1
00:00:32,950 --> 00:00:36,119
என் ஹாம்ஸ்ட்ரிங் நரம்பு பிரச்சினையின் போது தான்
படுக்கையில் இவ்வளவு நேரம் செலவிட்டேன்.

2
00:00:48,924 --> 00:00:50,217
மக்களிடம் நம் உறவைப் பற்றி...

3
00:00:51,677 --> 00:00:52,886
சொல்ல வேண்டுமா?

4
00:00:55,764 --> 00:00:57,474
இதை இரகசியமாக வைப்பது தான் எனக்கு சந்தோஷம்.

5
00:00:59,434 --> 00:01:01,353
வேலை நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பழகலாம்.

6
00:01:03,021 --> 00:01:05,566
அது தவறாகவும், வேடிக்கையாகவும்
இருக்கும் இல்லையா?

7
00:01:05,649 --> 00:01:09,278
இல்லை. அது மன அழுத்தத்தை தரும்.

8
00:01:09,361 --> 00:01:10,904
என் முடியெல்லாம் நரைக்க ஆரம்பித்துவிட்டது.

9
00:01:10,988 --> 00:01:13,657
ஒரு நரை முடியைக்கூட
என்னால் பார்க்க முடியவில்லையே.

10
00:01:13,740 --> 00:01:14,992
அது என் தலையில் இல்லை.

11
00:01:16,618 --> 00:01:19,663
அது கீழேயும் இல்லை.
என் அக்குளில் உள்ளது. பாத்தீர்களா?

12
00:01:22,833 --> 00:01:24,251
பிரச்சினை தீர்ந்தது.

13
00:01:25,836 --> 00:01:29,339
வந்து, நம் உறவைப் பற்றி வெளியே சொல்லிவிட்டால்,

14
00:01:29,423 --> 00:01:30,966
என்னால் இதை அனைவரின் முன்பும்...

15
00:01:31,550 --> 00:01:32,551
வெளிப்படையாக செய்ய முடியும்.

16
00:01:33,385 --> 00:01:35,929
இந்த பேச்சை நிறுத்த மாட்டாய், அப்படித்தானே?

17
00:01:36,013 --> 00:01:37,848
இல்லை, நான் நிறுத்த மாட்டேன்.

18
00:01:41,518 --> 00:01:43,061
வந்து, இந்த வார இறுதி
எங்களுக்கு விடுமுறை தான்.

19
00:01:45,022 --> 00:01:46,190
சரி, எனக்கும் சம்மதம் தான்.

20
00:01:47,524 --> 00:01:49,401
-நாம் எங்கே போகிறோம்?
-கிரீஸுக்கு போகிறீர்களா?

21
00:01:49,484 --> 00:01:51,028
ஐயோ, கடவுளே, அம்மா!

22
00:01:53,405 --> 00:01:55,532
அற்புதம், என்னுடைய மற்றொரு சாவி
இவரிடம் தான் இருக்கு.

23
00:01:56,116 --> 00:01:57,576
என் அம்மாவை ஞாபகம் இருக்கா, சாம்?

24
00:01:57,659 --> 00:02:00,204
உங்களை முறைப்படி சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி, டெபோரா.

25
00:02:00,287 --> 00:02:02,247
இப்போது உள்ளாடையில் இருந்திருக்கக் கூடாது
என நினைக்கிறேன்.

26
00:02:02,873 --> 00:02:04,041
உடம்போடு ஒட்டிய உள்ளாடை.

27
00:02:04,708 --> 00:02:06,293
மோசமான வார்த்தைகளோடு,

28
00:02:06,376 --> 00:02:08,336
கற்பனைக்கு இடமின்றி
எல்லா பாகங்களையும் வெளிப்படுத்துகிறது.

29
00:02:08,419 --> 00:02:09,670
என்னை மன்னித்துவிடுங்கள்.

30
00:02:09,755 --> 00:02:12,633
சரி, கண்ணியமான கருத்துகள் எல்லாம் விலகிவிட்டன.

31
00:02:12,716 --> 00:02:13,800
சரி, அதை விடுங்கள், அம்மா.

32
00:02:14,343 --> 00:02:16,011
இந்த முறை என் அப்பா என்ன செய்தார்?

33
00:02:17,054 --> 00:02:18,138
அவர் இறந்துவிட்டார்.

34
00:02:49,419 --> 00:02:52,047
அவரது அப்பா இப்போது எங்கிருப்பார் என
நினைக்கிறாய்?

35
00:02:52,130 --> 00:02:53,799
இறுதி சடங்கிற்காக சவப்பெட்டியில்.

36
00:02:53,882 --> 00:02:56,635
இல்லை. அதாவது, ஆன்மீக ரீதியாக கேட்கிறேன்.

37
00:02:57,678 --> 00:02:59,304
இறுதி சடங்கிற்காக சவப்பெட்டியில்.

38
00:03:00,013 --> 00:03:01,723
நல்ல விஷயங்கள் செய்தால் சொர்க்கத்திற்கும்,

39
00:03:01,807 --> 00:03:03,559
தீய விஷயங்கள் செய்தால் நரகத்திற்கும் செல்வோம் என

40
00:03:03,642 --> 00:03:05,519
என் சிறு வயதில் நம்பியிருக்கிறேன்.

41
00:03:05,602 --> 00:03:09,731
இன்றைய காலக்கட்டத்தில், நாம் இரண்டையுமே செய்கிறோம்.
எனவே எங்கிருந்தாலும், அவர் மகிழ்ச்சியாக இருப்பார்.

42
00:03:10,315 --> 00:03:13,360
விலங்குகள் பொறுப்பான பதவியிலும்,
மனிதர்கள் செல்லப்பிராணிகளாகவும் இருப்பதுப்போன்ற

43
00:03:13,443 --> 00:03:14,862
ஒரு சொர்க்கத்தை நான் கற்பனை செய்கிறேன்.

44
00:03:15,863 --> 00:03:18,866
சிண்டி கிளாஃபோர்டின் பாதத்தில் இருக்கும்
நெருப்பிற்கு முன் சுருண்டு கிடந்தே,

45
00:03:19,700 --> 00:03:21,285
நான் நித்தியத்தை அடைய விரும்புகிறேன்.

46
00:03:21,368 --> 00:03:22,494
சரி.

47
00:03:22,578 --> 00:03:24,621
நான் புலியாக மறுபிறவி எடுக்க விரும்புகிறேன்...

48
00:03:25,956 --> 00:03:28,166
பிறகு, யார் என்னை தவறாகப் பார்த்தாலும்
அவர்களை அழித்துவிடுவேன்.

49
00:03:30,460 --> 00:03:33,088
இறந்ததற்கு பிறகு ஒருவரின் உடலை எடைப் போட்டால்,

50
00:03:33,172 --> 00:03:34,923
அது 21.3 கிராம் குறைவாக இருக்கும்,

51
00:03:35,507 --> 00:03:38,302
அது தான் ஆன்மாவின் எடை என்று சிலர் கூறுகின்றனர்.

52
00:03:39,636 --> 00:03:41,430
இதை கண்டுப்பிடித்தவர், நிச்சயமாக,
ஒருவரை எடை போட்டு,

53
00:03:41,513 --> 00:03:44,683
பிறகு அவரை கொலை செய்து, மீண்டும்
எடை போட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

54
00:03:46,101 --> 00:03:48,562
பிறக்கிறோம், இறக்கிறோம்,
அதோடு எல்லாம் முடிந்துவிடும்.

55
00:03:48,645 --> 00:03:49,771
குட் நைட்.

56
00:03:52,900 --> 00:03:55,569
-அவனுக்கு மாதவிடாய் போலும்.
-சரி, சரி.

57
00:03:56,987 --> 00:04:00,908
ஓய், இந்த இறுதி சடங்கிற்கு நாம் அனைவரும்
ஒரு குழுவாக செல்கிறோம்.

58
00:04:01,825 --> 00:04:05,954
அப்படியென்றால் டை, சட்டை...

59
00:04:07,247 --> 00:04:09,374
-மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ போடக்கூடாது.
-என்ன?

60
00:04:10,792 --> 00:04:11,793
சரி.

61
00:04:11,877 --> 00:04:13,795
சரி, தரமான ஈஸீ ஷூக்களை அணிந்தால் பரவாயில்லையா?

62
00:04:13,879 --> 00:04:15,797
-ஆம்.
-என்ன நிறம்?

63
00:04:17,507 --> 00:04:18,591
பிரகாசமான சிவப்பு.

64
00:04:21,637 --> 00:04:23,680
சரி, உடைக்கு ஏற்ற
சாதாரண ஷூவையே போட்டுக்கொள்கிறேன்.

65
00:04:24,765 --> 00:04:26,225
உடைக்கு ஏற்ற சாதாரண ஷூவை எங்கு வாங்குவது?

66
00:04:26,308 --> 00:04:28,143
நடுஇரவிலிருந்து, அடுத்த நாள் வரை
வரிசையில் நின்று

67
00:04:28,227 --> 00:04:30,020
புது ஷூக்களை வாங்குவதற்கு எனக்கு நேரம் இல்லை.

68
00:04:30,103 --> 00:04:32,481
இந்த ஷூக்களுக்காக
நீ அப்படி செய்ய வேண்டியதில்லை, நண்பா.

69
00:04:32,564 --> 00:04:33,941
இவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.

70
00:04:47,704 --> 00:04:50,916
அடக் கடவுளே! மோசமான பாடல்!

71
00:04:51,500 --> 00:04:53,460
அம்மா, அதை நிறுத்துங்கள்!

72
00:04:54,336 --> 00:04:55,754
பொறு, சாஸேஜ்.

73
00:04:55,838 --> 00:04:57,130
பொறு. நீ பேசுவது கேட்கவில்லை.

74
00:04:57,214 --> 00:04:59,258
கண்டிப்பாக உங்களுக்கு கேட்காது.

75
00:05:00,676 --> 00:05:02,928
-உனக்கு என்ன வேண்டும்?
-ஏன் அந்த பாடலை போட்டிருக்கிறீர்கள்?

76
00:05:03,011 --> 00:05:06,682
மன்னித்துவிடு. நான் விழிக்கும்போது வீட்டிலுள்ள
எல்லா அறைகளிலும் இந்த பாடலை ஒலிக்கச் செய்வேன்.

77
00:05:06,765 --> 00:05:08,308
அது எனக்கு ஒரு சந்தோஷமான உணர்வைத் தரும்.

78
00:05:08,392 --> 00:05:11,103
வந்து, இன்று நீங்கள் சந்தோஷமாக உணரக் கூடாதே.

79
00:05:11,186 --> 00:05:13,397
ஒவ்வொரு நாளும் நாம்
சந்தோஷமாக இருக்க வேண்டும், ரெபேக்கா.

80
00:05:13,480 --> 00:05:14,731
அதை பற்றி பேச விரும்புகிறாயா?

81
00:05:15,524 --> 00:05:17,317
இல்லை... நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.

82
00:05:17,401 --> 00:05:19,570
நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை.

83
00:05:20,153 --> 00:05:22,698
சிறு வயதில் உனக்கு இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்.

84
00:05:22,781 --> 00:05:24,825
ஆமாம், இந்த உலகிற்கே அந்த பாடல் பிடிக்கும் தான்.

85
00:05:24,908 --> 00:05:27,786
அதை மீண்டும் மீண்டும் கேட்டு,
இப்போது பிடிக்காமலேயே போய்விட்டது.

86
00:05:27,870 --> 00:05:29,746
ஆனால், நான் அப்படி இல்லை.

