1
00:00:09,801 --> 00:00:12,804
டான் பிரவுன்
தி டாவின்சி கோட்

2
00:00:22,523 --> 00:00:24,858
-ஹே, அன்பே.
-ஹாய், அன்பே.

3
00:00:32,241 --> 00:00:33,450
காலை வணக்கம்.

4
00:00:33,534 --> 00:00:34,535
காலை வணக்கம்.

5
00:00:40,249 --> 00:00:41,291
ஹே.

6
00:00:41,375 --> 00:00:42,376
ஹே.

7
00:00:53,178 --> 00:00:54,388
-பை.
-பை.

8
00:00:59,226 --> 00:01:00,227
#சிஓஓய்ஜிஎச்

9
00:01:00,310 --> 00:01:03,397
ஓய்! நீ உன் அறைக்கு போகவில்லையா?

10
00:01:04,772 --> 00:01:09,278
இல்லை. முதலில் நான் கஃபே சென்று
ஒரு கப் தேனீர் வாங்கப் போகிறேன்.

11
00:01:09,361 --> 00:01:10,529
சரி.

12
00:01:11,738 --> 00:01:12,906
நானும் வரவா?

13
00:01:13,574 --> 00:01:15,033
நிச்சயமாக.

14
00:01:15,117 --> 00:01:16,118
அருமை.

15
00:01:32,676 --> 00:01:34,261
நேட் த கிரேட்
ரிச்மண்டின் மானத்தைக் காப்பாற்றினார்

16
00:01:34,344 --> 00:01:35,888
ஆமாம், நேட், ஆமாம் நண்பா! -
அதிசய குழந்தை

17
00:01:35,971 --> 00:01:36,972
நேட்டால் இதை செய்ய முடியும்!

18
00:01:37,055 --> 00:01:39,266
என் பார்வையில் உதவி கோச் தான் இந்த
மேட்சின் சிறப்பு மனிதனாகத் தோன்றினார்

19
00:01:39,933 --> 00:01:41,435
அது சரிதான்.

20
00:01:41,518 --> 00:01:45,647
ஒரே வாரத்தில் திரும்ப பெற போகும் பயனில்லாத
இன்னொரு திட்டத்தை உருவாக்குங்கள். முட்டாள்கள்.

21
00:01:45,731 --> 00:01:47,733
மறுபடியும் செய்தியாளர்களோடு
பேசுகிறீர்களா, அன்பே?

22
00:01:48,317 --> 00:01:49,943
அவை பதிலளித்தால் என்னிடம் சொல்லுங்கள்.

23
00:01:51,528 --> 00:01:53,322
ஹலோ. ஹே, அம்மா.

24
00:01:53,405 --> 00:01:55,324
-ஹாய், செல்லமே.
-இதோ. இதை உங்களுக்காக வாங்கினேன்.

25
00:01:55,824 --> 00:01:57,451
நன்றி. என்ன விசேஷம்?

26
00:01:57,534 --> 00:01:59,745
ஒன்றுமில்லை. இது ஒரு சாதாரணமான நாள் தான்.

27
00:02:01,872 --> 00:02:02,873
ஹேய்.

28
00:02:04,333 --> 00:02:05,334
இதைப் பாருங்களேன்.

29
00:02:07,753 --> 00:02:09,003
இது சிறப்பானது.

30
00:02:14,510 --> 00:02:15,511
ஹே, அப்பா.

31
00:02:15,594 --> 00:02:16,845
நேத்தன்.

32
00:02:21,016 --> 00:02:23,810
'அதிசய குழந்தை' அதில் வெற்றி பெற்றார்.

33
00:02:25,270 --> 00:02:26,438
அதை பார்த்தீர்களா.

34
00:02:27,648 --> 00:02:30,526
இப்போதெல்லாம் யாரைப்பற்றி வேண்டுமானாலும்
செய்தித்தாளில் போடுகிறார்கள், இல்லையா?

35
00:02:32,778 --> 00:02:35,572
பணிவு என்பது நம்மைக் குறையாக நினைக்காமல்

36
00:02:35,656 --> 00:02:37,783
நம்மைப் பற்றி குறைவாக நினைப்பது
என்று சொல்கிறார்கள்.

37
00:02:39,243 --> 00:02:41,870
என்னுடைய அழகிய அதிசய மகன்.

38
00:02:42,871 --> 00:02:44,873
சரி, ஆனால் மன்னிக்கவும், அம்மா,
அது அதிசய குழந்தை.

39
00:02:44,957 --> 00:02:49,086
நான் உண்மையில், இளம் சாதனையாளர்
என்று சொல்ல வந்தேன்.

40
00:02:49,169 --> 00:02:52,214
ஆனால் நான்... இல்லை...

41
00:03:24,037 --> 00:03:26,498
-ஹே, டாக்.
-ஹாய், டெட். உள்ளே வாருங்கள்.

42
00:03:26,582 --> 00:03:29,209
சரி. அன்றிரவு நடந்த பிரச்சினையில்

43
00:03:29,293 --> 00:03:31,962
எனக்கு உதவியதற்காக உங்களுக்கு
நன்றி சொல்ல நினைக்கிறேன்.

44
00:03:32,045 --> 00:03:35,591
நான் நலமாக இருக்கிறேன், எனக்கு இது தேவையா
என்று உண்மையிலேயே தெரியவில்லை.

45
00:03:35,674 --> 00:03:37,176
சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

46
00:03:38,010 --> 00:03:39,011
சரி.

47
00:03:40,345 --> 00:03:42,848
நன்றி. நான் உட்காருகிறேன்.
நான் இங்கே உட்காருகிறேன்.

48
00:03:44,308 --> 00:03:45,517
இதில் சத்தம் வருகிறது.

49
00:03:46,268 --> 00:03:49,104
ஆமாம். ஒன்று சொல்லவா?
ஹே, நான் அந்த சோஃபாவில் உட்காருகிறேன்.

50
00:03:49,188 --> 00:03:50,564
இப்படித்தான். இது எப்படி இருக்கிறது?

51
00:03:51,648 --> 00:03:53,192
ஹே, நான் யார்?

52
00:03:54,234 --> 00:03:55,235
டான் டிரேப்பர், இல்லையா?

53
00:03:56,612 --> 00:04:00,324
ஆம். இது சற்று முறையாக இல்லையா? என்
காலணிகளை அங்கே வைக்க எனக்கு பிடிக்கவில்லை.

54
00:04:00,407 --> 00:04:03,202
என்ன தெரியுமா? நான் படுத்துக்கொள்கிறேன்,
சரியா? இதோ இப்படி.

55
00:04:03,285 --> 00:04:07,456
என்னுடைய கால்களை இப்படி வைத்துக்கொள்கிறேன்.
இதோ இப்படி, சரியா?

56
00:04:07,539 --> 00:04:10,584
வெளியிடத்தில் மேல் பங்கில்
தங்குபவர்களை போல...

57
00:04:10,667 --> 00:04:12,669
என் கைகளை எங்கே வைப்பது என
தெரியவில்லை. அது...

58
00:04:12,753 --> 00:04:15,506
இங்கே. இதோ. நாம் இப்படி செய்யலாம்.

59
00:04:15,589 --> 00:04:19,801
'நியூ யார்க்கர் கார்டூன்'-களில் இருப்பது
போல, நாம் இப்படி செய்யலாம்.

60
00:04:19,885 --> 00:04:21,512
சரியா? என்ன தெரியுமா?

61
00:04:21,595 --> 00:04:24,598
என்னுடைய முதுகு தண்டிற்கு வசதியாக
இதை இங்கே வைத்து கொள்கிறேன்.

62
00:04:24,681 --> 00:04:26,850
பிறகு... ஆம், இது நன்றாக இருக்கிறது. சரி.

63
00:04:26,934 --> 00:04:29,811
இப்போது, நான் என்ன செய்ய வேண்டும்?
நான் இப்படி... இல்லை, அது...

64
00:04:31,605 --> 00:04:34,816
நான் ஒரு தண்ணீர் சறுக்கு மரத்தில் போவது
போல இருக்கு. ஒரு லூஜ் போல.

65
00:04:35,734 --> 00:04:38,737
இதோ. இது சிறிது
"விசித்திரமாக", இல்லையா? சரி.

66
00:04:38,820 --> 00:04:40,697
இது எப்படி... இதோ, இப்படி செய்யலாம்.

67
00:04:41,281 --> 00:04:43,075
சரி, இது எப்படி இருக்கிறது? நன்றாக இருக்கிறதா?

68
00:04:43,867 --> 00:04:45,619
உட்கார்ந்து கொள்வது நன்றாக இருக்கும்
என தோன்றுகிறது.

69
00:04:46,411 --> 00:04:49,206
சரி. நல்லது. சரி.

70
00:04:50,040 --> 00:04:51,041
சரி.

71
00:04:52,918 --> 00:04:56,171
சரி, தொடங்கலாம். இதோ.

72
00:04:57,339 --> 00:05:00,300
இங்கே மிகவும் நெருக்கமாக இருக்கிறது, தெரியுமா?
மிகவும் நெருக்கமாக.

73
00:05:00,384 --> 00:05:03,053
அதிகபட்ச வன்முறை இல்லாத
'த சொப்ரானோஸ்' என்ற நிகழ்ச்சியில்

74
00:05:03,136 --> 00:05:06,139
நாம் இருப்பது போல தோன்றுவது,
மிகவும் நல்ல விஷயம் தான்.

