1
00:00:14,806 --> 00:00:15,807
சரி.

2
00:00:18,477 --> 00:00:20,479
அசுத்தம் - சுத்தம்

3
00:00:28,362 --> 00:00:29,446
யார் நீ?

4
00:00:29,530 --> 00:00:32,573
ஹாய் ஹலோ. என் பெயர் வில்.
இந்த கிளப்பின் புது உதவியாளர்.

5
00:00:32,658 --> 00:00:34,826
நீ கிடையாது.
நான் தான் இந்த கிளப்பின் உதவியாளர்.

6
00:00:34,910 --> 00:00:36,328
ஹே, ஹிக்கின்ஸ், எங்கே இருக்கீங்க?

7
00:00:36,411 --> 00:00:37,496
இங்கு என்ன நடக்குது, டெட்?

8
00:00:37,579 --> 00:00:39,206
தெரியலை.
அதைதான் நானும் யோசிக்கிறேன்.

9
00:00:39,289 --> 00:00:41,333
-என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்களா?
-இவனை வேலையை விட்டு தூக்கி விட்டீர்களா?

10
00:00:41,416 --> 00:00:42,918
எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது, டெட்.

11
00:00:43,001 --> 00:00:44,002
-இதோ இருக்கீங்க.
-இதோ இருக்கீங்க.

12
00:00:44,086 --> 00:00:45,879
-ஐசக்கை கேவலமானவன் என சொன்னதாலா?
-தெரியலை...

13
00:00:45,963 --> 00:00:46,964
எல்லோருக்கும், காலை வணக்கம்.

14
00:00:47,047 --> 00:00:49,550
திமிர்பிடித்தவள்.
நீங்க தான் இப்படி செய்தீர்கள், இல்லையா?

15
00:00:49,633 --> 00:00:51,051
ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய், நேத்தன்?

16
00:00:51,134 --> 00:00:52,386
சரி. ஏன் என்று சொல்கிறேன்...

17
00:00:52,928 --> 00:00:53,929
உங்களுக்கு என் பெயர் தெரியுமா?

18
00:00:54,012 --> 00:00:56,557
வந்து, உன் ஒப்பந்தத்திற்காக
அதை சரியாக எழுத வேண்டி இருந்தது.

19
00:00:57,641 --> 00:00:59,893
நேட், நீ வேலையை விட்டு நீக்கப்படவில்லை.
இது அதை விட மோசம்.

20
00:01:00,894 --> 00:01:02,145
உனக்கு பதவி உயர்வு தரப்பட்டிருக்கு.

21
00:01:11,405 --> 00:01:14,324
நேட்! நேட்! நேட்!

22
00:01:26,962 --> 00:01:30,174
நேத்தன் ஷெல்லி,
நான் உனக்கு இந்த விசிலை பரிசளிக்கிறேன்.

23
00:01:30,757 --> 00:01:32,259
ஆனால் இது வருத்தமானது. ஏன் தெரியுமா?

24
00:01:32,342 --> 00:01:34,845
-தெரியாது.
-ஏன்னென்றால் அது இன்னும் ஊதப்படாதது.

25
00:01:34,928 --> 00:01:36,555
இதற்கு தான் காலின் வருந்துகிறானா?

26
00:01:39,600 --> 00:01:42,895
ரிச்மண்டின் கால்பந்து அணி கழகம் தந்த
அதிகாரத்தின் அடிப்படையில்,

27
00:01:42,978 --> 00:01:45,814
நான் இப்போது
உன்னை கோச் நேட் என்று அறிவிக்கிறேன்.

28
00:01:46,648 --> 00:01:47,858
நன்றி. மிக்க நன்றி.

29
00:01:49,568 --> 00:01:51,111
இல்லை, இல்லை! உள்ளே ஊதாதே.

30
00:01:51,195 --> 00:01:52,196
மன்னிச்சிடுங்க. மன்னிச்சிடுங்க.

31
00:02:14,343 --> 00:02:16,595
இங்கே அதை தோலரிப்பு என்று சொல்ல
மாட்டார்கள், அது தான் குழப்பமாயிருக்கு.

32
00:02:16,678 --> 00:02:18,138
அதனால்தான் எந்த ஸ்ப்ரே வாங்கணும்
என தெரியலையா?

33
00:02:18,222 --> 00:02:19,640
-ஆம்.
-சரி. வழக்கமாக எதை வாங்குவீர்கள்?

34
00:02:19,723 --> 00:02:20,724
மிஸ்டர் மசில்.

35
00:02:22,184 --> 00:02:23,310
ஹே, ராய்.

36
00:02:23,393 --> 00:02:27,314
உங்களுக்கு தெரியும் தானே, விதிகளின்படி
நீங்க புது கேப்டனை தேர்ந்து எடுக்கணும்.

37
00:02:29,608 --> 00:02:32,236
இல்லை, சார். நீதான் என் கேப்டன்.
அது தான் விதி.

38
00:02:32,319 --> 00:02:36,240
இல்லை. கேப்டன் கண்டிப்பாக
தளத்தில் இருக்கணும். அது தான் விதி.

39
00:02:37,282 --> 00:02:40,244
தற்போதைய கேப்டன் புது கேப்டனை
தேர்ந்து எடுக்கணும் என நினைக்கிறேன்.

40
00:02:40,327 --> 00:02:41,828
அதுதான் என் புதிய விதி.

41
00:02:41,912 --> 00:02:43,205
நான் செய்ய விருப்பப்படவில்லை.

42
00:02:43,288 --> 00:02:44,289
ஆனால், நீ செய்தாகணும்.

43
00:02:45,749 --> 00:02:47,918
-நான் மாட்டேன்.
-நான் வற்புறுத்துகிறேன்.

44
00:02:48,585 --> 00:02:49,586
என்னை வற்புறுத்த கூடாது.

45
00:02:50,212 --> 00:02:53,757
ராய் கென்ட், உனக்கு அடுத்த கேப்டனை
நீ தேர்ந்து எடுக்காதவரை,

46
00:02:53,841 --> 00:02:58,262
இந்த அணியின் தலைவனாக
நீ செய்ய வேண்டிய கடமை முழுமையாகாது.

47
00:03:00,597 --> 00:03:02,140
இதனால்தான் உங்களை பிடிக்கலை.

48
00:03:04,935 --> 00:03:05,936
உங்களுக்கு கேட்டது தானே?

49
00:03:06,603 --> 00:03:07,813
அவனுக்கு உங்களை பிடிக்கும்.

50
00:03:07,896 --> 00:03:10,065
சரி, மக்களே. இது தான் மிக ரகசியமான செய்தி.

51
00:03:10,148 --> 00:03:13,402
இறுதி ஆட்டத்திற்காக மேன்செஸ்டர் சிட்டி
நம்மிடத்திற்கு வருகிறார்கள்,

52
00:03:13,485 --> 00:03:16,238
மற்ற ஆட்டத்திற்கு தயாராவது போலவே,
நாம் இதற்கும் தயாராவோம்.

53
00:03:16,321 --> 00:03:18,949
ஆனால் இது வழக்கமான ஆட்டம் கிடையாது.
நாம் வெளியேற்றப்படலாம்.

54
00:03:19,032 --> 00:03:21,994
கார்டிஃபிற்காக விளையாடிய போது வெளியேற்றப்
பட்டோம். அது என் குடும்பம் நேசித்த அணி.

55
00:03:22,077 --> 00:03:23,787
அதற்கு பின் என் பாட்டி
என்னிடம் பேசவேயில்லை.

56
00:03:23,871 --> 00:03:25,539
எனக்கு குப்பையை தான்
சொத்தாக கொடுத்தார்கள்.

57
00:03:25,622 --> 00:03:27,791
ஆமாம், கிளப்புகள் தோற்கும் போது,
அணிகள் உடைக்கப்படும்.

58
00:03:27,875 --> 00:03:30,252
கோச், அமெரிக்காவில் இது போல
வெளியேற்றுவது கிடையாதா?

59
00:03:30,335 --> 00:03:31,670
ஓ, இல்லை, இல்லை, இல்லை.

60
00:03:31,753 --> 00:03:33,881
எனவே சீசனின் முடிவில் மோசமான
அணிகளுக்கு என்ன நேரும்?

61
00:03:33,964 --> 00:03:35,591
அட்டவணையில் இருக்கும்
மற்ற கேமை விளையாடுவார்கள்,

62
00:03:35,674 --> 00:03:37,759
உயிரோட்டமில்லாத
பாதி காலியாக இருக்கும் அரங்கங்களில்

63
00:03:37,843 --> 00:03:39,887
அர்த்தமற்ற கேம்களை,
கடமைக்காக விளையாடுவார்கள்,

64
00:03:39,970 --> 00:03:41,638
எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

65
00:03:41,722 --> 00:03:44,057
-அது சரியாகவா தோன்றுகிறது, கோச்?
-ஆமாம், ரொம்ப சரி.

66
00:03:44,975 --> 00:03:46,768
சரி, இப்போது, கோச் நேட்...

67
00:03:46,852 --> 00:03:48,020
இல்லை, இல்லை, இல்லை.

68
00:03:48,103 --> 00:03:49,521
-இல்லை... இங்கே கூடாது.
-உள்ளே வேண்டாம்.

69
00:03:49,605 --> 00:03:52,149
கோச் நேட் நமக்கு
காணொலி காண்பிப்பார் என சொல்ல வந்தேன்.

70
00:03:52,232 --> 00:03:53,442
ஓ, சரி. மன்னிச்சிடுங்க.

71
00:03:53,525 --> 00:03:59,031
சரி. அதாவது, இதை பார்த்தால் உங்களுக்கு
உத்வேகம் வரும் என நினைத்தேன்.

72
00:03:59,114 --> 00:04:00,574
சரி.

73
00:04:02,034 --> 00:04:03,035
நண்பா ஜேமி.

74
00:04:03,118 --> 00:04:04,620
மேன்செஸ்டரில் முடி திருத்துபவர்கள் இல்லை.

75
00:04:06,330 --> 00:04:08,790
சரி, ஒரு போதும் என் பழைய க்ளப்பைப்பற்றி
மோசமாக பேச மாட்டேன்...

76
00:04:11,001 --> 00:04:12,920
ஒவ்வொரு போட்டியிலும் அவர்களை
முழுதும் காப்பாற்றினேன் என்றாலும்.

77
00:04:13,003 --> 00:04:14,546
ஆனால் அவர்கள் நல்லவர்கள்.

78
00:04:14,630 --> 00:04:16,464
ராய் கென்டைத் தவிர. அவன் மோசமானவன்.

79
00:04:17,257 --> 00:04:21,011
அமெரிக்கன் ரோடியோ கோமாளி அல்லாமல்
பெப் போன்ற ஒரு உண்மையான

80
00:04:21,094 --> 00:04:22,804
மேலாளர் இருப்பது நல்ல விஷயம்.

