1
00:00:04,046 --> 00:00:07,007
உங்களோடு திரும்பி வர எனக்கு
விருப்பமில்லை. தனியே நடந்து விட்டு வருகிறேன்.

2
00:00:07,674 --> 00:00:09,343
சரி, புரிகிறது. பரவாயில்லை.

3
00:00:10,052 --> 00:00:13,555
ஹே, ஹே, ஹே,
வெளியே... கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு, சரியா?

4
00:00:15,098 --> 00:00:16,099
சரி.

5
00:00:16,683 --> 00:00:17,976
சரி. மறந்துவிடாதே, நாளை,

6
00:00:18,060 --> 00:00:22,064
கேம் ஃபிலிமிற்காக
நீ தான் காஃபி வாங்கி தர வேண்டும்.

7
00:00:22,147 --> 00:00:23,357
-சரி.
-சீக்கிரமாக உற்சாகமாக வர வேண்டும்.

8
00:00:27,110 --> 00:00:28,946
ஹே, கோச், மெதுவாக நடந்து செல்.

9
00:00:30,864 --> 00:00:32,323
அப்படி இல்லை.

10
00:00:37,746 --> 00:00:39,164
வெம்ப்லி பார்க்

11
00:00:39,248 --> 00:00:43,627
நீல நிலவே
நான் தனியாக இருப்பதை நீ பார்த்தாய்

12
00:00:44,169 --> 00:00:48,799
என் இதயத்தில் எந்த கனவும் இல்லாமல்

13
00:00:49,299 --> 00:00:52,010
எனக்கென்று அன்பு காட்ட யாரும் இல்லாமல்

14
00:00:56,849 --> 00:00:59,184
அந்த இடைவெளியை கவனியுங்கள்.

15
00:00:59,852 --> 00:01:03,272
இது தான் ஆல்டுகேட்டிற்கு
செல்லும் தெற்கு நோக்கிய பெருநகர ரயில்.

16
00:01:07,651 --> 00:01:09,653
கதவுகள் மூடுகின்றன.
தயவுசெய்து, கதவருகே நிற்காதீர்கள்.

17
00:02:36,573 --> 00:02:38,492
அது நொடிக்கு நொடி சுவாரஸ்யமாக இருந்தது.

18
00:02:38,575 --> 00:02:40,702
டேவிட் மற்றும் கோலியாத்துக்கு எதிரான
ஒரு உண்மையான போட்டி,

19
00:02:41,245 --> 00:02:44,665
அந்த "எட் நார்ட்டன்" திரைப்படத்தில் வந்தது போல
டேவிட்டை கோலியாத்

20
00:02:44,748 --> 00:02:46,500
கீழே தள்ளி, அவனது பின் தலையில்
அடிப்பட வைத்தான்.

21
00:02:46,583 --> 00:02:47,918
"மூன்ரைஸ் கிங்டம்" படம் தானே?

22
00:02:48,544 --> 00:02:49,545
அது தான் என்று நினைக்கிறேன்.

23
00:02:49,628 --> 00:02:53,048
ஆமாம், என்னைப் பொறுத்தவரை,
இந்த கேம் ஒரு சிண்ட்ரெல்லா கதை போல இருந்தது.

24
00:02:53,590 --> 00:02:57,010
அவளுடைய கண்ணாடி காலணி உடைந்து
அவளுடைய அகிலிஸ் டெண்டனை கிழித்துவிட்டது போல.

25
00:02:57,094 --> 00:02:58,846
தியரி, இன்று வீரர்களுக்கு மோசமான நாளா?

26
00:02:58,929 --> 00:03:00,055
ஜேன் பெயின்

27
00:03:00,138 --> 00:03:01,557
அல்லது நாம் பயிற்சியாளர்களை
பழி சொல்ல வேண்டுமா?

28
00:03:01,640 --> 00:03:03,725
100% பயிற்சி பணியாளர்களைத்தான்.

29
00:03:03,809 --> 00:03:05,435
இவர்கள் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள்.

30
00:03:06,061 --> 00:03:08,480
ரிச்மண்டிடம் எந்த திட்டமும்
இல்லாதது போல தோன்றியது.

31
00:03:08,564 --> 00:03:12,067
-கோச் பியர்ட் பற்றி என்ன சொல்வது?
-அவரை பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை.

32
00:03:12,150 --> 00:03:15,070
வன்மையாக தற்காத்து விளையாடுவது தவறு என்று
கோச் பியர்டிற்கு தெரியும்.

33
00:03:15,153 --> 00:03:18,907
டெட், நேத்தன் மற்றும் ராய் தன்னுடைய மனதை மாற்ற
அவர் அனுமதித்திருக்கக் கூடாது.

34
00:03:18,991 --> 00:03:22,411
நல்ல கருத்து, தியரி. கோச் பியர்ட் தான்
டெட் லாஸ்ஸோவின் இரண்டாம் உதவியாளர்.

35
00:03:22,494 --> 00:03:25,247
அவர் இவருக்கு சவால் விட வேண்டும்,
இப்படி கோழையாக இருக்கக் கூடாது.

36
00:03:26,248 --> 00:03:29,126
பார், கேரி, இந்த மனிதனுக்கு உற்சாகமில்லை.

37
00:03:29,209 --> 00:03:34,173
"சோகமான பிரம்மச்சாரி" என்பதை செஸ்போர்ட் வடிவ
காஃபி மேஜையை விட வேறு எதனால் விளக்க முடியும்?

38
00:03:36,008 --> 00:03:38,594
நான் பிரெஞ்சுகாரன் என்றும் நான் இதை
சொல்ல வேண்டும் என்றும் தெரியும்,

39
00:03:38,677 --> 00:03:41,805
ஆனால் எனக்கு கோச் பியர்டை பிடிக்காது.

40
00:03:42,556 --> 00:03:45,100
வாயை மூடு, தியரி ஹென்ரி.

41
00:03:45,184 --> 00:03:47,519
ரிச்சர்ட் மாண்ட்லோர் ரெட் கார்ட் பெற்ற பிறகு,

42
00:03:47,603 --> 00:03:49,646
விஷயங்கள் மோசமாக ஆகி விட்டன.

43
00:04:13,378 --> 00:04:14,379
டெட் இங்கே வருகிறாரா?

44
00:04:14,463 --> 00:04:15,506
இல்லை.

45
00:04:15,589 --> 00:04:18,091
-ஜேன் வருகிறாளா?
-நாங்கள் பிரிந்துவிட்டோம்.

46
00:04:18,175 --> 00:04:19,593
அதிர்ச்சியாக இருக்கிறது.

47
00:04:19,676 --> 00:04:21,720
நான் பொறாமைப்படுவதாக அவள் என் மீது
குற்றம் சாட்டினாள்.

48
00:04:22,513 --> 00:04:24,723
"நான் உன்னை நேசிக்கிறேன்" என்று
அவள் என்னிடம் சொல்லாததால்,

49
00:04:24,806 --> 00:04:27,267
என்னைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்
என்றே எனக்கு தெரியவில்லை என சொன்னேன்.

50
00:04:27,351 --> 00:04:29,603
-நீ அதை அவளிடம் சொன்னாயா?
-சொன்னேன்.

51
00:04:29,686 --> 00:04:31,855
-அவள் உன்னிடம் அதை திரும்ப சொல்லவில்லை.
-சொல்லவில்லை.

52
00:04:33,273 --> 00:04:34,983
எனக்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி.

53
00:04:35,067 --> 00:04:37,819
நீ மிகவும் வருத்தமாக இருக்க வேண்டும்.

54
00:04:38,862 --> 00:04:41,657
அன்பை வெளிப்படுத்துவதில் வலுவற்று
இருப்பது தான் காரணம்.

55
00:04:42,157 --> 00:04:44,326
இல்லை. நான் கேம்மைப் பற்றி பேசுகிறேன்.

56
00:04:44,409 --> 00:04:47,412
நீ என்ன நினைத்து அந்த யுக்தியை பயன்படுத்தினாய்?

57
00:04:47,496 --> 00:04:50,374
-மே.
-சரி. உன் மதுபானத்தை மகிழ்ச்சியாக குடி.

58
00:04:54,169 --> 00:04:55,546
ஆனால் இங்கே பார்.