75
00:05:06,223 --> 00:05:09,142
ஆனால் ஸ்பகேட்டி மற்றும் க்ளாம்கள் குறைவாக
இருப்பதால், இது மோசமான விஷயம்.

76
00:05:09,226 --> 00:05:10,227
எனவே...

77
00:05:10,853 --> 00:05:14,064
ஹே, இந்த நபர் யார்? இவனுடைய கதை என்ன?

78
00:05:14,147 --> 00:05:16,984
நீ நலமா, நண்பா? நலமா? சரி, நல்லது.

79
00:05:19,152 --> 00:05:22,155
ரொம்பவும் அருமையான பையன், தெரியுமா?
அவன் தன் வேலையை பார்க்கிறான்.

80
00:05:22,239 --> 00:05:25,075
-அங்கே டிஷ்யூ இருக்கிறதா என்ன?
-ஆமாம், டிஷ்யூக்கள்.

81
00:05:25,158 --> 00:05:26,785
சரி. அவற்றை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?

82
00:05:26,869 --> 00:05:29,371
இங்கே சில சமயங்களில்
மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள்.

83
00:05:30,873 --> 00:05:33,625
-எப்போதும் இல்லை, ஆனால் சில சமயங்களில்.
-சரி, சரிதான்.

84
00:05:33,709 --> 00:05:35,294
சில சமயங்களில் மக்கள் தும்முவார்கள்.

85
00:05:35,377 --> 00:05:37,754
ஆம், அப்படி செய்வார்கள். நீங்கள் சொல்வதை
நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

86
00:05:39,464 --> 00:05:42,384
சரி, எனக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது.

87
00:05:42,467 --> 00:05:45,512
யூகேவில் குறைந்த அளவு
மகரந்தம் இருப்பதால், எனக்கு...

88
00:05:48,348 --> 00:05:51,935
சரி, நாம் எப்போது தொடங்கலாம்?

89
00:05:52,686 --> 00:05:53,770
நாம் ஏற்கனவே தொடங்கிவிட்டோம்.

90
00:05:54,855 --> 00:05:58,442
-நீங்கள் உள்ளே நுழைந்த போதே தொடங்கிவிட்டோம்.
-என்ன? கடவுளே!

91
00:05:58,525 --> 00:06:01,528
சரி, மன்னியுங்கள். என் நடவடிக்கைகளையும்
மற்ற நடத்தைகளையும் பார்க்கச் செய்ததில்,

92
00:06:01,612 --> 00:06:05,282
ஏற்கனவே நிறைய நேரத்தை வீணடித்துவிட்டேன் போல.

93
00:06:05,365 --> 00:06:06,909
-இது...
-டெட்.

94
00:06:06,992 --> 00:06:07,993
என்ன?

95
00:06:08,702 --> 00:06:10,078
கவலைப்படாதீர்கள்.

96
00:06:12,581 --> 00:06:14,583
சரி. இல்லை, கண்டிப்பாக. நான் கவலைப்படவே இல்லை.

97
00:06:14,666 --> 00:06:15,667
சரி.

98
00:06:18,170 --> 00:06:19,171
சரி.

99
00:06:36,230 --> 00:06:38,232
என்ன... அதாவது,
நீங்கள் எதைப்பற்றி பேச விரும்புகிறீர்கள்?

100
00:06:39,274 --> 00:06:42,152
அன்று இரவு என்ன நடந்தது என்று
என்னிடம் சொல்ல முடியுமா?

101
00:06:42,236 --> 00:06:43,654
சரி. எனக்கு இதை தொடர விருப்பமில்லை.

102
00:06:59,837 --> 00:07:02,840
சரி, வாருங்கள்! இங்கே வாருங்கள்.

103
00:07:02,923 --> 00:07:03,924
சரி, நண்பர்களே.

104
00:07:04,007 --> 00:07:07,553
கேளுங்கள், மற்ற அணிக்கு எப்போதும் தெரியப்படுத்த
கூடாத இரண்டு விஷயங்கள் உள்ளன, சரியா?

105
00:07:07,636 --> 00:07:09,763
முதலாவது உங்கள் வீட்டு முகவரி.
என் வார்த்தைகளைக் குறித்து கொள்ளுங்கள்.

106
00:07:09,847 --> 00:07:13,475
உணவு விநியோகர்களும், ஸ்வாட் அணியினரும்
உங்கள் வீட்டிற்கு 24 மணி நேரமும் வந்து செல்வர்,

107
00:07:13,559 --> 00:07:15,102
அது விநோதமாக இருக்கும்,
ஏனென்றால் எங்களது காலத்தில்,

108
00:07:15,185 --> 00:07:17,312
நாங்கள் தேவையற்ற தொலைபேசி
அழைப்புகளுக்கு கவலைப்பட வேண்டியிருந்தது.

109
00:07:17,396 --> 00:07:21,233
பின்பு, காலர் ஐடியின் வந்ததும், ப்ராங்க்
மெனுவிலிருந்து அந்த சந்தோஷம் நீக்கப்பட்டது,

110
00:07:21,316 --> 00:07:24,444
இது அவமானத்திற்குரியது, ஏனென்றால்
ஜெர்கி பாய்ஸ் தேசிய சொத்தாக விளங்கினர்.

111
00:07:24,528 --> 00:07:26,238
அனைவரும் கூகுளில் அவர்களை பற்றி
தெரிந்துக்கொள்ள வேண்டும்.

112
00:07:27,030 --> 00:07:28,031
நான் விஷயத்திற்கு வருகிறேன்.

113
00:07:28,115 --> 00:07:31,451
உங்கள் எதிராளிகளுக்குத் தெரியப்படுத்தக் கூடாத
இரண்டாவது விஷயம், நீங்கள் சோர்வாக இருப்பது.

114
00:07:31,535 --> 00:07:34,079
சரி, பாருங்கள், அனைவரும் சோர்ந்து விட்டீர்கள்
என எனக்குப் புரிகிறது.

115
00:07:34,162 --> 00:07:35,789
ஆனால் அதை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.

116
00:07:35,873 --> 00:07:38,750
அனைவரும் சோர்வான முகத்துடன் நடப்பதை
பார்க்க நான் விரும்பவில்லை...

117
00:07:42,629 --> 00:07:45,841
சரியா? வெறுமனே மூச்சு வாங்கிக்கொண்டு
ஆடுகளத்தில் சுற்றித் திரிவதை. ஓ-ஹோ. நன்றி.

118
00:07:45,924 --> 00:07:47,676
இவர்களிடம் நான் பார்க்க வேண்டிய
ஒரே முகம் என்ன, கோச்?

119
00:07:47,759 --> 00:07:50,596
-போட்டிக்கான முகம், அன்பே!
-சரியாக சொன்னீர்கள், வ்லாடிமிர் புடின்.

120
00:07:50,679 --> 00:07:52,806
-நான் சொல்வதுப் புரிகிறதா?
-ஆம், கோச்!

121
00:07:52,890 --> 00:07:54,683
சரி, நல்லது. இப்போது நிமிர்ந்து நில்லுங்கள்.

122
00:07:54,766 --> 00:07:58,395
சரி. தாக்கும் வீரர்கள்,
கோச் நேட் மற்றும் பியர்டிடம் பயிற்சி பெறுங்கள்.

123
00:07:58,478 --> 00:08:00,397
தற்காப்பு வீரர்கள், என்னுடனும்,
ராயுடனும் வாருங்கள். சீக்கிரம்.

124
00:08:00,480 --> 00:08:01,690
சீக்கிரம்!

125
00:08:04,234 --> 00:08:06,737
சரி. சரி.

126
00:08:06,820 --> 00:08:09,573
கோச் நேட், எங்களுக்கு பயிற்சித் தரும்
அளவிற்கு, நீங்கள் இன்னும் வளரவில்லை.

127
00:08:09,656 --> 00:08:11,325
நன்றி, டானி.

128
00:08:11,408 --> 00:08:13,785
அந்த ட்ரில் பயிற்சியை சிறப்பாக இருக்கும்.
அதில் உங்களுக்கு நற்பெயர் உள்ளது.

129
00:08:13,869 --> 00:08:16,371
சரி, மிகவும் வேடிக்கையானது. நன்றி, ஜேமி.

130
00:08:16,455 --> 00:08:19,249
நாம் அதிர்ஷ்டசாலிகள். அதிசய குழந்தையிடம்
பயிற்சி பெறப் போகிறோம்.

131
00:08:20,209 --> 00:08:21,210
பெரிய மனிதா.

132
00:08:21,293 --> 00:08:24,671
ரொம்ப வேடிக்கையாக இருந்தது, காலின்.
நீ இப்போது ஒரு நகைச்சுவையாளரா என்ன?

133
00:08:24,755 --> 00:08:27,799
இது முரணாக உள்ளது, ஏனென்றால் சென்ற போட்டியில்
உன்னை ஆட்டத்திலிருந்து வெளியேற்றினேன்.

134
00:08:29,801 --> 00:08:33,013
நம் அணியில் சிறப்பாக கோல் அடிப்பவர்கள் அனைவரும்
இப்போதே ஆடுகளத்திற்கு வந்தாக வேண்டும்.

135
00:08:34,181 --> 00:08:37,267
காலின், காலின்.
நீ இதில் பங்கேற்க வேண்டாம், சரியா?

136
00:08:41,938 --> 00:08:44,274
நான் வலிமையான, திறமைமிக்க ஆண்.

137
00:08:44,358 --> 00:08:46,443
நான் வலிமையான, திறமைமிக்க ஆண்.