81
00:04:23,639 --> 00:04:26,850
லாஸ்ஸோ என்னை வெளியேற்றினார்,
இப்போது அவர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.

82
00:04:26,934 --> 00:04:29,269
ஞாயிற்றுக்கிழமை,
நான் நிச்சயம் தோற்கடிப்பேன்.

83
00:04:29,353 --> 00:04:31,271
கர்ம வினை, அது நம்மை துரத்தும்.

84
00:04:34,441 --> 00:04:35,442
ஐயோ, அப்படியா?

85
00:04:35,526 --> 00:04:37,861
-நல்ல செயல்.
-சரி, நாம் இந்த சவாலை ஏற்போம்!

86
00:04:37,945 --> 00:04:39,238
ஃபுல்லர் ஸ்மித் அண்ட் டர்நர்'ஸ்
சிஸ்விக் ஏல்ஸ் & ஸ்டவுட்ஸ்

87
00:04:39,321 --> 00:04:41,281
சரி, பிரிமியர் லீக் தான்
சிறப்பானது என்றால்,

88
00:04:41,365 --> 00:04:43,534
அதற்கு கீழே இருக்கும் லீகிற்கு என்ன பெயர்?

89
00:04:43,617 --> 00:04:45,118
த சேம்பியன்ஷிப்.

90
00:04:45,202 --> 00:04:48,413
சரி, ஒரு நிமிடம் இருங்க. பிரிமியர் லீகில்
ஒருவர் கடைசியாக வந்தால்,

91
00:04:48,497 --> 00:04:50,082
அவர் சேம்பியன்ஷிப்பில் விளையாடலாமா?

92
00:04:50,165 --> 00:04:51,875
கொடுமை.

93
00:04:52,459 --> 00:04:54,837
நண்பா, இந்த நகரில் நம்மை
குழப்புகிறார்கள், இல்லையா?

94
00:04:54,920 --> 00:04:57,756
வந்து, கேளுங்க. இது 2020 ஆம் ஆண்டு.
அவற்றை சிகரெட்டுகள் என்றே சொல்லலாம்.

95
00:04:57,840 --> 00:04:59,842
-ஓ, நிச்சயமாக, ஆமாம்.
-நான் சொல்வது புரிகிறதா?

96
00:05:00,551 --> 00:05:01,760
ஹே. எல்லோரும் எப்படியிருக்கீங்க?

97
00:05:02,427 --> 00:05:04,638
நாங்கள்... நன்றி சொல்ல நினைத்தோம்.

98
00:05:04,721 --> 00:05:06,139
ஆம், உங்களால் முடிந்ததை செய்தீர்கள்.

99
00:05:06,223 --> 00:05:08,058
உங்களால் மோசமானதை தான்
செய்யமுடியும் என்றாலும்.

100
00:05:08,141 --> 00:05:10,060
-பேஸ்.
-பரவாயில்லை, விடு.

101
00:05:10,143 --> 00:05:12,479
நாங்கள் கேமை தோற்றுவிட்டதாகவே
நினைக்கிறீர்களா என்ன?

102
00:05:12,563 --> 00:05:14,189
ஏன் சிறிது நம்பிக்கையோடு இருக்க கூடாது?

103
00:05:15,899 --> 00:05:19,361
டெட். இவ்வளவு காலம் இருந்தும்
இதை புரிந்து கொள்ள முடியவில்லையா?

104
00:05:19,987 --> 00:05:21,530
நம்பிக்கை தான் நம்மைக் கொல்லும்.

105
00:05:25,200 --> 00:05:27,995
நேட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.
இன்று இரவு நமக்கு வேலை இருக்கிறது.

106
00:05:29,246 --> 00:05:33,750
சரி, பார். நாம் இதில் வெல்வோம். வெற்றி
பெற்றால், நாம் விளையாட முடியும், சரியா?

107
00:05:33,834 --> 00:05:36,837
ஒரு நேரத்தில் கிரிஸ்டல் பேலஸ் நார்விச்சை
ஆறு கோல்கள் வித்தியாசத்தில் வென்றனர்

108
00:05:36,920 --> 00:05:38,672
நாமும் வெளியேற்றத்தை
ஒரு சமநிலை ஆட்டத்தின் மூலம் தவிர்க்கலாம்.

109
00:05:38,755 --> 00:05:40,841
இல்லை, இல்லை, இல்லை, இல்லை. மன்னிச்சிடு.

110
00:05:40,924 --> 00:05:42,217
எனக்கு சமநிலை ஆட்டங்கள் பிடிக்காது, நேட்.

111
00:05:42,301 --> 00:05:44,595
எத்தனை முறை இதை சொல்வது?
அவை இயற்கையானவை கிடையாது, சரியா?

112
00:05:44,678 --> 00:05:46,930
கடவுள் கேம்கள் சமநிலையில் முடியணும்
என நினைத்திருந்தால்,

113
00:05:47,014 --> 00:05:48,765
எண்களையே படைத்திருக்க மாட்டார், சரியா?

114
00:05:48,849 --> 00:05:50,893
பாருங்கள், நண்பர்களே.
நாம் நம்பிக்கை கொள்வோம். துவங்கலாம்.

115
00:05:50,976 --> 00:05:53,770
தயவு செய்து சொல்கிறேன், நேட், அந்த
விசிலை ஊதாதே. நிச்சயமாக.

116
00:05:53,854 --> 00:05:55,147
-மன்னிச்சிடுங்க.
-மேல் மாடியில் ஆட்கள் இருக்கிறார்கள்,

117
00:05:55,230 --> 00:05:57,774
அவர்கள் காலை உதைத்து
நடக்க ஆரம்பித்து விடுவார்கள். சரியா?

118
00:05:57,858 --> 00:06:00,235
சரி. மேன்செஸ்டர் சிட்டியை
எப்படி தோற்கடிப்பது என்று சொல்.

119
00:06:00,319 --> 00:06:02,404
-மேன்செஸ்டர் சிட்டியை தோற்கடிக்க முடியாது.
-ஐயோ, நேட்?

120
00:06:02,487 --> 00:06:05,115
என் துணை கோச்சிடமிருந்து முதல் நாள் அன்றே
இதை கேட்க விரும்பவில்லை.

121
00:06:05,199 --> 00:06:06,366
எனக்கு நம்பிக்கை இல்லை.

122
00:06:09,203 --> 00:06:10,495
மன்னிச்சிடு.
உனக்கு நம்பிக்கை இல்லையா?

123
00:06:10,579 --> 00:06:11,955
-ஆமாம்.
-அப்படியா?

124
00:06:23,509 --> 00:06:26,178
விரிவாக சொல்.
இவை தான் உன்னிடம் இருக்கும் உடைகளா?

125
00:06:26,261 --> 00:06:28,096
இதுவா? இல்லை, இதே போன்று மூன்று இருக்கு.

126
00:06:30,933 --> 00:06:32,851
நம்புங்கள்

127
00:06:32,935 --> 00:06:36,939
உனக்கு எதாவது ஞாபகம் வருகிறதா, நேட்?
இது உனக்கு பரிச்சயமானது தானே?

128
00:06:37,022 --> 00:06:38,565
இதை உங்க வீட்டில் வைத்திருக்கிறீர்களா?

129
00:06:38,649 --> 00:06:41,235
நிறைய வைத்திருக்கிறேன்.
இது கழிவறை கண்ணாடியில் ஒட்டி இருந்தது.

130
00:06:41,318 --> 00:06:44,112
பல் துலக்க சோர்வாக இருக்கும் போதெல்லாம்,
ஒவ்வொரு நாள் காலையில் முதலாவதாக

131
00:06:44,196 --> 00:06:45,864
மற்றும் இரவில் கடைசியாக
இதை தான் பார்ப்பேன்.

132
00:06:47,658 --> 00:06:49,368
நம்பிக்கை கோல்கள் போடாது, கோச்.

133
00:06:49,451 --> 00:06:51,036
சரி, ஹலோ, நெல்சன்.

134
00:06:51,119 --> 00:06:53,288
இங்கே இன்னொரு நெல்சனுக்கு உங்களை
அறிமுகப்படுத்துகிறேன்.

135
00:06:53,372 --> 00:06:57,417
இருவருமே அவநம்பிக்கை உள்ளவர்கள் என்பதால்,
நீங்கள் நெருங்கி பழக முடியும்!

136
00:06:59,169 --> 00:07:00,587
மன்னிச்சிடுங்க, மிஸ். ஷிப்லி!

137
00:07:00,671 --> 00:07:04,091
நாம் இருவரும் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று அவர் சொல்கிறார்.

138
00:07:04,174 --> 00:07:05,551
ஓ, சரி.

139
00:07:06,260 --> 00:07:07,261
அதே தான்.

140
00:07:08,846 --> 00:07:11,265
காலை வணக்கம், தலைவரே. இந்தாருங்கள்.

141
00:07:12,558 --> 00:07:16,353
டெட். இன்றைக்கு பிஸ்கட்க்களை தவிர
வேறு எதோ ஒரு கவலை தெரிகிறது.

142
00:07:16,436 --> 00:07:18,021
நன்றாக கவனித்தீர், முக்கியமற்றது.

143
00:07:22,401 --> 00:07:23,569
ரெபேக்கா, அதை சொல்ல பிடிக்கலை,

144
00:07:23,652 --> 00:07:27,072
ஆனால் உங்க அணிக்கு வேறொரு கால்பந்து
கோச்சை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம்.

145
00:07:27,155 --> 00:07:28,282
ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

146
00:07:28,365 --> 00:07:30,492
பாருங்க, நாம் ஞாயிற்றுக்கிழமை
தோற்றுவிட்டோம் என்றால்,

147
00:07:30,576 --> 00:07:33,453
இந்த கிளப்பிற்கு எது நல்லதோ
அதை செய்ய தயங்காதீங்க,

148
00:07:33,537 --> 00:07:34,538
புரிகிறதா?

149
00:07:34,621 --> 00:07:37,916
அதற்காக, என்னை,
நீக்க வேண்டும் என்றால் கூட...

150
00:07:38,000 --> 00:07:41,253
நீங்க, இப்படி செய்யலாம்... அதாவது,
என்ன வேண்டுமானாலும்.

151
00:07:41,336 --> 00:07:43,046
என்ன செய்ய வேண்டும் என்றாலும்.
ஆனால், என்னை கொன்று விடாதீங்க,

152
00:07:43,130 --> 00:07:45,841
ஆனால், வந்து... சுட்டுவிடாதீங்க.
நான் சொல்வது புரிகிறதா?

153
00:07:45,924 --> 00:07:47,593
-என்னை வேலையை விட்டு அனுப்பிவிடுங்க.
-சரி.