59
00:04:55,629 --> 00:04:58,674
இப்படி எதிரணியை தாக்குவது ஒரு நல்ல
திட்டம் என்று நீ நினைத்திருக்க கூடாது.

60
00:04:59,341 --> 00:05:02,553
அங்கு சொஹோவை தனியாக
டிஃபண்ட் செய்யும் படி நீ விட்டுவிட்டாய்.

61
00:05:04,638 --> 00:05:05,931
அதுவும் அரை இறுதி போட்டியில்.

62
00:05:07,307 --> 00:05:09,184
அரை இறுதி போட்டி!

63
00:05:10,394 --> 00:05:11,478
ஜேன் பெயின்

64
00:05:11,562 --> 00:05:13,272
நான் முடிவுகளை பார்த்தேன். ஐயோ.
என்னை தேடி வருகிறாயா?

65
00:05:17,985 --> 00:05:20,904
நீ எங்கே இருக்கிறாய்?

66
00:05:23,949 --> 00:05:25,158
நான் கிளப்பிற்கு வந்திருக்கிறேன்

67
00:05:29,454 --> 00:05:32,708
நான் எப்படி உணர்கிறேன் என்று உன்னிடம் சொன்னேன்
மற்றும் நீ விரும்பவில்லை என்றால்

68
00:05:32,791 --> 00:05:34,126
நானும் இதை தொடர்ந்து செய்ய முடியாது

69
00:05:39,214 --> 00:05:41,425
ஓய், பியர்ட்.
உங்களது சாவிகளை கீழே போட்டு விட்டீர்கள்.

70
00:05:42,384 --> 00:05:43,385
நன்றி.

71
00:05:43,468 --> 00:05:45,971
-கடினமான போட்டி, நண்பா.
-உங்களுக்கு ஒரு அன்பான அரவணைப்பு வேண்டும்.

72
00:05:47,139 --> 00:05:49,725
-அரவணைப்பு வேண்டும் என்று நான் நினைத்தேன்.
-அதைப்பற்றி பேசலாமா?

73
00:05:49,808 --> 00:05:51,351
கேம் பற்றி பேசாமல்

74
00:05:51,435 --> 00:05:54,271
வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும்
நாம் மதுபானம் அருந்தி கொண்டே பேசலாம்.

75
00:05:59,109 --> 00:06:01,612
-நீங்கள் வேகாஸ் போய் இருக்கிறீர்களா?
-தனிமையில் இருக்கும் போது டெட் எப்படி?

76
00:06:01,695 --> 00:06:03,780
இந்த பிரபஞ்சம் கணக்கிட முடியாதது,
ஆனால் உங்களுடைய உணர்ச்சி

77
00:06:03,864 --> 00:06:05,991
ஒரு நொடியில் முடிவுக்கு வரலாம் என்பதை
அறிந்த பின் எப்படி சமாளிக்கிறீர்கள்?

78
00:06:11,872 --> 00:06:13,373
நான் பல முறை வேகாஸ்ஸிற்கு சென்றிருக்கிறேன்.

79
00:06:13,457 --> 00:06:16,877
ஒரு இரவு நன்றாக இருக்கும், இரண்டாவது பிரமாதமாக
இருக்கும், மூன்றாவது என்பது அதிகபடியானது.

80
00:06:16,960 --> 00:06:19,630
டெட் ஒரு ஆண். சாதாரணமானவர்.

81
00:06:19,713 --> 00:06:23,550
வாழ்க்கையின் அழியக்கூடிய தன்மை பற்றி, யாரோ
ஒருவர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி தான்.

82
00:06:23,634 --> 00:06:26,762
ஏனென்றால், ஆமாம், அது பற்றி
எனக்கு சில கருத்துக்கள் உண்டு.

83
00:06:31,600 --> 00:06:35,229
எனவே, முடிவாக சொல்ல வேண்டும் என்றால்,

84
00:06:35,312 --> 00:06:37,689
இவையெல்லாம் சித்தரிக்கப்பட்டவை என்று இருந்தால்,

85
00:06:37,773 --> 00:06:40,651
என்னுடைய அனுபவம் அப்படி தான் சொல்கிறது,
அப்போது இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும்

86
00:06:41,151 --> 00:06:45,614
நடத்தி கொண்டிருப்பவனுக்கு நாம் மரியாதை
செலுத்துவதை தவிர வேறு வழி இல்லை.

87
00:06:47,574 --> 00:06:49,576
அவ்வளவு தான், நண்பர்களே.

88
00:06:49,660 --> 00:06:53,956
என்னோடு டேட்டிற்கு வந்து என்னை
திருத்திக்கொண்டே இருந்த வந்தவன் போல

89
00:06:54,039 --> 00:06:55,040
நாங்கள் இப்போது மூடப் போகிறோம்.

90
00:06:55,123 --> 00:06:56,917
நீங்கள் ரிச்சர்டுடன் டேட் செய்தீர்களா?

91
00:06:57,709 --> 00:07:00,546
இரண்டு டேட்டிங்கில் அப்படி நடந்தது
உனக்கே தெரியுமே, மே.

92
00:07:00,629 --> 00:07:01,630
வெளியே போங்கள்.

93
00:07:02,464 --> 00:07:03,882
காஃபி சாப்பிடுவது ஒரு டேட்.

94
00:07:06,718 --> 00:07:08,554
இது தான் உனக்கு தேவை
நான் என் பாவங்களுக்காக பிராயச்சித்தம் செய்கிறேன்.

95
00:07:13,350 --> 00:07:17,729
நீ என்னோடு வராவிட்டால், குறைந்தபட்சம் நீ
மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நம்புகிறேன்.

96
00:07:20,399 --> 00:07:21,692
அடுத்து எங்கே போகிறீர்கள்?

97
00:07:21,775 --> 00:07:24,945
தூங்க போகிறோம். இது இங்கிலாந்து, நண்பா.
மதுக்கடைகள் 11:30க்கு மூடி விடும்.

98
00:07:25,028 --> 00:07:28,073
இந்த இரவு முடிவதை நான் விரும்பவில்லை.
ஏதாவது யோசனை இருக்கா?

99
00:07:28,156 --> 00:07:30,284
போன்ஸ் அண்ட் ஹனி திறந்திருக்குமே?

100
00:07:30,367 --> 00:07:31,743
அப்படியே இருந்தாலும்.

101
00:07:31,827 --> 00:07:34,830
தனியார் கிளப், ரொம்பவும் அழகானது,
உள்ளே நுழைவதே கடினம்.

102
00:07:35,414 --> 00:07:38,166
ஒருமுறை ஷேர்-ஐ உள்ளே அனுமதிக்கவில்லை.

103
00:07:38,250 --> 00:07:41,295
அவர்கள் அப்படி செய்வார்கள் என்று
உன்னால் நம்ப முடிகிறதா?

104
00:07:41,378 --> 00:07:42,880
அது...

105
00:07:44,464 --> 00:07:48,010
நாம் ஏன் அங்கே சென்று என்ன நடக்கிறது
என்று பார்க்கக் கூடாது?

106
00:07:49,761 --> 00:07:51,054
அங்கு செல்ல சரியான உடை வேண்டும்.

107
00:07:52,431 --> 00:07:53,390
தவறவிட்டது & கண்டுபிடிக்கப்பட்டது

108
00:08:00,856 --> 00:08:02,566
உன்னை நேசிக்கிறேன், மே!

109
00:08:16,997 --> 00:08:18,207
டாக்ஸி!

110
00:08:26,256 --> 00:08:27,925
-மீண்டும் வருக, அன்பே.
-நன்றி.

111
00:08:30,677 --> 00:08:31,845
மாலை வணக்கம்.

112
00:08:33,138 --> 00:08:34,681
நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோமா?

113
00:08:34,765 --> 00:08:38,059
இல்லை என்று நினைக்கிறேன், சார்.
உங்களுடைய உறுப்பினர் அட்டையை நான் பார்க்கலாமா?

114
00:08:38,936 --> 00:08:41,313
பார்சிலோனா பல்கலைக்கழகம், 2004 பேட்ச் தானே?

115
00:08:41,395 --> 00:08:43,774
நான் 2007ல் வார்விக்கில் படித்தேன்.