87
00:05:29,830 --> 00:05:31,874
எனக்கு ஒன்று பிடித்துவிட்டால்,
என்றைக்குமே அது எனக்குப் பிடிக்கும்.

88
00:05:35,502 --> 00:05:37,921
இந்த அறையை உங்களுக்கு பிடித்தவாறு,
எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள்.

89
00:05:38,839 --> 00:05:40,591
எனக்காக இதை இப்படியே
வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

90
00:05:42,134 --> 00:05:45,512
இல்லை, இது நாம் நெருக்கமாக இருந்ததை
நினைவுப்படுத்துகிறது.

91
00:05:45,596 --> 00:05:47,389
இது இப்படி இருப்பது தான் எனக்கு பிடிச்சிருக்கு.

92
00:05:48,765 --> 00:05:50,350
அடுத்து என்ன பாடல் போட வேண்டும்
என எனக்குத் தெரியும்.

93
00:05:50,434 --> 00:05:52,352
ஐயோ!

94
00:05:52,436 --> 00:05:53,729
குட் மார்னிங், ஸ்டிங்க்கி.

95
00:05:58,775 --> 00:06:01,195
என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

96
00:06:01,278 --> 00:06:02,905
இதை இப்பவும் என்னால் செய்ய முடியுமா என்று
பார்க்க விரும்பினேன்.

97
00:06:03,405 --> 00:06:06,491
அந்த ட்ரேசி ஆண்டர்சனின் உடற்பயிற்சி
நல்ல விளைவை தந்திருக்கிறது.

98
00:06:06,575 --> 00:06:07,951
நோரா, சீக்கிரம் வா!

99
00:06:08,035 --> 00:06:10,787
கவனமாக ஏறி வருவதற்காக
நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

100
00:06:10,871 --> 00:06:13,081
உன் வயதில், நான் இதை
நொடியில் செய்து முடித்துவிடுவேன்.

101
00:06:13,165 --> 00:06:14,166
உண்மை தான்.

102
00:06:14,249 --> 00:06:15,542
குடிபோதையில் இருக்கும் போது மட்டும்.

103
00:06:15,626 --> 00:06:17,753
ஃப்ளாரென்ஸ், உன்னை பார்த்து
எவ்வளவு நாளாகிவிட்டது, அன்பே.

104
00:06:17,836 --> 00:06:19,838
-டெபோரா.
-வருகைக்கு நன்றி.

105
00:06:20,756 --> 00:06:23,383
உங்களுக்கு என்ன உதவி தேவையென்றாலும்,
என்னையும் நோராவையும் அழைக்கலாம், சரியா?

106
00:06:23,467 --> 00:06:24,718
அப்படித்தானே, நோரா?

107
00:06:25,969 --> 00:06:27,888
-நோரா!
-அட, கடவுளே.

108
00:06:30,849 --> 00:06:31,975
நான் நன்றாக இருக்கிறேன்.

109
00:06:37,564 --> 00:06:39,399
இறுதி சடங்குகள் வித்தியாசமானவை, இல்லையா?

110
00:06:39,483 --> 00:06:40,776
ஆமாம்.

111
00:06:40,859 --> 00:06:41,944
ஆமாம்.

112
00:06:42,986 --> 00:06:44,988
ஆனால் அது சோகமானவர்களுக்கு

113
00:06:45,072 --> 00:06:46,365
கொடுக்கப்படும் விருந்து போன்றது.

114
00:06:47,366 --> 00:06:50,118
அதாவது, அங்கு சென்று சோகமாக
இருக்க வேண்டும் என எல்லாருக்கும் தெரியும்.

115
00:06:51,411 --> 00:06:52,829
ஒருவேளை நாம் சோகமாக இல்லாமல் இருந்தாலும்,

116
00:06:53,455 --> 00:06:55,123
அங்கு சென்ற பின் சோகமாகத்தான் இருக்க வேண்டும்.

117
00:06:56,208 --> 00:06:57,334
இது விநோதம் தானே.

118
00:06:57,417 --> 00:06:58,836
ஆம், இது மோசமான விஷயம்.

119
00:07:01,171 --> 00:07:04,299
ராய், நீ இறந்துவிட்டால், உன்னை அடக்கம் செய்ய
வேண்டுமா அல்லது இல்லை எரிக்க வேண்டுமா?

120
00:07:04,383 --> 00:07:06,802
அதாவது, இன்று ஒரு பேருந்து உன் மீது
மோதிவிட்டால், நான் என்ன செய்ய வேண்டும்?

121
00:07:07,970 --> 00:07:11,181
அந்த பேருந்து ஓட்டுனரை பிடித்து அவன் எனக்கு செய்த
செயலுக்காக அவனை தண்டிக்க வேண்டும்.

122
00:07:11,265 --> 00:07:12,850
எனக்காக பழிவாங்கு, கீலி.

123
00:07:12,933 --> 00:07:14,393
எனக்காக பழிவாங்கு!

124
00:07:16,311 --> 00:07:18,230
இந்த இறுதிச் சடங்கு உன்னை குழப்புகிறது, அல்லவா?

125
00:07:18,313 --> 00:07:19,982
எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம்,

126
00:07:20,899 --> 00:07:23,861
நம் உடலை ஒரு மக்கும்
சாக்கில் போட்டு புதைக்கிறார்கள்.

127
00:07:23,944 --> 00:07:25,779
எனவே நம் உடல் அழுகும் போது,

128
00:07:25,863 --> 00:07:28,240
அது ஒரு மரத்தின் விதைக்கு உரமாகும்.

129
00:07:28,323 --> 00:07:29,616
அது தான் எனக்கு வேண்டும்.

130
00:07:29,700 --> 00:07:31,785
ஏனென்றால் அப்போது தான்,
நீயும் என்னை நேசிக்கு மற்றவர்களும்

131
00:07:31,869 --> 00:07:33,537
என் மரத்தில் இருந்து வரும்
கனியை சாப்பிட முடியும்.

132
00:07:33,620 --> 00:07:35,247
இது பைத்தியக்காரத்தனம்.

133
00:07:35,330 --> 00:07:38,959
ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக தடுமாறி
தற்செயலாக உன்னைக் கொன்றதற்காக

134
00:07:39,042 --> 00:07:42,171
அந்த பேருந்து ஓட்டுனரின் வாழ்க்கையை நான் நாசமாக்க
வேண்டும் என்று சொன்ன நீ இப்படி சொல்கிறாய்.

135
00:07:42,254 --> 00:07:44,256
அந்த குழந்தையைப் பற்றி எனக்குத் தெரியாது.

136
00:07:46,800 --> 00:07:49,595
என் இறப்பு மக்களை செழிக்க வைக்கும் என்ற
யோசனை எனக்குப் பிடிச்சிருக்கு.

137
00:07:49,678 --> 00:07:51,972
உன் அழுகிய சடலத்திலிருந்து வந்த பழத்தின் மூலமா?

138
00:07:52,598 --> 00:07:53,891
நான் அதை சாப்பிட மாட்டேன்.

139
00:07:54,808 --> 00:07:57,227
ஆனால் முடி விழுந்த கபாபை சாப்பிடுவாய் தானே?

140
00:07:57,311 --> 00:07:59,188
முடி யாருடையது என தெரிந்தால்,
பிரச்சினையே இல்லை.

141
00:07:59,271 --> 00:08:01,398
இதுவும் வியாபாரத்தின் ஒரு அங்கம் தான்.
அவர் நல்லவர்.

142
00:08:03,192 --> 00:08:05,736
-நீ உண்மையில் கோபமாக இல்லை தானே?
-நான் கோபமாகத்தான் இருக்கிறேன்.

143
00:08:06,236 --> 00:08:08,906
இப்போது நாம் ஒரு இறுதிச் சடங்கிற்கு சென்று
சோகமாக இருப்பதுப் போல் நடிக்க வேண்டும்.

144
00:08:12,201 --> 00:08:13,327
ஆனால் நான் சோகமாகத்தான் இருக்கிறேன்.

145
00:08:42,105 --> 00:08:45,025
டெட், எனக்காக நீங்கள் செய்த
எல்லாவற்றிற்காகவும் நன்றி - நேத்தன்

146
00:08:57,162 --> 00:08:58,372
அடச்சே.

147
00:09:08,006 --> 00:09:10,050
உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறோம்.

148
00:09:10,133 --> 00:09:12,886
அடடே. நீங்கள் வந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.

149
00:09:12,970 --> 00:09:15,597
-கண்டிப்பாக வர வேண்டுமே.
-அப்பாவுக்கு உங்கள் இருவரையுமே ரொம்ப பிடிக்கும்.

150
00:09:19,768 --> 00:09:20,936
யார் அவர்கள்?

151
00:09:21,019 --> 00:09:22,187
எனக்குத் தெரியாது.

152
00:09:22,855 --> 00:09:24,523
என் அன்பே, டெபோரா.

153
00:09:24,606 --> 00:09:25,649
ரூபெர்ட்.

154
00:09:25,732 --> 00:09:27,776
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

155
00:09:29,319 --> 00:09:30,654
நீங்கள் வருவீர்கள் என நான் நினைக்கவில்லை.

156
00:09:31,238 --> 00:09:32,781
பாலும் என் குடும்பம் தான், ரெபேக்கா.

157
00:09:32,865 --> 00:09:34,700
அதாவது உங்களை அழைக்கவில்லையே,
அதனால் கேட்டேன்.

158
00:09:35,576 --> 00:09:37,661
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ரூப்பி.

159
00:09:41,331 --> 00:09:43,166
இதோ டையனை அறிமுகப்படுத்துகிறேன்.

160
00:09:44,710 --> 00:09:46,253
ரொம்ப கொழு கொழுவென்ற ஒரு குழந்தை.

161
00:09:47,671 --> 00:09:50,632
வாழ்த்துக்கள், அம்மா.
ஒரு குழந்தையை அழ வைத்துவிட்டீர்கள்.

162
00:09:50,716 --> 00:09:52,134
இங்கே வா.

163
00:09:57,723 --> 00:10:00,517
இதோ, இது தான் மந்திர தொடுதல்.

164
00:10:00,601 --> 00:10:02,019
அது மந்திரமல்ல.

165
00:10:02,102 --> 00:10:05,355
நான் நஞ்சுக்கொடியை அப்படியே சாப்பிட்டுவிட்டேன்.
அது அவளுக்குத் தெரியும்.

166
00:10:07,107 --> 00:10:09,151
ஆமாம், வீட்டிலிருந்த
எல்லா டிவியையும் நீக்கிவிட்டேன்.

167
00:10:09,234 --> 00:10:11,153
நாள் முழுவதும் உட்கார்ந்து,
இவர்களைப் பார்த்து ரசிக்கிறேன்.

168
00:10:11,236 --> 00:10:12,571
அருமையான விஷயம்.

169
00:10:12,654 --> 00:10:14,114
இதோ வருகிறேன்.

170
00:10:19,036 --> 00:10:20,871
#நாங்கள்
ரிச்மண்ட்

171
00:10:23,040 --> 00:10:24,917
-என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-நன்றி, லெஸ்லி.

172
00:10:26,043 --> 00:10:27,294
வருந்துகிறேன், மிஸ். வெல்டன்.

173
00:10:29,713 --> 00:10:30,797
உங்கள் இழப்பிற்காக வருந்துகிறேன்.

174
00:10:30,881 --> 00:10:33,342
-எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?
-எல்லோருமே.

175
00:10:37,721 --> 00:10:40,015
ஒருவருமே ஸ்போர்ட்ஸ் ஷூ அணியவில்லையே.

176
00:10:40,098 --> 00:10:41,767
அந்த அளவுக்கு
உங்கள் மீது அக்கறைக் கொண்டுள்ளார்கள்.