154
00:07:47,676 --> 00:07:49,928
ஆக நீங்க ஒரு "சரியான" கால்பந்து
மேலாளர் இல்லை என நினைக்கிறீர்கள்.

155
00:07:50,012 --> 00:07:52,973
இதற்கு முன் இந்த விளையாட்டை விளையாடாதவர்
அல்லது எந்த விதிமுறைகளும் தெரியாதவர்.

156
00:07:53,056 --> 00:07:55,017
இல்லை, எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது.

157
00:07:55,100 --> 00:07:58,145
அதனால் என்ன? டச்சில்
கால்பந்து பற்றி ஒரு பழமொழி இருக்கிறது.

158
00:07:58,228 --> 00:07:59,479
எனக்கு டச் மொழி தெரியாது.

159
00:07:59,855 --> 00:08:01,398
அதனால் தான் தமிழில் சொல்லவிருந்தேன்.

160
00:08:01,481 --> 00:08:02,774
சிறப்பு. சொல்லுங்க.

161
00:08:02,858 --> 00:08:05,611
"ஒவ்வொரு பிரதிகூலத்திற்கும்
ஒரு அனுகூலம் உண்டு."

162
00:08:06,111 --> 00:08:07,112
எனக்கு பிடிச்சிருக்கு.

163
00:08:07,196 --> 00:08:08,822
சரி, நீங்க செய்வது உங்களுக்கே தெரியலை,

164
00:08:08,906 --> 00:08:11,158
இதுவே மற்றகால்பந்து மேலாளர்களை விட
நீங்கள் மாறுபட்ட

165
00:08:11,241 --> 00:08:12,993
கண்ணோட்டத்தில் பார்ப்பதை
உணர்த்தவில்லையா?

166
00:08:14,203 --> 00:08:17,873
அது முழுமையான மற்றும் எல்லையற்ற குழப்பத்தை
உண்டாகும் சக்தியை உங்களுக்கு தர வேண்டாமா?

167
00:08:18,540 --> 00:08:22,252
குழப்பம் விளைவிக்க வேண்டும் அல்லது
பெருங்குழப்பத்தை உருவாக்க வேண்டும்.

168
00:08:22,336 --> 00:08:25,380
ஆமாம், ஆம், அதேதான். நன்றி, தலைவரே.

169
00:08:29,927 --> 00:08:30,928
எனக்கு ஒன்றும் ஆகவில்லை.

170
00:08:31,011 --> 00:08:32,095
ஓ, கடவுளே.

171
00:08:32,179 --> 00:08:34,181
குழப்பம் ஆரம்பமாகிவிட்டது.

172
00:08:35,349 --> 00:08:37,893
சரி, நண்பர்களே. பாடத்தை துவங்கலாம்.

173
00:08:37,976 --> 00:08:41,104
இன்றைய பாடத்தின் பெயர்
"தந்திர நகர்வுகள்" என்பது தான்.

174
00:08:41,188 --> 00:08:42,813
அப்படித்தான், என் நாட்டில் சொல்வோம்.

175
00:08:42,898 --> 00:08:44,942
-இங்கே எப்படி சொல்வார்கள்?
-விரிவான கள நகர்வுகள்.

176
00:08:45,025 --> 00:08:47,319
சரி, "தந்திர நகர்வுகள்" என்றே சொல்வோம்.
அது நன்றாக இருக்கு.

177
00:08:47,402 --> 00:08:49,196
சரி, தந்திர நகர்வால் நம் எதிர் அணியினரை

178
00:08:49,279 --> 00:08:54,535
குழப்பி அவர்களை
திக்குமுக்காட வைக்க வேண்டும்.

179
00:08:54,618 --> 00:08:57,204
அந்த பாம்பெய்யில் இருந்த மக்களை
எரிமலை குழம்பு செய்ததை போல.

180
00:08:57,287 --> 00:09:00,874
எனவே, நீங்கள் ஒவ்வொருவரும்
இந்த விளையாட்டில் இதுவரை உபயோகித்த

181
00:09:00,958 --> 00:09:03,252
தந்திர நகர்வுகளை யோசனை செய்யுங்கள்.
யாருக்காவது ஏதாவது தோன்றுகிறதா?

182
00:09:03,335 --> 00:09:04,336
சரி, டானி, நீ என்ன சொல்கிறாய்?

183
00:09:04,419 --> 00:09:06,880
நான் டிக்ரெஸுக்காக விளையாடிய போது,
எங்களிடம் ஒரு சிறந்த தந்திரம் இருந்தது.

184
00:09:06,964 --> 00:09:08,465
-அதற்கு பெயர் உண்டா?
-"சேண்ட்மேன்."

185
00:09:08,549 --> 00:09:11,635
சரி. அருமை. "சேண்ட்மேன்."

186
00:09:11,718 --> 00:09:13,387
அந்த தந்திரத்தை இன்று கற்றுக்கொள்வோம்.
வேறு யாராவது?

187
00:09:13,470 --> 00:09:14,930
-"பெப்பர் ஷேக்கர்ஸ்."
-"பெப்பர் ஷேக்கர்ஸ்?"

188
00:09:15,013 --> 00:09:16,348
ஆமாம், பன்மை. இரண்டு இருக்கணும்.

189
00:09:16,431 --> 00:09:17,558
"பெக்கம்'ஸ் டாட்ஜர்."

190
00:09:17,641 --> 00:09:19,393
பெக்கம், தெரியும். டாட்ஜர், தெரியாது.

191
00:09:19,476 --> 00:09:21,061
-அது கெட்ட வார்த்தை.
-சரி.

192
00:09:21,144 --> 00:09:22,229
"மிட்நைட் புட்டீன்."

193
00:09:22,312 --> 00:09:23,981
-புட்டீன்?
-அது கெட்ட வார்த்தை இல்லை.

194
00:09:24,064 --> 00:09:25,774
அது கனடா நாட்டினுடையது.

195
00:09:25,858 --> 00:09:27,901
-"சிட்டி சிட்டி பாங் பாங்."
-டிக் வான் டைக் உடன்.

196
00:09:27,985 --> 00:09:31,738
திரைப்பட வரலாற்றிலேயே சரியான
ஆங்கிலேயே உச்சரிப்பு கொண்ட ஒரு மனிதன்.

197
00:09:31,822 --> 00:09:33,073
-நீ என்ன சொல்கிறாய்?
-"உடைந்த குழாய்."

198
00:09:33,156 --> 00:09:35,200
சரி. அது புகார் இல்லை,
உண்மையான பெயர் தானே?

199
00:09:35,284 --> 00:09:37,411
மேன் சிட்டி அதில் இருந்து
நிறைய கோல்களை வழிய விடுவார்கள்.

200
00:09:39,288 --> 00:09:40,497
நல்லது. இல்லையா?

201
00:09:40,581 --> 00:09:42,833
-"லோக்கி'ஸ் டோபோக்கன்."
-"தலைகீழான டாக்ஸி."

202
00:09:42,916 --> 00:09:45,085
-"ஹேட்ரியனின் சுவர்."
-"டர்ட்டி மார்டினி."

203
00:09:45,169 --> 00:09:48,005
அதை இப்போது மூன்று முறை விளையாட
விரும்புகிறேன். அது எனக்கு பிடிக்கும்.

204
00:09:48,088 --> 00:09:49,965
அதோடு "லாஸ்ஸோ ஸ்பெஷல்" என்பதை

205
00:09:50,048 --> 00:09:51,216
சும்மாவாவது சேருங்கள்.

206
00:09:51,300 --> 00:09:52,885
சரி, நண்பர்களே. நாம் இப்போதே,

207
00:09:52,968 --> 00:09:55,929
மைதானத்திற்கு சென்று, இந்த நகர்வுகள்
சிலவற்றை கற்றுக்கொள்ள போகிறோம், சரியா?

208
00:09:56,013 --> 00:09:59,850
இந்த ஞாற்றுக்கிழமை, நாம் மேன் சிட்டியை
ஒரு குழப்ப சுத்தியலால் அடிக்கப் போகிறோம்!

209
00:09:59,933 --> 00:10:01,977
-ஆமாம்!
-போகலாம்!

210
00:10:06,732 --> 00:10:08,567
இல்லை. சாம், மெழுகு வேண்டாம்.

211
00:10:08,650 --> 00:10:11,653
-சரி.
-பொமேட் போடு. பொமேட் போடு.

212
00:10:12,779 --> 00:10:15,449
ஹே, ஜேமி டார்ட். இது நீங்களா?

213
00:10:16,909 --> 00:10:18,243
இருவரும் நம்படம் எடுத்துக்கொள்வோம்.

214
00:10:18,327 --> 00:10:19,494
என்ன?

215
00:10:23,207 --> 00:10:24,666
அற்புதம்.

216
00:10:24,750 --> 00:10:26,793
ரிச்மண்ட் அணி உங்களை வெளியேற்றியதை
என்னால் நம்ப முடியலை.

217
00:10:26,877 --> 00:10:28,337
அது உங்களுக்கு பெரிய அவமானம் இல்லையா?

218
00:10:29,379 --> 00:10:31,131
வந்து, நான் லாஸ்ஸோவினால்
நீக்கப்பட்டேன். ஆக...

219
00:10:31,215 --> 00:10:33,800
இப்ப அவருக்கு உங்களை பிடிக்கும்.
அதைப்பற்றி டிவியில் பேசினார்தானே?

220
00:10:34,676 --> 00:10:36,762
நீ என்ன பேசுகிறாய், பணக்கார முட்டாளே?

221
00:10:36,845 --> 00:10:40,682
ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட்.
ஜேமி டார்ட்டுடன் ஏதாவது சண்டையா?

222
00:10:40,766 --> 00:10:43,143
ஜேமியோடா? இல்லை.
அவன் ஒரு சிறந்த இளைஞன்.

223
00:10:43,227 --> 00:10:45,020
திறமையானவன், நல்ல உழைப்பாளி,

224
00:10:45,103 --> 00:10:47,523
மிகவும் அழகான முகத்தோற்றம் உடையவன்.

225
00:10:47,606 --> 00:10:48,941
எப்போதும் அவனுக்கு ஆதரவளிப்பேன்.

226
00:10:49,024 --> 00:10:50,859
-என்ன?
-அற்புதமான தந்திர விளையாட்டு, இல்லையா?

227
00:10:52,152 --> 00:10:53,737
ஆமாம். நீ போகலாம்.

228
00:10:55,322 --> 00:11:00,327
ஹேய், கீலி. நான் நகரத்தில் இருக்கிறேன்.
நான் உன்னோடு பேச வரலாமா?

229
00:11:06,375 --> 00:11:08,585
இது மிகவும் மோசம்.

230
00:11:12,714 --> 00:11:14,633
ஓ, சரி, ராய். ஜேமி இங்கே வந்திருகிறான்.