116
00:08:44,399 --> 00:08:45,817
மன்னிக்கவும், நீ சற்று வயதானவளாக தெரிகிறாய்.

117
00:08:46,527 --> 00:08:47,528
நீங்கள் இங்கே உறுப்பினரா?

118
00:08:47,611 --> 00:08:49,947
இங்கேயா? இல்லை. கடவுளே, இல்லை. எப்போதும் இல்லை.

119
00:08:50,739 --> 00:08:54,618
சரி, உறுப்பினர் இல்லை என்றால்,
நீங்கள் உள்ளே வர முடியாது.

120
00:08:54,701 --> 00:08:56,495
இது போன்ஸ் & ஹனி.

121
00:08:57,621 --> 00:08:58,747
நீ மிகவும் ஆணவமாக பேசுகிறாய்.

122
00:08:59,957 --> 00:09:01,124
உன் பெயர் என்ன?

123
00:09:01,208 --> 00:09:04,294
என் பெயர் சாரா கூம்ப்ஸ்.
உங்கள் பெயர் என்ன?

124
00:09:04,378 --> 00:09:07,256
அது உனக்கு தேவையில்லாதது.

125
00:09:19,059 --> 00:09:20,561
போன்ஸ் & ஹனி, உங்களுக்கு என்ன உதவி தேவை?

126
00:09:21,645 --> 00:09:22,855
கிளம்புகிறீர்களா?

127
00:09:24,606 --> 00:09:25,607
சொல்லுங்கள்.

128
00:09:25,691 --> 00:09:27,818
ஹலோ, நாங்கள்
தீயணைப்புத் துறையிலிருந்து பேசுகிறோம்.

129
00:09:27,901 --> 00:09:31,613
நாங்கள் அவசரமாக
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்...

130
00:09:31,697 --> 00:09:33,866
-சாரா கூம்ப்ஸ்.
-சாரா கூம்ப்ஸ்.

131
00:09:34,449 --> 00:09:35,701
அது நீங்கள் தானா.

132
00:09:35,784 --> 00:09:38,620
மன்னிக்கவும், மேடம்,
உங்கள் வீடு தீப்பற்றியிருக்கிறது.

133
00:09:38,704 --> 00:09:40,873
நீ-நீங்கள் இங்கே உடனேயே
வர வேண்டும்.

134
00:09:42,749 --> 00:09:44,376
-அடுத்து என்ன செய்ய வேண்டும்?
-இயல்பாக நடந்துகொள்.

135
00:09:47,838 --> 00:09:48,839
ஓரியன்'ஸ் பெல்ட்!

136
00:09:51,425 --> 00:09:52,467
அற்புதம்.

137
00:09:54,428 --> 00:09:56,597
நாம் இப்படியே நடந்து செல்லலாம்.

138
00:10:00,392 --> 00:10:01,435
நீங்கள் சாதித்துவிட்டீர்கள்.

139
00:10:02,102 --> 00:10:03,979
ஷேரால் செய்ய முடியாததை,
நீங்கள் செய்து விட்டீர்கள்.

140
00:10:05,147 --> 00:10:07,065
உண்மையில் சாரா கூம்ப்ஸிற்காக வருந்துகிறேன்.

141
00:10:07,149 --> 00:10:08,942
இல்லை. அவள் வீடு தீப்பற்றவில்லை என்று

142
00:10:09,026 --> 00:10:11,945
தெரியும் போது அவள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாள்
என்று நினைத்துப் பார்.

143
00:10:12,029 --> 00:10:14,740
நாளை தான் சாரா கூம்ப்ஸின் வாழ்க்கையின்
மிக அற்புதமான நாளாக இருக்கும்.

144
00:10:15,532 --> 00:10:17,367
நாம் யாரும் வாழ்ந்து கொண்டிருக்கும்
எந்த இடத்தையும் விட

145
00:10:17,451 --> 00:10:19,536
அவளது வீடு அவளுக்கு அழகானதாக தோன்றும்.

146
00:10:21,413 --> 00:10:22,414
வாங்க போகலாம்.

147
00:10:25,584 --> 00:10:27,336
சரி, நண்பர்களே, தாக்குதல் திட்டம்.

148
00:10:30,672 --> 00:10:32,132
என்ன பிரச்சினை?

149
00:10:35,469 --> 00:10:37,012
நாம் இந்த இடத்திற்கு பொருத்தமானவர்கள் இல்லை.

150
00:10:37,721 --> 00:10:39,264
அப்படி நினைக்காதே.

151
00:10:39,932 --> 00:10:40,933
நீ பொருத்தமானவன் தான்.

152
00:10:42,142 --> 00:10:44,061
நீ எங்கு வேண்டுமானாலும் இருக்க முடியும் என்றால்,
எங்கு இருக்க விரும்புவாய்?

153
00:10:44,728 --> 00:10:45,812
இங்கு தான், இல்லையா?

154
00:10:47,105 --> 00:10:48,482
அப்படியென்றால் அது போல நடந்துகொள்.

155
00:10:50,651 --> 00:10:52,277
இப்போது யாருக்கு விலை உயர்ந்த பீர் வேண்டும்?

156
00:10:54,530 --> 00:10:56,490
நான் வாங்கித் தரும் விலை உயர்ந்த பீர்
யாருக்கு வேண்டும்?

157
00:10:58,575 --> 00:10:59,868
நமக்காக ஒரு இடம் பாருங்கள்.

158
00:10:59,952 --> 00:11:02,663
அதோடு... சிறிது விரசமாக நடந்துகொள்ளுங்கள்.

159
00:11:28,063 --> 00:11:29,273
உங்களுக்கு என்ன வேண்டும், சார்?

160
00:11:30,148 --> 00:11:33,151
-நான்கு பீர்கள் வேண்டும்.
-கண்ணாடி டம்ளர்களில் வேண்டுமா, சார்?

161
00:11:33,235 --> 00:11:34,528
வேண்டாம்.

162
00:11:49,001 --> 00:11:51,587
கவலைப்படாதே, நண்பா. கோணங்கள் தான் முக்கியம்.

163
00:11:51,670 --> 00:11:53,839
உனக்கு ட்ரிக் தெரிந்தால்,
சிறப்பாக விளையாட முடியும்.

164
00:11:55,549 --> 00:11:58,802
நாம் இந்த பானத்தின் மீது நட்பாக
பெட் கட்டலாமா?

165
00:11:59,386 --> 00:12:00,888
20 பவுண்டு?

166
00:12:00,971 --> 00:12:01,972
இரு.

167
00:12:02,556 --> 00:12:03,932
ட்ரிக் என்றால் என்ன?

168
00:12:07,144 --> 00:12:08,228
ட்ரிக்நாமெட்ரி.

169
00:12:08,312 --> 00:12:09,938
கணிதம். சரியா?

170
00:12:10,647 --> 00:12:11,732
-சரி. ஆமாம்.
-சரி.

171
00:12:11,815 --> 00:12:13,817
மன்னிக்கவும், நீங்கள் எங்கு படித்தீர்கள்?

172
00:12:15,152 --> 00:12:18,197
இங்கு இருக்கிறீர்களா, நண்பர்களே.
உங்களை தொலைத்துவிட்டதாக நினைத்தேன்.

173
00:12:18,280 --> 00:12:21,241
அப்போது நான் என்ன செய்வேன்?
தனியாக வருத்தமாக இருப்பேன்.

174
00:12:22,034 --> 00:12:23,160
மாலை வணக்கம், நண்பர்களே.

175
00:12:23,243 --> 00:12:25,329
என் மாணவர்களை சந்தித்துவிட்டீர்கள் என புரிகிறது.

176
00:12:25,412 --> 00:12:27,539
நான் தான் பேராசிரியர்
டெக்லான் பேட்ரிக் அலாய்சியஸ் மாக்மனஸ்.

177
00:12:27,623 --> 00:12:29,875
உங்கள் எதிரே.
கண்டிப்பாக, எனக்கு சந்தோஷம் தான்.

178
00:12:29,958 --> 00:12:35,339
ஆனால், இந்த மாணவர்கள் ஆக்ஸ்ஃபோர்டில்
தலைசிறந்தவர்கள் என்று நான் சொல்லியாக வேண்டும்.