177
00:10:43,644 --> 00:10:46,772
-எனக்கு கால் வலிக்கிறது, நண்பா.
-கொஞ்ச நேரத்தில் உட்கார்ந்துவிடுவோம், நண்பா.

178
00:10:48,440 --> 00:10:49,441
மூச்சை இழுத்து விடு, நண்பா.

179
00:10:50,567 --> 00:10:52,361
-ரெபேக்கா.
-சாம்.

180
00:10:52,945 --> 00:10:57,157
மற்றும் காலின், ஐசக் மற்றும் நேத்தன்.

181
00:10:57,783 --> 00:11:00,744
அனைவரும் இங்கு வந்ததற்காக மிக்க நன்றி.

182
00:11:00,827 --> 00:11:02,287
உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறேன்.

183
00:11:02,371 --> 00:11:03,830
ஆமாம், உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறேன்.

184
00:11:04,706 --> 00:11:05,958
ஆமாம்...

185
00:11:07,042 --> 00:11:10,462
அப்பாக்கள் தான் முக்கியமான...

186
00:11:14,132 --> 00:11:17,010
மன்னிக்கவும்... அவர்கள் சொன்னதையே நானும்
சொல்ல விரும்பவில்லை, எனவே தான்...

187
00:11:17,594 --> 00:11:18,679
உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறேன்.

188
00:11:37,072 --> 00:11:38,115
சாஸே.

189
00:11:38,699 --> 00:11:41,076
வயதான சோம்பேறி.

190
00:11:41,159 --> 00:11:45,205
என்ன, சாஸ். நடந்ததையெல்லாம் விட்டுத்தள்ளு, சரியா?

191
00:11:45,289 --> 00:11:48,041
எனக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறாள்.
நான் மாறிவிட்டேன்.

192
00:11:48,125 --> 00:11:49,376
சரி.

193
00:11:49,960 --> 00:11:51,712
ஒரு பெண்ணுக்கு செய்த மோசமான
விஷயங்கள் எல்லாவற்றையும்

194
00:11:51,795 --> 00:11:54,882
ஒரு மகள் பிறந்து அழித்துவிட்டாள்.

195
00:11:54,965 --> 00:11:56,008
அருமை.

196
00:11:56,842 --> 00:12:02,306
ஒவ்வொரு நாளும் உன்னுடைய மரணத்தை
பற்றி தான் நான் யோசிப்பேன், ரூபெர்ட்.

197
00:12:02,973 --> 00:12:03,974
மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

198
00:12:05,184 --> 00:12:07,394
உன் இறுதிசடங்கிற்கு சிவப்பு ஆடையில் தான்
நான் வருவேன்.

199
00:12:08,020 --> 00:12:12,941
அங்கு இருக்கும் மற்ற மூன்று பேருக்கு நான்
மகிழ்ச்சியின் வழிக்காட்டியாக இருப்பேன்.

200
00:12:15,152 --> 00:12:16,403
சந்தித்ததில் மகிழ்ச்சி, சாஸே.

201
00:12:16,486 --> 00:12:18,614
போய் தொலை, ரூபெர்ட்.

202
00:12:22,117 --> 00:12:25,370
கோச் லாஸ்ஸோ

203
00:12:28,248 --> 00:12:29,583
குட் மார்னிங், டெட்.

204
00:12:32,961 --> 00:12:34,129
சரி.

205
00:12:35,255 --> 00:12:38,300
நீங்கள்... நன்றாக தான் இருக்கிறீர்கள், டெட்.

206
00:12:38,383 --> 00:12:39,885
கொஞ்சம் மூச்சு விடுங்கள்.

207
00:12:40,636 --> 00:12:43,263
4-7-8 என்ற முறையில் மூச்சு விடுங்கள்.

208
00:12:45,015 --> 00:12:47,351
உங்களால் முடியும். முயற்சி செய்யுங்கள்.

209
00:12:47,434 --> 00:12:48,894
நான் அங்கு தான் வருகிறேன்.

210
00:12:59,154 --> 00:13:00,239
அந்த குழந்தை நன்றாகவே இல்லை.

211
00:13:01,323 --> 00:13:03,116
எனக்காக அப்படி சொல்லாதே.

212
00:13:03,200 --> 00:13:04,785
நான் சும்மா சொல்லவில்லை.
நிஜமாகத்தான் சொல்கிறேன்.

213
00:13:05,744 --> 00:13:07,996
அந்த குழந்தை மோசமாக இருக்கிறது.
எனக்கு பிடிக்கவில்லை.

214
00:13:09,456 --> 00:13:11,750
-நான் உன்னை நேசிக்கிறேன்.
-நானும் தான்.

215
00:13:12,876 --> 00:13:15,003
-எதுவானாலும் சரி, நான் உங்களுக்காக இருப்பேன்.
-எனக்குத் தெரியும்.

216
00:13:16,088 --> 00:13:17,381
நான் உங்களை விட்டு விலக மாட்டேன்.

217
00:13:17,965 --> 00:13:21,635
-ஜோன்ஸ்!
-சாஸே! அட, கடவுளே!

218
00:13:23,470 --> 00:13:24,972
ஹாய்!

219
00:13:26,640 --> 00:13:27,850
எனக்கு பழகிவிட்டது.

220
00:13:28,767 --> 00:13:30,018
உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறேன்.

221
00:13:30,686 --> 00:13:33,730
-நீ அழகாக இருக்கிறாய்!
-உங்களை பார்த்ததில் சந்தோஷம். நன்றி.

222
00:13:33,814 --> 00:13:35,649
ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் போகலாம்.

223
00:13:35,732 --> 00:13:36,942
கடவுளே.

224
00:13:37,609 --> 00:13:39,027
நாம் சோகமாக இருக்க வேண்டும்
என நினைக்கிறேன்.

225
00:13:39,111 --> 00:13:40,863
ஆமாம்.

226
00:13:40,946 --> 00:13:42,656
இறுதிச்சடங்குகள் எல்லாம்
வினோதமாக இருக்கின்றன.

227
00:13:42,739 --> 00:13:45,242
அதைப் பற்றி தான் நான் சற்று முன்பு
பேசிக் கொண்டிருந்தேன்.

228
00:13:45,742 --> 00:13:48,620
-இறக்கும்போது நீங்களும் மரமாக விரும்புகிறீர்களா?
-நிச்சயமாக.

229
00:13:48,704 --> 00:13:50,622
அல்லது ஒரு அறிவுக்கெட்ட நாயாகக் கூட.

230
00:13:51,748 --> 00:13:53,208
இரண்டுமே அற்புதமாகத்தான் இருக்கும்.

231
00:13:54,126 --> 00:13:55,169
சரி.

232
00:13:55,252 --> 00:13:56,503
சரி, டெட் எங்கே?

233
00:13:57,421 --> 00:13:59,882
-சாஸேயும் டெட்டும், மரத்தில் உட்கார்ந்துக் கொண்டு.
-அட, கடவுளே.

234
00:13:59,965 --> 00:14:03,427
-உறவுகொள்கிறார்கள்.
-வாயை மூடு, முட்டாளே.

235
00:14:04,595 --> 00:14:07,806
என்னை மன்னித்துவிடு.
அழகான பெண்களிடம் நான் இப்படித்தான் பேசுவேன்.

236
00:14:07,890 --> 00:14:09,474
நன்றி, சாஸ்.

237
00:14:10,893 --> 00:14:12,853
சரி, விஷயம் தெரியுமா,

238
00:14:12,936 --> 00:14:15,314
ரெபேக்கா யாருக்கும் தெரியாமல் ஒருவரை
டேட்டிங் செய்கிறார் என நினைக்கிறேன்.

239
00:14:15,397 --> 00:14:16,982
-என்னது?
-வந்து, சில வாரங்களாக.

240
00:14:17,566 --> 00:14:19,610
அது யாரென்று

241
00:14:19,693 --> 00:14:23,071
அவளிடம் கேட்பதற்கு
இன்று சரியான நாளாக இருக்குமா?

242
00:14:23,822 --> 00:14:25,407
நாம் கேட்காவிட்டால் நமக்கு
தெரியாமலே போய்விடும்.

243
00:14:31,705 --> 00:14:33,248
-கீலி.
-ஜேமி.

244
00:14:33,749 --> 00:14:35,125
அடடா, அருமையான உடை.

245
00:14:36,126 --> 00:14:37,586
எல்லோரும் தான். அழகாக உள்ளீர்கள்.

246
00:14:40,088 --> 00:14:42,257
பார். ஹேய். இங்கே வா.

247
00:14:42,341 --> 00:14:44,551
இது தான்...
டெட் உனக்கு வாங்கிக் கொடுத்த உடையா?

248
00:14:45,135 --> 00:14:46,386
-என்ன, இதுவா?
-சரி.

249
00:14:47,304 --> 00:14:48,514
எனக்கு ஞாபகம் வரவில்லை...

250
00:14:48,597 --> 00:14:50,766
ஆமாம். இது தான்.

251
00:14:50,849 --> 00:14:52,226
ஆம்... இது தான்.

252
00:14:52,309 --> 00:14:53,894
-அருமை, இது நன்றாக இருக்கிறது.
-நன்றி.

253
00:14:53,977 --> 00:14:57,022
இன்னொருவர் நமக்கு ஆடை வாங்கித் தருவது
நம்மை குழந்தையாக காட்டும், இல்லையா?

254
00:15:00,526 --> 00:15:01,985
அடச்சே.

255
00:15:02,986 --> 00:15:06,323
வந்து, இல்லை. அவர் ஒன்றும் எல்லா
ஆடைகளையும் வாங்கித் தரவில்லை.

256
00:15:06,406 --> 00:15:08,492
பெரும்பாலான ஆடைகளை என் அம்மா
எனக்காக பரிசாக கொடுத்தார்.

257
00:15:10,118 --> 00:15:11,453
நாம் போகலாம்.

258
00:15:16,834 --> 00:15:18,168
அது ஆப்பிளா?

259
00:15:18,252 --> 00:15:19,253
ஆமாம்.

260
00:15:20,212 --> 00:15:21,880
வெளியிலிருந்த மரத்தில் பறித்தேன்.

261
00:15:22,464 --> 00:15:23,841
இறந்தவர்கள் போல சுவைக்கிறது.

262
00:15:23,924 --> 00:15:25,843
இது வேடிக்கை இல்லை, ராய்.

263
00:15:25,926 --> 00:15:29,179
இல்லை, ஆனால் ஆச்சரியமாக சுவையாகவே இருக்கிறது.

264
00:15:32,808 --> 00:15:35,686
மகிழ்ச்சியாக இரு, கீலி.
இது வெறும் இறுதிச் சடங்கு தான்.

265
00:15:41,859 --> 00:15:44,152
ஜேமி, இந்த ஷூக்களை எனக்கு பிடிக்கவில்லை.

266
00:15:45,654 --> 00:15:47,281
தெரியும், நண்பா.

267
00:15:47,364 --> 00:15:49,616
ஏனென்றால், அவை நமக்காக உருவாக்கப்படவில்லை.

268
00:15:50,284 --> 00:15:51,618
இவை ஆடுகளுக்காக உருவாக்கப்பட்டவை.

269
00:15:52,703 --> 00:15:54,621
மக்கிள்ஸ்காக உருவாக்கப்பட்டவை.

270
00:15:55,539 --> 00:15:56,832
முட்டாள்களுக்காக உருவாக்கப்பட்டவை.

271
00:15:56,915 --> 00:16:00,711
வீட்டிற்கு சென்று, நான் இவற்றை எரித்து,
இந்த நினைவுகளை நரகத்திற்கு அனுப்புவேன்.