138
00:08:48,028 --> 00:08:49,655
இது என் மந்திரம்.

139
00:08:50,739 --> 00:08:51,907
நல்லது.

140
00:08:54,201 --> 00:08:57,204
மேற்கு லண்டனில் சிறந்தது

141
00:08:59,331 --> 00:09:01,708
பாண்டர் - நாம் சந்தித்தாக வேண்டும் போல...

142
00:09:02,584 --> 00:09:04,378
சகோ, இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
இன்னும் தகவல் வரவில்லையா?

143
00:09:04,461 --> 00:09:06,296
-இல்லை.
-ஐயோ, கடவுளே.

144
00:09:06,380 --> 00:09:08,924
சில நேரங்களில் மூன்று புள்ளிகள் தோன்றி,
பிறகு மறைந்து போய்விடுகிறது.

145
00:09:09,591 --> 00:09:11,051
முடிந்துவிட்டது, நண்பா. நான் சொதப்பிவிட்டேன்.

146
00:09:11,134 --> 00:09:14,137
எதிர்மறையாக யோசிக்காதே, நண்பா. அவள்
பதிலளிக்காததற்கு ஏதேனும் காரணம் இருக்கும்.

147
00:09:14,221 --> 00:09:15,889
ஒருவேளை அவள் மீது பேருந்து மோதியிருக்குமோ?

148
00:09:16,682 --> 00:09:18,267
அல்லது ரயில் மோதியிருக்குமோ?

149
00:09:18,350 --> 00:09:20,894
அவள் உறவில் ஆர்வத்தை இழந்திருக்கக் கூடும்.

150
00:09:20,978 --> 00:09:23,605
இந்த குறுஞ்செய்திகள் எல்லாம் எவ்வளவு
அர்த்தமற்றவை என திருப்பிப் பார்த்திருக்கலாம்.

151
00:09:24,231 --> 00:09:25,899
"எனக்கு பிடித்த திரைப்படம் ராட்டோடுயெல்."

152
00:09:25,983 --> 00:09:27,609
ஹே, கேளுங்கள். சரி.

153
00:09:27,693 --> 00:09:29,862
இது ஒரு பெரிய விஷயமே இல்லை.
நான் கவலைப்பட போவதில்லை...

154
00:09:30,571 --> 00:09:31,613
மூன்று புள்ளிகள். மூன்று புள்ளிகள்.

155
00:09:36,660 --> 00:09:37,953
மிகுந்த ஏமாற்றம்.

156
00:09:38,036 --> 00:09:39,204
அடுத்த முறை, நண்பா.

157
00:09:39,288 --> 00:09:41,331
இன்றிரவு பரவாயில்லையா?

158
00:09:44,793 --> 00:09:47,212
அடக் கடவுளே. அவனுக்கு பதில் அளியுங்கள்.
இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.

159
00:09:47,296 --> 00:09:49,214
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

160
00:09:49,298 --> 00:09:50,299
உண்மையைச் சொன்னால் என்ன?

161
00:09:51,550 --> 00:09:52,551
"நான் சந்திக்க விரும்புகிறேன்,

162
00:09:52,634 --> 00:09:56,597
ஆனால் நான் கற்பனை செய்துள்ள வகையில் உன்னால்
நடந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

163
00:09:56,680 --> 00:09:58,682
எனவே என் பயத்தை எல்லாம்

164
00:09:58,765 --> 00:10:02,186
உண்மையான காதலை கண்டுப்பிடிப்பதற்கு
நான் பயன்படுத்தப் போகிறேன்."

165
00:10:03,520 --> 00:10:07,191
அவனுக்குப் பிடித்தப் படம் ராட்டோடுயெல்.
அது வருத்தம் அளிக்கிறது, அல்லவா?

166
00:10:07,274 --> 00:10:08,859
அவனை சந்தியுங்கள்.

167
00:10:08,942 --> 00:10:11,320
அவனுக்குப் பிடித்தப் படத்தைப் பற்றி
யார் கவலைப்படப் போவது?

168
00:10:11,403 --> 00:10:14,031
மேலும், ராட்டோடுயெல்
ஒரு தலைசிறந்த படைப்பு.

169
00:10:14,114 --> 00:10:17,534
முரண்பாடாக, அது கர்வம் மற்றும் சிறந்த கலை
எங்கிருந்தும் வரலாம் என்பதை பற்றியது.

170
00:10:17,618 --> 00:10:19,703
கலக்கம் அடையாமல்,
உங்கள் கார்ட்டூன் எலியை போய் பாருங்கள்.

171
00:10:19,786 --> 00:10:22,623
சரி. ஒருவேளை, நாங்கள் இருவரும் சந்தித்து
அதன்பிறகு எல்லாம் தவறாக முடிந்தால்? ம்?

172
00:10:24,374 --> 00:10:28,045
அதாவது, அனைத்துமே தவறாக தான் முடிகின்றன.
எல்லா உறவுகளும் அச்சம் தருபவை தான்.

173
00:10:28,128 --> 00:10:32,132
என் உறவு எனக்கு உயிர் தரும் சுவாசம் போன்றது.

174
00:10:32,216 --> 00:10:35,844
மிகவும் சிறந்ததாக விளங்கும்
லெஸ்லியின் திருமணத்தைத் தவிர.

175
00:10:37,012 --> 00:10:40,849
எல்லா வகையிலும் எரிச்சலூட்டும் அளவிற்கு
நீயும், ராயும், பொருத்தம் உடையவர்கள்.

176
00:10:41,934 --> 00:10:42,935
நன்றி.

177
00:10:45,020 --> 00:10:46,104
எனக்குத் தெரியவில்லை.

178
00:10:47,105 --> 00:10:49,399
நாங்கள் ஒன்றாக வேலை செய்யாதபோது
அது சுலபமாக இருந்தது.

179
00:10:50,108 --> 00:10:52,778
நாங்கள் எப்போதும் ஒன்றாக
இருப்பது போல உணர்கிறேன்.

180
00:10:52,861 --> 00:10:55,822
நான் எங்கு சென்றாலும், என் நிழலாய் இருக்கிறான்.
எனக்குப் பிடித்த என்னோடே இருக்கும் என் நிழல்.

181
00:11:00,744 --> 00:11:03,288
என்ன நடக்கிறது?
ஏன் ஜாஸ் பாடலை முணுமுணுக்கிறீர்கள்?

182
00:11:05,541 --> 00:11:06,750
என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்களா?

183
00:11:06,834 --> 00:11:08,752
-ஆம், உன்னை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்.
-இல்லை.

184
00:11:16,593 --> 00:11:19,304
-அதனால் என்ன. நீ புறப்படத் தயாரா?
-ஆம்.

185
00:11:20,764 --> 00:11:22,307
அவனுக்கு பதில் சொல்லுங்கள்.

186
00:11:23,225 --> 00:11:25,310
-பை.
-பை.

187
00:11:29,022 --> 00:11:30,691
இரண்டு, மூன்று, நான்கு.

188
00:11:41,660 --> 00:11:43,912
-ஹலோ.
-ஹலோ.

189
00:11:43,996 --> 00:11:46,331
-நீ முடிக்கப் போகிறாயா?
-ஐயோ, இல்லை.

190
00:11:46,415 --> 00:11:48,750
செய்ய வேண்டிய வேலைகள்
என் கையைப் போன்று நீளமாக உள்ளது.

191
00:11:48,834 --> 00:11:51,295
என்ன? இந்த கையா?

192
00:11:55,215 --> 00:11:56,758
இருக்கலாம்.

193
00:11:57,843 --> 00:11:59,219
ஓய், இது எனக்கு உதவியாக இல்லை.

194
00:12:00,137 --> 00:12:02,306
சரி. உன் கையை உன்னிடமே திரும்பத் தருகிறேன்.

195
00:12:02,389 --> 00:12:03,515
நன்றி.

196
00:12:03,599 --> 00:12:05,601
உன் கழுத்தை எடுத்துக் கொள்கிறேன்.

197
00:12:12,649 --> 00:12:15,485
உண்மையில், எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

198
00:12:15,569 --> 00:12:17,863
எனவே நீ இங்கு இருக்க வேண்டுமெனில்,
அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து

199
00:12:17,946 --> 00:12:19,281
உன் புத்தகத்தை படிக்க வேண்டும், சரியா?

200
00:12:22,576 --> 00:12:23,952
நன்றி.

201
00:12:44,598 --> 00:12:46,099
இதுவும் எனக்கு உதவியாக இல்லை.

202
00:12:46,183 --> 00:12:50,020
என்ன? நீ சொன்னதை தான் நான் செய்கிறேன்.
அமைதியாக அமர்ந்து புத்தகம் படிக்கிறேன்.

203
00:12:50,103 --> 00:12:54,316
நான் செய்ய சொன்னதை நீ அப்படியே
செய்யும் விதம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

204
00:13:13,794 --> 00:13:16,046
-ஹலோ, டெட்.
-என்ன விஷயம், டாக்?

205
00:13:16,672 --> 00:13:18,215
நீங்கள் திரும்ப வந்தது
எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

206
00:13:18,298 --> 00:13:19,925
ஆம், நான் எதிலிருந்தும் பின்வாங்க மாட்டேன்.

207
00:13:29,476 --> 00:13:32,563
-எப்படி இருக்கிறீர்கள், டெட்?
-பரவாயில்லை, மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

208
00:13:32,646 --> 00:13:34,481
-நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், டாக்?
-நன்றாக இருக்கிறேன்.

209
00:13:34,565 --> 00:13:35,566
மகிழ்ச்சி.

