28:28,667 --> 00:28:30,711
ஆம், கண்டிப்பாக
இவை சிறிய பெண்ணுக்கானது தான்.

503
00:28:30,794 --> 00:28:33,213
நீங்கள் வேடிக்கையான, விளையாட்டுத்தனமான
மற்றும் மர்மமானவர் என அவர் நினைக்கலாம்.

504
00:28:33,297 --> 00:28:34,381
ஓ, நிச்சயமாக.

505
00:28:39,428 --> 00:28:41,263
கென்ட்

506
00:28:49,021 --> 00:28:51,773
சரி, நண்பர்களே!
நீங்கள் அனைவரும் கவனிக்க வேண்டும்.

507
00:28:55,569 --> 00:28:56,570
கோச்.

508
00:29:00,657 --> 00:29:02,826
-இப்போது...
-கோச், இது சரியான நேரம் இல்லை என தெரியும்,

509
00:29:02,910 --> 00:29:06,163
ஆனால் உங்களிடமிருந்து விலகிய
மறுநாளிலிருந்து எனக்கு உடம்பு சரியில்லை.

510
00:29:06,622 --> 00:29:08,165
மற்றும் நேற்று இரவு, ஒரு காகத்தைப் போல

511
00:29:08,248 --> 00:29:10,292
நான் உங்களை கொத்தி கொல்வதாக,
ஒரு கெட்ட கனவு வந்தது.

512
00:29:10,375 --> 00:29:11,460
என்னை மன்னிச்சிடுங்க.

513
00:29:12,044 --> 00:29:14,713
பரவாயில்லை, நேட்.
ஒன்றும் பிரச்சினை இல்லை, சரியா?

514
00:29:15,130 --> 00:29:16,715
-சரி.
-ஆனால் ஹேய், எனக்கு ஒரு உதவி செய்.

515
00:29:16,798 --> 00:29:19,259
கனவில் என்னிடம் மன்னிப்பு கேட்க முயற்சி
செய், மனதளவிலும் நாம் நன்றாக இருப்போம்.

516
00:29:19,343 --> 00:29:20,928
-ஆம். கண்டிப்பாக.
-நன்றி.

517
00:29:21,011 --> 00:29:23,931
சரி, நண்பர்களே. வரவிருக்கும் கடினமான
ஆட்டத்திற்காக நாம் தயாராகணும், சரியா?

518
00:29:24,890 --> 00:29:26,517
உங்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பது...

519
00:29:36,777 --> 00:29:37,778
மன்னிக்கவும், நண்பர்களே.

520
00:29:38,320 --> 00:29:41,573
எனது ஆறு வயது மருமகள், என் காதலியின்
வைப்ரேட்டரைப் பார்த்துவிட்டாள்.

521
00:29:43,116 --> 00:29:44,660
அந்த நினைவை அழிப்பதற்காக
அவள் காதுகளில் துளையிட

522
00:29:44,743 --> 00:29:46,411
நான் அவளை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

523
00:29:48,580 --> 00:29:49,831
நானும் இதை அனுபவித்துள்ளேன்.

524
00:29:50,749 --> 00:29:51,750
நான் ஒன்று சொல்லவா?

525
00:29:51,834 --> 00:29:53,460
நீங்கள் பேசலாம், கேப்டன்.

526
00:29:57,339 --> 00:30:00,133
இரண்டாவது அணி முதல் அணியை
மோசமாக தோற்கடிக்கப் போகிறது.

527
00:30:09,434 --> 00:30:12,479
சரி, நண்பர்களே! தயாராகி முடித்து,
பின்னர் நாம் அவர் சொல்வதை செய்வோம்.

528
00:30:12,563 --> 00:30:14,231
இதை நாம் ஆடுகளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
போகலாம்.

529
00:31:05,157 --> 00:31:08,160
நம்புங்கள்

530
00:31:09,036 --> 00:31:11,038
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