272
00:16:00,794 --> 00:16:02,296
கடவுளே, டானி.

273
00:16:03,463 --> 00:16:06,967
இந்த ஷூக்களைப்பற்றிய பேச்சில்
கடவுளுக்கு இடமில்லை.

274
00:16:43,045 --> 00:16:44,254
எப்படி இருக்கிறீர்கள், டெட்?

275
00:16:45,631 --> 00:16:46,757
நன்றாக இருக்கிறேன், தெரியுமா?

276
00:16:46,840 --> 00:16:48,175
சிறப்பாக இல்லை, நன்றாக இருக்கிறேன்.

277
00:16:48,967 --> 00:16:49,968
நல்லது.

278
00:16:53,138 --> 00:16:54,431
ஏனென்றால் ஒருவர் சிறப்பாக இல்லை என்று

279
00:16:54,515 --> 00:16:56,433
சொல்லும் போது தான்,
என்னால் அவர்களுக்கு உதவ முடியும்.

280
00:16:57,976 --> 00:16:58,977
சரி.

281
00:17:00,812 --> 00:17:02,064
நான் உட்காரலாமா?

282
00:17:02,147 --> 00:17:03,690
டாக்டர் உட்காருவார் என நினைக்கிறேன்.

283
00:17:11,114 --> 00:17:13,534
உங்களுக்கு ஒரு கப் டீ அல்லது
வேறு ஏதாவது குடிக்க வேண்டுமா?

284
00:17:13,617 --> 00:17:15,993
இல்லை, வேண்டாம். எனக்கு டீ பிடிக்காது.

285
00:17:16,078 --> 00:17:17,579
ஒரு ஈரமான காகித பை போல சுவைக்கும்.

286
00:17:22,416 --> 00:17:23,794
நான் என்ன வேண்டுமானாலும் சொல்கிறேன்.

287
00:17:28,924 --> 00:17:31,802
நான் இறைவனை கும்பிடும்
ஒரு சரியான இடத்தில்...

288
00:17:31,885 --> 00:17:34,721
இது வரைக்கும் இருந்ததில்லை, எனவே...

289
00:17:36,098 --> 00:17:38,976
உன் பிரிவால் வாடுகிறேன், அதோடு...
நீ இங்கிருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

290
00:17:39,059 --> 00:17:41,770
நானும் தான். எனக்கு இறுதி சடங்குகள் பிடிக்கும்.

291
00:17:41,854 --> 00:17:43,188
இது திறந்த கேஸ்கெட் சடங்கா?

292
00:17:43,272 --> 00:17:45,524
அப்படித்தான் நினைக்கிறேன்.
நான் பார்க்க விரும்புகிறேன்.

293
00:17:46,316 --> 00:17:47,317
நானும் தான்.

294
00:17:48,527 --> 00:17:49,695
என்ன தெரியுமா?

295
00:17:51,780 --> 00:17:53,115
சரி, சரி, சரி.

296
00:17:55,158 --> 00:17:58,871
-உண்மையாகவா சொல்கிறாய்.
-கண்டிப்பாக உண்மை தான்!

297
00:18:00,038 --> 00:18:01,540
என்ன? அது உண்மை தான்.

298
00:18:01,623 --> 00:18:04,293
என் சிறு வயதில், சர்ச்சைப்பற்றி எனக்கு மிகவும்
பிடித்த விஷயமே பாவ மன்னிப்பு கேட்பது தான்.

299
00:18:04,376 --> 00:18:05,377
அது மனதை லேசாக்கியது.

300
00:18:05,460 --> 00:18:08,046
அங்கே உட்கார்ந்து என் மூளையில் இருந்த கேவலமான
விஷயங்களை ஒப்பு கொள்வேன்.

301
00:18:09,464 --> 00:18:12,843
ஓ, கடவுளே. ஒரு சமயம், அந்த போதகரை
வெட்கப்படவும், ஏப்பம் விடவும் செய்தேன்.

302
00:18:13,760 --> 00:18:15,095
ஆமாம்.

303
00:18:15,179 --> 00:18:18,390
உங்களை மெல்லமாக பேசச் சொல்லும் படி
என்னை அனுப்பியுள்ளார்கள்.

304
00:18:20,017 --> 00:18:21,435
ஆனால் நான் இதையும் கொண்டு வந்துள்ளேன்.

305
00:18:21,518 --> 00:18:24,229
-நல்ல வேலை.
-நல்லது.

306
00:18:24,313 --> 00:18:26,023
வெள்ளை அங்கி அணிந்த
ஒரு சிறுவனிடம் இருந்து திருடினேன்.

307
00:18:26,106 --> 00:18:27,983
இல்லை, சாஸ்.

308
00:18:28,066 --> 00:18:30,027
எனவே, ஸ்டிங்கி.

309
00:18:30,527 --> 00:18:33,864
-நீ யாரோடு ரகசியமாக உறவு கொள்கிறாய்?
-என்ன?

310
00:18:33,947 --> 00:18:36,241
அப்படி இல்லை என்று நீங்கள்
நடிக்க வேண்டாம், சரியா?

311
00:18:36,992 --> 00:18:39,036
நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? ஹ்ம்?

312
00:18:39,620 --> 00:18:42,164
அந்த டேட்டிற்கு பிறகு வந்த மோசமான தகவல்,

313
00:18:42,247 --> 00:18:44,958
இரண்டு வாரங்களாக வேலை நேரத்திற்கு பிறகு
என்னால்உங்களைப் பார்க்க முடியவில்லை,

314
00:18:45,792 --> 00:18:47,794
இன்று உங்களுடைய அப்பாவின் இறுதி சடங்காக
இருந்த போதிலும்,

315
00:18:47,878 --> 00:18:50,047
உல்லாசமாக இருந்ததை பிரதிபலிக்கும்
முகத்தோடு இருக்கிறீர்கள்.

316
00:18:50,714 --> 00:18:51,715
கடவுளே.

317
00:18:53,926 --> 00:18:55,052
அடச்சே.

318
00:18:56,386 --> 00:18:59,640
-எனக்குத் தெரியும்!
-அட, கடவுளே! நீ சொன்னது சரிதான்!

319
00:18:59,723 --> 00:19:03,310
உங்களை மெல்லமாக பேசச் சொல்லும் படி
என்னை அனுப்பியுள்ளார்கள்.

320
00:19:03,393 --> 00:19:05,437
அந்த பாதிரியார் திட்டுவது போல
உங்களைப் பார்த்தார்.

321
00:19:05,521 --> 00:19:06,813
ஒன்றும் பிரச்சினை இல்லையே?

322
00:19:06,897 --> 00:19:07,898
ஒன்றுமில்லை.

323
00:19:07,981 --> 00:19:10,275
ரெபேக்கா யாருடன் உறவில் ஈடுபட்டிருக்கிறார் என
கண்டுபிடிக்க முயல்கிறோம்.

324
00:19:10,359 --> 00:19:11,652
எனக்குத் தெரியுமே.

325
00:19:12,569 --> 00:19:13,779
அது நல்ல விஷயம் தான்.

326
00:19:13,862 --> 00:19:14,947
அம்மா.

327
00:19:15,030 --> 00:19:17,115
இரு... கொஞ்சம் பொறுங்கள்.

328
00:19:17,199 --> 00:19:18,784
சரி, நாம் 20 கேள்விகள் கேட்கலாம்.

329
00:19:18,867 --> 00:19:21,995
-சரி. சரி!
-ஓ, இது... பரபரப்பானது.

330
00:19:22,079 --> 00:19:23,872
அவன் உயரமானவனா?

331
00:19:24,957 --> 00:19:25,958
ஆமாம்.

332
00:19:26,542 --> 00:19:29,211
-அது சாமா?
-உனக்கு எப்படி தெரிந்தது?

333
00:19:29,920 --> 00:19:32,214
-ஓ, கடவுளே! எனக்கு தெரிந்துவிட்டது!
-இல்லை!

334
00:19:34,341 --> 00:19:36,218
தயவுசெய்து, ஒரு நிமிடம் காத்திருங்கள்.

335
00:19:37,177 --> 00:19:38,178
என்ன?

336
00:19:39,346 --> 00:19:41,348
-நான் கண்டுபிடித்துவிட்டேன்!
-அட, கடவுளே!

337
00:19:41,431 --> 00:19:42,558
போதும்!

338
00:19:42,641 --> 00:19:43,725
அட, கடவு...

339
00:19:44,393 --> 00:19:46,895
தயவுசெய்து, நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர
மற்ற எல்லோரும் வெளியே போங்கள்.

340
00:19:46,979 --> 00:19:48,480
நீ ரொம்பவும் மோசம்.

341
00:19:49,731 --> 00:19:51,108
நீ தான் அப்படி.

342
00:19:54,486 --> 00:19:55,737
மன்னித்துவிடு.

343
00:19:56,572 --> 00:19:59,074
மோசமான தலைவி.

344
00:20:00,826 --> 00:20:02,119
என்னை மன்னித்துவிடுங்கள், ஃபாதர்.

345
00:20:04,413 --> 00:20:06,248
மன்னிக்கவும், இது மோசமான நடத்தை தான்.

346
00:20:12,129 --> 00:20:14,756
டெட், உங்களுக்கு பயமாக இருந்தது ஒன்றும்
ஆச்சரியமில்லை.

347
00:20:15,841 --> 00:20:17,801
இந்த இறுதி சடங்கிற்கு போவது

348
00:20:17,885 --> 00:20:20,554
உங்களுடைய அப்பாவின் இறுதி சடங்கிற்கு சென்ற
நினைவுகளை திரும்ப கொண்டு வரலாம்.

349
00:20:22,723 --> 00:20:24,016
இல்லை, இல்லை, இல்லை.

350
00:20:24,099 --> 00:20:25,726
நான் என் அப்பாவின் இறுதி சடங்கிற்கு போகவே இல்லை.

351
00:20:26,226 --> 00:20:27,603
சரி, ஏன் போகவில்லை?

352
00:20:28,187 --> 00:20:29,438
ஏனென்றால் அவர் விலகிவிட்டார்.

353
00:20:31,899 --> 00:20:33,317
தன்னுடைய குடும்பத்தை விட்டு விலகிவிட்டார்.

354
00:20:34,610 --> 00:20:35,986
தன்னையே விட்டு விலகிவிட்டார்.

355
00:20:38,488 --> 00:20:41,658
அதற்காக அவரை நான் வெறுத்தேன்.

356
00:20:45,412 --> 00:20:47,164
இப்பவும் அவரை வெறுப்பதாக நினைக்கிறேன்.

357
00:20:50,000 --> 00:20:51,376
ஆமாம், வெறுக்கிறீர்கள், டெட்.

358
00:20:54,546 --> 00:20:55,881
அது பரவாயில்லை.

359
00:20:56,798 --> 00:20:58,258
உங்களுடைய அப்பாவிற்கு நேர்ந்தது

360
00:20:58,342 --> 00:21:01,136
யாராலும் புரிந்துகொள்ள முடியாத, குறிப்பாக

361
00:21:01,220 --> 00:21:03,096
அவருடைய பதின்வயது மகனால்
புரிந்துகொள்ள முடியாத விஷயம்.

362
00:21:09,102 --> 00:21:10,354
இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

363
00:21:13,732 --> 00:21:14,858
ஆமாம், சரிதான்.

364
00:21:15,484 --> 00:21:16,610
சரி, நல்லது.

365
00:21:17,945 --> 00:21:19,988
என்ன நடந்தது என்று என்னிடம் சொல்கிறீர்களா?