179
00:12:36,423 --> 00:12:39,468
இப்போது, நாங்கள் ரொம்ப காலத்திற்கு பின்
மீண்டும் சந்திக்கிறோம், இல்லையா?

180
00:12:40,511 --> 00:12:42,804
-ஆக்ஸ்ஃபோர்டா?
-ஆமாம், நீங்கள் எந்த பாடத்தின் பேராசிரியர்?

181
00:12:42,888 --> 00:12:45,349
எகனாமிக்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்,
நான் ஓய்வு பெரும் வரை.

182
00:12:45,432 --> 00:12:47,226
ஆக்ஸ்ஃபோர்டில்.

183
00:12:47,809 --> 00:12:48,810
சரிதான்.

184
00:12:49,436 --> 00:12:50,687
நாங்களும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தோம்.

185
00:12:52,731 --> 00:12:53,732
கிரைஸ்ட் சர்ச்.

186
00:12:55,025 --> 00:12:56,527
நீங்கள் எந்த கல்லூரியில் கற்பித்தீர்கள்?

187
00:12:58,737 --> 00:12:59,863
கிரைஸ்ட் சர்ச்சா?

188
00:13:01,073 --> 00:13:02,241
எங்கள் முக்கிய எதிரிகள்.

189
00:13:03,492 --> 00:13:05,285
நான் மெர்ட்டனைச் சேர்ந்தவன்.

190
00:13:05,369 --> 00:13:06,995
மெர்ட்டன்.

191
00:13:08,497 --> 00:13:09,706
எங்கே வாழ்கிறீர்கள்?

192
00:13:09,790 --> 00:13:11,750
அந்த தேவாலயத்திற்கு எதிர்பக்கத்தில்.

193
00:13:12,543 --> 00:13:15,963
காலை 8:15க்கு, டோப்சனின் ஆர்கன் இசை கேட்டு
ஒவ்வொரு காலையும் எழுந்திருப்பது போல

194
00:13:16,046 --> 00:13:17,214
நல்ல விஷயம் வேறு எதுவுமில்லை தானே?

195
00:13:20,926 --> 00:13:23,220
நீங்கள் ஒரு மோசமான மெர்ட்டன்.

196
00:13:25,764 --> 00:13:28,684
எப்படி இருக்கிறீர்கள், சார்?
எப்போது ஓய்வு பெற்றீர்கள்?

197
00:13:28,767 --> 00:13:31,436
2015ல். ஆறரை நீளத்தில் நாங்கள்
கேம்பிரிட்ஜை படகு போட்டியில் தோற்கடித்த

198
00:13:31,520 --> 00:13:33,939
அந்த வருடம், மறக்க முடியாதது.

199
00:13:34,022 --> 00:13:36,525
நான் அந்த குழுவில் இருந்தேன்.
நான் தான் காக்ஸ்ஸாக இருந்தேன்.

200
00:13:36,608 --> 00:13:38,652
ஆமாம், சரி தான், மோசமானவனே.

201
00:13:40,779 --> 00:13:43,740
ஹாரி கில் இங்கே வந்திருக்கிறார்!
இந்த பப்பிற்கு, ஹாரி கில் வந்திருக்கிறார்!

202
00:13:43,824 --> 00:13:45,200
ஹே!

203
00:13:46,076 --> 00:13:47,578
அற்புதம். அற்புதம்.

204
00:13:48,453 --> 00:13:49,997
பேராசிரியர் மெக்கோனகால்
எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்.

205
00:13:50,873 --> 00:13:53,750
ஆனால் பணத்தின் மதிப்பைப்பற்றி தான்
அவர் எங்களுக்கு முக்கியமாக கற்று கொடுத்தார்.

206
00:13:54,793 --> 00:13:56,795
20 பவுண்டுகள். பெட் செய்யலாம்.

207
00:14:03,135 --> 00:14:04,928
என்னிடம் இருக்கிறது.

208
00:14:05,012 --> 00:14:06,263
என்னிடம் ஐந்து பவுண்ட் இருக்கு.

209
00:14:07,973 --> 00:14:10,601
-கெபாப் வாங்க எடுத்து வை.
-இன்னும் வேண்டுமா?

210
00:14:10,684 --> 00:14:11,768
விசித்திரமான மேதைகள்.

211
00:14:11,852 --> 00:14:12,978
சரி.

212
00:14:13,061 --> 00:14:17,774
பதினேழு, 18, 19, 20.

213
00:14:17,858 --> 00:14:19,526
இது டிரிக்னாமெட்ரிக்கு போதுமா?

214
00:14:21,069 --> 00:14:22,279
நாம் துவங்கலாம்.

215
00:14:37,169 --> 00:14:38,170
ஆமாம்!

216
00:14:40,047 --> 00:14:43,091
-நியாயமான விளையாட்டு!
-உனக்கு நல்லது.

217
00:14:43,967 --> 00:14:46,178
அடுத்த ரவுண்டு... அடுத்த ரவுண்டு எங்களுடையது.

218
00:14:46,261 --> 00:14:47,471
நீ எது கேட்டாலும் சரி.

219
00:14:47,554 --> 00:14:50,057
-மூன்று பெரிய மதுபானங்கள்?
-நம்ம ஆளு.

220
00:14:52,809 --> 00:14:56,146
ஓய். உங்களுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் பற்றி
இவ்வளவு விஷயங்கள் எப்படி தெரியும்?

221
00:14:57,314 --> 00:15:00,526
ஒரு ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியரை டேட் செய்தேன்.
நான் பேசுவதை விட நிறைய கேட்பேன்.

222
00:15:03,195 --> 00:15:04,530
நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்.

223
00:15:06,365 --> 00:15:07,366
ஓய்.

224
00:15:07,866 --> 00:15:09,826
நீ எப்படிப்பட்ட ஒரு மேதை!

225
00:15:57,666 --> 00:15:59,585
அப்படிப்பட்ட ஒரு கேமை மறக்க முடியாது.

226
00:16:00,627 --> 00:16:03,505
எது உதவியாக இருக்கும் தெரியுமா?
நாம் நேசிக்கும் பெண்ணைப் போய் பார்ப்பது.

227
00:16:04,548 --> 00:16:06,216
ஆமாம். அதனால் தான்
ஜேனுக்கு தான் தகுதியானவன் இல்லை

228
00:16:06,300 --> 00:16:09,011
என்று கோச் பியர்ட் நினைப்பது
எனக்குத் தெளிவாக புரிகிறது.

229
00:16:09,094 --> 00:16:10,345
ஓ, தெரியும்.

230
00:16:10,429 --> 00:16:14,850
தற்கொலை செய்துகொள்ள யோசிப்பதற்குக் கூட,
பியர்டின் சுயமரியாதை குறைவாக இருப்பதால்,

231
00:16:14,933 --> 00:16:17,686
அந்த உற்சாகப்படுத்தும் பேச்சை பேச
நான் விரும்புகிறேன்.

232
00:16:17,769 --> 00:16:19,271
வாயை மூடு, தியரி ஹென்ரி.

233
00:16:22,024 --> 00:16:24,067
அடக் கடவுளே!

234
00:16:25,903 --> 00:16:27,070
ஏதாவது பிரச்சனையா?

235
00:16:27,154 --> 00:16:30,282
ஆமாம். உங்கள் போலி பெர்ஷிய பழைய பொருள்
சந்தையில் வாங்கப்பட்ட காஃபி மேஜையின் ஆணி

236
00:16:30,365 --> 00:16:31,491
என்னுடைய பேன்ட்டை கிழித்துவிட்டது.

237
00:16:31,575 --> 00:16:33,660
சார், நான் உங்கள் உறுப்பினர் அட்டையை பார்க்கலாமா?

238
00:16:38,707 --> 00:16:39,958
என் நண்பர்கள் உள்ளே இருக்கிறார்கள்.

239
00:16:42,336 --> 00:16:43,337
அடச்சே.

240
00:16:45,589 --> 00:16:48,175
உங்கள் பேன்ட் கிழிந்திருப்பது
உங்களுக்குத் தெரியும் என நம்புகிறேன்.