231
00:11:14,716 --> 00:11:17,177
அப்படியா? நான் ஸ்கோன்கள் செய்யவா?

232
00:11:17,261 --> 00:11:18,345
எனக்கு ஸ்கோன்கள் பிடிக்காது.

233
00:11:18,428 --> 00:11:20,138
ஸ்கோன்கள் செய்ய மாட்டேன், முட்டாளே.

234
00:11:20,222 --> 00:11:22,099
நல்லது, ஏனென்றால் எனக்கு அவை பிடிக்காது.

235
00:11:23,517 --> 00:11:25,102
அது என்ன?

236
00:11:25,185 --> 00:11:26,395
உனக்காக காபி போட்டேன்.

237
00:11:27,771 --> 00:11:28,772
சரி, அப்போ, இது என்ன?

238
00:11:28,856 --> 00:11:29,982
உனக்கு காபி கொண்டு வந்தேன்.

239
00:11:36,613 --> 00:11:39,199
சரி, ஜேமி.
நீ என்னிடம் என்ன பேச நினைத்தாய்?

240
00:11:39,283 --> 00:11:41,493
இந்த மோசமான கிழவன் முன்னால் சொல்ல
எனக்கு விருப்பமில்லை.

241
00:11:42,077 --> 00:11:43,912
ஏன்? அவன் ஒன்றும் சொல்ல மாட்டான்.
அப்படித்தானே?

242
00:11:46,373 --> 00:11:47,374
தப்பித்துவிட்டேன்.

243
00:11:48,458 --> 00:11:50,794
டெட் லாஸ்ஸோ என்னோடு
தந்திர விளையாட்டு விளையாடுகிறார்.

244
00:11:50,878 --> 00:11:53,630
டிவியில் என்னை பற்றி நல்ல விதமாக பேசி,
என் மனதை கலைக்க முயற்சிக்கிறார்.

245
00:11:53,714 --> 00:11:56,049
-அவருக்கு உன்னைப் பிடிக்கும் தான்.
-அவரைப்போல நீயும் ஒரு வஞ்சகி தான்.

246
00:11:56,133 --> 00:11:58,177
ஓய். மரியாதையாக பேசு.

247
00:11:58,260 --> 00:11:59,386
சரி, ராபோகாப்.

248
00:11:59,469 --> 00:12:02,723
உன்னோடு தொடர்புடையவர்கள் எல்லாம்
உன்னை கஷ்டப்படுத்த நினைக்கவில்லை, ஜேமி.

249
00:12:02,806 --> 00:12:04,308
நான் நினைக்கிறேன்.

250
00:12:05,225 --> 00:12:07,644
என்ன? நீ நேர்மையை மதிப்பாய் என நினைத்தேன்.

251
00:12:07,728 --> 00:12:08,896
நான் மதிப்பேன்.

252
00:12:09,563 --> 00:12:12,649
இது கேவலமானது.

253
00:12:13,192 --> 00:12:16,528
பார், கீலி. இந்த கிழவனுக்கு
நீ மென்மையான சாப்பாடு கொடுத்த பின்,

254
00:12:16,612 --> 00:12:17,821
எனக்கு ஒரு அழைப்பு கொடு.

255
00:12:18,780 --> 00:12:21,742
உன்னை நாளை சந்திக்கிறேன்.
ஓரமாக இருந்து எல்லாவற்றையும் பார்.

256
00:12:27,080 --> 00:12:28,290
என்ன?

257
00:12:28,832 --> 00:12:30,459
வந்து, எனக்கு இப்போது சாப்பாடு வேண்டும்.

258
00:12:32,252 --> 00:12:35,297
அப்பா, நீங்கள் கால்பந்து பயிற்சி கொடுப்பதை
டிவியில் பார்த்தால்,

259
00:12:35,380 --> 00:12:38,217
நீங்கள் எதுவும் செய்வதை போல தோன்றவில்லை.

260
00:12:39,176 --> 00:12:41,970
ஏனென்றால் நான் எதுவும் செய்வதில்லை. சரியா?

261
00:12:42,054 --> 00:12:44,264
அங்கே இருப்பது போல இங்கே
கால்பந்து கோச் இல்லை, மகனே.

262
00:12:44,348 --> 00:12:46,892
என்னிடம் கொஞ்சம் தான் அதிகாரம் இருக்கு,
ஆட்டம் தொடங்கிவிட்டால்,

263
00:12:46,975 --> 00:12:48,519
என் வீரர்கள் என்ன செய்யணும்
என நான் சொல்ல முடியாது.

264
00:12:48,602 --> 00:12:50,812
எனவே நான் அவர்களுக்கு என்ன
சொல்லி கொடுத்தேனோ அதை அவர்கள்

265
00:12:50,896 --> 00:12:52,356
கொஞ்சமாவது கற்றுக்கொண்டு, தாங்களே

266
00:12:52,439 --> 00:12:55,609
விளையாடும் போது சரியான முடிவுகளை
எடுப்பார்கள் என நம்பதான் முடியும்.

267
00:12:55,692 --> 00:12:58,028
அதாவது, இது ஒரு அப்பாவாக
நடந்து கொள்வது போல், இல்லையா?

268
00:13:00,155 --> 00:13:02,324
நீ எதுவரை கவனித்தாய்?

269
00:13:02,407 --> 00:13:04,785
-நான் ஒரு ரோபோ வரைந்தேன்.
-அது பிரமாதம், செல்லமே.

270
00:13:06,078 --> 00:13:08,580
ரிச்மண்ட் ஆதரவாளர்கள் ஒரு முக்கியமான
இரவு ஆட்டத்திற்காக கூடி இருக்கிறார்கள்.

271
00:13:08,664 --> 00:13:11,959
ஜெயித்தால் அவர்கள் மேலே இருப்பார்கள்.
தோற்றால் அவர்கள் கீழே போய் விடுவார்கள்.

272
00:13:12,042 --> 00:13:15,170
முழு நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள்,
ஆனால் அவர்களுக்கு தெரிந்தது போல,

273
00:13:15,254 --> 00:13:16,839
நம்பிக்கை தான் நம்மை கொன்று விடும்.

274
00:13:16,922 --> 00:13:17,923
இந்த விளையாட்டு.

275
00:13:18,006 --> 00:13:20,592
நாம் இதில் ஈடுபாடு செலுத்தினால் எவ்வளவு
மனஅழுத்தம் வரும் என்பது மறந்துவிட்டது.

276
00:13:21,635 --> 00:13:23,053
நான் ஒரு விஷயத்தை
ஒத்துக் கொள்ளணும்.

277
00:13:24,471 --> 00:13:26,223
நான் எப்போதுமே கால்பந்தைப் பற்றி
கவலைப்பட்டதில்லை.

278
00:13:26,306 --> 00:13:29,810
முட்டாள்தனமாக தோன்றலாம், ஆனால் போட்டியின்
போது எப்படி நடிக்க வேண்டும் என தெரியும்.

279
00:13:29,893 --> 00:13:31,895
"நடுவரே!"

280
00:13:32,521 --> 00:13:34,398
"வெளிப்பக்கம், முட்டாளே!"

281
00:13:34,481 --> 00:13:36,525
-கடவுளே, நீ மோசமானவள்.
-நீங்கள் என்னை நம்பினீர்கள்.

282
00:13:37,401 --> 00:13:40,195
எப்போதுமே நான் இதயபூர்வமாக
இதில் ஈடுபட்டதில்லை, தெரியுமா?

283
00:13:41,864 --> 00:13:43,031
ஆனால் இன்று...

284
00:13:45,868 --> 00:13:47,578
நான் மிகவும் அக்கறைக் கொள்கிறேன்.

285
00:13:50,289 --> 00:13:53,834
முன்னாள் இங்கிலாந்து சர்வதேச வீரர்,
கிரிஸ் பாவெலோடு, நான் ஆர்லோ வைட்,

286
00:13:53,917 --> 00:13:56,670
மேன்செஸ்டர் சிட்டியை எதிர்த்து விளையாடும்,
ஏஎஃப்சி ரிச்மண்டின் சொந்த இடமாகிய,

287
00:13:56,753 --> 00:13:58,463
நெல்சன் ரோட் அரங்கத்தில் இருந்து,

288
00:13:58,547 --> 00:14:00,799
நேரலையாக கேமை விவரிக்க இருக்கிறோம்.

289
00:14:00,883 --> 00:14:02,176
உங்களுக்கு என் புது சட்டை பிடிச்சிருக்கா?

290
00:14:03,302 --> 00:14:04,511
அட, உன்னைப் பார்.

291
00:14:04,595 --> 00:14:06,722
இது டேவிட் கோலியாத்தை
சந்தித்தது போல இருக்கு.

292
00:14:06,805 --> 00:14:09,558
டேவிட் தன் உண்டிவில்லில் கல்லை
வைக்க மறந்தால், ஆர்லோ.

293
00:14:09,641 --> 00:14:10,642
இவை அனைத்தும் என் செலவு.

294
00:14:10,726 --> 00:14:12,102
நன்றி, மே.

295
00:14:12,186 --> 00:14:14,104
-அதிர்ஷ்டத்திற்காக குழுவாக அணைப்போமா?
-வேண்டாம்.

296
00:14:15,647 --> 00:14:17,983
-ரிச்மண்ட்.
-ரிச்மண்ட்.

297
00:14:19,735 --> 00:14:21,945
சரி, இதோ நாங்கள் வந்துவிட்டோம்.
ஹிக்கின்ஸ் குடும்பம்.

298
00:14:22,029 --> 00:14:27,326
இது டெர்ரி, க்ரிஸ், டேனா, ஸ்டீவி.

299
00:14:27,409 --> 00:14:30,579
ஹிக்கின்ஸ், உனக்கு எத்தனை குழந்தைகள்?
கடவுளே.

300
00:14:30,662 --> 00:14:32,831
அப்புறம் இவன் தான் மூத்தவன், லிண்ட்சே.

301
00:14:32,915 --> 00:14:33,916
மாலை வணக்கம்.

302
00:14:34,708 --> 00:14:35,709
மன்னிச்சிடுங்க, போதகரே.

303
00:14:36,335 --> 00:14:38,712
கவலைப்படாதீங்க.
அவன் ஒரு நல்ல போதகர்.

304
00:14:38,795 --> 00:14:40,380
நம் பெற்றோர்கள் நம்மை திருமணத்தில் இருந்து

305
00:14:40,464 --> 00:14:43,425
விடுவிப்பது, நமக்கு வாழ்க்கையின் புதிரை
ஆராய்வதற்கு இடமளிக்கும்.

306
00:14:43,509 --> 00:14:45,594
-வா, ரிச்மண்ட்!
-வா!