210
00:13:37,067 --> 00:13:39,528
ஆக, நீங்கள் சிகிச்சை பெறுவது
இது தான் முதல் முறையா?

211
00:13:39,611 --> 00:13:43,240
இல்லை, மேடம். நானும் என் மனைவியும்
சில காலங்களுக்கு முன்பு ஆலோசனை பெற்றோம்.

212
00:13:44,449 --> 00:13:45,450
அது எப்படி இருந்தது?

213
00:13:45,534 --> 00:13:46,827
சரி, என்னெவென்று பார்ப்போம்.

214
00:13:47,411 --> 00:13:50,038
நான் இங்கே லண்டனில் இருக்கிறேன்,
என் மனைவி கேன்சஸில் இருக்கிறாள்,

215
00:13:50,122 --> 00:13:53,083
அது நல்ல விஷயம் தான் ஏனென்றால் அவளை நான்
இன்னும் மனைவி என்று குறிப்பிடுவதை அவள் கேட்டால்,

216
00:13:53,166 --> 00:13:54,585
கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவாள்.

217
00:13:54,668 --> 00:13:56,962
இந்த சிறிய உரையாடல்களுக்கு
நீங்கள் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள்?

218
00:13:57,045 --> 00:13:59,381
ஆலோசனை அமர்வுகள் பொதுவாக
50 நிமிடங்கள் நீடிக்கும்.

219
00:13:59,464 --> 00:14:01,925
சரி. ஆனால் நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு
கட்டணம் வசூலிக்கிறீர்கள், இல்லையா?

220
00:14:02,009 --> 00:14:03,385
ஆமாம்.

221
00:14:09,141 --> 00:14:11,351
இது போன்ற விஷயங்களில்
உங்களுக்கு விருப்பம் இல்லை தானே?

222
00:14:11,435 --> 00:14:12,728
இல்லை, மேடம்.

223
00:14:12,811 --> 00:14:14,104
அதற்கு காரணம் என்ன?

224
00:14:14,813 --> 00:14:15,856
நான் உண்மையை சொல்ல வேண்டுமா?

225
00:14:15,939 --> 00:14:18,525
எனக்கு உண்மையை
கேட்பதில் மட்டும் தான் ஆர்வம், டெட்.

226
00:14:20,861 --> 00:14:22,154
ஏனென்றால் அது ஒரு பித்தலாட்டம்.

227
00:14:23,780 --> 00:14:26,992
உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியாது.
நம்மிடையே எந்த வரலாறும் கிடையாது.

228
00:14:27,075 --> 00:14:29,036
இருந்தாலும் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து

229
00:14:29,119 --> 00:14:31,455
கோரமான விஷயங்களையும்,
சண்டைகளையும், தவறுகளையும்,

230
00:14:32,039 --> 00:14:34,875
இரகசியங்களையும் உங்களிடம் சொல்ல சொல்கிறீர்கள்.

231
00:14:35,501 --> 00:14:37,920
நீங்கள் என் மீது அக்கறை கொண்டு
இதை எல்லாம் கேட்கவில்லை.

232
00:14:38,003 --> 00:14:42,174
இல்லை, இதை எல்லாம் கேட்பதற்கு நீங்கள் சம்பளம்
வாங்குகிறீர்கள் அதனால்தான் கேட்கிறீர்கள்.

233
00:14:43,634 --> 00:14:47,387
நீங்கள் குறிப்புகள் எடுத்து என் கண்ணீரை
ஆராய்வதற்கு சம்பளம் வாங்குகிறீர்கள்.

234
00:14:47,471 --> 00:14:49,932
பிறகு என்ன? என் பெற்றோர் மீது
அநேகமாக பழி சுமத்துவீர்கள், சரிதானே?

235
00:14:50,849 --> 00:14:53,602
ஏனென்றால், நீங்கள் உண்மையில் மட்டும் தான்
ஆர்வம் உடையவர் என்று சொன்னீர்கள்.

236
00:14:53,685 --> 00:14:56,939
மேலும், வெறும் 50 நிமிட வேலைக்கு
ஒரு மணி நேரத்திற்கான கட்டணத்தை வசூலிக்கிறீர்கள்.

237
00:14:57,022 --> 00:14:58,273
நான் சொன்னதைப் போல,
இது ஒரு பித்தலாட்டம்.

238
00:15:09,826 --> 00:15:12,496
நேத்தன் ஷெல்லி
தனது சொந்த அணியை நிர்வகிக்க தயாரா?

239
00:15:14,456 --> 00:15:15,791
-ஹேய்.
-நேத்தன்.

240
00:15:20,170 --> 00:15:21,380
அடக் கடவுளே.

241
00:15:21,463 --> 00:15:22,798
-மன்னியுங்கள்.
-மன்னித்துவிடு, சாம்.

242
00:15:22,881 --> 00:15:24,174
ஹாய், மிஸ். வெல்டன்.

243
00:15:24,258 --> 00:15:26,426
-என்னை ரெபேக்கா என்று அழை.
-ரெபேக்கா. மன்னியுங்கள், ரெபேக்கா.

244
00:15:27,344 --> 00:15:28,387
இந்த இயந்திரங்கள் தான் இல்லையா?

245
00:15:28,470 --> 00:15:31,265
நாம் ஒருபோதும் இவ்வளவு இணைக்கப்பட்டதும்
இல்லை, பிரிந்து இருந்ததும் இல்லை.

246
00:15:34,643 --> 00:15:36,270
நீங்களும் இதைத்தான் சொல்ல நினைத்தீர்களா?

247
00:15:37,062 --> 00:15:39,147
ஆமாம், சொல்ல நினைத்தேன்.

248
00:15:41,775 --> 00:15:44,403
-நல்லது. நல்ல நாளாக அமையட்டும்.
-சரி. பிறகு சந்திப்போம்.

249
00:15:44,486 --> 00:15:46,446
-உங்களுக்கும். பை.
-பிறகு சந்திப்போம், சாம்.

250
00:15:48,657 --> 00:15:49,658
சரி.

251
00:15:53,787 --> 00:15:55,455
மேலாளரின் அலுவலக அறை

252
00:15:55,539 --> 00:15:58,542
ஹலோ. உங்கள் புதிய பேனாக்கள் வந்துவிட்டன.

253
00:16:06,758 --> 00:16:08,260
அவற்றை இங்கேயே வைத்துச் செல்கிறேன்.

254
00:16:08,343 --> 00:16:09,344
அப்படியா, சரி.

255
00:16:10,053 --> 00:16:11,180
சரி.

256
00:16:11,263 --> 00:16:12,556
மன்னிக்கவும்.
உன்னை எதிர்பார்க்கவில்லை, காலின்.

257
00:16:12,639 --> 00:16:13,640
இது ஏமாற்றுவித்தை.

258
00:16:15,559 --> 00:16:18,270
நேட், உன்னோடு கொஞ்சம் பேசலாமா?

259
00:16:18,353 --> 00:16:19,646
சரி, சொல்.

260
00:16:22,399 --> 00:16:26,069
நான்... உன்னை எரிச்சலூட்டிவிட்டேனோ
என யோசித்துக் கொண்டிருந்தேன்.

261
00:16:33,702 --> 00:16:37,331
நேற்று உன்னை கேலி செய்ததற்காக
நீ என் மீது கோபமாக இருக்கிறாய்,

262
00:16:37,414 --> 00:16:40,709
ஆனால், டானியும் ஜேமியும் அதையே தான் செய்தார்கள்.
நீ அவர்கள் மீது கோபப்படவில்லையே.

263
00:16:40,792 --> 00:16:44,129
ஆமாம், என்னால்... என்னால் அதை விளக்க முடியும்.

264
00:16:44,213 --> 00:16:50,552
இங்கே பார், ஜேமியும், டானியும்,
பிக்காசோ மற்றும் கௌகுயின் போன்றவர்கள்.

265
00:16:50,636 --> 00:16:51,762
குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்களா?

266
00:16:52,346 --> 00:16:55,015
கலைஞர்கள். அவர்கள் கலைஞர்கள்.

267
00:16:55,098 --> 00:17:00,145
காலின், நீயும் வரைகிறாய், ஆனால், உன் படைப்பு
அருங்காட்சியகங்களில் வைக்கப்படுவதில்லை.

268
00:17:00,854 --> 00:17:02,105
அது தொங்குமிடமோ...

269
00:17:03,774 --> 00:17:06,276
நீ ஹாலிடே இன் ஹோட்டலின்
ஓவியம் போல வரைகிறாய், சரியா?

270
00:17:06,359 --> 00:17:10,071
நீ ஊக்கமளிக்கவில்லை. நீ மக்களை கவரவில்லை.

271
00:17:11,323 --> 00:17:14,367
நீ ஒரு கறையை மறைக்க அங்கு இருக்கிறாய்.

272
00:17:15,577 --> 00:17:19,289
நீ வேலை செய்கிறாய், எனவே...
அதை மட்டுமே செய்.

273
00:17:21,415 --> 00:17:22,416
சரியா?

274
00:17:33,178 --> 00:17:37,140
துணை பயிற்சியாளர்
இந்த நாளைக் காப்பாற்றிவிட்டார்!

275
00:17:58,579 --> 00:17:59,663
நீ தானா.

276
00:18:00,497 --> 00:18:01,498
ஹாய்.

277
00:18:01,582 --> 00:18:03,083
ஹாய், நீ புகைபிடிப்பதை
விட்டு விட்டதாக நினைத்தேன்.