241
00:16:51,887 --> 00:16:53,347
அவை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

242
00:16:54,598 --> 00:16:56,600
மக்கள் என் பின்புறத்திற்கு முத்தம் தர
வசதியாக இருப்பதற்காக.

243
00:16:58,560 --> 00:17:01,438
ஜாக்கிரதையாக இருங்கள்.
இங்கிலாந்தில் கண்ணியம் சார்ந்த சட்டங்கள் உள்ளன.

244
00:17:01,522 --> 00:17:02,648
நீங்கள் கைது செய்யப்படலாம்.

245
00:17:02,731 --> 00:17:05,108
இங்கே சட்டங்கள் மிகவும் கடுமையானவை
என்று எனக்குத் தெரியாது.

246
00:17:05,858 --> 00:17:08,487
ஆமாம். நாங்கள் ஒரு ஒடுக்கப்பட்ட தேசம்.

247
00:17:09,195 --> 00:17:12,657
பின்புறம் வெளியே தெரிவதால்
இந்த ஆட்சி கூட கவிழ்ந்துவிடக் கூடும்.

248
00:17:13,742 --> 00:17:15,868
எவ்வளவு தைரியம் இருந்தால்
இளவரசர் ஆண்ட்ரு பற்றி இப்படி பேசுவீர்கள்.

249
00:17:17,037 --> 00:17:18,204
நான் அதை சரி செய்து தருகிறேன்.

250
00:17:19,540 --> 00:17:21,208
நான் அங்கே தான் வாழ்கிறேன்.

251
00:17:22,416 --> 00:17:23,836
அந்த கட்டிடத்திலா?

252
00:17:24,795 --> 00:17:25,796
இல்லை.

253
00:17:49,361 --> 00:17:50,571
உங்களுடைய பேண்டை கழற்றுங்கள்.

254
00:17:51,989 --> 00:17:53,198
நீங்கள் என்னை அதிகாரம் செய்ய வேண்டாம்.

255
00:18:01,164 --> 00:18:03,333
அதை கழற்றியதும் நீங்கள் அணிந்து கொள்ள
வேறு எதாவது உடை தருகிறேன்.

256
00:18:13,802 --> 00:18:16,430
மக்கள் என் வாழ்க்கைக்குள் வந்து போவார்கள்.

257
00:18:16,513 --> 00:18:18,807
நான் எப்போதும்
அவர்களுடைய உடைகளை வைத்திருப்பேன்.

258
00:18:20,934 --> 00:18:22,769
இந்த அலமாரியில் என் நினைவுகள் இருக்கின்றன.

259
00:18:25,522 --> 00:18:26,523
இவை பொருத்தமாக இருக்கலாம்.

260
00:18:27,733 --> 00:18:29,067
இவை யாருடையவை?

261
00:18:29,151 --> 00:18:30,402
ஒரு பழைய காதலனுடையது.

262
00:18:30,485 --> 00:18:31,695
அவன் இப்போது எங்கே?

263
00:18:31,778 --> 00:18:32,821
இறந்து விட்டான்.

264
00:18:35,365 --> 00:18:36,575
உங்களுடைய சாவி விழுந்து விட்டது.

265
00:18:43,207 --> 00:18:46,168
எப்போதாவது முடிந்து போன ஒரு உறவைப் பற்றி
வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

266
00:18:47,336 --> 00:18:48,420
நாள் முழுவதும் அதைத்தான் செய்கிறேன்.

267
00:18:49,421 --> 00:18:51,673
என் வாழ்வில் வந்த எல்லா ஆண்களையும்
நான் நேசித்திருக்கிறேன்,

268
00:18:51,757 --> 00:18:55,010
ஆனால் முடிந்த போன ஒரு உறவைப்பற்றி கூட
நான் வருத்தப்பட்டதில்லை.

269
00:18:55,761 --> 00:18:59,139
என்னுடைய எல்லா மகிழ்ச்சியான நினைவுகளிலும்,
நான் தனியாக இருக்கிறேன்.

270
00:19:01,767 --> 00:19:02,893
அது எனக்கு கவலையாக இருக்கிறது.

271
00:19:10,817 --> 00:19:12,027
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?

272
00:19:15,489 --> 00:19:17,783
அதாவது, இப்போது என் வாழ்வில்
ஒருத்தி இருக்கிறாள்...

273
00:19:20,118 --> 00:19:22,871
ஒருவேளை அது ரசாயன மாற்றம் அல்லது
ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம், ஆனால்...

274
00:19:25,040 --> 00:19:29,795
அவளோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று
எனக்குத் தோன்றுகிறது.

275
00:19:31,463 --> 00:19:33,632
இது காதலா, அல்லது இது ஏதாவது பிரச்சினையா?

276
00:19:33,715 --> 00:19:35,133
அது இரண்டாகவும் இருக்கலாமே?

277
00:19:39,805 --> 00:19:40,889
அதை எடுக்கிறீர்களா?

278
00:19:44,893 --> 00:19:46,144
அதில், "எடுக்காதே: என்று இருக்கிறது.

279
00:19:47,187 --> 00:19:48,438
அது ஒரு ஜோக்.

280
00:19:51,692 --> 00:19:54,194
ஓய், நான் வந்துவிட்டேன்,
ஆனால் என் சாவிகளை மறந்து விட்டேன், அன்பே.

281
00:19:55,946 --> 00:19:57,364
யாருடா நீ?

282
00:19:57,447 --> 00:19:58,490
என் பெயர் பியர்ட்.

283
00:19:59,283 --> 00:20:01,618
இவர் தான், போன்ஸ் & ஹனியில் நான் சந்தித்த
பேன்ட் இல்லாத ஆண்.

284
00:20:01,702 --> 00:20:02,953
என்ன கன்றாவி?

285
00:20:03,036 --> 00:20:05,205
ஓய், கேவலமானவனே!

286
00:20:05,289 --> 00:20:08,625
நான் உன் முகத்தில் குத்தி, பற்களை உடைத்து

287
00:20:08,709 --> 00:20:11,545
உன் பின்பக்கத்தில் அடைக்கப் போகிறேன்.

288
00:20:12,296 --> 00:20:13,297
ஓ, கடவுளே.

289
00:20:14,464 --> 00:20:16,258
-என்னை எச்சரித்திருக்கலாமே.
-அவரை விட்டுத்தள்ளுங்கள்.

290
00:20:16,341 --> 00:20:17,759
அவர் சற்று பொறாமை பிடித்தவர்.

291
00:20:19,178 --> 00:20:22,097
கதவைத் திற.
உன்னை சாகடித்து விடுவேன்.

292
00:20:23,724 --> 00:20:24,975
ஓடிவிடுங்கள்.

293
00:20:30,647 --> 00:20:31,815
எங்கே அவன்?

294
00:20:57,841 --> 00:20:59,134
எங்கும் போக முடியாது.

295
00:21:45,639 --> 00:21:46,765
ஓய்!

296
00:21:58,610 --> 00:22:01,446
என்22 ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் -ரிச்மண்ட்
ஃபுல்வெல் - ரிச்மண்ட்

297
00:22:09,371 --> 00:22:10,622
இப்போது கூட என்னால் முடியும்!

298
00:22:25,345 --> 00:22:27,514
ஓய், இவன் இன்னும் டிக்கெட் வாங்கவில்லை.

299
00:22:29,600 --> 00:22:32,436
நீங்கள் டிக்கெட் வாங்கும் வரை பேருந்து நகராது.

300
00:22:33,228 --> 00:22:35,939
சரி, சரி. கண்டிப்பாக வாங்குகிறேன்.

301
00:22:48,368 --> 00:22:49,661
மன்னிக்கவும், மேடம்.

302
00:22:52,873 --> 00:22:55,250
போய் விடு, மோசமானவனே.

303
00:23:04,676 --> 00:23:06,720
த ஏவரி ஜேம்ஸ்

304
00:23:17,314 --> 00:23:18,315
மாலை வணக்கம், சார்.

305
00:23:20,025 --> 00:23:21,360
இன்றிரவு இங்கே தங்க போகிறீர்களா?

306
00:23:21,443 --> 00:23:23,654
இல்லை. நான் தங்க வரவில்லை.

307
00:23:23,737 --> 00:23:25,113
அட, சரி. மகிழ்ச்சியாக மாலையாக அமையட்டும்.