307
00:14:46,428 --> 00:14:48,680
கிரிஸ், ரிச்மண்ட் ரசிகர்களின்
ஆரவாரத்திற்கு மத்தியில்,

308
00:14:48,764 --> 00:14:52,559
லாக்கர் அறையில் வெளியேறும் நிலையில்
இருப்பதைபற்றி வீரர்கள் என்ன நினைப்பார்கள்?

309
00:14:53,185 --> 00:14:55,437
அது ஒரு மிகப்பெரிய அழுத்தம் தான், ஆர்லோ.

310
00:14:55,521 --> 00:14:58,774
நல்ல முடிவைப் பெற அவர்களை ஒரு அனுபவமிக்க
தலைவர் வழி நடத்தணும்.

311
00:15:02,528 --> 00:15:03,737
ஐசக்.

312
00:15:04,404 --> 00:15:05,572
என்ன?

313
00:15:05,656 --> 00:15:06,740
கேப்டன்

314
00:15:09,785 --> 00:15:11,578
டிவியை உடைப்பதை நிறுத்தாதே.

315
00:15:25,509 --> 00:15:28,178
சரி, நண்பர்களே.
ஹே, நாம் கவனமாக இருக்கணும்.

316
00:15:32,683 --> 00:15:37,604
அதாவது நீங்கள் அவ்வப்போது பயன்படுத்தும்
கூற்று ஒன்றை எனக்கு பிடிக்கவில்லை.

317
00:15:39,022 --> 00:15:40,691
"நம்மைக் கொல்லும் நம்பிக்கை."

318
00:15:42,693 --> 00:15:43,694
உங்களுக்கு அது தெரியுமா?

319
00:15:46,154 --> 00:15:47,698
நான் அதை மறுக்கிறேன், தெரியுமா?

320
00:15:48,991 --> 00:15:51,493
அவநம்பிக்கை தான் உங்களை கொல்லும்
என்று நினைக்கிறேன்.

321
00:15:53,161 --> 00:15:54,663
பாருங்க, நான் நம்பிக்கையை நம்புகிறவன்.

322
00:15:55,914 --> 00:15:57,457
நான் நம்பிக்கை மீது நம்பிக்கையுள்ளவன்.

323
00:15:59,793 --> 00:16:03,380
இப்போது, என் நாட்டிலும்,
ஒரு கூற்று உள்ளது, சரியா?

324
00:16:04,298 --> 00:16:05,966
உண்மையில், அது ஒரு கேள்வி.

325
00:16:06,550 --> 00:16:08,927
"நீங்கள் அற்புதங்களை நம்புகிறீர்களா?"

326
00:16:11,388 --> 00:16:13,891
இப்போது, நீங்கள் அந்த கேள்விக்கான
பதிலை சொல்ல வேண்டாம்...

327
00:16:15,267 --> 00:16:18,103
ஆனால் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்.

328
00:16:18,187 --> 00:16:19,188
இப்போதே.

329
00:16:20,522 --> 00:16:23,650
நீங்கள் அற்புதங்களை நம்புகிறீர்களா?

330
00:16:26,111 --> 00:16:27,404
நீங்கள் நம்பினால், இப்போதே...

331
00:16:29,281 --> 00:16:31,867
என்னோடு சேர்ந்து ஒரு வட்டமாக நில்லுங்க.
வாருங்கள். துவங்கலாம்.

332
00:16:33,619 --> 00:16:34,745
இதற்குள் வாருங்கள்.

333
00:16:37,289 --> 00:16:39,124
சரி, கேப்டன். அவர்களுக்கு தெரியபடுத்துங்க.

334
00:16:45,005 --> 00:16:46,423
துவங்கலாம், ஸ்கிப்பர், துவங்கலாம்.

335
00:16:47,466 --> 00:16:48,926
சரி, கேப்டன். அவர்களுக்கு தெரியபடுத்துங்க.

336
00:16:49,843 --> 00:16:51,053
12 என்று சொல்லும் போது
ரிச்மண்ட் என கத்துங்கள்.

337
00:16:51,929 --> 00:16:55,265
ஒன்று, இரண்டு, மூன்று,

338
00:16:55,349 --> 00:16:59,186
நான்கு, ஐந்து, ஆறு,

339
00:16:59,269 --> 00:17:03,565
ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு!

340
00:17:03,649 --> 00:17:05,400
ரிச்மண்ட்!

341
00:17:05,483 --> 00:17:07,069
ரிச்மண்டுக்கே வெற்றி!

342
00:17:07,903 --> 00:17:09,363
நாம் செல்வோம்!

343
00:17:09,445 --> 00:17:11,531
அற்புதம் என்கிற விஷயம் திரைப்படத்தில்
இருந்தா அல்லது நிஜ வாழ்வில் இருந்தா?

344
00:17:11,615 --> 00:17:12,616
இரண்டிலும்.

345
00:17:12,699 --> 00:17:15,868
நிறைய கிளைக்கதைகளுக்கு மத்தியில்,
இங்கு வெற்றிகரமான குத்தகையை கழித்து,

346
00:17:15,953 --> 00:17:18,121
இன்று துவக்க ஆட்டக்காரராக களம் இறங்காத
ராய் கென்டுடன்

347
00:17:18,204 --> 00:17:23,001
மோசமான மைதான தகராறில் ஈடுபட்ட,
ஜேமி டார்ட் மீண்டும் இணைந்துள்ளார்.

348
00:17:23,085 --> 00:17:26,630
ராய் கென்ட் ஒரு முக்கியமான போட்டியின் போது
களமிறங்காமல் இருந்ததில்லை.

349
00:17:27,673 --> 00:17:29,299
ஹே, ஜேமி! வாழ்த்துக்கள்!

350
00:17:30,259 --> 00:17:31,969
நாசமாய் போன தந்திர விளையாட்டுகள்.

351
00:17:32,052 --> 00:17:34,680
இது ரிச்மண்டுக்கும்,
மேன்செஸ்டர் சிட்டிக்கும் இடையே ஆன போட்டி.

352
00:17:34,763 --> 00:17:36,098
இதோ தொடங்கிவிட்டது.

353
00:17:36,181 --> 00:17:37,432
இதோ.

354
00:17:38,767 --> 00:17:41,895
ஹென்றிக் பந்தை
கார்வின்னுக்கு அனுப்புகிறார்.

355
00:17:41,979 --> 00:17:43,689
அதோடு டார்ட் போல் போட செல்கிறார்.

356
00:17:44,273 --> 00:17:45,566
இல்லை, இல்லை,இல்லை.

357
00:17:45,649 --> 00:17:47,359
அவரது இடப்புறத்தில்
இன்னொரு வீரர் வருகிறார்.

358
00:17:48,193 --> 00:17:49,403
ஆனால் அவரே கோல் போடுகிறார்!

359
00:17:50,070 --> 00:17:51,572
அப்புறம் சொஹோவ் தடுத்துவிட்டார்.

360
00:17:53,365 --> 00:17:54,408
நல்ல தடுப்பு!

361
00:17:54,491 --> 00:17:56,493
சோரோ அற்புதமாக காப்பாற்றிவிட்டார்.

362
00:17:56,577 --> 00:17:58,328
ஆமாம், கிரிஸ்.
அதை "சொஹோவ்" என உச்சரிக்கணும்.

363
00:17:58,871 --> 00:18:02,583
முப்பது நிமிடங்கள் முடிந்தது. திரும்ப
தாக்கும் வாய்ப்பு ரிச்மண்டுக்கு கிடைத்தது.

364
00:18:02,666 --> 00:18:05,377
ஒபிசான்யா மிகவும் நேர்த்தியாக
பாஸ் பண்ணினார்.

365
00:18:05,460 --> 00:18:07,796
வின்செஸ்டர் ஆஃப்சைடில் போட்டுவிட்டார்.

366
00:18:07,880 --> 00:18:09,173
ஐயோ!

367
00:18:09,256 --> 00:18:11,216
-அது எப்படி ஆஃப்சைட் என்று விவரியுங்கள்.
-என்ன?

368
00:18:11,300 --> 00:18:14,720
இல்லை, உண்மையாகவே கேட்கிறேன். அது எப்படி
ஆஃப்சைட்? எனக்கு இன்னும் புரியலை. நீங்க...

369
00:18:15,345 --> 00:18:18,348
இதோ லாஸ்ஸோவின் துணை பயிற்சியாளர்
அவர்களது யுத்தியைப் பற்றி பேச வருகிறார்.

370
00:18:18,432 --> 00:18:20,100
என்ன தந்திரங்கள் செய்யப் போகிறார்களோ?

371
00:18:20,184 --> 00:18:22,352
வினீகர் ஹெய்னகினிற்கு அருகில்
இருக்கும் போது, அது ஆஃப்சைடில் இல்லை.

372
00:18:22,436 --> 00:18:23,979
வினீகர் பந்தை பிடிக்கும் போது அல்ல,

373
00:18:24,062 --> 00:18:25,647
அது கெச்சப் பந்தை பாஸ் பண்ணும் போதுதான்.

374
00:18:25,731 --> 00:18:27,024
-சரி, இப்போது புரிகிறது.
-சரி.

375
00:18:27,107 --> 00:18:29,526
டிக்சனின் ஷாட்...
கம்பத்திற்கு வெளியே சென்றுவிட்டது.

376
00:18:29,610 --> 00:18:30,611
கார்னர் கிக்!

377
00:18:30,694 --> 00:18:32,905
டிக்சனுக்கு வருத்தம்,
ஆனால் ரிச்மண்டிற்கு கார்னர் கிக்.

378
00:18:32,988 --> 00:18:34,198
வா, ரிச்மண்ட்!

379
00:18:34,281 --> 00:18:35,741
கார்னர் கிக், கார்னர் கிக்.

380
00:18:35,824 --> 00:18:37,951
-சேண்ட்மேன் வியூகம்.சேண்ட்மேனை செய்ய சொல்.
-என்ன? சேண்ட்மேன்.

381
00:18:38,035 --> 00:18:40,412
சேண்ட்மேன்! தோழர்களே, சேண்ட்மேன்!

382
00:18:40,954 --> 00:18:42,414
-சேண்ட்மேன்!
-இதோ!

383
00:18:42,497 --> 00:18:43,957
ரோஹாஸ் கார்னர் கிக் அடிக்கப் போகிறார்.

384
00:18:45,584 --> 00:18:47,711
இது சும்மா. வேறொருவர் அடிக்கிறார்.
என்னது இது?

385
00:18:47,794 --> 00:18:49,338
மீண்டும் டிக்சன் அடிக்கிறார்!

386
00:18:49,421 --> 00:18:51,173
இல்லை! ஹாம்லின் தன் பாதத்தால் தடுத்தார்.

387
00:18:51,256 --> 00:18:52,591
ஐயோ.

388
00:18:53,884 --> 00:18:56,512
பேபி, அந்த சேண்ட்மேன் வியூகம்
அவர்களை நன்றாக ஏமற்றியது.