366
00:21:31,875 --> 00:21:33,836
புகழுரையில் நீ என்ன சொல்லப் போகிறாய்?

367
00:21:35,254 --> 00:21:36,630
நான் புகழுரை எதுவும் சொல்லப் போவதில்லை.

368
00:21:36,713 --> 00:21:37,840
ரெபேக்கா.

369
00:21:38,423 --> 00:21:41,468
உன் அப்பாவின் இறுதி சடங்கில் நீ எதுவும் சொல்லாமல்
இருந்தால் நன்றாக இருக்காது.

370
00:21:41,552 --> 00:21:42,719
எனக்கு கவலை இல்லை.

371
00:21:43,345 --> 00:21:45,138
சொல்வதற்கு எந்த இனிமையான விஷயமும் இல்லை.

372
00:21:45,222 --> 00:21:46,473
உனக்கு என்ன ஆச்சு?

373
00:21:46,557 --> 00:21:49,935
அவர் ஒரு நல்ல தகப்பனாக, சிறந்த கணவராக இருந்தார்.

374
00:21:51,436 --> 00:21:52,437
அப்படியா?

375
00:21:53,105 --> 00:21:54,356
எதனால் நீ இவ்வளவு கோபமாக இருக்கிறாய்?

376
00:21:54,940 --> 00:21:57,985
அதைப்பற்றி நான்
பேச விரும்பவில்லை. அதுவும் இன்று.

377
00:21:58,068 --> 00:21:59,987
குழந்தையைப் போல் நடந்து கொள்வதை நிறுத்து.

378
00:22:00,612 --> 00:22:02,322
சரி, உண்மையாகவே உங்களுக்குத் தெரிய வேண்டுமா?

379
00:22:02,406 --> 00:22:05,534
ஏனென்றால் ரகசியங்களை பாதுகாப்பது
எனக்கு பிடிக்காதது.

380
00:22:07,494 --> 00:22:11,206
அப்பா உங்களுக்கு செய்த துரோகத்தை
நான் அதைப் பார்த்துவிட்டேன்.

381
00:22:14,334 --> 00:22:15,419
நீங்கள் வெளியூர் சென்றிருந்த போது,

382
00:22:15,502 --> 00:22:18,297
நான் சாஸேயோடு அன்று இரவு
தங்க வேண்டி இருந்தது.

383
00:22:19,214 --> 00:22:22,050
எனக்கு தேதி கூட ஞாபகம் இருக்கிறது.
அன்று வெள்ளிக்கிழமை, 13ஆம் தேதி, 199...

384
00:22:22,134 --> 00:22:23,635
...1ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம்.

385
00:22:25,012 --> 00:22:27,806
நானும் என்னுடைய பள்ளி தோழர்களும்
அன்றிரவு எல்லா ஜேசன் திரைப்படங்களையும்

386
00:22:27,890 --> 00:22:31,351
தொடர்ந்து பார்க்கப் போவதாக முடிவு செய்திருந்ததால்
அந்த தேதி எனக்கு நினைவிருக்கிறது.

387
00:22:33,770 --> 00:22:36,607
எனவே, நான், எப்போதும் போல
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து

388
00:22:37,566 --> 00:22:40,360
மாடியில் என்னுடைய அறைக்குச் சென்று...

389
00:22:40,444 --> 00:22:42,696
...உங்களுடைய அலமாரியில் இருந்து
ஒரு பாட்டில் ஒயின் எடுத்துக்கொண்டு,

390
00:22:43,697 --> 00:22:45,699
நாங்கள் கதவை திறந்த போது,

391
00:22:45,782 --> 00:22:46,783
ஒரு சத்தம் கேட்டது...

392
00:22:46,867 --> 00:22:47,993
தடால்!

393
00:22:49,077 --> 00:22:51,246
அதனால் அதை என்னவென்று
பார்க்க நாங்கள் சென்றோம்.

394
00:22:52,206 --> 00:22:54,124
நான் கதவை திறந்த போது, அங்கே...

395
00:22:56,877 --> 00:22:58,045
அவர் இருந்தார்.

396
00:22:58,670 --> 00:23:05,260
மிஸஸ். ரெனால்ட்ஸ் அவரது பெயரை கத்திக்கொண்டு
இருவரும் உறவு கொண்டிருந்தார்கள்.

397
00:23:09,681 --> 00:23:12,059
தன் வாழ்க்கையில் முதல் முறையாக

398
00:23:12,142 --> 00:23:14,019
சாஸே எதுவும் பேசாமல் நின்றாள்,
மற்றும் நான்...

399
00:23:14,102 --> 00:23:17,231
அலறி, திடுக்கிட்டுவிட்டேன். அழுதேன்.

400
00:23:17,314 --> 00:23:19,691
அவர் தன்னுடைய வீட்டு உடையில்
என்னை தொடர்ந்து ஓடி வந்து,

401
00:23:19,775 --> 00:23:21,276
என்னை நிற்க சொல்லி கெஞ்சினார், ஆனால் நான்...

402
00:23:21,360 --> 00:23:22,861
மாடிக்கு ஓடி, 911ஐ அழைத்தேன்.

403
00:23:24,821 --> 00:23:28,116
பிரிட்ஜிலிருந்து,
அவருடைய கூர்ஸ் லைட்ஸ் மதுபானத்தை எடுத்தேன்.

404
00:23:28,200 --> 00:23:29,451
அதை குடித்தேன்.

405
00:23:31,537 --> 00:23:34,873
பிறகு என்னுடைய அம்மாவை அழைத்து
அவர் வீட்டிற்கு வர வேண்டும் என்று சொன்னேன்.

406
00:23:37,626 --> 00:23:39,628
மறுநாள், நான் வீட்டிற்கு திரும்பிய போது,

407
00:23:39,711 --> 00:23:42,422
அவர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

408
00:23:43,757 --> 00:23:47,594
அதனால் தான் நான் இவ்வளவு
கோபமாக இருக்கிறேன், புரிகிறதா?

409
00:23:50,430 --> 00:23:52,182
அதனால் தான் நான் அவரை எப்போதும் வெறுத்தேன்.

410
00:23:56,979 --> 00:23:58,480
இன்னமும் வெறுக்கிறேன்.

411
00:24:00,816 --> 00:24:01,859
எனக்குத் தெரியும்.

412
00:24:01,942 --> 00:24:03,694
இல்லை, எப்படி உணர்கிறேன் என
உங்களுக்கு தெரியாது.

413
00:24:03,777 --> 00:24:07,948
அதாவது, அவர் எனக்கு துரோகம் செய்தது பற்றி
எனக்கு தெரியும்.

414
00:24:09,283 --> 00:24:10,450
எல்லாமே தெரியும்.

415
00:24:11,118 --> 00:24:12,744
தெரிந்திருந்தும், நீங்கள் ஒன்றும் செய்யவில்லையா?

416
00:24:12,828 --> 00:24:15,038
உண்மையாகவே, எனக்கு எல்லாமே தெரியும்.

417
00:24:17,082 --> 00:24:18,375
அப்படியென்றால் உங்களையும் பிடிக்கவில்லை.

418
00:24:22,504 --> 00:24:24,840
உங்களை அவர் அப்படி நடத்த அனுமதித்தால்,
உங்களையும் வெறுக்கிறேன்.

419
00:24:28,260 --> 00:24:29,803
உங்களுக்கு நடந்தவற்றிற்காக வருந்துகிறேன், டெட்.

420
00:24:30,470 --> 00:24:31,680
ஆமாம், நானும் தான்.

421
00:24:33,098 --> 00:24:35,225
ஏன் அவர் மீது கோபமாக இருக்கிறீர்கள்
என எனக்குப் புரிகிறது.

422
00:24:36,935 --> 00:24:38,437
உங்களிடமிருந்து அவர் நிறைய பறித்துவிட்டார்.

423
00:24:38,520 --> 00:24:39,730
என் அம்மாவிடம் இருந்தும் கூட.

424
00:24:40,606 --> 00:24:42,524
ஆமாம், உங்களுடைய அம்மாவிடம் இருந்தும் தான்.

425
00:24:44,568 --> 00:24:45,986
ஒன்றைப் பற்றி கேட்க ஆர்வமாக உள்ளேன்.

426
00:24:47,237 --> 00:24:48,822
அவர் எப்படிப்பட்டவர்?

427
00:24:50,532 --> 00:24:52,117
அவர் ஒரு நல்ல மனிதர்.

428
00:24:53,577 --> 00:24:55,412
நம்பினாலும் நம்பாவிட்டாலும், நிறைய பேசுவார்.

429
00:24:57,331 --> 00:25:01,210
சில சமயங்களில்
காது கொடுத்து கேட்பவராக இருந்திருக்கலாம்.

430
00:25:04,630 --> 00:25:06,131
உங்களுக்கு அவரிடம் எந்த விஷயம் பிடிக்கும்?

431
00:25:10,969 --> 00:25:12,262
ஏன்?

432
00:25:12,346 --> 00:25:14,223
அவரிடம் என்ன பிடிக்காது என்று சொன்னீர்கள்.

433
00:25:14,723 --> 00:25:18,101
அவரிடம் இருந்த, உங்களை சந்தோஷப்படுத்திய
நல்ல விஷயம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

434
00:25:32,491 --> 00:25:35,911
ஐந்தாவது அல்லது ஆறாவது வகுப்பு படிக்கும் போது,
எங்களுக்கு ஜானி ட்ரெமெயின் என்ற புத்தகம் இருந்தது,

435
00:25:36,620 --> 00:25:39,498
அதை ஒரு மாதம் படிக்க வேண்டும் என்பது,
எங்களுடைய வீட்டு பாடமாக இருந்தது.

436
00:25:41,416 --> 00:25:44,878
அந்த மாதம் முடியும் வரை, அதிலிருந்து
சிறு பகுதியை கூட நான் படிக்கவில்லை.

437
00:25:46,255 --> 00:25:48,257
அடுத்த நாள் எங்களுக்கு,

438
00:25:48,340 --> 00:25:49,716
ஒரு முக்கியமான தேர்வு இருந்தது.

439
00:25:50,259 --> 00:25:52,511
முன்னாள் இரவு,
நான் ரொம்பவும் பதட்டமாக இருந்தேன்,

440
00:25:52,594 --> 00:25:53,637
எனக்கு தூக்கம் வரவில்லை,

441
00:25:53,720 --> 00:25:55,722
என்னுடைய அப்பா என்னிடம் அது பற்றி
பேச ஆரம்பித்தார்.

442
00:25:56,473 --> 00:25:57,891
நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.

443
00:25:57,975 --> 00:26:00,143
அவரோ, "ஐயோ, செல்லமே.
என்ன பிரச்சினை?" என்று கேட்டார்.

444
00:26:00,227 --> 00:26:01,478
அதைப் பற்றி அவரிடம் சொன்னேன்.

445
00:26:02,646 --> 00:26:04,481
அதற்கு அவர்,
"ஹே, அது பற்றி கவலைப்படாதே, சரியா.

446
00:26:04,565 --> 00:26:06,692
உன்னுடைய அறைக்குச் சென்று,
உன் தலையணையின் மீது தலை வைத்து

447
00:26:06,775 --> 00:26:09,236
நீ எதிர்பார்க்கும் ஒரு விஷயத்தைப் பற்றி
நினைத்துக்கொள்" என்று சொன்னார்.

448
00:26:09,319 --> 00:26:10,571
நானும் அப்படியே செய்தேன்.

449
00:26:11,446 --> 00:26:13,031
அடுத்த நாள் காலையில், நான் எழுந்த உடன்,
அவர் என்னிடம், "ஹே,

450
00:26:13,115 --> 00:26:15,492
இன்றைக்கு நீ சைக்கிளில் போக வேண்டாம்.
நான் உன்னை அழைத்து செல்கிறேன்" என்றார்.