308
00:23:26,615 --> 00:23:28,450
நான் ஒரு அழைப்பு செய்து கொள்ளலாமா?

309
00:23:29,826 --> 00:23:32,287
விருந்தாளிகள் மட்டும் தான் அழைப்புகள்
செய்ய முடியும், சார்.

310
00:23:34,581 --> 00:23:35,582
அப்படியென்றால் சரி.

311
00:23:36,333 --> 00:23:39,378
-உங்களுடைய கைபேசியை பயன்படுத்தலாமா?
-என் சொந்த கைப்பேசியையா?

312
00:23:39,461 --> 00:23:42,464
ஆமாம், என் கைப்பேசி மற்றும் பர்ஸை தொலைத்துவிட்டேன்,
இப்போது வீட்டிற்கு போக முயற்சிக்கிறேன்.

313
00:23:42,548 --> 00:23:44,550
என்னுடைய சொந்த கைபேசியை எதற்காக,
உபயோகப்படுத்த போகிறீர்கள், சார்?

314
00:23:45,717 --> 00:23:46,718
டாக்ஸி புக் செய்வதற்காக.

315
00:23:46,802 --> 00:23:49,054
இல்லை. நான் இதை நம்ப மாட்டேன்.

316
00:23:49,137 --> 00:23:50,681
நான் உங்களை ஏமாற்ற முயற்சி செய்யவில்லை.

317
00:23:50,764 --> 00:23:52,558
இதையே தான் ஒரு ஏமாற்றுக்காரன் சொல்வான்.

318
00:23:54,226 --> 00:23:56,353
நான் என் அக்கவுண்டை மட்டுமே பயன்படுத்துவேன்.

319
00:23:56,436 --> 00:23:59,273
இப்படித்தான் ஆரம்பிக்கும், இல்லையா?
முதலில் டாக்ஸி புக் செய்வீர்கள்.

320
00:23:59,356 --> 00:24:01,733
அடுத்து, உங்களது நெட்வொர்க்கிற்கு
என் கைபேசியை புவிசார் இணைத்து விட்டு,

321
00:24:01,817 --> 00:24:05,362
திடீரென்று பார்த்தால், நீங்களும், உங்களது போலி
நண்பர்களும் என் வங்கி விவரங்களை டவுன்லோட் செய்து,

322
00:24:05,445 --> 00:24:07,197
என் அடையாளத்தை வைத்துக்கொண்டு,
உங்களது சொந்த தீவிற்கு

323
00:24:07,281 --> 00:24:09,199
நிறைய பாப்பி விதைகளை
கொண்டு செல்ல முயற்சிப்பீர்கள்.

324
00:24:09,992 --> 00:24:11,201
இல்லை. இன்றிரவு அது நடக்காது.

325
00:24:11,285 --> 00:24:13,453
இந்த ஏமாற்று வேலை எனக்கு பல காலமாக தெரியும்.

326
00:24:13,537 --> 00:24:15,998
-எந்த ஏமாற்று வேலை?
-என்னுடைய கைபேசி உங்களுக்கு கிடைக்காது.

327
00:24:16,081 --> 00:24:18,041
சில நொடிகளுக்குள்ளேயே, என் அம்மாவின்
கல்யாணத்திற்கு முந்திய பெயர் மற்றும்

328
00:24:18,125 --> 00:24:19,334
க்ரிப்டோ கரன்ஸி விவரத்தை தெரிந்துகொள்வீர்கள்.

329
00:24:19,418 --> 00:24:20,836
என்னிடம் அப்படி எதுவும் இல்லை.

330
00:24:21,461 --> 00:24:24,047
அடுத்தது, சட்டத்துக்கு விரோதமான படங்களை
நான் டவுன்லோட் செய்ததாக நீங்கள் ஏமாற்றியதால்

331
00:24:24,131 --> 00:24:26,675
எம்ஐ5 என்னுடைய ஹார்ட் ட்ரைவை
கைப்பற்றி விடுவார்கள்.

332
00:24:26,758 --> 00:24:29,094
இல்லை. உங்களால் என்னை முட்டாளாக்க முடியாது.

333
00:24:29,178 --> 00:24:31,930
என்னதான் பார்ப்பதற்கு டேம் ஜூடி டென்ச் போல
இருந்தாலும், உங்களால் அது முடியாது.

334
00:24:32,014 --> 00:24:34,683
யாராலும் முடியாது.
நீங்கள் வெட்கப்பட வேண்டும், சார்! இரவு வணக்கம்.

335
00:25:01,752 --> 00:25:03,045
ஹலோ.

336
00:25:07,382 --> 00:25:09,301
ஹே, உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.

337
00:25:10,886 --> 00:25:12,930
நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்,
என் கைபேசியை தொலைத்து விட்டேன்.

338
00:25:14,097 --> 00:25:16,308
நீங்கள் என்னுடைய உயிரை காப்பாற்றப் போகிறீர்கள்.

339
00:25:20,187 --> 00:25:21,522
அடச்சே.

340
00:25:23,106 --> 00:25:24,691
சரி, இது யார் என்று பாருங்களேன்.

341
00:25:24,775 --> 00:25:26,902
உங்களை மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சி,
திரு. டார்ட்.

342
00:25:27,528 --> 00:25:30,364
அப்போது நடந்ததற்கு மன்னிக்கவும்.
நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்...

343
00:25:30,989 --> 00:25:32,533
பரவாயில்லை. எந்த வித அவசரமும் இல்லை.

344
00:25:34,910 --> 00:25:36,370
ஒன்று தெரியுமா, நண்பர்களே.

345
00:25:36,453 --> 00:25:41,083
கால்பந்து என்றால் என்ன என்பதைப் பற்றி,
இங்கே விசித்திரமான கால் சட்டை அணிந்திருக்கும்...

346
00:25:42,668 --> 00:25:44,753
கோச்சிற்கு நாம் சொல்லிக் கொடுக்கலாம்.

347
00:25:45,754 --> 00:25:47,297
ஏனென்றால் அது ஆடுகளத்தில் நடைபெறுவதில்லை.

348
00:25:47,381 --> 00:25:48,674
இல்லை.

349
00:25:49,716 --> 00:25:51,051
அது தெருக்களில் தான் நடக்கும்.

350
00:25:52,928 --> 00:25:53,929
நான் சொல்வது புரிகிறதா?

351
00:25:55,138 --> 00:25:56,473
அல்லது...

352
00:25:57,474 --> 00:25:58,475
அவனைப் பிடியுங்கள்!

353
00:26:00,561 --> 00:26:01,812
சீக்கிரம்!

354
00:26:17,578 --> 00:26:19,663
பியர்ட் நன்றாக உதை வாங்கப் போவது போல
தெரிகிறது, இல்லையா?

355
00:26:19,746 --> 00:26:23,500
இன்று உதைப்பட வேண்டும் என்று பியர்ட் தானே
விரும்பியது போல எனக்கு தோன்றுகிறது, கேரி.

356
00:26:23,584 --> 00:26:25,085
கண்டிப்பாக, தியரி.

357
00:26:25,169 --> 00:26:26,879
தன்னை சுற்றியுள்ளவர்களின்
அன்பு மற்றும் அரவணைப்பை

358
00:26:26,962 --> 00:26:29,965
ஏற்றுக் கொள்ளாமல் அவர் தன்னையே
வருத்திக்கொள்ள நினைக்கிறார் போலும்.

359
00:26:30,048 --> 00:26:33,510
கோச் பியர்ட் தன்னையே வெறுக்க
துவங்கி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

360
00:26:33,594 --> 00:26:35,053
வாயை மூடு, தியரி ஹென்ரி.

361
00:26:45,272 --> 00:26:46,231
என்ன, நண்பா?

362
00:26:48,609 --> 00:26:51,195
-அவனை மறுபடியும் குத்து.
-மோசமானவனே!

363
00:26:54,364 --> 00:26:55,866
நீ மட்டமானவன்!

364
00:27:13,509 --> 00:27:14,885
அப்படித்தான்!

365
00:27:17,429 --> 00:27:18,680
அப்படியே இரு!

366
00:27:23,810 --> 00:27:25,020
ஐயோ.