389
00:18:56,595 --> 00:18:59,598
-டெட் லாஸ்ஸோவிடமிருந்து சின்ன சூழ்ச்சி.
-அதை இதற்கு முன் பார்த்ததில்லை.

390
00:18:59,681 --> 00:19:01,850
ஆனாலும் நல்ல நகர்வு.

391
00:19:03,185 --> 00:19:06,438
இப்போது பாதி நேரம் முடிந்துவிட்டது.
ஸ்கோர் 0-0.

392
00:19:06,939 --> 00:19:09,441
அதிர்ச்சிகரமாக,
ரிச்மண்டுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது,

393
00:19:09,525 --> 00:19:12,611
கோல்கீப்பர் சொஹோவ்வின்
சிறந்த தடுப்பிற்கு நன்றி.

394
00:19:12,694 --> 00:19:14,321
சரி, அதாவது, நம்மிடம்... அது ரெனால்ட்ஸ்.

395
00:19:14,404 --> 00:19:16,198
இல்லை, நாம் தற்காப்பை பலப்படுத்தணும்.
நாம்...

396
00:19:16,281 --> 00:19:18,325
சரி, விட்டுத்தள்ளுங்க.
என் உள்ளுணர்வுகளை பின்பற்றப் போகிறேன்.

397
00:19:18,408 --> 00:19:19,868
யாராவது கிரிஸ்டல் பேலஸின் ஸ்கோரை பாருங்க.

398
00:19:19,952 --> 00:19:21,537
ஹே, இல்லை. கண்டிப்பாக வேண்டாம்.

399
00:19:21,620 --> 00:19:24,498
எங்கேயோ நடக்கும் ஏதோ ஒரு விளையாட்டை பற்றி
நான் கேட்க விரும்பலை.

400
00:19:24,581 --> 00:19:27,209
சரியா? கேளுங்க,
நாம் சமநிலை செய்வதற்காக விளையாடவில்லை.

401
00:19:27,292 --> 00:19:29,169
யாரும் தங்களின் சகோதரியை
முத்தமிட மாட்டார்கள்.

402
00:19:29,753 --> 00:19:31,004
என்ன?

403
00:19:31,713 --> 00:19:35,592
அது ஒரு அமேரிக்க பழமொழி, அது இங்கு
உள்ளதல்ல என்று இப்போது உணர்கிறேன்,

404
00:19:35,676 --> 00:19:37,261
அது நல்லதும் கூட, ஏனென்றால் அது
வினோதமாக இருக்கிறது,

405
00:19:37,344 --> 00:19:39,263
எனக்கே அது பிடிக்காது,
ஏன் சொன்னேன் என்றே தெரியலை.

406
00:19:39,346 --> 00:19:41,557
அது வெறும் அட்ரினலினின் மற்றும்
நரம்புகளினால் வரும் பதற்றம்.

407
00:19:41,640 --> 00:19:43,642
ஆனால் நாம் வெற்றி பெறுவதற்காக
விளையாடுகிறோம்.

408
00:19:43,725 --> 00:19:45,936
வெற்றி பெற்று முன்னேறணும். கேட்கிறதா?

409
00:19:46,937 --> 00:19:49,356
-தலையாட்டல்கள் போதாது. கேட்கிறதா?
-சரி, கோச்.

410
00:19:49,439 --> 00:19:51,942
சரி, நல்லது. சரி.
ராய், நீ இரண்டம் பகுதியை தொடங்குகிறாய்.

411
00:19:52,025 --> 00:19:53,527
போய் ஆயத்தமாகு. போகலாம்.

412
00:19:53,610 --> 00:19:54,862
மக்களே, என்னை பின்தொடருங்கள்.

413
00:19:59,283 --> 00:20:02,077
இதோ ராய் கென்ட் வருகிறார்.

414
00:20:02,619 --> 00:20:04,913
ராய்-ஓ!

415
00:20:05,497 --> 00:20:07,457
லாச்ஸோவிடமிருந்து ஒரு ஆச்சரியமான செயல்.

416
00:20:07,541 --> 00:20:09,835
மேன்செஸ்டர் சிட்டியின் வேகம் ரிச்மண்டிற்கு
பிரச்சனைகளை உருவாக்குகிறது,

417
00:20:09,918 --> 00:20:14,256
அதோடு அவர் பண்பான, மிகவும் மெதுவான
ராய் கென்ட்டை களமிறக்குகிறார்.

418
00:20:14,339 --> 00:20:17,009
அவன் ஒரு நாசமாகப்போன
எண்பது வயது கிழவன். அவனைப் பார்.

419
00:20:17,092 --> 00:20:19,052
மேன்செஸ்டர் சிட்டிக்கு
பெரிய வாய்ப்பு இருக்கு.

420
00:20:19,136 --> 00:20:20,846
ஷார்ஃபென்பெர்க் பெனால்ட்டி
கட்டத்தில் இருக்கிறார்.

421
00:20:20,929 --> 00:20:23,599
ஓ, இது ரிச்மண்டிற்கு எதிரான பெனால்ட்டி.

422
00:20:23,682 --> 00:20:25,601
-எப்படி? எப்படி?
-அவன் அவரை தொடவேயில்லை!

423
00:20:25,684 --> 00:20:29,062
சொஹோவ் தன் நிலையில் இருக்கிறார்.
ஹென்ட்ரிக் அடிக்கப் போகிறார்.

424
00:20:31,231 --> 00:20:32,608
அவர் கோல் போட்டுவிட்டார்.

425
00:20:35,444 --> 00:20:38,906
சிட்டி ஒருவழியாக சொஹோவை கடந்து
கோல் போட்டுவிட்டது, இப்போது ஸ்கோர் 1-0.

426
00:20:38,989 --> 00:20:40,949
அது அனைவரும் எதிர்ப்பார்த்த ஒரு கோல்தான்.

427
00:20:41,033 --> 00:20:44,661
சிட்டி முன்னிலையில் உள்ளது,
பின் டாக்ட்ராக் அமைதியடைகிறது.

428
00:20:44,745 --> 00:20:47,664
நாம் ஒரே ஒருகோல் தான் குறைவாக உள்ளோம்.
இன்னும் வாய்ப்பு இருக்கு. வா, ரிச்மண்ட்!

429
00:20:47,748 --> 00:20:49,166
நீங்க அக்கறைப்படுவது எனக்கு பிடிக்கிறது.

430
00:20:49,249 --> 00:20:52,085
போ, ரிச்மண்ட்!

431
00:20:52,169 --> 00:20:54,254
ஜேமி டார்ட் கோல் போட ஓடுகிறார்.

432
00:20:54,338 --> 00:20:57,174
அவன் கோல் போட்டுவிட்டால்,
ரிச்மண்டிற்கு அது முடிவு காலம்.

433
00:20:58,175 --> 00:20:59,384
யாராலும் அவனை பிடிக்க முடியாது.

434
00:21:00,511 --> 00:21:01,470
ஓடு, ராய், ஓடு!

435
00:21:03,889 --> 00:21:07,976
இருங்க. உங்களால் இதை நம்ப முடிகிறதா?
அது கென்ட்!

436
00:21:12,022 --> 00:21:13,857
ஆம்! அற்புதம் நண்பா, ராய்!

437
00:21:13,941 --> 00:21:15,234
ராய்! ராய்!

438
00:21:15,317 --> 00:21:18,946
மீண்டும் ஒருமுறை, ஆமை முயலை தடுத்தது.

439
00:21:19,029 --> 00:21:21,365
அப்படித்தான் அவனை வீழ்த்தணும், ராய்!

440
00:21:24,868 --> 00:21:25,953
என்ன விஷயம்?

441
00:21:26,620 --> 00:21:27,663
அவன் எழுந்திருக்கவில்லை.

442
00:21:27,746 --> 00:21:29,706
இப்போது ஏதோ பிரச்சினை போல தோன்றுகிறது.

443
00:21:29,790 --> 00:21:33,168
டார்டை தடுக்க இது நல்ல சூழ்ச்சி என்றாலும்
கென்ட் அதற்கான விலையை கொடுத்திருக்கிறார்.

444
00:21:33,252 --> 00:21:35,254
-உடற்பயிற்சி மருத்துவர் வருகிறார்.
-எழுந்திரு, ராய்!

445
00:21:35,337 --> 00:21:37,172
ராய். ராய், நீ நலமா?

446
00:21:37,256 --> 00:21:40,175
கொடுமை. எனது முழங்கால் காயமடைந்துவிட்டது.

447
00:21:40,259 --> 00:21:43,053
-ஸ்ட்ரெச்சர் எடுத்துவர சொல்லவா, ராய்?
-இல்லை, எழுந்திருக்க உதவி செய்.

448
00:21:43,136 --> 00:21:46,139
ராய் கென்ட்! அவர் இங்கே இருக்கிறார்,
அவர் அங்கே இருக்கிறார்...

449
00:21:46,223 --> 00:21:47,599
நீ என்ன செய்கிறாய்?

450
00:21:47,683 --> 00:21:49,268
...அவர் எங்கும் இருக்கிறார்.
ராய் கென்ட்!

451
00:21:49,351 --> 00:21:50,352
கவனி.

452
00:21:50,435 --> 00:21:53,313
ராய் கென்ட்! அவர் இங்கே இருக்கிறார்,
அவர் அங்கே இருக்கிறார்

453
00:21:53,397 --> 00:21:55,440
அவர் எங்கும் இருக்கிறார். ராய் கென்ட்!

454
00:21:55,941 --> 00:21:58,819
ராய் கென்ட்! அவர் இங்கே இருக்கிறார்,
அவர் அங்கே இருக்கிறார்

455
00:21:58,902 --> 00:22:03,323
அவர் எங்கும் இருக்கிறார்.
ராய் கென்ட்! ராய் கென்ட்!

456
00:22:03,407 --> 00:22:06,159
அவர் இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார்,
அவர் எங்கும் இருக்கிறார்.

457
00:22:06,243 --> 00:22:07,452
ராய் கென்ட்!

458
00:22:07,536 --> 00:22:11,957
வந்து, பல ஆண்டுகளுக்கும் மேலாக பிரிமியர்
லீக்கில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை

459
00:22:12,040 --> 00:22:15,878
ராய் கென்ட்டிற்காக பாடியபோது,மக்கள் மோசமான
வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னியுங்க.

460
00:22:15,961 --> 00:22:18,380
அவர் இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார்
அவர் எங்கும் இருக்கிறார்...

461
00:22:18,463 --> 00:22:19,840
அவர் எழுந்திருக்கிறார்.

462
00:22:19,923 --> 00:22:21,508
ராய் கென்ட்!

463
00:22:22,384 --> 00:22:24,636
ராய் கென்ட் ஒருபோதும்
ஸ்ட்ரெச்சரில் ஏற மாட்டார்.