451
00:26:15,576 --> 00:26:16,827
அதற்கு நானும், "சரி" என்று சொன்னேன்.

452
00:26:17,995 --> 00:26:21,874
பள்ளிக்குப் போகும் வழியில்,
அவர் எனக்கு முழு புத்தகத்தைப் பற்றியும்,

453
00:26:22,583 --> 00:26:24,877
தூங்க போகும் நேரத்தில்
சொல்லும் கதை போல சொல்லிவிட்டார்.

454
00:26:26,086 --> 00:26:28,505
ஏனென்றால் அவர் இரவு முழுவதும் விழித்திருந்து,

455
00:26:29,506 --> 00:26:30,966
அதை முழுமையாக படித்தார்,

456
00:26:31,633 --> 00:26:35,846
ஏனென்றால் அவருடைய மகன் தன்னுடைய
தேர்வை பற்றி பயப்படக்கூடாது என்று நினைத்தார்.

457
00:26:37,264 --> 00:26:39,349
அதற்கு எனக்கு ஏ கிரேட் கிடைத்தது.

458
00:26:39,433 --> 00:26:40,642
பூம்.

459
00:26:45,314 --> 00:26:46,565
அவர் ஒரு நல்ல அப்பா.

460
00:26:50,903 --> 00:26:52,654
அவருக்கே அது தெரியாது என்று நினைக்கிறேன்.

461
00:26:58,076 --> 00:27:00,871
தான் அக்கறை கொள்ளாத விஷயங்களில்
அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தார் என்பது

462
00:27:00,954 --> 00:27:03,707
அவருக்கு தெரிந்திருந்தால், அவர்...

463
00:27:04,666 --> 00:27:06,418
அவர் அப்படி செய்திருக்க மாட்டார்
என நினைக்கிறேன்...

464
00:27:10,005 --> 00:27:11,381
அவரிடம் நான் சொல்லியிருக்க வேண்டும்.

465
00:27:11,465 --> 00:27:13,300
அவரிடம் நிறைய சொல்லியிருக்க வேண்டும்.

466
00:27:17,763 --> 00:27:19,389
நான் அவர் மீது மிகவும் கோபமாக இருந்தேன்.

467
00:27:21,141 --> 00:27:22,392
ஏனென்றால் அவர் எப்பொழுதுமே
வேலைக்கு சென்று கொண்டும்

468
00:27:22,476 --> 00:27:24,311
நண்பர்களோடு நேரத்தை கழிப்பதுமாக இருந்தார்,

469
00:27:24,394 --> 00:27:25,729
பிறகு அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார்.

470
00:27:31,235 --> 00:27:34,154
தாங்கள் உள்ளுக்குள்ளே வருத்தப்படுவதை
புரிந்துகொள்ளாமல்

471
00:27:34,238 --> 00:27:37,241
யாரும் என்னை நெருங்க விடக் கூடாது என்பதை
அப்போதே நான் புரிந்து கொண்டேன்.

472
00:27:39,034 --> 00:27:40,410
ஏனென்றால் வாழ்க்கை என்பது கடினமானது.

473
00:27:44,164 --> 00:27:45,165
ரொம்பவும் கடினமானது.

474
00:27:50,879 --> 00:27:52,172
நன்றி, டெட்.

475
00:27:57,678 --> 00:27:59,972
இது சரியா, தவறா என எனக்குத் தெரியவில்லை,

476
00:28:00,055 --> 00:28:01,098
நாம் கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா?

477
00:28:01,682 --> 00:28:02,683
கண்டிப்பாக.

478
00:28:09,398 --> 00:28:10,774
பரவாயில்லை.

479
00:28:11,358 --> 00:28:13,068
இந்த ஆலோசனைக்காக என்னிடம்
கட்டணம் கேட்பீர்களா?

480
00:28:14,319 --> 00:28:15,320
கண்டிப்பாக வாங்குவேன்.

481
00:28:15,404 --> 00:28:17,197
-சரி.
-வீட்டிற்கு வந்ததற்காக.

482
00:28:17,281 --> 00:28:18,615
உங்களுடைய நேர்மையை நான் பாராட்டுகிறேன்.

483
00:28:19,199 --> 00:28:20,576
பரவாயில்லை.

484
00:28:26,123 --> 00:28:27,291
மன்னித்துவிடு, ரெபேக்கா, ஆனால்...

485
00:28:29,918 --> 00:28:31,211
நான் உன்னைப் போல திடமானவள் கிடையாது,

486
00:28:32,713 --> 00:28:35,132
அதனால் அவரை விட்டு விலக பயந்தேன்.

487
00:28:35,215 --> 00:28:37,843
ரூபெர்ட்டை விட்டு விலகம் போது
நான் பயப்படவில்லை என நினைக்கிறீர்களா?

488
00:28:39,011 --> 00:28:40,470
நான் மிகுந்த பீதியில் இருந்தேன்.

489
00:28:41,013 --> 00:28:43,640
அது உண்மையும் கூட ஏனென்றால்,
தனியாக இருப்பது என்பது

490
00:28:44,391 --> 00:28:45,976
ரொம்பவும் கொடூரமானது.

491
00:28:48,478 --> 00:28:50,147
ஆனால் அது எனக்கு தேவைப்பட்டது.

492
00:28:54,943 --> 00:28:57,613
ஏனென்றால் விரைவில் அது அற்புதமாக
தோன்ற ஆரம்பித்தது.

493
00:29:00,365 --> 00:29:01,617
சரி, இதைக் கேட்டு மகிழ்கிறேன்.

494
00:29:04,286 --> 00:29:06,663
மேலும், ரூபேர்ட் வீறாப்பு பிடித்த ஒரு முட்டாள்.

495
00:29:07,414 --> 00:29:09,166
பிறகு எதற்காக அவரிடம்
அன்பாக நடந்து கொள்கிறீர்கள்?

496
00:29:09,249 --> 00:29:11,877
ஏனென்றால், அப்படிப்பட்ட மக்களை
இப்படி நடத்தினால் தான்

497
00:29:11,960 --> 00:29:14,379
அவர்களால் நம்மை நெருங்க முடியாது என
உணர்வார்கள், செல்லமே.

498
00:29:15,255 --> 00:29:17,549
எப்படி இருந்தாலும், எல்லாம் முடிந்த பிறகு,

499
00:29:18,300 --> 00:29:21,970
அன்பாக இருப்பது முக்கியமா அல்லது
சரியாக இருப்பது முக்கியமா?

500
00:29:24,056 --> 00:29:26,350
நீ அவனை விட்டு விலகிய போது
நான் மிகவும் பெருமைப்பட்டேன்.

501
00:29:27,601 --> 00:29:29,186
நீ நல்லவற்றுக்கு தகுதியானவள் என
உனக்கே தெரிந்திருந்தது.

502
00:29:32,105 --> 00:29:34,024
இப்போது, எனக்கு இன்னும் நிறைய
பிரச்சினைகள் இருக்கின்றன,

503
00:29:34,900 --> 00:29:37,277
ஆனால் நான் ஒன்றை நேசித்துவிட்டால்,
கடைசி வரை அதை நேசிப்பேன்.

504
00:29:37,361 --> 00:29:38,779
நான் உன் அப்பாவை நேசித்தேன்.

505
00:29:40,155 --> 00:29:41,782
உங்களை அவர் அப்படி நடத்திய பிறகும் கூடவா?

506
00:29:41,865 --> 00:29:42,866
ஆமாம்.

507
00:29:44,284 --> 00:29:45,994
அவர் சிறப்பாக இல்லை.
அப்படி இருக்கவும் நான் விரும்பவில்லை.

508
00:29:46,078 --> 00:29:47,079
அவர் எப்போதுமே திரும்பி வந்தார்.

509
00:29:51,083 --> 00:29:53,502
நீ என்னை வெறுக்கிறாய் என்று சொன்னதில்
எனக்கு மகிழ்ச்சி தான்.

510
00:29:54,962 --> 00:29:58,882
இவ்வளவு ஆண்டுகளும், நீ என்னைப்பற்றி எதையும்
உணரவில்லை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

511
00:30:00,884 --> 00:30:03,595
என்னை புறக்கணிப்பதை விட உன்னுடைய கோபத்தை
என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்.

512
00:30:08,308 --> 00:30:09,309
நேரமாகிவிட்டது.

513
00:30:09,977 --> 00:30:12,479
அதோடு மெல்லமாக பேசியதற்கு நன்றி.

514
00:30:18,652 --> 00:30:19,653
வா, போகலாம்.

515
00:30:30,956 --> 00:30:32,499
நாம் பிரார்த்தனை செய்யலாம்.

516
00:30:34,751 --> 00:30:36,461
நம் பிதா...

517
00:30:36,545 --> 00:30:40,549
...சொர்க்கத்தில் இருப்பவரே,
உங்கள் பெயர் சிறக்கட்டும்.

518
00:30:41,175 --> 00:30:45,679
அற்புதமான கருணை

519
00:30:45,762 --> 00:30:49,099
எவ்வளவு இனிமையான ஓசை

520
00:30:49,183 --> 00:30:50,601
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.

521
00:30:51,185 --> 00:30:53,270
நான் தாழ்ச்சியடையேன்.

522
00:30:53,896 --> 00:30:56,899
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார்."

523
00:30:56,982 --> 00:30:58,192
நன்றி.

524
00:31:00,277 --> 00:31:03,655
பொதுவாக, இறந்தவரை நான் எவ்வளவு தூரம்

525
00:31:03,739 --> 00:31:06,200
நன்றாக அறிந்திருந்தேன் என்பதை பற்றி
இப்போது பேச வேண்டும்.

526
00:31:06,742 --> 00:31:09,995
ஆனால், பால் எனக்கு நன்றாக பரிச்சயமானவர்.

527
00:31:10,996 --> 00:31:13,498
அவர் ஒவ்வொரு வாரமும் தேவாலயத்திற்கு வந்து,

528
00:31:14,124 --> 00:31:15,792
அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு,

529
00:31:16,502 --> 00:31:20,255
தன்னுடைய கைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்த

530
00:31:20,923 --> 00:31:23,759
ரிச்மண்ட் கேமின் ஒவ்வொரு வார்த்தையும்
கவனமாக கேட்பார்.

531
00:31:26,845 --> 00:31:29,515
-ஆனால் நான் எப்போதும்...
-...மேரி மாதாவே.

532
00:31:29,598 --> 00:31:31,517
...இதற்காக நான் பாலை திட்டியது கிடையாது.

533
00:31:31,600 --> 00:31:34,186
-அது, விளையாட்டிற்கான...
-ஐயோ, கடவுளே.

534
00:31:34,269 --> 00:31:36,438
...அவரது ஆர்வம் மற்றும்

535
00:31:36,522 --> 00:31:40,025
அவரது அணியின் மீது அவருக்கு இருந்த
அக்கறைக்கான அடையாளம்.

536
00:31:41,735 --> 00:31:44,488
அதே நேசத்தையும், அக்கறையையும் தான்

537
00:31:45,072 --> 00:31:48,951
அவர் ஒரு கணவராகவும், ஒரு தந்தையாகவும்

538
00:31:49,535 --> 00:31:51,578
தன்னுடைய குடும்பத்தின் மீது செலுத்தினார்.

539
00:31:54,540 --> 00:31:59,920
இப்போது நாம் பாலின் மகள்,
ரெபேக்காவின் புகழுரையைக் கேட்கலாம்.