367
00:27:28,315 --> 00:27:29,733
அட, கடவுளே.

368
00:27:31,026 --> 00:27:32,778
-உன்னை அப்படியே இருக்க...
-நண்பர்களே!

369
00:27:34,154 --> 00:27:35,531
இதை நாம் ட்ராவாக்கிவிடலாமா?

370
00:27:43,956 --> 00:27:45,457
உனக்கு கோபம் வருகிறது, இல்லையா?

371
00:27:46,917 --> 00:27:48,460
இரவு வணக்கம் சொல்லு, நண்பா.

372
00:28:08,689 --> 00:28:10,607
நண்பா. கொஞ்சம் இரு.

373
00:28:10,691 --> 00:28:13,026
எதுவும் நடக்கவில்லை. அவள் என் கால்சட்டையை
தைத்துக் கொடுக்கவிருந்தாள்.

374
00:28:13,110 --> 00:28:15,863
இல்லை, இல்லை, வேண்டாம்.

375
00:28:18,031 --> 00:28:19,867
இதை எங்கள் வீட்டில் விட்டுவிட்டாய்.

376
00:28:22,202 --> 00:28:23,787
இதற்காகத்தான் உன்னைக் கண்டுபிடிக்க முயன்றேன்.

377
00:28:30,085 --> 00:28:31,378
சரி, அது நல்லது.

378
00:28:34,423 --> 00:28:36,758
இல்லை, நான் கோபப்பட்டதற்கு மன்னித்துவிடு.

379
00:28:36,842 --> 00:28:38,385
என்ன நடந்தது என்று மேரி சொன்னாள்.

380
00:28:39,303 --> 00:28:41,847
எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது.

381
00:28:42,598 --> 00:28:46,268
அவள் எனக்கு எவ்வளவு
மதிப்புமிக்கவள் என்று புரிந்ததால்,

382
00:28:46,351 --> 00:28:50,731
அவள் என்னை ஏமாற்றுகிறாளோ என்ற எண்ணத்தை
என்னால் தாங்க முடியவில்லை.

383
00:28:50,814 --> 00:28:51,815
ஓ-ஹோ.

384
00:28:51,899 --> 00:28:53,483
ஆனால் இந்த விஷயத்தில்

385
00:28:53,567 --> 00:28:56,695
நான் ரொம்பவும் கவலைப்படுகிறோனோ என்று
தோன்றுகிறது.

386
00:28:56,778 --> 00:28:58,530
ஏனென்றால் முன்னாளில் நானும் ஏமாற்றி இருக்கிறேன்.

387
00:28:59,239 --> 00:29:01,283
ஆனால் நான் அதை மாற்றிக்கொண்டேன்.

388
00:29:01,366 --> 00:29:03,869
-நான் இப்போது ரொம்பவும் மாறிவிட்டேன்.
-அது நல்லது.

389
00:29:03,952 --> 00:29:04,953
ஆமாம், நன்றி.

390
00:29:05,037 --> 00:29:08,582
உன்னிடம், உன் பொருளை கொடுக்க தான் வந்தேன்.

391
00:29:09,750 --> 00:29:12,002
ஆனால் உன் கால்சட்டையை, தானே வைத்துக்கொள்ள
போவதாய் மேரி சொன்னாள்.

392
00:29:12,669 --> 00:29:14,796
அவள் அப்படித்தானே செய்வாள்.

393
00:29:15,464 --> 00:29:16,882
இதை நீயே வைத்துக்கொள்ளலாம் என்றாள்.

394
00:29:18,133 --> 00:29:20,260
-நன்றி.
-அது உனக்கு நன்றாக இருக்கிறது.

395
00:29:21,220 --> 00:29:22,387
தெரியும்.

396
00:29:22,971 --> 00:29:25,265
இன்றைய மோசமான கேமிற்காக வருந்துகிறேன்.

397
00:29:26,183 --> 00:29:30,604
நான் ரிச்மண்ட் ரசிகர் இல்லை, ஆனால், அடடா,
அது பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது.

398
00:29:37,569 --> 00:29:38,779
நீ இவற்றை கீழே போட்டு விட்டாய்.

399
00:29:41,156 --> 00:29:42,157
சரி.

400
00:29:44,868 --> 00:29:46,119
கவனமாக இரு, சரியா?

401
00:29:47,371 --> 00:29:48,664
முயற்சி செய்கிறேன்.

402
00:29:55,921 --> 00:29:57,297
52 ஐமெசேஜ்கள்
72 மிஸ்ட் கால்கள்

403
00:29:57,381 --> 00:30:00,384
ஓ, இல்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை.

404
00:30:01,218 --> 00:30:02,511
ஓ, இல்லை. இல்லை, இல்லை.

405
00:30:02,594 --> 00:30:03,804
நான் உன்னை நேசிப்பது, உனக்குத் தெரியும்
உன்னை நேசிப்பதாக சொன்னேன்.

406
00:30:03,887 --> 00:30:05,389
நீ சொன்னபடி தான் நான் நடக்கிறேன்
எப்படியோ போ பியர்ட்.

407
00:30:08,559 --> 00:30:10,060
நானும் உன்னை நேசிக்கிறேன்!

408
00:30:11,061 --> 00:30:15,816
இல்லை, இல்லை, இல்லை! இல்லை!

409
00:30:29,246 --> 00:30:30,247
ஆன்லைன்
ஹேட்

410
00:30:30,330 --> 00:30:32,124
பாஸ்தா
இங்கே சாஸ்களும் சமம் தான்

411
00:30:32,207 --> 00:30:33,750
புதுமையான சுவை

412
00:30:33,834 --> 00:30:35,961
இதுவரை குடித்ததிலேயே சிறப்பான கோக்கா?

413
00:30:38,088 --> 00:30:39,173
மான்செஸ்டர் சிட்டி 5
ஏ.எஃப்.சி. ரிச்மண்ட் 0

414
00:30:54,521 --> 00:30:56,607
ஓய், சமுராய்!

415
00:30:56,690 --> 00:31:00,777
எங்களுக்கு லிமோ கிடைத்தது
எங்களுக்கு லிமோ கிடைத்தது

416
00:31:01,445 --> 00:31:03,363
-அட! உள்ளே வாருங்கள்!
-பாருங்கள், லிமோ இருக்கிறது!

417
00:31:04,740 --> 00:31:06,575
கடைசியில் அவர்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.

418
00:31:06,658 --> 00:31:08,202
பூல் விளையாட்டில் மோசமானவர்களாக இருந்தார்கள்.

419
00:31:08,285 --> 00:31:09,703
நாங்கள் யார் என்று அவர்களிடம் சொன்னோம்,

420
00:31:09,786 --> 00:31:12,539
இருந்தாலும் ஈஸ்டருக்கு அவர்களுடைய கிராமப்புற
பண்ணை வீட்டிற்கு எங்களை அழைத்திருக்கிறார்கள்.

421
00:31:12,623 --> 00:31:14,416
நான் என்ன அணிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

422
00:31:15,000 --> 00:31:19,755
அவர்கள் மூலம் நிறைய பணம் சம்பாதித்தோம்,
அதனால் ஒரு லிமோ கூட வாங்கினோம்!

423
00:31:19,838 --> 00:31:21,965
-எங்கே போக வேண்டும், சார்?
-நீங்கள் சொல்லும் இடத்திற்கு போகலாம்.

424
00:31:22,049 --> 00:31:23,926
இந்த இரவு முடிவடையாது.

425
00:31:24,009 --> 00:31:25,385
வீட்டிற்கு போகலாம் என்று நினைக்கிறேன்.

426
00:31:32,601 --> 00:31:34,186
இந்த இனிமையான இரவை தந்ததற்கு நன்றி.

427
00:31:34,978 --> 00:31:36,730
நீங்கள் இந்த முகவரிக்கு சென்று,

428
00:31:37,272 --> 00:31:40,484
ரெனேயிடம், பியர்ட் இது பரவாயில்லை
என்று சொன்னார் என்று சொல்லுங்கள்.

429
00:31:42,361 --> 00:31:43,362
நன்றி, நண்பர்களே.