464
00:22:26,138 --> 00:22:32,269
ராய் கென்ட்! அவர் இங்கே இருக்கிறார், அங்கே
இருக்கிறார், எங்கும் இருக்கிறார்!

465
00:22:32,352 --> 00:22:33,770
ராய் கென்ட்!

466
00:22:34,271 --> 00:22:36,940
அவர் இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார்,
அவர் எங்கும் இருக்கிறார்!

467
00:22:37,024 --> 00:22:40,360
ராய் கென்ட்! ராய் கென்ட்!

468
00:22:40,819 --> 00:22:43,906
கென்ட் வெளியேறும் போது, அவர்
நன்றியுடன் ரசிகர்களுக்குக் கைதட்டினார்.

469
00:22:43,989 --> 00:22:45,490
கென்ட் ரசிகர்களுக்கு விருப்பமானவர்,

470
00:22:45,574 --> 00:22:48,827
ஏனெனில் அவர் எப்போதும் தளத்தில் தன்னால்
முடிந்தளவு அதிகபட்சமாக முயற்சி செய்வார்,

471
00:22:48,911 --> 00:22:50,412
இன்றிரவும் அவர் அப்படிதான் செய்தார்.

472
00:22:54,416 --> 00:22:57,753
கிரிஸ், இது கிட்டத்தட்ட விடை பெறுவது
போன்ற உணர்வைத் தருகிறதா?

473
00:22:59,671 --> 00:23:01,215
அதுபோன்று இருக்கலாம், ஆர்லோ.

474
00:23:01,298 --> 00:23:03,842
அவருடைய வயதில், அந்தக் காயத்துடன்...

475
00:23:04,760 --> 00:23:06,428
தனிப்பட்ட முறையில்,
சொல்லவே வருத்தமாக இருக்கு,

476
00:23:06,512 --> 00:23:10,766
ராய் கென்ட் விளையாடுவதை பார்ப்பது
இதுவே கடைசியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

477
00:23:28,492 --> 00:23:30,410
ஆட்டத்தின்போது நீ இங்கு வரக் கூடாது.

478
00:23:35,040 --> 00:23:36,625
வெளியே போ என்று சொன்னேன்.

479
00:23:39,044 --> 00:23:41,088
உண்மையாகத் தான் சொல்கிறேன்.
என்னிடமிருந்து விலகியிரு.

480
00:23:52,307 --> 00:23:54,309
கென்ட்

481
00:24:13,453 --> 00:24:14,830
என்ன நடக்கிறது...

482
00:24:16,290 --> 00:24:18,917
அது 26,000 பேர் கைபேசியை
பயன்படுத்தும் சத்தம்.

483
00:24:23,338 --> 00:24:25,549
அடக் கடவுளே. 6-0 என்ற கணக்கில்
கிரிஸ்டல் பேலஸ் வென்றுவிட்டது.

484
00:24:26,175 --> 00:24:27,342
அப்போ, இதனால்...

485
00:24:28,218 --> 00:24:29,511
நாம் ஆட்டத்தை சமன் செய்யணும்.

486
00:24:29,595 --> 00:24:32,347
-நாம் சமன் செய்ய வேண்டும், வீரர்களே!
-நாம் சமன் செய்ய வேண்டும்!

487
00:24:32,431 --> 00:24:33,974
வா! உங்களால் முடியும்!

488
00:24:34,641 --> 00:24:35,684
முன்னேறு, ரிச்மண்ட்!

489
00:24:35,767 --> 00:24:37,269
உன்னால் முடியும், ரிச்மண்ட்!

490
00:24:39,104 --> 00:24:43,525
ரிச்மண்டின் சீசனில் கூடுதல் நேரத்தின்
மூன்று நிமிடங்கள் மட்டுமே மீதமுள்ளது.

491
00:24:43,609 --> 00:24:45,402
மாண்ட்லோர் இடதுபுறமாக ஓடுகிறார்.

492
00:24:45,485 --> 00:24:47,487
ஷார்ஃபென்பெர்க் தவறாக ஆடிவிட்டார்.

493
00:24:48,155 --> 00:24:50,240
அப்படிதான், ரிச்மண்ட்!
அப்படிதான் செய்ய வேண்டும்!

494
00:24:50,324 --> 00:24:53,535
மாண்ட்லோர் ரிச்மண்டிற்கு
ஒரு ஃப்ரீ கிக் பெற்றுத் தந்துவிட்டார்.

495
00:24:53,619 --> 00:24:55,454
ஆர்லோ, அதை மிகவும் சிக்கலாக்கி விட்டார்.

496
00:24:55,537 --> 00:24:57,414
சிட்டி வீரர்களும் அப்படித் தான்.

497
00:24:57,497 --> 00:25:01,210
இல்லை, கிரிஸ். நிச்சயமாக காயமடைந்துள்ளார்.
இல்லை, அவர் முற்றிலும் நன்றாக இருக்கிறார்.

498
00:25:01,293 --> 00:25:02,586
ஆம்!

499
00:25:02,669 --> 00:25:06,757
ஓய்! லாஸ்ஸோ ஸ்பெஷல்! லாஸ்ஸோ ஸ்பெஷல்!

500
00:25:06,840 --> 00:25:08,091
அடடா.

501
00:25:08,634 --> 00:25:09,718
லாஸ்ஸோ ஸ்பெஷல்!

502
00:25:09,801 --> 00:25:12,137
ரிச்மண்ட் என்ன செய்கிறார்கள் என்று
கவலைப்படாமல் நடுவரிடம்

503
00:25:12,221 --> 00:25:14,932
கத்துவதைப் பற்றி தான்...
மேன்செஸ்டர் சிட்டி அதிக கவலைப்படுகிறது.

504
00:25:15,015 --> 00:25:16,934
-அப்படியே இரு.
-உண்மையில், அவர்கள் என்ன செய்கிறார்கள்?

505
00:25:17,017 --> 00:25:18,977
நடுவரே! அவர்கள் அப்படி செய்ய கூடாது!
என்ன செய்கிறீர்கள்?

506
00:25:19,061 --> 00:25:21,396
நான் சொல்லக்கூட இல்லை, ஆனால்
அவர்கள் அதை செய்யப் போகிறார்கள்!

507
00:25:21,480 --> 00:25:24,149
இங்கு என்ன நடக்கிறது என்று
எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது...

508
00:25:24,233 --> 00:25:25,943
அமெரிக்க கால்பந்தா போன்றதா?

509
00:25:26,818 --> 00:25:28,737
இது என்ன கொடுமை?

510
00:25:29,488 --> 00:25:30,489
அவர் என்ன செய்கிறார்?

511
00:25:30,572 --> 00:25:32,574
இதுவரை, நான் இது போன்ற
எதையும் பார்த்ததில்லை.

512
00:25:33,242 --> 00:25:34,618
-செயல்படுங்கள்!
-வரிசையில் நில்லுங்க!

513
00:25:35,452 --> 00:25:37,454
ஒபிசான்யா செயல்பாட்டை தொடங்கிவிட்ட்டர்.

514
00:25:38,789 --> 00:25:41,667
ரிச்மண்ட், மேன்செஸ்டர் சிட்டியை
குழப்புவதற்கு முயற்சி செய்தால்,

515
00:25:41,750 --> 00:25:44,044
அது வேலை செய்கிறது என்று தான்
சொல்ல வேண்டும்.

516
00:25:44,127 --> 00:25:46,046
ஆர்லோ, இது எனக்கும் கூட புரியவில்லை.

517
00:25:46,129 --> 00:25:49,299
-ப்ளூ 48!
-சொஹோவ் எண்கள், வண்ணங்களை சொல்கிறாரா?

518
00:25:49,383 --> 00:25:50,843
ஹட், ஹட், ஹட்! ஹைக்!

519
00:25:50,926 --> 00:25:53,929
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு...

520
00:25:54,680 --> 00:25:58,016
ரிச்மண்ட் வீரர்கள் பிரிகிறார்கள்.
சிட்டியின் தற்காப்பு குழப்பத்திலிருக்கு.

521
00:25:58,100 --> 00:26:02,521
பந்து திறந்த வெளியில்
ஒபிசான்யாவிடம் நேரடியாக வருகிறது!

522
00:26:02,604 --> 00:26:04,231
இடதுபுறத்தில் ரோஹாஸ் மட்டும்
தனியாக இருக்கிறார்.

523
00:26:04,314 --> 00:26:05,649
-டானி தன் நிலையில் இருக்கிறான்.
-ஆமாம்.

524
00:26:12,155 --> 00:26:13,490
ரோஹாஸ்!

525
00:26:19,413 --> 00:26:20,539
-ஆம்!
-ஹே!

526
00:26:22,040 --> 00:26:24,585
கூடுதல் நேரத்தில் சமன் செய்த
டானி ரோஹாஸின் கோல்,

527
00:26:24,668 --> 00:26:27,504
பிரிமியர் லீக்கில் ரிச்மண்ட் நீடித்திருக்க
நிச்சயமாக போதுமானது!

528
00:26:29,590 --> 00:26:32,593
நாம் சமன் செய்துவிட்டோம்!
நாம் சமன் செய்துவிட்டோம்!

529
00:26:32,676 --> 00:26:35,137
-ஹே!
-நாம் தொடர்ந்து இருப்போம்!

530
00:26:44,021 --> 00:26:45,022
கோச்!

531
00:26:45,105 --> 00:26:48,150
கிக் ஆஃப்பில் இருந்து, சிட்டி மீண்டும்
தற்காப்பு ஆட்டத்தை தொடங்கிவிட்டது.

532
00:26:48,233 --> 00:26:51,403
மீண்டும் அவரே தான். டார்ட் வின்செஸ்டரிடம்
இருந்து பந்தை சுலபமாக தடுத்துவிட்டார்.

533
00:26:51,486 --> 00:26:53,197
அவரும் கோல்கீப்பரும்
மட்டும் தான் இருக்கிறார்கள்.

534
00:26:53,280 --> 00:26:54,198
இல்லை.

535
00:26:56,325 --> 00:26:58,577
அவர் அடுத்தவரிடம் பாஸ் செய்கிறார்...

536
00:26:58,660 --> 00:27:00,412
ஹென்ட்ரிக் அதை கோலாக்கிவிட்டார்ர்.

537
00:27:06,084 --> 00:27:08,253
மேன்செஸ்டர் சிட்டி வென்றுவிட்டது,

538
00:27:08,337 --> 00:27:12,633
அதனால் பிரிமியர் லீக்கில் ஏஎஃப்சி
ரிச்மண்டடின் காலம் முடிந்துவிட்டது.