278
00:18:03,166 --> 00:18:06,086
என்ன? ஆமாம். பூட்ஸ் வாசனையை
மூடி மறைக்க தான் இதைச் செய்கிறேன்.

279
00:18:06,170 --> 00:18:07,004
அது புத்திசாலித்தனம்.

280
00:18:08,922 --> 00:18:10,007
நீ ஏன் இங்கே இருக்கிறாய்?

281
00:18:10,591 --> 00:18:11,800
எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.

282
00:18:15,137 --> 00:18:16,763
நீ இங்கே தான் இருப்பாய் என எனக்குத் தெரியும்.

283
00:18:18,140 --> 00:18:21,727
இந்த அறையில் தான் கீலியும் நானும்
புகைபிடித்தால் பரவாயில்லை என முடிவு செய்தோம்.

284
00:18:25,272 --> 00:18:26,648
மாட்டிக்கொண்டோம்.

285
00:18:26,732 --> 00:18:29,276
-எனக்கும் கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது.
-எதிலிருந்து தனிமை?

286
00:18:29,359 --> 00:18:31,904
ராய். அவன் என் அலுவலகத்தில் உட்கார்ந்து
'டா வின்சி கோட்' புத்தகம் படிக்கிறான்.

287
00:18:32,487 --> 00:18:35,115
அவன் நைட்ஸ் டெம்ப்ளர் பற்றி
முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறான்.

288
00:18:40,037 --> 00:18:44,458
மன்னியுங்கள், நான் சில பூட்ஸை எடுக்கவே...
பூட் அறைக்கு வந்தேன்.

289
00:18:46,627 --> 00:18:47,711
சரி, எடுத்துக்கொள்.

290
00:18:47,794 --> 00:18:49,213
நன்றி.

291
00:18:49,296 --> 00:18:52,508
கேளுங்கள், ராய் மிகவும் சிறந்தவன என
நான் நினைப்பது உங்களுக்கே தெரியும்.

292
00:18:52,591 --> 00:18:55,260
இது சில நேரங்களில் எனக்கென்று
நேரம் தேவைப்படுகிறது, சரியா?

293
00:18:55,344 --> 00:18:58,430
கீலி, உன் பிரச்சினைகளை சொல்வதற்கு ஆள் தேடாதே.

294
00:18:58,514 --> 00:19:00,098
சரி. நன்றி.

295
00:19:02,184 --> 00:19:04,770
உண்மையிலேயே அதற்கு
தீர்வு காணும் நபரிடம் சொல்.

296
00:19:04,853 --> 00:19:07,689
எனக்கு தெரியவில்லை, தலைவியே. சில சமயங்களில்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது.

297
00:19:07,773 --> 00:19:09,441
இப்படித்தான் நமக்கு ஊறுகாய்கள் கிடைக்கும்.

298
00:19:10,025 --> 00:19:12,277
-வோட்காவும் தான்.
-கூடுதல் சுத்தமான ஆலிவ் எண்ணையும்.

299
00:19:12,361 --> 00:19:14,196
-மற்றும் செய்திகள்.
-என்ன?

300
00:19:14,780 --> 00:19:16,448
-பாட்டில்களில்.
-சரி.

301
00:19:16,532 --> 00:19:18,784
வில், என்னுடைய சட்டையிலிருந்து
என் பெயரை நீக்கிவிட்டு,

302
00:19:18,867 --> 00:19:20,619
பிறகு அதை பெரிதாக போட முடியுமா?

303
00:19:23,038 --> 00:19:24,206
என்ன இது?

304
00:19:24,289 --> 00:19:26,625
-அவர்கள் ராய் பற்றி பேசுகிறார்கள்.
-என்ன?

305
00:19:26,708 --> 00:19:28,627
-மன்னியுங்கள்.
-எரிச்சலூட்டும் வயதான முட்டாள்.

306
00:19:28,710 --> 00:19:30,170
எரிச்சலூட்டும் என்ற வார்த்தையை
ஒப்புக்கொள்கிறேன்,

307
00:19:30,254 --> 00:19:31,755
மற்ற இரண்டு வார்த்தைகளை
நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

308
00:19:31,839 --> 00:19:34,091
ராய் அப்படிபட்டவன் இல்லை.
அவன் மிகவும் சிறந்தவன்.

309
00:19:34,174 --> 00:19:36,927
இது எனக்கு தெரிந்தது தான் ஏனென்றால்
ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணி நேரத்தையும்

310
00:19:37,010 --> 00:19:39,096
ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும்
அவனுடன் கழிக்கிறேன், சரியா?

311
00:19:39,179 --> 00:19:41,640
சரி, அவனிடம் சொல்லிவிடு...

312
00:19:43,100 --> 00:19:44,101
ஹாய், அன்பே.

313
00:19:44,768 --> 00:19:45,894
நீங்கள் என்னைப் பற்றி பேசுகிறீர்களா?

314
00:19:45,978 --> 00:19:48,063
-ஆமாம்.
-நிச்சயமாக.

315
00:19:49,481 --> 00:19:51,108
-கிளம்பலாமா?
-சரி.

316
00:19:52,734 --> 00:19:54,027
-பை.
-பை.

317
00:19:56,113 --> 00:19:57,322
பை, நண்பர்களே.

318
00:19:57,406 --> 00:19:59,032
-நீ எப்படி இருக்கிறாய்?
-ஹேய்.

319
00:19:59,116 --> 00:20:00,450
நைட்ஸ் டெம்ப்ளர்...

320
00:20:06,123 --> 00:20:08,250
ஏனென்றால் சுற்றிலும் உன் பொருட்கள் தான் இருக்கு.

321
00:20:08,333 --> 00:20:10,252
என் வீட்டை விட, உன் வீட்டில் தான்
பொருட்கள் சிதறி இருக்கின்றன.

322
00:20:10,335 --> 00:20:14,798
என்ன? இந்த இடத்தைப் பார்!
உன் பொருட்கள் தான் நிரம்பியுள்ளது. வந்து...

323
00:20:14,882 --> 00:20:17,092
இந்த குளியலறையை பார்!
உன் பொருட்களைப் பார்...

324
00:20:17,176 --> 00:20:18,177
என்ன விஷயம்?

325
00:20:18,760 --> 00:20:20,804
-என்ன விஷயம்?
-என்ன நடக்கிறது?

326
00:20:20,888 --> 00:20:22,472
நான் 'செக்ஸ் அண்ட் த சிட்டி' பார்க்கிறேன்.

327
00:20:23,307 --> 00:20:25,475
நீ என்ன, பை மீது பைத்தியம் பிடித்த ஆளா?

328
00:20:25,559 --> 00:20:26,768
அவற்றுக்கு மாறுபட்ட வாசனைகள் இருக்கின்றன.

329
00:20:27,561 --> 00:20:29,438
சரி, மகிழ்ச்சியாக இரு.
நான் படிக்கப் போகிறேன்.

330
00:20:29,521 --> 00:20:30,606
நல்லது.

331
00:20:32,691 --> 00:20:35,360
கொஞ்சம் இரு. நீ ரோகைன் பயன்படுத்துகிறாயா?
அது பற்றி எனக்கு தெரியாது...

332
00:20:35,444 --> 00:20:37,070
அது முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்வது.

333
00:20:37,154 --> 00:20:39,865
-உன் தலை முடி உதிர்கிறதா?
-எனக்கு அது பற்றி பேச விருப்பம் இல்லை!

334
00:20:39,948 --> 00:20:43,493
பெண்கள் மட்டுமே ரகசிய
நடவடிக்கைகள் கொண்டவர்கள் கிடையாது போல.

335
00:20:43,577 --> 00:20:46,246
இவை என்னுடைய பொருட்கள்!
என்னுடைய பொருட்களைப் பார்க்காதே.

336
00:20:46,330 --> 00:20:48,290
என் பொருட்களை பார்ப்பதற்கு
நீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாயே.

337
00:20:48,373 --> 00:20:50,250
கண்டிப்பாக இல்லை.

338
00:20:53,337 --> 00:20:58,091
நான் "எப்போதுமே ஒன்றை" செய்ய மாட்டேன்.
உன்னை நான் அனுமதிக்க வேண்டி இருக்கிறது.

339
00:20:58,926 --> 00:21:01,345
இதன் அத்தியாயங்கள் சிறியது என்பதால்
நம்மால் படிப்பதை நிறுத்த முடியாது.

340
00:21:01,428 --> 00:21:03,096
வாயை மூடு.

341
00:21:03,180 --> 00:21:05,807
-வாயை மூட வேண்டுமா?
-ஆமாம். வாயை மூடு.

342
00:21:05,891 --> 00:21:07,559
நீ என்னை வாயை மூட சொல்கிறாயா?

343
00:21:07,643 --> 00:21:08,644
அடக் கடவுளே.

344
00:21:08,727 --> 00:21:10,437
தயவு செய்து, வாயை மூடு!

345
00:21:10,521 --> 00:21:13,106
இந்த முட்டாள் தன்னுடைய தொடையில்
ஒரு முள் வைத்த பெல்ட் அணிகிறான்...

346
00:21:13,190 --> 00:21:14,358
பேசாமல் இரு, ராய்!

347
00:21:15,567 --> 00:21:17,486
என்ன? நான் அதை உனக்கு
படித்து காண்பிக்க வேண்டுமா?

348
00:21:17,569 --> 00:21:20,656
வேண்டாம், எனக்கு... வேண்டாம், நான்
எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி பார்க்க வேண்டும்,

349
00:21:20,739 --> 00:21:23,283
ஆனால் நீ அதை பார்க்க விடாமல் பாழாக்குகிறாய்!