540
00:32:06,760 --> 00:32:08,136
பை-பை.

541
00:32:15,811 --> 00:32:17,646
உண்மையிலேயே என்ன சொல்வதென்றே
எனக்குத் தெரியவில்லை.

542
00:32:48,635 --> 00:32:49,803
என் அப்பா...

543
00:32:51,597 --> 00:32:53,140
அவர்...

544
00:33:03,317 --> 00:33:05,068
அன்பு காட்டுவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

545
00:33:07,196 --> 00:33:08,697
நமக்கு விதிகள் தெரியும்...

546
00:33:11,617 --> 00:33:13,744
எனக்கும் கூட தெரியும்

547
00:33:15,495 --> 00:33:19,625
எல்லா பொறுப்பைப் பற்றியும்
நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்

548
00:33:21,335 --> 00:33:25,714
இது நமக்கு வேறொருவரிடமிருந்து கிடைக்காது

549
00:33:31,386 --> 00:33:32,596
நான்...

550
00:33:34,014 --> 00:33:37,434
நான் எப்படி உணர்கிறேன் என்பதை
உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்

551
00:33:38,977 --> 00:33:42,397
உனக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன்

552
00:33:44,107 --> 00:33:47,277
ஒருபோதும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்

553
00:33:48,237 --> 00:33:50,864
ஒருபோதும் உன்னை தோற்க விடமாட்டேன்

554
00:33:53,075 --> 00:33:56,119
ஒருபோதும் ஒடி ஒளிந்து

555
00:33:57,287 --> 00:33:59,748
உன்னை கைவிட மாட்டேன்

556
00:34:02,209 --> 00:34:05,087
ஒருபோதும் உன்னை அழ வைக்க மாட்டேன்

557
00:34:07,256 --> 00:34:09,341
ஒருபோதும் சொல்லமாட்டேன்...

558
00:34:18,891 --> 00:34:21,228
ஒருபோதும் குட்பை என்று சொல்லமாட்டேன்

559
00:34:25,232 --> 00:34:29,570
ஒருபோதும் பொய் சொல்லி
உன்னை வேதனைப்படுத்த மாட்டேன்

560
00:34:30,737 --> 00:34:33,114
ஒருபோதும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்

561
00:34:33,197 --> 00:34:36,076
ஒருபோதும் உன்னை தோற்க விடமாட்டேன்

562
00:34:36,159 --> 00:34:41,248
ஒருபோதும் ஓடி ஒளிந்து
உன்னை கைவிட மாட்டேன்

563
00:34:41,331 --> 00:34:43,876
ஒருபோதும் உன்னை அழ வைக்க மாட்டேன்

564
00:34:43,958 --> 00:34:46,587
ஒருபோதும் குட்பை என்று சொல்லமாட்டேன்

565
00:34:46,670 --> 00:34:51,425
ஒருபோதும் பொய் சொல்லி
உன்னை வேதனைப்படுத்த மாட்டேன்

566
00:34:52,676 --> 00:34:54,928
ஒருபோதும் விட்டுக்கொடுக்க,
ஒருபோதும் விட்டுக்கொடுக்க

567
00:34:55,012 --> 00:34:57,014
விட்டுக்கொடுக்க மாட்டேன்

568
00:34:58,182 --> 00:34:59,683
ஒருபோதும் விட்டுக்கொடுக்க,
ஒருபோதும் விட்டுக்கொடுக்க

569
00:34:59,766 --> 00:35:01,810
விட்டுக்கொடுக்க மாட்டேன்

570
00:35:04,646 --> 00:35:05,814
நன்றி.

571
00:35:15,240 --> 00:35:17,075
வந்ததற்கு மிக்க நன்றி, ரூபெர்ட்.

572
00:35:17,159 --> 00:35:19,244
நீங்கள் இங்கு வந்ததற்காக
அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.

573
00:35:19,828 --> 00:35:21,705
நீ வீட்டிற்கு வருகிறாயா, ரூபெர்ட்?

574
00:35:21,788 --> 00:35:23,040
சிலர் வரப்போகிறார்கள்,

575
00:35:23,123 --> 00:35:26,502
மேலும் உன்னை அழைக்கவில்லை என்றால்
ரெபேக்கா கோபப்படுவாள் என்று தெரியும்.

576
00:35:28,795 --> 00:35:31,215
இருவருக்கும் நன்றி...

577
00:35:31,882 --> 00:35:33,800
சரி, நாங்கள் கிளம்ப வேண்டும்.

578
00:35:34,384 --> 00:35:35,469
இது தூங்குவதற்கான நேரம்.

579
00:35:35,552 --> 00:35:37,721
உனக்கா அல்லது குழந்தைக்கா? பூம்!

580
00:35:39,723 --> 00:35:41,517
ஆம், அம்மாவும் பிள்ளையும் தூங்க வேண்டும்.

581
00:35:41,600 --> 00:35:44,228
நான் அவளோடு இல்லை என்றால்,
அவள் தொட்டிலில் தூங்க மாட்டாள்.

582
00:35:44,311 --> 00:35:46,396
-தூங்கமாட்டாளா?
-ரொம்ப அழகு.

583
00:35:46,480 --> 00:35:47,773
கவனமாக இரு.

584
00:35:51,235 --> 00:35:52,694
ரெபேக்கா, ஒன்று சொல்ல நினைத்தேன்.

585
00:35:54,404 --> 00:35:56,782
ரிச்மண்டில் உள்ள தனது பங்குகளை விற்பதற்கு
பெக்ஸை நான் சம்மதிக்க வைத்தேன்.

586
00:35:56,865 --> 00:36:00,327
அதாவது, இப்போதெல்லாம்
கால்பந்து பார்க்க நேரமே இல்லை.

587
00:36:00,410 --> 00:36:02,663
எனவே, அவற்றை நீயே வைத்துக் கொள்ளலாம்.

588
00:36:04,122 --> 00:36:06,250
இது என்ன இறுதி சடங்கிற்கான பரிசா?

589
00:36:07,209 --> 00:36:09,378
உனக்கு பெரிய மனசு, ரூபெர்ட்.

590
00:36:09,461 --> 00:36:11,672
ஆமாம். மிக்க நன்றி, ரூபெர்ட்.

591
00:36:32,568 --> 00:36:34,945
-ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
-ஆம்.

592
00:36:36,864 --> 00:36:38,782
சாமுடனான உறவை முடித்துக்கொள்ள நினைக்கிறேன்.

593
00:36:38,866 --> 00:36:40,200
-என்ன?
-ஏன்?

594
00:36:40,284 --> 00:36:42,244
-வயது வித்தியாசம் காரணம் இல்லை தானே?
-இல்லை. நான்...

595
00:36:42,327 --> 00:36:43,412
உறுதியாக தெரியவில்லை, நான்...

596
00:36:43,495 --> 00:36:46,164
-பொறு, பத்திரிகை பற்றி கவலைப்படுகிறீர்களா?
-இருக்கலாம்.

597
00:36:46,248 --> 00:36:47,791
எனக்குத் தெரியும்.

598
00:36:47,875 --> 00:36:49,168
ஆண்களின் உணர்ச்சி மிகவும் பெரியது.

599
00:36:49,251 --> 00:36:50,711
பெண்ணின் உணர்ச்சியைக் காயப்படுத்திவிடும்.

600
00:36:51,920 --> 00:36:52,921
ஆம், அவ்வளவுதான்.

601
00:36:56,049 --> 00:36:57,301
...அதில் காற்று இருப்பதை உறுதி செய்யுங்கள்.

602
00:36:57,384 --> 00:36:58,802
நீங்கள் பேசுங்கள், இதோ வருகிறேன்.

603
00:37:04,433 --> 00:37:05,851
-ஹேய்.
-ஹாய்.

604
00:37:05,934 --> 00:37:07,561
நானும் பில்லியும் அங்கே சென்று...

605
00:37:07,644 --> 00:37:09,188
-சரி.
-...1966ஐ பற்றி பேசப் போகிறோம்.

606
00:37:11,064 --> 00:37:12,274
எப்படி இருக்கிறாய்?

607
00:37:15,819 --> 00:37:17,654
அதோ இருக்கிறான்.

608
00:37:17,738 --> 00:37:19,740
சரி, என்னை வாழ்த்து.

609
00:37:20,449 --> 00:37:22,117
உங்களால் நிச்சயம் முடியும்.

610
00:37:22,201 --> 00:37:23,535
எல்லாம் சரியாகிவிடும்.

611
00:37:23,619 --> 00:37:25,704
இருந்தாலும் கொஞ்சம் மென்மையாக பேசுங்கள், சரியா?

612
00:37:27,247 --> 00:37:29,541
அடக் கடவுளே, அவன் சிரிக்கிறான்.
அவனை இப்படி பார்க்க பிடிக்கவில்லை.

613
00:37:33,670 --> 00:37:37,633
ரெபேக்கா, மிக்க நன்றி.
என் கட்டைவிரலை மீண்டும் உணர்கிறேன்.

614
00:37:41,845 --> 00:37:44,014
நாம் இருவரும் ஒரே அளவு பயன்படுத்துவதில்
எனக்கு மகிழ்ச்சி.

615
00:37:44,765 --> 00:37:46,517
நல்லது. எனக்கும்கூட.

616
00:37:46,600 --> 00:37:47,809
அவற்றை நீயே வைத்துக்கொள்.

617
00:37:47,893 --> 00:37:50,062
உங்களது தாராள மனதிற்கு எல்லையே இல்லை.

618
00:38:08,539 --> 00:38:10,541
ஹாய், ஜேமி, குடிக்க ஏதாவது வேண்டுமா?

619
00:38:11,875 --> 00:38:13,919
உண்மையைச் சொன்னால், எப்படி தொடங்குவது
என்றே தெரியவில்லை. நான்...

620
00:38:14,002 --> 00:38:15,170
தெளிவாகவே இல்லை.

621
00:38:15,754 --> 00:38:17,172
பீருடன் தொடங்குகிறாயா?

622
00:38:18,924 --> 00:38:21,218
இல்லை, வேண்டாம். கேள், கீலி.

623
00:38:22,886 --> 00:38:25,305
ராயுடன் இருப்பதால் நீ மகிழ்ச்சியாக
இருக்கிறாய் என எனக்குத் தெரியும்,

624
00:38:25,389 --> 00:38:28,725
ஆனால் நான் சொல்லாவிட்டால் என்னை நானே
வெறுத்துவிடுவேன் என்பதை இன்று உணர்ந்துவிட்டேன்...

625
00:38:30,769 --> 00:38:34,565
...என் அப்பாவிடம் இருந்து விலகுவதற்காக மட்டும்
நான் ரிச்மண்டிற்கு திரும்பி வரவில்லை.

626
00:38:34,648 --> 00:38:36,942
உனக்காகவும் தான் வந்தேன்.

627
00:38:39,945 --> 00:38:43,949
நான் எப்படி இருக்க வேண்டும் என்று நீ
எப்போதும் நினைத்தாயோ, அப்படிப்பட்ட

628
00:38:44,032 --> 00:38:46,118
சிறந்த மனிதாக நான்
உருவாகியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

629
00:38:48,912 --> 00:38:53,834
இது பைத்தியக்காரத்தனம்,
அசிங்கமான விஷயம் என எனக்கும் தெரியும், ஆனால்...

630
00:38:57,087 --> 00:38:59,506
நான் உன்னை நேசிக்கிறேன், கீலி.

631
00:39:05,512 --> 00:39:06,597
மன்னித்துவிடு.

632
00:39:14,104 --> 00:39:15,314
ஓய்.