539
00:27:34,238 --> 00:27:35,822
முழு நேரம் - ஏ.எஃப்.சி. ரிச்மண்ட் - 1
மேன்செஸ்டர் சிட்டி - 2

540
00:27:38,575 --> 00:27:40,619
நாங்கள் முடிந்த அளவுக்கு,
முயற்சி செய்தோம்,

541
00:27:40,702 --> 00:27:44,081
ஆனால் அது... அது ஒரு கடுமையான தோல்வி.
இதுவொரு கடுமையான தோல்வி.

542
00:27:45,374 --> 00:27:46,625
முடிந்துவிட்டது.

543
00:27:46,708 --> 00:27:50,546
வெற்றி பெற்ற மேன்செஸ்டர் சிட்டியையும்,
அவர்களின் கோச் பெப்பையும் வாழ்த்துகிறேன்.

544
00:27:50,629 --> 00:27:53,340
கடவுளே, இன்றிரவு அவர் அழகாக தெரிகிறார்.
ஆம், என் வீரர்...

545
00:27:58,011 --> 00:28:00,097
மிராக்கிள் போட் 5000

546
00:28:10,482 --> 00:28:13,527
நீயெல்லாம்! என் மகன் பந்தை பாஸ் செய்வதைப்
பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் பயணித்து

547
00:28:13,610 --> 00:28:15,612
லண்டனுக்கு வந்தேன் என்று நினைக்கிறாயா?

548
00:28:17,322 --> 00:28:20,576
வெற்றி கோலை நீயே அடித்திருக்கலாம்.
உன்னால் அது முடிந்திருக்கும். கருமம்!

549
00:28:31,211 --> 00:28:32,379
எனவே, பாருங்கள், நான்...

550
00:28:33,422 --> 00:28:35,799
வேண்டாம். நன்றி. சரி.

551
00:28:41,096 --> 00:28:43,682
ஹேய். நீங்கள் அனைவரும் மிகவும்
சிறப்பாக விளையாடினீர்கள்.

552
00:28:43,765 --> 00:28:47,352
நாம் வெற்றி பெற முடியலை என்றாலும், நீங்கள்
நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

553
00:28:47,436 --> 00:28:50,355
அதாவது, சாம்பியன்களுக்கு 90 நிமிடங்கள்
கஷ்டம் கொடுத்தீர்கள்.

554
00:28:51,064 --> 00:28:52,149
சொஹோவ், எப்படி இருக்க?

555
00:28:52,232 --> 00:28:54,776
அவன் அதிகமான கோல்களைத் தடுத்தான்.

556
00:28:54,860 --> 00:28:56,904
சொஹோவிற்கு கைத்தட்டுங்கள். ஆம்.

557
00:28:58,280 --> 00:29:02,451
சரி. ராய் மட்டும் என்ன?
ராய் தன் பேரனையே துரத்தி வீழ்த்திவிட்டான்.

558
00:29:03,493 --> 00:29:05,454
சுலபமான கோல் போடுவதிலிருந்து
அவனைத் தடுத்தான்.

559
00:29:08,665 --> 00:29:12,127
இப்போது, பாருங்கள், நம் அனைவருக்கும்,
இதுவொரு சோகமான தருணம்.

560
00:29:12,211 --> 00:29:14,087
இப்போது உங்கள் முன்னால் நின்றுகொண்டு,

561
00:29:14,171 --> 00:29:16,965
அந்த சோகத்தை நீக்கும் அளவு
என்னால் எதையும் சொல்ல முடியாது.

562
00:29:17,049 --> 00:29:18,884
தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?

563
00:29:20,385 --> 00:29:22,679
உங்க தலையை நிமிர்த்தி
இந்த லாக்கர் அறை சுற்றிப் பாருங்கள்.

564
00:29:23,138 --> 00:29:24,181
சரியா?

565
00:29:26,266 --> 00:29:27,768
இங்கிருக்கும் மற்றவர்களையும் பாருங்க.

566
00:29:29,603 --> 00:29:31,313
இந்த சோகமான தருணத்தை, கடந்து வர,
உங்களோடு

567
00:29:31,396 --> 00:29:36,276
இங்குள்ள மற்றவர்களும் இருக்கிறார்கள்
என்பதற்காக நீங்கள் நன்றியுடன் இருக்கணும்.

568
00:29:37,569 --> 00:29:40,239
ஏனெனில் நான் நிச்சயமாக சொல்கிறேன்,

569
00:29:40,322 --> 00:29:42,783
சோகமாக இருப்பதைவிட
மோசமான விஷயம் ஒன்று இருக்கிறது,

570
00:29:42,866 --> 00:29:45,202
அது தனிமையில் சோகமாக இருப்பது.

571
00:29:47,621 --> 00:29:49,540
இந்த அறையில் உள்ள யாரும் தனியாக இல்லை.

572
00:29:52,918 --> 00:29:56,839
சாம், எந்த விலங்கிற்கு ஞாபக சக்தி குறைவு
என்று நினைவிருக்கா?

573
00:29:57,464 --> 00:29:58,590
கோல்ட்ஃபிஷிற்கு.

574
00:29:58,674 --> 00:30:00,676
சரிதான். அது கோல்ட்ஃபிஷ் தான்.

575
00:30:00,759 --> 00:30:03,220
சாம், இந்த சூழ்நிலையைப் பற்றிய
சோகமோ அல்லது கோபமோ

576
00:30:03,303 --> 00:30:07,641
நமக்கு குறைந்தவுடன் நாம் அனைவரும்
என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?

577
00:30:08,809 --> 00:30:10,519
அனைவரும் கோல்ட்ஃபிஷ் போல இருக்க வேண்டும்.

578
00:30:10,602 --> 00:30:11,603
ஒப்புக் கொள்கிறேன்.

579
00:30:12,312 --> 00:30:14,815
இப்போது அனைவரும் ஒன்றாக சேருவோம்,
சோகமாக இருப்போம்.

580
00:30:14,898 --> 00:30:16,984
அதன் பிறகு நாம் கோல்ட்ஃபிஷ் போல இருப்போம்.

581
00:30:19,862 --> 00:30:21,405
அப்போதிலிருந்து, முன்னோக்கி.

582
00:30:25,993 --> 00:30:29,705
மேன்செஸ்டர்
சிட்டி

583
00:30:33,417 --> 00:30:34,418
உங்களுக்கு என்ன வேண்டும்?

584
00:30:39,882 --> 00:30:40,883
இரவு வணக்கம், ஜேமி.

585
00:30:43,177 --> 00:30:44,261
காதல் கடிதமா?

586
00:30:58,609 --> 00:31:01,695
அந்த எக்ஸ்ட்ரா பாஸ் செய்தது
சிறப்பாக இருந்தது. டெட்.

587
00:31:16,418 --> 00:31:18,420
நாம் அதைப் பற்றி பேசுவோம்.

588
00:31:19,129 --> 00:31:20,130
இருவருக்கும், ஹேய்.

589
00:31:20,214 --> 00:31:22,382
-நீங்கள் இருவரும் பேசுங்கள்.
-நன்றி, லெஸ்லி.

590
00:31:24,092 --> 00:31:26,178
லெஸ்லி? அது உங்கள் முதல் பெயரா?

591
00:31:26,261 --> 00:31:29,848
அது என்னுடைய அம்மாவின் பெயர்.
நான் அம்மாவின் பெயரை இணைத்துள்ளேன்.

592
00:31:30,349 --> 00:31:31,517
நல்லது.

593
00:31:36,480 --> 00:31:37,648
தயவுசெய்து. உட்காருங்கள்.

594
00:31:42,945 --> 00:31:43,946
டீ வேண்டுமா?

595
00:31:44,029 --> 00:31:46,865
வேண்டாம்.
டீக்கும் எனக்கும் மிகவும் தூரம், ஆம்.

596
00:31:46,949 --> 00:31:48,784
மாறாக, கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறேன்.

597
00:31:48,867 --> 00:31:52,162
சரி, டெட்.
நிச்சயமாக அது இதயத்தை நொறுக்கும் முடிவு.

598
00:31:52,246 --> 00:31:53,872
ஆமாம், மேடம்.
நானும் அதைப் பற்றி யோசிக்கின்றேன்.

599
00:31:53,956 --> 00:31:57,251
நீங்கள் என்னை நீக்குவது ரொம்ப நியாயமற்றது
என்று நான் நினைக்கிறேன், எனவே...

600
00:31:57,334 --> 00:32:00,671
உங்களுக்கு பிரச்சினை கொடுக்காமல்
நானே வெளியேற விரும்புகிறேன்.

601
00:32:02,214 --> 00:32:05,133
இதோ என்னுடைய ராஜினாமா கடிதம்.

602
00:32:06,552 --> 00:32:08,220
மெனுவிற்கு பின்னால் எழுதியிருக்கிறேன்,

603
00:32:08,303 --> 00:32:11,223
ஆனால் கையெழுத்திட்டு உறைக்குள் வைத்து
இருக்கிறேன், எனவே, இது அதிகாரப்பூர்வமானது.

604
00:32:11,306 --> 00:32:13,433
நான் சொல்வதை கேளுங்கள், கோச் லாஸ்ஸோ.

605
00:32:13,517 --> 00:32:19,439
நீங்கள் எங்கும் போகப் போவதில்லை,
நாம் அடுத்த சீசனுக்காக வேலை செய்யணும்.

606
00:32:23,861 --> 00:32:25,821
நல்லது, அப்படியென்றால், சரி.

607
00:32:26,530 --> 00:32:28,782
சரி. பொறுங்கள்.
இதை எனக்கு சொல்லுங்கள்.

608
00:32:28,866 --> 00:32:32,077
வெளியேற்றப்பட்ட அணிகள்,
மீண்டும் பங்கு பெற முடியும், அப்படிதானே?

609
00:32:32,160 --> 00:32:33,579
அவர்கள் அடுத்த நிலைக்கு செல்வார்கள்.

610
00:32:33,662 --> 00:32:35,747
அப்படியென்றால், அடுத்த ஆண்டு
நாம் அடுத்த நிலைக்கு முன்னேறுவோம்,

611
00:32:35,831 --> 00:32:37,916
அது அனைவரின் வேலைக்கும் நல்லது தான்.

612
00:32:38,000 --> 00:32:39,585
பிறகு மீண்டும் லீக்கில் பங்கு பெறுவோம்...

613
00:32:40,627 --> 00:32:43,255
நாம் செய்வோம் என்று யாரும் நம்பாத
ஒன்றை நாம் அப்போது செய்வோம்.

614
00:32:44,965 --> 00:32:46,300
மொத்த ஆட்டத்தையும் வெல்வோம்.

615
00:32:48,760 --> 00:32:49,761
அப்படிதான்.

616
00:32:53,891 --> 00:32:55,058
நுரைகள்.

617
00:32:55,142 --> 00:32:57,227
மன்னிச்சிடுங்க.
உங்கள் மீது தெறித்துவிட்டதா?

618
00:33:31,011 --> 00:33:33,013
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