350
00:21:24,785 --> 00:21:28,288
நீ படித்துக் காட்டாமல் அல்லது எனக்கு கிளர்ச்சி
உண்டாக்காமல் அல்லது என்னோடே

351
00:21:28,372 --> 00:21:31,250
எப்போதும் இல்லாதவாறு, கொஞ்சம்
தனிமையான நேரம் எனக்கு தேவைப்படுகிறது!

352
00:21:32,501 --> 00:21:34,002
நான் உனக்கு கிளர்ச்சியை
உண்டாக்க வேண்டாமா?

353
00:21:34,086 --> 00:21:38,006
வேண்டாம்! ஆமாம்... சில சமயங்களில் வேண்டும்.
எல்லா நேரங்களிலும் அப்படி செய்ய வேண்டாம்.

354
00:21:38,590 --> 00:21:41,051
சில நேரங்களில்
நான் தனிமையாக இருக்க விரும்புகிறேன்.

355
00:21:45,931 --> 00:21:48,559
பொறு, இது பற்றி தான் நீ எல்லோரிடமும்
பேசிக் கொண்டிருக்கிறாயா?

356
00:21:48,642 --> 00:21:50,936
ஆமாம். ஆனால் உனக்கு அக்கறை இல்லையே.

357
00:21:51,019 --> 00:21:53,021
வம்பு பேசுவது அல்லது என் தலைமுடி எவ்வளவு
உதிர்கிறது என்பது போன்ற சாதாரண

358
00:21:53,105 --> 00:21:55,315
விஷயங்கள் என்று நான் நினைத்ததால்
அக்கறை இல்லாமல் இருந்துவிட்டேன்.

359
00:21:56,066 --> 00:21:57,484
மிக அதிக அளவு முடி உதிர்கிறது.

360
00:21:57,568 --> 00:21:59,695
எப்போதும் உன்னையே சுற்றி வரும்
ஒரு அட்டை பூச்சி போல,

361
00:21:59,778 --> 00:22:02,823
என்னைப் பற்றி நீ எல்லோரிடமும் சொல்லியிருக்கிறாய்.

362
00:22:05,075 --> 00:22:07,077
நான் ஒரு முட்டாள்.

363
00:22:07,911 --> 00:22:09,413
எவ்வளவு மோசம்!

364
00:22:18,297 --> 00:22:19,298
ஐயோ.

365
00:22:22,926 --> 00:22:23,927
அடச்சே.

366
00:22:28,390 --> 00:22:31,310
ரிச்மண்டை அரையிறுதியில்
விளையாட உதவிய மிகவும் தைரியமான

367
00:22:31,393 --> 00:22:34,104
அற்புதமான ஒரு திட்டத்தினால்
உதவி கோச் நேட் ஷெல்லி

368
00:22:34,188 --> 00:22:35,606
இந்த வாரம் ஆச்சரியமான ஹீரோ ஆகிறார்.

369
00:22:35,689 --> 00:22:36,940
இந்த அதிசய குழந்தை,

370
00:22:37,024 --> 00:22:39,860
தன் அணியை தானே பார்த்துக்கொள்ள முடியும்
என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம்.

371
00:22:39,943 --> 00:22:43,488
வெறித்தனமான யோசனைகள்,
மேலும் நான் பார்த்த வரையில், அற்புதமான ஆட்டம்...

372
00:22:43,572 --> 00:22:45,449
கடவுளே. ஐயோ.

373
00:22:47,201 --> 00:22:48,493
நீங்கள் தானா. மன்னியுங்கள்.

374
00:22:49,286 --> 00:22:50,704
நீ காலினிடம் முரட்டுத்தனமாக
நடந்து கொண்டாய்.

375
00:22:52,247 --> 00:22:54,625
முரட்டுத்தனமாக மட்டுமல்ல. கேவலமாகவும்,
விசித்திரமாகவும் நடந்துகொண்டாய்.

376
00:22:57,961 --> 00:22:59,755
இல்லை, நீங்கள் சொல்வது சரி தான்...

377
00:23:00,589 --> 00:23:01,590
டெட்டிடம் சொல்லிவிட்டீர்களா?

378
00:23:01,673 --> 00:23:04,176
இல்லை. இது நம் இருவருக்கு மட்டுமே
தெரிந்த விஷயமாக இருக்கும்.

379
00:23:04,259 --> 00:23:05,427
சரி.

380
00:23:05,511 --> 00:23:06,595
இன்னும் சிறப்பாக செய்.

381
00:23:07,429 --> 00:23:08,722
கதவு உனக்கு பின்னால் இருக்கிறது.

382
00:23:11,308 --> 00:23:12,559
சரி.

383
00:23:14,436 --> 00:23:15,562
இருங்கள், இது என்னுடைய...

384
00:23:25,864 --> 00:23:28,200
ஏஎஃப்சி ரிச்மண்டிற்கு வரவேற்கிறோம்

385
00:23:37,626 --> 00:23:38,669
ஹாய்.

386
00:23:46,134 --> 00:23:48,929
நான் காலை சிற்றுண்டிக்கு கூழ் குடித்தேன்.
கேட்டதற்கு நன்றி.

387
00:23:49,012 --> 00:23:51,723
"ஓ, அது எப்படி இருந்தது?"
அது மிகச் சிறந்த கேள்வி, அன்பே.

388
00:23:52,808 --> 00:23:54,935
அது மிகவும் சூடாகவும்,
ரொம்பவும் கெட்டியாகவும் இருந்ததால்,

389
00:23:55,018 --> 00:23:58,313
என் நாக்கு பொரிந்துவிட்டது
மேலும் நான் மூச்சு திணறி இறக்கவிருந்தேன்.

390
00:23:58,397 --> 00:24:00,023
இதுவரை ஒரு சிறப்பான காலையாக இல்லை.

391
00:24:02,568 --> 00:24:03,861
ஹலோ, டெட்.

392
00:24:06,071 --> 00:24:07,239
நீங்கள் திரும்பி வருவீர்கள் என நினைத்தேன்.

393
00:24:08,490 --> 00:24:10,492
அப்படியா? ஏன்?

394
00:24:10,576 --> 00:24:11,994
எதிலிருந்தும் பின்வாங்க மாட்டீர்கள்
என சொன்னீர்களே.

395
00:24:32,556 --> 00:24:34,433
உங்களிடம் நான் ஒரு உண்மையை சொல்லவா?

396
00:24:34,516 --> 00:24:36,018
என்ன? என் மீசையில் அழுக்கு இருக்கிறதா?

397
00:24:38,061 --> 00:24:39,855
இல்லை... நகைச்சுவையாக சொன்னேன்.
மன்னியுங்கள், சொல்லுங்கள்.

398
00:24:39,938 --> 00:24:43,984
என்னுடைய வேலை பற்றி நீங்கள் சொன்ன விஷயம்
என்னை மிகவும் புண்படுத்தியது...

399
00:24:46,236 --> 00:24:48,155
ஒரு மனநல நிபுணருக்கு
பணம் கொடுக்கப்படுகிறது என்பதால்,

400
00:24:48,238 --> 00:24:49,698
அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்
என்பது உண்மை கிடையாது.

401
00:24:50,574 --> 00:24:52,868
உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.
நீங்கள் இலவசமாக பயிற்சி தருகிறீர்களா?

402
00:24:53,952 --> 00:24:55,037
ஆம், தருவேன்.

403
00:24:55,120 --> 00:24:56,455
ஆனால் இப்போது அப்படி செய்கிறீர்களா?

404
00:24:57,122 --> 00:24:58,207
இல்லை, மேடம்.

405
00:24:58,290 --> 00:25:00,375
ஆனாலும் விளையாட்டு வீரர்களைப்பற்றி
உங்களுக்கு அக்கறை உண்டு, இல்லையா?

406
00:25:00,459 --> 00:25:01,835
ஆமாம், மேடம்.

407
00:25:01,919 --> 00:25:04,171
எனக்கும் அது அப்படிப்பட்டது தான் என
நீங்கள் ஏன் நினைக்கவில்லை?

408
00:25:05,297 --> 00:25:08,050
எல்லா கோச்சுகளும் மோசமான முட்டாள்கள் என்று
நான் எப்போதுமே நினைத்ததில்லை.

409
00:25:11,011 --> 00:25:12,095
இது ஒரு நல்ல கருத்து.

410
00:25:13,639 --> 00:25:15,390
என்னை தோற்கடித்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.

411
00:25:17,518 --> 00:25:20,437
கேளுங்கள், நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

412
00:25:20,521 --> 00:25:23,565
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, அப்படிப்பட்ட
விஷயத்தை சொல்லி, இங்கிருந்து வெளியேறியது தவறு.

413
00:25:23,649 --> 00:25:25,150
அப்படி நடப்பது உண்டு.

414
00:25:25,776 --> 00:25:27,569
நம்மையே பார்த்துக் கொள்வது
பயத்தை கொடுக்கலாம்.

415
00:25:28,570 --> 00:25:32,407
சண்டையிடு அல்லது ஓடி விடு என்பது இயற்கையான
நடத்தை தான். நீங்கள் இரண்டையும் செய்துவிட்டீர்கள்.

416
00:25:32,491 --> 00:25:33,742
மிகவும் அதிசயமான விஷயம் தான்.

417
00:25:34,451 --> 00:25:36,745
சரி, பத்திரமாக இருங்கள், கிளென் கிளோஸ்.