430
00:31:46,114 --> 00:31:49,952
ஒரே ஒரு கார்நெட்டோ

431
00:31:50,035 --> 00:31:52,579
என்னிடம் கொடு

432
00:31:52,663 --> 00:31:56,416
சுவையான ஐஸ்க்ரீம்

433
00:31:56,500 --> 00:32:00,045
இத்தாலியுடையது

434
00:32:17,938 --> 00:32:18,939
இல்லை.

435
00:32:21,233 --> 00:32:22,234
இல்லை.

436
00:32:26,446 --> 00:32:29,825
இல்லை!

437
00:33:48,570 --> 00:33:49,863
கடவுளே, நீங்கள் இருக்கிறீர்களா?

438
00:33:50,531 --> 00:33:52,366
நான் தான், மார்கரெட்டின் மகன்.

439
00:33:54,243 --> 00:33:57,454
நெடுங்காலமாய் கேட்டுக்கொண்டு இருந்தவன், முதல்
முறையாக அழைக்கிறேன். நீங்கள் வேலையாக இருக்கலாம்,

440
00:33:57,538 --> 00:34:01,416
முக்கியமான வேலைகள் இருக்கும், நிறைய
முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும் என தெரியும்.

441
00:34:02,793 --> 00:34:05,295
அப்படியே செய்யுங்கள்.
ஆனால், ஒரு பெண் இருக்கிறாள்.

442
00:34:06,880 --> 00:34:10,884
அவளின் பெயர், ஜேன்.

443
00:34:12,010 --> 00:34:14,763
கடைசி பெயர் பெயின். பெ-யி-ன்.

444
00:34:14,847 --> 00:34:17,349
அது உங்களுக்கே தெரிந்திருக்கும், ஆனால் நீங்கள்
சுலபமாக தேடவே இதைச் சொன்னேன்.

445
00:34:20,226 --> 00:34:22,980
அவள் மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு.

446
00:34:24,565 --> 00:34:27,067
நான் இன்றிரவு அவளுடன் இருந்திருக்கலாம்,
ஆனால் உங்களோடு இருக்கிறேன்.

447
00:34:32,531 --> 00:34:35,449
எனக்கு இருக்கும் பிரச்சினைகளை அவளால்
தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

448
00:34:37,619 --> 00:34:39,871
ஆனால் நான் அவளோடு இருக்கும் போது,
இந்த உலகம்...

449
00:34:42,123 --> 00:34:43,625
சற்று சுவாரஸ்யமாக இருக்கிறது.

450
00:35:11,069 --> 00:35:12,362
இது எந்த இடம்?

451
00:35:15,073 --> 00:35:17,159
இதோ. 2-3-7.

452
00:35:19,077 --> 00:35:21,205
உள்ளே அனுமதி இல்லை

453
00:35:21,288 --> 00:35:22,623
-சரி, கதவை தட்டு.
-நீ தட்டுகிறாயா?

454
00:35:22,706 --> 00:35:23,874
சும்மா தட்டு.

455
00:35:27,419 --> 00:35:28,420
என்ன?

456
00:35:28,921 --> 00:35:30,172
நீங்கள் தான் ரெனேயா?

457
00:35:30,255 --> 00:35:31,423
நீங்கள் யார்?

458
00:35:32,966 --> 00:35:34,176
கோச் பியர்ட் எங்களை அனுப்பினார்.

459
00:35:42,142 --> 00:35:43,393
அவற்றை போடு.

460
00:35:45,604 --> 00:35:47,397
இந்தப் பக்கம் வாருங்கள்.

461
00:35:47,481 --> 00:35:48,690
போ.

462
00:35:51,735 --> 00:35:52,736
வா.

463
00:35:53,237 --> 00:35:54,238
வா.

464
00:36:13,382 --> 00:36:14,424
அடக் கடவுளே.

465
00:36:14,508 --> 00:36:15,759
இது ரொம்ப அழகாக இருக்கு.

466
00:36:15,843 --> 00:36:17,052
இது என்ன சொர்க்கமா?

467
00:36:18,220 --> 00:36:20,848
இல்லை. அது நெல்சன் சாலை.

468
00:36:31,233 --> 00:36:33,402
கூட்டத்தினரை பார்த்து கை அசை!

469
00:37:03,599 --> 00:37:05,058
அப்படித்தான்!

470
00:37:12,107 --> 00:37:13,358
அப்படித்தான்!

471
00:38:41,738 --> 00:38:42,865
இதை முயற்சி செய்.

472
00:39:36,960 --> 00:39:39,296
-இங்கே உணவும் தருவார்களா?
-ஆமாம், எனக்காக.

473
00:40:41,775 --> 00:40:44,778
-அவர் எங்கே?
-பியர்ட் வராவிட்டால், நான் காபி கொண்டு வருகிறேன்.

474
00:40:44,862 --> 00:40:47,072
இரு. கொஞ்சம் பொறு. அவர் வந்துவிடுவார்.

475
00:40:47,155 --> 00:40:48,699
பியர்ட் தபால்காரன் போல, தெரியுமா?

476
00:40:48,782 --> 00:40:50,826
எப்போதுமே சரியான நேரத்திற்கு வருவார்,
அரை கால்சட்டையில் அழகாக இருப்பார்.

477
00:40:52,661 --> 00:40:53,829
காலை வணக்கம், நண்பர்களே.

478
00:40:53,912 --> 00:40:56,206
-நான் தான் சொன்னேனே?
-இதோ.

479
00:40:58,041 --> 00:41:00,043
பிளாட் ஒயிட். காஃபி, பிளாக்.
பெப்பர்மின்ட் லாட்டே.

480
00:41:01,003 --> 00:41:02,004
சியர்ஸ்.

481
00:41:03,338 --> 00:41:04,339
நன்றி, கோச்.

482
00:41:05,382 --> 00:41:06,466
நீங்கள்...

483
00:41:08,552 --> 00:41:10,387
ஒன்றும் பிரச்சினை இல்லையே?

484
00:41:10,470 --> 00:41:14,641
இல்லை. நான் சற்று தூங்கிவிட்டேன்.
கட்டிலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன் போல.

485
00:41:14,725 --> 00:41:16,977
இருக்கலாம். ஆமாம்.
அப்படி... நடந்திருக்கலாம்.

486
00:41:17,060 --> 00:41:19,062
சரி, நேற்று நடந்த கேம்மை
யாரெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள்?

487
00:41:19,146 --> 00:41:21,523
-இல்லை. வேண்டாம்.
-நான் நிறைய பார்த்து விட்டேன்.

488
00:41:21,607 --> 00:41:24,818
-நாம் பார்க்க வேண்டாம். அது தேவையில்லை.
-ஹே, கேளுங்கள். எனக்குத் தெரியும்.

489
00:41:24,902 --> 00:41:27,821
-ஆனால் இப்படித்தான் நாம் மேம்பட முடியும், சரியா?
-நல்லது.

490
00:41:27,905 --> 00:41:32,576
ஏனென்றால் சில சமயங்களில், மிக அரிதான நேரங்களில்,
மிகவும் மோசமான ஒரு கேம், அது...

491
00:41:33,285 --> 00:41:34,745
கேவலமானதா?

492
00:41:34,828 --> 00:41:35,954
பயமுறுத்துவதா?

493
00:41:36,038 --> 00:41:38,540
பெரிய அளவிலான ஒரு பேரழிவு.

494
00:41:38,624 --> 00:41:42,002
அப்படிப்பட்ட ஒரு கேமை பார்ப்பதற்கு ஒரே வழி,
மிகவும் விரைவாக பத்து மடங்கு வேகத்துடன்

495
00:41:42,085 --> 00:41:45,214
பென்னி ஹில் தீம் இசையின் பின்னணியில்
பார்ப்பது தான். இப்போது பார்க்கலாம்.

496
00:41:50,552 --> 00:41:51,762
அடச்சே.

497
00:42:00,354 --> 00:42:01,605
அடச்சே.

498
00:42:09,905 --> 00:42:10,906
சரி.

499
00:42:11,823 --> 00:42:13,450
திடமான வெற்றி

500
00:42:13,534 --> 00:42:14,743
நம்புங்கள்

501
00:42:14,826 --> 00:42:15,953
# வீ ஆர் ரிச்மண்ட்

502
00:42:54,491 --> 00:42:56,493
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