633
00:39:17,149 --> 00:39:20,819
கேள், இன்று நான் முட்டாள்தனமான ஜோக்குகளைச்
சொல்லி, மோசமாக நடந்துக் கொண்டேன்.

634
00:39:20,903 --> 00:39:23,739
மரணம் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது,

635
00:39:24,364 --> 00:39:25,782
ஏனெனில் என் தாத்தா இறந்த போது,

636
00:39:25,866 --> 00:39:29,995
ஓராண்டு முழுவதும் ஒவ்வொரு இரவும்
நான் அவருடன் ஒரு முறையாவது பேச முடியுமா,

637
00:39:30,078 --> 00:39:33,624
அல்லது ஓபி-வான் கெனோபியைப் போல
அவரை ஒருமுறை பார்க்க முடியுமா

638
00:39:33,707 --> 00:39:35,959
என்று வேண்டிக் கொண்டிருந்தேன்.

639
00:39:36,043 --> 00:39:37,878
எதுவும் நடக்கவில்லை.

640
00:39:39,713 --> 00:39:41,381
ஆனால் அது எனக்கு ஒன்றை உணர்த்தியது,

641
00:39:42,758 --> 00:39:44,551
நமக்கு இருப்பதோ ஒரு வாழ்க்கை மட்டும் தான்,

642
00:39:46,220 --> 00:39:48,013
எனவே ஒரு நொடியைக்கூட
நான் வீணாக்க விரும்பவில்லை.

643
00:39:50,098 --> 00:39:51,225
நான் உன்னை நேசிக்கிறேன், கீலி.

644
00:39:52,476 --> 00:39:53,560
என்னை மன்னித்துவிடு.

645
00:40:07,449 --> 00:40:08,450
மன்னியுங்கள்.

646
00:40:10,369 --> 00:40:13,914
தினமும் இதைச் செய்ய விரும்பினேன்,
ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை.

647
00:40:31,598 --> 00:40:32,599
சாம்,

648
00:40:33,433 --> 00:40:36,770
நீ மிகவும் அன்பானவன் மற்றும் பாசமானவன்

649
00:40:36,854 --> 00:40:39,231
மற்றும்... புத்திசாலியும் கூட.

650
00:40:42,276 --> 00:40:43,652
-ஆனால்...
-ஓ, வேண்டாம்.

651
00:40:44,444 --> 00:40:46,154
ஆனால் என்ற வார்த்தை பிடிக்காது,
என்னால் பொய் சொல்லவும் முடியாது.

652
00:40:46,655 --> 00:40:50,534
ஒரே ஒரு பிரச்சினை...

653
00:40:52,327 --> 00:40:55,080
என்னால் ஒரு விஷயத்தை மட்டும்
கடந்து செல்ல முடியவில்லை.

654
00:40:55,163 --> 00:40:56,415
அது என்னது?

655
00:40:57,124 --> 00:40:58,250
நீ மிகவும் அற்புதமானவன்.

656
00:40:58,750 --> 00:41:00,711
அது எப்படி பிரச்சினையானது?

657
00:41:00,794 --> 00:41:04,089
ஏனெனில் உண்மையில்
உன்னால் நான் காயப்படக்கூடும்.

658
00:41:05,090 --> 00:41:06,717
ஆனால் உங்களால் நானும் காயப்படக்கூடுமே.

659
00:41:07,301 --> 00:41:08,719
சரி, அது உனக்கு பயமாக இல்லையா?

660
00:41:08,802 --> 00:41:09,970
இல்லை.

661
00:41:12,055 --> 00:41:13,682
-உங்களுக்கு பயமாக இருக்கிறதா?
-ஆமாம்.

662
00:41:17,603 --> 00:41:20,856
மேலும் அது ஏன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

663
00:41:23,775 --> 00:41:24,860
அதுவும் தனியாக.

664
00:41:31,783 --> 00:41:33,035
எனக்குப் புரிகிறது.

665
00:41:34,411 --> 00:41:35,704
தேவையான அவகாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

666
00:41:37,664 --> 00:41:38,665
ஒன்றும் பிரச்சினை இல்லை.

667
00:41:41,585 --> 00:41:42,794
நன்றி.

668
00:41:46,048 --> 00:41:49,384
ஆனால், ரெபேக்கா,
ஒரு விஷயத்தைப் பற்றி உங்களை எச்சரிக்கிறேன்.

669
00:41:50,010 --> 00:41:51,053
என்ன?

670
00:41:51,637 --> 00:41:53,263
நான் இன்னும் அற்புதமானவனாகப் போகிறேன்.

671
00:41:56,099 --> 00:41:57,309
எனக்குத் தெரியும்.

672
00:42:14,368 --> 00:42:17,955
-உணவு அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி.
-வந்ததற்கு நன்றி, தியரி.

673
00:42:18,038 --> 00:42:19,039
ஆமாம்.

674
00:42:19,122 --> 00:42:20,832
-பை, ஐசக்.
-நன்றி, ஐசக்.

675
00:42:20,916 --> 00:42:22,042
பெண்களே.

676
00:42:24,461 --> 00:42:25,671
உங்கள் இழப்பிற்காக வருந்துகிறேன், பெண்களே.

677
00:42:25,754 --> 00:42:27,130
வேண்டாம், டெட்.

678
00:42:27,214 --> 00:42:28,549
அவரை நீங்கள் கொல்லவில்லை தானே?

679
00:42:28,632 --> 00:42:29,758
அம்மா.

680
00:42:29,842 --> 00:42:32,427
இன்று தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.
இது எப்படி இருக்கு?

681
00:42:32,511 --> 00:42:34,179
எல்லாம் சரியாகத்தானே இருக்கு?

682
00:42:34,263 --> 00:42:35,722
எல்லாமுமா? கடவுளே, இல்லைவே இல்லை.

683
00:42:35,806 --> 00:42:37,099
ஆனால் என்னைப் பற்றி கேட்டால்,
நான் நலம் தான்.

684
00:42:37,182 --> 00:42:38,308
-சரி.
-ஆம்.

685
00:42:39,059 --> 00:42:41,854
ஹேய், திரு. வெல்டனை
ஒருமுறைதான் நான் சந்தித்தேன்,

686
00:42:41,937 --> 00:42:45,566
ஆனால், அவ்வளவு வயதான ஒருவரால்
"சிங்கிங் இன் த ரெயின்" படத்தில் இருந்து,

687
00:42:45,649 --> 00:42:48,277
டொனால்ட் ஓ'கானரின் நீண்ட நடனக் காட்சியின்
ஒவ்வொரு அசைவையும் செய்ய முடிந்தது.

688
00:42:49,278 --> 00:42:51,864
அது வயதாவதைப் பற்றிய நம்பிக்கையை
எனக்கு அளித்தது.

689
00:42:51,947 --> 00:42:53,949
பாலுக்கு இரண்டு விஷயங்கள் பிடிக்கும்:

690
00:42:54,032 --> 00:42:57,578
ஈர்ப்பு மற்றும் இவளை சிரிக்க வைப்பது.

691
00:42:59,913 --> 00:43:01,707
நான் அதை மறந்தே போயிட்டேன்.
நன்றி, டெட்.

692
00:43:02,499 --> 00:43:04,084
சரி, குட் நைட்.

693
00:43:05,544 --> 00:43:06,587
நாம் போகலாமா?

694
00:43:09,673 --> 00:43:12,301
மனதளவில் காயமடைந்த ஆண்களைத் தான்
ஃப்ளாரென்ஸுக்கு பிடிக்கும், சரிதானே?

695
00:43:14,178 --> 00:43:15,179
இந்தப் பக்கம் போகலாம்.

696
00:43:15,929 --> 00:43:17,389
ஆமாம், சரிதான்.

697
00:43:21,727 --> 00:43:22,936
...அவை சிறந்தவை, நண்பா.

698
00:43:27,399 --> 00:43:29,151
நீயும் சாமும் தற்காலிகமாக
உறவை முடித்துக்கொள்கிறீர்களா?

699
00:43:33,238 --> 00:43:34,740
அது உங்களுக்கு எப்படி தெரியும்?

700
00:43:35,324 --> 00:43:37,075
நான் உன்னுடைய அம்மா. எனக்கு எல்லாமே தெரியும்.

701
00:43:37,910 --> 00:43:41,038
அதோடு, அலமாரியில் இருந்து அவன் சோகமாக
வெளியே வருவதைப் பார்த்தேன்.

702
00:43:45,083 --> 00:43:46,084
சரி.

703
00:43:46,877 --> 00:43:48,212
தயவுசெய்து, குடிக்கலாம்.

704
00:43:48,295 --> 00:43:49,505
அப்படியென்றால், வா.

705
00:43:57,346 --> 00:44:00,015
அட, இதைப் பாரேன்.
இதில் நீ சிறுவனைப் போல இருக்கிறாய்.

706
00:44:00,516 --> 00:44:01,850
ஆமாம், நீங்கள் தான் அப்படி முடி வெட்டிவிட்டீர்கள்.

707
00:44:01,934 --> 00:44:03,477
ஆம், மகன் தான் பிறக்க வேண்டும் என விரும்பினேன்.

708
00:44:05,145 --> 00:44:07,689
-இதில் வேறு என்னவெல்லாம் இருக்கிறது?
-என் தலைமுடி எவ்வளவு நீளமாக இருந்திருக்கிறது.

709
00:44:07,773 --> 00:44:08,982
1979 இன் கோடைக்காலம்

710
00:44:10,317 --> 00:44:12,736
-வீட்டில் எடுத்த வீடியோக்கள்.
-அதில் வேறு சிலவற்றை பதிவு செய்துள்ளேன்.

711
00:44:12,819 --> 00:44:14,696
நீ செய்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.

712
00:44:14,780 --> 00:44:17,324
உங்கள் கன்னத்து எலும்புகளைப் பாருங்களேன்.
அடக் கடவுளே.

713
00:44:21,203 --> 00:44:22,788
நான் ஏன் ஒரு கிண்ணத்தில் அமர்ந்திருக்கிறேன்?

714
00:44:23,956 --> 00:44:25,832
இல்லை, அதை எங்கள் நீச்சல் குளமாக்கிவிட்டாய்.

715
00:44:26,834 --> 00:44:28,794
வீட்டில் நீச்சல் குளம் வைத்திருக்கும்
பக்கத்து வீட்டு குழந்தைகள் கூட,

716
00:44:28,877 --> 00:44:31,630
நம் வீட்டிற்கு வந்து உன்
கிண்ணத்தில் நீந்துவார்கள்.

717
00:44:31,713 --> 00:44:34,466
-அது ஒரு நல்ல கிண்ணம்.
-நல்லதுதான்.

718
00:44:36,677 --> 00:44:38,971
-இப்பவும் நீ என் செல்ல மகள் தான்.
-ஓ, அம்மா.

719
00:44:39,054 --> 00:44:40,597
நீ என் செல்ல மகள் தான்.

720
00:44:51,900 --> 00:44:54,695
நீங்கள் ரிக் ஆஸ்ட்லி
உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே, அம்மா.

721
00:44:54,778 --> 00:44:57,531
ஒருவேளை இருக்கலாம்.
ஆனால் அது அவர் இல்லை தானே?

722
00:44:57,614 --> 00:44:58,615
நிச்சயமாக அவர் தான்.

723
00:45:02,077 --> 00:45:03,328
இல்லை, அவர் கறுப்பு என்று நினைத்தேன்.

724
00:45:05,330 --> 00:45:06,540
இவர் தான் ரிக் ஆஸ்ட்லியா?

725
00:45:06,623 --> 00:45:07,624
ஆமாம்.

726
00:45:58,050 --> 00:46:00,052
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