418
00:25:42,835 --> 00:25:44,503
நான் பயப்படுகிறேன் என நினைக்கிறீர்களா?

419
00:25:44,586 --> 00:25:46,088
ஆமாம்.

420
00:25:47,047 --> 00:25:48,090
சரி.

421
00:25:48,715 --> 00:25:50,634
எனக்கு உண்மையை தெரிந்துகொள்ள
விருப்பம் இல்லையோ என்னவோ.

422
00:25:51,844 --> 00:25:55,097
டெட், உண்மை உங்களுக்கு சுதந்திரத்தை தரும்.

423
00:25:55,931 --> 00:25:57,808
ஆனால் முதலில், அது உங்களை எரிச்சலூட்டும்.

424
00:26:01,144 --> 00:26:03,856
அப்படி என்றால் இனி உங்களுடைய புது செல்லப்பெயர்
"உண்மை" என்று வைத்துகொள்ளலாம்.

425
00:26:06,108 --> 00:26:09,152
சரி, உங்களை சில சமயங்களில் தொந்தரவு செய்யாமல்
என்னால் உங்களுடைய வழிகாட்டியாக இருக்க முடியாது.

426
00:26:09,236 --> 00:26:10,654
இது எனக்கு பிடித்திருக்கிறது.

427
00:26:10,737 --> 00:26:12,030
அது எனக்கு தெரிந்த விஷயம் தான்.

428
00:26:13,907 --> 00:26:15,617
நாம் இப்போது தொடங்கலாமா?

429
00:26:16,410 --> 00:26:17,411
சரி, மேடம்.

430
00:26:32,593 --> 00:26:35,262
சரி, நண்பர்களே. நீங்கள் பயிற்சி செய்யும் போது
ஆழமாக மூச்சு விட வேண்டும்.

431
00:26:35,345 --> 00:26:37,890
உங்களுடைய உள் உறுப்புகளில் அந்த இனிமையான
பிராணவாயுவை அனுப்ப வேண்டும்.

432
00:26:37,973 --> 00:26:40,225
மேலும், ஹே, இங்கே மற்றும் இப்போது என்பதை
நினைக்க மறந்து விடாதீர்கள்.

433
00:26:40,309 --> 00:26:43,312
இந்த தருணத்தில் வாழ்வது என்பது, ஓரு பரிசு.
அதனால் தான் அதற்கு பிரெசென்ட் என்று பெயர்.

434
00:26:43,395 --> 00:26:44,646
சரி.

435
00:26:44,730 --> 00:26:47,357
சரி, நாம் ஆரம்பிப்பதற்கு முன்,
நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, கோச் நேட்?

436
00:26:47,441 --> 00:26:49,902
-ஆமாம். நன்றி, டெட்.
-சொல்ல வேண்டியதைத் சொல்லுங்கள், ஜெசிகா ராபிட்.

437
00:26:49,985 --> 00:26:52,404
ஆம். ஓய்... நன்றி...

438
00:26:53,363 --> 00:26:55,574
தொடங்குவதற்கு முன், நான்...

439
00:26:57,367 --> 00:26:59,578
முதலில், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

440
00:27:00,412 --> 00:27:01,872
காலின்,

441
00:27:02,372 --> 00:27:05,709
நேற்று நான் நடந்துகொண்டது, அது வந்து...

442
00:27:05,792 --> 00:27:07,294
-முட்டாள்தனமா?
-புத்திகெட்டவனா?

443
00:27:07,377 --> 00:27:08,504
மோசமானவனா?

444
00:27:08,587 --> 00:27:09,838
காயமடைந்த பட்டாம்பூச்சி.

445
00:27:11,507 --> 00:27:14,259
ஆம். நான் புத்திகெட்டவனாக, மோசமாக
காயமடைந்த பட்டாம்பூச்சியாக இருந்தேன்...

446
00:27:16,178 --> 00:27:20,140
ஆனால் நான்... மிகவும் வருந்துகிறேன்,
மீண்டும் அப்படி நடக்காது, எனவே...

447
00:27:24,269 --> 00:27:26,271
-எல்லாம் நல்லதுக்கே, நண்பா.
-அப்போ சரி.

448
00:27:27,689 --> 00:27:28,690
நல்லது.

449
00:27:28,774 --> 00:27:30,150
-பரவாயில்லை.
-இங்கே வா.

450
00:27:31,735 --> 00:27:33,820
-சரி.
-நான் எதையாவது கவனிக்க தவறிவிட்டேனா?

451
00:27:34,488 --> 00:27:36,365
சரி. பரவாயில்லை.

452
00:27:36,448 --> 00:27:38,075
நான் ஏதாவது சொல்ல வேண்டுமா?

453
00:27:40,494 --> 00:27:42,788
நான் எப்போதும் சொல்வது போல்,
சில நேரங்களில் இரவு முழுவதும்

454
00:27:42,871 --> 00:27:44,915
அடுப்பில் இருக்கும் கஞ்சிதான்
நன்றாக இருக்கும், ஏனெனில்

455
00:27:44,998 --> 00:27:47,251
நாம் நிறைய குடித்துவிட்டு 'சிட்டிசன் கேன்'
படத்தைப் பார்த்தபடி தூங்கிவிடுவோம்.

456
00:27:47,334 --> 00:27:48,502
எனக்கு த்தெரியும், காலின்.

457
00:27:49,127 --> 00:27:52,172
சரி, நண்பர்களே! ஹேய்!
இதுதான் இன்றைய திட்டம்.

458
00:27:52,256 --> 00:27:53,757
நீங்கள் அனைவரும்,
கோச் ராய்யுடன் செல்கிறீர்கள்.

459
00:27:53,841 --> 00:27:56,718
மற்ற அனைவரும் என்னுடன்
வருகிறீர்கள். நாம் போய் வேலையை செய்வோம்.

460
00:27:59,054 --> 00:28:00,264
என்ன?

461
00:28:01,890 --> 00:28:03,767
தொடங்குபவர்கள் ராய்யுடன்,
காத்திருப்பவர்கள் கோச்சுடன்.

462
00:28:03,851 --> 00:28:05,102
சரி.

463
00:28:05,185 --> 00:28:07,229
அப்படி சொல்லுங்கள்.
நான் சொல்வது புரிகிறதா?

464
00:28:08,272 --> 00:28:10,065
இதோ ரிச்சர்ட், ரிச்சர்ட், ரிச்சர்ட்!

465
00:28:14,444 --> 00:28:15,696
விசில்!

466
00:28:17,114 --> 00:28:18,615
ஓய்! நான் "விசில்" என்று சொன்னேன்!

467
00:28:18,699 --> 00:28:21,326
ராய், நீ நிஜ விசிலையே பயன்படுத்தலாமே?

468
00:28:21,410 --> 00:28:24,413
நான் தான் சொன்னேனே, என் உதடுகளில் அசுத்த
உலோகங்கள் பட்டால் எனக்கு ஒத்துக்கொள்ளாது

469
00:28:24,496 --> 00:28:26,248
அதோடு விசில்கள் என் வாயைப் புண்ணாக்கிவிடும்.

470
00:28:26,331 --> 00:28:29,501
ஜேமி, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

471
00:28:29,585 --> 00:28:33,547
ரிச்சர்ட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் கட்டத்தில்
இறங்கிவிட்டார், நீ வேறு வழியில் ஓடுகிறாயா?

472
00:28:34,298 --> 00:28:36,300
எனது தற்காப்பு வீரரை
அவனது வழியில் இருந்து வெளியேற்றினேன்.

473
00:28:36,383 --> 00:28:37,551
அவன் உன்னுடைய சகவீரன்.

474
00:28:37,634 --> 00:28:40,304
பந்தைக் கையாண்டு அவனுக்கு
ஆதரவளிக்க நீ அவனுக்கு தேவை.

475
00:28:40,387 --> 00:28:41,638
உங்களுக்கெல்லாம் புரிகிறதா?

476
00:28:43,974 --> 00:28:47,769
மரியாதைக்குரிய, கோச்,
அவனுக்கு என்னிடமிருந்து தேவை அதுவல்ல.

477
00:28:47,853 --> 00:28:50,314
நான் அவனுக்கு இடம் கொடுக்க வேண்டும்
என்று விரும்புகிறான்.

478
00:28:52,858 --> 00:28:53,901
நீ என்ன சொன்னாய்?

479
00:28:56,862 --> 00:29:00,115
அந்த சூழ்நிலையில் நான் செய்யக்கூடிய
சிறந்த விஷயம் அவனுக்கு இடம் கொடுப்பதுதான்.

480
00:29:00,199 --> 00:29:01,617
உண்மையில், இவன் சொல்வது சரிதான்.

481
00:29:01,700 --> 00:29:03,911
-ஆமாம். பெப்பிடமிருந்து கற்றேன்.
-"க்ரைஜ்ஃப்" இடமிருந்து கற்றுக்கொண்டான்.

482
00:29:03,994 --> 00:29:05,621
-"க்ரைஃப்" என்று உச்சரிக்க வேண்டும்.
-சரி, ஆங்கிலேயரே.

483
00:29:05,704 --> 00:29:09,082
என்னவோ. விஷயம் என்னவென்றால் ரிச்சர்டுக்கு
அருகில் நான் இருக்க வேண்டியதில்லை.

484
00:29:09,166 --> 00:29:10,292
அதோடு அவன் என் சகவீரன் என்பதால்,

485
00:29:10,375 --> 00:29:13,420
அவர் சிறந்ததைச் செய்வான் என்று
நான் நம்ப வேண்டும், இல்லையா?

486
00:29:24,932 --> 00:29:26,141
கருமம்!

487
00:29:31,688 --> 00:29:33,565
இந்த முறை நான் எதுவும்
தவறாக சொல்லவில்லையே.

488
00:29:35,651 --> 00:29:36,985
இதோ வந்துவிட்டார்!

489
00:29:39,404 --> 00:29:41,281
கோச் நேட், உங்களுக்காக
நாங்கள் பரிசு கொண்டு வந்திருக்கிறோம்.

490
00:29:41,365 --> 00:29:44,117
ஆம். நீங்கள் மன்னிப்பு கேட்டது நல்லது,
இல்லையென்றால் தர்மசங்கடமாக இருந்திருக்கும்.

491
00:29:45,160 --> 00:29:46,537
அதிசய குழந்தை 1

492
00:29:49,248 --> 00:29:50,499
"வொண்டர் கிட்."

493
00:29:50,582 --> 00:29:53,001
அதாவது, சரியான உச்சரிப்பான "வுண்டர்கிண்ட்"
என்பதற்கு பதிலாக,

494
00:29:53,085 --> 00:29:54,545
நீங்கள் தான் அப்படி சொல்லிவிட்டீர்கள்.

495
00:29:55,420 --> 00:29:57,422
-அடடா.
-அது வில்லின் யோசனை.

496
00:29:57,506 --> 00:29:58,841
ஹேய்.

497
00:29:58,924 --> 00:30:00,300
அப்படியா?

498
00:30:00,384 --> 00:30:03,178
அது ஒரு அழகான செல்லப்பெயர்,
எனவே சியர்ஸ்.

499
00:30:03,762 --> 00:30:04,763
சியர்ஸ்.

500
00:30:04,847 --> 00:30:08,517
பரவாயில்லை, நன்றி.
அதாவது, நான் வுண்டர்கிண்ட் என்றேன், ஆனால்...

501
00:30:09,601 --> 00:30:11,270
ஆனால், இது அருமையாகவும்,
வேடிக்கையாக உள்ளது, வில்.

502
00:30:11,353 --> 00:30:12,896
-நன்றாக இருக்கிறது, நண்பா.
-நன்றி.

503
00:30:13,730 --> 00:30:15,649
-அருமை.
-சரி, நன்றி.

504
00:30:20,237 --> 00:30:23,407
"அன்பின் உணவாக இசை இருந்தால்,
அது ஒலிக்கட்டும்.

505
00:30:23,490 --> 00:30:25,033
எனக்கு அதை அதிகமாக கொடுங்கள்."

506
00:30:25,701 --> 00:30:28,537
எனக்கு இன்னொன்று வேண்டும் என்பதை இப்படித்தான்
கேட்பீர்கள் என்றால், நீங்கள் நினைத்தது சரிதான்.

507
00:30:28,620 --> 00:30:29,621
அப்படித்தான் நினைத்தேன்.

508
00:30:29,705 --> 00:30:32,040
எனக்காக காத்திருக்கவும்.
இரண்டு நொடிகளில் வருகிறேன். சியர்ஸ்.

509
00:30:33,417 --> 00:30:35,335
அனைத்து கூட்டுகளிலும்.

510
00:30:36,295 --> 00:30:39,131
தி இன்டிபென்டென்ட் பத்திரிகையின் ட்ரென்ட் க்ரிம்.
உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?

511
00:30:39,214 --> 00:30:41,550
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், சரியா?

512
00:30:41,633 --> 00:30:45,512
ஆனால் நாம் இங்கே இருப்பதால், ஸ்பர்ஸ் போட்டியில்
இருந்து நீங்கள் சீக்கிரமாக வெளியேறியது பற்றி

513
00:30:45,596 --> 00:30:47,931
அதிகாரபூர்வ அறிக்கையைப் பெற விரும்புகிறேன்.

514
00:30:49,683 --> 00:30:50,851
அதிகாரபூர்வ அறிக்கையா?

515
00:30:51,768 --> 00:30:53,687
எனக்கு உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்பது
எல்லோருக்கும் தெரியுமே.

516
00:30:54,897 --> 00:30:55,856
நான் இங்கு சாப்பிடவில்லை.

517
00:30:58,483 --> 00:31:03,071
ஆம். அவர்களுக்குத் தெரியும். ஆனால்,
நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்.

518
00:31:03,655 --> 00:31:05,741
சரி, எனக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல்
வயிறு உபாதையானது.

519
00:31:06,325 --> 00:31:08,160
உங்கள் வாசகர்களை நான் மிகவும் மதிப்பதால்,

520
00:31:08,243 --> 00:31:11,330
நிகழ்ந்த அனைத்து மோசமான விஷயங்களையும்
நான் சொல்லாமல் தவிர்க்கிறேன்.

521
00:31:11,413 --> 00:31:13,248
-சரி.
-ஆனால் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.

522
00:31:13,332 --> 00:31:17,503
எனவே உங்களுக்கு வயிறு உபாதை இருந்தது
இப்போது நன்றாக இருக்கிறீர்கள்...

523
00:31:19,713 --> 00:31:21,882
அதேதான், டிகேம்பே முட்டோம்போ.

524
00:31:23,467 --> 00:31:24,885
நாம் பேசிக்கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

525
00:31:26,345 --> 00:31:27,763
நன்றி, மே.

526
00:31:27,846 --> 00:31:29,389
மகிழ்ச்சி, அன்பே.

527
00:31:49,576 --> 00:31:50,827
அடச்சே!

528
00:31:54,248 --> 00:31:55,415
ராய்?

529
00:32:03,549 --> 00:32:04,550
ஹாய்.

530
00:32:05,467 --> 00:32:06,510
ஹாய்.

531
00:32:08,720 --> 00:32:09,847
நீ கிளம்புகிறாயா?

532
00:32:10,806 --> 00:32:11,890
என்ன?

533
00:32:12,850 --> 00:32:13,976
இல்லை.

534
00:32:24,862 --> 00:32:25,863
ஹேய், ஸிரி.

535
00:32:26,655 --> 00:32:29,992
"கீலியைப் புரிந்து கொள்ளாததற்கு ராய்
வருந்துகிறான்" பிளேலிஸ்டை ஒலிக்கச் செய்.

536
00:32:33,871 --> 00:32:36,164
அந்த ரோஜாக்களை உன் பக்கத்துவீட்டு
தோட்டத்திலிருந்து திருடினேன்.

537
00:32:36,248 --> 00:32:37,958
அவற்றை உதிர்த்து தூவினேன்.

538
00:32:38,917 --> 00:32:39,877
மேலும் அது...

539
00:32:41,170 --> 00:32:44,590
ஃபீபீயின் லைட்,
எனவே நான் அதை திருப்பி தர வேண்டும்

540
00:32:44,673 --> 00:32:46,216
அல்லது நன்றாக திட்டு வாங்க வேண்டும்.

541
00:32:49,511 --> 00:32:52,848
இது கால் தேய்ப்பதற்கு தேவைப்படும் ஒரு பொருள்.

542
00:32:53,348 --> 00:32:55,893
முரட்டுத்தனமான கால்களுக்கு அது நல்லது
என்று அந்தப் பெண் சொன்னாள்.

543
00:32:56,476 --> 00:32:58,812
என்ன? என் கால்கள்
முரட்டுத்தனமானவை என்கிறாயா?

544
00:32:58,896 --> 00:33:03,734
அன்பே, நீ பூனையைப் போன்றவள் தான், ஆனால்
உன்னுடைய கால்கள் மோசமாக இருக்கிறது.

545
00:33:07,571 --> 00:33:09,239
ஆனால் முடிவு செய்ய நான் யார்?

546
00:33:09,323 --> 00:33:11,825
சாக்கடையில் என் முடி நிறைய
கிடப்பதை நான் பார்த்தேன்,

547
00:33:12,409 --> 00:33:16,788
பார்ப்பதற்கு அது என்னவோ எலி
சிக்கிக்கொண்டதைப் போல் இருக்கிறது.

548
00:33:26,924 --> 00:33:27,925
அடக் கடவுளே.

549
00:33:33,847 --> 00:33:39,603
குறைந்தது மூன்று மணிநேரத்திற்காவது, நீ என்னை
பார்க்கவோ, நான் பேசுவதை கேட்கவோ மாட்டாய்.

550
00:33:48,612 --> 00:33:49,613
நன்றி.

551
00:34:14,096 --> 00:34:15,764
#கோச்நேட் இன் பரிசு நிச்சயம் பிடிக்கும்.

552
00:34:16,806 --> 00:34:19,101
ஆம், நேட், ஆம், தோழா! தலைவா!

553
00:34:23,730 --> 00:34:25,607
பெருமைக்குரிய க்ரேஹவுண்ட்ஸ்!
கோச் நேட்டிற்கு வாழ்த்துக்கள்

554
00:34:25,690 --> 00:34:27,693
ரிச்மாண்டிற்காக நேட் வென்றிருக்கலாம்,

555
00:34:27,775 --> 00:34:30,362
ஆனாலும் அவர் தோல்வி
அடைந்தவராகத்தான் தெரிகிறார்

556
00:34:48,797 --> 00:34:51,382
என்னை அவமானப்படுத்த
மீண்டும் நீ ஏதாவது செய்தால்,

557
00:34:51,466 --> 00:34:53,177
உன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடுவேன்.

558
00:35:34,218 --> 00:35:36,220
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

